நிலவே என்னிடம் நெருங்காதே!!-6

 


அத்தியாயம்-6

ன்று இரவு அனைவரும் உணவு மேஜையில் கூடியிருந்தனர்..

அனைவரும் தட்டை முன்னால் வைத்துக் கொண்டு தேவநாதனுக்காக காத்துக் கொண்டிருந்தனர்..  

அவரும் தன்னுடைய அறையிலிருந்து தன் கைத்தடியை லேசாக துணைக்கு பற்றிக் கொண்டு வேக நடையுடன் அந்த உணவு மேஜைக்கு அருகில் வந்தார்..

அங்கு நடுநாயகமாக வீட்டிருந்த அந்த இருக்கையில் கம்பீரமாக அமர்ந்தவர் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து கொண்டே  வைத்தவர் மணமக்கள் இருவரும்  அங்கு இல்லாததை கண்டு அருகிலிருந்த மனோகரியை  பார்த்தவர்

“என்னம்மா மனோ...?  எங்க உன் மவனும் மருமவளையும் காணோம்? “  என்றார் புருவத்தை உயர்த்தி அதிகாரமாக..

தன் கணவனை உருட்டி மிரட்டி தன் கட்டுக்குள் வைத்திருந்தாலும் மனோகரிக்கு எப்பொழுதுமே தன் மாமனாரை கண்டாலே பயம்தான்.. அவர் என்ன சொன்னாலும் அப்படியே தட்டாமல் செய்து விடுவார்..

இதுவரை அவரை எதிர்த்து நின்று பேசியதில்லை.. அதற்கான சந்தர்ப்பமும் வந்ததில்லை.. அதனால் தன் மாமனாரின் குரலை கேட்டதும் சிறு நடுக்கத்துடனே  

“அந்த பொண்ணுக்கு சாப்பாடு வேண்டாமாம்  மாமா.. பால் மட்டும் போதும் னு  சொல்லிடுச்சு.. புது இடம் இல்லையா?  நானும் கட்டாயப்படுத்தல.. “  என்று  இழுத்தார் தயக்கத்துடன்..

“ஹ்ம்ம்ம் சரி.. உன் உத்தம புத்திரன்  எங்க? “  என்றார் மீண்டும்  புருவத்தை உயர்த்தி..

மனோகரியோ பதில் சொல்லாமல் தோட்டத்தை பார்த்தவாறு முழிக்க அருகிலிருந்த அதிரதனின் இரண்டாவது தங்கை யாழினி  

“தாத்தா...  அண்ணா வெளியில தோட்டத்தில இருக்கு.. யார் கூடவோ போன் பேசிக்கிட்டு இருக்கு.. “  என்று இழுத்தாள் தயக்கத்துடன்..

“ஹ்ம்ம் இந்த  பயலுக்கு இன்னும் என்ன போன் பேச வேண்டி இருக்கு?  எல்லாம் அந்த பட்டணத்து புள்ள கூடத்தான் பேசிக்கிட்டு இருக்கானா?

என்ன மனோ?  நீ இதையெல்லாம் கண்டிக்கறது  இல்லையா?  இத்தனை நாள் அவன் எப்படி வேணா இருந்திருக்கலாம்.. ஆனால் இப்பொழுது அவனுக்கு னு ஒருத்தி வந்தாச்சு..  இன்னும் அந்த பட்டணத்து  புள்ளை கூட என்ன பேச்சு வேண்டி கிடக்கு? “  என்று தன் மருமகளை முறைத்தார்...

மனோகரி பாவமாக தன் அருகில் அமர்ந்து இருந்த தன்  கணவன் நெடுமாறனை பார்க்க அவரும்

“அது வந்து பா....  திடீர்னு கல்யாணம் ஆயிடுச்சா.. உடனே அந்த புள்ளைய கழட்டி விடறது  அவனுக்கும் கஷ்டமா தான் இருக்கும்.. கொஞ்சம் டைம் கொடுங்க..  கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவான்.. “ என்று தன் மகனுக்காக பரிந்து பேசினார் நெடுமாறன்..

அவனை பார்த்து முறைத்தவர்

“என்னடா !!  நீயும் அறிவு கெட்டதனமா  பேசற..அந்த பட்டணத்து புள்ளய கழட்டி விடத்தானே இப்படி ஒரு அவசரக் கல்யாணம் பண்ணினது.. அவனை கண்டித்து திறுத்தாமல் அவனுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்க.. நீ எல்லாம் ஒரு அப்பன்.. “  என்று தன் மகனையும் திட்டித் தீர்த்தவர் தன் பேத்தியை பார்த்து

“யாழி குட்டி... நீ போய் உன் அண்ணனை வரச் சொல்.. “  என்று தன் பேத்தியிடம் திரும்பினார்..

அதைக் கேட்டு திடுக்கிட்ட யாழினி

“ஐயையோ தாத்தா...!!  நான் போகல..  நான் போனா அண்ணா இருக்கிற கோவத்துல என் தலையிலேயே கொட்டும்... வேணும்னா அம்மு வ போகச் சொல்லுங்க..  அவளுக்கு இப்ப கல்யாணம் ஆகிடுச்சுல்ல..

அதனால அண்ணா இப்ப அவளை குட்டறதில்லை.. “  என்று தனக்கு வந்த பாலை தன் அக்கா அமுதினியிடம் திருப்பி விட்டாள் யாழினி...

“ஐயையோ என்னால முடியாது தாத்தா.. குட்டினா கூட  பரவால்ல..வாங்கிக்கலாம்.. ஆனா அண்ணன் திரும்பி ஒரு முறை முறைச்சா அவ்வளவுதான்.. நான் போகலை... " என்று மறுத்து சொல்ல,

"ஹ்ம்ம்ம் எல்லாரும் அந்த பொடி பயலுக்கு இப்படி பயந்து நடுங்கறிங்க.. " என்றவர் தன் ஜிப்பாவின் பாக்கெட்டில் இருந்த தன் அலைபேசியை எடுத்து பட்டணை தட்டியவர்

"எங்கடா இருக்க... அடுத்த ஒரு நிமிசத்துல டைனிங் டேபிலுக்கு வர்ற.. " என்று கட்டளை இட்டவர் அவன்  மறு பேச்சு பேசும் முன்னே அலைபேசியை அணைத்தார்...

அனைவரும் ஆர்வமாக தோட்டத்தின் பக்கம் பார்த்திருக்க, அடுத்த நொடி தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு உள்ளே வந்தவன் டைனிங் ஹாலை நோக்கி வேக நடையுடன் வந்து கொண்டிருந்தான் அதிரதன்..

அவனை கண்டதும் எப்புடி? என்று தன் புருவங்களை உயர்த்தி  உல்லாசமாக சிரித்தார் தேவநாதன்..

யாழி குட்டி மட்டும் தைர்யம் வந்து

"சூப்பர் தாத்தா... உங்களுக்கு மட்டும்தான் அண்ணன் அடங்கி போகுது... எப்படி தாத்தா... ?" என்றாள் ரகசியமாக...

"ஹா ஹா ஹா... அதுதான் இந்த தேவநாதன்... யாரை எப்படி மடக்கணும்னு  எனக்கு தெரியுமாக்கும் யாழி குட்டி.. " என்று  தன் அருகில் அமர்ந்து இருந்த தன் பேத்தியின் கன்னத்தை செல்லமாக கிள்ளியவர் தன் மீசையை முறுக்கி விட்டு கொண்டார்...

அடுத்த நிமிடம் அங்கு வந்து சேர்ந்த அதிரதன்

“எதுக்கு வரச் சொன்னிங்க? " என்று தன் தாத்தாவை முறைத்தான்..

அவர் அருகில் இருந்த இருக்கையை  காட்டி

"உட்கார் டா... புது மாப்பிள்ளை.. நேரத்துக்கு சாப்பிடறதில்லையா? “  என்றார் நக்கலாக சிரித்தவாறு..

“ஆமாம்.. என்மேல ரொம்பத்தான் அக்கறை.. அப்படி அக்கறை இருக்கிறதா இருந்தால் என் மனசுக்கு எது பிடிக்கிறதோ அதை செய்திருப்பார்.. காலையில் நான் மறுக்க மறுக்க என்னை பலி ஆடாக்கிட்டு இப்ப ரொம்ப அக்கறை மாதிரி நடிக்கறத பார்.. " என்று உள்ளுக்குள் திட்டித் தீர்த்தவன்

“எனக்கு பசிக்கல... பால் மட்டும் போதும்.. “ என்றான் அவரை முறைத்தவாறு..

உடனே அதைக்கேட்டு நமட்டு சிரிப்பு  சிரித்தவர் அருகில் இருந்த தன் மருமகளை பார்த்தவர்

“மனோ...பாரு உன் மவனுக்கும் மருமவளுக்கும் என்ன ஒரு பொருத்தம்?  உன் மருமவளும் சாப்பாடு வேண்டாம் னு சொல்லிட்டா.. என் பேரனும் அதையே சொல்றான்.. இதுல இருந்தே தெரியல.. அவர்களுடைய ஜோடிப் பொருத்தம் சூப்பரா இருக்குன்னு.. “ என்று ஓரக்கண்ணால் தன் பேரனை பார்த்தவாறு சிரித்துக் கொண்டார்..

அதைக் கேட்டதும் எரிச்சலான அதிரதன்

“அதெல்லாம் ஒன்னும் இல்லை.. மா.. எனக்கு பசிக்குது.. சாப்பாடு வைங்க.. “  என்றவன்  தன் தாத்தாவின் மறுபுறம் அருகில் இருந்த இருக்கையை வேகமாக பின்னுக்கு இழுத்து விறைத்தவாறே அமர்ந்து கொண்டு  தட்டை எடுத்து வைத்து சாப்பிட ஆயத்தமானான்....

அதைக்கண்டு மீண்டும் ஒரு நமட்டு சிரிப்பை சிரித்தவர் தன் மீசையை தடவிக் கொண்டே அருகில் இருந்த தன் பேத்திகள் இருவரையும் பார்த்து கண் சிமிட்டி சிரித்தார் தேவநாதன்..

அமுதினியும் தன் அண்ணன் அறியாமல் தன் தாத்தாவை பார்த்து குறும்பு சிரிப்பை சிரிக்க யாழினியோ தன் கட்டை விரலை உயர்த்திக் காட்டி

“சூப்பர் தாத்தா... “  என்று கண்ணடித்தாள் சிரித்தவாறு..

அதற்கு பிறகு எல்லோரும் ஏதேதோ கதையை பேசிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க அதிரதன் மட்டும் அதில் கலந்து கொள்ளாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு தட்டை மட்டும் பார்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்..

எப்பொழுதும் இரவு உணவு நேரத்தில் தன் தங்கைகளுடன் வம்பு இழுத்தவாறு அவன்தான் கலகலப்பாக பேசி சிரிப்பான்..  ஆனால் இன்று அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதை கண்டு தேவநாதனுக்கு கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது..

ஆனால் இதெல்லாம் அவன் நல்லதுக்குத்தான்..மருந்து கசந்தாலும் அது நோயை குணபடுத்தத்தான்..

“அது மாதிரி தன் பேரனுக்கும் இந்த கல்யாணம்  இப்ப கசந்தாலும் அவன் எதிர்காலம் வளமானதாக இருக்கும்.. அதுக்கு இது மாதிரி வேதனையை இப்பொழுதே அனுபவித்து கொள்ளட்டும்.. “  என்று தன் மனதை தேற்றிக் கொண்டார்..

சிறியவர்கள் எல்லாரும்  சாப்பிட்டு முடித்து தங்கள் அறைக்கு சென்றிருக்க,  அதிரதன் மனோகரி மற்றும் நெடுமாறன் இன்னும் அங்கிருந்தனர்.. தன் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்காமல் திருப்பி கொண்டு சாப்பிட்டு கொண்டிருந்த தன்  பேரனை பார்த்தவர்

“டேய் ரதன்... சாப்பிட்டு முடிச்சிட்டு  திரும்பவும் வெளியில எங்கேயாவது சுத்த போயிடாத !  நேரா உன் ரூம்க்கு போ.. அங்க உனக்கு ஒரு புது வேட்டியும் சட்டையும் வச்சிருக்கேன்..

மேலுக்கு குளிச்சிட்டு அதை கட்டிகிட்டு அங்கேயே இரு.. “  என்று கட்டளையிட்டார்

என்னது?  மறுபடியும் வேஷ்டியா? அதெல்லாம் எதுக்கு?  என்னால முடியாது..   என்று முறைத்தான் அதிரதன்..

“ஹா ஹா ஹா என்னடா ! ஆளுதான் என் உசரத்துக்கு வளர்ந்திருக்க..  கொஞ்சம் கூட விவரம்  இல்லாத சின்ன பயலாவே  இருக்கியே !! இன்னைக்கு உனக்கு முதல் இரவு.. அதற்கான ஏற்பாட்டையெல்லாம் பண்ணி வச்சிருக்கேன்

மனோ..  நீ போய் சீக்கிரம் உன் மருமவள ரெடி பண்ணி அவன் ரூமுக்கு அனுப்பி வை.. “  என்று நமட்டு சிரிப்பு சிரித்தார் தேவநாதன்..

அதைக் கண்டு எரிச்சலான அதிரதன்

“அது ஒண்ணுதான் குறைச்சல்... “  என்று உள்ளுக்குள் பல்லை கடித்துக் கொண்டு

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... அந்த பொண்ணு என் ரூமுக்கு வரக் கூடாது..  வேற எந்த ரூம்லயாவது தங்க வச்சுக்கோங்க.. “ என்று தன் தாத்தாவை நேராக பார்த்து முறைத்தான் அதிரதன்..

“இது நல்லா இருக்கே.. காலையில அக்னி சாட்சியா  அந்த பொண்ணை கண் கலங்காமல் கடைசி வரைக்கும் பார்த்துக்கிறேன் என்று சொல்லி அது கழுத்துல தாலிகட்டி மூணு  முடிச்சு போட்டு இருக்க..  

இனிமேல் அந்த பொண்ணுக்கு இன்பம் துன்பம் எது வந்தாலும் நீதான் பார்த்துக்கணும்.. உனக்கும் அதே மாதிரிதான்.. இன்பம் துன்பம் எது வந்தாலும் உன் பொண்டாட்டி தான் இனிமேல் உனக்கு..  

இனிமேல் என் பேத்தி கூடத்தான் இருக்கணும்..  என்ன புரிஞ்சுதா? “  என்று அதட்டினார் தேவதான்..

“நான் எங்க அக்னி சாட்சியா அதெல்லாம் சொன்னேன்?  நீங்க தான் என்னை கட்டாயப்படுத்தி அந்த புகைக்கு நடுவுல உட்கார வச்சு  அந்த சடங்கு சம்பிரதாயத்தை எல்லாம் செய்ய வைத்தது..  என்னை பொருத்தவரை இது கல்யாணமே கிடையாது..  

எப்பவும் நீங்க சொல்ற மாதிரி நீங்க நீட்டற அக்ரிமெண்ட் பேப்பர்ல போட்ட கையெழுத்து மாதிரிதான் இதுவும்..  நீங்க சொன்னதை செஞ்சேன்..  அவ்வளவுதான் அதற்காக அவ ஒன்னும்  என் பொண்டாட்டி ஆகி விட முடியாது..

நீங்க எவ்வளவு தான் சதி  பண்ணி இந்த கல்யாணத்தை நடத்தி இருந்தாலும் அதையெல்லாம் முறியடிப்பான் இந்த அதிரதன்..

எனக்கு என் நிலா பொண்ணு மட்டும் தான் பொண்டாட்டி.. “  என்ற சவால் விட்டான் தன் தாத்தாவை பார்த்து..

அதைக் கேட்டு சிரித்துக் கொண்டவர்

“ஹ்ம்ம்ம் அதையும் பார்க்கலாம்.. இன்னைக்கு ராத்திரி  பத்து மணியில் இருந்து பன்னிரெண்டு மணி வரைக்கும்  நல்ல நேரம்.. நம்ம வீட்டு வாரிசு இந்த நேரத்தில் ஜனித்தா  நம்ம வம்சம் இன்னும் ஆலமரம் போல் தலைக்கும்... அதனால் நான் சொல்றதை தட்டாமல் கேளு..  

மனோ..  நீ போய் மருமவளை ரெடி பண்ணி அவன் ரூம்க்கு அனுப்பு.. “  என்றவர் அடுத்து அவன் சொன்ன  பதிலை காதில் வாங்காமல் எழுந்து தோட்டத்து பக்கம் நடந்தார்...  

அதைக்கண்டு பல்லை கடித்து தன் ஆத்திரத்தை எல்லாம் தன் பெற்றோர்களிடம் காண்பித்தான்..  

மனோகரியும் நெடுமாறனும்  ஏதேதோ சமாதானம் சொல்லி தன் மகனை அவன் அறைக்கு அனுப்பி வைத்தனர்...

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!