என் மடியில் பூத்த மலரே-12
அத்தியாயம்-12 ஆ தித்யா இப்பொழுது தந்தைக்கு உதவியாக மீண்டும் அலுவலகம் செல்ல ஆரம்பித்திருந்தான்.... ஆனால் மணி 5 ஆனால் டான் னு வீட்டிற்கு வந்து விடுவான் அவன் மனைவியை பார்க்க...அதற்கு பிறகு இரவு உணவுக்குதான் கீழ வருவார்கள்.. ஜானகியும் அதை கண்டு “இந்த விஷயத்தில் அப்படியே அப்பாவுக்கு தப்பாமல் பிறந்திருக்கான்.. ராம் அப்படிதான் கல்யாணம் ஆன புதிதில் தன் மனைவியை பிரிந்து கொஞ்ச நேரம் கூட இருக்கமாட்டார்.. அவர் அப்பா வற்புறுத்தி கூட்டி போனாலும் 5 மணிக்கு வீட்டிற்கு ஓடி வந்திடுவார்... அதே மாதிரிதான் புள்ளையும்” என்று மனதிற்குள் சிரித்து கொள்வார்... சில நேரம் இரவு பார்ட்டிக்கு சென்று விடுவார்கள்... நீண்ட நேரம் கழித்தே வீடு திரும்புவார்கள்.. ஜானகி எதையும் கண்டு கொள்வதில்லை.. சின்ன சிறுசுங்க ஜாலியா இருக்கட்டும் என்று விட்டு விடுவார்.. ஒரே வருத்தம் என்னவென்றால் தன் மருமகளின் உடை தான்... தான் முதல் முதலில் பார்த்தபொழுது தலைய தலைய புடவை கட்டியிருந்தவள் திருமணத்திற்கு பிறகு மருந்துக்கும் புடவை கட்டி பார்த்ததில்லை.. எப்ப பார்த்தாலும் எதாவது மாடர்ன் ட்ரெஸ் மட்டுமே.. அதுவும் இந்த மாதிரி பார்ட்டி...