தவமின்றி கிடைத்த வரமே-28
அத்தியாயம்-28 ஒ வ்வொருவராக அவளுக்கு நலுங்கு வைத்து கொண்டிருந்தனர்.... மலர் வாயிலில் நின்று வருபவர்களை வரவேற்று கொண்டிருந்தாள் புன்னகையுடன்... அப்பொழுது வசீகரன் நண்பர்களான ஆதி மற்றும் நிகிலன் அன்னையர்கள் ஜானகியும் சிவகாமியும் அங்கு வந்தனர்... வசி திருமணத்திற்கு முன்பே தன் நண்பர்களை பற்றி மலரிடம் சொல்லி இருக்கிறான்.... அவர்கள் குடும்பத்தை புகைப்படத்தில் பார்த்து இருந்ததால் அவர்களை அடையாளம் கண்டு கொண்டு “வாங்க ஜானகி அத்தை... வாங்க சிவா அத்தை.. எப்படி இருக்கீங்க?? எங்க மற்றவங்க எல்லாம் காணோம்...?? “ என்று சிரித்தவாறு அவர்கள் இருவரையும் வரவேற்றாள் மலர்... அவளின் சிரித்த முகமும் தங்களை முன்ன பின்ன பார்க்காமலயே அடையாளம் கண்டு கொண்ட அவளின் புத்திசாலிதனத்தையும் கண்டு வியந்தவாறு உள்ளே வந்தனர் சிரித்தவாறு.. “ஹ்ம்ம்ம் வாடி புது மருமகளே !!.... நாங்க சூப்பரா இருக்கோம்... நீ எப்படி இருக்க?? “ என்று சிரித்தவாறு உள்ளே வந்தார் சிவகாமி... ஜானகியும் அவளை நலம் விசாரித்து “சிவா.. மலரை பார்க்க அப்படியே பாதி பாரதி மாதிரியும் பாதி மது மாதிரியும் இருக்கா இல்லை.... “ என்றார் அதிசயித்தவாறு... “ஹ்ம்ம் நானும...