என் மடியில் பூத்த மலரே-35
அத்தியாயம்-35 மூன்று மாதத்திற்கு பிறகு: “ பா ரதி மா.. இன்னுமா ரெடியாகற.. அந்த புடவையை எவ்வளவு நேரம் தான் கட்டுவா... சீக்கிரம் ரெடியாகி வாடா.. .எல்லாரும் வெய்ட் பண்றாங்க பார்... “ என்று கத்திகொண்டே ஜானகியின் அறைக்குள் வந்தார் ஜானகி.... பாரதியும் தன் தந்தை வாங்கி கொடுத்திருந்த அந்த பட்டு புடவையை கடந்த அரை மணி நேரமாக கட்டி கொண்டிருக்கிறாள்... அது அவள் பேச்சை கேட்காமல் அடம் பிடித்து கொண்டிருந்தது... கொஞ்ச நேரத்துக்கு மேல் சளித்து போய், “அத்தை.. இத எனக்கு கட்டவே வரலை... முந்தி எடுத்து பின் போடவே வரமாட்டேங்குது.. நீங்க கொஞ்சம் கட்டி விடுங்களேன்.. “என்று சிணுங்க, அவரும் சிரித்துகொண்டே “சரி வா.. இத முன்னாடியே சொல்ல வேண்டியது தான.. “என்று அவள் கன்னத்தை கிள்ளியவாறு மளமளவென்று அந்த புடவையை மடித்து தன் மறுமகளுக்கு கட்டிவிட்டார்.. கீழ குனிந்து அந்த பிளிட்சை நேராக நீவி விட்டு மடித்து விட பாரதி பதறி “அத்தை... நானே பண்ணிக்கிறேன்.. “ என்று சங்கோஜபட்டாள்... “ஹா ஹா ஹா.. எப்படியோ ஒரு சாக்கு சொல்லி உன் கல்யாண நாள் அன்று உன் மாமியாரையே உன் கால் ல விழ வச்சுட்ட.. கெட்டிக்காரி தான் என் மறுமகள்... “எ...