காதோடுதான் நான் பாடுவேன்-16
அத்தியாயம்-16
மீண்டும் ஒரு மாதம் ஓடியிருந்தது..
மது இப்பொழுது ஸ்டேட் லெவெல் போட்டிக்காக மும்முரமாக பயிற்சி செய்து கொண்டிருந்தாள்... அகிலாவும் நேசனல் லெவல் க்காக கடுமையாக பயிற்சி செய்து வந்தாள்...
நாளை அவளுடைய போட்டி.. சென்னையிலயே நடக்க இருந்தது..
காலையில் ஸ்கூல் க்கு போகும் முன்னே தன் அண்ணனிடம் நாளைக்கு போட்டிக்கு எல்லாரும் அவளுடன் வரவேண்டும் என்று சொல்ல அதற்கு நிகிலன் மறுத்து விட்டான்...
“அதென்ன பொண்ணுங்க மட்டும் எங்க போனாலும் கும்பலை கூட்டிகிட்டு போறது?? இது என்ன கல்யாணமா?? குடும்பத்தோட போறதுக்கு... அதோட நீ எந்த பாடி கார்ட்ம் இல்லாமல் தனியா நின்னு எல்லா சிட்சுவேசனையும் பேஸ் பண்ணனும்.. “
என்று தன் வழக்கமான லெக்சரை அடிக்க, சமையல் அறையில் இருந்து இதை கேட்டு கொண்டிருந்த மதுவுக்கு கடுப்பாக வந்தது...
தன் அண்ணனின் மறுப்பை கேட்டதும் அகிலாவின் முகம் வாடி விட்டது....
சென்ற முறை அகிலா ஸ்டேட் லெவல் விளையாடறப்போ மகிழன் ஒரு நாள் அலுவலகம் விடுப்பு எடுத்து கொண்டு தன் தங்கையுடன் வந்திருந்தான்.. அவள் விளையாடும்பொழுதெல்லாம் அவளுக்கு உற்சாக படுத்தினான்...
அவள் ஒன்றிரண்டு சுற்றுகளில் தோற்க, அவள் தளர்ந்து விடாமல் அவளை ஊக்கபடுத்தி நன்றாக ஆட வைத்தான்...
ஆனால் இந்த முறை அவன் இல்லையே என்று வருத்தமாக இருந்தது அகிலாவுக்கு.... “எப்படி டா மங்கி உனக்கு என்னை விட்டு போக மனசு வந்தது?? I miss you டா அண்ணா.. “ என்று புலம்பியவாறு சென்றாள்...
அகிலாவின் முகத்தை கண்ட மதுவுக்கும் கஷ்டமாக இருந்தது...
அகிலா சென்றபின் சிவகாமி மீண்டும் தன் மூத்த மகனிடம் ஏதோ சொல்ல வர, அவனோ அதுக்கு மேல் எதுவும் பேச வேண்டாம் என்று சொல்லி வெளியேறி விட்டான்...
மதுவுக்கு ஏனோ மனம் தாங்கவில்லை.. ஹாலில் சோபாவில் கவலையோடு அமர்ந்து இருந்த சிவகாமியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டவள்
“அத்தை... என்னதான் நினைச்சுகிட்டு இருக்கார் உங்க பையன்??... இவர் எது சொன்னாலும் அப்படியே கேட்டுக்கனுமா?? அடுத்தவங்க சொல்றதையும் கொஞ்சம் கூட காதுல வாங்க மாட்டாரா??
எப்ப பார் அந்த சின்ன புள்ளைய மிரட்டிகிட்டே இருக்கார்.. அப்பா இல்லாத புள்ளைக்கு அண்ணனாவது அனுசரனையா இருக்க வேண்டாமா??
அவ கூப்பிடறது துணைக்கு இல்ல அத்தை.. அவ அங்க விளையாடறப்போ அவள் பக்கம் யாராவது இருந்தால் அவளுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும்.. இன்னும் நல்லா விளையாடுவா... அதுக்குத்தான் நம்மள கூப்பிடறா தெரியுமா??
அன்னைக்கு நான் விளையாடறப்ப கூட என் மனசு அப்படி ஏங்குச்சு தெரியுமா?? .. நம்மள சேர்ந்தவங்க யாராவது இருந்து இலேசா கை தட்டி இருந்தால் கூட அது எவ்வளவு பெரிய டானிக் தெரியுமா??
அது ஏன் உங்க புள்ளைக்கு புரிய மாட்டேங்குது?? எப்ப பார் தனியா போ தனியா போனு சொல்றது.. அதெல்லாம் தனியா தான எல்லா இடத்துக்கும் போறா..
இப்ப கூப்பிடறது... துணைக்காக இல்ல அத்தை... அதுக்கு மேல மனசு சம்பந்த பட்டது...
இது தெரிய மாட்டேங்குது உங்க புள்ளைக்கு...
அவருக்கு மனசு னு ஒன்னு இருந்தாதான அடுத்தவங்களோட பீலிங்க்ஷ் புரியும்... சரியான காட்டுமிராண்டி....சிடுமூஞ்சி..... விருமாண்டி...
அத்தை..... அவர் என்ன சொன்னாலும் சரி.. நாளைக்கு நீங்களும் நானும் அகிலா கூட போறோம்.... உங்க பையனுக்கு பயந்து கிட்டு நீங்க வரலைனாலும் பரவாயில்லை.... நான் அவ கூட போகத்தான் போறேன்...சொல்லிடுங்க உங்க பையன் கிட்ட... “
என்று படபடப்பாக தன் மனதில் அடக்கி வைத்திருந்ததை எல்லாம் சேர்த்து பொரிந்து கொட்டினாள் மது...
இதுவரை நாலு வார்த்தைக்கு மேல் அதிகம் பேசாத, புள்ளபூச்சியாக இருந்த தன் மருமகள் இப்படி சர வெடியாக அதிர்ந்து வெடிப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்தார் சிவகாமி...
அவள் இவ்வளவு பேசியதையே நம்பமுடியாமல் தன் மருமகளையே ஆ வென்று பார்த்து கொண்டிருந்தவர் பார்வை நிமிர்ந்து வாயில் புறம் செல்ல, அங்கு நின்றவனை கண்டு இன்னும் அதிர்ச்சியின் உச்ச கட்டத்திற்கு சென்றார்...
“ஐயோ.. முருகா... இவன் எப்ப வந்தான்?? “என்று அஞ்சியவாறு சிவகாமி அவனையே பார்க்க, தன் மாமியாரிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போக அவரை நிமிர்ந்து பார்த்து அவர் பார்வையை தொடர்ந்து அவளும் வாயில் புறம் பார்க்க, அங்கு நிகிலன் முகத்தில் கடுகடுப்புடன் மதுவை பார்த்து முறைத்து கொண்டு நின்று கொண்டிருந்தான்...
அதை கண்ட மதுவும் அதிர்ந்து
“ஐயயோ... இந்த விருமாண்டி எப்ப வந்தான்?? நான் பாட்டுக்கு ஏதோ வேகத்துல என்னென்னவோ திட்டிட்டனே... போச்சு.. இன்னைக்கு நல்லா வாங்கி கட்ட போறேன்... “ என்று பயந்தவாறு தன் தலையை குனிந்து கொண்டாள்....
அவர்கள் அருகில் வந்தவன் எதுவும் பேசாமல் மதுவை மட்டும் ஒரு உஷ்ண பார்வை பார்த்து விட்டு வேகமாக மாடி ஏறி சென்றான்....
மேல சென்றவன் சிறிது நேரத்தில் கீழ இறங்கி வர, மது அதற்குள் எஸ் ஆகி இருந்தாள்... சிவகாமி மட்டுமே இன்னும் அதே இடத்தில் அமர்ந்து இருந்தார்...
அவளை தேடிய அவன் கண்கள் அவள் சமையல் அறைக்குள் ஒளிந்து கொண்டு மாடியையே பார்த்து கொண்டு இருப்பதை கண்டவனுக்கு தன் கோபத்தையும் மீறி இலேசாக சிரிப்பு வந்தது...
முன்பு வெளியில் சென்றவன் அவன் அவசரத்தில் மறந்துவிட்டு சென்ற பைலை எடுக்க திரும்பி வந்திருந்தான்.. அவன் வரும்பொழுது தான் மது அவனை பற்றி பேச இல்ல திட்ட ஆரம்பிக்கவும் அப்படியே நின்று அவள் சொல்லி முடிப்பதை எலலாம் கேட்டு கொண்டிருந்தான்....
அவளின் பேச்சால் கடுப்பானவன் உடல் விரைத்து இருகி இருந்தவன் அவன் தேடிவந்ததை எடுத்து கொண்டு கீழ இறங்கி வர, தனக்கு பயந்து கொண்டு சமையல் அறைக்குள் ஒளிந்து கொண்டிருப்பவளை கண்டதும் அவன் விரைப்பு தன்மை விலகி உடல் இழக ஆரம்பித்தது....
முகத்தில் இலேசாக புன்னகை அரும்ப தன் அன்னையிடம் சென்றவன்
“என்னமா?? உன் மருமக எனக்கு எதிரா தனி கட்சி ஆரம்பிக்கிறா போல இருக்கு.... உங்களையும் அவ கட்சியில சேர்த்துட்டாளா?? “என்றான் இலேசாக சிரித்தவாறு..
“ஹ்ம்ம்ம்ம் சரி.. நாளைக்கு எல்லாருமே அகிலா கூட போகலாம்.. நானே கூட்டிகிட்டு போறேன்... சரி வர்ரேன் மா.. பை.. “ என்று அவர் பதிலுக்கு கூட காத்திருக்காமல் வேக நடையுடன் வெளியேறினான்...
தன் மகன் சொன்னதை சீரணிக்கவே சில நிமிடங்கள் ஆனது சிவகாமிக்கு..
தன் மருமகள் இவ்வளவு பேசியது பெரிய அதிர்ச்சி என்றால் அதைவிட பெரிய அதிர்ச்சி தன் மகன் அவன் பிடிவாதத்திலிருந்து இறங்கி வந்தது தான்....
எப்பவும் ஒன்றை முடிவு செய்துவிட்டால் அதை அவனே நினைத்தால் கூட மாற்ற மாட்டான்.. அவ்வளவு பிடிவாதக்காரன்...
அவன் வேண்டாம் என்று சொல்லிய ஒன்றை அவனே மனசு மாறி ஒத்துகொள்கிறான் என்றால் அது இன்னும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது சிவகாமிக்கு...
“என்ன முருகா.. இன்னைக்கு யார் முகத்துல முழிச்சேன்?? இப்படி அதிர்ச்சிக்கு மேல அதிச்சியா வருது.... இதை எல்லாம் பார்த்து எனக்கு ஹார்ட் அட்டாக் இன்னும் வரலைனா அது உன் கருணையால் தான் இருக்கும்...
ஹ்ம்ம்ம் எப்படியோ இந்த பிடிவாதக்காரனையும் மலை இறங்க வச்சுட்டாளே என் மருமக... கெட்டிக்காரிதான்...சீக்கிரம் இன்னும் கொஞ்சம் வேகமா அவன இறங்க வச்சுடு.... “என்று வேண்டி சிரித்து கொண்டார்...
தன் காரை எடுத்து கிளம்பியவன் சிறிது தூரம் சென்றதும் மனம் தானாக சற்று முன் மது அவனை பற்றி திட்டியது மனதில் ஓடியது..
இதுவரை அமைதியாக அவனை கண்டால் நடுங்கியவள் தான் இல்லாத நேரத்தில் அவனை பற்றி என்னவெல்லாம் சொல்லி திட்டினாள்..
அதுவும் அவள் கடைசியாக திட்டிய காட்டுமிராண்டி....சிடுமூஞ்சி..... விருமாண்டி...என்ற பெயர்கள் காதில் திரும்ப ஒலிக்க, கோபத்திற்கு பதிலாக சிரிப்பு வந்தது அவனுக்கு... அவன் இதழ்கள் இலேசாக புன்னகை பூக்க, மீண்டும் மெல்ல சிரித்துக் கொண்டான்...
“பார்த்தா ஒட்டட குச்சி மாதிரி இருந்து கிட்டு எவ்வளவு கோபம் வருது அவளுக்கு?? ... அவன் இறுக்கி பிடித்தால் அவள் எலும்பெல்லம் நொறுங்கி விடும்... அப்படி இருந்து கிட்டு என்னையே எதிர்த்து என்ன பேச்சு பேசறா....
சரியான கேடிதான் போல...ஒட்டடகுச்சி... “ என்று திட்டியவாறு மீண்டும் சிரித்துக் கொண்டான்...
திடீரென்ரு தன் எண்ணம் போகும் போக்கை நினைத்து திடுக்கிட்டவன்
“சே... நான் எதுக்கு அந்த இம்சையை பத்தி நினைச்சுகிட்டு இருக்கேன்.. ?” என்று தன் தலையை தட்டி கொண்டவன் சாலையில் கவனம் செலுத்த சிறிது நேரத்திலயே மீண்டும் அவள் தன் தங்கைக்காக தன்னையே திட்டியது நினைவு வந்தது..
அதோடு அவள் வந்த பிறகு வீட்டில் ஒரு கலகலப்பு கூடியதை போல இருந்தது.. தன் அம்மாவும் தங்கையும் முன்னை விட முகத்தில் கொஞ்சம் மகிழ்ச்சி கூட இருந்ததை போல இருந்தது....
அகிலாவுக்கு சொல்லவே வேண்டாம்.. அண்ணி அண்ணி என்று அவள் பின்னாலயே சுற்றுகிறாள்...
அதுவும் நேற்று அகிலா அவள் புராக்ரெஸ் ரிப்போர்ட்டை காட்ட, வழக்கம் போல கணக்கில் பெயில் ஆகாமல் நல்ல மார்க் வாங்கியிருந்தாள்...
அவள் மிஸ் அவளை கூப்பிட்டு பாராட்டினாங்க என்று எவ்வளவு சந்தோசம் அவள் முகத்தில்..
“இதற்கெல்லாம் அண்ணிதான் ணா காரணம் என்று சொல்லியதும் நினைவு வர,
“இவள் ஏன் மற்ற பொண்ணுங்களை போல் இல்லாமல் தன் தங்கையிடம் இவ்வளவு ஒட்டிகிட்டு இருக்கா?? ஒரு வேளை மற்றவங்க சொல்ற மாதிரி இவள் கொஞ்சம் வித்தியாசமானவளோ?? “ என்று ஒரு மனம் மதுவுக்கு சப்போர்ட் பண்ணியது...
“இல்லை.. அப்படி நல்லவளா இருந்தா உன் தம்பிக்கு நிச்சயம் பண்ணி அவன் ஓடிட்டான் ன உடனே எப்படி உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிருப்பா?? அவள் நோக்கம் வேற என்னவோ...சும்மா உன்னை இம்ப்ரெஸ் பண்ண கூட இப்படி நடிக்கலாம்... நம்பிடாத நிகிலா... “ என்றது இன்னொரு மனம்...
அவளை பற்றி எந்த முடிவும் எடுக்க முடியாமல் குழம்பியவாறே சென்றான்..
அடுத்த நாள் காலை நால்வரும் சீக்கிரம் கிளம்பி இருந்தனர்.. .வழக்கம் போல சிவகாமி அந்த வேலனின் முன்னால் நின்று மனம் உருகி வேண்டி கொண்டு அகிலாவுக்கு அவன் விபூதியை வைத்து விட்டர்..
பின் மதுவுக்கும் தன் மகனுக்கும் விபூதியை வைக்க, பின் நால்வரும் கிளம்பி சென்றனர்..
நிகிலன் காரை ஓட்டி கொண்டிருக்க, பின்னால் அமர்ந்து இருந்த மூன்று பெண்களும் ஏதோ பேசிய படி வந்தனர்...
அகிலா கொஞ்சம் டென்சனாக இருக்க, அன்று ஏனோ அதிகம் பேசாமல் அமைதியாக வந்தாள் அகிலா...
அவளுடைய டென்சனை புரிந்து கொண்ட மது , எப்பவும் அதிகம் பேசாதவள் இன்று அகிலாவுடன் ஏதேதோ பேசிய படியே வந்தாள்...
அகிலாவின் டென்சனை குறைக்கதான் இவள் பேசுகிறாள் என்று புரிய,
“ இப்படி குடும்பத்தோட வராம அவளை மட்டும் தனியா அனுப்பி இருந்தால் எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்?? இதை உணராமல் போனேனே... நல்ல வேளை இந்த ஒட்டட குச்சி கரெக்டா எடுத்து சொல்லி இருக்கா...
பாத்தாதான் சின்ன பொண்ணா இருந்தாலும் இவளுக்கும் கொஞ்சூண்டு மூளை வேலை செய்யும் போல... “ என்று சிரித்து கொண்டே காரை ஓட்டினான்..
அந்த போட்டி நடக்கும் இடத்தை அடைந்ததும் அவர்களை வெளியிலயே இறக்கி விட்டு என்ட்ரன்ஸ் வரைக்கும் நடந்து வந்த நிகிலன் தனக்கு வேலை இருப்பதாகவும் முடிந்த உடன் வந்து விடுவதாகவும் சொல்லி நகர முயல,
அண்ணா என்று அழைத்தாள் அகிலா...
அவளின் அழைப்பை கேட்டு நின்றவன் திரும்பி பார்க்க,
“நான் ஜெயிச்சுடுவேன் இல்ல ணா?? அப்ப கப் வாங்கறப்ப நீ வந்திடுவ இல்ல.. “என்றாள் ஏக்கமாக... அதை கண்டு உருகியவன்,
“ஹே அகி மா.... கண்டிப்பா நீதான் ஜெயிக்க போற... நானும் முன்னாடி உட்கார்ந்து நீ கப் வாங்கறத பார்த்துகிட்டிருப்பேன்.... அதுக்காகவே நீ ஜெயிக்கனும்... ஆல் தி பெஸ்ட்.. நல்லா தைர்யமா விளையாடு.. “என்று அவளை தன்னோடு அணைத்து சில விநாடிகள் அவள் பதட்டத்தை குறைத்து பின் விடுவித்தான்....
மதுவுக்கு அவன் செயல் புதிதாக இருந்தது...
“இவனுக்கு இப்படி எல்லாம் கூட பேச வருமா?? .. அணைக்க வருமா?? “ என்று.. அவன் அகிலாவிடம் நடந்து கொண்டது என்னவோ அவள் மனதில் பதிந்து போனது... ரொம்ப பிடித்தது அவளுக்கு..
தன்னையும் இப்படி அணைப்பானா?? என்று சிறு ஆவல் அவள் உள்ளே அவளையும் அறியாமல் புகுந்தது..
பின் மூன்று பெண்களும் மைதானத்தின் உள்ளே செல்ல, முன்பு மதுவுக்கு உதவி செய்த அதே வேல் அங்கயும் இருந்தான்.. அவர்களை அழைத்துச் சென்று பார்வையாளர்கள் பக்கத்தில் அமர வைத்தான்..
அகிலா போட்டியாளர்கள் பக்கம் சென்று தன் உடையை மாற்றி கொண்டு போட்டிக்கு தயாராக இருந்தாள்...
நொடிக்கொருதரம் அகிலாவின் பார்வை பார்வையாளர் பக்கம் செல்ல மதுவும் அவளுக்கு கை அசைத்து உற்சாக படுத்தினாள்...
போட்டி கடுமையாக இருந்தாலும் தன் இரு அண்ணன்கள் மற்றும் மாஸ்டர் வசந்த் சொல்லி கொடுத்ததும் நினைவில் நிறுத்தி, போராடி இறுதி சுற்றுக்கு தேர்வானாள்...
அதை கண்ட மது எழுந்து துள்ளி குதித்தாள்.. பின் ஓடி வந்து அகிலாவை கட்டி கொண்டாள்..
அகிலாவுக்கு சந்தோசமாக இருந்தது.. தன் அண்ணியின் உற்சாகத்தை காண, அப்படியே தன் சின்ன அண்ணனை பார்ப்பதை போல இருந்தது அவளுக்கு.....
தன் சின்ன அண்ணன்.. மகிழன்.. அவன் இருந்திருந்தால் இப்படித்தான் அவளை கட்டி கொண்டிருப்பான்...
அவனுக்கு இந்த பேட்மின்டன் ஆட்டத்தில் அவ்வளவு விருப்பம்... கண்டிப்பா அவள் நேசனல் மேட்ச் ல் விளையாடுவது தெரியும் தானே.. எங்காவது இருக்கிறானா?? இருந்து தன்னை பார்த்து கொண்டிருப்பானோ?? என்று ஒரு சிறு நப்பாசையுடன் மைதானம் முழுவதும் கண்களால் தேடி கொண்டிருந்தாள்...
ஆனால் அவனோ அங்க கனடாவில் தான் தங்கியிருக்கும் அடுக்குமாடி வீட்டில் இருந்து கொண்டு இங்கு சென்னையில் தன் ப்ரெண்ட் ஒருவனிடம் சொல்லி அகிலா விளையாடுவதை அவன் மொபைல் வழியாக டெலிகாஸ்ட் பண்ண சொல்லி கேட்க, அவனும் அதே மாதிரி காட்டி கொண்டிருக்க, அவனும் தன் தங்கை விளையாடுவதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்…
இங்கு மதியம் என்றால் கனடாவில் அதிகாலை இரண்டு மணி...தன் தங்கையை பார்க்க வேண்டும் அவள் விளையாடுவதை நேரில் பார்க்க வேண்டும் என்றே அன்று இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கிறான்...
என்னதான் யாரிடமும் சொல்லாமல் தன் குடும்பத்தை விட்டு ஓடிப் போனாலும் மகிழன் மனம் முழுவதும் தன் குடும்பதை சுற்றியே இருந்தது...
தன் நண்பர்கள் வழியாக இங்கு நடப்பதை தினமும் அறிந்து கொள்வான்... அகிலா பள்ளி செல்லும் நேரங்களிலும் அவள் பேட்மின்டன் வகுப்பிலும் தொலைவில் இருந்து தன் நண்பனின் அலைபேசி வழியாக அவளை பார்த்து மகிழ்வான்....
தன் தங்கை தன்னை தான் தேடுகிறாள் என்று தெரிந்ததும் அவனையும் மீறி அவன் கண்கள் கரித்தது....மனம் வலித்தது அவனுக்கு..
“எத்தனை நாள் ஆகிறது தன் குடும்பத்தை நேரில் பார்த்து?? ஏனோ அவனுக்கு தன் அன்னையை பார்க்க வேண்டும் போல இருந்தது....
அப்பொழுது அகிலா பார்வையாளர் பக்கம் பார்த்து கை அசைக்க, அவன் நண்பன் அங்கு போகஸ் பண்ண, அங்கு மது நின்று தன் கையை அசைத்துக் கொண்டிருந்தாள்...
அவளை கண்டதும் ஒரு நிமிடம் அவன் இதயம் எகிறி குதித்தது...
தனக்கு தாரமாகியிருக்க வேண்டியவள் தன் செயலால் மாறி இப்பொழுது தனக்கு அண்ணியாகி இருப்பவளை கண்டதும் அவன் இதயம் வேகமாக துடித்தது...
பின்ன... திருமணத்தில் அவளை பாதியில் விட்டு விட்டு ஓடி வந்தவன் அல்லவா?? அவள் எப்படி வேதனை படுவாளோ என்று வருந்தியவனுக்கு
அவள் முகத்தில் தெரிந்த சந்தோசத்தை கண்டதும் கொஞ்சம் நிம்மதியானது...
அவளின் அருகிலயே தன் அன்னை சிவகாமியும் அமர்ந்து சிரித்து கொண்டிருக்க அவரை கண்டதும் இன்னும் மனது பிசைந்தது அவனுக்கு...
அப்படியே ஓடி வந்து அவரை கட்டிகொண்டு அவர் மடியில் தலை வைத்து படுக்க வேண்டும் போல இருந்தது...
அதே நினைப்பில்
“மா... “என்றான் மெதுவாக...
அவன் அங்கு கூப்பிட, சிவகாமிக்கு யாரோ தன்னை அழைப்பது போல் இருக்க சுற்றிலும் பார்த்தவர் பின் அவன் நண்பன் இருந்த பக்கம் நேராக பார்த்தார்...
மகிழனுக்கு தன்னையே அவர் நேராக பார்த்து சிரிப்பதை போல இருந்தது....
அவர் முகத்தையும் ஆசை தீர பார்த்தான் நீண்ட நாட்களுக்கு பிறகு..
சிவகாமிக்கும் அப்பொழுது சின்ன மகன் நினைவே...
“எங்க இருக்கானோ?? இந்நேரம் இங்க இருந்திருந்தால் அகிலா விளையாடுவதை பார்க்க வந்திருப்பானே.... “ என்று எண்ணி கொண்டே சுற்றிலும் மீண்டும் ஒரு முறை தேடி பார்த்தார்...
அவர் தன்னைத்தான் தேடுகிறார் என்று தெரிந்ததும் உள்ளுக்குள் மகிழ்ச்சி ஊற்று... என்னதான் அவன் தப்பு செய்திருந்தாலும் யாரிடமும் சொல்லாமல் திருமணத்தை நிறுத்தி விட்டு ஓடி வந்திருந்தாலும் தன் அன்னை தன்னை மன்னித்திருப்பார்..
தான் இல்லாமல் அவர் வருந்தியிருப்பார்..” என்று எண்ணியவன்
“சீக்கிரம் எல்லாம் சரி செய்யணும்... நானும் என் குடும்பத்தோட ஒன்னு சேரணும்... சீக்கிரம் ஒரு வழி செய்யணும்... “என்று எண்ணி கொண்டான்...
ஒரு வழியாக இறுதி சுற்றிலும் அகிலாவே வெற்றி பெற்றிருக்க, அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி...தன் சின்ன அண்ணனின் கனவு அது... கடைசியில் சாதித்து விட்டாள்.. ஆனால் அதை காணத்தான் அவன் இல்லை... என்று இருந்தது...
மதுவும் அவளை கட்டி கொண்டு வாழ்த்த, அகிலாவுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது...
பின் எல்லா போட்டிகளும் முடிந்து பரிசு வழங்கும் விழா ஆரம்பிக்க, மூன்றாவது வரிசையில் நிகிலன் குடும்பத்தினர் அமர்ந்து இருந்தனர்...
அகிலா தன் அண்ணன் வரவில்லையே என்று திரும்பி திரும்பி நுழை வாயில் பக்கமே பார்த்து கொண்டிருந்தாள்... அவன் வந்த பாடில்லை..அதை கண்டு அகிலாவின் முகம் வாடியது...
மதுவுக்குமே கஷ்டமாக இருந்தது..
தன் அலைபேசியை எடுத்து அவன் எண்ணிற்கு அழைக்கலாமா?? வேண்டாமா “ என்று யோசித்து கடைசியில் தைர்யம் வந்து அவன் எண்ணிற்கு அழைத்தாள்... ,
ஆனால் அது முழுவதுமாக அழைத்து நின்றிருந்தது... பின் விழா ஆரம்பிக்க இன்னும் 5 நிமிடம் தான் இருக்க, அப்பொழுது வந்து சேர்ந்தான் நிகிலன்....
அவனை கண்டதும் அகிலா துள்ளி குதித்தாள்...
மதுவுக்குமே ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு அவனை கண்டதும்...
அவனை காணவில்லையே என்று எதிர்பார்த்திருந்தவளுக்கு திடீரென்று அவன் முகத்தை காண அவ்வளவு சந்தோசமாக இருந்தது...
இதுவரை அவனை அவன் அருகில் இருந்து மட்டுமே பார்த்திருக்கிறாள்...அதுவும் முழுவதுமாக இல்லை.... பாதி நேரம் தலையை குனிந்து கொள்வாள்.. அவனை முழுவதுமாக நன்றாக பார்த்ததில்லை இதுவரைக்கும்...
இன்று தொலைவில் முதல் முதலாக காண, அவன் நடந்து வரும் வேகத்துக்கு ஏற்ப, அலை அலையாக ஆடிய அடர்ந்த கேசமும், கூரான நாசியும், நேர்த்தியாக திருத்தியிருந்த அடர்ந்த, மீசையும், கண்ணில் ஒரு நேர்மையும் கர்வமும் மின்ன, கம்பீரமாக நடந்து வந்தான்...
பாகுபலி இரண்டாம் பாகத்தில் தொடக்கத்தில் பாகுபலி ஹீரோ பிரபாஸ் கம்பீரமாக நடந்து வருவதை அப்படியே நேரில் பார்ப்பதை போல இருந்தது... சில விநாடிகள் அவனையே இமைக்க மறந்து பார்த்திருந்தாள் மது....
அவனை கண்டதும் அங்கு பாதுகாப்பு பொறுப்பில் இருந்த சில காவலர்கள் அவனுக்கு சல்யூட் வைக்க, அவன் அதை ஏற்று மெல்லிய புன்னகையையும் தலை அசைப்பும் காட்டி கம்பீரமாக நடந்து வந்தான்....
அதை கண்டதும் மதுவுக்கு ஏதோ வித்தியாசமாக இருந்தது அவள் உள்ளே...
இவர்களை கண்டு கொண்டு அருகில் வரவும் தன் பார்வையை மாற்றி கொண்டு உடனேயே தலையை குனிந்து கொண்டாள் மது...
அருகில் வந்தவன் அகிலா வை தோளோடு சேர்த்து அணைத்து கொண்டு
“கன்கிராட்ஸ் அகி...சொன்ன மாதிரியே நீ சாதிச்சுட்ட.. இது மாதிரி அடுத்து ஆசியன் கேம்லயும் நீ ஜெயிக்கணும்... “ என்றான் சிரித்தவாறு...
அதை கேட்டு அகிலா துள்ளி குதித்தாள்..
அவள் அந்த போட்டியில் ஜெயிச்சதை விட தன் பெரிய அண்ணன் அவளை பாராட்டியது தான் பெரிதாக இருந்தது...
அதுவும் அவனின் அந்த அணைப்பு.. அதுவரை உணர்ந்திராத தந்தையின் பாசத்தை உணர்ந்தாள் அந்த அணைப்பில்.....அவன் தோளோடு இன்னும் ஒட்டிகொண்டவள் கண்கள் கண்ணீர் எட்டி பார்க்க, அதை கண்டு கொண்டவன்
“ஹே.. லூசு.. எதுக்கு இப்படி இமோசனல் ஆகற... இது வெறும் நேசனல் தான்....இதெல்லாம் பத்தாது... இன்னும் நீ நிறைய சாதிக்கணும்.. “என்று அவள் தலையை பிடித்து செல்லமாக ஆட்டினான்...
அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவள்
“கண்டிப்பா ணா.. நீ இந்த மாதிரி என்னை கட்டிப்பனா ஆசியன் என்ன ஒலிம்பிக் ஏ ஜெயிப்பேன்.. “ என்றாள் கண்ணில் மின்னும் கண்ணீருடன்...
அப்பொழுதுதான் அவனுக்கு உரைத்தது... அவள் தன் பாசத்துக்காக எப்படி ஏங்கி இருக்கிறாள் என்று..
“சே.. இத்தனை நாள் இதை உணராமல் போனேனே... வெறும் அவள் தன்னம்பிக்கை யை வளர்ப்பதில் மட்டுமே குறிக்கோளா இருந்திட்டனே...
நல்லவேளை... இந்த ஒட்டடகுச்சி சொல்லலைனா இன்னுமே கண்ண மூடிகிட்டே தான் இருந்திருப்பேன்.. “ என்று மனதுக்குள் வருந்தியவன்
“கண்டிப்பா அகி மா... அண்ணன் எப்பவும் உன் கூடவே இருப்பேன்.. “ என்றவன் அவளை அணைத்தவாறெ அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்தான் அவனும் அமர்ந்து கொண்டே..
சிவகாமிக்கும் மனம் நிறைந்து நின்றது...
இதெல்லாம் தன் மருமகளால் தான் என்று மதுவை பார்த்து கண்ணால் நன்றி சொல்ல, அதை புரிந்து கொண்டவள் கண்களால் அவர்களை பார்த்து ஜாடை காட்டி சிரித்தாள்...
சிவகாமி முதலில் அமர்ந்து இருக்க, அடுத்து மது வும் அவளை அடுத்து அகிலா அமர்ந்து இருக்க, அவளை அடுத்து நிகிலன் அமர்ந்தான்...
அகிலா தன் அண்ணனுடன் ஒட்டி அமர்ந்து கொண்டாள்....
அதை கண்டு மதுவுக்கு தன் தந்தையின் நினைவு வந்தது..
அவளுமே எங்கு சென்றாலும் தன் அப்பாவின் அருகில் நெருங்கி அமர்ந்து கொள்வாள்.. அவரின் கையை பிடித்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டே தான் அமர்ந்து இருப்பாள்.. அகிலாவை காண தன்னை பார்ப்பதை போல இருந்தது மதுவுக்கு..
பரிசு வழங்கும் விழா ஆரம்பிக்கும் நிலையில் மேடை ஏறி அந்த விழாவின் பாதுகாப்பை பார்வையிட்ட இன்ஸ்பெக்டர், பார்வையாளர் வரிசையில் மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்த நிகிலனை கண்டு கொண்டு அவசரமாக கீழிறங்கி வந்தார்...
அவன் அருகில் வந்ததும் ஒரு சல்யூட்டை வைத்து,
“சார்.... நீ எங்க இங்க?? பாதுகாப்பு எல்லாம் நல்லா இருக்கு சார்... என்னோட நேர் பார்வையில் எல்லாம் கவனமா கண்கானிச்சுட்டு இருக்கேன் சார்.. “ என்றார் அவசரமாக...
‘ஹ்ம்ம்ம் வெரிகுட் மிஸ்டர் ஆனந்த்..நானும் பார்த்தேன்... நல்லா பண்ணியிருக்கீங்க... “ என்று மெல்ல புன்னகைத்தான்..
“சார்.. நீங்க ஏன் இங்க?? வாங்க சார்... மேடையில வந்து உட்காருங்க... “என்றார்.
“இருக்கட்டும் ஆனந்த்.. நான் இங்க பர்சனல் ஆ வந்திருக்கேன்.. என் சிஸ்டர் பேட்மின்டன் ல சேம்பியன் வின் பண்ணியிருக்கா... அதான் ப்ரைஸ் டிஸ்ட்ரிபூசன் பார்க்க வெயிட்டிங்.. “
“ஓ.. அப்படியா சார்... கன்கிராஜுலேசன்ஸ் மா... “ என்று அகிலாவின் கையை பிடித்து குலுக்கினார்...
“உங்க அண்ணன் நிகிலன் சார் மாதிரியே நீயும் ஸ்போர்ட்ஸ் ல பெரிய ஆளா வரணும்.. “ என்று சிரித்தவர் அருகில் இருந்த சிவகாமியை பார்க்க, நிகிலனுக்கு அப்பொழுதுதான் நினைவு வந்தது தன் குடும்பத்தை அவரிடம் அறிமுக படுத்த வில்லை என்று..
“சாரி ஆனந்த்... இவங்க என் அம்மா.. “ என்க, சிவகாமி கைகளை குவித்து வணக்கம் சொன்னார் அவருக்கு...பின் தன் அன்னையிடம்
“இவர் மிஸ்டர் ஆனந்த்.. இங்த ஏரியா இன்ஸ்பெக்டர் மா..” என்று சிவகாமிக்கு அறிமுக படுத்தினான்...
அடுத்து அவரின் பார்வை மதுவிடம் செல்ல, நிகிலனுக்கு அவளை எப்படி அறிமுக படுத்துவது என்று சில விநாடிகள் யோசித்து பின்
“ஷி இஸ் மை வைப்... “ என்றான் தயங்கியவாறு...
அதை கேட்டதும் மதுவுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு...
திருமணம் முடிந்து இவளை மனைவி என்றோ அவனை கணவன் என்றோ இருவருமே எண்ணியிருக்கவில்லை..
மதுவை பொருத்தவரை அவன் யாரோ. என்றுதான் இருந்தது..
தன் மாமியார் நாத்தனார் இடம் நெருக்கமாக மனதிற்குள் ஒன்றியதை போல, அவர்களை அவளின் நெருங்கிய சொந்தம் என்று ஏற்று கொண்ட மனதுக்கு ஏனோ தனக்கு தாலி கட்டியவனை தன் கணவன் என்று நினைக்க தோன்றவில்லை..
அவன் தன் கணவன்... அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்றே தோன்றவில்லை இதுவரை...
முதன் முதலில் அவன் தன்னை மனைவி என்கவும் ஏனோ அவளுக்குள் ஒரு சிறு மாற்றம்..
நேற்று தான் அவனை திட்டியதற்கு அவளை திருப்பி எதுவும் சொல்லாமல் அதோடு அவள் கருத்தை ஏற்று கொண்டு இன்று அவர்களை அழைத்து வந்ததும், அகிலாவை தோளோடு அணைத்து நின்றதும் கண்டவளுக்கு, அவன் மேல் வந்திருந்த சாப்ட் கார்னர் கிடுகிடுவென பெரிதாக வளர ஆரம்பித்து இருந்தது..
இப்பொழுது அவன் மனைவி என்ற அழைப்பும் கூட சேர்ந்து அவள் மனதில் மொட்டு விட்டிருந்த திருமண மலர் இன்னும் கொஞ்சம் அதிகமாக விரிய ஆரம்பித்தது..
அதே மகிழ்ச்சியில் கைகளை அழகாக குவித்து இலேசாக புன்னகைத்து வணக்கம் சொன்னாள் அந்த இன்ஸ்பெக்டர் ஆனந்த் க்கு..
அவரும் மெல்ல புன்னகைத்து
“வணக்கம் மேடம்... சார் உங்களுக்கு ஹஸ்பன்ட் ஆ வர நீங்க குடுத்து வச்சிருக்கணும்.. அவர் மாதிரி ஒரு நேர்மையான நல்ல போலிஸ் ஆபிசர பார்க்க முடியாது.. “என்று சிரித்தவர்
“என்ன சார்.. எங்களுக்கெல்லாம் சொல்லாமலயே கல்யாணம் பண்ணிகிட்டீங்க போல இருக்கு.. சீக்கிரம் ட்ரீட் ஆவது வைங்க.. “என்று சிரிக்க, நிகிலனும் இலேசாக வெக்கத்துடன் புன்னகைத்தான்...
அவனின் அந்த முரட்டு இதழ்களை எப்பவும் அழுந்த மூடியிருப்பவன் ,உள்ளுக்குள் இறுக்கி வைத்திருப்பவன் இன்று தன் வெண்பற்கள் தெரிய, இலேசாக சிரிக்க, அந்த புன்னகை அப்படியே அவளை வசீகரிப்பதை போல இருந்தது மதுவுக்கு...
ஆச்சர்யத்துடன் அவன் புன்னகையை ஓரக் கண்ணால் ரசித்து கொண்டிருந்தாள்..
அதற்குள் விழாவிற்கான சிறப்பு விருந்தினர் வரும் அரவம் கேட்க, ஆனந்த் அனைவரிடமும் விடை பெற்று மேடைக்கு விரைந்தார்...
பின் இருக்கையில் அமர்ந்தவர்கள் மேடையை நோக்க, அங்கு சிறப்பு விருந்தினர் வந்து அமர்ந்ததும் விழா ஆரம்பிக்க, பரிசு வாங்குபவர்கள் அனைவரையும் முன்னால் வருமாறு அழைக்க, அகிலா துள்ளலுடன் எழுந்து சென்றாள்.. மது அவளை கையை பற்றி குலுக்கி மீண்டும் வாழ்த்தி தன் மகிழ்ச்சியை தெரிவித்தாள்..
அகிலா எழுந்து முன்னால் செல்ல, மதுவை ஒட்டி அமர்ந்திருந்த அவள் இருக்கை காலியாக இருக்க, நிகிலன் பக்கம் மற்றொருவர் வரவும் அவன் தன் இருக்கையில் இருந்து எழுந்து அகிலா அமர்ந்திருந்த இருக்கைக்கு மாறி அமர்ந்தான்...
திடீரென்று தன் அருகில் அவன் அமரவும் திடுக்கிட்டவள் உள்ளுக்குள் படபட்பபாக இருந்தது...அவன் அருகில் ஒட்டி அமர என்னவோ போல இருந்தது....
மெல்ல நெழிந்தவள் தன் மாமியாரின் பக்கம் சென்று அவரை ஒட்டி அமர்ந்து கொண்டாள்...
அதன் பிறகு விழா ஆரம்பிக்க, சிறப்பு விருந்தினரின் பேச்சு அவளுக்குமே ஊக்கமளிப்பதாக இருந்தது..
அவளுக்குமே அகிலா மாதிரி நேசனல் ல ஜெயிக்கணும் என்ற உறுதி கொண்டாள்.. அகிலா பரிசு வழங்கும் பொழுது ஆரவரித்து கை தட்டி தன் அலைபேசியில் அதை பதிந்து கொண்டாள்..
நிகிலன் அவளின் சிரிப்பையும் சந்தோசத்தையும் கண்டு யோசனையில் ஆழ்ந்தான்..
“எப்படி தன் தங்கையிடம் இவள் இப்படி செல்லம் கொஞ்சரா?? கணவனின் தங்கையை எதோ வில்லியாக பார்க்காமல் அவளுக்காக அவனையே திட்டியது நினைவு வர, அவள் மேல் அவனுக்கு கொஞ்சம் இருந்த சாப்ட் கார்னர் மேலும் வளர ஆரம்பித்தது..
அகிலாவும் உற்சாகத்துடன் பரிசை வாங்கி வந்து தன் அண்ணனிடம் கொடுக்க , அவனோ தன் அம்மாவிடம் கொடுக்க சொன்னான்..
சிவகாமிக்கும் பெருமையாக இருந்தது...
அகிலாவை கட்டி கொண்டார்.. இந்நேரம் தன் கணவன் ம் சின்ன மகனும் அருகில் இல்லையே என்று உள்ளுக்குள் சிறு கவலை இருந்தாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் சிரித்தார்...
விழா முடிந்ததும் காரை எடுக்க செல்ல, அவன் வழியில் சந்தித்தவர்கள் எல்லாம் அவனுக்கு சல்யூட் வைக்க மதுவுக்கு யோசனையாக இருந்தது..
ஒரு சாதாரண போலிஸ்க்கு எதுக்கு மத்தவங்க எல்லாம் விஷ்பண்றாங்க?? ஏன் அந்த இன்ஸ்பெக்டர் கூட விஷ் பண்ணாரே... ஒரு வேளை இவன் சாதாரண போலிஸ் இல்லையோ?? “ என்று யோசித்தாள்..
“ஆனால் அதை எப்படி யாரிடம் கேட்பது?? அதுவும் அகிலாவிடம் கேட்டால் அவ்வளவுதான்.. என்னை ஏதாவது கிண்டல் அtடிப்பாள்.. “ என்று தன் மனதை மறைத்து கொண்டாள் மது...
மூன்று பெண்களும் பின்னால் அமர்ந்து கொண்டு கதை அடித்துக் கொண்டே வர, மதுவின் பார்வை மட்டும் புதிதாக முன்னால் இருந்தவன் மீது அப்பப்ப தீண்டி வந்தது..
காரை எடுத்து கிளம்பியவன் ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலில் நிறுத்தினான் நிகிலன்...
அதை கண்ட அகிலா கண்களை விரித்து
“அண்ணா.. எதுக்கு இங்க வந்திருக்கோம்?? “ என்றாள் புரியாதவாறு
“ஹ்ம்ம்ம்ம் என் தங்கச்சி நேசனல் சேம்பியன் ஆகியிருக்கா இல்ல…அத கொண்டாடத்தான்... அதுக்குதான் அவளுக்கு இந்த ட்ரீட்.. “ என்று கண் சிமிட்ட, அகிலா மயக்கம் போடாத குறைதான்...
“இந்த அண்ணனுக்கு கூட இப்படி எல்லாம் பேசி சிரிக்க வருமா?? என்ன அதிசயம் இது?? ஒரே நாள்ல என்னவெல்லாம் மாறி போச்சே... “ என்று அவனையே ஆச்சர்யமாக பார்த்தாள் அகிலா..
“சரி இறங்கி உள்ள போங்க.. நான் பார்க் பண்ணிட்டு வர்ரேன்.. “ என்றவாறு அவர்களை இறக்கி விட்டு சென்றான்..
மூவரும் உள்ளே சென்றதும் நால்வர் அமரும் மேஜை காலியாக இருக்க, மதுவும் அகிலாவும் ஒரு பக்கம் அமர்ந்து கொள்ள, சிவகாமி மற்றோரு பக்கம் அமர்ந்து கொண்டார்...
அகிலா மெனு கார்டை எடுத்து மதுவுக்கு விளக்கி கொண்டிருந்தாள்... சிவகாமி இருவரின் வாயை பார்த்து கொண்டிருக்க, உள்ளே வந்த நிகிலன் சிவகாமியின் அருகில் மதுவுக்கு எதிர்புறமாக அமர்ந்து கொண்டான்..
அவனை கண்டதும் அதுவரை சிரித்து பேசியவள் அமைதியாகி தலையை குனிந்து கொண்டாள் மது...
பின் அகிலா தங்களுக்கு பிடித்ததை ஆர்டர் பண்ண, மதுவுக்கு தான் தலையை நிமிர்த்த என்னவோ போல் இருந்தது...நிமிர்ந்தால் எதிரில் இருப்பவனை பார்க்க வேண்டுமே..
ஏனோ இன்று அவனை நேராக பார்க்கும் தைர்யம் வரவில்லை... அவனை பார்க்கும் பொழுது வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறப்பதை போல இருந்தது... அவளுக்கே அது புதிதாக இருந்தது..
நேற்று வரை அவனை காண பயந்து கொண்டு குனிந்து கொண்டவளுக்கு, இன்று பயத்திற்கு பதிலாக வேற ஏதோ உணர்வு ஆட்கொள்ள, எப்பவும் போல அகிலாவை மட்டுமே பார்த்து பேசி இல்ல அகிலா பேசுவதை கேட்டு கொண்டிருந்தாள்..
நிகிலன் தன் அன்னையிடமும் அகிலாவிடமும் இயல்பாக ஏதோ பேசி கொண்டிருக்க, ஏனோ அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள் ஓரக்கண்ணால்...
எதேச்சையாக திரும்பிய சிவகாமி தன் மருமகளின் பார்வை போன திசையை காணவும் உள்ளுக்குள் சிரித்து கொண்டார்...
அதன் பிறகு உணவு வர, அனைவரும் சாப்பிட, மதுவுக்கோ ஏனோ படு அவஸ்தையாக இருந்தது...
அவள் கண்கள் அவளையும் மீறி அடிக்கடி எதிர்புறம் சென்று நின்றது.. என்னதான் கட்டுபடுத்த முயன்றாலும் அவளையும் மீறி அவன் புறமே சென்றது...
அவன் அந்த உணவை இலாவகமாக எடுத்து சாப்பிடும் பொழுது அவன் அடர்ந்த மீசையும் சிரிப்பதை போல இருந்தது.. அவனின் இதழ்களில் அந்த ஐஸ்கிரிம் பட்டு கரைவதை காண, இன்னும் அவள் உள்ளுக்குள் கரைந்து போனாள் அவளை அறியாமலயே....
கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு திருமணம் ஆகிவிட்டது... அந்த விருமாண்டி தான் அவள் கணவன் என்று உணர ஆரம்பிக்க, அதுவரை குழந்தைதனமாக துள்ளி குதித்து கொண்டிருந்தவள் முகத்திலும் உடலிலும் புது வெக்கம் வந்து சேர்ந்தது...
அவள் மனதில் மலர ஆரம்பித்து இருந்த திருமண மலர் இன்னும் கொஞ்சம் நன்றாக விரிய ஆரம்பிக்க, இன்னும் கொஞ்சமே கொஞ்சம் தயக்கம் மட்டும் பாக்கி இருந்தது அவனை முழுவதும் தன் கணவனாக ஏற்று கொள்ள....
அது என்னவென்று தான் தெரியவில்லை... அவளுக்குமே ஆச்சர்யமாக இருந்தது தன்னை நினைத்து...
நேற்று வரை இல்லாத மாற்றம் என் மனதில் இன்று ஏன் திடீரென்று வந்தது?? ஏன் என் கண்களும் மனமும் அவனிடமே சென்று நிற்கிறது?? என்ன ஆச்சு எனக்கு?? “ என்று யோசிக்க, சமீபத்தில் கேட்ட திரைப்பட பாடல்தான் நினைவு வந்தது..
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா?? இளமை பொங்கி விட்டதா ??
இதயம் சிந்தி விட்டதா ?? சொல் மனமே…
என்ற அந்த பாடலை மனதுக்குள் பாடி பார்த்து ரசித்தாள்...
“அந்த பாடலில் வருவது போல, அப்ப இதற்கு பெயர்தான் காதலா?? “என்று எண்ணுகையிலயே அவள் கன்னம் இலேசாக சிவக்க ஆரம்பித்தது....தன்னை கஷ்ட பட்டு மறைத்து கொண்டு அகிலாவிடம் இயல்பாக இருக்குமாறு காட்டிக்கொண்டாள்...
பாவம்.. பூவின் மொட்டு மலர்வது எப்ப எப்படி என்று யாருக்கும் தெரியாதோ அதே மாதிரி ஒருவருக்குள் காதல் வருவதும் யாரும் அரிந்திராதது... ஏன், எப்படி, எப்ப வரும் என்று யாருக்கும் தெரியாத அறியாத அந்த காதல் மதுவந்தினியயும் பிடித்துக் கொண்டதோ??
தன் மருமகளை கொஞ்ச நேரமாகவே கவனித்து வந்த சிவகாமிக்கு அவள் முகத்திலும் கண்ணிலும் வந்திருந்த மாற்றம் ஆச்சர்யத்தை கொடுத்தது...
அதோடு அப்பப்ப அவளை கவனிக்க, அவள் பார்வை அடிக்கடி தன் மகனிடம் சென்று வந்ததை கண்டதும் ஏதோ புரிவதை போல இருந்தது..
இதுவரை தன் மகனை கண்டால் மிரளும் அவள் கண்களில் இன்று ஏனோ புதுவித ஒளி இருப்பது தெரிய, தன் மருமகளின் மனதில் வந்த மாற்றம் அந்த தாய்+மாமியார்க்கு நன்றாக தெரிந்தது.....
அதை உணர்ந்ததும் சிவகாமி மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார் சிறுபிள்ளையாக...
தன் மருமகளுக்கு பிடிக்காத கல்யாணத்தை பண்ணி வைத்து அவளை கஷ்ட பட வைக்கிறமோ என்று அவர் உள்ளுக்குள் அறித்து வந்த கவலை இன்று பறந்து போனதை போல இருந்தது...
“முருகா.. எப்படியோ என் மருமக மனசுல அவள் திருமணத்தை ஏத்துக்க வச்சுட்ட..இப்ப அவ புருசனை உணர்ந்திட்டா னு நினைக்கிறேன்...
இதே மாதிரி தன் பொண்டாட்டி இவ்வளவு ஆசையாக பார்த்தும் ஒன்னுமே கண்டுக்காம முறுக்கிகிட்டு இருக்கற இந்த முரட்டு பையனையும் கொஞ்சம் மனச மாத்தி அவன் பொண்டாட்டிய ஏத்துக்க வச்சிடு...
இத மட்டும் நடத்தி வச்சுடு... உனக்கு காவடி எடுக்கறேன்... அதோட என் குறை எல்லாம் தீர்ந்து போய்டும்.. நீயும் என் தொல்லை இல்லாம பிரியாகிடலாம்... “ என்று அவசரமாக அந்த வேலனிடம் தன் வேண்டுதலை வைத்தார் சிவகாமி....
“ஹா ஹா ஹா.. யாமிருக்க பயமேன் சிவா!!! ... சீக்கிரமே இந்த விருமாண்டியையும் மாத்திடலாம்... எவ்வளவோ பண்ணியாச்சு.. இத பண்ண மாட்டனா?? அடுத்து என் ஆட்டத்தை பொறுத்திருந்து பார்... “ என்று குறும்பு சிரிப்பை சிரித்துக் கொண்டான் அந்த வடிவேலன்.....
நல்லா இருக்கு
ReplyDelete