தவமின்றி கிடைத்த வரமே-16



அத்தியாயம்-16

ன் வேலையை முடித்து கீழ இறங்கியவள் லிப்ட்ல் இருந்து வெளி வந்து வரவேற்பறையில் நுழைய, அப்பொழுது தன் அலைபேசியில் வந்த செய்தியை கேட்டதும் அப்பா என்று அலறியவாறு தன் கையில் இருந்த அலைபேசியை நழுவ விட்டாள் பனிமலர்.....

இவளின் சத்தத்தை கேட்டு வரவேற்பறையில் அமர்ந்திருந்த கயல் ஓடி வந்து அவளை தாங்கி கொண்டு என்னவென்று கேட்க மலரோ வார்த்தை வராமல் தடுமாறினாள்....

கயல் உடனே கீழ கார்பெட் மீது விழுந்திருந்த மலரின் அலைபேசியை எடுத்து காதில் வைத்து மீண்டும் விவரம் கேட்க, பனிமலரின் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருப்பதாக சொல்லி உடனே அவரை அனுமதித்திருந்த மருத்துவமனையை சொல்லி அவசரமாக வரசொன்னார் மறுமுனையில் இருந்தவர்...

அதை கேட்டு கயலும் அதிர்ந்து போனாள்... ஆனாலும் தன்னை சமாளித்து கொண்டு தன் தோழியை கை தாங்களாக அனைத்தவாறு அவளை அழைத்து கொண்டு வெளியில் வர, அங்கு பாஸ்கர் புக் பண்ணியிருந்த கேப் தயாராக இருந்தது....

அதில் பனிமலரை அமர வைத்தவள் தானும் அவள் உடன் அமர்ந்ததும் நேராக அந்த மருத்துவமனையின் பெயரை சொல்லி வேகமாக அங்கு போக சொன்னாள் கயல்...

மலரோ அதிர்ச்சியில் இருந்து இன்னும் வெளிவராமல் வெளிறிய முகத்துடன் இருக்க, கயல்தான் அவளுக்கு ஆறுதல் சொல்லியபடியே வந்தாள்...

அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டு அவள் அப்பாவுக்கு ஒன்னும் ஆயிருக்காது என்று அவளுக்கு அறுதல் சொல்லியபடியே உள்ளுக்குள் சிறு உதறலுடன் அமர்ந்து இருந்தாள் கயல்...

அந்த மருத்துவமனையை அடைந்ததும் காரில் இருந்து இறங்கி வேகமாக வெளி வந்து மலர் அப்பா அட்மிட் ஆகி இருந்த அந்த தளத்திற்கு விரைந்தனர் இருவரும்...

அந்த தளத்தை அடைந்ததும் நேராக ஆப்ரேஸன் தியேட்டர் க்கு விரைந்து செல்ல, அங்கு வெளியில் ஜோதி நின்று அழுது கொண்டிருந்தார்... அவள் தந்தையின் நண்பர் சோமுவும் பதற்றத்துடன் நின்று கொண்டிருந்தார்....

அதற்குள் தன்னை ஓரளவுக்கு சமாளித்து கொண்ட மலர் வேகமாக அவரிடம் சென்றவள்,

“அப்பாக்கு என்னாச்சு அங்கிள் ??.. இப்ப எப்படி இருக்கார்?? “ என்றாள் பதற்றத்துடன்....

உடனே அவளை கண்டதும் நிம்மதி அடைந்தவர்

“வந்திட்டியா மலர்... உன்னைத்தான் பார்த்துகிட்டிருந்தேன்...” என்று நிம்மதி மூச்சு விட்டவர் அவள் கேட்டதற்கு பதில் சொல்லும் விதமாக

“என்னாச்சுனு தெரியல மா... திடீர்னு நெஞ்சு வலிக்குதுனு சொன்னான்.... நான் டாக்சி புடிச்சு இங்க வர்றதுக்குள்ள நெஞ்சை புடிச்சிகிட்டு சாஞ்சிட்டான்... உள்ள ட்ரீட்மென்ட்க்காக கொண்டு போயிருக்காங்க... “ என்றவர்

குரலை தாழ்த்தி கொண்டு அருகில் இருந்த ஜோதிக்கு கேட்காமல் மெதுவாக பனிமலர்க்கு மட்டும் கேட்குமாறு சொன்னார்...

“கொஞ்சம் கிரிட்டிகலா சிக்கலா இருக்கிற மாதிரி இருக்கு மலர்.. அதனால பெரிய டாக்டர் யாரையோ கூப்பிட்டிருக்காங்களாம்... பர்ஸ்ட் எய்ட் பண்ணி இப்ப பெரிய டாக்டருக்காக வெய்ட் பண்ணிகிட்டிருக்காங்க..

அவர் வந்து பார்த்துட்டுதான் அடுத்து என்ன செய்யறதுனு சொல்வாராம்.. இப்பதான் உள்ள இருக்கிற டாக்டர் வந்து விவரம் சொல்லிட்டு போயிருக்கார்.. “ என்றார் வேதனையுடன்....

அதற்குள் ஜோதி அவள் அருகில் வந்து மலரை கட்டி கொண்டு அழுதார்...

“எப்படியாவது உன் அப்பாவை காப்பாத்திட சொல் மலர்... நமக்கு அவரை விட்டால் யாரும் இல்லை.... எனக்கு என் புருசன் வேணும்... “ என்று சிறு பிள்ளையாக அழ ஆரம்பித்தார் ஜோதி...

மலர் அவருக்கு ஆறுதல் சொல்லி, அவரை கொஞ்சம் தேற்றி அருகில் இருந்த பென்சில் அமர வைத்தாள்... அவளுக்கும் கண்ணை கரித்து கொண்டு வந்தது....

தன் அன்னை முன்னால் அழுதால் அவரும் உடைந்து விடுவார் என உணர்ந்து தன் வேதனையை உள்ளுக்குள் வைத்து அழுத்தி கொண்டு உதட்டை கடித்து தன் கண்ணீரை கட்டு படுத்தி கொண்டிருந்தாள்.....

அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவளுக்கு எதுவும் தோண்றாமல் போக, அந்த ஈசனிடம் மனதார மண்டியிட்டாள்....

“ஈஸ்வரா...என் அப்பாக்கு எதுவும் ஆகிட கூடாது... சீக்கிரம் ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சு அவரை எப்படியாவது காப்பாற்றி கொடுத்திடு....”

என்று அந்த ஈசனிடம் மன்றாடி கொண்டிருக்க, அதே நேரம் அந்த அறைக்கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே வந்தான் அந்த நெடியவன்...

அவனை கண்டதும் பனிமலருக்கு அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் வேதனை, வலி எல்லாம் கரை புரண்டு வர, தன்னையும் மறந்து

“வசி............ “ என்று அழைத்தவாறு பாய்ந்து சென்று அவனை இறுக்கி கட்டி கொண்டு அவன் மார்பில் தஞ்சம் புகுந்து கொண்டாள் மலர்....

அதை கண்டு ஒரு நொடி திகைத்து போனான் வசீகரன்...

அடுத்த நொடி அங்கு அழுது கொண்டிருக்கும் ஜோதியை காணவும் அவரை மலரின் வாட்ஸ்அப் புகைபடத்தில் பார்த்த ஞாபகம் இருப்பதால் அவர் யாரென்று புரிந்து கொண்டான்...

அதோடு அவர் அழுவதை வைத்து உள்ளே இருப்பது யாரென்று புரிந்து விட, தன்னை இறுக்கி அணைத்திருப்பவளின் முதுகை ஆதரவாக வருடியவாறு

“பனிமலர்... அப்பாக்கு ஒன்னும் ஆகாது... அதான் நான் வந்திட்டேன் இல்லை,,, அவருக்கு எதுவும் ஆகாது.. அப்படி ஆக விடமாட்டேன்.. நீ கலங்காத... தைர்யமா இரு... உனக்காக நான் இருக்கேன்... “ என்று மெல்ல தட்டி கொடுத்தான்...

அதை கேட்டு இன்னும் அவன் மார்பில் ஒன்றி குலுங்கினாள்....அதை கண்டவன் மனமும் வேதனை அடைந்தது... ஆனாலும் தன் கடமையை எண்ணி தன்னை கட்டுபடுத்தி கொண்டவன்,

“ப்ளீஸ் பனிமலர்.... அழாத.... நீதான் உன் அம்மாக்கு தைர்யம் சொல்லணும்.. நீயே இப்படி அழுதால் என்ன அர்த்தம்?? அதோடு என் மேல் என் ட்ரீட்மென்ட் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா?? உன் அப்பாவை காப்பாத்திடுவேன் என்ற நம்பிக்கை இல்லைனா நீ அழு... “ என்று அதட்டினான் அவளை....

பின் வேகமாக அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்ணீரை துடைத்து விட்டான்....

அதற்குள் மலரும் ஓரளவுக்கு தன்னை கட்டுபடுத்தி கொண்டு அதன் பின்தான் அவள் இன்னும் அவனை கட்டி பிடித்து கொண்டு நிற்பது புரிய, வேகமாக அவனை விட்டு விலகி தள்ளி நின்று கொண்டாள்...

வசியும் அதற்குள் சமாளித்து கொண்டு,

“ஓகே பனிமலர்... நான் உள்ளே போறேன்...டோன்ட் வொர்ரி... டேக் கேர் ஆன்ட்டி... “என்றவாறு வேகமாக அருகில் இருந்த அறைக்குள் சென்று தன் உடையை மாற்றி சர்ஜரி செய்வதற்கான உடைக்கு மாறி அந்த ஆபரேசன் தியேட்டருக்குள் வேகமாக நுழைந்தான் வசி....

அவன் உள்ளே சென்ற சில நிமிடங்களில் சர்ஜரி ஆரம்பித்ததற்கான அடையாளமாக, அந்த ஆப்ரேஸன் தியேட்டரின் வாயிலில் இருந்த விளக்கு எரிய, வெளியில் இருந்தவர்கள் அதையே பயத்துடன் பார்த்து கொண்டிருந்தனர்....

சிறிது நேரம் அமைதியாக அந்த அறை விளக்கையே பார்த்து கொண்டிருந்தவள் மனதுக்குள் அந்த ஈசனை தொடர்ந்து வேண்டி கொண்டிருந்தாள்... வசி சொன்னது அவளுக்கு திரும்பவும் நினைவு வர, அவன் மேல் நம்பிக்கை இருப்பதால் அதற்கு பிறகு அவள் கலங்கவில்லை....

எப்படியும் அவன் தன் தந்தையை காப்பாற்றி விடுவான் என்று தன்னை தேற்றி கொண்டவள் சோமு அருகில் வந்தாள்...பின் அவரை பார்த்து

“அங்கிள் .. என்னாச்சு அப்பாவுக்கு?? காலையில நல்லாதானே இருந்தார்... ஏன் இப்படி திடீர்னு..?? “ என்றாள் குழப்பமாக தழுதழுத்தவாறு ...

அவரோ ஜோதியை ஜாடை காண்பித்து, வெளியில் செல்ல, மலர் ம் கயல் இடம் தன் அன்னை அருகில் இருக்குமாறு சொல்லிவிட்டு சோமுவின் பின்னால் சென்றாள்...

சிறிது தூரம் சென்றதும் ஒரு காரிடரில் போட்டிருந்த பென்சில் அமர்ந்தனர் இருவரும்...

பின் மலரை பார்த்து

“மலர்.. நான் சொல்லப் போகிற விசயம் உனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.... ஆனால் நீ எல்லாத்தையும் ஸ்போர்ட்டிவ் ஆ எடுத்துக்கணும்... உன் அப்பாவுக்கு அடுத்து நீதான் அந்த குடும்பத்தை பார்த்துக்கிறவ....

அதனால உன்கிட்ட நான் எதையும் மறைக்க விரும்பலை.... அங்கு ஜோதி முன்னாடி இத சொல்ல முடியாதுனு தான் நான் முன்பே உன்கிட்ட சொல்லலை... ஆனால் நீயும் தெரிஞ்சுக்கணும்னு தான் இப்ப உன்கிட்ட சொல்றேன்... “ என்று அவளை கொஞ்சம் தயார் பண்ணி பின் நடந்ததை சொன்னார்...

காலையில் பந்தக்கால் நடும் விழா முடிந்ததும் சிவசங்கர் தன் நண்பன் சோமுவை அழைத்து கொண்டு கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லி திருமண மண்டபத்திற்கு சென்றார்....

அங்கு அலங்காரம் எல்லாம் சரியாக இருக்கிறதா ?? என்று பரிசோதித்தவர் சோமுவிடம் பேசி கொண்டே மற்ற ஏற்பாடு எல்லாம் சரியாக இருக்கிறதா என பார்வை இட்டார்....

அப்பொழுது அவர் அலைபேசி ஒலிக்க அதை எடுத்து ஆன் பண்ணி கேட்டவர் முகம் உடனே கலவரமானது....

“திடீர்னு இப்படி கேட்டால் நான் என்ன செய்யறது சம்பந்தி ?? கொஞ்சம் டைம் கொடுங்க... எப்படியாவது அரேஞ் பண்ணிடறேன்... இல்ல.... கல்யாணத்தை நிறுத்த வேண்டாம்.. நான் என் தலையை அடகு வச்சாவது ஏற்பாடு பண்ணிடறேன்.....

என்னது ஒரு மணி நேரமா?? அதுக்குள்ள எப்படி?? “ என்று அவர் இழுக்கும் பொழுதே அந்த அழைப்பு நின்று போனது....

போனை இன்னும் காதில் வைத்து கொண்டே எங்கயோ வெறித்த பார்வை பார்த்தார் சங்கர்....அவரையே பார்த்து கொண்டிருந்த சோமு,

“என்னாச்சு சிவா?? “ என்று அவர் தோளை தட்டினார்...

அதில் விழித்து கொண்டவர்

“சம்பந்தி அம்மா போன் பண்ணினாங்க சோமு.. இப்ப திடீர்னு இன்னும் 10 பவுன் வரதட்சணை சேர்த்து கேட்கறாங்க.. அதுவும் இப்பயே எல்லா நகைகளையும் அவர் கண்ணுல காமிக்கனுமாம்.. .தாலி கட்டறதுக்கு முன்னாடியே அதையெல்லாம் அவர் கையில் கொடுத்துடணுமாம்.....

நிறைய பேர் நகை போடறேனு சொல்லிட்டு கடைசியில் கையை விரிச்சுடறாங்க.. அதனால் இந்த முறை அப்படி நடக்க விடமாட்டேன் ... “ னு பிடிவாதமாக சொல்லிட்டாங்க டா.... “ என்றார் கவலையுடன்...

அதை கேட்டு அதிர்ந்து போனார் சோமு...

“என்னடா சிவா சொல்ற?? .. அப்படீனா இந்த மாப்பிள்ளைக்கு ஏற்கனவே கல்யாணம் நிச்சயம் ஆகி நின்னு போயிருக்கா ?? “ என்றார் அதிர்ச்சியாக சோமு....

அதை கேட்டு தலையை கவிழ்ந்தவர்

“ஆமாம் சோமு... எனக்கு எல்லாம் தெரியும்...ஆனால் இந்த ஜாதகத்தை விட்டால் எனக்கு வேற வழி இல்லை... நீயும் பார்த்த இல்லை.. கடைசி 2 வருசமா எத்தனை வரன் பார்த்தாச்சு....

ஆனால் எதுவுமே என் பொண்ணுக்கு கூடி வரலை.... இப்பயே 25 முடிய போகுது... அப்புறம் 26 லயும் பண்ண முடியாது... இதை விட்டா 27 வயசுலதான் கல்யாணம் பண்ண முடியும்.. அப்பவும் இதே பிரச்சனைதான் வரும்...

அதனால தான் மாப்பிள்ளை வீடு கேட்ட வரதட்சணையை கொடுக்கறதா ஒத்துகிட்டேன்.... முன்னால் அவங்க கேட்டதே அதிகம்தான்.. ஆனாலும் வெளில புரட்டிடலாம் னு நம்பிக்கையா இருந்தேன்..

அதுவே இன்னும் கொஞ்சம் பணம் கைக்கு வர வேண்டி இருக்கு.. இப்ப திடீர்னு இன்னும் 10 பவுன் சேத்தி கேட்டா நான் என்ன செய்வது ?? “ என்று வேதனையுடன் சொன்னார் சங்கர்....

அதை கேட்டு தன் நண்பனை கடிந்து கொண்டார் சோமு...

“இந்த காலத்துல போய் ஜாதகம் ஜோசியம்னு பார்த்துட்டு இப்படி வரதட்சணையும் கொடுக்க ஒத்துகிட்டிருக்கியே.. உன்னை எல்லாம் என்ன செய்யறதுனே தெரியலை டா....

நம்ம பொண்ணுக்கு நாம பார்த்து போடறது எப்படி இருக்கு... அதை விட்டு நீ இவ்வளவு போடுனு அவங்க அதட்டி கேட்பது எப்படி இருக்கு?? நீயும் அதுக்கு தலைய ஆட்டிகிட்டு இருக்க...

நீயெல்லாம் ஒரு வாத்தியார் னு வெளில சொல்லிடாத... “ என்று திட்டியவர் மனம் கேட்காமல்

“சரி... இரு... நான் வேணா அந்தம்மா கிட்ட பேசி பார்க்கறேன்.. “என்றவர் சிவசங்கரின் அலைபேசியை எடுத்து மீண்டும் முன்பு வந்த எண்ணிற்கு அழைத்தார்....

அழைப்பை ஏற்றதும்,

“என்ன சிவசங்கரன்... 10 பவுன் ரெடி பண்ணிட்டீங்களா?? “ என்றார் மறுமுனையில் இருந்த அந்த பெண்மணி அதிகாரமாக...

சம்பந்தி என்று கூட மரியாதை கொடுத்து அழைக்காமல் அதிகாரமாக பேசும் அந்த பெண்மணியின் தோரணையே சோமுவிற்கு பிடிக்கவில்லை...

ஆனாலும் தன்னை சமாளித்து கொண்டு

“நான் சிவா உடைய பிரண்ட் பேசறேன் சம்பந்தி.... வந்து..... “ என்று அவர் இழுக்க


“முதல்ல சம்பந்தி னு கூப்பிடறதை நிறுத்துங்க.. நீங்க யார் என்னை சம்பந்தி னு கூப்பிட...” என்று சிடுசிடுத்தார் மறுமுனையில் இருந்தவர்....

அதை கேட்டு இன்னும் அதிர்ந்த சோமு தன் அதிர்ச்சியை மறைத்து கொண்டு

“சரிங்க மேடம்...சிவா வால அவ்வளவு பணத்தை உடனே ஏற்பாடு பண்ண முடியாது.. ஒரு ஒரு வாரம் டைம் கொடுங்க ..இது ஒரு பொண்ணோட வாழ்க்கை.. இந்த கல்யாணத்தை நிறுத்திடாதிங்க... “ என்று அவர் முடிக்கு முன்னே

“யோவ்... நீ யார் நடுவுல ??... நான் தெளிவா சிவசங்கரன் கிட்ட சொல்லிட்டேன்.. 10 பவுன் அடுத்த ஒரு மணி நேரத்துல என் கண் முன்னாடி காமிச்சா இந்த கல்யாணம் நடக்கும்..

இல்லைனா எனக்கு வேற ஒரு பொண்ணு ரெடியா இருக்கு... இதே 10 பவுன் கூடுதலா போட்டு மாப்பிள்ளைக்கு கார் ம் வாங்கி தர்ரதா சொல்றாங்க.....

அதே முகூர்த்தத்துல என் பையனுக்கு நான் ஜாம் ஜாம் னு கல்யாணம் பண்ணுவேன்..

சரி போனா போகுது.. பொண்ணை ரொம்ப நாளா வீட்ல வச்சிருக்காரே.. நாம ஒரு வாழ்க்கை கொடுப்போம்னு நினைச்சா, ஒரு 10 பவுன் எக்ஷ்ட்ர போட சொல்லி கேட்டா இந்த முழி முழிக்கிறார்...

என் பையன் ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா?? அவன் சம்பாதிக்கிறதுக்கு இந்த 10 பவுன் எல்லாம் கால் தூசிக்கு வராது... ஆனாலும் சபையில எனக்கு ஒரு பெருமையா இருக்கும்னு கூட சேத்தி போட சொன்னா அதுக்கே முழிக்கிறார்..

நாளைக்கு தீபாவளி, பொங்கல், தலை ஆடி னு எத்தனை சீர் செய்யவேண்டி இருக்கு.. அப்ப அதுக்கெல்லாம் எப்படி செய்வாராம் உங்க பிரண்ட்..........

சரியான கஞ்ச பயன் வீடா இருக்கும் போல...

இல்ல... இது சரி வராது.. இந்த கல்யாணத்தை இதோட நிறுத்திடலாம்.... இதுக்கும் மேல பேசவேண்டாம்...” என்று நிறுத்தியவர் சில விநாடிகள் அமைதியாக இருந்தார்.....

“வேணும்னா இன்னும் ஒரு மணி நேரம் டைம் கொடுக்கறேன்... அதுக்குள்ள எப்படியாவது 10 பவுன் ஏற்பாடு பண்ண முடியுமானு சொல்லுங்க..இல்லைனா இப்பயே எல்லாத்தையும் நிறுத்திடறேன்.... “ என்று படபடவென்று பொரிந்தார்...

அதைக் கேட்டு அதுவரை இழுத்து பிடித்த பொருமை காற்றில் பறக்க,

“என்னமா நீயெல்லாம் ஒரு பொம்பளையா?? இப்படி பணத்துக்காக பேயா அலையற... இந்த காலத்துல வரதட்சணை வாங்கறது குற்றம் தெரியுமா ??.. போலீஸ் ல ஒரு கம்லெய்ன்ட் கொடுத்தா போதும்.. குடும்பத்தோட நீங்க கம்பி எண்ணனும்....

போனா போகுது னு நீ கேட்டதை கொடுக்கலாம் னு ஒரு வாரம் டைம் கேட்டா அதுக்கு கல்யாணத்தையே நிறுத்தறேன் னு சொல்றிங்க....

இப்படி பட்ட இடத்துல் போய் எங்க பொண்ணு ஒன்னும் வாழவேண்டாம்....

நீங்க என்ன நிறுத்தறது?? .. நாங்களே சொல்றோம்..

எங்களுக்கு இந்த பணத்தாசை பிடிச்ச குடும்பமும் வேண்டாம்.. உங்களுக்கு அடங்கி இருக்கிற அந்த உத்தம புத்திர கூஜா மாப்பிள்ளையும் எங்களுக்கு வேண்டாம்.. இதோட எல்லாம் நிறுத்திடுங்க... “ என்று கத்தி போனை அணைத்தார் சோமு...

அவர் அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டு பேசி கொண்டிருக்க, சிவசங்கரும் இதை எல்லாம் கேட்டு கொண்டிருந்தார்....

அப்பொழுதுதான் சோமுவுக்கு உறைத்தது..

மலரை தன் மகளாக எண்ணி ஒரு தந்தை நிலையில் இருந்து இப்படி பட்ட வீட்டில் அவள் சந்தோசமாக வாழ மாட்டாள் என தோண்றவே அவசரபட்டு கல்யாணத்தை நிறுத்த சொல்லிவிட்டார்...ஆனால் இப்ப சிவா என்ன சொல்லுவானோ என்று அவசரமாக அவர் முகம் பார்த்து

“சாரி டா சிவா... ..நான் கொஞ்சம் அவசரபட்டு.... “ என்று சொல்லி முடிக்குமுன்னே தன் நெஞ்சை பிடித்து கொண்டு சாய்ந்தார் சிவசங்கர்.....

அதை கண்டு அதிர்ந்த சோமு நொடியில் வேகமாக முன்னே வந்து அவரை தாங்கி கொள்ள, சிவசங்கரின் உடல் வேர்க்க ஆரம்பித்து இருந்தது....

சோமுவுக்கு ஹார்ட் அட்டாக் பற்றிய விழிப்புணர்வு இருந்ததால் சிவாவின் நிலையை கண்டதும் அவருக்கு உடனே புரிந்து விட்டது....

அவசரமாக ஆம்புலன்ஸ் க்கு அழைத்து விட்டு அவர் பயின்றிருந்த முதல் உதவியை வேகமாக செய்தார்... அதற்குள் ஆம்புலன்ஸ் வந்துவிட, சிவசங்கரை அதில் ஏற்றி அருகில் இருந்த ஹார்ட் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலில் சேர்த்தார்...

இதுதான் நடந்தது மலர்...

திடீர்னு மாப்பிள்ளை வீட்டில் இருந்து இப்படி திரும்பிக்கவும் தான் உன் அப்பாவுக்கு தாங்க முடியலை.. அதுலதான் இப்படி ஆகிடுச்சு....” என்று பெருமூச்சு விட்டார் வேதனையுடன்.... பின் அவளை பார்த்து

“சாரி மா... நானும் கொஞ்சம் அவசரபட்டுட்டேன்.... இப்பவே இப்படி நடந்துக்கற வீட்ல போய் எப்படி மா பொண்ணை கொடுத்துட்டு நிம்மதியா இருக்க முடியும்??..

எனக்கும் உன் வயசுல ஒரு பொண்ணு இருக்கா... எனக்கு நீ வேற அவ வேற னு பிரிச்சு பார்க்க தெரியலை.. அதான் அந்த அம்மாகிட்ட அப்படி பேசிட்டேன்.. என்னை மன்னிச்சிடு மா......

ஒரு சிக்கலை தீர்க்கறேனு போய் இன்னும் அதை சிக்கலாக்கி உன் கல்யாணம் நிக்கிற மாதிரி ஆகிடுச்சு.. அதோட சிவாவுக்கும் இப்படி ஒரு நிலையை கொண்டு வந்திட்டேனே....எல்லாம் என்னாலதான்... “ என்றார் வேதனையும் வருத்தமாக...

அவரின் வருத்தத்தை கண்டு பதறியவள்,

“ஐயோ அங்கிள்.. உங்க மேல எந்த தப்பும் இல்லை.... நீங்க செஞ்சது தான் சரி அங்கிள்... இப்படி ஒரு பிரண்ட் கிடைத்தது எங்ப்பா க்கு கிடைத்த வரமாக்கும்... எங்கப்பா கொடுத்து வச்சிருக்கணும்...

எனக்கு அவங்க வரதட்சணை கேட்டதெல்லாம் தெரியாது அங்கிள்... இது மட்டும் தெரிஞ்சிருந்தால் உடனே நானே இந்த கல்யாணத்தை அப்பயே நிறுத்தி இருப்பேன்... அதனாலதான் அப்பா என்கிட்ட சொல்லாம மறச்சுட்டார் போல....

“சே... இந்த காலத்துல கூட இப்படி இருக்காங்களே!! ... எங்கப்பாக்கு மட்டும் ஏதாச்சும் ஆகட்டும் அந்த குடும்பத்தையே கம்பி எண்ண வைக்கறேன்..

ஆனா அப்பா.... அவர்க்கு எதுவும் ஆகிட கூடாது.. அவர் திரும்பி நல்ல படியா வரணும்... “ என்று கண் கலங்கினாள் பனிமலர்...

சோமு அவளை மெலல அணைத்து கொண்டு

“கவலை படாத மலர்.... இப்ப வந்திருக்கிற டாக்டர் ரொம்ப பெரிய ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் டாக்டராம்.. எப்படி பட்ட கிரிட்டிகலான பேசன்ட்ஸ் ஐயும் காப்பாத்திடுவாராம்..

அதனாலதான் இங்க இருக்கிற டாக்டருங்க இவங்களே ட்ரீட்மென்ட் பண்ணாம உடனே அவரை கூப்டிட்டாங்க.... “ என்றவர் மலர் அந்த டாக்டரை கண்டு ஓடி போய் கட்டி பிடித்தது நினைவு வர யோசனையாக மலரை பார்த்தார்...

அவர் பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்டவள்

“ஹ்ம்ம்ம் எனக்கும் டாக்டர் வசீகரனை தெரியும் அங்கிள்... என்னோட பிரண்ட் தான் அவர்.. ஒரு குழந்தையோ ஹார்ட் ஆப்ரேஸன் ஐ இலவசமா பண்ணி கொடுத்தார்..

அதில் இருந்து எனக்கு பழக்கம்.... நீங்க சொன்னதெல்லாம் உண்மை தான்..

அவர் வந்திருக்கிற சந்தோசத்துலதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு... எப்படியும் அப்பாவை காப்பாத்திடுவார்... “ என்றாள் நம்பிக்கையுடன்...

“ஹ்ம்ம்ம் எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு மா... அப்புறம் உன் கல்யாணம் நின்னு போனது உனக்கு கஷ்டமா இருக்கும்... இதை விட நல்ல மாப்பிள்ளை உனக்கு கண்டிப்பா கிடைப்பான் மா... நீ கவலை படாத... “ என்றார் ஆறுதலாக

“ஐயோ.. அதெல்லாம் ஒன்னுமில்லை அங்கிள்.. நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சதே எங்கப்பாவுக்காகத்தான்.... அவர் எனக்காக வருத்தபடறாரே என்றுதான்...

மத்தபடி இந்த கல்யாணம் நின்னு போனதுல எனக்கு சந்தோசம்தான்... “ என்று புன்னகைத்தாள் அந்த நிலையிலும்...

உண்மையிலயே தன் கல்யாணம் நின்றுவிட்டது என்று சோமு சொன்னதை கேட்டு அவள் மனதில் அப்படி ஒரு நிம்மதி பரவியது...அதுவரை அவள் மனதை அழுத்தி வந்த பாரம் விலகி அப்பா டா என்று நிம்மதி மூச்சு விட்ட மாதிரி இருந்தது...

ஆனாலுமே இன்னும் மனதுக்குள் ஏதோ ஒரு சிறு வலி, தேடல், ஏக்கம், எதிர்பார்ப்பு என்று அனைத்தும் கலந்த ஒரு கலவையான உணர்வு அவள் நெஞ்சை அழுத்தி வந்தது....ஆனால் அது என்ன?? ஏன் ?? என்று தான் புரியவில்லை...

அதை பற்றி ஆராய நேரம் இல்லாமல் அடுத்த நொடி அவள் தந்தையின் நிலை நினைவு வர,

“ஈஸ்வரா... அவரை எப்படியாவது காப்பாத்திடு... என் அப்பா எனக்கு வேண்டும்.. “ என்று மனதுக்குள் வேண்டி கொண்டாள்...

பின் இருவரும் ஆபரேசன் தியேட்டர் அருகில் வர, ஜோதி இன்னும் அழுது கொண்டே இருந்தார்...

கயல்தான் அவர் கையை பிடித்து கொண்டு அவருக்கு சமாதானம் சொல்லி கொண்டிருந்தாள்..

நேராக அவரிடம் சென்றவள்,

“மா.. முதல்ல இந்த ஒப்பாரி வைக்கிறதை நிறுத்து.. இப்ப என்ன ஆச்சுனு இப்படி அழுதுகிட்டு இருக்க??.. அப்பாக்கு ஒன்னும் ஆகாது...அவர் நல்ல படியா வீட்டுக்கு வருவார்.. அவரை எழுப்பி கூட்டி வர்றது என் பொறுப்பு...

முதல்ல அவருக்கு ஒன்னும் இல்லை னு நினை..... அந்த பாசிட்டிவ் வைப்ரேசன் தான் அப்பாவை காப்பாத்தும்.. இப்படி அழுது புலம்பி நெகட்டிவ் வைப்ரேசன் ஐ கூட்டாத...

முதல்ல கண்ணை துடை.. “ என்று தன் அன்னையை அதட்டியவள் அவரின் கண்ணை துடைத்து விட்டாள்...

பின் அவள் வாங்கி வந்திருந்த டீயை கொடுத்து அவரை பருக வைத்தாள்..

அவர் அருகில் அமர்ந்து கொண்டு அவர் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டு மனதுக்குள் தன் தந்தை நல்ல படியாக பிழைத்து வர வேண்டும்...

அதோடு டாக்டர் வசியின் ஆப்ரேஸன் ம் வெற்றி அடையணும்.. இதுவரை அவன் எதிலும் தோற்றதில்லை.... என் அப்பா கேசிலும் அவன் வெற்றிகரமாக இந்த ஆப்ரேசனை முடித்து வரவேண்டும்.... “ என்று இருவருக்குமாக சேர்த்து அந்த ஈசனிடம் மன்றாடி கொண்டிருந்தாள்...


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!