என் மடியில் பூத்த மலரே-26
அத்தியாயம்-26 ம றுநாள் காலை எழுந்தவன் வழக்கம் போல காலை உடற்பயிற்சிகளை செய்துவிட்டு அலுவலகம் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தான்... பார்மல் பேன்ட் ம் முழுக்கை சர்ட் ஐ இன் பண்ணி கையில் இருந்த பட்டனை போட்டு பின் தன் முடியை சீவினான்.. அடர்த்தியான முன்னால் இருந்த முடி அவனுக்கு அடங்காமல் ஆட அதை அடக்கி சீவிக் கொண்டிருந்தான் ஆதி... அவன் தலை சீவும் அழகையே அறைக்கு வெளியில் நின்று ரசித்துக் கொண்டிருந்தாள் பாரதி... அவன் முன்னால் இருந்த அடர்த்தியான அந்த கற்றை முடியை கலைத்து விட்டு அவனை சீண்ட துடித்தன அவள் கைகள்... தன் எண்ணத்திற்கு ஒரு கொட்டு வைத்து அடக்கியவள் மெதுவாக கதவை தட்டினாள்.. “யெஸ்.. கம் இன்... “ என்றான் கம்பீரமாக வழக்கமான் அலுவலக நினைப்பில்.. மெதுவாக தயங்கியவாறு அவன் அறை உள்ளே வந்தாள் பாரதி..அவளை அந்நேரத்தில் அவன் அறையில் கண்டதும் ஆச்சர்யம் அவனுக்கு... பாரதி எப்பவும் அவன் அறைக்குள் வந்ததில்லை.. இரவு பால் கொடுக்க மட்டுமே சில நேரம் வந்திருக்கிறாள்... இன்று அவளே அவனை தேடி வரவும் ஆச்சர்யமாக பார்த்தான்.. அதோடு அப்பொழுது தான் குளித்திருந்த புது மலராக நின்றிருந்தவளை காண்கையில் அவன் மனம் எகி...