காதோடுதான் நான் பாடுவேன்-3
அத்தியாயம்-3 சஷ்டியை நோக்க சரவணா பவனார் சி ஷ் டருக் குதவும்செங்கதிர் வேலோன் என கந்த சஷ்டி கவசம் தன் அலைபேசியில் ஒலித்து கொண்டிருக்க, அதிகாலையில் அயர்ந்து உறங்கி கொண்டிருந்த மதுவந்தினி படுக்கையில் இருந்தே கையை நீட்டி தன் அலைபேசியை எடுத்தாள்... அந்த ரிங்க்டோனில் இருந்தே அழைப்பது தன் அன்னை என புரிய “இந்த அம்மா எப்பவும் நேர்ல வந்து தானே எழுப்புவங்க.. இப்ப என்ன புதுசா போன் பண்ணி எழுப்பறது?? “ என்று புன்னகைத்து கொண்டவள் தூக்க கலக்கத்திலயே அந்த அழைப்பை ஏற்றாள்... “மது கண்ணா... எழுந்திருச்சிட்டியா ?? “ என்றார் சாரதா மறுமுனையில்... “இப்பயே எதுக்குமா எழுப்பற?? .. “ என்று கேட்க வந்தவள் தன் இடையை சுற்றி இருந்த கையை அப்பொழுதுதான் கவனித்தாள்... அதை கண்டதும் திக் என்றது அவளுக்கு.. இது யார் என் கட்டிலில் என்று அதிர்ந்தவள் மீதி ஒட்டியிருந்த தூக்கம் பறந்து விட தன் கண்ணை கசக்கி கொண்டு திரும்பி அவள் அருகில் பார்த்தாள்... அங்கு அகிலா மதுவை அணைத்த படி நெருங்கி படுத்து உறங்கி கொண்டிருந்தாள்... “யார் இந்த புது பொண்ணு?? “ என்று முதலில் முழித்தவள் பின் அவசரமாக தன் மூளையை எழுப்பி அவசரமாக தன் நினைவுகள...