பூங்கதவே தாழ் திறவாய்
முன்னுரை:
உண்மையான
காதல் இறுதியில் எவ்வாறு வெற்றியைப் பெறுகிறது என்பதை விளக்கும் சிறிய சஸ்பென்ஷ் உடன்
ஒரு இனிமையான காதல் கதை இது. இந்த கதை ஒரு வித்தியாசமான தம்பதியினரைப் பற்றியது. அவர்கள் வெவ்வேறு
திசையில் பயணித்தாலும் இறுதியில் எவ்வாறு தங்கள் காதலை உணர்ந்தனர் என்பதை உணர்த்த வருகிறது
இந்த காதல் கதை.
ஹீரோ
அபிநந்தன். ஒரு சிறந்த தொழிலதிபன். தனது அத்தை
மகள் மாயாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டான். இருப்பினும் அவன் அவள் மீது
அக்கறை காட்டவில்லை.
அவனது
அத்தை அவனது திருமணத்தை விரைவில் நடத்தும் படி அவனை நெருக்கிக் கொண்டிருந்தார். ஆனால்
அபிநந்தனுக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் போய்விட, திருமண நாளை தாமதப்படுத்தினான்.
இதற்கிடையில்
அவன் தனது புதிய அலுவலகத்தில் பணிபுரியும்
ஒரு பெண் தீக்சாவை சந்தித்தான். தீக்சா ஒரு தைரியமான மற்றும் பிடிவாதமான பெண்
முதல்
பார்வையில் அபி அவளால் ஈர்க்கப்பட்டான். இருப்பினும் அபி மற்றும் தீக்சா இடையேயான
சில ஆரம்ப சந்திப்புகள் சண்டையுடன் முடிவடைந்தன. அபி அவளுக்கு அதிக வேலை கொடுத்து
அவளை சித்திரவதை செய்ய விரும்பினான். ஆனால் தீக்சா தனது ஷிப்டைத் தாண்டி வேலை செய்ய மறுத்துவிட்டாள்.
அபிநந்தன்
அவளை மட்டம் தட்ட, ஒரு வாய்ப்பை தேடிக் கொண்டிருந்தான். இதற்கிடையில் தீக்சா ஏற்கனவே திருமணமானவள், அவள்
கர்ப்பமாக இருக்கிறாள் என்பது பின்னர் அபிநந்தனுக்கு
தெரிய வந்தது. தீக்சா வயிற்றில் வளரும் குழந்தை
மீது அபிக்கு ஒரு ஈர்ப்பு வருகிறது.
அதனால்
தீக்சாவையே சுற்றி வருகிறான். ஆனால் தீக்சா
அபிநந்தனை வெறுத்து ஒதுக்குகிறாள். அபிநந்தன் ஏன் தீக்சாவையே சுற்றி வந்தான்? தீக்சா ஏன் அபிநந்தனை
வெறுத்தாள்? தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்.
இந்த
கதையும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிய காதல் கதைதான். படித்து விட்டு உங்கள்
கருத்துக்களை பகிருங்கள்...Happy
Reading !!! அன்புடன் பத்மினி செல்வராஜ்
இந்த கதையை Amazon ல் படிக்க, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்கள்...Happy Reading!!! -அன்புடன் பத்மினி செல்வராஜ்...
https://www.amazon.in/dp/B08HKYT17Y
Upload pls sister...
ReplyDelete