தவமின்றி கிடைத்த வரமே-33
அத்தியாயம்-33 ப ட்டு புடவை சரசரக்க உள்ளுக்குள் பட்டாம்பூச்சிகள் வட்டமிட, வேகமாக துடிக்கும் தன் இதயத்தின் ஓசை வெளியில் கேட்காதவாறு அடக்கி கொண்டு கன்னம் சிவக்க மெல்ல அடி அடுத்து வைத்து உள்ளே வந்தாள் பனிமலர்... அன்று மதியம் வரவேற்பில் மித்ரா சொல்லியது எல்லாம் மறந்து விட்டிருந்தது அவள் மூளையில்..ஆனாலும் ஒரு ஓரத்தில் தன் கணவனிடம் கேட்க என்று நிறைய கேள்விகளை வைத்திருந்தாள்.. அதுவும் குறிப்பாக மித்ரா வை பற்றி அவனிடம் கேட்டு தெளிவு படுத்தி கொள்ள எண்ணி இருந்தாள்.. அவனை தனியாக சந்திக்கும் பொழுது கேட்க வேண்டும் என்று பட்டியலிட்டிருந்த லிஸ்ட் நினைவு வர அதற்கான சந்தர்ப்பம் இன்றே கிடைத்து விட்டதால் எதை கேட்பது? எப்படி கேட்பது? என்று மீண்டும் ஒரு முறை ஒத்திகை பார்த்து கொண்டே உள்ளே அடி எடுத்து வைத்து வந்தாள் மலர். தன் அன்னை கொடுத்திருந்த அந்த பட்டு வேட்டியை கட்டி கொண்டு புது மாப்பிள்ளையாக குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தவனோ அறை கதவு திறக்கவும் அவசரமாக அவன் பார்வை அங்கு சென்றது... வெட்க சிவப்புடன் அதை மறைக்க தன் திரண்ட இதழ்களை மடித்து கடித்தவாறு மெல்ல அடி எடுத்து வைத்து உள்ளே வந...