முன்னுரை: உயிருக்கு உயிரான காதல் பொய்த்துப் போனால் அது எந்த அளவுக்கு ஒருவனுக்கு வலியையும் வேதனையும் கொடுக்கும் என்பதை உணர்த்த வருகிறான் நம் கதையில் நாயகன் ஆதித்யா. அவனுடைய காதல் பொய்த்து போனதால் , ஒட்டு மொத்த மாதர் குலத்தின் மீதும் வெறுப்பாக இருப்பவன். தன் வாழ்வில் இனி ஒரு பெண் எப்பொழுதும் இல்லை என்று தன்னை இறுக்கி கொண்டு வாழ்பவன். அவனை அப்படியே விட்டுவிடுவாரா அந்த சிங்காரவேலன் ? நம் நாயகனின் அன்னை ஜானகி , சிங்காரவேலனின் தீவிர பக்தை. சதா காலமும் தன் மகனுக்காக , தன் மகன் வாழ்வு நேராக வேண்டும் என்று அந்த வேலனிடம் முறையிட்டு கொண்டே இருந்தார். ஒரு கட்டத்துக்கு மேல் தன் பக்தையின் கண்ணீர் புலம்பலை காது கொடுத்து கேட்கமுடியாமல் பொங்கி எழுந்து விடுகிறான் அந்த வடிவேலன். தன் பக்தையின் குறையை தீர்த்து வைக்க முடிவு செய்த முருகன் கிராமத்து பைங்கிளியான பாரதியை தன் ஆட்டத்தில் உள்ளே இழுத்து விடுகிறான். அவனின் சதித்திட்டத்தால் ஆதித்யாவின் குழந்தைக்கு வாடகை தாயாகிறாள் பாரதி இந்த குழந்தையை வைத்து தன் மகனை மடக்க திட்டமிடுகிறார் ஜானகி. அவர் திட்டம் வெற்றி பெற்றதா ? இல்லை நா...
Comments
Post a Comment