காதோடுதான் நான் பாடுவேன்-14
அத்தியாயம்-14
திருமணம் ஆகி ஒரு மாதம் முடிந்திருந்தது...
மதுவந்தினிக்கு இன்னுமே நம்ப முடிய வில்லை அவள் வந்து வேற ஒரு புது இடத்தில் இந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருப்பாள் என்று....
தான் கேள்வி பட்ட கதைகளை வைத்து ஒரு பெண்ணின் புகுந்த வீட்டையும் கணவனையும் தப்பு வண்ணம் பூசியிருந்தவள் இங்கு எல்லாம் அவள் எதிர்பார்த்த மாதிரி இல்லாதததால் ஆச்சர்யம் + மகிழ்ச்சி அவளுக்கு...
எப்பவும் அவளை செல்லம் கொஞ்சும் மாமியார் ம் கலகலவென்று சிரித்து பேசும் நாத்தனார் ம் அமைந்ததால் அவளுக்கு அந்த வீடு விரைவிலயே பழகியிருந்தது...
ஏன் அவள் பிறந்த வீட்டில் கூட மூன்று பேரும் இந்த அளவுக்கு பேசி சிரித்ததில்லை.. சிறிது நேரம் பேசிவிட்டு பின் அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவர்..
இங்கு மூன்று பெண்கள் இருக்கும் நேரங்களில் முக்கால் வாசி நேரம் அரட்டை அடிப்பதும் கேலி பேசுவதுமாக கழிவதால் மதுவுக்கு அவள் புகுந்த வீடு சீக்கிரமே பிடித்து விட்டது...
மற்றவர்களிடம் பிரியாக பேசினாலும், தன் கணவனாகியவனிடம் மட்டும் ஒதுங்கியே இருந்தாள் மது ...
ஏனோ அவன் வருவது தெரிந்தாலே தலை தானாக கீழ குனிந்து விடும்... இல்லையென்றால் சமையல் அறையிலும் அதுவும் இல்லை என்றால் அகிலாவின் அறையிலும் ஒளிந்து கொள்வாள்...
அது ஏனோ அவன பார்த்தால் மட்டும் கை கால் உதற ஆரம்பித்து விடும்.... கஷ்டபட்டு தன்னை மறைத்து கொண்டுதான் அவனிடம் பேசுவாள் சில நேரங்களில்.. ஓரளவுக்கு பேச ஆரம்பித்த பிறகு நார்மலாகி விடும்..
ஆனாலும் அந்த பேச்சும் அவள் படிப்பை பற்றி மட்டுமே இருக்கும்... அதற்கு மேல் அவளிடம் அவள் கணவன் வேற எதுவும் நின்று பேசுவது கிடையாது..
அவளுக்குமே அது வசதியாக இருந்தது... அதனால் அது ஒன்னும் பெரிதாக தெரிய வில்லை அவளுக்கு....
அதே மாதிரி பயிற்சி வகுப்பிலும் முதலில் கொஞ்சம் பயந்தாலும் ஜெயந்த் அவனாகவே வந்து அவளிடம் பேசுவதாலும் அவளுக்கு வேண்டியதை கேட்கவும் நேலும் அடிக்கடி வந்து அவளிடம் பேசுவதும் அவளுக்கு அங்கயும் ஓரளவுக்கு செட் ஆகியது..
வகுப்பில் நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் இல்லை என்றபோதும் ஏதோ வேற்று கிரகமாக முழித்துகொண்டு இல்லாமல் அவளால் இயல்பாக பழக முடிந்தது...
இதை எல்லாம் அசை போட்டவாறு தன் ஹோம் வொர்க்கை பண்ணி கொண்டிருந்தாள் மதுவந்தினி...
அன்று வெள்ளிகிழமை...
தன் வேலை முடித்து அதிசயமாக சீக்கிரம் வீடு திரும்பியிருந்தான் நிகிலன்...
காரை பார்க்கிங் ல் நிறுத்தி இறங்கியவன் அருகில் இரு பெண்களின் சிரிப்பு சத்தம் கேட்க, நின்று தலையை நிமிர்த்தி பார்த்தான்…..
சற்று தொலைவில் மதுவந்தினியும் அகிலாவும் பேட்மின்டன் விளையாண்டு கொண்டிருந்தார்கள்...
அன்று மாலை சீக்கிரம் வீடு திரும்பிய அகிலா தன் அன்னை கொடுத்த சிற்றுண்டியை முடித்த கையோடு மதுவை அவர்கள் வீட்டில் போட்டிருந்த அந்த சின்ன பேட்மின்டன் கோர்ட்டிற்கு அழைத்து இருவரும் விளையாண்டு கொண்டிருந்தாள்..
அவர்கள் இருவரின் விளையாட்டை சிறிது நேரம் நின்று கவனித்தவன் வேகமாக வீட்டிற்குள்ளே சென்றான்..
சீக்கிரமாக வீடு வந்திருந்த தன் ம்ஊத்தமகனை கண்டதும் அவனை ஏதோ அதிசயமாக பார்ப்பதை போல பார்த்தார் சிவகாமி...
“என்னடா பெரியவா?? சென்னையில நீ புடிக்க குற்றவாளிங்க யாருமே இல்லையா?? அதிசயமா இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட... “ என்று சிரித்தார்...
அவனும் பதில் எதுவும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே மாடிஏறி சென்றவன் ரிப்ரெஸ் ஆகி கீழ வந்தான்..
பின் தன் அன்னை தந்த சிற்றுண்டியை உண்டவன் சிறிது நேரம் அவரிடம் உரையாடி கொண்டிருந்து விட்டு பின் எழுந்து வெளியில் நடந்தான்..
கால்கள் தானாக அந்த பேட்மின்டன் கோர்ட்டிற்கு சென்றன..
அவனை அங்கு கண்டதும் அகிலா கொஞ்சம் பயந்து
“சாரி னா.. அடுத்த மாசம் எனக்கு நேசனல் லெவெல் டோர்னமென்ட் இருக்கு.. அதுக்கு பிராக்டிஸ் பண்ணதான் அண்ணிய கூட்டிகிட்டு வந்தேன்.. “ என்று முனகினாள்..
மதுவோ அவனை கண்டதும் முகம் வெளிறி அதுவரை கழட்டி வைத்திருந்த தன் துப்பட்டாவை எடுத்து மேல போட்டு கொண்டு தலையை குனிந்து கொண்டாள்...
அகிலா சொன்னதை கேட்டதும்
“குட்.. முன்னாடி கத்துகிட்டதெல்லாம் இந்த மண்டையில இருக்கா??..இல்லை சாப்பாட்டோட சேர்த்து அதையும் முழுங்கிட்டியா?? “ என்று குறும்பாக சிரித்தவாறு அவள் தலையை பிடித்து செல்லமாக ஆட்டினான் நிகிலன்...
அதை கண்டு இரண்டு பெண்களும் ஆச்சர்யத்தில் கண்களை விரித்தனர்...
இவனுக்கு இப்படி கூட குறும்பாக சிரிக்க வருமா.. என்று..
அதற்குள் தன்னை சுதாரித்து கொண்ட அகிலா
“ஹீ ஹீ ஹீ... எல்லாம் மண்டையில இருக்குனா... எப்படியாவது நேசனல் ல நான் கப் வாங்கனும்..
ஆனா முன்னாடி அந்த மங்கி... என்று சொல்ல வந்து உதட்டை கடித்துகொண்டவள்
“அந்த மகி அண்ணா இருந்ததால நிறைய டெக்னிக் சொல்லி கொடுத்தான்.. அதை வச்சே ஈசியா ஸ்டேட்ல ஜெயிச்சுட்டேன்.. இப்ப அவன் இல்லையே... “ என்று வருத்தமாக புலம்பியவள் அப்பொழுது தான் அவள் பெரிய அண்ணனிடம் அவனுக்கு பிடிக்காதவனை பற்றி உளறியது நினைவு வர அவசரமாக பெரிய அண்ணனை நோக்கினாள் கொஞ்சம் பயந்தவாறு...
அவள் எதிர்பார்த்தபடியே தன் தம்பியின் பெயரை கேட்டதும் அவன் உடல் விரைக்க, பல்லை கடித்தான்..
ஆனாலும் தன் கோபத்தை கட்டுபடுத்தி கொண்டவன்
“ஹ்ம்ம்ம் சரி.. நான் வசந்த் கிட்ட பேசறேன்.. நீ நாளையில் இருந்து அவன் கோச்சிங் க்ளாஸ்க்கு போ...
சரி... இப்ப வா.. என்னோட ஒரு மேட்ச் ஆடு.. நீ எப்படி ஆடறேனு பார்க்கறேன்... “ என்றான்...
அதை கேட்டு அகிலாவுக்கு மயக்கம் வராத குறைதான்...இது கனவா இல்லை நினைவா என்று தன்னையே கிள்ளி பார்த்துக் கொண்டாள் யாருக்கும்தெரியாமல்...
இதுவரை தன் பெரிய அண்ணன் விளையாண்டு பார்த்ததில்லை.. எப்பவும் அவள் மகிழனோட மட்டுமே விளையாடுவாள்...
பேட்மின்டன் மட்டும் இல்லாமல் அவளுக்கு போரடிக்கும் பொழுதெல்லாம் போய் தன் சின்ன அண்ணனிடம் நின்னால் போதும்..
எந்த வேலையானாலும் அவன் அப்படியே போட்டுவிட்டு அவளுடன் நேரம் செல்விட வந்து விடுவான்.. கேரம், செஸ் , கார்ட்ஸ் என்று எதுவானாலும் இருவரும் சேர்ந்து லூட்டி அடிப்பார்கள்..
நிகிலன் எப்பவும் தள்ளியே இருப்பான்.. அவர்களிடம் அவ்வளவாக கலந்து கொள்ள மாட்டான்..
இன்று அவனே தன்னுடன் விளையாட கூப்பிட, கண்களை அகல விரித்து அதிசயமாக பார்த்தவள்
“அண்ணா.... நீ... நீங்க.. உனக்கு.... இதெல்லாம் விளையாட தெரியுமா?? “என்றாள் திக்கி திணறி....
அதை க்ஏட்டு அவளை முறைத்தவன்
“ஏன்.. உன் செல்ல சின்ன அண்ணனுக்கு மட்டும் தான் ஆட தெரியுமா?? எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும் மா... “ என்றவன் மதுவை பார்த்து
“ஏய்..அந்த ராக்கெட்டை இங்க கொடு... “ என்று அவள் முன்னே கையை நீட்டினான்...
தலையை குனிந்து கொண்டே அவர்கள் உரையடலை கேட்டு கொண்டிருந்த மது, திடீரென்று தன் முன்னே நீண்டஅவன் வலிய கரங்களை கண்டதும் திடுக்கிட்டாள்....
அதே பயத்தில் கையில் வைத்திருந்த ராக்கெட்டை கீழ தவற விட்டாள்...பின் அவசரமாக தலையை நிமிர்த்தி அவனை பார்க்க, அவனோ இவளை பார்த்து முறைத்து கொண்டிருந்தான்..
அதை கண்டதும் அவள் கைகள் தானாக கீழ குனிந்து அந்த ராக்கெட்டை எடுத்து அவன் கையில் கொடுத்தாள் மெல்லிய நடுக்கத்துடன்..
மீண்டும் ஒரு முறை அவளை முறைத்து விட்டு, அந்த கோர்ட் உள்ளே நடந்தான்...
அகிலாவும் மதுவை பார்த்து இலேசாக சிரித்து விட்டு, அவள் காதில் ஏதோ கிசுகிசுத்து விட்டு வேகமாக தன் அண்ணன் பின்னே ஓடினாள்...
அவள் சொல்லியதை கேட்டு மதுவும் கொஞ்சம் தெளிந்து மெல்ல புன்னகைத்தவாறு அங்கயே தள்ளி நின்று கொண்டு அவர்கள் ஆட்டத்தை பார்வையிட ஆரம்பித்தாள்...
அகிலாவை செர்வ் பண்ண சொல்லி அவள் பந்தை எதிர்கொண்ட நிகிலன், விளையாடி கொண்டே அவளுக்கு அப்ப அப்ப அவள் செய்யும் தவறுகளும் அதை எப்படி சரி செய்து ஆடணும் என்றும் மேலும் சில டெக்னிக்களை சொல்லி கொடுத்தான்...
அகிலா தன் அண்ணனையே வியந்து பார்த்தாள்... சின்ன அண்ணனை விட பெரிய அண்ணன் இன்னும் நன்றாக விளையாடுவதை கண்டு..
அவள் அறிந்திருக்க வில்லை தன் தம்பிக்கே நிகிலன் தான் விளையாட கத்து கொடுத்து அவனுக்கு பல குறிப்புகளை கொடுத்ததும் அவனை விளையாட ஊக்கபடுத்தி எல்லா போட்டியிலும் கலந்து கொள்ள செய்தான் என்று...
மதுவுமே அவர்கள் இருவரும் விளையாடுவதை ஆசையாக பார்த்து கொண்டிருந்தாள் சிறிது நேரம்.. ஏனோ இந்த விளையாட்டின் மீதுஅவளுக்கும் விருப்பம் அதிகம்..
ஆனால் விளையாட பயந்து கொண்டே உள்ளுக்குள்ளே தன் ஆசையை புதைத்திருந்தாள்....
இன்று அகிலா தன் அண்ணனுடன் தீவிரமாக ஈடு கொடுத்து ஆடுவதை பார்த்து வியந்தவள் அவளுக்கும் இது மாதிரி விளையாட வேண்டும் போல இருந்தது...
அதற்குள் சிவகாமி அவளை அழைக்க வீட்டிற்குள்ளே சென்றாள்...
சிறிது நேரம் விளையாண்ட பின் ஓய்வு எடுப்பதற்காக இருவரும் வந்து அங்கு போட்டிருந்த இருக்கையில் அமர்ந்தனர்...
அகிலா தன் அண்ணனை புகழ்ந்து தள்ளினாள்... அவனும் மெல்ல சிரித்து கொண்டே அவளுக்கு இன்னும் சில குறிப்புகளை கொடுத்து பேசி கொண்டிருந்தான்....
அப்பொழுது மது உள்ளே இருந்து அவர்கள் குடிப்பதற்கக பழச்சாற்றை வைத்திருந்த ட்ரேயை எடுத்து கொண்டு அங்கு வந்தாள்...
அகிலாவிடம் நீட்ட தேங்க்ஸ் அண்ணி.. என்று சொல்லி ஒரு டம்ளரை எடுத்து கொண்டாள்..
ட்ரேயை மெல்லிய நடுக்கத்துடன் நிகிலனிடம் நீட்ட அவனும் அவளை நேராக பார்த்து அவள் கை நடுங்குவதற்காக இலேசாக முறைத்தவாறு ஒரு டம்ளரை எடுத்து கொண்டான்...
அந்த சாற்றை குடித்து கொண்டிருந்த அகிலா
“அண்ணா.... அண்ணி கூட சூப்பரா விளையாடறாங்க....இந்த முறை அவங்களையும் சேர்த்துக்கலாமா?? “என்றாள் ஆர்வத்துடன்..
அதை கேட்டு அதிர்ந்த மது அவசரமாக “வேண்டாம்..” என்று தலையை ஆட்டி கண்ணால் ஜாடை செய்தாள் அகிலாவை பார்த்து...
அவளோ அதை கண்டு கொள்ளாம்ல கண் சிமிட்டி நக்கலாக சிரித்தாள்.... அவளை மது முறைக்க, அகிலா தன் நாக்கை துருத்தி அழகு காட்டியவாறு தன் அண்ணனைபார்த்து
“சொல்லுனா.. சேர்த்துக்கலாமா?? பாவம் அவங்க மட்டும் தனியா இருக்காங்க.. “ என்றாள்...
அவர்கள் விளையாடும் பொழுது எதேச்சையாக தன் அண்ணியை கண்டவள் அவள் கண்ணில் தெரிந்த ஆசையையும் ஏக்கத்தை யும் கண்டு கொண்டு தன் அண்ணியையும் விளையாட அழைத்தாள்..
சில விநாடிகள் யோசித்தவன்
“ஆமா...இவளுக்கு இதெல்லாம் விளையாட தெரியுமா?? “ என்றான் நக்கலாக
“ஆமா னா... சூப்பரா விளையாடறாங்க.. என்ன வெளில போய் விளையாண்டது இல்லையாம்.. வீட்டில சும்மா டைம் பாஸ்க்காக விளையாடுவாங்களாம்...
ஆனா நல்லாவே ஆடறாங்க... “ என்று தன்அண்ணியை ஓரக் கண்ணால் பார்த்து கொண்டே அவளுக்காக வக்காலத்து வாங்கி கொண்டிருந்தாள் அகிலா.
“ஹ்ம்ம்ம் சரி.. அப்ப வரச்சொல்... “ என்றவன் எழுந்து முன்னே நடக்க, மதுவோ அகிலவை பார்த்து முறைத்தாள்...
மது மாட்டேன் என்று மறுக்க, அகிலா அவளை கட்டாயபடுத்தி இன்னொரு ராக்கெட்டை எடுத்து அவள் கையில் கொடுத்து அழைத்து இல்லை இழுத்து சென்றாள்...
மதுவும் வேற வழி இல்லாமல் அகிலாவுடன் நடக்க, இரு பெண்களும் ஒரு பக்கமும் நிகிலன் மறுபுறமும் நின்று கொண்டான்...
“அண்ணி.. பயந்துக்காதிங்க.. இந்த ஆட்டத்துல நாமதான் ஜெயிக்கனும்.. நாம இரண்டு பேர்.. அண்ணா ஒருத்தன் மடும்தான்.. அதனால கலக்கிடலாம்.. எதிர்ல ஆடறது உங்க புருசன் னு நினைக்காம யாரோ தெரியாதவங்கனு நினைச்சு ஆடுங்க... “ என்று அட்வைஸ் பண்ணி சிரித்தாள் அகிலா...
மதுவும் தன் துப்பட்டாவை எடுத்து மேல போட்டு அதை சுற்றி இடுப்பில் நன்றாக கட்டி கொண்டாள்...
நிகிலனும் இரு பெண்களும் அவனை எதிர்கொண்டு ஆடுமாறு மெதுவாக விளையாடினான் முதலில்.. அவன் வீசும் பந்தை எதிர்கொள்ளும் பொழுதெல்லாம் உள்ளுக்குள் துள்ளி குதித்தாள் மது...
ஒரு பந்தை கூட விடக்கூடாது என்று கவனமாக ஆட, நிகிலனும் அவள் ஆர்வத்தை புரிந்து கொண்டு பந்து அவள் பக்கமே போகுமாறு அடித்தான்...
முதலில் அகிலாவிடமும் மதுவிடவும் மாறி மாறி வந்து கொண்டிருந்த பந்து பின் தன் அண்ணன் அண்ணியிடம் மட்டுமே வருமாறு விளையாடுவதை கண்டு உள்ளுக்குள் சிரித்து கொண்டே ஓரமாக நின்று கொண்டு அவர்கள் ஆடுவதை வேடிக்கை பார்த்தாள்...
நிகிலன் அகிலாவுக்கு சொல்லி கொடுத்த டிரிக்ஷ் மதுவும் கேட்டு கொண்டிருந்ததால் பல முறை அதை பயன்படுத்தி அவனை எதிர்கொண்டாள்...
அவளின் ஆட்டத்தை கண்டு நிகிலனுக்கு ஆச்சர்யம்..
அவள் பயந்ததை கண்டு இவளுக்கு ஒன்னும் தெரியாது என்று எண்ணி சும்மா ஆட அழைத்தவனுக்கு அவள் காட்டிய ஆர்வமும் தோற்க கூடாது என்ற தீவிரமும் கண்டு அவனுக்குள் சில யோசனைகள் வந்தன...
ஏதோ யோசித்து கொண்டே மெதுவாக ஆடியவன் அவளும் அவனுக்கு இணையாக எதிர் கொண்டு ஆட, தன் வேகத்தை அதிக படுத்தி, சில கடினமான எதிரிகளை வீழ்த்தும் முறையை பின் பற்றினான் அவளை சோதிக்க என்று..
முதல் இரு கடினமான சார்ட்களை எதிர் கொண்டவள் அடுத்த பந்து வேகமாக வரவும் அதை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினாள்... அதோடு முதல் முறையாக நீண்ட நேரம் ஆடியதாலும் அதுவும் அவனிடம் தோற்க கூடாது என்று நிக்காமல் ஆடியதாலும் உடல் தளர்ந்து மயங்கி சரிய ஆரம்பித்தாள்...
அவள் முதல் இரண்டு பந்திலயே தடுமாறியதை கண்டு கொண்டவன் இப்பொழுது அவள் சரிய ஆரம்பிக்கவும் புயலென முன்னால் பாய்ந்து அவளை தாங்கி பிடித்திருந்தான்....
அகிலாவுக்கு சில விநாடிகள் ஆனது அங்கு நடந்தது புரிய... அவளும் வேகமாக அருகில் வர,
“அகிலா.. போய் அந்த தண்ணி பாட்டில எடுத்துட்டு வா... “ என்றான் அவசரமாக...
அகிலா வேகமாக ஒடிப்போய் பாட்டிலை எடுத்து வந்து கொடுக்கவும், அதில் இருந்த நீரை எடுத்து அவள் முகத்தில் அடிக்க, அவள் இன்னும் கண் விழிக்காமல் மயங்கி இருந்தாள்...
“இலேசான மயக்கம்தான்... சரி வா.. உள்ள போகலம்.. “ என்று அகிலாவிடம் கூறியவன் தன் மனைவியாகியவளை முதன் முதலில் கையில் அள்ளி கொண்டான்...
இதுவரை ரௌவுடிகளையும் முரடர்களையும் பதம் பார்த்து இருகி இருந்த நிகிலன் கைகள் முதன் முதலில் அந்த பூக்களைவிட மென்மையானவளை அதுவும் தனக்கு உரிமையான மனைவியானவளை சுமக்கையில் உள்ளுக்குள் சிலிர்த்தது....
சில நொடிகள் தன் சிலிர்ப்பை உணர்ந்தவன் உடனே தன் தலையை உலுக்கி கொண்டு உடல் விரைக்க அவளை உள்ளே கொண்டு வந்து அருகில் இருந்த சோபாவில் கிடத்தினான்..
அதற்குள் துவண்டு இருந்த மதுவை கண்டதும் சிவகாமி பதறியபடி வேகமாக அருகில் வந்து
“என்னாச்சு நிகிலா?? ஏன் மது இப்படி இருக்கா.. “என்றார் பயந்தவறாக...
“ஒன்னும் இல்ல மா... சின்ன இலேசான மயக்கம் தான்.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தால் சரியாகிடும்.. “ என்று சொல்லியவாறு அருகில் இருந்த மின் சிவிசிறியை சுழல விட்டான்...
அதற்குள் அகிலா வெளியில் நடந்ததை தன் அன்னையிடம் ஒப்பித்து கொண்டிருந்தாள்...
அதை கேட்டதும் தன் மகனை முறைத்தார் சிவகாமி..
“ஏன்டா.. அவளே இப்பதான் புதுசா விளையாடறவளா இருக்கும்.. அவள போய் உன் ரேஞ்சுக்கு இழுக்கலாமா?? பார் என் மருமக எப்படி கொடி மாதிரி துவண்டு கிடக்கிறானு... “
“ஹ்ம்ம்ம் மூனு வேளையும் கொட்டிகிட்டுதான இருக்கா?? சாப்பிடறது எல்லாம் எங்க போகுதாம்.??... 5 நிமிசம் நின்னு விளையாட முடியல... ஒழுங்கா சாப்பிட்டா தான...” என்று திட்டி கொண்டிருந்தான்..
அவன் திட்ட ஆரம்பிக்கையிலயே விழித்து கொண்டவள் நொடியில் நடந்ததை கிரகித்து கொண்டு
“இப்ப கண் விழித்தாள் இந்த விருமாண்டி கிட்ட திட்டுவாங்கனும்” என்று தன் கண்களை திரும்பவும் மூடி கொண்டாள்..
சிறிது நேரம் திட்டியவன் திரும்பி அவளை பார்த்து
“ஏய்.. நடிச்சது போதும் எழுந்திரு.. .” என்று முறைத்தான்...
அதை கேட்டு திடுக்கிட்டவள்
“ஐயோ.. நான் கண்ணை மூடினது கூட கண்டு பிடிச்சுட்டானே... இந்த அகிலா எப்படி தான் இவனை ஏமாத்தறாளோ.. “ என்று மனதுக்குள் திட்டியவாறு அசட்டு சிரிப்பை சிரித்தவாறு மெல்ல எழுந்து அமர்ந்தாள்...
சிவகாமி அவளிடம் சென்று நலம் விசாரிக்க, நிகிலன் திரும்பவும் அவளை ஒரு முறை முறைத்து விட்டு தன் அறைக்கு சென்றான்...
அடுத்த நாள் மாலை தன் பயிற்சி வகுப்பை மு டித்து விட்டு வழக்கமாக ஆட்டோ பிடித்து செல்லும் இடத்தில் நின்று தன் அலைபேசியில் OLA ஆட்டோவை தேடிக் கொண்டிருந்தாள் மதுவந்தினி..
இப்பொழுது தனியாக சென்று வருவது நன்றாக பழகியிருந்தது...
அவள் அலைபேசியை தடவி கொண்டிருக்க, அப்பொழுது அவளுக்கு ஒரு மெசேஜ் வந்தது... அதை திறந்து பார்க்க ஏதோ ஒரு புது எண்ணில் இருந்து ஒரு அட்ரஸ் மட்டும் அதில் வந்திருந்தது...
“ஏன்னது இது?? யார் அனுப்பி இருப்பாங்க?? என்று யோசித்து கொண்டிருக்கையிலயே அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது அவளுக்கு...
அந்த எண்ணை கண்டதும் உள்ளுக்குள் பயந்தவள் அந்த அழைப்பை ஏற்கலாமா?? வேண்டாமா? என்று குட்டி பட்டி மன்றம் நடத்தி பின் அதன் அழைப்பை ஏற்றாள்...
அலைபேசியை காதில் வைத்ததும்
“ஏய்.. ஒரு போனை எடுக்க இவ்வளவு நேரமா?? ... “ என்று கத்தினான் மறுமுனையில் இருந்தவன்...
முதலில் யாரது என்று முழித்தவள் தன்னை மிரட்டும் தோரனையில் இருந்தே அது அந்த விருமாண்டி என புரிய, வார்த்தை வர மறுத்தது அவளுக்கு....
மது அமைதியாக இருக்கவும், மறுமுனையில் டென்சனானா நிகிலன்
“ஏய்.. லைன்ல இருக்கியா?? “ என்றான் சந்தேகமாக....
“ஹ்ம்ம்ம்ம் .” என்று மெல்ல முனகினாள் மது ...
“அத வாய திறந்து சொல்றதுக்கு என்ன?? “என்று மீண்டும் திட்டியவன்
“சரி.. ஒரு அட்ரஸ் மெசேஜ்பண்ணியிருக்கேன்.. அந்த அட்ரஸ்க்கு சீக்கிரம் வா... “ என்று அதட்டினான்...
முன்பே அந்த அட்ரசை பார்த்திருந்தவள் அந்த இடம்எதுவும் புரியாததால்
“ஐயோ சார் !! நான் எப்படி தனியா... ?? அந்த அட்ரஸ்க்கு நான் முன்னாடி போனதே இல்லை... “என்று திக்கினாள்..
“ஏன் மஹாராணி ஏற்கனவே போயிருந்த இடத்துக்கு மட்டும் தான் போவிங்களோ... உனக்கு ஒன்னும் அட்ரஸ் தெரிய வேண்டாம்.. நான் அனுப்பின அட்ரசை காட்டு.. ஆட்டோவே கொண்டு வந்து விட்டுவாங்க...
சீக்கிரம் வந்து சேர்.. “ என்று மீண்டும் சிடுசிடுத்து போனை அனைத்தான்...
மதுவும் தன் அழைப்பை துண்டித்து அவன் சொன்ன அட்ரஸ் வந்த மெசேஜை திருப்பி திரந்து பார்த்தாள்..
பின் அந்த அட்ரஸ்க்கு முயற்சி செய்ய, எந்த ஆட் டோவும் கிடைக்க வில்லை.. திரும்ப திரும்ப முயற்சித்து கொண்டிருந்தாள்..
தன் வகுப்பை முடித்து வீட்டிற்கு திரும்பும் மதுவை தன் அறையில் இருந்து தினமும் ரசித்து கொண்டிருப்பான் ஜெயந்த்....
மாடியில் இருந்து பார்க்கும் பொழுது சிறு புள்ளியாக தெரிந்தாலும் தன் மொபைல் வழியாக சூம் பண்ணி அவள் ஆட்டோ பிடித்து செல்லும் வரை பார்த்திருப்பான்..
இன்று அவள் நீண்ட நேரம் அங்கயே நின்று கொண்டிருப்பதை கண்டவன் கீழ இறங்கி வந்து அவளுக்கு உதவ துடிக்க, அடுத்த நிமிடம் எதையும் யோசிக்காமல் வெளியேறி லிப்ட் ல் கீழ வந்தான்...
லிப்டை விட்டு வெளியில் வந்து மது நின்று கொண்டிருந்த இடத்தை அடைய, சரியாக அதே நேரம் மது புக் பண்ணியிருந்த ஆட்டோ வந்து விட, ஜெயந்த் ஐ கவனிக்காமல் ஆட்டோவில் ஏறி சென்றாள் மது ....
அவனும் கொஞ்சம் நிம்மதியாக மெல்ல புன்னகைத்து திரும்பி சென்றான்..
ஆட்டோவில் அமர்ந்த மது மீண்டும் அந்த அட்ரசை எடுத்து அந்த ஆட்டோ ட்ரைவரிடம் காட்டி
“அண்ணா... இந்த இடத்துக்கு போகனும்... கொஞ்சம் சீக்கிரம் போறீங்களா?? ...” என்று பாவமாக பார்க்க, அவரும் சரியென்று தலை ஆட்டி ஆட்டோவை கிளப்பி சென்றார்...
ஆட்டோவின் இருக்கையின் பின்னால் சாய்ந்தவள்
“எதுக்கு இங்க வர சொல்லியிருக்கான்?? அதுவும் எதுவும் விளக்கமா சொல்லாமல் மொட்டையா சீக்கிரம் போனு சொன்னா என்ன அர்த்தம்?? அதையாவது கொஞ்சம் அமைதியா சொன்னானா??
அதுக்கும் திட்டி கிட்டே சொல்றான்... சரியான சிடுமூஞ்சி விருமாண்டி... “ என்று மனதுக்குள் அர்ச்சனை பண்ணியவள் அப்பொழுது தான் நினைவு வந்தது அவன் எண்ணை சேவ் பண்ணி வைக்கவில்லை என்று..
தன் அலைபேசியை எடுத்து அவன் அழைத்திருந்த எண்ணை கான்டாக்ட்ஸ் ல் ஆட் பண்ண, அடுத்து என்ன பெயரில் சேவ் பண்ணலாம் என்று யோசித்தவள் “விருமாண்டி” என்று சேவ் பண்ணினாள்...
அதை கண்டு அவள் உதட்டில் குறும்பு புன்னகை அழகாக பூத்தது...
தானாக நேற்று அவனுடன் விளையாடிய தருணங்கள் நினைவு வர,
அவன் இலாவகமாக விளையாண்டது நினைவு வர,
“ஹ்ம்ம்ம் சூப்பரா விளையாடறான்...
“சே.. நல்லா விளையாண்டுகிட்டிருந்த நேரத்தில் போய் மயக்கம் போட்டுட்டனே..”என்று யோசித்தவளுக்கு அப்பொழுதுதான் நினைவு வந்தது தான் எப்படி வீட்டிற்குள் வந்தேன் என்று...
“ஒரு வேளை அந்த விருமாண்டிதான் தூக்கிட்டு வந்திருப்பானோ??
ஐயோ.. பக்கத்துல வந்தாலே உதறுது.. இதுல அவன் தூக்கியிருந்தால்??? அவ்வளவுதான்...
மயக்கமானதே நல்லதா போச்சு.. இல்லனா அந்த விருமாண்டி முகத்தை க்லோசப் ல பார்க்க வேண்டி இருந்திருக்கும்...தேங்க்ஸ் வேல்ஸ்...என்னை காப்பாத்திட்ட... “ என்று சிரித்து கொண்டே வெளிபக்கம் திரும்பி வேடிக்கை பார்த்து வந்தாள்...
சிறிது நேரத்தில் ஆட்டோ அவள் சொன்ன அட்ரசில் வந்து நிக்க , அதிலிருந்து இறங்கியவள் சுற்றிலும் பார்வையை சுழல விட, அந்த இடமே புதுசாக மிரட்சியாக இருந்தது..
நகரின் மைய பகுதி அது. மக்கள் பரப்ரப்பாக இங்கும்அங்கும் போய்க் கொண்டிருந்தனர்.. சுற்றிலும் வணிக கடைகளும் பல உயர்ந்த அடுக்கு மாடி கட்டிடங்களும் நிறைந்து இருந்தது...
“இங்க எதுக்கு வரச் சொன்னான்?? யாரையும் காணொமே?? “ என்று மீண்டும் ஒரு முறை சுற்றி பார்த்தாள்...
அருகில் இருந்த இரு இளைஞ்சர்கள் இவள் முழியை கண்டு உதவலாம் என்று எண்ணி அருகில் வர, அவர்களை கண்டதும் அவளுக்குள் தடதடத்தது...
அகிலாசொ ல்லிக் கொடுத்த சேப்டி டிப்ஸ் நினைவு வர, தன் ஹேன்ட்பாக்கை கெட்டியாக பிடித்து கொண்டவள் அவசரமாக மீண்டும் ஆராய, சற்று தொலைவில் நிகிலன் தன் காரை நிறுத்தி விட்டு ஒரு கட்டிடத்தின் முன்னால் நின்று கொண்டிருந்தான்...
அவனை கண்டதும் போன உயிர் திரும்பி வந்த மாதிரி இருந்தது... மனதுக்குள் அப்படி ஒரு நிம்மதி... அப்படியே ஓடிப்போய் அவனை கட்டி கொள்ள துடித்தது அவள் மனம்...
அந்த இளைஞர்கள் அவளை நெருங்கி இருக்க,
அடுத்த நொடி சிட்டாக பறந்திருந்தாள் தன் கணவனை நோக்கி...
அத்தனை பேருந்து, கார்களின் நெரிசலில் அவள் எப்படி அவனை அடைந்தாள் எனபது அந்த வேலனுக்கே வெளிச்சம்...
வேகமாக அவன் அருகில் சென்று மூச்சு வாங்க நின்றாள் மது ...
அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த நிகிலன், இவளை கண்டதும் ஒரு புன்னகையை கூட விரயம் செய்யாமல் , வா.. என்று கண்ணால் ஜாடை காட்டி முன்னால் நடக்க, மதுவும் அவனுக்கு ஈடுகொடுத்து அவனை தொடர்ந்து பின்னால் ஓடினாள்...
அவன் ஒரு கட்டிடத்தின் உள்ளே நுழைய, அவன் பின்னே வந்த மது, உள்ளே கண்டதும் உள்ளம் துள்ளி குதிக்க, கண்களை அகல விரித்தாள் ஆச்சர்யத்தில்....
டென்னிஸ் கிளாஸ்ல
ReplyDeleteசேர்த்து விட போறானீ