காதோடுதான் நான் பாடுவேன்-42
அத்தியாயம்-42 மூன்று மாதத்திற்கு பிறகு: அ திகாலையில் அந்த வீட்டில் கந்த சஷ்டி கவசம் இனிமையாக ஒலித்து கொண்டிருந்தது.... அந்த புத்தம் புது காலையில் அனைவரும் உறங்கி கொண்டிருக்க, அவள் மட்டும் சீக்கிரம் எழுந்து, தலைக்கு குளித்து தலையில் துண்டை சுற்றி கொண்டு பூஜை அறையில் அந்த வேலன் முன்னே கண் மூடி நின்றிருந்தாள் அந்த வீட்டின் மூத்த மருமகள்.... தனக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்த அந்த சிங்கார வேலனுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லி, அந்த வீட்டில் இருப்பவர்கள் மற்றும் எல்லாருமே நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டி கொண்டவள் இறுதியாக தீபாராதனை காமித்து தன் பூஜையை முடித்தாள் அந்த வீட்டின் மூத்த மருமகள் மதுவந்தினி... அப்பொழுது வாயில் அழைப்பு மணி ஒலிக்க, பூஜை அறையில் இருந்து வெளியில் வந்து வாயில் கதவை திறக்க, வெளியில் பெரிய பெட்டி மற்றும் ஏர் பேக்குடன் ஒரு நெடியவன் நின்று கொண்டிருந்தான்... தன் கணவனின் உயரமும் ஆனால் அவனின் இடுங்கிய கண்களுக்கு மாறாக சிரிக்கும் கண்களும், குண்டு கன்னமும் உற்று பார்க்க தன் கணவன் சாயலும் அதை விட சிவகாமிக்கு ஆண் வேடம் போட்ட மாதிரி அவரை உரித்து வைத்து ஸ்டைலாக நின...