என் மடியில் பூத்த மலரே-12




அத்தியாயம்-12 

தித்யா இப்பொழுது தந்தைக்கு உதவியாக மீண்டும் அலுவலகம் செல்ல ஆரம்பித்திருந்தான்.... ஆனால் மணி 5 ஆனால் டான் னு வீட்டிற்கு வந்து விடுவான் அவன் மனைவியை பார்க்க...அதற்கு பிறகு இரவு உணவுக்குதான் கீழ வருவார்கள்..

ஜானகியும் அதை கண்டு “இந்த விஷயத்தில் அப்படியே அப்பாவுக்கு தப்பாமல் பிறந்திருக்கான்.. ராம் அப்படிதான் கல்யாணம் ஆன புதிதில் தன் மனைவியை பிரிந்து கொஞ்ச நேரம் கூட இருக்கமாட்டார்.. அவர் அப்பா வற்புறுத்தி கூட்டி போனாலும் 5 மணிக்கு வீட்டிற்கு ஓடி வந்திடுவார்... அதே மாதிரிதான் புள்ளையும்” என்று மனதிற்குள் சிரித்து கொள்வார்...

சில நேரம் இரவு பார்ட்டிக்கு சென்று விடுவார்கள்... நீண்ட நேரம் கழித்தே வீடு திரும்புவார்கள்.. ஜானகி எதையும் கண்டு கொள்வதில்லை.. சின்ன சிறுசுங்க ஜாலியா இருக்கட்டும் என்று விட்டு விடுவார்.. ஒரே வருத்தம் என்னவென்றால் தன் மருமகளின் உடை தான்...

தான் முதல் முதலில் பார்த்தபொழுது தலைய தலைய புடவை கட்டியிருந்தவள் திருமணத்திற்கு பிறகு மருந்துக்கும் புடவை கட்டி பார்த்ததில்லை.. எப்ப பார்த்தாலும் எதாவது மாடர்ன் ட்ரெஸ் மட்டுமே.. அதுவும் இந்த மாதிரி பார்ட்டிக்கு போகும் பொழுது இன்னும் மோசமாக இருக்கும்... அதை பார்க்கும் பொழுது ஜானகிக்கு கொஞ்சம் வலிக்கும்..

இதுதான் இன்றைய நாகரிகம் போல.. ஆதியே ஒன்றும் சொல்லாதப்போ நாம் என்ன சொல்வது என்று சும்மா இருந்து விடுவார்.. ஆதி வெளிநாட்டில் நாகரீக உடைகளில் பெண்களை பார்த்து பழகியிருந்ததால் அவனுக்கு தன் மனைவியின் உடை பெரிதாக தெரிய வில்லை...

ஜானகிக்கு இன்னொரு வருத்தம் தன் மருமகள் தாலியை கலட்டி வைத்து விடுவது.. அந்த மாதிரி மாடர்ன் ட்ரெஸ் பண்றப்போ எல்லாம் ஷ்வேதா தாலியை கலட்டி வைத்து விடுவாள்..

அவள் ஒவ்வொரு முறை தாலியை கலட்டி வைக்கும் பொழுதும் ஜானகிக்கு திக் திக் என்று இருக்கும்.. எங்கே தன் பையனுக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று.. உடனே பூஜை அறைக்கு ஓடி போய் அனைத்து தெய்வங்களையும் வேண்டி கொள்வார் தன் மகனுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்று...

ஜானகிக்கு சிறுவயது முதலே கடவுள் நம்பிக்கை அதிகம்... தன் தாலிகொடி தேய்ந்து அறுந்து போகும் நிலையில் இருந்தால் அதை அப்படியே கலட்டி வேற கொடி மாற்றாமல் ராம்குமாரை ஒரு மஞ்சள் கயிற்றை முதலில் தன் கழுத்தில் கட்ட சொல்லி பின் தன் தாலி கொடியை கழற்றி வேற கொடிக்கு மாற்றுவார்...

அப்படி பட்ட நம்பிக்கையில் இருப்பவருக்கு தன் மறுமகள் அந்த தாலியை ஒரு பொருட்டாக மதிக்காதது வருத்ததை கொடுத்தது..

ஒரு முறை கோயிலுக்கு தன்னோடு வருமாறு ஷ்வேதாவை அழைத்தார் ஜானகி

“அங்கெல்லாம் போர் அடிக்கும் அத்தை.. நீங்க மட்டும் போய்ட்டு வாங்க” என்று நேரடியாகவே மறுத்து விட்டாள் ஷ்வேதா.. அதிலிருந்து அவளிடம் எதுவும் கேட்பதும் இல்லை.. எப்படியோ ஆ தி சந்தோஷமாக இருந்தால் போதும் என்று தன்னை சமாதானம் படுத்தி கொள்வார்...

ராம்குமார்க்கு எல்லாம் தெரிந்தும் அமைதியாகவே இருந்தார்... அவர்கள் வாழ்க்கை அவங்களே நடத்தட்டும்.. நாம் தலையிடகூடாது என்பது அவர் கொள்கை...

அதே மாதிரி ஒரு நாள் பார்ட்டிக்கு சென்று விட்டு இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.. அவர்களை காணாமல் வரவேற்பறையிலயே அமர்ந்து இருந்தார் ஜானகி...

மணி 12 ஐ தாண்டியதும் திரும்பினர் இருவரும்.. உள்ளே வந்து நின்ற ஆதியின் கோலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார் ஜானகி..

ஆம் ஆதித்யா குடித்துவிட்டு தள்ளாடி கொண்டிருந்தான். ஷ்வேதா தான் அவனை தாங்கி பிடித்திருந்தாள்.. அவளுமே குடித்திருப்பது தெரிந்தது...

அதை கண்ட ஜானகி

“ஐயோ!! என்னாச்சு என் புள்ளைக்கு” என்று ஓடி வந்தார் அவனிடத்தில் ...

அவளை கண்டதும்

“ஏய் கிழவி!! சும்மா கத்தாத... என்ன வளத்தி வச்சிருக்க உன் பையனை குடிக்க கூட தெரியாமல்??.. அதான் குடிப்பது எப்படி என்று கற்று கொடுத்தேன்..” என்று கத்தினாள் ஷ்வேதா

பார்ட்டியில் நடந்தது இது தான். அது ஒரு ட்ரிங்க்ஷ் பார்ட்டி ஒரு பப் ல் ஏற்பாடாகியிருந்தது.. அவளுடைய் ப்ரெண்ட்ஸ் எல்லாம் அவர்களுடைய பாய் ப்ரெண்ட்ஸ் உடன் வந்திருந்தனர்..

அவர்கள் எல்லாம் குடித்துவிட்டு கொஞ்சம் மோசமாக தங்கள் துணையுடன் அவர்களை சீண்டி ஆட ஆரம்பித்தனர்.. அந்த பெண்களும் அவர்களின் சீண்டல்களை ரசித்தனர்.. ஆனால் ஆதித்யாவோ தான் குடிக்க மாட்டேன்..

அதே மாதிரி இந்த மாதிரி பொது இடத்தில் ஆட மாட்டேன் என்று விட்டான்.. எல்லாரும் ஜாலியாக இருக்க ஷ்வேதா மட்டும் தனித்து இருந்தாள்..

அதை கண்ட அவளுடைய ப்ரெண்ட்ஸ் அவளை பழி வாங்க அவளை கிண்டல் செய்தனர்...

“உன்னோட ஆளுக்கு குடிக்க கூட தெரியாதா ஷ்வேதா?? சுத்த வேஸ்ட்... என்ன இருந்து என்ன பிரயோஜனம்.. இந்த மாதிரி குடிச்சுட்டு இப்படி ஆடறதுல இருக்கிற கிக் எதுல வரும்...ஐயோ!!! பாவம் ஷ்வேதா அவளுக்கு... இந்த சுகம் கிடைக்காதே!!! என்று தங்கள் பொறாமையை தீர்த்து கொள்ள அவளை தூண்டிவிட்டனர்...

ஏற்கனவே கொஞ்சமாக குடித்திருந்த ஷ்வேதா இன்னும் நிறைய குடிக்க ஆரம்பித்தாள்..

அதோடு ஒரு மாக்டெய்லில் போதை மருந்தை கலந்து ஆதித்யாவிற்கும் கொடுத்தாள்... அவள் ப்ரெண்ட்ஸ் முன்னாடி மூக்கு உடைபட பிடிக்கவில்லை அவளுக்கு...

போதை ஆனதும் ஆதியும் அவர்களின் பாய் ப்ரெண்ட்ஸ் மாதிரி தன்னை கட்டி பிடித்து ஆடுவான் என்ற எண்ணத்தில் போதையை ஏற்றினாள் அவனுக்கு...

ஆனால் ஆதிக்கோ போதை பழக்கமில்லாததால் கால்கள் தடுமாற ஆரம்பித்தன.. தன்னை சுதாரிக்க முயன்று முடியாமல் தடுமாறினான்..

ஷ்வேதா தான் அவனை தாங்கி பிடிக்க வேண்டியதாயிற்று.. அதை கண்ட அவளின் நண்பர்கள் இன்னும் ஏளனமாக சிரிக்க ஆரம்பித்தனர்.. அவளுக்கு அவமானமாக ஆயிற்று..

இதற்கு மேல் அங்கு இருக்க முடியாது என்று அங்குள்ள அட்டென்டர் உதவியுடன் அவனை மெல்ல காருக்கு கூட்டி வந்தவள் தானே காரை ஓட்டி கொண்டு வீட்டிற்கு வந்தாள்..

தன் நண்பர்கள் மத்தியில் அவமானப்பட்ட அந்த கோபம் அவள் உள்ளே எரிமலையாக குமுறி கொண்டிருந்தது .. அதோடு அவளும் இன்று அதிகமாக குடித்திருப்பதால் தன் நிலை மறந்து ஜானகியிடம் தன் கோபத்தை கொட்டி கொண்டிருந்தாள்...

“எல்லாம் உன்னால தான் கிழவி .. என் ப்ரெண்ட்ஸ் முன்னாடி மூக்கு உடைஞ்சு வந்திருக்கேன்.. சொத்து இருந்தா மட்டும் போதுமா.. அதை அனுபவிக்க சொல்லி குடுக்க வேணாம்.. ஒரு குடிக்க கூட தெரியாமல் சீ ” என்று உளறினாள்..

அதை கேட்டு அதிர்ந்த ஜானகி

“அடி பாவி.. என் பையனை இப்படி குடிக்க பழக்கியிருக்கியே.. நீயெல்லாம் ஒரு பொண்டாட்டியா?? அவங்கவங்க பொண்ணுங்க தன் கணவனை குடி பழக்கத்தில் இருந்து மீட்டு கொண்டு வர எவ்வளவு கஷ்ட பட்டுகிட்டிருக்காங்க..

நீ என்னடான்ன நல்லா இருந்த என் பையனை இப்படி கெட்ட வழிக்கு கொண்டு போறியே... உன்னை போய் நல்ல பொண்ணுனு நினைச்சனே!! “ என்று தாங்க முடியாமல் அரற்றினார்..

“ஹ ஹ ஹா.. அதெல்லாம் உன்னையும் உன் பையனையும் நம்ப வைக்க நான் போட்ட திட்டம்.. இல்லைனா நான் இப்படி வசதியான வாழ்க்கையை வாழ முடியுமா... நான் விரித்த வலையில் நீங்க விழுந்திட்டீங்க “ என்று தன்னை மறந்து உளறி கொண்டிருந்தாள் ஷ்வேதா...

அதை கேட்டதும் ஜானகி அதிர்ச்சியில் உறைந்து நின்றார்... பின் சுதாரித்து கொண்டு

“இப்பவே இந்த வீட்டை விட்டு போடி.. இப்படி பட்ட பெண் எங்களுக்கு தேவையில்லை என்று கத்தினார்..

அதை கேட்டதும் மேலும் பலமாக சிரித்தாள் ஷ்வேதா...

“என்னை வெளியில் போக சொல்ல நீ யாரு கிழவி... இது என் புருஷனோட தாத்தாவோட வீடு.. தாத்தா சொத்து பேரனுக்கு தான்.. நீ தான் வெளியில் போகனும்.. நீ முதல்ல போ “ என்று ஜானகியை பிடித்து தள்ளினாள்... ஜானகி தடுமாறி விழும் பொழுது ராம்குமார் ஓடி வந்து தாங்கி பிடித்தார்...

எதுவும் பேசாமல் ஷ்வேதாவை ஓங்கி ஒரு அறை விட்டார்.. பின் திரும்பி பார்க்காமல் ஜானகியை அழைத்துகொண்டு அறைக்குள் சென்று விட்டார்...

ஜானகிக்கு தான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருந்தார்.. இப்படி தப்பான பொண்ணை கட்டி வச்சுட்டமே.. அப்பயே ராம் சொன்னதை கேட்டு இருக்கனும். நல்லா விசாரிச்சு இருந்தால் அப்பயே தெரிந்திருக்குமே இவள் எப்படி பட்டவள் என்று... அவசர பட்டு தப்பு பன்னிட்டனே... “ என்று இரவெல்லாம புலம்பி கொண்டிருந்தார்...

திருமணம் ஆகி இத்தனை வருடங்களில் தன் மனைவி கண் கலங்கி பார்த்திராதவர் இன்று அவள் மொத்தமும் உடைந்து போகவும் ராம்குமாராலும் தாங்க முடியவில்லை...

இருந்தாலும் தாங்கிகொண்டு ஜானகியை சமாதானப்படுத்தினார். “எல்லாம் சரியாகிடும் ஜானகி.. நம்ம பையன் கெட்ட வழிக்கு போக மாட்டான்” என்று ஆறுதல் சொன்னார்... அழுத படியே அவர் மார்பிலயே தூங்கி இருந்தார் ஜானகி...

காலையில் கண் விழித்ததும் தன் மனைவியை திரும்பி பார்த்தார் ராம்குமார்.. அருகில் அவள் இல்லை என்றதும் திக் என்றது... அதற்குள் பூஜை அறையில் இருந்து மணி சத்தம் கேட்கவும் நிம்மதி அடைந்தார்..

இரவு நடந்த நிகழ்வு நினைவு வந்தது.. சீக்கிரம் எல்லாம் சரி பண்ணனும் என்று நினைத்து கொண்டவர் மெல்ல எழுந்திருக்க முயன்றார்.. ஆனால் காலை அசைக்க முடியவில்லை.. என்ன அச்சு என்று கையை தூக்க முயன்றார்..

ம்ஹூம்.. கையையும் அவரால் தூக்க முடியவில்லை...

“ஐயோ எனக்கு என்ன ஆச்சு?? என்று பதறி ஜானகி என்று தன் மனைவியை அழைத்தார்... ஆனால் அவர் சத்தம் அவருக்கே கேட்க வில்லை...

ஆம் அவரால் அவர் உடலை அசைக்கவும் முடியவில்லை. பேசவும் முடியவில்லை.. பூஜை முடித்து வந்த ஜானகி தன் கணவனின் நிலையை கண்டு பதறி

“ஆதி” என்று கத்தினார்...

அப்பொழுது தான் எழுந்து குளித்துவிட்டு வந்த ஆதிக்கு நேற்று இரவு நடந்தவை எதுவும் நினைவு இல்லை.. தான் எப்படி வந்தோம் என்றே குழம்பி கொண்டிருந்தான்.. அதற்குள் தன் அன்னையின் குரல் கேட்கவும் வேகமாக கீழே இறங்கி வந்தான்... தன் தந்தையின் நிலையை கண்டு உடனே டாக்டருக்கு போன் பண்ணினான்..

உடனே விரைந்து வந்த டாக்டர் அவரை பரிசோதித்து அவருக்கு பக்கவாதம் அட்டாக் ஆகியிருப்பதாக கூறினார்.. ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிகிட்டதால இது மாதிரி வந்திருக்கலாம் என்றார்... அதன் பின் அவரை எப்படி பார்த்து கொள்ளனும் என்று சொல்லி நர்ஸ் ஒருத்தரையும் ஏற்பாடு செய்தார்..

ஜானகிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.. இடிந்து போய் தன் கணவனின் அருகிலயே அமர்ந்தார்...

ஆதித்யாவுக்கோ கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்தது...தன் பெற்றோரை பார்க்கவேண்டும்.. அதோடு எப்படி தொழிலை சமாளிப்பது?? .. தான் இன்னும் ஒன்றுமே கற்று கொள்ளவில்லை.. அத்தனை நிறுவனங்களையும் நிர்வகிக்கும் அளவுக்கு பழக வில்லையே என்று இருந்தது..

இருந்தாலும் சமாளிக்க வேண்டும் என்று அலுவலகம் கிளம்பி சென்றான்.. ஷ்வேதா இன்னும் உறங்கி கொண்டிருந்தாள்.. அதனால் அவளிடம் எதுவும் சொல்ல முடியாமல் கிளம்பி சென்றான்..

அலுவலகம் சென்றவனுக்கோ ஒன்றும் பிடி படவில்லை.. அதற்குள் ராம்குமார் முடங்கிய செய்தி வேகமாக பரவியது.. அதனால் ஆதித்யா குரூப் ஆப் கம்பெனிஸ் பங்குகள் எல்லாம் சரிய தொடங்கின..

இந்த வாய்ப்புக்காகவே காத்திருந்த போட்டி நிறுவனங்கள் இன்னும் சரிய வைத்தனர்... புதிதாக கிடைத்திருந்த ஒப்பந்தங்கள் எல்லாம் கேன்சல் ஆயின...

ஆதித்யாவிற்கு இதை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை.. அவசரமாக மீட்டிங் ஏற்பாடு பண்ணி கலந்து ஆலோசித்தான்.. ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி அறிவுரைகள் கூறவும் எதை ஏற்று கொள்வது எதை விடுவது என்று மேலும் குழம்பியது... இந்நிலையில் தன் பெற்றோரின் நலத்தையும் போன் பண்ணி கேட்க வேண்டி இருந்தது..

மாலை ஐந்து ஆனதும் ஷ்வேதா ஆதித்யாவை அழைத்திருந்தாள்.. இன்று ஒரு விழாவிற்கு போகணும்.. சீக்கிரம் வரும்படி அழைத்தாள்.. அவளுக்கு இன்னும் நடந்தது தெரியாது போல என்று நடந்ததை கூறினான்..

அதை கேட்டதும் “அவர் எப்படியோ போய்ட்டு போறார். அதான் உங்க அம்மா இருக்காங்க இல்ல. அவங்க பார்த்துக்குவாங்க டார்லிங்.... இது முக்கியமான் விஐபி ஓட விழா. நாம் கண்டிப்பா போயாகனும்” என்று குதித்தாள்..

“சே!! என்ன இப்படி புரிஞ்சுக்காமல் பேசறா” என்று கோபம் வந்தாலும் இந்த விழாவுக்கு போகணும் என்று முன்னாடியே திட்டமிட்டு இருந்திருப்பாள்.. இப்ப திடீர்னு இந்த மாதிரி நடந்ததால் போக முடியாது எனவும் அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை போல” என்று தன்னையே சமாதானம் படுத்தி கொண்டான்..

பின் வேலையில் கவனம் செலுத்தி ஒவ்வொன்றாக ஆராய்ந்தான்.. எதுவும் அவ்வளவு சுலபத்தில் புரியவில்லை.. இருந்தாலும் தன்னால முடிந்ததை செய்யவேண்டும் என்று போராடினான்..

இரண்டு நாட்கள் இரவு பகல் என்று அலுவலகத்திலயே இருந்து ஒரளவுக்கு பேசி கேன்சல் ஆகிற மாதிரி இருந்த ஒரு சில ஒப்பந்தங்களை தக்க வைக்க முடிந்தது.. ஒரு சில ஒப்பந்தங்கள் இவனுக்கு அனுபவம் இல்லை. இவனால் பண்ண முடியாது என்று கை நழுவி சென்றன...

அடுத்து இந்த மாதம் சம்பளத்திற்கு பணம் பத்தவில்லை என்று அப்பாவின் உதவியாளர் வந்து நின்றார்... என்ன செய்வது என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.. அப்பா எப்படி இவ்வளவையும் சமாளித்தார் என்று மலைப்பாக இருந்தது அவனுக்கு..

அந்த உதவியாளரே ஒரு வழியையும் சொன்னார்.. புதிதாக ஆரம்பித்து இருந்த ஒரு கம்பெனியை விற்று விடும் படி... அந்த பணத்த கொண்டு இந்த மாதம் சம்பள பாக்கியை கொடுத்து விடலாம்” என்று கூறினார்..

அவனுக்கு அந்த கம்பெனியின் மதிப்பும் தெரியவில்லை... அப்பாவோட உதவியாளர்.. சரியாகத்தான் சொல்லுவார் என்று அவர் சொன்ன விலைக்கே விற்றான்..

அதை வாங்கியது ராகுல்.. ஆம் ஷ்வேதா தன்னை கை கழுவி விட்டு ஆதித்யாவை மணந்ததும் அவன் ஆதித்யாவின் மேல் வெறுப்பில் இருந்தான்.அவனை எப்படியாவது வீழ்த்த சந்தர்ப்பம் பார்த்து கொண்டிருந்தான்.. அது இப்பொழுது கிடைக்கவும் சரியாக பயன்படுத்தி கொண்டு தன் தொழிலை பெருக்க ஆரம்பித்து இருந்தான்..அந்த உதவியாளரை விலை கொடுத்து வாங்கி இருந்தான் ராகுல்...

ஆதித்யா வின் மற்ற கம்பெனிகளின் சரிவுக்கும் அவன் ஒரு முக்கிய பங்கு வகித்தான்.. இதை அறியாத ஆதித்யா தன் புதிய நிறுவனத்தை விற்று அந்த மாத பிரச்சனையை சமாளிச்சாச்சு என்று நிம்மதி அடைந்தான்...

இரண்டு நாட்களுக்கு பிறகு அன்று தான் வீட்டிற்கு சென்றான்... சென்றவன் தன் தந்தையையும் தாயையும் பார்த்து விட்டு தன் அறைக்கு சென்றான்...

அங்கு ஷ்வேதாவோ கோபத்தில் கொதித்து கொண்டிருந்தாள்.. கடந்த இரண்டு நாட்களாக அவள் போனை எதுவும் அவன் எடுக்கவில்லை. அவள் எங்கு வெளியில் கூப்பிட்டாலும் அவளுடன் செல்ல வில்லை..

அவனால் எல்லா புரோகிராமும் கேன்சல்.. அவளுக்கும் அன்று இரவு நடந்தது சரியாக நினைவு இல்லை.. ஏதொ தான் சத்தம் போட்டது ஞாபகம் இருந்தது.. ஆனால் முழுவதுமாக நினைவு இல்லை.. யாரும் தன்னை எதுவும் கேட்காததால் தப்பாக ஒன்றும் பேசவில்லை என்று திருப்தியுற்றாள்..

இப்பொழுது தன் கோபத்தை எல்லாம் அவனிடம் திருப்பினாள்..

ஆதியும் பொறுமையாக அவளுக்கு விலக்க முயன்றான்.. அவள் புரிந்து கொள்வதாக இல்லை..”கடைசில் இந்த கிழவனால தான் இவ்வளவு பிரச்சனை.. இவனை யார் இப்ப இப்படி படுக்க சொன்னது..

படுத்தவர் ஒரேயடியாக போய் தொலைக்க வேண்டியது தானே” என்று சொல்லி முடிக்குமுன் ஆதித்யாவின் கை அவள் கன்னத்தில் இறங்கி இருந்தது...

ஓங்கி அறைந்திருந்தான் அவளை..

“சீ.. நீ எல்லாம் ஒரு பொண்ணா” என்று வேகமாக வெளியேறினான்..

ஷ்வேதா பேயறைந்த மாதிரி முழித்து கொண்டிருந்தாள்.. இது வரை ஆதி தன்னை ஒரு வார்த்தை கூட திட்டியதில்லை.. அவள் மேல் காதலாகவே இருந்தான்.. இப்போ இப்படி ஆயிடுச்சே என்று கன்னத்தில் கை வைத்து கோபத்துடன் அமர்ந்தாள்..

வெளியில் சென்ற ஆதிக்கோ மனம் இன்னும் கொதித்து கொண்டு இருந்தது.. அவள் பேசியது தப்பு என்றால் தான் அடித்ததும் தப்புதான்.. கட்டின பொண்டாட்டியை கை நீட்டி அடிக்க கூடாது என்று தன் தந்தை அடிக்கடி சொல்லியிருக்கிறார்..

அவர் தன் அம்மாவை எப்படி தாங்குவார் என்று நேரில் பார்த்தவன் ஆயிற்றே.. அவர் பையன் நான் இப்படி பண்ணிட்டனே..

அவளே தப்பு பண்ணி இருந்தாலும் அவனின் காதல் மனது அவளை மன்னித்து தன் மேல் தப்பை சுமத்தியது.. கொஞ்ச நேரம் அலைந்து திரிந்தவன் வீட்டிற்கு திரும்பினான்..அவளை எப்படி சமாதானப் படுத்துவது என்று யோசித்து கொண்டே கதவை திறந்தவன் இன்ப அதிர்ச்சியில் நின்றான்...


ழுது கொண்டிருப்பாள் என்று வந்தவனுக்கோ அவள் குளித்து முடித்து இரவு உடையில் அவனுக்கு பிடித்த மல்லிகை பூவை தலை நிறைய வைத்து இருந்தாள்.. இவனை கண்டதும் அதே மயக்கும் புன்னகையை செலுத்தி “சாரி டியர் “ என்று ஓடி வந்து அவனை கட்டி கொண்டாள்...

“என்னை மன்னிச்சிடுங்க.. நான் மாமாவை பற்றி அப்படி பேசி இருக்ககூடாது.. ஏதோ கோபத்துல சொல்லிட்டேன்... உங்களை பிரிஞ்சு இரண்டு நாளா இருந்த கோபத்துலதான் அப்படி பேசிட்டேன் “ என்று தன்னிலை விளக்கம் கொடுத்தாள்..

அவ்வளவுதான் ஆதியின் பாரம்+கோபம் எல்லாம் காணாமல் போனது.. இரண்டு நாள் தன் இளம் மனைவியை பிரிந்து இருந்தவன் அவளின் இந்த தோற்றமும் நெருக்கமும் அவனுள் கிளர்ச்சியை தூண்ட அவளை அப்படியே கையில் அள்ளிகொண்டான்...

இரண்டு நாட்கள் இருவரும் பிரிந்து இருந்ததாலும், தொழிலை சமாளிக்க வேண்டும் என்ற மன உலைச்சலில் இருந்து விடுதலையாக ஆதியும் ஆவலுடன் அவளை நாடினான்.. அந்த இரவு இருவருக்கும் மிகவும் மறக்க முடியாத இரவானாது...

ஆனால் ஷ்வேதாவின் திட்டத்தை அறியவில்லை அவன்.. ஆதித்யா அடித்த உடன் தன் அம்மாவிற்கு அழைத்து நடந்ததை சொன்னாள் ஷ்வேதா. தான் உடனே கிழம்பி வந்து விடுவதாக குதித்தாள்.. அதை கேட்டதும் விஜயா

“தப்பு பண்ணிட்டியே ஷ்வேதா... மாப்பிள்ளை கிட்ட அப்படி பேசலாமா.. திடீர்னு உன்னை வெளியில் போனு சொல்லிட்டா என்ன செய்வ?? வெண்ணெய் திரண்டு வர்ற நேரம் தாழி உடைந்த கதையாக ஆகிவிடக்கூடாது... ஒழுங்கா மாப்பிள்ளையை சமாதான படுத்திற வழியை பாரு..

அந்த சொத்து நம்ம கைக்கு வரவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு.. அதான் அந்த கிழவன் விழுந்துட்டான் இல்லை.. இனிமேல் எல்லாம் மாப்பிள்ளை கைலதான்.. நீ சொல்றதை மாப்பிள்ளை செய்ற மாதிரி பார்த்துக்கோ.. அப்புறம் ஒன்னும் குறை இருக்காது “ என்று அறிவுரை வழங்கியவருக்கு தெரியவில்லை தற்போதைய தொழில் விவகாரம்..

அதனாலயே ஷ்வேதா தன்னை அழங்கரித்து கொண்டு அவனை மயக்கும் வேலையில் ஈடுபட்டாள்.. அதில் வெற்றியும் கண்டாள்..

மறுநாள் உற்சாகமாக எழுந்தவன் அவசரமாக கிளம்பி தன் பெற்றோரை பார்த்து விட்டு அலுவலகம் கிழம்பினான்..

அங்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது அவனுக்கு..

தொழிலாளர்கள் சம்பள உயர்வு வேண்டி ஸ்ட்ரைக் என்றனர்.. இதெல்லாம் புதுசாக இருந்தது அவனுக்கு.. இதை எப்படி சமாளிப்பது?? .. உற்பத்தி குறைந்தால் இன்னும் நஷ்டம் ஆகுமே என்று கையை பிசைந்தான்..

தன் தந்தையின் நண்பரிடம் ஆலோசனை கேட்டு தொழிலார்களிடம் சென்று பேசினான். ஒருவாறு நிலைமை சரியானதும் அனைவருக்கும் ஊதிய உயர்வு தருவதாக கூறி சமாளித்தான்..

அடுத்த மாத பற்றா குறைக்கு தன் ஆடி காரை விற்று சமாளித்தான். தன் தந்தையின் காரை பயன்படுத்தினான்...ராகுலின் சூழ்ச்சியால் அந்த உதவியாளரின் பேச்சை கேட்டு இன்னும் சில நிறுவனங்களையும் விற்கும் படி ஆனது...ஒரு சில டென்டர்க்கு முன் பணம் கட்ட வேண்டி வீட்டையும் அடகு வைத்திருந்தான் அந்த உதவியாளரின் ஆலோசனைப்படி

இப்பொழுது இன்னும் கடினமாக உழைக்க வேண்டி இருந்தது.. அதனால் வீட்டை மறந்தான்.. இதை ஷ்வேதவால் தாங்கி கொள்ள முடிய வில்லை. அவள் தனியாக பார்ட்டிக்கு செல்ல ஆரம்பித்தாள்..

அவள் தனியாக வருவதை கண்டு ராகுல் அவளிடம் நெருங்கினான்.. இப்பொழுது அவன் நிலை உயர ஆரம்பித்து இருந்தது... ஆதி ஆடியை விற்றதே அவளுக்கு பலத்த அடியாக இருந்தது.. அதோடு ராகுல் வேறு ஆதித்யாவின் தொழில் சரிவதாகவும் இனிமேல் அவன் ஒவ்வொன்றாக இழக்க வேண்டி இருப்பதாகவும் கூறினான்...

ஒரு சில நிறுவனங்களைஅவன் விற்று விட்டதாகவும் கூறினான்..

அவனே அந்த ஆடியை குறைந்த விலைக்கு வாங்கி இருந்தான். அவளை அந்த காரிலயே ட்ராப் பண்ணினான்.. ஆதி கொஞ்சமாக அவளை விட்டு விலகியிருக்கவும் ராகுல் கொஞ்சம் கொஞ்சமாக அவளை நெறுங்கினான்...

அவளின் குடி பழக்கத்தை இன்னும் தூண்டி விட்டான்..தினமும் இரவு நேரம் கழித்தே வீடு திரும்ப ஆரம்பித்து இருந்தாள்... இதை எல்லாம் கவனிக்கும் நிலையில் ஜானகியும் இல்லை ஆதித்யாவும் இல்லை...

ஆதி பல நாட்களில் அலுவலகத்திலயே தங்கிவிடுவான்... வீட்டிற்கு வந்தாலும் நெடு நேரம் ஆகியே திரும்புவான்.. காலை சீக்கிரம் கிளம்பி விடுவான்.. இதில் தன் மனைவியை கவனிக்க தவறி இருந்தான்..

அவனுடைய கடும் உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்ப ஆரம்பித்து இருந்தது....இருந்தாலும் எப்ப வேணாலும் மீண்டும் சரியலாம் என்ற நிலையில் இருந்தது

இப்படியாக ஒரு மாதம் கடந்திருந்த நிலையில்

ஒரு நாள் சுசிலா ஆதியை அழைத்து இருந்தார்... அவருக்கு இங்கு இருக்கும் நிலவரம் தெரியாது.. அவரையும் கஷ்ட படுத்துவானேன் என்று சொல்லாமல் இருந்தான்..அவர் போனை கண்டதும் மனதுக்குள் உற்சாகம் வந்தது.

“.சொல்லுங்க சுசிலாம்மா.. எப்படி இருக்கீங்க ”என்று உற்சாகமாக ஆரம்பித்தான்..

“ஹ்ம்ம்ம் நல்லா இருக்கேன் கண்ணா... “ என்றவர் ராம்குமார் மற்றும் ஜானகியின் நலத்தை விசாரித்து விட்டு

“ஆமாம் ஒரு உயிரை அழிக்க எப்படி கண்ணா மனசு வந்தது உனக்கு” என்று திடிரென்று கேட்டார்..

அவர் என்ன சொல்றார் என்று அவனுக்கு புரியவில்லை..

“என்ன சுசிலாம்மா சொல்றிங்க..புரியலையே!!”

“நீ உன் குழந்தையை அழித்ததை தான் சொல்றேன்.. இப்பதான் என் ப்ரெண்ட் சொன்னாள்.. ஷ்வேதா அவள் ஹாஸ்பிட்டலுக்கு போயிருந்தாளாம் அபார்ஸன் பண்ண.. உன் கல்யாணத்திற்கு என் ப்ரெண்ட் ம் வந்திருதாள் போல .. அதனால் ஷ்வேதாவை அடையாளம் தெரிந்து கொண்டு எங்கிட்ட சொன்னா..

அதான் எனக்கு கஷ்ட மாயிடுச்சு.. ஒரு உயிரை இந்த உலகுக்கு கொண்டு வருவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா.. அதை போய் நீ அழிச்சிட்டியேனு தான் கஷ்டமா இருந்தது கண்ணா.. அதான் போன் பண்ணினேன்” என்றார் வருத்தத்துடன்..

ஆதித்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை முதலில்... பின் அவர் சொல்லியதை வைத்தும் ஷ்வேதா கடந்த இரண்டு நாளாக ஒரு மாதிரி சோர்ந்து படுத்து இருப்பதும் நினைவு வந்தது..

அப்படி என்றால் “குழந்தை... என் குழந்தையை கருவிலயே அழித்து விட்டாளா??? .. அதுவும் என்னிடம் எதுவும் சொல்லாமல் “ என்று கொதித்தது அவனுக்கு..சுசிலா இன்னும் லைனில் இருப்பதை அறிந்து.

“ஏதொ தப்பு நடந்திருக்கு சுசிலாம்மா.. எனக்கே இந்த விசயம் தெரியாது... எனக்கு தெரிந்திருந்தால் நான் அழிக்க விட்டிருப்பேனா. நான் நீங்க வளர்த்தவன் மா... உங்களோட உணர்வு தான் எனக்கும் இருக்கும்” என்று தழுதழுத்தான்..

அதை கேட்டதும் சுசிலாவுக்கு மனம் நெகிழ்ந்தது

“இது போதும் கண்ணா. எங்க நீயும் இதுக்கு சம்மதிச்சிட்டியோனு தான் வருத்தமா இருந்தது.. எதுக்கும் ஷ்வேதா கிட்ட கோப படாமல் பொறுமையா கேளு ஏன் அப்படி செய்தாள் என்று” என்று போனை வைத்தார்...

போனை வைத்தவனுக்கு கோபம் தலைக்கேறியது... அதே கோபத்துடன் வீட்டிற்கு கிழம்பி சென்றான்..வீட்டை அடைந்ததும் அவசரமாக உள்ளே சென்று

“ஷ்வேதா” என்று கத்தினான்..

என்றும் இல்லாமல் புதிதாக அவன் தன் பெயர் சொல்லி அதுவும் ஹாலில் இருந்து கத்தவும் ஷ்வேதா வேகமாக கீழே வந்தாள்..

“என்னாச்சு?? ஏன் இப்படி கத்தறீங்க?? “

“நீ ஹாஸ்பிட்டல் போயிருந்தியா?? “

“வ.. வ.. வந்து எந்த ஹாஸ்பிட்டல்?..” என்று ஒரு நிமிடம் தடுமாறினாள்.. எப்படி அதுக்குள்ள இவனுக்கு தெரிஞ்சது என்று குழம்பினாள்...

“ஹ்ம்ம்ம்ம் நீ எந்த ஹாஸ்பிட்டல் க்கு போனியோ.. அந்த ஹாஸ்பிட்டல்”

“நான் எதுக்கு ஹாஸ்பிட்டல் போகனும்?? ... நான் எங்கயும் போகலை “ என்று சமாளிக்க முயன்றாள்..

“போதும் டீ நீ மழுப்பாத... எனக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு... என்னடி செஞ்ச என் குழந்தையை” என்று தழுதழுத்தான்...

ஆதித்யா இருந்த கோபத்தில் அவன் எங்கு நின்று கத்துகிறோம் என்பதை மறந்து விட்டான்... வரவேற்பறைக்கு பக்கத்தில் தான் ராமின் அறை.. அவரின் அருகில் அமர்ந்திருந்த ஜானகி எதுவும் இதுவரை கண்டு கொள்ளவில்லை.. ஒரு மாதிரி நடைபிணமாக தான் இருந்தார்.. ஆனால் ஆதித்யா என் குழந்தை எனவும் ஜானகி உற்று அவர்கள் பேச்சை கவனிக்க ஆரம்பித்தார்...

“ஏன் டீ என் குழந்தையை அழிச்ச??? அதுவும் எனக்கு தெரியாமல்?? “ என்று மீண்டும் கத்தினான்..

இதுவரை அமைதியாக இருந்தவள் அவனுக்கு உண்மை தெரிந்து விட்டது எனவும்

“ஆமா.. பெரிய ராஜபரம்பரை.. வாரிசு.. அதை அழிச்சுட்டேன்?? இப்ப குழந்தை ஒன்னுதான் குறைச்சல்.. நாம் இருக்கிற நிலைமையில் அந்த குழந்தை வந்தா தெருவுலதான் நிக்கும் “

“ஹேய்.. என்ன உளர்ற??? “ என்று பல்லை கடித்தான்

“நான் ஒன்னும் உளர்ல.. எனக்கு எல்லாம் தெரியும்.. உங்களால் மாமா தொழில எல்லாம் பார்க்க முடியலை.. இப்ப எல்லாம் நஷ்டத்துலதான் போய்கிட்டிருக்கு...3 கம்பெனி வித்துட்டீங்க... உங்க ஆடி காரும் போயிருச்சு... இந்த வீடாவது மீதியாவுதுனு நினைத்தேன்... அதையும் அடகு வச்சுட்டீங்க... இப்ப உங்களுக்கு சொல்லிக்கிறதுக்கு என்ன இருக்கு?? ..

இன்னும் ஒரு மாசத்துல எல்லாம் போய் நடுத்தெருவுக்கு தான் வரணும்.. அதான் அந்த நிலைமை அந்த பிசாசுக்கு வர வேண்டாம். அதோட குழந்தை பிறந்தால் என்னோட அழகு போய்டும்.. அதான் அதை கலைத்தேன்.. இதுக்கு போய் ஏன் இப்படி கத்தறீங்க???” என்று அவளும் திருப்பி கத்தினாள்...

“எத்தனை கஷ்டம் வந்தாலும் என் குழந்தையை வளர்த்திருப்பேன் டீ...”

“கிழிச்சிருப்பீங்க... ஏதோ பெரிய பணக்காரர்.. உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு வசதினு எங்க அம்மா சொன்னதால தான் உங்களை கல்யாணம் பண்ணிகிட்டேன்.. இந்த கிழவன் இப்படி படுப்பான்.. சொத்தெல்லாம் போகும்னு தெரிஞ்சிருந்தா உங்க பக்கமே வந்திருக்க மாட்டேன்.. நான் அந்த ராகுலையே கல்யாணம் பண்ணிகிட்டிருப்பேன்...

இப்பவும் கெட்டு போய்டலை.. நீ விட்டுட்டு வா.. நான் ஏத்துக்கறேனு அந்த ராகுல் தயாரா இருக்கான்.. நான் தான் இந்த தாலிக்கு மரியாதை கொடுத்து இங்க இன்னும் இருக்கேன்...”

“அப்ப நீ என்ன காதலிக்கல??? “

“இல்லை.. உங்களை பார்த்து மயங்கினது உண்டு.. ஆனால் எனக்கு உங்க சொத்து தான் வேணும்..பெரிய ஹீரோனு நினைத்தேன்.. ஆனால் அந்த கிழவன் படுக்கவும் உன்னால தொழிலை ஒரு இஞ்ச் கூட நகர்த்த முடியல..எல்லாத்தையும் விற்று விற்று சமாளிச்சா எத்தனை நாளைக்கு வரும்...

நீ எல்லாம் படுக்கைக்கு மட்டும் தான் லாயக்கு.. மற்றபடி வெத்துவேட்டு “ என்று அந்த ராகுல் சொல்லி கொடுத்ததை அப்படியே கொட்டினாள்.. அடுத்த நொடி

“ஏய்ய்ய்ய் “ என்று கர்ஜித்தவன் ஓங்கி அறைந்திருந்தான் ஆதித்யா...

“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின நான் கொலைகாரனா ஆயிடுவேன்... வெளிய போடி.. இனிமேல் ஒரு நிமிஷம் கூட என் கண் முன்னாடி நிக்காத.. “ என்று உறுமினான்..

“டேய்... என்னையே அடிச்சிட்ட இல்லை.. இதுக்கு அனுபவிப்படா..

நீ முதல் முதலா அடிச்ச அன்னைக்கே உன்னை தலை முழுகிட்டு போயிடனும்னு நினைத்தேன்.. இந்த அம்மாதான் இந்த வீட்டையாவது என் பேருக்கு எழுதிகிட்டு வர சொன்னா.. அதுக்குதான் அந்த நடிப்பு நடிக்க வேண்டியதா இருந்தது உன்னை மயக்க...இப்ப என்னடான்னா மறுபடியும் கை ஓங்கற..

இந்த தாலி இருக்கிறதால தான நீ என்னை அடிச்ச.. இந்தா இதை நீயே வச்சுக்க.. நடுத்தெருவுல நிக்கறப்போ உனக்கு இந்த தாலியவது உதவும்...குட் பை “

என்று தாலியை கலட்டி அவனின் முகத்தில் எறிந்து விட்டு வேகமாக மேழெ சென்று தன் உடைமைகளை அவசரமாக பொறுக்கி கொண்டு வெளியேறினாள்...

அதிர்ந்து போய் அமர்ந்தான் ஆதித்யா... அவள் சொன்னதை எல்லாம் ஜீரணிக்க முடியவில்லை அவனால்..

“பொய்யா... எல்லாம் பொய்யா... அவள் காதல், இந்த கல்யாணம், அவளின் உருகல்.. அவளின் அணைப்பு.. எல்லாம் நடிப்பா... அதுவும் அன்றைய இரவை நினைத்தவனுக்கு இந்த வீட்டிற்காகவா அவள் அப்படி தன்னிடம் கூடினாள் அன்று

“சீ... என்றான்.. அவன் உடல் கூசியது.. இப்படி பட்டவளையா நான் காதலித்தேன்... “ என்று நினைக்க நினைக்க அவனுக்கு மனம் கனன்றது.. அதுவும் அவள் கடைசியாக கூறிய வார்த்தைகள் அவன் எதுக்கும் லாயக்கில்லாதவன் என்று

அதை கேட்டதும் அவன் உடலின் அனைத்து செல்களும் கொதித்தன... அதே வெறியோடு வெளியில் கிளம்பி சென்றான் காரை எடுத்து கொண்டு...

இங்கு ஜானகியோ உறைந்து போய் இருந்தார்... “ தங்கள் வீட்டு வாரிசு முலையிலயே கிள்ளி எறிய பட்டு விட்டதே” என்று இடிந்து போய் இருந்தார்...

ராம்குமார்க்கோ உடல் உறுப்புகள் தான் இயங்க வில்லை. மற்றபடி அவரால் நன்றாகவே கேட்க முடியும்.. வெளியில் நடந்த அத்தனை வாக்கு வாதங்களும் அவருக்கு தெல்ல தெளிவாக கேட்டது... அதை கேட்டதும் இந்த காதும் இயங்காமல் இருந்திருக்கலாம் என்று இருந்தது..

தொழிலில் இன்னும் LKG கூட தாண்டாத நிலையில் ஆதித்யா எப்படி இவ்வளவு பொறுப்பையும் தாங்க முடியும்?? .. தங்கள் பையனை இப்படி கஷ்டப்பட விட்டு விட்டோமே..

இப்படி ஆகும்னு தெரிந்திருந்தால் முன்னாடியே அவனை இதில் பழக்கி இருக்கலாம்.. இப்ப எப்படி அவன் இதை எல்லாம் சமாளித்து வர போறானோ?? இந்த பொண்ணு வேற இப்படி பண்ணிகிட்டு போகுதே... இதை எல்லாம் எப்படி தாங்க போறான்.. எனக்கு ஏன் இப்படி ஆகனும்” என்று மனதிற்குள் புலம்பினர்ர்.

வெளியில் சென்ற ஆதித்யாவோ அவன் கார் சென்ற போக்கில் சுற்றினான்.. கடைசியில் அது ஒரு மதுகடையில் நின்றது.. நேராக உள்ளே சென்றவன் ஒரு பாட்டிலை முழுவதுமாக காலி செய்தான்.. அந்த மது வேளை செய்யவும் காற்றில் மிதப்பதை போல இருந்தது அவனுக்கு.. அவனை சுற்றிய எல்லா பிரச்சனைகளும் விலகி மனதில் அமைதி நிலவியது..

“ஓ.. இதனால் தான் எல்லாரும் இதை நாடி வர்ராங்களா.. இது மட்டும் இருந்தால் போதும் எந்த கவலையும் இருக்காது... “ என்று தவறாக புரிந்து கொண்டான்

இந்த குடியினால் அப்போதைக்கு பிரச்சனைகள் மறந்து சுகமாக இருக்கும். ஆனால் போதை தெளிந்ததும் அந்த பிரச்சனைகள் அப்படியே தான் இருக்கும் என்பதை மறந்துவிட்டான்..

அன்று நீண்ட நேரம் கழித்தே வீட்டிற்கு திரும்பி வந்தான்..

மறுநாள் அலுவலகம் கிளம்பி செல்ல பிடிக்கவில்லை ஆதித்யாவிற்கு... அங்கு சென்று தன்னால் என்ன செய்ய முடியும். தான் ஒரு கையால் ஆகாதவன்.. எல்லா தொழிலுமே மூழ்கி கிட்டிருக்க கப்பலை போல இருக்கு. இதில் நான் போய் என்னத்தை செய்ய என்று மனம் அயர்ந்தது....

ஆனாலும் மேனேஜர் போன் பண்ணி அவன் சில கையெழுத்து போட வேண்டும் என்று அவனை அழைத்து இருந்தார்... வேண்டா வெறுப்பாக கிளம்பி சென்றான்.. அவர் சொன்ன இடத்தில் எல்லாம் கையெழுத்து இட்டவன் மீண்டும் அந்த ஷ்வேதாவின் வார்த்தைகள் நினைவு வரவும் மீண்டும் மனம் அந்த மதுவை நாடியது... உடனே கிளம்பி சென்று விட்டான் அந்த மதுகடையை நோக்கி...

இரவு வரைக்குமே அந்த மதுவின் மயக்கத்திலயே இருந்தான்..

வீட்டிற்கு எப்படி வந்தான் என்றே தெரியவில்லை..

மறுநாள் மேனேஜர் மிண்டும் அவன் மொபைலுக்கு அழைத்து இருந்தார்... ஆனால் அவனோ அதை எடுக்கும் நிலையில் இல்லை...மூன்று முறை அழைத்த பிறகும் அவன் எடுக்காததால் ஜானகிக்கு அழைத்து இருந்தார்...

ஜானகியும் மொபைலை எடுக்கவும் மேனேஜர் ராம்குமாரின் நலம் விசாரித்து விட்டு

“வணக்கம் மேடம்.. ஆதித்யா சார் இன்னும் ஆபிஸ்க்கு வரலை.. அவர் சில பைல சைன் பண்ணனும்.. அவர் வீட்டில் இருந்தால் கொஞ்சம் வரசொல்றீங்களா?? கொஞ்சம் அவசரம்.. அதுதான் உங்களுக்கு போன் பண்ண வேண்டியதா போச்சு..

அதோடு சார் கொஞ்சம் சரியில்லை மேடம்.. குடி பழக்கம் இருக்கிற மாதிரி இருக்கு.. நீங்க கொஞ்சம் பார்த்து சொல்லுங்க.. பெரிய அய்யா இப்படி இருக்கிற நிலைமையில் இவராவது ஒலுங்கா இருந்தால் தான் கொஞ்மாவது கம்பெனியை மீட்க முடியும்” என்று தன் மனவருத்தத்தை கூறினார்..

“சரி வர சொல்றேன் மேனேஜர்” என்று போனை வைத்தவர் அப்பொழுது தான் கவனித்தார் ராம்குமாரின் கை கால்கள் இழுத்துக்கொல்வதை..

போனை எடுத்த அவசரத்தில் ஜானகி அந்த ஸ்பீக்கர் பட்டனை தட்டி இருந்தார். அதனால் மேனேஜர் பேசிய அத்தனையும் ராம்குமாரின் காதில் தவறாமல் விழுந்தது.. ஏறகனவே மனதில் புலுங்கி கொண்டிருந்தவர் இப்பொழுது தன் பையன் குடி பழக்கத்திற்கும் ஆழாகி விட்டான் என்று தெரிந்ததும் ரொம்பவே நொறுங்கி விட்டார்..

இதற்கெல்லாம் தான் தான் காரணம் என்று நினைக்கவே அவருக்கு நெஞ்சை அடைத்தது...கை கால்கள இழுக்க ஆரம்பித்தன...

அதை கண்ட ஜானகிக்கு திக்கென்றது... இப்ப என்ன செய்யறது என்று அவரையே பார்த்தார்.. ராம்குமாரின் கண்கள் எதையொ சொல்ல துடித்தது.. ஆனால் என்ன என்று தான் ஜானகிக்கு புரிந்து கொள்ள முடிய வில்லை..

“ஐயோ!! இப்படி இழுத்து கொள்கிறாரே.. நான் என்ன செய்வேன்” என்று பதறியபடியே

“ஆதி “ என்று அலறினார் ஜானகி...

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!