என் மடியில் பூத்த மலரே-15



அத்தியாயம்-15 

து நடந்தாலும், என்ன ஆனாலும் ஜானகி அத்தைக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றனும் என்று எண்ணி கொண்டாள் பாரதி.. அந்த நேரம் அவளின் அலைபேசி ஒலித்தது.. அவள் யாரை நினைத்து கொண்டிருந்தாளோ அவரே அவளை அழைத்து இருந்தார்... அதை கண்டதும் பாரதியின் முகத்தில் புன்னகை அறும்பியது...அதே புன்னகையுடன் அதை அட்டென்ட் பண்ணியவள்

"நூறு ஆயுசு அத்தை உங்களுக்கு.. இப்பதான் உங்களை பற்றி நினைத்தேன்.. நீங்களே போன் பண்ணீட்டிங்க" என்று சிரித்தாள் பாரதி...

"ஹ்ம்ம்ம் எனக்கு நூறு ஆயுசு வாழனும்னு பேராசை எல்லாம் இல்லை பாரதி மா ... என் பேரனையோ பேத்தியையோ பார்த்துட்டு அவங்களோட கொஞ்ச நாள் ஓடியாடி விளையாடிட்டா போதும்ம்.. நான் நிம்மதியா என் ராம் இருக்கற இடத்துக்கே போய்டுவேன் " என்று பெருமூச்சு விட்டார்..

“ஹ்ம்ம் அவ்வளவு சீக்கிரம் உங்கள நிம்மதயா போக விட்டுடுவேனா??? இன்னும் எவ்வளவோ இருக்கு நீங்க பார்க்க, அனுபவிக்க... அதுக்குள்ள போறேனா எப்படியாம்??? "என்று சிரித்தாள்..

“ஹ்ம்ம்ம் உன் பேச்சை கேட்டாதான் எனக்கு தெம்பே வருது.. இன்னும் கொஞ்ச நாள் உங்களோட எல்லாம் வாழனும்னு ஆசையே வருது பாரதிமா... நீ சீக்கிரம் வந்து சேரு.. ஆமா எங்க வந்திருக்க?? சாப்பிட்டியா?? .. ஊர்ல அண்ணா, அன்னி, பாட்டி எல்லாரும் நலமா?? கிழம்பும்பொழுது ஒன்னும் பிரச்சனை இல்லையே?? " என்று தன் கேள்விகளை அடுக்கினார்...

"ஸ்ஸ் அப்பா.... எதுக்கு இவ்வளவு அவசரம் அத்தை?? ஒவ்வொன்னா தான் கேளுங்களேன்.. எப்படி தான் உங்களை வச்சு சமாளிக்கிறாரோ உங்க லவகுஷன் ராஜகுமாரன்" என்றதும் ஜானகியின் முகத்தில் சிரிப்பு வந்தது..

பாரதிக்கு தெரியும் தன் மகனை பற்றி பேசினாலே ஜானகியின் மனம் பூரிக்கும் என்று...அதற்காகவே அவள் அந்த பேச்சை இழுத்தாள்...அவள் நினைத்த மாதிரியே ஜானகியும் புன்னகைத்தார்..

“போதும் அத்தை சிரிச்சது...யாராவுது பார்த்து பயந்திடப்போறாங்க...”

“வாயாடி.. எப்படிதான் உனக்கு தெரியுதோ!!. சரி சொல்லு.. அங்க ஒன்னும் பிரச்சனை இல்லையே??”

"ஹ்ம்ம்ம் ஒன்னும் பிரச்சனை இல்லை அத்தை.. என்ன?? எல்லாரும் கொஞ்சம் கண் கலங்கினாங்க.. நாம யாரு.. அவங்கள அழ விட்டுடுவோமா?? சும்மா கிள்ளி மாதிரி சமாளிச்சுட்டேன் இல்லை "என்று சொல்லும் பொழுதே அவளின் நா தழுதழுத்தது.. அவள் குரல் அடைத்தது

அவளின் வேதனை ஜானகிக்கும் புரிந்தது...

“அதானே.. என் மறுமகள் னா சும்மாவா?? ஒரு ஊரையே சமாளிக்கிறவ இல்லை.. உங்க குடும்பத்துல இருக்கிற நாலு பேரை உன்னால சமாளிக்க முடியாதா என்ன?? " என்று பேச்சை மாற்றினார்..

“ஹ்ம்ம்ம் பரவாலை அத்தை.. நீங்க கூட தேறிட்டீங்க...” என்று ஜானகியின் பேச்சை மாற்றிய தந்திரம் புரிந்து சிரித்தாள் பாரதி..

“கள்ளி.. கண்டுபிடிச்சிட்டியா... சரிடா மா .. ஒன்னும் கவலை படாத.. இன்னும் கொஞ்ச நாளைக்குதான் அப்புறம் உங்க ஊர் மக்களை எல்லாம் போய் பார்க்கலாம்” என்று அவளை சமாதானம் செய்தார்...

"ஹ்ம்ம்ம் சரி அத்தை.. " என்று பாரதியும் தன்னை அதுக்குள் சமாளித்து கொண்டாள்

"சரி.. நான் பஸ் ஸ்டாண்டல வந்து காத்துகிட்டு இருப்பேன்.. வந்திட்டு போன் பண்ணு"

"உங்களுக்கு எதுக்கு சிரமம் அத்தை.. அட்ரஸ் சொல்லுங்க.. நானே வந்திடறேன்.."

"அதெல்லாம் ஒன்னும் சிரமமில்லை.. நானே உன்னை வந்து கூட்டிட்டு போறேன். பத்திரமா வா" என்று போனை வைத்தார்..

பேருந்து சென்னையை அடைந்ததும், ஜானகியின் கார் ட்ரைவர் பேருந்து நிறுத்தத்திற்கே வந்து அவள் பெட்டி, பைகளை எடுத்து கொண்டார்..

“இருக்கட்டும் அண்ணா” என்று அவளும் ஒரு பையை எடுத்துகொண்டு காரை அடைந்தனர்...

காரிலயே காத்திருந்த ஜானகி இறங்கி வேகமாக வந்து அவளை கட்டிகொண்டார்..

பின் காரில் ஏறி இருவரும் பின் சீட்டில் அமர, கார் கிளம்பியது.. ஜானகி ஒரு பையை எடுத்து அதில் இருந்த டிபன் பாக்ஷை திறந்து அவளிடம் கொடுத்தார்...

“நீ வழியில் எதுவும் சாப்பிட்டிருக்க மாட்ட பாரதி.. அதான் வரும்பொழுதே நீ சாப்பிட கொஞ்சமா செஞ்சு எடுத்துகிட்டு வந்துட்டேன்.. இது வெஜிடபுள் பிரியாணிதான்.. சாப்பிடு " என்றார்..

அதை கண்டதும் பாரதிக்கு கண் கலங்கியது.. அவள் வீட்டில் இருந்து கிழம்பிய மன நிலையில் அவளுக்கு பேருந்து வழியில் நின்றதோ, பசியோ எதுவும் தெரியவில்லை. . தன் நிலையை உணர்ந்து அவர் சாப்பிட தரவும் கண்ணை கரித்தது அவளுக்கு...அதை கண்ட ஜானகி பதறி

"ஐயோ!! என்ன இது சின்ன பிள்ளையாட்டம் பாரதி... நீ எவ்வளவு தைரியமான பொண்ணுனு நினைச்சேன்.. நீ போய் சின்ன பிள்ளை மாதிரி கண்ணை கசக்கி கிட்டு இருக்க” என்றார் கவலையுடன்

பாரதியும் உடனே சமாளித்துக்கொண்டு

“நான் ஒன்னும் கண்ணை கசக்கலை அத்தை.. நான் என்ன ஜானகி அத்தையா... எதுக்கு எடுத்தாலும் கண்ணுல தண்ணியை வச்சுகிட்டு இருக்க... என் கண் வேர்த்தது.. அதான் துடைச்சுகிட்டு இருக்கேன் “ என்று சிரித்தாள்...

அதை கண்டதும் ஜானகியும் சிரித்து கொண்டே

“ஹ்ம்ம்ம் இப்ப தான் நீ என் பாரதியாம்...இப்படி எப்பவும் நீ சிரிச்சுகிட்டே தான் இருக்கனும்” என்று நெட்டி முறித்தார்...

“அப்புறம் பாரதி மா.... பிறந்த வீட்டை விட்டு பிரிந்து வருவதுனா எவ்வளவு வேதனை னு எனக்கும் தெரியும் பாரதி மா... நான் கல்யாணம் ஆகி வரும்பொழுது அழுத அழுகை இருக்கே .... ஒரு வாரம் ஆகியும் கூட என் அழுகை நிக்கலை...

நான் அழுவதை பார்த்துட்டு ராம் அவரைத்தான் பிடிக்காமல் நான் அழறேனு பயந்து போய்ட்டாரம்.. இத சொல்லி சொல்லியே என்னை ஓட்டுவார்.. " என்று சிரித்தவர் தன் கையில் இருந்த டிபன் பாக்சை திறந்து தன் கையாலயே எடுத்து பாரதிக்கு ஊட்டி விட்டார்...

பாரதியும் சிரித்து கொண்டே சாப்பிட ஆரம்பித்தாள்...

பின் இரு பெண்களும் கதை பேசிகொண்டே வர கார் ECR ல் கடற்கரையை ஒட்டி இருந்த அந்த பெரிய பங்களாவுக்குள் நுழைந்தது...

அவ்வளவு பெரிய வீட்டை கண்டதும்

"வாவ்!! இவ்வளவு பெரிய பங்களாவா அத்தை!! " என்று வாயை பிளந்தாள் பாரதி...

“பங்களாதான் பெருசு பாரதி மா.. ஆனால் எங்க நிம்மதி , சந்தோஷம் எல்லாம் பூஜ்ஜியம்" என்று கையை விரித்து காட்டினார் வருத்தத்துடன்...

பின் இருவரும் இறங்கி வீட்டின் உள்ளே செல்லும் பொழுது ஏதோ தோன்ற

“வலது காலை எடுத்து வைத்து வா பாரதி மா “ என்றார் ஜானகி...

பாரதியும் அதே மாதிரி வலது காலை எடுத்து வைக்கும் பொழுது ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு அவள் உள்ளே... தான் வாழப்போகும் வீட்டிற்கே வந்ததை போன்ற ஒரு உணர்வு அவள் உள்ளே பரவியது...

உடனேயே தன் எண்ணத்திற்கு கடிவாளம் இட்டவள் வீட்டின் உள்ளே சென்றாள்.. பின் வீட்டை சுற்றி பார்வையை செலுத்தினாள்..

அங்கு யாரும் இருப்பதற்கான அறிகுறி இல்லை..

அப்பொழுது சமையல் அறையில் இருந்து ஒரு நடுத்தர வயது பெண் அங்கு வந்தாள்

அவர் ஜானகியை பார்த்ததும்

"வாங்கம்மா... நல்லா இருக்கீங்களா??? நீங்க இங்க வந்து எத்தன வருடம் ஆச்சு... ஐயா இருக்கும் பொழுது வந்தது .... "என்று அந்த பெண் பழசை ஞாபகம் படுத்த ஜானகியின் முகத்தில் வேதனை பரவியது அவர் எவ்வளவு தடுத்தும்.. 




பின் சமாளித்து கொண்டு, பெறுமூச்சு ஒன்றை விட்டவர்..

“மாரி.. இதுதான் நான் சொன்ன பாரதி.. இனிமேல் இங்க தான் இருக்க போறா.. நீதான் அவளுக்கு துணையா இருந்து பார்த்துக்கனும்...”என்றார்

பின் பாரதியை பார்த்து

“இவ பேர் மாரி பாரதி.. இவளும் இவள் கணவன் முத்துவும் தான் இந்த வீட்டை பார்த்துகிறாங்க... உனக்கு துனையா இவங்க இருப்பாங்க... "

"மாரி.. ரெண்டு பேருக்கும் குடிக்க காபி எடுத்துகிட்டு வா " என்று சொல்லி விட்டு பாரதியை மேலே கூட்டி சென்றார்..

பாரதிக்கு ஒன்றும் புரியவில்லை..

“இவ்வளவு பெரிய வீட்டில் ஏன் ஜானகி அத்தை இல்லை.. தன்னை ஏன் இங்க கூட்டிட்டு வந்தார்... "என்று..

ஜானகிக்கும்

"சே !! இந்த பொண்ணை கூட்டிட்டு வந்து இங்க தனியா வைக்குமாறு பண்ணிட்டானே இந்த ஆதி .. " என்று தன் மகனை திட்டி கொண்டிருந்தார்...

"ஆம் .. பாரதி சென்னைக்கு வந்ததும் ஜானகியுடனே அவங்க வீட்டிலயே இருக்க போகிறாள் “ என்று ஜானகி சொன்னதுக்கு ஆதி ஒத்து கொள்ளவில்லை..

“மா.. அதெல்லாம் முடியாது... அவள் இங்க வரக்கூடாது.. ஏன்.. அவள் என் பார்வையிலயே படக்கூடாது.. பேசாமல் ஒரு ஹாஸ்டலில் சேர்த்து விடுங்க... எக்காரணத்தை கொண்டும் என் பாரிவையில் மட்டும் படக்கூடது.. மீறி பட்டால் நான் எப்படி ரியாக்ட் பண்ணுவேனு எனக்கே தெரியாது " என்று உறுமி விட்டு சென்றுவிட்டான்.....

பிறகு தான் ஜானகி இந்த பங்களாவை ரெடி பண்ண சொல்லி, பாரதியை இங்கயே தங்க வைப்பது என்று முடிவு செய்து இங்கு அழைத்து வந்திருந்தார்

சிறிது நேரம் தன் மூளையை கசக்கிய பாரதி ஜானகியிடமே தன் சந்தேகத்தை கேட்டாள்.

"ஏன் அத்தை?? .. நீங்க இங்க இல்லையா??? "

என்ன சொல்வது என்று சிறிது தயங்கியவர்,

“இல்லை பாரதி.. இது எங்களோட கெஸ்ட் கவுஸ்.. ராம் இதை நாங்க ஓய்வு எடுக்க என்று எங்களுக்காக வாங்கினார்.. எப்படியும் மாதம் ஒரு முறை இங்கு வந்து 2 நாட்கள் தங்கி விட்டு செல்வோம்....

சின்ன வயசுல என் பையனுக்கு இந்த வீடுனா ரொம்ப பிடிக்கும்.. கடற்கரை பக்கத்துலயே இருக்கு.. இங்க வந்திட்டானா அந்த பீச்சிலயே கிடப்பான்..

மெய்ன் வீடு சிட்டி உள்ள இருக்கு.. அப்பதான் ஆபிஸ் க்கு போய் வர வசதியா இருக்கும்.. இந்த இடம் கொஞ்சம் சிட்டியை விட்டு வெளியில இருக்கு..

ஆனால் ரொம்பவும் அமைதியா உங்க ஊர் மாதிரியே இருக்கும் இங்க.. அதான் உனனை இங்க கூட்டிட்டு வந்தேன்.. இங்க எந்த தொந்தரவும் இருக்காது... ப்ரீயா இருக்கலாம்" என்று ஒருவாறு சமாளித்தார்...

"ஆத்தாடி... 2 நாள் வந்து தங்கறதுக்கு இவ்வளவு பெரிய வீடா??? .இப்ப தெரியுது பட்டணத்துல இருக்கிறவங்க ஏன் ஓடி ஓடி பணம் சம்பாதிக்கிறாங்கனு.. இந்த மாதிரி வீடு வாங்கி போடனும் னா எவ்வளவு காசு ஆகும்" என்று தன் கையை கன்னத்தில் வைத்து கண்களை அகல விரித்து வியந்தாள் பாரதி...

அவளின் அந்த கிராமத்து வெகுளியை ரசித்தவர்..

“நீ சொல்றது சரிதான் பாரதி...இங்க இருக்கிறவங்க எல்லாம் வசதியான வாழ்க்கை வேண்டிதான் ஓடிகிட்டிருக்காங்க மகிழ்ச்சியை தொலைத்து விட்டு” என்று பெறு மூச்சு விட்டார்...

"ஹ்ம்ம்ம்ம் அப்புறம் நான் மட்டும் தங்க இவ்வளவு பெரிய வீடு எதுக்கு அத்தை.. நான் பாட்டுக்கு ஒரு ஹாஸ்டலயே இருந்துட்டு போறேன்" என்று மறுத்தாள் பாரதி..

ஜானகிக்கு ஆச்சரியம்.. அந்த ஆதி பையன் சொன்னதையே இந்த பாரதி பொண்ணும் சொல்றாளே... இரண்டு பேருக்கும் நல்ல பொருத்தம் தான்.. இவளை நான் அந்த ஷ்வேதா வுக்கு முன்னாடியே பார்த்து இருக்க கூடாதா.. ஆதிக்கே கல்யானம் பண்ணி வச்சிரிப்பேனே" என்று ஆதங்கபட்டு அவளையே பார்த்து இருந்தார்...அதை கண்டதும்

“என்னாச்சு அத்தை?? " என்றாள் பாரதி

"ஹ்ம்ம்ம் ஒன்னும் இல்லை பாரதி மா... இதுல ஒரு சிரமமும் இல்லை.. இந்த வீடு சும்மா தான் இருக்கு... மாரியும் முத்துவும் எப்பவும் இங்க தான் இருப்பாங்க.. அதனால உனக்குனு எதுவும் தனியா ஏற்பாடு செய்யல..

நீ இங்க இருக்கிறவரைக்கும் ப்ரியா ஜாலியா இருக்கலாம்.. அப்பதான் எங்க வீட்டு வாரிசு எந்த குறையும் இல்லாமல் நல்ல படியா பிறக்கும்" என்றார்...

அப்பொழுதுதான் பாரதிக்கு உறைத்தது தான் எதுக்காக இங்கு வந்திருக்கிறாள் என்று... ஒரு கனம் அவள் முகம் வாடியது.. உடனேயே சமாளித்து கொண்டு

"ஹ்ம்ம்ம் அப்ப உங்க வீட்டு வாரிசுக்காக என்ன வேணாலும் செய்வீங்க போல?? " என்று குறும்பாக கேட்டள்

“பின்ன?? எங்க குலத்தையே வாழ வைக்க போறவனோ, போறவளோ இல்லையா?? இந்த வீடெல்லாம் யாருக்காம்?? .. என் பையனோடவே முடிஞ்சு போய்ட கூடாது.. அவன் வாரிசு, அதுக்கடுத்த வாரிசு என்று வாழையடி வாழையா தழைக்கனும்.. அது உன் கையில் தான் இருக்கு பாரதி “ என்று கண் கலங்கினார்..

“விடுங்க அத்தை.. ஒன்னு என்ன?? இன்னும் எத்தனை வேணும்னாலும் கேளுங்க பெத்து கொடுக்கிறேன்” என்றவள் தன் நாக்கை மெல்ல கடித்து கொண்டாள்...மனதுக்குள் “என்ன உளறிகிட்டிருக்கேன் நான்” என்று தன்னையே கொட்டி கொண்டாள்...

அவளின் அந்த குறும்பை சிரித்துகொண்டே ரசித்தார் ஜானகி

அதே நேரம் மாரி காபியுடன் வரவும் அவர்கள் காபியை எடுத்து குடித்துகொண்டே வீட்டை சுற்றி பார்த்தனர்..

மிகப்பெரிய வீடு அது.. கீழ் தளத்தில் வரவேற்பறையும் , சமையல் அறை மற்றும் விறுந்தினர் யாரும் வந்தால் தங்க என்று ஒரு பெரிய அறையும் இருந்தது.. மேல் மாடியில் சில அறைகள்.. அதில் ஒரு அறை மட்டும் பூட்டி இருந்தது..

“இது என் பையனோட அறை மா ... சின்னவயசுல இருந்தே இத மட்டும் எப்பவும் பூட்டியே வச்சுப்பான் .. என்ன ரகசியம் வச்சிருக்கானு தெரியல” என்று சிரித்தவர்..

“சரி பாரதி மா.. அப்ப நான் கிளம்பறேன்.. என் பையன் வந்திடுவான்.. எனக்கும் உன் கூட இருக்கனும்னு ஆசை தான்.. ஆனால் நான் இல்லைனா அந்த பையன் சரியா சாப்பிட மாட்டான்.. அவன் வீட்டுக்கு வரும்பொழுது நான் எப்பவும் இருக்கனும்...

இங்க எந்த தொந்தரவும் இறுக்காது.. மாரி உனக்கு எல்லா உதவியும் செய்வா... எதுனாலும் அவள் கிட்ட தயங்காமல் கேள்..

அப்புறம் உங்க வீட்டுக்கு அழைத்து ஒரு தரம் பேசிவிட்டு சிம்மை கழட்டி வச்சிடு.. நான் வேற ஒரு நம்பர் வாங்கி கொடுக்கறேன்.. ஏதாவது வேணும்னா கீழ லேன்ட் லைன்ல இருந்து எனக்கு கூப்பிடு...

நாளைக்கு காலையில உங்க ரெண்டு பேரையும் சுசிலா வரச்சொல்லி இருக்கா.. நாளைக்கே ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுடலாம் னு... நான் கார் அனுப்பறேன்.. நீ கிழம்பி வந்திடு”

என்று விடாமல் பேசியவர் பின் அவளை கட்டி அணைத்து விடை பெற்றார்...

ஜானகி விடைபெற்று சென்றதும் பாரதி தன் வீட்டிற்கு அழைத்து தான் பத்திரமாக வந்துவிட்டதாகவும் விமான நிலையத்தில் இருப்பதாகவும் கூறினாள்.. சிங்கப்பூர் சென்றதும் எல்லாம் செட்டில் ஆனதுக்கப்புறம் மீண்டும் அழைப்பதாகவும் கூறினாள்...

பொய் சொல்லி பழக்கம் இல்லாததால் அவள் உதடுகள் நடுங்கின..

ஒரு வழியாக சமாளித்து அனைவரிடமும் பேசி முடித்தாள்... பின் மாரியிடம் தனக்கு இரவு உணவு வேண்டாம் என்று கூறி விட்டு தனக்காக ஜானகி காட்டிய அறைக்கு வந்து கதவை சாத்தி விட்டு விளக்கை அனைத்து விட்டு மெத்தையில் விழுந்தாள்...

அந்த பஞ்சு மெத்தை மெது மெது வென்று அவளை உள் வாங்கியது...இதுவரை கயிற்று கட்டிலில் உறங்கியவளுக்கு அந்த பஞ்சு மெத்தை சுகமாக இருந்திருக்க வேண்டியது...ஆனால் அவளோ தன் குடும்பத்தை விட்டு முதல் முதலில் இவ்வளவு தூரம் பிரிந்து வந்ததாலும் மற்றும் அவர்களிடம் பொய் சொல்லி ஏமாற்றியதாக நினைத்ததாலும் அவளால் அந்த சுகத்தை உணர முடியவில்லை...

மாறாக ஏதோ ஒன்று முள்ளாக குத்துவதை போல உணர்ந்தாள்...நீண்ட நேரம் புரண்டு புரண்டு படுத்தவள் பின் வெகு நேரம் கழித்து கண் அயர்ந்தாள்...

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!