காதோடுதான் நான் பாடுவேன்-15



அத்தியாயம்-15

நிகிலன் ஒரு கட்டிடத்தின் உள்ளே நுழைய, அவன் பின்னே வந்தவள், உள்ளே கண்டதும் உள்ளம் துள்ளி குதிக்க, கண்களை அகல விரித்தாள் மதுவந்தினி....

அது ஒரு பேட்மின்டன் பயிற்சி மையம்...

உள்ளே நுழைந்ததும் சிறிய வரவேற்பறையும் வந்தவர்கள் அமர்ந்திருக்க ஒரு சில சோபாக்கள் மட்டுமே போடப்பட்டு இருந்தது.. மீதி இடமெல்லாம் பேட்மின்டன் கோர்ட்டுகளாக மாற்ற பட்டிருந்தன..

ஆண்களும் பெண்களுமாக சிறுவயது முதல் பெரியவர்கள் வரை பல பிரிவினர் உற்சாகமாக விளையாடி கொண்டிருந்தனர்....

அவர்களை பார்க்கும் பொழுது மதுவுக்கும் உள்ளுக்குள் ஆசையாக இருந்தது...

அவளுக்குமே இந்த மாதிரி விளையாட வேண்டும் போல இருந்தது....

ஆனால் எப்பவும் போல அவளின் பயம் வந்து ஒட்டிக் கொள்ள அங்கு இருப்பர்கள் எல்லாம் அவளையே பார்ப்பதை போல இருக்க, அருகில் நின்று கொண்டிருந்த தன் கணவன் அருகில் இன்னும் கொஞ்சம் நெருங்கி நின்று கொண்டாள்...

அப்பொழுது தான் நினைவு வந்தது..

“எதற்காக என்னை இங்க வரச் சொன்னான்?? ஒரு வேளை அகிலா இங்க இருக்காளோ?? அவளை கூட்டி போகத்தான் வந்திருக்கானா?? அப்ப என்னை எதுக்கு வரச் சொன்னான்?? “ என்று யோசித்து கொண்டிருந்தாள்..

ஆனால் அவள் கண்கள் மீண்டும் தானாக அருகில் இருந்த கோர்ட் டையும் அதில் விளையாடுபவர்களையும் ஆசையாக நாடி சென்றன...

தன் கண்களை சுழல விட்டவள் அருகில் இருந்த மற்றொரு கோர்ட்டில் இருந்து யாரோ தன்னை பார்த்து கை அசைப்பதை போல இருக்க, உற்று பார்த்தாள்...

அகிலாதான் அங்கு பிராக்டிஸ் பண்ணி கொண்டிருந்தாள்... தன் அண்ணியை அங்கு கண்டதும் ஆச்சர்யத்தில் கை அசைத்து

“நீங்க எங்க இங்க?? “ என்று கண்ணால் ஜாடை காட்டி கேட்டாள்..

மதுவும் அதை புரிந்து கொண்டு

“எனக்கு தெரியாது...” என்று உதட்டை பிதுக்கியவள்

“ இவர்தான்...” என்று பக்கத்தில் இருந்தவனை கையால் சுட்டி காட்டி ஜாடை காட்ட, அப்பொழுது தான் அருகில் நின்று கொண்டிருந்த தன் அண்ணனை கண்டாள் அகிலா...

அவளுக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை... தன் அண்ணன் இப்படி அண்ணியிடம் ஜோடியாக நிக்கறானே.. என்று..

அவர்களின் ஜோடி பொருத்தத்தை ரசித்தவள் மனம் இங்கு ஓடி வர துடித்தது...

ஆனால் பாதி விளையாட்டில் விட்டு விட்டு வந்தால் அது அந்த விளையாட்டை அவமதிப்பதாக ஆகும் என்று விளையாட்டு ரூல்ஸ் ஐ பற்றி தன் அண்ணனிடம் ஒரு குட்டி லெக்சர் கேட்க வேண்டி இருக்குமே.. என்று அஞ்சி அங்கயே நின்று கொண்டிருந்தாள்..

ஆனால் அவள் கவனம் எல்லாம் இங்கயே இருந்தது...

நிகிலன் தன் அலைபேசி யில் வந்திருந்த அழைப்பை பேசி முடித்து தன் அலைபேசியை வைக்க, அதே நேரம் நிகிலன் வயதை ஒத்த ஒருவன் நிகிலனை பார்த்து சிரித்து கொண்டே அவன் அருகில் வந்தான்...

“வாடா.. புது மாப்பிள்ளை... எப்படி இருக்க?? மேரேஜ் லைப் எப்படி போய்கிட்டிருக்கு?? “ என்று அவனை கட்டி கொண்டான்..

“ஹ்ம்ம்ம் ஐம் பைன் டா.. நீ எப்படி இருக்க?? “ என்று நலம் விசாரித்தான் நிகிலன்...

பின் அந்த இளைஞன் மதுவை பார்த்து

“ஹாய் சிஸ்டர்...ஐம் வசந்த்.. உங்க ஹஸ்பன்ட் ஓட பிரெண்ட்.. “என்று புன்னகைக்க, மதுவும் அவள் கைகளை கூப்பி வணக்கம் சொன்னாள் புன்னகைத்தவாறு..

அதை கண்டு வசந்த் க்கு ஆச்சர்யம் ஆனது..

இந்த காலத்துல கூட பொண்ணுங்க கை கூப்பி வணக்கம் சொல்றாங்களே.. என்று..

“அப்புறம் சிஸ்டர்... எப்படியோ இந்த சாமியாரையும் சம்சாரியாக்கிட்டீங்க.. வாழ்த்துக்கள்.. “ என்று சிரிக்க, மதுவும் இலேசாக புன்னகைத்தாள்...

“ஓகே சிஸ்டர்.. அப்ப இன்னையிலயிருந்தே பிராக்டிஸ் ஸ்டார்ட் பண்ணிடலாம்... “ என்றான் வசந்த்..

அதை கேட்டு திடுக்கிட்ட மது என்ன பிராக்டிஸ்?? என்று புரியாத பார்வை பார்க்க, அவளின் பார்வையை கண்ட வசந்த்

“என்ன சிஸ்டர் அப்படி முழிக்கறீங்க?? என்ன உங்க ஹஸ்பன்ட் எதுவும் சொல்லலையா?? ஓ... சர்ப்ரைஸ் ஆ நிகில்?? “என்று குறும்பாக சிரிக்க,

“டேய்.. அதெல்லாம் ஒன்னும் இல்லடா... டைம் இல்ல சொல்ல... அவ நேரா வேற க்ளாஸ்ல இருந்து வர்ரா... சோ நீயே சொல்லு.. “ என்று புன்னகைத்தான் நிகிலன்..

“ஓகே சிஸ்டர்.. நீங்க சூப்பரா பேட்மின்டன் விளைடாடறீங்களாம்.. அதனால் இன்னும் கொஞ்சம் ட்ரெயினீங் கொடுத்தா நீங்க சேம்பியன் ஆகலாமாம்..

அதனால உங்கள சேம்பியன் ஆக்கனும்னு ஒரு முடிவோட உங்க புருஷன் உங்கள கொண்டு வந்து இங்க விட்டிருக்கான்... “ என்று சிரித்தான் வசந்த்....

“டேய்... எக்ஷ்ட்ரா பிட்டிங்க்ஷ் எதுவும் இல்லாம நேரா மேட்டர மட்டும் சொல்.. “ என்று முறைத்தான் நிகிலன்..அதை கண்ட வசந்த் சிரிச்சுகிட்டே

“எப்படி டா.?? . கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆகியும் இன்னும் அப்படியே இருக்க?? இன்னும் அதே கஞ்சி போட்ட சட்ட மாதிரி விரைச்சுகிட்டே இருக்க....

ம்ஹூம்.. சிஸ்டர் நீங்க சரியில்ல.. இன்னேரம் இவன உங்க கால் ல விழ வச்சிருக்க வேண்டாமா?? “ என்று சிரிக்க, மதுவோ பே என்று முழித்தாள்...

“நான் இந்த விருமாண்டிய கால் ல விழ வைக்கிறதா.. ஐயோ முருகா?? இது நடக்கறதா?? “ என்று மனதுக்குள் சொல்லி சிரித்து கொண்டாள் மது ...

அதற்குள் வேற ஒருவர் அங்கு என்குயரிக்காக வர, வசந்த் ஒரு நிமிடம் என்று சொல்லி அவர்களை கவனிக்க சென்றான்..

அதுக்குள் மது அவன் அருகில் இன்னும் நெருங்கி வந்து

“சார்... இதெல்லாம் எனக்கு வேண்டாமே.. எனக்கு நல்லா எல்லாம் விளையாட வராது சார்.. சும்மா பொழுது போக்கிற்காக விளையாடுவேன்.. “ என்று மெல்ல முனக, அவளை பார்த்து முறைத்தான் நிகிலன்..

“உன்கிட்ட யாரும் நீ சேரலாமா வேண்டாமானு ஒப்பீனியன் கேட்கல... உன்னால முடியும்.. இந்த மாதிரி வெளில வந்து கலந்துக்காம மூனு வேளையும் தின்னுட்டு தின்னுட்டு தூங்கி அப்புறம் டீவி சீரியல் பார்த்துட்டு எங்க வீட்டு சோபாவை தேய்க்க போறீயா?? “ என்றான் நக்கலாக

“ஐயோ.. அதெல்லாம் இல்ல சார்... நான் தான் கலெக்டர் ஆகி.... “ என்று அவள் இழுத்து முடிக்கு முன்னே

“அதெல்லாம் நீ ஆகறப்ப பார்த்துக்கலாம்... இப்ப இந்த க்ளாஸ் ஐ அட்டென்ட் பண்ணு... டெய்லியும் இரண்டு மணி நேரம் தான் பிராக்டிஸ்.. அப்புறம் போய் உன் மாமியார கட்டி பிடிச்சு செல்லம் கொஞ்சு..

இரண்டு மணி நேரம் தினம் செலவு பண்றதுல ஒன்னும் முழுகிடாது...உன்கிட்ட நல்ல திறமை இருக்கு... அத வெளில கொண்டு வா ... என்ன புரிஞ்சுதா?? “ என்று மீண்டும் அதட்டினான்....

“ஹ்ம்ம்ம்ம் புரிஞ்சுது சார்... “ என்று தலையை உருட்டியவள்

“அத கொஞ்சம் சிரிச்சுகிட்டே சொன்னாதான் என்னவாம்.. விருமாண்டி.. “ என்று திட்டி கொண்டிருந்தாள்..

சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த வசந்த் ஒரு கவரை கொண்டு வந்து மது கையில் கொடுத்தான்..

“இது நம்ம சென்டரோட யூனிபார்ம் சிஸ்டர்.. ட்ராக் சூட் அன்ட் டீ ஷர்ட்.. இத போட்டு கிட்டு வாங்க.. இன்னைக்கே பிராக்டிஸ் ஆரம்பிச்சுடலாம்.. “என்றான்..

அதை கேட்டு ஒரு அடி பின்னால் நகர்ந்தாள் மது ....

பின் வசந்த் ஐ பார்த்து

“அண்ணா... இதெல்லாம் வேண்டாமே.. நான் சுடிதார் போட்டு கிட்டே பிராக்டிஸ் பண்றேன்... எனக்கு இதெல்லாம் பழக்கமில்லை.. “ என்றாள் தயங்கியவாறு..

இப்பொழுது அந்த இரண்டு ஆண்களும் அவளை ஏலியனை பார்ப்பதை போல பார்த்தனர்..

இப்படி கூட ஒரு பொண்ணா என்று...

மது படித்த பெண்கள் கல்லூரியில் சுடிதார் மட்டுமே அனுமதி. இந்த மாதிரி மாடர்ன் ட்ரெஸ் ஜீன்ஸ் டாப்ஸ் எதுவும் அனுமதியில்லை...

மேலும் அவளுக்கே இந்த ட்ரெஸ்ஸில் விருப்பம் இல்லாததால் அது மாதிரி அணிந்ததில்லை.. எப்பொழுதும் சுடிதார் ம் வீட்டில் இருந்தால் பாவாடை சட்டையும் மட்டுமே அணிந்து கொள்வாள்...

அதனால் அவள் வசந்த் கொடுத்த ட்ரெஸ்ச்சை அணிய தயங்கி நிக்க, நிகிலன் அவள் காதருகில் குனிந்து

“ஏய்... இத்தன பேர் இங்க போடல?? உனக்கும் மட்டும் என்ன புதுசா கூச்சம்?? உன்னை ஒன்னும் யாரும் கடிச்சு சாப்பிட மாட்டாங்க.. சீக்கிரம் போட்டுகிட்டு வா... “என்று அதட்டினான்..

வசந்த் ஓ அகிலாவை பார்த்து

”ஹே .. அகிலா குட்டி.. இங்க வா.. “என்று கை காட்ட இதற்காகவே காத்து கொண்டிருந்த அகிலா வேகமாக அங்கே ஓடி வந்தாள்...

“அகி... உன் அண்ணியும் இனிமேல் இங்க தான் ப்ராக்டிஷ் பண்ண போறாங்க.. நீ போய் அவங்களுக்கு ட்ரெஸ் சேஞ்சிங் ரூம் காட்டு... அவங்களுக்கு ஹெல்ப் பண்ணு.... இன்னையில் இருந்து பிராக்டிஸ் பண்ணலாம்.. “என்று பொருமையாக விளக்கினான்...

“வாவ் சூப்பர் வசந்த் அண்ணா... நான் அப்பயே சொன்னேன் அண்ணாகிட்ட.. அண்ணி நல்லா விளையாடறாங்கனு... அதான் கூட்டி வந்திருக்கார்...” என்று சொல்ல மது அவளை முறைத்தாள்..

“ஓ இதுக்கெல்லம் இவ தான் கரணமா.. “ என்று...

“சரி வாங்க அண்ணி.. “ என்று அகிலா முன்னால் நடக்க .மது மீண்டும் தயங்கி நிகிலனை பாவமாக பார்த்தாள்...

“ஏய்... போ.. அதான் அகிலா இருக்கா இல்ல.. “ என்று சொல்லி முறைத்தான்...

அதை கேட்டு வேறு வழியில்லாமல அகிலாவுடன் நடந்தாள் மது..

அவளின் பயந்த முகத்தை கண்ட வசந்த்

“டேய்...மச்சான்.. நீ இவ்வளவு நாள் கல்யாணம் பண்ணாம சுத்தி கிட்டு இருந்ததுக்கு நல்ல பலன் தான் கிடைச்சிருக்கு போல...சிஸ்டர் உன் கண்ணை பார்த்தே இப்படி பயந்துக்கறாங்க..

சான்சே இல்ல மச்சான்.. புருசனுக்கு அடங்கின பொண்டாட்டி கிடைக்கிறது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் தெரியுமா??

சே... உனக்கு போய் அந்த அதிர்ஷ்டம் கிடச்சிருக்கே.. எனக்கும் தான் வந்து வாச்சிருக்கே.. நான் தான் வாய் பொத்தி நிக்க வேண்டியதா இருக்கு.. “என்று சிரித்தான்

அவனுக்கு பதில் சொல்லாமல் வசந்த் ஐ முறைத்தவன் பின் இருவரும் வசந்த் பயிற்சி மையத்தின் வளர்ச்சி பற்றி பேசிகொண்டே காலியாக இருந்த ஒரு கோர்ட் பக்கம் சென்றனர்...

மது அதற்குள் ட்ராக் சூட் ம் டீசர்ட் ம் போட்டு கொண்டு நெளிந்து கொண்டே வந்தாள் அகிலாவுடன் ஒட்டி நடந்த படி ...

அகிலா தான் அவளுக்கு சமாதானம் பண்ணி கொண்டு கூட்டி வந்தாள்...

இதுவரை சுடிதாரில் மட்டும் பார்த்திருந்தவளை இன்று மாற்று தோற்றத்தில் பார்க்க ,நிகிலன் கண்கள் விரிந்தன சில விநாடிகள்...

அதற்குள் தன் தலையை சிலுப்பி கொண்டவன் மீண்டும் அவளை பார்க்க, அந்த ட்ரெஸ்சில் இன்னும் சின்ன பெண்ணாக பள்ளி செல்லும் மாணவியை போல இருந்தாள் மது ...

நிகிலன் தன்னை பார்ப்பது தெரிந்ததும் தலையை குனிந்து கொண்டாள்...

“ஐயோ அண்ணி.. வெக்க படாதிங்க.. சும்மா தைர்யமா வாங்க என்னை மதிரி.. “ என்று அவள் காதை கடித்தாள் அகிலா...

அதற்குள் நிகிலன் முன்னால் வந்து அவர்களை அடைய,

“அகிலா.. இனிமேல் நீ போ... அவ கூட இனிமேல் நீ எதுக்கும் ஒன்னா வரக்கூடாது..” என்று அவளை துரத்தி விட்டான்.. பின் தரையை பார்த்தவாறு குனிந்து கொண்டிருந்தவளை பார்த்து,

“ஏய்.. எதுக்கு இப்படி நெளியற?? இங்க யாரும் உன்னை பார்க்க போறதில்ல.. எல்லாரும் அவங்கவங்க ஆடடத்துல பிசியா இருக்காங்க... அதனால நேரா நின்னு உன் கவனத்தை ஆட்டதுல மட்டும் செலுத்து..

நீ போட்டிருக்க ட்ரெஸ் ஐ பத்தியோ மத்தவங்க உன்னை எப்படி பார்ப்பாங்கனோ நினைக்காத...

உனக்கு இந்த ஆட்டதுல இன்ட்ரெஸ்ட் இருக்கறது தெரிந்துதான் இங்க கூட்டி வந்தேன்… என் மானத்தை வாங்கிடாத... பிடிக்கலைனா சொல்.. இப்பயே கிளம்பு.. “ என்று திட்டினான்...

அதை கேட்டு எவ்வளவு முயன்றும் கட்டுபடுத்த முடியாமல் அவள் கண்கள் கலங்கி கண்ணீர் துளிகள் இரண்டு அவள் கன்னத்தில் உருண்டோடி வந்தது.....

அதை கண்டவன் இன்னும் கடுப்பாகி

“ஏய்... எதுக்கு இப்ப அழுது சீன் போடற?? உன்னை என்ன கொடுமையா பண்றாங்க... போ... போய் ஒலுங்கா விளையாடு.. எதிர்ல நிக்கறவங்க பேட் ம் அவர்கள் அடிக்கிற பந்து ம் மட்டும்தான் உனக்கு தெரியணும்... “என்று இன்னும் சில அட்வைஸ்களை சிடுசிடுப்புடன் கூறி அவளை வசந்த் உடன் அனுப்பி வைத்தான்..

நிகிலன் ஏற்கனவே மதுவை பற்றி வசந்திடம் சொல்லியிருந்ததால் நேராகவே அவளுக்கு அவள் வயதை ஒத்த ஒரு பெண்ணுடன் ஆட வைத்தான்..

முதலில் புது இடம், புது மாதிரியான ட்ரெஸ் என்று தயங்கியவள் அந்த ராக்கெட்டை கையில் வாங்கியதும் முதல் இரண்டு பந்துகள் தவற விட்டு தடுமாறினாலும் பின் நிகிலன் சொன்னது நினைவு வர, அதன் பிறகு அவளுக்கு அந்த சுற்றுபுறம் மறந்து போனது..

யார் பார்க்கிறார்கள் என்றெல்லாம் அவள் கண்ணில் பதியவில்லை..

அந்த விளையாட்டின் மேல் இருந்த ஆர்வத்திலும், சொதப்பினாள் அந்த விருமாண்டியிடம் வாங்கி கட்ட வேண்டுமே என்று பயந்தும் நன்றாக ஆட ஆரம்பித்தாள்....

அவளுடன் ஆடிய பெண் சென்ற வருட ஸ்டேட் பிளேயர்.. அவளையே இரண்டு ஆட்டங்களில் வீழ்த்தினாள் மது..

வசந்த் க்கு ஆச்சரியம்.. முதலில் மது தயங்கி நெளிந்து கொண்டிருப்பதை கண்டு இவள் எங்க விளையாட போகிறாள் என்று எண்ணியவன் , மது சரளமாக ஆட ஆதிசயித்து பார்த்தான்..

பின் நிகிலனிடம் திரும்பி

“வாவ்.. சூப்பர் டா மச்சான்.. உன் வைப் இவ்வளவு நல்லா விளையாடறாங்க... நான் கூட என்னமோனு நினைச்சேன்..

சே… நீ கூட்டி வருகையிலயே நான் யோசிச்சிருக்கனும்....திறமை இல்லாமல் யாரையும் நீ ரெகமண்ட் பண்ண மாட்டனு...

ஆனாலும் நீ கிரேட் டா... கல்யாணம் ஆன உடனே பொண்டாட்டிய கூட்டிகிட்டு ஹனிமூன் னு சுத்தாம இப்படி அக்கறையா அவங்க திறமைய புரிஞ்சுகிட்டு அவங்களுக்கான பாதைய அமைச்சு தர்ரியே.. சூப்பர் டா...” என்று புகழ்ந்தான்...

“டேய்.. நீ என்ன புகழ்றியா?? இல்ல கலாய்க்கிறியா?? “என்று குறும்பாக சிரித்தவன்

“ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமை இருக்கும் டா... என்ன சில பேர் அதை புரிஞ்சுக்காம விட்டுடறாங்க... உன் பொண்டாட்டியையும் எப்பவும் குறையோட பார்க்காம அவங்க கிட்டயும் ஏதாவது திறமை இருக்கானு பார்...அப்படி இருந்தால் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணு... “ என்று சிரித்தான்...

“என்னது?? என் பொண்டாட்டி கிட்ட ஏதாவது திறமையா?? அப்படி இருந்தா அது எட்டாவது அதிசயமாதான் இருக்கும்...சரி ..

நீ சொன்னேங்கிறதுக்காக் அப்படி ஏதாவது இருக்கானு தேடி பார்க்கிறேன்...

ஆனா ஒன்னுடா.. புருசன் கிட்டயும் மாமியார் கிட்டயும் சண்டை போடற போட்டி வச்சா அதுல என் பொண்டாட்டிக்குதான் பர்ஷ்ட் ப்ரைஷ் ஆ இருக்கும்.. அதுல மட்டும் அவள அடிச்சுக்க ஆளே கிடையாது.... “ என்று சிரித்தான் வசந்த்... பின் சிறிது யோசித்தவன்

“ஆனால் உன் வைப் கொஞ்சம் வித்தியாசமாதான் இருக்காங்க மச்சான்... அதான் முன்னாடியே சொன்னேனே.. நீ கொடுத்து வச்சவன் னு

“அப்புறம் அவங்க திறமைக்கு இன்னும் கொஞ்சம் முன்னாடியே இந்த பீல்ட்க்கு வந்திருந்தா இன்னும் நிறைய சாதிச்சிருக்கலாம்.. “என்று புகழ்ந்தான் வசந்த்...

நிகிலனும் சிரிச்சுகிட்டே,

“அதான் இப்ப இங்க கூட்டி வந்தேன் டா .. நீ பார்த்துக்கோ.. சரி டா.. நான் அப்ப கிளம்பறேன்.. க்ளாஸ் முடிஞ்ச உடனே இரண்டு பேரும் சேர்ந்து போய்டுவாங்க...

அப்புறம் அகிலா வுக்கு இன்னும் கொஞ்சம் எக்ஷ்ட்ரா ப்ராக்டிஷ் கொடு.. இந்த முறை நேசனல் ல அவ ஜெயிக்கணும்... “ என்று மேலும் சில நிமிடம் பேசி விட்டு, மீண்டும் ஒரு முறை மது விளையாடுவதை திரும்பி பார்த்து விட்டு சென்றான்..

மதுவிற்கு அவளின் பேட்மின்டன் க்ளாஸ் ரொம்பவும் பிடித்து விட்டது.. காலையில் கிளம்பி நேராக IAS பயிற்சி வகுப்பிற்கு சென்ற பின் மாலை வகுப்பு முடிந்ததும் நேராக பேட்மின்டன் க்ளாஸ்க்க்கு சென்று விடுவாள்..

அங்கு கொஞ்ச நேரம் ரெப்ரெஸ் ஆகிட்டு தன் பிராக்டிஸை ஆரம்பித்து விடுவாள்.. வசந்த் ன் கோச்சிங் ஆல் மது இன்னும் அந்த விளையாட்டில் ஆர்வம் காட்ட விரைவிலயே நன்றாக ஆட ஆரம்பித்து இருந்தாள்..

பள்ளி முடித்து அகிலாவும் அங்கு வந்து விட , இரவு இரு பெண்களும் சேர்ந்து வீடு வந்து விடுவார்கள்...

அதன் பிறகு சிவகாமியுடன் மூவரும் சிறிது நேரம் அரட்டை அடிப்பார்கள்.. பின் இருவரும் தங்கள் அறைக்கு சென்று அவரவர் வேலையை பார்ப்பார்கள்.. அப்பப்ப அகிலாவிற்கு மேத்ஷ் ல் உதவி செய்ய என நேரம் பறந்து விடும்...,

இரவு 9 மணிக்கு இரவு சாப்பாட்டிற்கு கீழ வருவர்..

மதுவை பேட்மின்டன் க்ளாஸ் சேர்த்த மறுநாள் மது ஓய்ந்து போய் வீட்டிற்கு திரும்பி வந்ததை கண்ட சிவகாமிக்குத் தான் தாங்க முடியவில்லை..

அடுத்த நாள் காலை தன் மகனை பிடித்துக் கொண்டார்...

“ஏன்டா நிகிலா... ஏன் என் மருமகள போட்டு இப்படி படுத்தற??.. அவ கேட்டாளா இந்த விளையாட்டுக்கெல்லாம் சேர்த்து விட சொல்லி.. பாவம் அவளே ஒடிஞ்சு போய்டற மாதிரி ஒல்லியா இருக்கா.. அவள போட்டு இப்படி வாட்டினா?? “ என்று புலம்பி தள்ளினார் தன் மகனிடம் அவனை முறைத்தவாறு ...

“ஹ்ம்ம்ம்ம் போதும் மா... கொஞ்சம் மூச்சு வாங்கிக்க... “ என்று சிரித்தவன்

“அவ நல்லா விளையாடறதால தான சேர்த்து விட்டேன்... “

“அது இல்ல டா ... பாவம் பசியோட எப்படி இரண்டு இடத்துக்கும் அலஞ்சிட்டு வர முடியும்?? “ என்று இழுத்தார்...

தன் அன்னையை ஆழ்ந்து பார்த்தவன்

“என்னது பசியோட வர்ராளா?? அதான் காலை ல பிரேக் ஷ்நாக்ஷ், மதிய சாப்பாடு அப்புறம் ஈவ்னிங் ஷ்நாக்ஷ் அதுவும் இல்லாம இன்னொரு டப்பா எக்ஷ்ட்ரா னு இத்தனையையும் காலையில கட்டி கொடுக்கறீங்க இல்ல.. அப்புறம் எப்படி பசியோட வர்ராளம்?? ..”என்று நக்கலாக சிரித்தவன்

“அவ கொண்டு போகிற புக்ஷ் ஐ விட சாப்பாட்டு மூட்ட தான் அதிகம் இருக்கு அவ பேக் ல.. “என்று மீண்டும் நக்கலாக சிரித்தான்..

“ஹீ ஹீ ஹீ... பைக்குள்ள இருக்கிறது கூட கண்டு பிடிச்சுட்டானே.. “ என்று அசட்டு சிரிப்பை சிரித்தார் சிவகாமி... ஆனாலும் விடாமல்

“இருந்தாலும் பெரியவா?.” என்று ஏதோ சொல்ல வர,

“மா... அவ ஒன்னும் சின்ன குழந்த இல்ல.. எல்லாம் சமாளிக்க முடியணும்...இந்த பேச்ச இதோட விடுங்க... ” என்று தன் அன்னையை முறைத்து விட்டு எழுந்து சென்று விட்டான்..

ஆனாலும் சிவகாமி தன் மருமகளுக்கு எல்லாம் பார்த்து பார்த்து செய்து கொடுக்க, மதுவும் சந்தோசமாகவே இரண்டு வகுப்பிற்கும் சென்று வந்தாள்...

அந்த வாரம் இறுதியில் அந்த பயிற்சி மையத்தின் பல கிளைகளில் பயிற்சி பெருபர்களுக்கிடையே போட்டி ஏற்பாடு செய்திருந்தனர்...

மாதம் ஒரு முறை இந்த மாதிரி போட்டி நடக்கும்...ஓரளவு நன்றாக பயின்றவர்களை இந்த போட்டியில் ஈடுபடுத்தி வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு கொடுத்து ஊக்க படுத்துவது வழக்கம்...

மது நன்றாக விளையாடுவதால் வசந்த் அவளையும் அந்த போட்டியில் கலந்து கொள்ள சொன்னான்...

மது முதலில் மறுத்தாலும் பின்

“அந்த விருமாண்டி கிட்ட மேட்டர் போச்சுனா கண்டிப்பா கடிப்பான்.. பேசாம நாமளே ஒத்துக்க வேண்டியதுதான்..” என்று எண்ணி ஒத்து கொண்டாள்..


ஞாயிற்றுகிழமை அதிகாலையிலயே எழுந்து தயாராகி அந்த போட்டி நடக்கும் இடத்திற்கு சென்றனர் அகிலாவும் மதுவும்..

சிவகாமி நிகிலனை அவர்களை அழைத்து கொண்டு போக சொல்ல அவனோ

“அதான் இரண்டு பேர் இருக்காங்க இல்ல.. தனியாகவே போய்ட்டு வரட்டும்” என்று மறுத்து விட்டான்...

இதுவரை குறுகிய இடத்தில் சில பேர் மட்டும் பார்க்க விளையாண்டவள் அங்கு அவ்வளவு பெரிய கிரவுண்ட் மற்றும் பெரிய கும்பலை கண்டதும் உள்ளுக்கு பயந்து நடுங்கினாள் மது..

அகிலாதான் அவளுக்கு தைர்யம் சொல்லி அழைத்து சென்றாள்..

அகிலா வின் போட்டி முதலில் இருந்ததால் அவள் விளையாடுவதை கண்டு மது வுக்கும் கொஞ்சம் தைர்யம் வர, மனதுக்குள் அந்த வேலனை நினைத்து கொண்டு ஆட ஆரம்பித்தாள் மது ..

நிகிலன் மற்றும் வசந்த் சொல்லி கொடுத்த டிப்ஸ் படி ஆட, எளிதாக மற்றவர்களை வீழ்த்த முடிந்தது.. இறுதியில் அவளே வெற்றி பெற, அவளுக்கு மெடல் ம் சான்றிதலும் வழங்கினர்..

முதல் முதலாக அவளுடைய திறமையை பாராட்டி வழங்கிய பரிசு அது... அதை வாங்குகையில் துள்ளி குதித்தாள் உள்ளுக்குள்...

இவ்வளவு நாள் அவள் திறமையை வெளிகாட்டாமல் உள்ளுக்குள்ளே புதைத்து கொண்டதை கண்டு தன்னைத்தானே திட்டி கொண்டாள்....

இதுக்கெல்லாம் காரணமான அந்த விருமாண்டியை மெச்சி கொண்டாள்...

“என்னதான் திட்டினாலும் என் நல்லதுக்காகத்தான் திட்டியிருக்கான்.. கொஞ்சூண்டு நல்லவன் தான் போல.... “ என்று எண்ணி சிரித்து கொண்டவள் மனதில் முதன் முதலாக தன் கணவனை பற்றிய நல்ல அபிப்ராயம் முளை விட ஆரம்பித்தது...

அகிலாவின் மேட்ச் ம் முடிய, அவளும் வெற்றி பெற்றிருக்க, இரு பெண்களும் உற்சாகத்துடன் வீட்டிற்கு திரும்பி வந்தனர்...

வாசலில் மதுவின் பெற்றோர்களின் காரை பார்த்ததும் இன்னும் துள்ளி குதித்து வீட்டிற்குள்ளே ஓடினாள் மது...

வேகமாக வந்தவள் தன் தந்தையிடம் நேராக சென்று அவர் கழுத்தில் அவள் வாங்கிய மெடலை போட்டு அவரை இறுக்கி கட்டி கொண்டாள்...

சண்முகத்திற்கு ஒன்று புரியவில்லை...

பின் அகிலாதான் விளக்கினாள்..

“அங்கிள்... அண்ணி இன்னைக்கு பேட்மின்டன் போட்டியில பர்ஷ்ட் ப்ரைஷ் வாங்கிட்டாங்க.. விளையாட ஆரம்பிச்சு ஒரு வாரம் தான் ஆகுது.. அதுக்குள்ள கலக்கிட்டாங்க...

அவங்க எப்படி விளையாடறாங்கனு பாருங்க... “ என்று தன் அலைபேசியில் பதிவு செய்திருந்ததை அவர்களுக்கு காட்டினாள்..

அதில் மது ட்ராக் சூட்ம் டீ ஷர்ட்ம் போட்டு ஆடுவதை கண்டு அவர்கள் மயக்கம் போடாத குறைதான்..

எத்தனையோ முறை சாரதா அவளை வற்புறுத்தியிருக்கிறார்.. ஜீன்ஸ் போட சொல்லி.. அப்பொழுதெல்லாம் மறுத்தவள் இப்படி போட்டுகிட்டு அதுவும் இவ்வளவு பேர் முன்னாடி தைர்யமாக ஆடியிருக்கிறாளே... “ என்று வாயை பிளந்தனர்...

தன் பெற்றோரின் ஆச்சர்யம் கலந்த பார்வையை கண்டவள்

“ஹ்ம்ம் அப்பா இப்பயாவது ஒத்துக்கறீங்களா?? என் திறமையை பற்றி?” என்று தன் இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டாள் மது ...

அவளின் அந்த குதூகல பேச்சும் கண்ணில் தெரியும் உற்சாகமும் சிரிப்பும் கண்டு அவர்களுக்கு மனம் நிறைந்து இருந்தது...

“குழந்தையாக, வெளி உலகம் தெரியாமல் வளர்ந்தவள் எப்படி வாழ போகிறாளோ” என்று பயந்தவர்களுக்கு அவள் இங்கு மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு உள்ளம் பூரிக்க,

“மது கண்ணா.. நீயா இது?? எங்களாலயே நம்ப முடியலை... தெரு முனை கூட தாண்டாத என் பொண்ணா இப்படி கலக்கறா?? என்று சிரித்தார் சண்முகம்...

“இப்ப அவ உங்க பொண்ணு இல்லண்ணா... என் மருமக.. சிவகாமி மருமக னா சும்மாவா?? “ என்று சிவகாமியும் சிரித்தார்...

“வாஸ்தவம் தான் சம்பந்தி.. எங்களுக்கே தெரியாத இவளோட திறமைய மாப்பிள்ளை அதுக்குள்ள் கண்டுபிடிச்சு ட்ரெயினிங் கொடுக்க வச்சுட்டாரே... அவருக்கு தான் நாங்க நன்றி சொல்லணும்.. “ என்று பேசி கொண்டிருக்கும் பொழுதே நிகிலனும் உள்ளே வர

சண்முகம் சாரதாவும் எழுந்து நின்றனர்...

அவர்களை சிரித்த முகமாக வரவேற்றவன் நலம் விசாரித்தான்... சண்முகம் அவனுக்கு நன்றி சொல்ல, அவனும் சின்ன புன்னகையுடன் மறுத்து அதை ஏற்று கொண்டான்....

சண்முகத்திற்கு இன்றும் இரண்டு பெண்களும் தனியாக சென்று வந்தது உறுத்தலாக இருக்க, தன் மாப்பிளையிடம் இனிமேல் அவர்களை தனியாக அனுப்ப வேண்டாம்.. “என்று சொல்ல வந்து,பின் போனதரம் இதயே சொல்லி தன் மாப்பிள்ளையிடம் வாங்கி கட்டினது போதும் என்று அமைதியாகிவிட்டார்...

தன் கணவன் எதையோ சொல்ல வந்து பாதியில் நிறுத்திக் கொண்டதை கண்டு கொண்ட சாரதா,

அவர் என்ன சொல்ல வந்திருப்பார் என்று புரிந்து விட

“ஆஹா... மாப்பிள்ளை அவர் பொண்டாட்டியதான் மிரட்டி வச்சிருக்கார் னு பார்த்தா அவர் மாமனார கூட இப்படி மிரட்டி வச்சிருக்காரே... சபாஸ்... நல்ல மாப்பிள்ளையாதான் முருகா தேடி கொடுத்திருக்க..

அப்படியாவது இவர் அட்டம் அடங்குதானு பார்க்கலாம்.. சொல்ல சொல்ல கேட்காம பொண்ண எல்லா இடத்துக்கும் கூட்டிகிட்டு சுத்துனார் இல்ல.. இப்ப அனுபவிக்கட்டும்.. “ என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார் சாரதா...

அன்று மதிய சாப்பாடு கலகலப்பாக கழிந்தது..பின் அவளின் பெற்றோர்கள் விடை பெற்று சென்றனர்...

மது நன்றாக விளையாடுவதை கண்ட வசந்த் அடுத்த வாரம் நடக்கவிருக்கும் மாவட்ட அளவிலான போட்டிக்கு மதுவின் பெயரை கொடுக்க, அவளும் முதலில் தயங்கினாலும் பின் தைர்யமாக ஒத்துக் கொண்டாள்...

அகிலாவுக்கு இணையாக அவளும் இப்பொழுது நன்றாக விளையாடினாள்..

போட்டி சென்னையின் புறநகர் பகுதியில் என்பதால் மது கொஞ்சம் தயங்கினாள்..

அகிலாவுக்கு பரிட்சை நடந்து கொண்டிருந்ததால் அண்ணிக்கு துணையாக செல்ல முடியவில்லை...

சிவகாமி நிகிலனிடம் மதுவை அழைத்து கொண்டு போக சொல்ல, அவனோ வழக்கம் போல அவளே தனியா போய் வரட்டும்.. இன்னும் என்ன பாடி கார்ட் வேணும்.. என்று மறுத்துவிட்டான்..

சிவகாமி உடன் செல்வதையும் தடுத்து விட்டான்..

அவளுக்கு எப்படி போவது என்று குறிப்பு எழுதி கொடுத்து அவளையே தனியாக போக சொன்னான்..

மதுவும் வீராப்பாக கிளம்பி சிறிது தூரம் சென்றவள்

“சே.. இப்படி தனியா அனுப்பிட்டானே.. பேசாம அப்பா கிட்ட போன் பண்ணி அவரையும் வர சொல்ல வா?? என்று யோசித்தாள்..

பின் தன் எண்ணத்தை விட்டு விட்டு தனியாகவே சென்றாள்..

ஒரு வழியாக அவன் எழுதி கொடுத்த அட்ரசை அடைந்தாள்...

அனைவரும் புதியவர்களாக இருக்க, கொஞ்சம் மிரண்டாள்.. அவள் முழித்து கொண்டு நிறபதை கண்ட பாதுகாப்பிற்காக இருந்த ஒரு கான்ஸ்டபிள் அவளிடம் அருகில் வந்து

“மேடம்... ஏதாவது உதவி வேண்டுமா?? “ என்று கேட்டார்...

திடீரென்று கேட்ட குரலில் அதிர்ந்தவள் அதுவும் அவருடைய போலிஸ் யூனிபார்ம் ஐ கண்டு இன்னும் பயந்தவள் இல்லை யென்று தலையை மட்டும் வேகமாக ஆட்டினாள்...

அவரும் தொலைவில் இருந்த ஒருவரை அழைத்து

“வேல்.. இவங்களுக்கு ஏதாவது உதவி வேணும்னா கூடவே இருந்து செய்..” என்று குனிந்து அவன் காதில் ஏதோ சொல்ல, அந்த வேலுவும் தலையை ஆட்டி விட்டு

“வாங்க மேடம்.. உள்ள போகலாம்.. “ என்று அழைத்து சென்றான்..

அதன் பின் மதுவிற்கு வேண்டியதை கூடவே இருந்து செய்து கொடுத்தான்...

ஏதோ ஒருவராவது தெரிஞ்ச மாதிரி இருக்க அவளுக்கு கொஞ்சம் தைர்யமாக இருந்தது..

பின் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடம் பழகி விட, போட்டி ஆரம்பிக்கவும் தன் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தினாள்....

இதிலும் எல்லா சுற்றிலும் அவளே வெற்றி பெற, அவளுக்கே முதல் பரிசு கிடைத்தது...

மாவட்ட அளவிலான பல தரபட்ட விளையாட்டு போட்டிகளும் நடந்து கொண்டிருப்பதால், ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெறுபவர்கள் அங்கு இருந்த ரேங்க் மேடையில் ஏறி நின்றனர்...

மதுவும் அதே போல் 1 ல் ஏறி நிக்க, கண்களில் கண்ணீர் வழிந்தது..

மற்றவர்கள் எல்லாம் கை தட்டி ஆர்பரிக்க, அவள் பார்வை பார்வையாளர் பக்கம் செல்ல, அவள் குடும்பத்தில் இருந்து யாரும் வந்திருக்கவில்லை...

“சே.. அப்பா, இல்ல அத்தை இங்க இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?? என்று நினைத்து கொண்டே மேடையை விட்டு இறங்கியவள் மனம் எல்லாம் பூரித்து இருந்தது...

“இது மாதிரி இன்னும் நிறைய சாதிக்கணும் .. “என்று உறுதி கொண்டாள்...

பாவம் அவள் அறியவில்லை இதுதான் அவள் கலந்து கொள்ளும் முதலும் கடைசியுமான போட்டி என்று..

கீழ இறங்கி வரவும் அவளுக்கு இதுவரை உதவி செய்த வேல் அருகில் வந்து

“வாழ்த்துக்கள் மேடம்.... சார் உங்க கிட்ட பேசனுமாம்..” என்று தன் அலைபேசியை கொடுத்தான்...

“சாரா?? யார் அது??? அதுவும் முன் பின் தெரியாதவர் க்கு எப்படி என்னை தெரியும்..?? “என்று யோசித்து கொண்டே காதில் வைத்து ஹலோ என்றாள்....

“ஹ்ம்ம்ம் கன்கிராட்ஸ்... “ என்றான் நிகிலன் மறுமுனையில்..

அதை கேட்டு ஆச்சர்யமானாள் மது... அவள் இங்கு வெற்றிபெற்றது அவனுக்கு எப்படி தெரியும்... ?? ஒரு வேளை இங்கதான் எங்கயோ இருக்கானோ?? “ என்று தன் கண்களை சுழல விட்டாள்.. ஆனால் அவன் எங்கும் இல்லாமல் போக

“சரி.. வேல் நல்லா கவனிச்சுகிட்டானா?? “ என்றவன் தன் நாக்கை கடித்துக் கொண்டான் அவளிடம் தன்னையும் மறந்து உளறி விட்டதை

அவளுக்கு ஏதோ புரிவதை போல இருந்தது...

“இந்த சிடுமூஞ்சி என்கிட்ட வரமாட்டேனு சொல்லிட்டு இங்க எனக்கு உதவி செய்ய ஆள் அனுப்பி வச்சிருக்கானே..அதான் அந்த வேல் எப்பவும் என்கிட்டயே சுத்திகிட்டு இருந்தாரா?? .

பரவாயில்லை.. இன்னும் கொஞ்சம் நல்லவன் தான் போல...” என்று எண்ணி சிரித்துக் கொண்டாள்..

வெற்றி பெற்ற சந்தோசமும் அதோட அவள் கணவன் அவளுக்காக ஆள் ஏற்பாடு செய்து உதவி செய்த மகிழ்ச்சியும் சேர, உற்சாகத்துடன் தன் கோப்பையை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தாள்...

வீட்டிற்கு வரும் வழியிலயே அவள் கோப்பையுடன் இருந்த போட்டோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ல் போட, அதை கண்டு சந்தியா உடனே அவளை அழைத்திருந்தாள்...

மதுவை வாழ்த்தி, அதோட தன் மனைவியின் திறமையை வெளிகொண்டு வந்த நிகிலனையும் புகழ்ந்து தள்ள, மதுவுக்கு பெருமையாக இருந்தது...

ஆல் இன்டியா ரேடியோ மாதிரி, சந்தியாவிற்கு சென்ற மது வெற்றி பெற்ற செய்தி ஊர் முழுவதும் தானாக பரவ, அவளுக்கு தெரிந்தவர்கள், இதுவரை பேசாதிருந்த சில ஸ்கூல் பிரண்ட்ஸ் எல்லாம் கூட மதுவுக்கு வாழ்த்து சொல்லினர்....

சண்முகத்திற்கும் அந்த செய்தி எட்ட, அவரும் உடனே தன் மகளை அழைத்து பேசினார்... அவருக்குமே தன் பொண்ணை நினைத்து பெருமையாக இருந்தது...

இதை எல்லாம் கண்ட மதுவின் மனம் துள்ளி குதித்தது..அதே உற்சாகத்துடன் வீட்டை அடைந்ததும் வீட்டிற்கு உள்ளே வந்ததும் ஓடி சென்று சிவகாமியை கட்டி கொண்டு அவர் கன்னத்தில் முத்தமிட்டாள் மது...

“நான் ஜெயிச்சுட்டேன் அத்தை... மாவட்ட அளவில நான்தான் பர்ஸ்ட்.. “என்று பெருமையாக தன் கோப்பையை அவரிடம் கொடுத்தாள்...

தன் மருமகளின் முகத்தில் தெரிந்த துள்ளலை கண்டு ரசித்தவர்

“வாழ்த்துக்கள் மருமகளே... இன்னும் இது மாதிரி நிறைய சாதிக்கணும் மது மா...“ என்று அவளை கட்டிகொண்டு உச்சி முகர்ந்தார்...

அவர் அறிந்திருக்கவில்லை... இன்று வாய் நிறைய வாழ்த்தும் அவரே தன் மருமகளின் வளர்ச்சிக்கு தடையாக இருக்க போவதை...

அன்று இரவு நிகிலன் சீக்கிரம் வீடு திரும்பியிருக்க, மூன்று பெண்களும் அப்பொழுதுதான் டைனிங் ஹாலில் அமர்ந்து இரவு உணவு உண்ண ஆரம்பித்து இருந்தனர்...

நிகிலனும் வந்து விட அவனுமே ரெப்ரெஸ் ஆகி பின் கீழ இறங்கி வந்து சாப்பிட அமர்ந்தான்..

அன்று எல்லாம் ஸ்பெஷலாக இருந்தது... அதுவும் அவனுக்கு பிடித்த ஷ்வீட் பண்ணியிருந்தார் சிவகாமி..அதை கண்டவன்

“என்ன மா ஸ்பெஷல்?? இப்படி கலக்கி இருக்கீங்க... “ என்றான் தன் தட்டில் இருந்த உணவை ருசித்து கொண்டே

“ஹ்ம்ம்ம் என் மருமக ஜெயிச்சுட்டா இல்ல.. அதுக்கு தான் இதெல்லாம்.. “ என்றார் சிரித்தவாறு..

அதை கேட்ட அவனுக்கு புரை ஏறியது..

“ம்மா அவ ஜெயிச்சது சாதாரண district லெவெல் ல தான்.. என்னமோ ஒலிம்பிக்ல போய் தங்கம் வாங்கிட்டு வந்த மாதிரி பில்டப் பண்றீங்க..” என்று நக்கல் அடித்தான்...

“ஹ்ம்ம்ம் சீக்கிரம் அதுவும் வாங்கு வாடா... இப்ப தான ஆரம்பிச்சிருக்கா... “ என்றார் சிரித்தவாறு..

உடனே அருகில் இருந்த அகிலா

“ராஜ மாத சிவகாமி தேவி....இது அநியாயம்.. நானும் தான் ஸ்டேட் லெவெல ஜெயிச்சேன்.. அப்பல்லாம் எதுவும் கண்டுக்காம உங்க மருமகளுக்காக மட்டும் ஸ்பெஷல் னு சொல்றீங்க... இது செல்லாது... செல்லாது... “ என்றாள் குறும்பாக சிரித்தவாறு..

“ஹே வாலு... நீயும் அண்ணா சொன்ன மாதிரி நேசனல் லெவெல்ல ஜெயிச்சுட்டு வா.. பெரிய விருந்தே வச்சுடலாம்...” என்று அவள் தலையை பிடித்து செல்லமாக ஆட்டினார் சிவகாமி..

இப்படியாக சிரிப்புடன் கழிந்தது அவர்களின் இரவு உணவு....

அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் தன் மாமியார்க்கு சிறிது நேரம் உதவி செய்தவள் பின் பாலை காய்ச்சி எடுத்து கொண்டு மேல சென்றாள்..

அகிலாவிடம் ஒன்றை கொடுத்து விட்டு தங்கள் அறைக்கு சென்றவள், மற்றொன்றை நிகிலன் இடம் நீட்ட, இப்பொழுது அவள் கை நடுக்கம் நின்றிருந்தது...

அவனை கண்டால் உதறுவதும் கொஞ்சம் குறைந்து இருந்தது

அவன் பாலை குடித்ததும் டம்ளரை வாங்கி வைத்தவள்,அவன் அருகில் வந்து

“ரொம்ப தேங்க்ஸ் சார்.. “ என்றாள் கண்கள் மின்ன

“எதுக்கு?? “ என்று புருவங்களை உயர்த்தினான்

“இன்னைக்கு நான் கப் வாங்கினதுக்கு நீங்க தான் காரணம்... நீங்க கட்டாய படுத்தலைனா நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன்..

இன்னைக்கு அத்தனை பேர் முன்னாடியும் நின்னு மற்றவங்க கை தட்ட அந்த கப் ஐ வாங்கறப்போ எப்படி இருந்தது தெரியுமா?? சான்சே இல்ல... எல்லாம் உங்களால தான் சார்... ரொம்ப தேங்க்ஸ் சார்.. ” என்றாள் மீண்டும் கண்கள் பளபளக்க...

அவள் முகத்தில் தெரிந்த உற்சாகத்தையும் அதில் பளபளத்த அவளின் ஆப்பிள் போன்ற குண்டு கன்னத்தையும் அவனையும் அறியாமல் ரசித்தவன்

“ஹ்ம்ம்ம் உன்கிட்ட திறமை இருக்கு... நல்லா பண்ணு... இன்னும் பெரிய லெவலுக்கு வரலாம்....” என்றான்...

“ஹ்ம்ம்ம் கண்டிப்பா சார்... உங்க மானத்தை காப்பாத்துவேன்... “ என்று சொன்னவள் நாக்கை கடித்து கொண்டாள் மெல்ல சிரித்தவாறு...

அவள் தான் சொன்னதை சொல்லி காட்டுவதை புரிந்து கொண்டவன் உள்ளுக்குள் இலேசாக சிரித்தவாறு

“ஆமா... அப்புறம் ஐ.ஏ.ஸ் பிரிபரேசன் எப்படி போய் கிட்டிருக்கு?? “ என்றான்

“ஹ்ம்ம்ம் சூப்பரா போகுது சார்.. எல்லாம் டெஸ்ட்லயும் நான் தான் பர்ச்ட்.. ஜெயந்த் சார் கூட என்னை கூப்பிட்டு பாராட்டினார்...முதல் அட்டெம்ப்ட் லயே கிளியர் பண்ணிடலாம் என்றார்... “ என்று பெருமையாக சொன்னாள்...

“குட்.. கீப் ட் அப்.. “ என்று மெல்ல புன்னகைத்தான் அதிசயமாக....

அவனின் அந்த சிறிய பாராட்டும் மெல்லிய புன்னகையும் மதுவுக்குள் இன்னும் மகிழ்ச்சியை வாரி கொட்டியது...

மொத்தத்தில் அந்த நாள் அவள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக இருந்தது...

இதையெல்லாம் கண்டு கொண்டிருந்த வேல்ஸ்,

“ஆஹா.. நாம ஒரு கட்டத்தை போட்டு குடும்ப ஆட்டத்தை ஆட சொன்னா, இந்த இரண்டு லூசுங்களும் வேற ட்ராக்கில போய்கிட்டிருக்குங்களே...இது தப்பாச்சே... இப்படியே போனா நான் சிவாவுக்கு கொடுத்த வாக்கை எப்ப நிறைவேற்றதாம்??

இதுங்களை மட்டுமே பாலோ பண்ண வேண்டியதாயிடும் போல ... சீக்கிரம் நம்ம ஆட்டத்தை முடிச்சு அடுத்த பக்தரை எப்ப பார்க்க போறதாம்?? இது சரி வராது...

இனி ஆட்டத்தை மாத்தி ஆட வேண்டியது தான்.....” என்று வில்லங்கமாக சிரித்துக் கொண்டான் அந்த சிங்கார வேலன்...

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!