என் மடியில் பூத்த மலரே-11



அத்தியாயம்-11 

ந்த ஆளுயர கண்ணாடி முன் அமர்ந்து தன் இமைகளுக்கு மஸ்காரா போட்டு கொண்டிருந்தாள் ஷ்வேதா.. முடித்ததும் தன் கண்ணை சிமிட்டி பார்த்தாள். அதுவும் அழகாக காட்டியது..

பின் விலை உயர்ந்த அந்த உதட்டு சாயத்தை எடுத்து தடவினாள்.. பின் தன் மேக்கப் முடிந்த திருப்தியுடன் எழுந்து நின்றவள் தன் உடலை இப்படியும் அப்படியும் வளைத்து பார்த்து எப்படி பார்த்தாலும் அழகாக இருக்கவும் முழு திருப்தி வந்தது அவளுக்கு... அதற்குள்

“ஷ்வேதா... “என்று நூறாவது முறையாக அழைத்திருந்தார் அவளின் அம்மா...

“இதோ வந்திட்டேன் மா ...” என்று திருப்பி குரல் கொடுத்தவள்

“இந்த அம்மாக்கு கொஞ்சம் கூட பொறுமயே இல்லை..மேக்கப் போட்டுட்டு வர்ரதுக்குள்ள என்ன அவசரமோ” என்று திட்டி கொண்டெ மீண்டும் ஒருமுறை தன்னை சரி பார்த்து கொண்டு அலட்டிக்காமல் கீழே இறங்கி வந்தாள்...

“ஏம்மா .. நான் தான் ரெடியாகிட்டு வர்ரேன் னு சொன்னேன் இல்லை.. அதுக்குள்ள ஏன் கத்திகிட்டிருக்க???”

“ஏன்டி.. நான் கத்தறனா??... இதோட நூறு தரம் கூப்பிட்டுட்டேன்.. நீயும் ரெடியாகிட்டேன் ரெடியாகிட்டேனு ஒரு மணி நேரமா சொல்லிகிட்டு தான் இருக்க... முடிஞ்ச மாதிரி தெரியலை.. நாம போறதுக்குள்ள அங்க பங்சன் முடிஞ்சிடும்” என்றவர் அப்போதுதான் தன் மகளின் உடையை கவனித்தார்...

“என்னடி இது ட்ரெஸ்?? ... பர்த்டே பார்ட்டிக்கு போற மாதிரி இல்லாம ஏதோ பப் க்கு போற மாதிரி ட்ரெஸ் பண்ணி கிட்டு வந்து நிக்கற”.

“ஹ்ம்ம்ம் நீ தானம்மா சொன்ன.. இது பெரிய இடத்து பர்த்டே பார்ட்டி னு.. பர்த்டே பார்ட்டி னாலும் அங்க எல்லாம் இப்படி தான் ட்ரெஸ் பண்ணுவாங்க...”

“இது பெரிய இடம் னாலும் சரியான பஞ்சாங்கம் டி... அந்த அம்மா அவ்வளவு வசதி இருந்தாலும் எங்க போனாலும் பட்டு புடவைய சுத்தி கிட்டு ஒரு வைர மாலைய போட்டு கிட்டு, நெற்றி நிறைய பொட்டையும், தலை நிறைய பூவையும் வச்சுகிட்டு சுத்தற ஆளுங்க... அதனால் அவங்களுக்கு பிடிச்ச மாதிரிதான் ட்ரெஸ் பண்ணனும்.... “

“போ மா.... என்னால எனக்கு பிடிச்ச மாதிரிதான் இருக்க முடியும். அவங்களுக்கு பிடிச்ச மாதிரி எல்லாம் ட்ரெஸ் பண்ண முடியாது.. இப்படி பட்ட பார்ட்டி போர் அடிக்கும்.. நான் வரலை.. நீயும் அப்பாவும் மட்டும் போய்ட்டு வாங்க” என்று முகத்தை சுழித்தாள்

“ஷ்வேதா.... நாம் வெறும் பார்ட்டிக்கு மட்டும் போறதா இருந்தால் நீ எப்படி வேணும்னாலும் வா னு சொல்லிடுவேன்.. நாம போறதே வேற ஒரு திட்டத்துக்காக...”

“திட்டமா?? “ என்று புரியாமல் தன் அம்மாவை பார்த்தாள் ஷ்வேதா...

“ஹ்ம்ம்ம் திட்டம் தான்... இப்ப போறமே.. இந்த வீட்டுல ஒரே ஒரு பையன் தான்.. அத்தனை சொத்துக்கும் வாரிசு. இப்ப இருக்கிற நம்பர் ஒன் பணக்காரங்களில இவங்களும் ஒன்னு...

அவங்க பையன் இப்பதான் வெளிநாட்டுல இருந்து வந்திருக்கான்.. எப்படியாவது நீ அவனை மயக்கி அந்த வீட்டுக்கு மருமகள் ஆயிட்டனா, எல்லா சொத்தும் நமக்கு தான்... அப்புறம் நீதான் அங்க ராணி. நம்ம வச்சதுதான் சட்டம்... ”

“என்னமா சொல்ற??? நான் தான் ஏற்கனவே ராகுல் கூட சுத்திகிட்டிருக்கேனே.. அவனைதான் கல்யாணம் பண்ணிக்க போறேனு என் ப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் சொல்லிட்டேன்.. நீயும் சரின்னு தான சொன்ன.. இப்ப என்ன ஆச்சு???”

“ஹ்ம்ம்ம்ம்ம் அந்த ராகுல் இப்ப தான் தொழில்ல முன்னேறி கிட்டு இருக்கான்.. இன்னும் எப்ப மேல வந்து பெரிய அளவுக்கு வர்ரது?? ... அதுக்குள்ள உனக்கு வயசாகிடும்...

இந்த இடம் ரொம்ப பெரிய இடம் ஷ்வேதா.. என் ப்ரென்ட் மூலமாக இப்ப தான் தெரிய வந்தது... பையனும் பார்க்க ஹீரொ மாதிரி இருக்கான்... அதனால அந்த ராகுல கலட்டி விட்டுட்டு ஒழுங்கா இந்த பையனை மடக்கிற வழியை பாரு...

அதனால போய் நல்ல ஒரு புடவையா கட்டி கிட்டு வா!! “

“என்னது புடவையா??? அதெல்லாம் என்னால முடியாது..அதை யாரு சுத்தி கிட்டு இருக்கிறது??? நான் மாட்டேன்...”

“ப்ளீஸ் ஷ்வேத!! சொன்னா புரிஞ்சுக்கோ... பர்ஸ்ட் இம்ப்ரெஸ்ஸன் பெஸ்ட் இம்ப்ரெஸ்ஸன் சொல்லுவாங்க.. அதனால உன்னை பார்க்கையிலயே அந்த அம்மாவுக்கு பிடிக்கனும்.. அப்பதான் நம்ம திட்டம் நல்ல படியா நடக்கும்...

“ஹ்ம்ம்ம் நீ சொல்றதை பார்த்தால அவங்க ரொம்ப பட்டிகாடா இருப்பாங்க போல இருக்கே... அங்க போய் நான் எப்படி குப்பை கொட்டறதாம்?? “

“கல்யாணம் ஆகிற வரைக்கும் தான்.. அதுக்கப்புறம் நீ உனக்கு பிடிச்ச மாதிரி இருந்துக்கோ.. நீ தான் அத்தனை சொத்துக்கும் ராணி ஆயிடுவியே... அதனால் இப்ப பிடிவாதம் பிடிக்காமல் போய் ஒரு நல்ல புடவையை கட்டி கிட்டு வா” என்று விரட்டினார் விஜயா.. ஷ்வேதாவின் அம்மா....

விஜயா ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்.. ஆனால் சிறு வயது முதலே ஆடம்பர வாழ்க்கையை விரும்புவர்.. எப்படியும் ஒரு பணக்காரனை மணக்க வேண்டும். பெரிய வீடு, சொகுசு கார், விதவிதமான ஆடை அணிகலன்கள் எல்லாம் வேண்டும்..

ஆடம்பர சுகத்தை அனுபவிக்கவேண்டும் என்பது அவரின் ஆசை.. ஆனால் அவருடைய வீட்டின் நிலைக்கு தகுந்த படி ரங்கநாதனை மணமுடிக்க வேண்டியதாகி விட்டது..

ரங்கநாதன் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்..அவரின் வருமானத்தால் விஜயாவின் ஆசையை பூர்த்தி செய்ய முடியவில்லை..திருமணத்திற்கு பிறகும் தான் நினைத்த வாழ்வை வாழ முடியவில்லை என உள்ளுக்குள் குமுறினார் விஜயா...

விஜயாவின் நச்சரிப்பால்தான் ரங்கநாதன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனியாக ஒரு சிறு தொழிலை ஆரம்பித்தார்.. மோட்டார் உதிரி பாகங்கள் வாங்கி விற்பது...

அவரின் அதிர்ஷ்டம் தொழில் நல்ல படியாக இப்பதான் முன்னேற ஆரம்பித்து இருக்கிறது... ராம்குமார் ஆரம்பிக்க இருந்த ஒரு புதிய தொழிலில், தனக்கு ஒரு வாய்ப்பு வேண்டி சென்ற பொழுது தான் அவரை முதலில் பார்த்தது..

ராம்குமாரும் வளரும் சிறு தொழில்களை ஊக்குவிப்பதில் முன்னோடி.. பெரிய நிறுவனங்களுக்கு பெரிய ஆர்டர்களை கொடுத்தாலும் இந்த மாதிரி வளர துடிப்பவர்களுக்கும் கொஞ்சம் தொழில் செய்ய உதவுவார்.. அந்த வகையில் இருவரும் பழக்கமானார்கள்..

விஜயாவுக்கு தன் கணவரின் தொழிலில் அவ்வளவு நம்பிக்கை இல்லை.. இவர் இப்ப ஆரம்பித்து எப்ப இன்னும் பெரிய அளவுக்கு வருவது என்று ஆயாசமாக இருந்தது.. தான் சிறு வயதில் இருந்தே மனதிற்குள் பூட்டி வைத்த அந்த ஆடம்பர வாழ்க்கை ஆசை நிறைவேறாமல் போய் விடுமோ?? என்று உள்ளுக்குள் கனன்று கொண்டே இருந்தது விஜயாவிற்கு.. அவருக்கு ஒரே ஆறுதல் தன் மகள்.. அவளின் அழகு...

அவளின் அழகை கண்டு சிலர் அவளை சுத்தி வர ஆரம்பித்தனர்..அப்பொழுதுதான் விஜயாவிற்கு ஒரு எண்ணம் உதயமானது. தன் மகளின் அழகை வைத்து ஒரு பெரிய பணக்கார புளியங்கொம்பா பிடிச்சிட்டா மகளோடு சேர்ந்து தானும் செட்டில் ஆகிடலாம் என்று மனக்கோட்டை கட்டினார்...

அதற்கு தகுந்த மாதிரி பெரிய இடத்து விழா எதுவாயினும் எப்படியாவது ஒரு பெயரை சொல்லி அங்கு சென்று விடுவது தன் மகளுடன்....யாராவது மயங்கி விரும்பி வந்து தன் மகளை மணக்க கேட்பார்கள் என்று காத்திருந்தார்.....

ஷ்வேதாவும் தன் அன்னையை விட ஒரு படி மேல்.. கல்லூரி நாட்களில் பணக்காரவர்களை மட்டுமே நண்பர்களாக்கி கொண்டாள்.... அவளின் அழகும், நடையிலும் உடையிலும் அவளும் பணக்கார வீட்டு பெண்ணாக காட்டி கொள்வாள்....

கல்லூரி முடிந்த பிறகும் அந்த நண்பர்களுடன் எபொழுதும் பார்ட்டி, பங்சன் என்று சுத்தி கொண்டிருப்பாள்..

ரங்கநாதன் ஆரம்பத்தில் தன் மனைவிக்கு எடுத்து சொல்லி பார்த்தார்... அவள் கேட்பதாக இல்லை என்று ஆனதும் தன் முயற்சியை விட்டு விட்டார்... தன் மகளாவது நல்ல படியா வளரனும் என்ற ஆசையும் பொய்யாகிடுமோ என்ற அளவில் இருந்தது ஷ்வேதாவின் நடவடிக்கைகள்.....

ஆனால் அவரால் தன் மனைவியை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை..

ஷ்வேதா தன் நண்பர்களுடன் சென்றிருந்த ஒரு விழாவில் தான் ராகுலை சந்தித்தது... ராகுல் இப்பொழுது தான் சொந்தமாக தொழிலை தொடங்கி முன்னேறி வருகிறான்.. சீக்கிரம் ஒரு நல்ல நிலைக்கு வந்து விடுவான் என்று தோன்றவே விஜயாவின் ஆலோசனையில் ராகுலை அணுகினாள் ஷ்வேதா.. அவனும் அவள் விரித்த வலையில் உடனேயே வீழ்ந்து விட்டான்...

ஆனால் இப்பொழுது விஜயாவிற்கு இன்னும் பெரிய இடம் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால் அதை பயன்படுத்தி கொள்ள ஆசை வந்தது.. அதற்காக தன் மகளை தயார் செய்ய ஆரம்பித்தார்.. அதன் முதல் கட்டம்தான் இந்த பிறந்த நாள் விழா பார்ட்டி..

ரங்கநாதன் தெரிந்தவர் என்ற வகையில் ராம்குமார் அவரையும் விழாவிற்கு அழைத்து இருந்தார்.. அதற்குதான் இப்பொழுது தயாரகி கொண்டிருக்கிறார்கள்...



உள்ளே சென்ற கொஞ்ச நேரத்தில் கீழ இறங்கி வந்த தன் மகளையே வச்ச கண் வாங்காமல் பார்த்தார் விஜயா ...

தங்க சிலை போல புடவையில் இன்னும் அழகாக தெரிந்தாள்.. இந்த அழகு தான் அத்தனை ஆண்களையும் சுத்தி வர செய்கிறது.. எப்படியாவது தன் மகளின் அழகை வைத்து இந்த இடத்தை மடக்கிடனும்...

அதிலும் அந்த வீட்டில் உள்ளவர்கள் வெகு ஏமாளியாக இருப்பதால் சுலபத்தில் ஏமாற்றிவிடலாம் என்று கணக்கு போட்டு அதற்கு தகுந்த மாதிரி காயை நகர்த்த ஆரம்பித்திருந்தார்...

ஜானகி நிவாஸ் என்ற பெயர் பலகை பொருந்திய அந்த பிரமாண்ட பங்களாவின் முன் நின்றது ஷ்வேதாவின் கார்.. வீட்டின் வெளித்தோற்றத்தை கண்டு வியந்து போனாள் ஷ்வேதா ... ஓட்டுனர் இருக்கையில் இருந்த ஷ்வேதாவின் தந்தை ரங்கநாதன் தன் மொபைலில் இருந்த அழைப்பிதழை காண்பிக்கவும், காவலாளி அந்த கேட்டை திறந்து விட்டார்...

உள்ளே சென்றதும் அவளின் வியப்பு இன்னும் பெரிதானது.. வாசலில் இருந்து தூரத்தில் தெரிந்தது அரண்மனை போன்ற அந்த பங்களா.. கேட்டிலிருந்து வீட்டிற்கு போகவே கார் வேண்டும் போல... பெரிய சாலை போன்று கேட்டிலிருந்து உள்ளே வீடு வரைக்கும் இருந்தது...

அதன் இரண்டு பக்கத்திலும் வித விதமான அழகு செடிகள் வரிசையாக வீற்றிருந்தன... சாலையின் ஒரு பக்கம் தோட்டத்திற்கு நடுவே விருந்தினர்களின் கார் நிறுத்த என்று ஒரு பகுதி.. மற்றொரு பக்கம் அவர்களின் சொந்த கார்கள்.. “கார் நிறுத்த மட்டுமே காலியான இடம் என்றால், அடிக்கடி இங்கு விழா நடக்குமோ?? ...”என்று யோசித்தாள்.

அப்புறம் அன்றைய விழாவுக்கான மேடையும் விருந்தினர்கள் அமருவதற்கான விலை உயர்ந்த நாற்காலிகளும் அழங்கார விலக்குகளும் கண்ணை பறித்தன..மேடையின் ஓரத்தில் மெல்லிசை கசிந்து கொண்டிருந்தது..

அந்த இரவு நேரத்தில் அந்த இடமே ரம்யமாக திருவிழா போன்று காட்சி அளித்தது...

பார்க்கிங் சிறிது தொலைவில் இருப்பதால் ரங்கநாதன் அவர்கள் இருவரையும் முதலில் இறக்கி விட்டு காரை பார்க் செய்ய சென்றார்..

அவ்வளவு பெரிய மாளிகையை பார்த்து வாயை பிளந்தனர் இருவரும்....

“வாவ்.. சூப்பரா இருக்குமா!!! சென்னையில் இப்படி ஒரு பங்களாவா?? இதுவரை இப்படி ஒரு வீட்டை இல்லை மாளிகையை பார்த்ததே இல்லை... செமையா இருக்கு”

“ஹ்ம்ம்ம் இப்ப புரியுதா.. நான் சொன்னது... நீ மட்டும் எப்படியாவது இந்த வீட்டுக்குள்ள வந்திட்ட அத்தனை சொத்தும் உனக்குதான்...”

“ஹ்ம்ம்ம் சூப்பர்மா.. கண்டிப்பா “

“ஷ்வேதா… அப்புறம் மற்ற பார்ட்டியில் நீயா போய் எல்லார் கிட்டயும் வாயடிப்ப இல்லை.. இங்க அது மாதிரி எதுவும் பண்ணிடாத... கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமா அமைதியா இரு.. அப்பதான் இந்த வீட்டு எஜமானிக்கு பிடிக்கும்.. அவளுக்கு பிடிச்சிருச்சுனாவே நீ பாதி உள்ள வந்த மாதிரிதான்.. ஞாபகம் வச்சுக்கோ !! “

“சரி மா.. அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்”என்று பேசி கொண்டிருக்கையில் அவளின் அப்பா அருகில் வரவும் இருவரும் அமைதியாகினர்ர்...

பின் மூவரும் விழா நடக்கும் இடத்திற்கு சென்று ஒரு இருக்கையில் அமர்ந்தனர்..

விழா மேடையின் நடுவில் ஒரு மேஜையில் பெரிய கேக் வைக்கபட்டிருந்தது..அதன் அருகில் ஆறடிக்கும் மேலான, கண்களில் குறும்பும் உதட்டில் சிரிப்புமாக நின்றிருந்தான் ஆதித்யா..

மெரூன் கலர் ஷேர்வானியும் அவனின் பாரம்பரிய வஸ்த்தரத்தையும் அணிந்து கம்பீரமாக ஒரு ராஜகுமரனை போல நின்றிருந்தான்.. அவனின் இரு பக்கமும் ஜானகியும் ராம்குமாரும் நின்றிருந்தனர்..

ஜானகியின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு தன் மகனின் 27 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதில்.. மேல் படிப்புக்காக வெளிநாடு சென்றவன் ,படிப்பு முடிந்தும் அங்கயே பயிற்சியும் தொடர்ந்ததால் அங்கயே தங்கும்படி ஆயிற்று...

இடையில் அடிக்கடி பெற்றொரை பார்க்க ஓடி வந்துவிடுவான்... ஏனோ அவன் பிறந்த நாளுக்கு இங்கு இருக்கிற மாதிரி அமையவில்லை கடந்த மூன்று வருடங்களாக...

மூன்று வருடங்களுக்கு பிறகு இன்று தான் அவனின் பிறந்தநாளை கொண்டாட வாய்ப்பு கிடைத்தது.. அதனாலயே பெரிய அளவில் ஏற்பாடு செய்து இருந்தார் ஜானகி..

சுசிலா தன் மருத்துவ துறையின் சம்பந்தமாக ஆறு மாதம் வெளிநாடு சென்றிருந்தார். அதனால் அவரால் விழாவிற்கு வர முடியவில்லை.. காலையிலயே அவனை அழைத்து தன் வாழ்த்தை சொல்லியிருந்தார்...

மேடையில் சிரித்த வண்ணம் நிற்கும் ஆதித்யாவின் கம்பீரத்தை கண்டதும் ஷ்வேதா இன்னும் வாயை பிளந்தாள்..

“சூப்பர் ஆ இருக்கான்மா... இதுவரை என் ப்ரென்ட்ஸ் சர்க்கில்ல இந்த மாதிரி யாருக்கும் பாய் ப்ரெண்ட் இல்லை.. இவன் மட்டும் எனக்கு கிடைத்தால் நான் தான் டாப்.. எல்லாரும் என்னைதான் பெருமையா பார்ப்பாங்க... ” என்று கண்களில் ஆசை பொங்க பேசினாள்..

“கிடைத்தால் என்ன.. உனக்கு கிடைக்க வைக்கனும்... அது உன் கையில் தான் இருக்கு “ என்று தன் திட்டத்தை மீண்டும் ஞாபகம் படுத்தினார் விஜயா...

விழா ஆரம்பிக்கவும் ஆதி கேக் ஐ வெட்டி தன் அம்மாவிற்கு முதலில் ஊட்டினான். பின் தந்தைக்கு.. அவர்களும் அவனுக்கு கேக்கை ஊட்டி பரிசை வழங்கினர்... பிறந்த நாள் பரிசாக ராம்குமார் ஆடி காரை அவனுக்கு பரிசாக கொடுத்தார்..

அனைவரும் கை தட்டி ஆரவரித்தனர்...

ஷ்வேதாவுக்கோ மயக்கமே வந்தது... பரிசாக ஆடி காரா??? தன் வீட்டில் இன்னும் ஒரு பெரிய கார் க்கு கூட வழி இல்லை...இருப்பது தந்தைக்கு ஒன்று.. தனக்கும் ஒரு கார் வேண்டும் என்று அடம் பிடித்து இப்பொழுது தான் ஒரு காரை வாங்கியிருக்கிறாள்...


துவரை ஏனோ தானொ என்று தன் அன்னையின் திட்டத்தை கேட்டிருந்தவள் இப்பொழுது மும்முரமாக முடிவு செய்தாள் இங்கு தான் வாழ வேண்டும் என்று.. அடுத்த நிமிடம் தன் எண்ணத்தில் முன்னே வந்த ராகுலை பின்னுக்கு தள்ளினாள்...கட கடவென்று தன் திட்டத்தை தீட்டினாள்..

பரிசளிப்பு தொடங்கவும் ஒவ்வொருவரக ஆதித்யாவிற்கு தங்கள் பரிசினை கொடுத்தனர்... ஷ்வேதாவின் குடும்பமும் அந்த மேடையை அடைந்தது.. திடீரென்று அங்கு நின்றிருந்த ஜானகியின் காலில் விழுந்து வணங்கினாள் ஷ்வேதா..

ஜானகிக்கு ஆச்சர்யமாகி போனது.. இந்த காலத்து பொண்ணுங்க கூட இன்னும் காலில விழறாங்களே என்று.. பின் அவளை ஆசிர்வதித்து , அவளின் தோற்றத்தை கவனித்தார்... வெள்ளை வெளேரென்று புடவை கட்டி பார்ப்பதற்கு நல்ல குடும்ப பாங்கான பொண்ணாக தெரிந்தாள் ஷ்வேதா..

பின் ஷ்வேதா குடும்பத்தின் முறை என்பதால் பரிசை கொடுக்க ஆதித்யாவை அடைந்ததும் மெல்ல புன்னகைத்தாள்... அதை கண்டதும் ஒரு நிமிடம் ஆதித்யா இமைக்க மறந்தான்.. அவளின் புன்னைகை அவன் மனதிற்குள் பதிந்தது முதல் பார்வையிலயே...

பின் பரிசினை கொடுக்கும் பொழுது தெரியாமல் அவளின் விரல்கள் அவனை ஸ்பரிசித்தன.. அந்த மெல்லிய தொடுகை அவனுள்ளே பல மாற்றங்களை ஏற்படுத்தியது...இதுவரை அனுபவிக்காத புது சுகமாக இருந்தது..

அதற்குள் அவன் சுதாரித்து கொண்டு அவர்களுக்கு நன்றி சொல்லி அடுத்தவரிடம் நகர்ந்தான்..

பின் உணவு பப்பே முறையில் ஏற்பாடு செய்ய பட்டிருந்தது.. பல வகையான உணவுகள் இருந்தன... அனைவருமே உணவு வகைகளை கண்டு வியந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்..

பிறந்த நாள் விழாவிற்கே இப்படி என்றால் ஆதித்யாவின் திருமணத்திற்கு எப்படி இருக்கும் என்று அவர்களுக்குள் பேசிகொண்டனர்.. பாதி பேர் எப்படியாவது தங்கள் மகளை இங்கு முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டனர்...

இதை எல்லாம் கேட்டு கொண்டிருந்தாள் ஷ்வேதா.. எப்படியாவது மற்றவர்கள் முந்தும் முன்பு தான் அந்த இடத்தை பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்தாள்...

ஜானகி வந்திருந்த ஒவ்வொருவரையும் சென்று கவனித்தார்.. அவரின் கண்கள் அடிக்கடி ஷ்வேதா இருந்த இருக்கையின் பக்கம் பார்த்தது.. ஆதியும் அடிக்கடி அவளையே பார்த்திருந்தான்..

ஷ்வேதாவும் இதை ஓரக்கண்ணால் கவனித்து கொண்டிருந்தாள்... அவளின் மனதிற்குள் “முதல் அடி வெற்றி.. இனி அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும்” என்று குறித்து கொண்டாள்...

அன்று இரவு தனிமையில் ஜானகி ராம்குமாரிடம்

“ஏங்க.. இன்னைக்கு விழா எப்படி இருந்தது “ என்றார்...

“ஹ்ம்ம்ம் நீ ஏற்பாடு செய்தது இல்லையா.. அமர்க்களமா இருந்தது.. அதிலும் ஆதி அந்த காஸ்ட்யூம்ல.. எனக்கே இவ்வளவு பெரிய ஆளா ஆயிட்டானானு ஆச்சர்யமா இருந்தது ஜானு “

அதை கேட்டதும் ஜானகியும் ஆமோதித்து “அப்புறம் ஒரு பொண்ணு வந்திருந்தாளே அவளை பற்றி என்ன நினைக்கிறீங்க “ என்று மெல்ல ஆரம்பித்தார்..

“எந்த பொண்ணு?? நான் எந்த பொண்ணை பார்த்தேன்.. உன் அழகில் மயங்கி உன்னை பார்க்கவே எனக்கு நேரம் பத்தலை.. அதுவும் இன்று அந்த பட்டு புடவையில் நீ தேவதை மாதிரி ஜொலித்த தெரியுமா!!!..

இதுல மத்த பொண்ணுங்களை எப்ப பார்க்க... வேனும்னா நீ பக்கத்தில இல்லாமல் அந்த பொண்ணை வர சொல்லு.. நான் பார்த்து எப்படி இருக்கானு சொல்றேன்” என்று சிரித்தார்...

“நினைப்புதான்... “ என்று முறைத்தவர்

“வந்த பொண்ணுங்களிலே அந்த பொண்ணுதான் புடவை கட்டி லட்சணமா, குடும்பத்துக்கு ஏத்தவளா தெரியறா... நம்ம ஆதிக்கு பார்க்கலாங்க... “

“ஆதிக்கு பார்க்கலாமா?? என்ன ஜானு சொல்ற.. ஆதிக்கு கல்யாணம் பண்ற வயசாயிடுச்சா?? இப்பதான் 27 ஆகுது.. இன்னும் கொஞ்சம் நாள் லைப் என்ஜாய் பண்ணட்டும்.. அதுவும் இல்லாமல் தொழில் கொஞ்சம் பழகட்டும்... அவன் கிட்ட எல்லாம் ஒப்படைச்சிட்டு நான் ஓய்வு எடுக்கலாம்னு இருக்கேன்...

என்னால முன்ன மாதிரி முடியலை என்று மெல்ல ஜானகிக்கு கேட்காமல் சொல்லி கொண்டார் கடைசியை மட்டும்..

“ஹ்ம்ம்ம் அவனுக்கு 27 வயசு ஆச்சுங்க.. இப்பதான் கல்யாணம் பண்ணனும்.. அப்பதான் நான் சீக்கிரம் பேரன் பேத்தியை பார்க்க முடியும்...

அவன் ஆபிஸ் பொறுப்பு ஏற்கும் முன்னாடியே கல்யாண வாழ்க்கையை அனுபவிக்கட்டும். இல்லைனா உங்கள மாதிர் அந்த ஆபிஸயே கட்டிகிட்டு அழுவான்.. அவன் பொண்டாட்டி கூட டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டான்.. அதுக்காகவே இப்பவே கல்யாணம் முடிக்கனும்”

“ஹே !! இரு இரு.. இப்ப என்ன சொல்ல வர்ர?? ... நான் ஆபிஸயே கட்டிகிட்டு அழறேனு மறைமுகமா சொல்றியா??

ஹ்ம்ம்ம் ஆபிஸ் போய்ட்டா உன்ன மறந்திடறேன் தான்... ஆனால் வீட்டுக்கு வந்த பிறகு உன்னை தவிர வேறு எதுவும் நினைவு இருக்கா??” என்று கண்ணடித்தார்...

அவரின் பார்வையில் முகம் சிவந்தாலும் தன்னை உடனே சமாளித்து கொண்டு

“பையனோட ரொமான்ஸ பார்க்கற வயசுல உங்களுக்கு இன்னும் ரொமான்ஸ் வேண்டி கிடக்கு... “ என்று செல்லமாக முறைத்தார் ஜானகி.

“காதல் செய்ய வயசு என்ன டார்லிங்?? .. என் பொண்டாட்டியை கடைசி வரைக்கும் காதல் பண்ணுவேன் நான்... என்னை அதுக்குள்ள தாத்தா ஆக்கிடுவ போல இருக்கு...” என்று சிரித்தார்

“போதும் நிறுத்துங்க.. புள்ளை இல்லாத வீட்டில கிழவன் துள்ளி விளையாண்ட கதையா உங்களுக்கு என்னவோ இன்னைக்கு சரியில்லை.. பேச்சை மாத்தாமல் நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க” என்று ஜானகி தன் காரியத்திலயே கண்ணாக இருந்தார்...

“ஹ்ம்ம்ம்ம் நீ தான் பிடிச்சா விட மாட்டியே.. சரி .. ஆதி மனசுல என்ன திட்டம் வச்சிருக்கானு பார்க்கலாம்.. ஒரு வேளை அவன் தொழிலை கொஞ்ச நாள் பார்த்துட்டு தான் கல்யாணம் னு சொல்லிட்டா அப்புறம் அவனை நீ கட்டாய படுத்த கூடாது சரியா” என்று முன்னெச்சரிக்கையாக கேட்டு கொண்டார்...

“ஆதி எப்படியும் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டான்.. அதனால இப்போதைக்கு ஜானகியை சமாளிச்சாச்சு” என்று மனதுக்குள் நிம்மதியடைந்தார்... அவரை பொறுத்த வரைக்கும் ஆதிக்கு கொஞ்சமாவது வெளி அனுபவம் வேண்டும்.

அப்பதான் இல்வாழ்க்கையிலும் எது வந்தாலும் அட்ஜச்ட் பண்ணி போக முடியும்... ஆதி இன்னும் உலக அனுபவம் இல்லாமல் இருக்கிறான்.. முதலில் அவன் தயாராகட்டும் என்று இருந்தார்...

ஆதி ஏற்கனவே திருமணத்திற்கு தயாராகி விட்டதை அவர் அறியவில்லை...

படுக்கையில் படுத்த ஆதிக்கோ ஏனோ அவளின் அந்த புன்னகையே திரும்ப திரும்ப நினைவு வந்தது... மேலும் அவளின் ஸ்பரிசம் அவனுள் இன்னும் சிலிர்த்தது.. மொத்தத்தில் அந்த பிறந்தநாள் மறக்க முடியாதது ஆனது அவனுக்கு...

அது தான் அவன் கடைசியாக கொண்டாடும் பிறந்த நாள் என்பதை பாவம் அவனும் அறிந்திருக்கவில்லை...

வீட்டிற்கு திரும்பிய ஷ்வேதாவிற்கும் ஆதியின் கம்பீரமும் அவனின் பிரமாண்ட வீடு ஆடி கார் என்று அத்தனையும் அவள் கண் முன்னே வந்தன...

சீக்கிரம் இதை எல்லாம் தனக்கு சொந்தமாக்கி கொள்ளனும் என்று வெறி கொண்டாள்.. அதற்கான வேலைகளில் இறங்கினாள்.. முதலாவதாக ராகுலுடனான உறவை முறித்தாள்..

அவன் எத்தனை முறை அழைத்தும் அவன் அழைப்பை ஏற்கவில்லை... அவனே புரிந்து கொண்டு தன்னை விட்டு விலகட்டும் என்று அவன் அலைபேசி எண்ணையும் ப்ளாக் பண்ணினாள்..

பின் ஆதி செல்லும் இடங்களில் எல்லாம் இவளின் தரிசனம்.. ஆனால் அது எல்லாம் எதார்த்தமாக இருக்குமாறு பார்த்து கொண்டாள்.. அவளாக சென்று ஆதியிடம் பேசுவது இல்லை.. ஆனால் அவனின் பார்வை அவள் மேல் படும்படி பார்த்து கொண்டாள்.. தன்னை பார்த்து அவனே வந்து பேசுவான் என்று எதிர்பார்த்தாள்... ஆனால் ஆதி அந்த மாதிரி எதுவும் நடந்து கொள்ளவில்லை..

ஆதியும் அவளின் திட்டத்தை புரிந்துகொண்டான்.. அவள் வேணும் என்றே தான் தன் முன்னே வருகிறாள் என்று புரிந்தது.. “ஆனால் தன்னை போலவே அவளும் தன் மேல் காதல் கொண்டுள்ளாள்..

அதனால் தான் இப்படி அடிக்கடி தன் முன்னே வருகிறாள்” என்று சரியாக தப்பா புரிந்து கொண்டான்.. கொஞ்சம் நன்கு யோசித்திருந்தாள் அவளின் நாடகம் புரிந்திருக்கும்.. ஆனால் அவனோ அவளின் மயக்கத்தில் இருந்தான்..

ஒரு வாரம் சென்றது...ஷ்வேதா ஆதி எப்படியும் தன்னிடம் வந்து பேசுவான் என்று எதிர்பார்த்ததிற்கு ஏமாற்றமே...

“என்னாச்சு இவனுக்கு?? .. இதே மற்ற ஆண்களா இருந்தால் இந்நேரம் காலடியில் வந்து விழுந்திருப்பாங்களே.. ஏன் ராகுல் அவள் மையலாக பார்த்த அடுத்த ஒரு மணி நேரத்தில் அவளிடம் சரணடைந்திருந்தான்..

இவன் என்னடான்னா ஒரு வாரம் தூண்டில் போட்டும் ஒரு ரியாக்ஷனும் இல்லையே “ என்று யோசித்தவள் இது வேலைக்கு ஆகாது.. நாமே அதிரடியாக இறங்க வேண்டியது தான் என்று முடிவு செய்தாள்..

அதற்கு அடுத்த இரண்டாவது நாள் தொழில் சம்பந்தமாக ஒருவரை சந்திக்க சொல்லி ஆதித்யாவை அனுப்பி இருந்தார் ஒரு ஹோட்டலுக்கு அவனின் தந்தை.. அவனும் மீட்டிங் முடித்து வெளியில் வருகையில் அங்கு வாசலில் நின்ரு கொண்டிருந்த ஷ்வேதாவை கண்டு கொண்டன அவன் கண்கள்..

அவளை கண்டதுமே உள்ளுக்குள் சில்லென்று பனி மழை.. அதுவும் இன்று ஜீன்ஸ் மற்றும் டைட்டான டாப் அணிந்து கழுத்து கொஞ்சம் கீழ் இறங்கி அவளின் அங்கங்களை இன்னும் அழகாக காட்டியது.. அவளின் இந்த தோற்றத்தில இன்னும் கவிழ்ந்தே போனான் ஆதித்யா...

ஆனாலும் அதை வெளி காட்டி கொள்ளாமல் அவளை பார்க்காதவாறு காரின் சாவியை கையில் சுழட்டியவாறு அவளை கடந்து சென்றான்..

ஷ்வேதாவுக்கு பலத்த ஏமாற்றம்.. இந்த ட்ரெஸ்ஷில் பார்த்ததும் கண்டிப்பாக தன்னிடம் வந்து பேசுவான் என்று எதிர்பார்த்திருந்தாள்..அவன் கண்டு கொள்ளாமல் போகவும்

“சரியான சாமியார் போல... என்னயா ஞாபகம் இல்லாதவாறு போற.. இருடா..உன்னை என்னை எப்பவும் மறக்க முடியாதவாறு செய்யறேன்” என்று கருவி கொண்டே அவனை பின் தொடர்ந்தாள்...

முன்னே சென்ற ஆதித்யாவோ அவள் தன் பின்னால் வருகிறாளா என்று கடை கண்ணால் பார்த்து கொண்டே சென்றான். அவனை ஏமாற்றாமல் அவளும் பின்னே வந்தாள்...

மனதுக்குள் சிரித்து கொண்டே

“பரவாயில்லையே!!! கடைசியா பொண்ணுக்கு தைரியம் வந்திருச்சு” என்று சிரித்து கொண்டே தன் ஆடி யை நெருங்கினான்...

அதே நேரம்

“Excuse me.. நீங்க ஆதித்யா தானே?? “என்று தேனொலுகும் குரல் வந்தது அவளிடமிருந்து.. இது தான் முதல் தரம் அவளின் குரலை கேட்கிறான்.. இதுவரை வெறும் பார்வை மட்டுமே.. அவள் குரலும் அவளை விட தேனாக இனித்தது அவனுக்கு... அவன் அவசர படாமல் மெதுவாக திரும்பி

“Yes… and you ?? “ என்று ஸ்டைலாக அவளை தெரியாதவனாக பார்த்தான்..

அவளுக்கு உள்ளுக்குள் எரிந்தது... “டேய்... என்னையா தெரியாத மாதிரி நடிக்கிற??.. இரு உன்னை வச்சுக்கறேன்” என்று கருவியவள் அதே மயக்கும் புன்னகையுடன்

“ஐம் ஷ்வேதா... நான் உங்க பர்த் டே பார்ட்டிக்கு வந்திருந்தேன் “ என்றாள் மீண்டும் அதே தேனொலுகும் குரலில்...

“ஹ்ம்ம்ம்ம் என்று யோசிப்பவன் போல பாவனை செய்தவன் .. நாட் ஷூர்.. அன்று நிறைய பேர் வந்திருந்தாங்களா.. சரியா ஞாபகம் இல்லை “ என்றான்..

அவளும் விடாமல்

“இட்ஸ் ஓகே... ஒரு சின்ன ஹெல்ப் வேணும்.. நான் வந்த கார் ரிப்பேர் ஆகியிருச்சு.. கொஞ்சம் அவசரமா போகனும்... என்னை கொஞ்சம் ட்ராப் பண்ண முடியுமா?? “என்று கொஞ்சும் குரலில் தலையை சரித்து கேட்டாள்..

அவள் சொன்ன காரணம் பொய்யானது என்று தெரிந்தும் சிரித்து கொண்டான் உள்ளுக்குள்..

“ஓ ஸ்யூர்.. ப்ளீஸ் கெட் இன் “ என்றவன் அவளுக்காக கார் கதவை திறந்து விட்டான்.. அவளும் முன் இருக்கையில் ஏறி அமர்ந்தாள்.. ஆடி காரில் அவள் போவது இதுவே முதல் தடவை.. ராகுல் இப்பொழுது தான் வளர்ந்து வருவதால் அவனிடம் ஐ 20 மட்டுமே...

அந்த காரின் சுகம் அவளை மயக்கியது.. எப்படியாவது இவனை தன் சொந்தமாக்கி கொள்ளவேண்டும் என்று இன்னும் உறுதியானாள்..

ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன் அவள் போகும் இடத்தை கேட்டு கொண்டு காரை ஓட்ட ஆரம்பித்தான் எதுவும் பேசாமல்...மறந்தும் அவள் பக்கம் திரும்பவில்லை.. அவளின் அழகில் ஏற்கனவே ஆடி போயிருக்கிறவன் அவளை இவ்வளவு நெருக்கத்தில் தனியாக பார்த்தால் தன் கட்டுபாட்டை இழந்துவிடுவோம் என்று நினைத்தவன் அவளை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்து சாலையையே நேராக பார்த்து ஓட்டினான்...

ஆனால் ஷ்வேதாவுக்கோ எப்படி இவனை தன் பக்கம் இழுப்பது என்று யோசித்தாள்.. பின் எதார்த்தமாக பேச ஆரம்பித்தாள்.. அவனின் வெளிநாட்டு வாழ்க்கையை பற்றி பேச ஆரம்பித்தாள்..

ஆதியும் அவளிடம் விளக்கி கொண்டே இயல்பாக பேச ஆரம்பித்தான். கொஞ்ச நேரத்தில் இருவரும் சகஜமான நிலைக்கு வந்தனர்... அவள் இறங்கும் இடம் வந்ததும் மறக்காமல் அவனின் மொபைல் நம்பரை வாங்கி கொண்டாள்...

அன்று இரவே அவனுக்கு குட்நைட் மெசேஜ் வந்தது அவளிடமிருந்து... அவனும் பதிலுக்கு வாழ்த்து அனுப்பவும் ஷ்வேதா குஷியாகி போனாள்..

அதற்கப்புறம் எல்லாம் ஜெட் வேகத்தில் நடந்தது.. இருவரும் வாட்ஸ்அப் ல் மணி கணக்காக சேட் பண்ண ஆர்ம்பித்தார்கள்.. பின் அதுவே வளர்ந்து இருவரும் சேர்ந்து சுற்றும் அளவுக்கு வளர்ந்தது..ஆபிஸ் செல்லும் நேரத்தை தவிர மீதி நேரம் முழுவதும் ஷ்வேதாவுடனே கழித்தான் ஆதித்யா..

ஆதித்யாவின் நடையில் இருந்த துள்ளலும், தன் அன்னையை பார்க்கும் பொழுது எல்லாம் அவன் முகத்தில் தெரியும் சிரிப்பும், சிறிது வெட்கமும் ஜானகியின் கண்களிலிருந்து தப்பவில்லை.....

ஜானகிக்கு தன் மகனை இந்த மாதிரி துள்ளலுடன் பார்க்கையில் மனது நிறைந்து இருந்தது.. இவன் எப்பவும் இப்படியே இருக்கனும் என்று அந்த முருகனை வேண்டி கொண்டார்...

அவளை கண்ட மூன்றாவது வாரம் ஷ்வேதாவே அவனிடம் தன் காதலை ப்ரபோஸ் பண்ணியிருந்தாள் ஒரு அழகிய கடிகாரத்தை பரிசளித்து... அவ்வளவு தான் இன்னும் தலை குப்புற விழுந்தான் ஆதித்யா...

அவளின் காதலை உடனே ஏற்று கொண்டு அவளை கடைக்கு அழைத்து சென்று ஒரு வைர நெக்லஷை வாங்கி பரிசளித்தான்.. அதை பார்த்ததும் துள்ளி குதித்து எட்டி அவளின் கன்னத்தில் முத்தமிட்டாள் ஷ்வேதா....

அவளின் முத்தம் தந்த தித்திப்பில் இன்னும் கிறங்கி போனான்... அதன் பிறகு ஷ்வேதா சொல்லே மந்திரம் ஆனது அவனுக்கு... அவள் அழைத்த இடத்திற்கு எல்லாம் போனான்.. ஆனால் ஏனோ ஷ்வேதா அவளின் நணபர்கள் மத்தியில் இன்னும் அவனை காட்டி கொள்ள வில்லை.

யாராவது ஏதாவது செய்து தங்கள் திருமணத்தை நிறுத்தி விட்டாள் என்று இருந்தது... அதனாலயே நண்பர்கள் இருக்குமிடம் தவிர்த்து மற்ற இடங்களில் சுற்றினர்..

ராம்குமாரும் சரி பையன் என்ஜாய் பண்ணட்டும் என்று கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்..

அடுத்த வாரமே “நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம் டார்லிங்“ என்று தன் அடுத்த காயை நகர்த்தினாள் ஷ்வேதா...

“ஒ பேபி... இன்னும் ஒரு வருடம் போகட்டும். நான் இப்பதான் தொழில்ல கத்துக்க ஆரம்பிச்சிரிக்கேன்.. சொந்த கால்ல நின்னதுக்கு அப்புறம் நம்ம கல்யாணம் வச்சுக்கலாம்” என்றான் ஆதித்யா..

“அதான் மாமா பார்த்துக்கறார் இல்ல.. அதில்லாமல் எனக்கு எங்க வீட்டில மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. 25 வயது ஆகிறதுனால் இனிமேலும் தள்ளி போட முடியாதுங்கறாங்க.. அதனால நீங்க உங்க வீட்டில சொல்லி பேச சொல்லுங்க” என்று தன் அன்னை சொன்ன மந்திரத்தை அப்படியே ஒப்புவித்தாள்...

“அதில்லாமல் இப்பல்லம் என்னால் நீங்க இல்லாமல் இருக்க முடியல.. இன்னும் ஒரு வருடம் உங்கள விட்டு தனியா இருக்க் முடியும்னு தோனலை...” என்று மயக்கும் பார்வை பார்த்தாள்..

ஆதிக்கும் அதுவேதான்.. அவளை விட்டு இனிமேல் தள்ளி இருக்க முடியாது என்று இருந்தது.. “சரி பேபி. நான் எங்க விட்டில பேசறேன்.. நான் சொன்னா அப்படியே ஒத்துக்குவாங்க “ என்றான்..

அம்மா சொன்ன ‘ஏமாளி குடும்பம்’ என்பது ஞாபகம் வந்தது.. தன் திட்டம் இவ்வளவு சுலபமாக சீக்கிரம் நிறைவேறும் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை...அம்மா சரியாகத்தான் சொல்லியிருக்கிறாங்க இவங்களை சுலபமா மடக்கிடலாம் என்று” என்று தனக்குள்ளே சிரித்து கொண்டாள் ஷ்வேதா...

ஆதித்யா எப்படி இந்த பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்த படியே தன் அன்னையிடம் சென்றான்.. கொஞ்ச நாளாக அவனின் நடவடிக்கையை கவனித்தவர்

நேரடியாகவே கேட்டு விட்டார்.

“யாரு டா என் மருமகள்?? ”..

அவனுக்கு ஒரே ஆச்சர்யம் எப்படி தெரியும் அம்மாவிற்கு என்று... பின் ஷ்வேதா பற்றி சொன்னான்..

தான் மனதில் நினைத்திருந்த அந்த பொண்ணையே தன் மகனும் விரும்புவதாக சொல்லவும் அக மகிழ்ந்து போனார் ஜானகி..

ராம்குமார், கொஞ்சம் பொறுமையா இரு. அந்த பொண்ணை பற்றி விசாரிக்கலாம் என்று சொன்னதை தட்டி விட்டு

“பையனே விரும்பிட்டான்.. இனிமேல் என்ன விசாரிக்கறீங்க.. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. எல்லாம நல்ல பொண்ணாதான் இருப்பா” என்று அவரின் வாயை அடைத்து விட்டார்.. அதற்கப்புறம் எல்லாம் துரிதமாக நடந்தது... மிகப்பெரிய அளவில் திருமணத்தை நடத்தினர் ராம்குமார் தம்பதியினர்..

விஜயாவோ வானில் பறந்தார்... மிகப் பெரிய தொழில் அதிபர் ராம்குமார் தன் சம்பந்தி என்று ஊர் எல்லாம் தம்பட்டம் அடித்தார்...

திருமணம் முடிந்ததும் ஸ்விட்சர்லாந்த் க்கு தேனிலவு சென்றனர் மணமக்கள்.. ஒரு மாதம் முடிந்த பிறகே திரும்பி வந்தனர்..

தங்கள் திருமணம் அவசர அவசரமாக நடந்ததால் ஷ்வேதாவால் தன் ப்ரென்ட்ஸ் மத்தியில் தன்னுடைய பணக்கார வாழ்க்கையையும் தன் கணவனை பற்றியும் தம்பட்டம் அடிக்க முடியவில்லை..

அதை இப்பொழுது நிறைவேற்றி கொள்ள நினைத்தாள்.. அதனால் தேனிலவு முடிந்து வந்ததும் மீண்டும் ஒவ்வொரு பார்ட்டிக்கும் ஆதித்யாவையும் அழைத்தாள்.. அவனும் காதல் மனைவியின் ஆசையை தட்ட முடியாமல் அழைத்து சென்றான்..

அவள் ஆதித்யாவின் கையை பிடித்து கொண்டு ஸ்டைலாக ஆடி யில் வந்து இறங்குவது அதுவும் ஆதியின் கம்பீரம், ஆண்மை, யாரிடம் வழியாத அவனின் நடை அங்குள்ள பெண்களின் மத்தியில் பொறாமையை தூண்டியது.. இதைதான் ஷ்வேதா எதிர்பார்த்தாள்....

அதோடு கல்யாணம் முடிந்த உடனே, ஆதி அவள் கேட்ட அத்தனையும் வாங்கி குவித்திருந்தான்.. அதில் முக்கால் வாசி விலை உயர்ந்த வைர நகைகள்... அது எல்லாம் அப்படியே ஷ்வேதா அம்மா விஜயாவின் லாக்கரில் பதுங்கின...

மொத்தத்தில் ஷ்வேதா திட்டமிட்ட படியே அவளின் வாழ்க்கை நன்றாகவே போய் கொண்டிருந்தது அந்த நாள் வரும்வரை....

Comments

  1. அம்மா மகள் நல்லா
    பெரிய திட்டம் தான்
    போட்டு இருக்காங்க

    ReplyDelete
  2. Yeah apa sariya manga payan ivan ippdi yeamadhutu periya ivan madhiri ellam ponkozandhelayum thappa nenachitirukan

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!