தவமின்றி கிடைத்த வரமே-19


அத்தியாயம்-19 

மித்ரா மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் அன்று பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது....

ஒவ்வொரு பிரிவிலுமே நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது..அதுவும் கைனிக் பிரிவில் சொல்லவே வேண்டாம்.... கைனிக் பிரிவில் மட்டும் மூன்று பிரபல கைனிக் மருத்துவர்கள் வெவ்வேறு அறைகளில் அன்று வந்திருந்த பேசன்ட்ஸ்களை பரிசோதித்து கொண்டிருந்தனர்...

ஒவ்வொரு அறையிலுமே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது....அதுவும் மித்ரா வின் அறையில் கூட்டம் இன்னும் அதிகம்...

கைனிக் பிரிவில் புகழ்பெற்ற முன்னனி மருத்துவர்களில் மித்ராவும் ஒன்று..

ஆரம்பத்தில் இந்த துறையில் விருப்பம் இல்லாமல் தான் இருந்தாள்....

MBBS முடித்ததுமே மேல படிக்க விருப்பம் இல்லாமல் தான் இருந்தாள்... ஆனால் வசி MD படிக்கவும் தானும் அதே படிக்க வேண்டும் என தோன்ற அதில் சேர்ந்தாள்..

என்ன ஸ்பெஷலைசேசன் பண்ணுவது என்று யோசிக்க, வசிதான் கைனிக் பிரிவை அவளுக்கு சஜஸ்ட் பண்ணி அவளுக்காக அப்ளிகேசனும் போட்டு வைத்தான்...

ஆரம்பத்தில் விருப்பம் இல்லாமல் சென்று வந்தவளுக்கு வசி அந்த துறையை பற்றி அடிக்கடி புகழ்ந்து பேசி அவளை மோட்டிவேட் பண்ண, அவளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் அதிகமானது...

அதுவும் ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகில் அடி எடுத்து வைப்பதை பார்க்கும் பொழுது அவளுக்குள் சிலிர்த்து போகும்...

ஒரு உயிரை அது உருவாகிய நாளில் இருந்து அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதை கண்கானித்து அந்த உயிரை இறுதியில் இந்த உலகுக்கு நல்ல படியாக கொண்டு வந்த பெருமை, ஒரு மன நிறைவு அவள் உள்ளே பரவும்...

முதலில் டெலிவரியை பார்த்து பயந்தவள் பின் அதுவே பழகி விட, அந்த துறையிலயே இன்னும் ஆழ்ந்து படிக்க ஆரம்பித்தாள்..

இந்த துறையில் இருக்கும் நவீன வசதிகள் ( latest technology) மற்றும் குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுதே அதை ஸ்கேன் பண்ணி ஏதாவது குறை இருக்கிறதா என்று கண்டறியும் வெவ்வேறு வகையான ஸ்கேனிங் முறைகளையும் கற்றிருந்தாள்...

அவள் கை ராசி என்றே நிறைய பேர் அவள் தான் வேண்டும் என்று கேட்டு அவளுக்காக காத்திருந்து அப்பாய்ன்ட் மென்ட் வாங்கி அவளை பார்க்க வருபவர்கள் அதிகம்...

இன்றும் அதே போல மித்ரா அவளுடைய ரெகுலர் பேசன்ட்ஸ் நிறைய பேர் காத்திருக்க, அந்த பிசியில் தன் அலைபேசியை அணைத்து வைத்து விட்டு தன் கடமையை செய்து கொண்டிருந்தாள்...

அத்தனை பேரை பார்த்தாலும் கொஞ்சம் கூட கலைப்பை முகத்தில் காட்டாமல் சிரித்த முகமாக ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணையும் அன்பாக விசாரித்து அவர்களை பரிசோதித்து கொண்டிருந்தாள்...

பொது மருத்துவருக்கான பகுதி கொஞ்சம் தள்ளி இருந்தது... அங்கேயும் சில அறைகள் ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒதுக்கபட்டு பொதுவான பிரச்சனைகளை சொல்லி வருபவர்களை பரிசோதித்து கொண்டிருந்தனர்....

அதில் ஒரு அறையில் ஷ்யாம் தன்னிடம் வந்திருக்கும் பேசன்ட்ஸ் களை பரிசோதித்து கொண்டிருந்தான்.. அவன் இடம் வந்தவர்கள் அனைவரும் பரிசோதனை முடிந்து சென்றிருக்க, கைகளை நீட்டி நெட்டி முறித்தவன் தன் அலைபேசியை ஆன் பண்ணினான்....

ஆன் பண்ணின உடனெ அவனுக்கு மெசேஜ் வந்ததற்கான அறி குறியாக ஒலி எழுப்ப, அதை கண்டவன் அது வசியிடம் இருந்து வந்திருக்க, உடனே அந்த செய்தியை திறந்து படித்தான்...

அதை படித்தவன் அப்படியே உறைந்து நின்றான்.... அதை நம்பாமல் வாட்ஸ்அப் ஐ ஓபன் பண்ணி பார்க்க அதிலும் அதே செய்திதான் இருந்தது...

அதாவது வசி தன் பேசன்ட் ஒருவரின் உயிரை காப்பாற்ற அவசரமாக அவர் மகளை மணக்க போவதாகவும் அவர்களை உடனே கிளம்பி அவன் திருமணத்திற்கு வருமாறு அந்த மருத்துவமனையின் பெயரை சொல்லி சீக்கிரம் வருமாறு அழைத்து இருந்தான்...

அதை கண்ட ஷ்யாமிற்கு எப்படி உணர்வது என்று புரியவில்லை...

வசிக்கு திருமணம் என்றால் இனி மித்ரா வாழ்வில் வசி இல்லை....

அவனுக்கு தடையாக இருப்பது மித்ரா வசியை விரும்புவது தான்.. இப்ப அவனுக்கு திருமணம் ஆகி விட்டால் மித்ரா கண்டிப்பாக மனம் மாறி தன்னை ஏற்று கொள்வாள் ... “ என்று துள்ளி குதித்தது ஒரு மனம்..

மறு மனமோ இந்த விசயம் மட்டும் மித்ராவுக்கு தெரிந்தால் உடைந்து விடுவாளே.!!. வசி மீது அவள் உயிராக இருப்பது அவனுக்கும் தெரியும்..

அவனுக்காகத் தான் இத்தனை வருடங்களாக திருமணத்தை மறுத்து வருகிறாள் என்பதும் ஷ்யாம் அறிந்ததே...

“இப்படி அவன் மீது பைத்தியமாக இருப்பவள் இந்த செய்தியை எப்படி எடுத்து கொள்வாள்??? ஒருவேளை இந்த விசயம் தெரிந்தால் கண்டிப்பா திருமணத்தை நிறுத்த முயல்வாள்..

அப்புறம் வசிக்கு திருமணம் நடக்காது.. மித்ராவும் அதே பழைய பல்லவியைத்தான் பாடிகிட்டிருப்பா...

கண்டிப்பா அவள் இன்னும் அவளுக்கு வந்த செய்தியை பார்த்திருக்க மாட்டாள்... பேசாம இந்த செய்தியை மித்ரா கிட்ட சொல்லாமல் மறைச்சிடலாமா??

அவள் அந்த செய்தியை பார்க்கும் பொழுது பார்த்து கொள்ளட்டும்... அதற்குள் வசி திருமணம் முடிந்திருக்கும்... “ . என்று அவசரமாக யோசித்தான் ஷ்யாம்...

அடுத்த நொடி

“சே.. நான் எப்ப இருந்து இப்படி சுய நலவாதியா மாறினேன்?? என்ன ஆனாலும் இந்த விசயத்தை மித்ரா கிட்ட சொல்லிதான் ஆகணும்...வசி எங்களுக்காக காத்து கொண்டிருப்பான்...

அவன் திருமணத்திற்கு சென்று அவனை வாழ்த்துவதுதான் முறை.... “என்று முடிவு செய்தவன் தன் அறையில் இருந்து வெளி வந்து மித்ரா இருந்த அறைக்கு வேகமாக விரைந்தான்....

வெளியில் இருந்த அட்டென்டரிடம் மித்ராவை சந்திக்க வேண்டும் என கூற, அவளோ உள்ளே சென்று மித்ராவிடம் ஷ்யாம் வந்திருப்பதாக கூறினாள்....

ஆனால் மித்ராவோ தான் ட்யூட்டியில் இருப்பதாகவும் பிறகு பார்க்கறேன் என்று சொல்லி திருப்பி அனுப்பி வைத்தாள்..

மீண்டும் ஷ்யாம் முக்கியமான விசயம் என்று சொல்லி திரும்ப சொல்ல, பின் மித்ராவே எழுந்து வெளியில் வந்தாள்....

அவளிடன் தன் அலைபேசியை காட்டி அவனுக்கு வந்த செய்தியை காட்ட அதை கண்டவள் , அவளுமே அதிர்ந்துதான் போனாள்...

வேகமாக தன் அறைக்கு உள்ளே சென்றவள் தன் அலைபேசியை உயிர்பித்து அவளுக்கு வந்திருந்த குறுஞ்செய்தியை பார்க்க, வசி அவளுக்கும் அதே செய்தியை அனுப்பி இருந்தான்....

அதை பார்த்து மேலும் அதிர்ந்தவள் அவன் எண்ணிற்கு அழைக்க, அதுவோ ரிங் போய் கொண்டே இருந்தது.. அவன் அதை எடுக்கவில்லை... அவசரத்தில் அவன் அலைபேசியை எங்கயோ வைத்து விட்டான் போல...

இப்ப என்ன செய்ய?? என்று யோசித்தவள் உடனே மீண்டும் அவள் அறைக்குள் சென்று இன்டர்காம் ல் பக்கத்து அறையில் இருந்த மற்றொரு கைனிக் டாக்டரை அழைத்து அவள் அறையில் இருக்கும் பேசன்ட்ஸ்களையும் பார்த்துக்க சொன்னாள் மித்ரா...

பின் அங்கு காத்திருந்தவர்களிடம் திரும்பி தான் அவசரமாக செல்ல வேண்டும் என்பதால் மீதி இருந்த பேசன்ட்ஸ்களை மற்றொரு மருத்துவர் பார்ப்பார் என்றும் அவள் தான் வேண்டும் என்றால் நாளை வரச் சொல்லி விட்டு அவசரமாக தன் கைப்பையை எடுத்து கொண்டு வெளியில் வந்தவள்

“வாங்க ஷ்யாம்.... நாம உடனே போகணும்.. இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்தணும்... வசி அவசரத்துல ஏதோ இப்படி தப்பான முடிவு எடுத்துட்டான்.... இதை எப்படியாவது தடுத்து நிறுத்தணும்.... “ என்றவள் வேகமாக முன்னே நடந்தாள்...

அவளின் வேக நடைக்கு ஈடு கொடுத்து அவளுடன் ஓட வேண்டி இருந்தது ஷ்யாமிற்கு...

பார்க்கிங் ஐ அடைந்தவள் வேகமாக தன் கார் கதவை திறந்து ஷ்யாம் ஐ முன்னால் அமர சொல்லி, பின் ஓட்டுனர் இருக்கைக்கு வந்தவள் வேகமாக உள்ளே அமர்ந்து பின் வேகமாக காரை கிளப்பி புயல் என பறந்தாள் வசி சொல்லி இருந்த அந்த மருத்துவமனையை நோக்கி.....

அவள் கார் ஓட்டும் வேகத்தை கண்டு ஷ்யாம் அரண்டு போனான்....

எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை..

அவள் மனமெல்லாம்

“இந்த கல்யாணம் நடக்க கூடாது... இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும்.... வசி எனக்கு சொந்தமானவன் .. எனக்கு மட்டுமே சொந்தமானவன்.. வேற யார்க்கும் அவனை விட்டு கொடுக்க மாட்டேன்... “ என்று மனதுக்குள் புலம்பியவள் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தினாள்...

அவளின் நிலை ஷ்யாமிற்கும் புரிந்தது....அவள் முகம் வெளுத்து இறுகி ஒரு வித பதற்றத்துடன் வசியை மிஸ் பண்ணிவிடக் கூடாது என்ற வேகத்தில் அவள் காரை செலுத்துவதை கண்டு அவள் மேல் இரக்கப்படத்தான் முடிந்தது ஷ்யாமால்...

“இப்படி அவன் மீது பைத்தியம் ஆக இருப்பவளை ஏன் தான் வசி புரிந்து கொள்ள மாட்டேங்கிறானோ?? அவள் காதலை ஏற்றுக் கொண்டிருக்கலாம்.. இவள் இப்படி வேதனை படும் அளவுக்கு வந்திருக்காது... “ என்று உள்ளுக்குள் புலம்பினான்...

ஏனோ அவள் முகம் வாடுவதையும் அவள் டென்சனோடு இருப்பதையும் பார்க்க முடியவில்லை ஷ்யாமால்.... அவள் படும் அதே வேதனை தானே அவனும் தினம் தினம் அனுபவித்து வருகிறான்....

அவன் உயிராக விரும்புபவள் அவன் கண் முன்னே இன்னொருத்தனுக்காக ஏங்குவதை பார்த்து தன் வேதனையை உள்ளுக்குள் அழுத்தி கொண்டுதான் நடமாடி கொண்டிருக்கிறான்....

அவன் அவள் மீது கொண்டிருக்கும் காதலை எப்படி மறந்து வேற ஒரு பெண்ணை ஏற்று கொள்ள முடியவில்லையோ அதே போலத்தான் மித்ராவுக்கும் வசி மீது கொண்ட அவள் காதலை மறக்க முடியவில்லை என்பது புரிந்தது...

“ஆனால் வசி?? “ என்று யோசித்தவன்

அவன் மித்ராவை புரிந்து கொள்ளாமல் அவனுடைய வருங்கால காதலுக்காக காத்திருக்கிறான்...

“காதல் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன்..!!! “ என்றல்லவா தவம் இருக்கிறான்..

இப்படி ஒவ்வொருத்தருக்கும் அவர் அவர் சார்பில் இருந்து பார்த்தால் அவர்கள் செய்வது நியாயம் ஆகத்தான் தெரியும்...

“ஹ்ம்ம்ம்ம்ம் எல்லாம் அந்த ஈசன் விட்ட வழி... நடக்கறது நடக்கட்டும்... “ என்று பெருமூச்சு விட்டவன் மித்ராவின் பதற்றத்தை தணிக்கும் வகையில் அவள் கையை மெல்ல அழுத்தி அவளுக்கு ஆறுதல் சொன்னான்....

மருத்துவமனையை அடைந்ததும் காரை வெளியிலயே விட்டு விட்டு ஷ்யாம் ஐ அதை பார்க்கிங் ல் பார்க் பண்ண சொல்லி விட்டு அவசரமாக உள்ளே வந்தாள் மித்ரா..

ரிசப்சனில் வசியை பற்றி சொல்லி அவன் திருமணம் எந்த அறையில் நடப்பதாக கேட்டாள்..

அப்பொழுது அந்த மருத்துவமனையே இந்த திடீர் திருமணத்தை கேள்வி பட்டு எல்லாரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள்...

“ஒரு பேசன்ட் உயிரை காப்பாற்ற திருமணம் வரை செல்கிறாரே அந்த டாக்டர்..!!!” என்று வசீகரனை எல்லாரும் புகழ்ந்து பேசி கொண்டிருந்தனர்...

நம்ம ஊர்லதான் ஏதாவது வதந்தி இல்லை ஃப்ளாஷ் நியூஸ் என்றால் காட்டுத் தீயை விட வேகமாக பரவுமே !!

அதை போல அந்த ரிசப்னிஸ்ட் க்கும் வசியின் திடீர் திருமணம் செய்தி வந்திருக்க, மித்ரா கேட்ட உடனே அந்த அறை இருந்த தளத்தை சொன்னாள்....

உடனே மித்ரா லிப்ட் இருந்த இடத்திற்கு விரைய அது கீழிறங்க நேரம் ஆவதை போல இருக்க, அதற்கு காத்திருக்காமல் மாடிப் படிகளில் வேகமாக தாவி ஏறினாள்...

அந்த தளத்தை அடைந்ததும் வேக நடையுடன் அந்த அறையை அடைந்து வாயிலில் நின்று உள்ளே பார்க்க , உள்ளே கும்பலாக இருந்தது....

ஓரளவுக்கு தன்னை சமாளித்து கொண்டு கண்களை சுறுக்கி உற்று பார்க்க, உள்ளே பனிமலரின் அப்பா நோயாளி படுக்கையில் படுத்திருக்க, அவர் அருகில் வசி மணக் கோலத்தில் நின்றிருந்தான்...

பட்டு வேஷ்டி சடையில் கழுத்தில் நீண்ட கனமான மாலையுடன் கையில் தாலி கயிற்றுடன் நின்றிருக்க, அருகில் அந்த பெண்ணும் மணக் கோலத்தில் குனிந்த படி நின்றிருந்தாள்.....

அந்த நிமிடம் வசி அந்த கயிற்றை அவள் கழுத்தின் அருகில் கொண்டு செல்ல, மித்ராவோ அதிர்ந்து போய் அதிர்ச்சியில் வார்த்தை வராமல் திக்கித்து நின்றாள்......

சில நொடிகளில் தன்னை சுதாரித்து கொண்டவள்

“வேண்டாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. நிறுத்துங்கககககக... “ என்று சொல்ல வர, ஆனால் அவள் வாயிலிருந்து வார்த்தை வரவில்லை....

காரை நிறுத்தி விட்டு வேகமாக ஓடி வந்திருந்த ஷ்யாம் மித்ராவின் பின்னால் இருந்து அவள் வாயை தன் கையால் பொத்தி இருந்தான்... அதற்குள் வசி மலரின் கழுத்தில் தாலியை கட்டியிருந்தான்.....

அதை கண்டவளுக்கு இந்த உலகமே வேகமாக சுற்றுவதை போல இருந்தது... கால்கள் தள்ளாட அருகில் நின்றிருந்த ஷ்யாமை மெல்ல பற்றி கொண்டாள்..

ஷ்யாமும் அவள் நிலை புரிந்து அவளை மெல்ல தன் தோள் சாய்த்து அணைத்து கொண்டான்...

வசி இரண்டு முடிச்சிட, வசுந்தரா மூன்றாவது முடிச்சிட, அந்த பெண்ணை வசி தன் மனைவியாக்கி கொண்டிருந்தான்..... அதன் பின் அவர்கள் திருமணத்தை ரிஜிஸ்டரும் பண்ணி விட, மித்ராவால் அதை பார்க்க தாங்க முடியவில்லை...

இலவு காத்த கிளி போல வசிக்காக எத்தனை வருடமாக காத்திருக்கிறாள்..!! . ஆனால் நேற்று வந்தவள் அவனை முழுவதும் தனக்கானவன் என சொந்தமாக்கி கொண்டாளே..!! என எண்ண இன்னும் வலித்தது அவள் உள்ளே.....

அதற்கு மேல் அங்கு நடை பெறும் சடங்குகளை பார்க்க அவள் மனதில் தைர்யம் இல்லை.... மெல்ல கண்ணை மூடிக் கொள்ள, ஷ்யாம் அவளை கைத்தாங்கலாக வெளியில் அழைத்து சென்றான்....

பின் லிப்ட் ல் கீழ் இறங்கி வந்து கேன்டின் இருக்கும் தளத்திற்கு அவளை அழைத்துச் சென்றான்.... அவளோ நடை பிணமாக அவன் சொன்னதை செய்தாள்.... ஆனால் அவள் இதயம் மட்டும் வசிக்காக துடித்து கொண்டிருந்தது...

கேன்டின் க்கு அழைத்து சென்றவன் ஒரு இருக்கையில் அவளை அமர வைத்து ஒரு டீ யை வாங்கி வந்தான் .. அதிக சர்க்கரை போட சொல்லி சூடான டீயை வாங்கி கொண்டு வந்தவன் அவளிடம் கொடுத்தது குடிக்க சொல்ல அவளோ மறுத்து விட்டாள்..

பின் அவனே அந்த டீ கப் ஐ அவள் வாயில் வைத்து வற்புறுத்தி குடிக்க வைக்க, அவளும் அதற்கு மேல் மறுக்க முடியாமல் ஷ்யாம் வாயில் வைத்திருந்த டீ யை மெல்ல உறிஞ்ச ஆரம்பித்தாள்....

அந்த சூடான டீ தொண்டையில் இறங்கியதும் கொஞ்சம் தெளிந்தாள்.. அந்த முழு டீயை குடித்து முடித்ததும் ஷ்யாமிடம் திரும்பி

“ரொம்ப தேங்க்ஷ் ஷ்யாம்... நீ இல்லைனா அங்கயே மயக்கம் போட்டிருப்பேன்....இந்த வசி ஏன் இப்படி பண்ணிட்டான்..?? ஆமாம் நீ ஏன் என் வாயை பொத்தின?? “ என்றாள் இலேசாக அவனை முறைத்தவாறு..

“வந்து... வசி அவன் பேசன்ட் ஐ காப்பாற்றத்தான் இந்த திடீர் கல்யாணம் பண்ணறேன் னு மெசேஜ் அனுப்பி இருந்தான் இல்லை... நீ போய் கடைசி நேரத்துல ஏதாவது சொல்லி இந்த திருமணத்தை நிறுத்தி இருந்தால் , அந்த பேசன்ட்க்கு ஏதாவது ஒன்னு ஆகியிருந்தால் அப்புறம் வசி உன்னை மன்னிக்கவே மாட்டான்...

அவனை பத்திதான் உனக்கு தெரியும் இல்ல.. ஒவ்வொரு உயிரையும் காக்க அவன் எவ்வளவு போராடுவான் என்று.. உன்னால் அவர் உயிர் போயிருந்தால் அப்புறம் உன் முகத்துல கூட வசி முழிக்க மாட்டான்....

அதோடு அங்க பார்த்த இல்ல.. எத்தனை பேர் இந்த கல்யாணத்துக்காக மகிழ்ந்து போய் நின்னு கிட்டிருந்தாங்க... அதுவும் வசியோட அம்மா அப்பாவை பார்த்த இல்ல.. . எவ்வளவு மகிழ்ச்சியா இருந்தாங்க...

நீ ஏதாவது சொல்லி இந்த திருமணத்தை நிறுத்தி அவங்க சாபத்தையும் நீ வாங்ககிக்க வேண்டாம் னு தான் உன்னை எதுவும் சொல்ல விடாமல் தடுத்திட்டேன்...

“சாரி மித்ரா.. நான் செஞ்சது தப்புனா என்னை மன்னித்து விடு... “ என்றான் வருத்தத்துடன்....

அப்பதான் மித்ராவுக்குமே ஷ்யாம் சொன்னது எவ்வளவு உண்மையான வார்த்தைகள் என புரிந்தது.... வசிக்கு அவன் பேசன்ட் உயிர் எவ்வளவு முக்கியம் என்பது அவள் அறிந்ததே...

“சே.. நான் பாட்டுக்கு ஆத்திரத்தில் என்ன ஒரு முட்டாள் தனம் செய்ய இருந்தேன்.... நல்ல வேளை ஷ்யாம் தடுத்திட்டான்.. இல்லைனா கண்டிப்பா நான் வசியை முழுவதுமாக இழந்திருப்பேன் தான்.... “ என்று யோசித்தவள் ஷ்யாமை பார்த்து

“ஆனாலும் இந்த வசி இப்படி பண்ணி இருக்க கூடாது ஷ்யாம்.. இவன் மேல நான் உயிரையே வச்சிருக்கேன் னு உனக்கே தெரியும் இல்லை....நான் அவன் கிட்ட என்னை கல்யாணம் பண்ணிக்கோ என்று கெஞ்சிய பொழுதெல்லாம்

அவனுக்கு என் மீது காதல் வரலை.. வெறும் ப்ரண்ட்ஷிப் மட்டும் தான்...என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது னு வாய் கிழிய பேசினான் இல்லை... இப்ப இந்த திடீர் கல்யாணத்துல மட்டும் உடனே காதல் வந்துடுச்சா அவனுக்கு???

காதல் இல்லாமல் தான யாருனே தெரியாத அந்த பொண்ணை கல்யாணம் பண்றான்....

அதுவும் அந்த பொண்ணோட அப்பாக்கு ஹார்ட் அட்டாக் வந்ததால் அவரை காப்பாற்ற இவன் வாழ்க்கையை பலி கொடுக்கறான்..

இப்படினு தெரிந்திருந்தால் என் அப்பாவுக்கு இது மாதிரி எதாவது அட்டாக் வந்திருக்கலாம்... அப்ப என் அப்பாவை காப்பாற்ற என்னை கல்யாணம் பண்ணி இருப்பானோ ??

ஹ்ம்ம்ம்ம் என் அப்பாவுக்கு ஏதாவது வந்திருக்கணும்.. “ என்று சொல்ல வந்தவளை ஷ்யாம் மறுபடியும் அவள் வாயை பொத்தினான்....

“ப்ளீஸ்.... அப்படி சொல்லாத மித்ரா.... அங்கிள் நீண்ட ஆயூள் உடன் வாழனும்.. உன் வாயால அவருக்கு எதுவும் வந்திருக்கணும்னு சொல்லாத... “ என்று கடிந்து கொண்டான்....

அதை கேட்டதும் தான் என்ன மாதிரி வார்த்தை சொல்லி விட்டாள் என உறைத்தது மித்ராவுக்கு....

“சே... நான் போய் எப்படி அப்பாவுக்கு ஏதாவது வந்திருக்கணும்னு சொல்ல வாய் வந்தது..... கொஞ்சம் கூட அறிவே இல்லை எனக்கு.. ஆத்திரத்தில் என்ன பேசறேனு தெரியாமல் பேசிட்டேன்..

கடவுளே நான் சொன்னதை எல்லாம் டெலிட் பண்ணிடு...என் மேல உயிரையே வச்சிருக்கார் எங்கப்பா... நான் மனம் வருத்த படுவேன் சொல்லி இத்தனை வருசமா என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கட்டாய படுத்தாமல் எனக்காக விட்டு கொடுத்து பொருமையா இருக்கார்...

இப்படி பட்ட நல்ல அப்பா யார் க்கு கிடைக்கும்....எங்கப்பா நீண்ட ஆயுளுடன் ரொம்ப வருசம் வாழணும் “ என்று அவசரமாக அந்த ஆண்டவனிடம் வேண்டி கொண்டாள் மித்ரா....

பின் சிறிது நேரம் ஷ்யாமிடம் புலம்பி தீர்த்தாள் மித்ரா.....

ஷ்யாமின் நிலைதான் தர்ம சங்கடமாக இருந்தது....

அவன் இதயத்தில் வீற்றிருப்பவள், அவன் காதலி இன்னொருத்தனை உருகி உருகி காதலிப்பதையும் அவன் கிடைக்க வில்லை என்றதும் அவள் பெரும் வலி வேதனை அடைவதையும் பார்க்க பார்க்க அவன் இதயத்தை யாரோ கத்தியால் திருகுவதை போல இருந்தது...

வசி அவள் காதலை ஏற்றுக் கொள்ளாதப்போ அவளுக்கு எப்படி வலிக்குதோ அதே வலிதான் ஷ்யாமுக்கும்....

அவளிடம் தன் காதலை சொல்லாமலயே அவள் தனக்கு இல்லை என முடிவு செய்து கொண்டவன் கை கூடாத அவன் காதலுக்காக, அவன் காதலை மித்ரா புரிந்து கொள்ள மாட்டேங்கிறாளே.. என்ற வலி வேதனை அவன் இதயத்தில்...

இதை எல்லாம் கண்டு அந்த ஈசனும் சிரித்து கொண்டான்.... அவன் திருவிளையாடல் அவன் திட்டமிட்ட படியே நடந்து கொண்டிருப்பதாக எண்ணி சிரித்து கொண்டான்...

சிறிது நேரம் மித்ராவின் புலம்பலை , வலி வேதனை எல்லாம் பொருமையாக பார்த்திருந்தவன் அவள் கையை மெல்ல அழுத்தி கொடுத்து கொண்டிருந்தான்....

அவளும் அவன் தோள் மீது சாய்ந்து கொண்டு அவள் ஆற்றாமை ஏமாற்றம் எல்லாம் அவனிடம் கொட்டி கொண்டிருந்தாள்...

அவள் இருந்த நிலையில் ஷ்யாம் உரிமையாக அவள் கை பிடித்து அழுத்துவதும் அவன் தோள் மீது சாய்த்து கொண்டதும் அவள் அறிவுக்கு எட்டவில்லை.. அவள் தான் வசி மயக்கத்தில் இருக்க அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை...

ஷ்யாமிற்குமே அதே நிலை தான்.. அவள் படும் வலி வேதனையை போக்க எண்ணி தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் அவள் கையை பிடித்து அழுத்தியதும் அவளை தோள் சாய்த்து கொண்டதும்....

ஓரளவுக்கு அவள் புலம்பல் குறைந்திருக்க,

“மித்ரா... ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர்செல்ப்.... சரி வா நாம போய் வசியை பார்த்துட்டு அவனை வாழ்த்திவிட்டு கிளம்பலாம்... “ என்றான் தயக்கத்துடன்..

அதை கேட்டு சடக்கென்று அவள் முகத்தை அவன் பக்கம் திருப்பினாள் மித்ரா....

“என்ன சொல்ற ஷ்யாம்?? நான் எப்படி அவனை பார்க்க முடியும்..??. இல்ல வாழ்த்தத்தான் முடியும்??? வேண்டாம் எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு என்னை மறந்து நான் ஏதாவது செய்துடுவேன்... நான் வரலை... நீ மட்டும் போய்ட்டு வா... “ என்றாள் கண்களில் வலியுடன்...

“இல்லை மித்ரா.... என்னதான் ஆனாலும் வசி நம் நண்பன்... அவன் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டான் ங்கிறதுக்காக நம்ம ப்ரண்ட்ஷிப் எப்படி கட் பண்ண முடியும்.??.

இவ்வளவு அவசரத்திலும் நம்ம இரண்டு பேரையும் மதித்து தவறாமல் அவன் திருமணத்திற்கு அழைத்து இருக்கிறான் என்றால் நம் மீது அவனுக்கு எவ்வளவு பாசம் இருக்கும்... அதனால் நாம் போய் அவனை பார்ப்பது தான் சரி...

நீ உன்னை கன்ட்ரோல் பண்ணிகிட்டு வா.. ஒரு நடை அவனை பார்த்துட்டு வந்திடலாம்... “என்று கெஞ்சி சமாதானம் பண்ணி அவளை மீண்டும் அந்த தளத்திற்கு அழைத்து வந்தான் ஷ்யாம்...

ஷ்யாம் அவளை அங்கு அழைத்து வந்திருக்காமலயே இருந்திருக்கலாம்.... என்று பின்னால் உணர்ந்து ரொம்ப வருத்த படுவான் என அறிந்திருக்கவில்லை அப்பொழுது....

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!