தவமின்றி கிடைத்த வரமே-21



அத்தியாயம்-21 

ந்த சோகக் கதையை ஏன்டா கேக்கறீங்க?? என்றான் சலித்தவாறு வசி...

அன்று சனிக்கிழமை என்பதால் வசீகரன் நண்பர்கலான நிகிலனும் ஆதியும் தங்கள் வேலை முடிந்து சீக்கிரம் வீடு திரும்பி இருந்தனர்.. அதனால் கான்ப்ரன்ஸ் காலில் இணைந்து வசியை அழைத்தனர்...

அவனும் அன்று பேசன்ட்ஸ் யாரும் இல்லாததால் மித்ரா மருத்துவமனையில் தன் அறையில் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை படித்து கொண்டிருப்பதாக பேர் பண்ணி கொண்டிருந்தான்...

ஆனால் அவன் எண்ணம் முழுவதும் அவன் புது மனைவி அதுவும் காதல் மனைவி பனிமலரிடமே சென்று நின்றது.....

இதோடு 15 நாட்கள் ஓடி விட்டன அவன் திருமணம் நடந்து...தன்னவள் தனக்கு சொந்தமாகி... பேர் தான் தன் மனைவி என்று.. ஆனால் அவளை நேரில் கூட பார்க்க முடியவில்லை அவனால்...

அவளை பார்த்து இன்றோடு ஏழு நாட்கள் ஆகிவிட்டன... என்று ஏக்க பெருமூச்சு விட்டு தன் அறையில் அமர்ந்திருந்தவனை ஆதி அலைபேசியில் அழைக்க, உடனே உதட்டில் புன்னகையுடன் அவன் அழைப்பை அட்டென்ட் பண்ணினான் வசீகரன்...

வசிக்கு திருமணம் ஆனதை கண்டு அவன் நண்பர்கள் இருவருக்கும் ரொம்ப சந்தோசம்... மற்ற இருவர்களும் குடும்பஸ்தர்களாகி இருக்க தன் நண்பன் வசி மட்டும் இன்னும் பேச்சுலராக சந்தோசமாக சுத்தி கொண்டிருப்பதை கண்டு அடிக்கடி கவலை படுவர் இருவரும்....

வசியிடம் ஆதி திருமணம் பண்ணிக்க சொல்லி அடிக்கடி அட்வைஸ் பண்ணுவான்.. ஆனால் வசி அதை கண்டு கொள்ளாமல் மலுப்பி விடுவான்..

அன்று அவனே தானா வந்து இந்த திடீர் திருமணத்தை நடத்தியதை கண்டு ஆதிக்கு ஆச்சர்யம் தான்.. ஆதி அன்று அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங் ல் இருந்ததால் வசி திருமணத்தை நேரில் பார்க்க முடியவில்லை...

ஆனால் பாரதி அதை வீடியோ எடுத்து அவனுக்கு காட்டி இருந்தாள்...

தன் மீட்டிங் முடித்த உடனே வசியை அழைத்து அவனுக்கு வாழ்த்து சொன்னான் ஆதி.. அடுத்த நாள் நேரில் வந்து வசி, பனிமலர் இரண்டு பேரையும் வாழ்த்தி சென்றான்..

அதன் பிறகு நண்பர்கள் மூவருமே பிசியாகி விட, இன்றுதான் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்க, மூவரும் கான்ப்ரன்ஸில் வந்தனர்....

ஆதி வசியின் திருமண வாழ்க்கை எப்படி போய் கிட்டிருக்கு என்று கேட்டதற்கு தான் வசி சலித்து கொண்டே

“அந்த சோகக் கதையை ஏன்டா கேக்கறீங்க !! “ என்று பதில் அழித்தான்...

அவன் குரலில் இருந்த சலிப்பையும் சிறு வருத்தத்தையும் கண்டு கொண்ட அவன் நண்பர்கள் இருவரும்

“டேய் மச்சான்... அப்படி என்னடா சோகக் கதை..?? சொல்லு.. சொல்லு.. நாங்களும் கேட்கறோம்... " என்றனர் ஆதியும் நிகிலனும் கோரசாக....

“அதான..!! அடுத்தவன் கதைய கேட்கறதுன்னா அல்வா சாப்பிடற மாதிரி அலைவீங்களே.. " என்று சிரித்தான் வசி...

"ஹீ ஹீ ஹீ.. பின்ன.... நாங்க தான் முன்னாடியே கல்யாணத்தை பண்ணிகிட்டு பழைய மாப்பிள்ளையும் ஆகிட்டோம்.. எங்க கதையெல்லாம் பழசாயிடுச்சு..

இப்ப நீதான் புது மாப்பிள்ளை.. உன்கிட்டதான் நிறைய இன்ட்ரெஸ்டிங் ஆன கதை இருக்கும்.... அதான் உன் கதையை கேட்டு கொஞ்சம் சிரிக்கலாம்னு... " என்று சிரித்தான் ஆதி...

"டேய்... ஆதி.. இது உனக்கே அடுக்குமா?? என் கதையை கேட்டு சிரிக்கலாம்னு முன்னாடியே முடிவு பண்ணிட்டுத்தான் என்னை கூப்டிங்களா ?? ... அப்ப என்னை வச்சு தான் காமெடி பண்ணலாம்... உங்க மாலை பொழுதை ஓட்டலாம்னு இருக்கீங்களா...?? இரு இரு நான் பாரதி சிஸ்டர்கிட்டயே சொல்றேன்... " என்றான் வசி செல்லமாக முறைத்தவாறு.....

"ஹா ஹா ஹா.... டேய் மச்சான்... உன் தொங்கச்சிதான் எங்களை விட ஆர்வமா இருக்கா உன் கதையை கேட்க... உனக்கு போன் பண்ண சொல்லி கான்ப்ரன்ஸ் போட்டு கொடுத்ததே அவதான்.... " என்று சிரித்தான் ஆதி.....

அதை கேட்ட உடனே அவன் அருகில் அமர்ந்து இருந்த பாரதி அவனை நறுக்கென்று கிள்ள அதில்

"ஆ .............." என்று அலறியவன்

"எதுக்குடி இப்படி கிள்ளற?? கல்யாணம் ஆனதில் இருந்து உன்கிட்ட இப்படி கிள்ளு வாங்கியே பாதி வெய்ட் குறைஞ்சிட்டேன்..." என்றான் ஆதி பாரதியை முறைத்தவாறு...

"ஹலோ... பாரதி சிஸ்டர்.... நீங்களுமா இவனுங்க கூட கூட்டு சேர்ந்துட்டீங்க... வெரி பேட்...."

"ஹீ ஹீ ஹீ சாரி வசி அண்ணா... ரொம்ப போர் அடிச்சுது... அதான் புது மாப்பிள்ளை நீங்க என்ன பண்ணிகிட்டிருக்கீங்க னு கேட்க சொன்னேன்... " என்று அசடு வழிந்தாள் பாரதி....

"ஆமா... ஹலோ போலிஸ் மாம்ஸ்.. லைன்ல இருக்கிங்களா?? என்ன சைலன்ட் ஆ இருக்கீங்க?? உங்க பொண்டாட்டி உங்க இளவரசியை உங்க கையில கொடுத்து பார்த்துக்க சொல்லிட்டாளா??

இல்லையே... உங்க இளவரசியை பார்த்துக்கத்தான் அங்க ஒரு கேங்க் ஏ இருக்கே...!!. அப்புறம் ஏன் இவ்வளவு அமைதியா இருக்கீங்க...?? " என்று நிகிலனை இழுத்தாள் பாரதி....

"அம்மா தாயே... நீ என்னை ஆளவிடு ... உன் டைம் பாஸ்க்கு புது மாப்பிள்ளை தான் செட் ஆவான்.. நீ அவனையே புடி... " என்று சிரித்தவாறு நழுவினான் நிகிலன்...

"அதானா... நீங்களாவது வாயை திறந்து பேசிட்டாலும்..... பாவம் அந்த மதுகுட்டி.. உங்களை வச்சு எப்படி சமாளிக்கிறாளோ...?? . முதல்ல என்கிட்ட ட்ரெயினிங் அனுப்பி வைங்க... " என்று சிரித்தாள் பாரதி..

"ஏன் ரதி... நான் ஒருத்தன் உன் கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறது பத்தலையா?? நிகில் மச்ச்சான் பொண்டாட்டி பிடுங்கல் இல்லாம எவ்வளவு நிம்மதியா இருக்கான்....

என் தங்கச்சியும் கணவனே கண் கண்ட தெய்வம்னு அவன் கிழிச்ச கோட்டை தாண்டாம சமத்தா இருக்கா... அவனாவது நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா?? .. அவளையும் உன்னை மாதிரி ராட்சசியா மாத்திடாத.. " என்று சிரித்தான் ஆதி..

"என்னது நான் ராட்சசியா?? நைட் பெட் ரூம்ல மட்டும் என்னை டார்லிங், பேபி, ரதி னு விதவிதமா கொஞ்சறீங்க...இப்ப ராட்சசி ஆயிட்டேனா... இப்ப இந்த ராட்சசி என்ன பண்றேனு பாருங்க... " என்று அவன் கையை எடுத்து நறுக்கென்று கடித்தாள் பாரதி....

"ஐயோ.. கருவாச்சி..கடிச்சு தொலையாத டி.. எத்தனை வருசம் ஆனாலும் இந்த கடிக்கிற புத்தி மட்டும் உன்னை விட்டு போக மாட்டேங்குது..... உன்னை மாதிரியே என் ப்ரின்ஸஸ் ம் கோபம் வந்தால் கடிச்சு வைக்கிறா... நல்ல குணம் டீ அம்மாவுக்கும் பொண்ணுக்கும்... " என்று தலையில் அடித்து கொண்டான் ஆதி....

அவன் புலம்பலை கேட்டு மற்ற இருவரும் வாய் விட்டு சிரித்தனர் மறு முனையில்...

"டேய்... நான் இவ கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறத பார்த்து சிரிக்கறீங்களா??? சீக்கிரமே இவளை விட மோசமா உங்க பொண்டாட்டிங்களும் மாறணும்...

இதுக்குனே என் பொண்டாட்டிய வச்சு என் தங்கச்சிங்களுக்கு ட்ரெயினிங் கொடுக்க சொல்றேன்.... " என்று தன் கையை தேய்த்து விட்டு கொண்டே அவர்களை திட்டி கொண்டிருந்தான் ஆதி....

"ஹா ஹா ஹா வேணாம் டா மச்ச்சான்.. நீ ஒருத்தன் போதும் அதெல்லாம் அனுபவிக்க.. நாங்க பாவம்.. எங்களை விட்டுடு... " என்று இருவரும் கோரசாக சொல்ல, அனைவரும் விழுந்து சிரித்தனர்....

சிறிது நேரம் சிரித்து முடித்ததும் நிகிலன் தான் மீண்டும் கேட்டான்..

"டேய் வசி.... உன்னை இப்படி சிரிச்சு பார்க்க எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா?? கொஞ்ச நாளா ஏதோ சோகமா சுத்தி கிட்டிருந்த.... நாங்க கேட்டப்ப எல்லாம் ஒன்னும் இல்லைனு மலுப்பிட்ட....

இப்பதான் பழைய மாதிரி சிரிக்க ஆரம்பிச்சிருக்க....” என்றான் நெகிழ்ச்சியோடு.....

“ஹீ ஹீ ஹீ... மாம்ஸ்... உங்க டாக்டர் மச்சான் ஏன் அப்படி சுத்திகிட்டிருந்தார் னு எனக்கு தெரியுமாக்கும்.... “ என்று சிரித்தாள் பாரதி...

அதை கண்டு கலவரமான வசி

“ஐயோ.... பாரதி... பப்ளிக்.. பப்ளிக்... நீ எனக்கு ப்ராமிஸ் பண்ணது ஞாபகம் இருக்கட்டும்... “ என்று எச்சரிக்க

“ஹீ ஹீ ஹீ பொழச்சு போங்க ணா... சரி... மேரேஜ் லைப் எப்படி போய்கிட்டிருக்கு?? எல்லாம் செட் ஆகிடுச்சா.... மலர் உங்களை நல்லா பார்த்துக்கறாளா?? எப்படி இருக்கா ?? " என்றாள் அக்கறையாக....

"ம்ம்ம்ம்ஹூம்... யாருக்கு தெரியும்...?? " என்றான் வசி அலுத்தவாறு..

"என்னடா சொல்ற?? யாருக்கு தெரியுமா வா ?? அப்ப சிஸ்டர் உன் கூட இல்லையா?? " என்றனர் மற்ற இருவரும் அதிர்ந்து போய்.... பாரதிக்கும் அதே யோசனைதான்...

“ஹ்ம்ம்ம் இப்பயாவது என் சோக கதையை சொல்ல விடுங்கடா..... “ என்றான் வசி சலித்து கொண்டே...

“கண்டிப்பா மச்சான்.... நாங்க யாரும் குறுக்க பேசலை.... நீ ஆரம்பி உன் ப்ளாஷ் பேக்கை...ஸ்டார்ட் ம்யூசிக்... “ என்றனர் சிரித்தவாறு...

திருமணம் முடித்து வசியின் வீட்டிற்கு மணமக்கள் வந்த அன்று எல்லா பார்மாலிட்டிஸ் ம் முடிய, வசி தன் அறைக்கு சென்று விட, வசுந்தரா தன் அண்ணியை அழைத்து கொண்டு அந்த வீட்டை சுத்தி காட்டினாள்..

வசுந்தரா வின் இயல்பான பேச்சும் தன்னை போலவே மனதில் பட்டதை தைர்யமக பேசுபவளை கண்டதும் மலருக்கு பிடித்து விட்டது..

ஏற்கனவே ஒரு சில முறை வசுந்தராவை கோவிலில் சந்தித்திருக்கிறாள் மலர்.. ஆனாலும் மீனாட்சியிடம் வாயடிப்பதை போல வசுந்தாவிடம் பேசியதில்லை....

இன்று வசுந்தராவே தானாக வந்து இயல்பாக பேச ஒரு மணி நேரத்திலயே இருவரும் பிரண்ட் ஆகினர்..

மணமக்களை விட்டு விட்டு நிகிலன், பாரதி மற்றும் மற்றவர்களும் கிளம்பி சென்றிருக்க, மலரோடு ஜோதி மற்றும் கனகம் பாட்டி மட்டும் அங்கயே இருந்தனர்.....

வசியும் தன் அறைக்கு சென்றவன் தன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தை எல்லாம் முடித்து குளித்து விட்டு வேற ஒரு ஆடையை அணிந்து கொண்டு தன் மகிழ்ச்சியை மறைத்து கொண்டு முகத்தை பாவமாக வைத்து கொண்டு கீழ் இறங்கி வந்தான்...

அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க, மேல இருந்து இறங்கி வரும்பொழுதே வசியின் கண்கள் தானாக தன் மனைவியிடம் சென்றது...அவள் இன்னும் அந்த பட்டு புடவையை மாற்றாமல் அதே அலங்காரத்தில் இருக்க, அவளையே இமைக்க மறந்து பார்த்து ரசித்து கொண்டே மெல்ல இறங்கி வந்தான்....

அவன் அருகில் வந்ததும்

ஜோதி அவனிடம் ஹாஸ்பிட்டல் போகணும் என்று சொல்ல, மலரும் உடனே நானும் போகிறேன் என்றாள் தன் மாமியார் மீனாட்சியை பார்த்தவாறு...

ஏனோ அவளுக்கு தன் திடீர் கணவனை நேராக பார்க்க தயக்கமாக இருந்தது...

மீனாட்சியும் சரியென்று தலை அசைக்க, உடனே வசுந்தராவின் அறைக்கு சென்று அவள் கட்டி இருந்த புடவையை மாற்றி அவள் அறையிலயே குளித்துவிட்டு வசுந்தராவின் சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டு தயாராகி கீழிறங்கி வந்தாள்...

ஹாலில் அமர்ந்து இருந்தவன் அந்த பாட்டியிடம் பேசி கொண்டிருந்தாலும் கண்கள் மாடியில் இருந்து கீழிறங்கி வரும் தன் மனைவியிடமே சென்று நின்றது....

மற்றவர்கள் அவனை பார்க்கிறார்கள் என்று உறைக்கவும் கஷ்ட பட்டு தன் கண்களை கட்டி போட்டான்...

அதற்குள் மீனாட்சி அனைவருக்கும் மாலை சிற்றுண்டியை வழங்க அனைவரும் சாப்பிட்டு முடிக்கவும் விடை பெற்று வெளியில் சென்றனர்..

வசியே அவர்களை அழைத்து செல்வதாக கூற, மூன்று பெண்களும் அவனை பின் தொடர்ந்தனர்....

காரை அடைந்ததும் தன் மனைவி முன்னால் அமர்வாள் என்று எதிர்பார்த்தவனுக்கு பல்ப் ஐ கொடுத்து முதல் ஆளாக பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள் பனிமலர்.....

மற்றவர்கள் இருந்த நிலையில் மலர் பின்னால் அமர்ந்ததை கண்டு கொள்ளாத மற்ற இருவருமே பின்னால் அமர்ந்து கொள்ள, சிறு ஏமாற்றத்துடன் காரை கிளப்பி சென்றான் வசி....

சிறிது தூரம் சென்றதும் காரின் பின் கண்ணாடியை மலரை பார்த்து வைத்து கொண்டு அப்பப்ப அவளையே சைட் அடித்து கொண்டு வந்தான்...

மலரோ சென்னையை அப்பதான் புதிதாக பார்ப்பவளை போல வெளியில் திருப்பிய தன் பார்வையை மறந்தும் மாற்றவில்லை....வெளியிலயே உற்று பார்த்து கொண்டு வந்தாள்....

கார் மருத்துவமனையை அடைந்ததும், அனைவரும் சென்று சிவசங்கரை பார்க்க இப்பொழுது நன்றாக விழித்திருந்தார்.. ஒரளவுக்கு பேசவும் ஆரம்பித்திருந்தர்....

தன் பொண்ணும் மாப்பிள்ளையும் ஒன்றாக அறைக்கு உள்ளே வந்ததை கண்டு மனம் நிறைந்து நின்றது....

அவர் அருகில் சென்றவன் ஒரு மருத்துவனாக அவரை பரிசோதித்து எல்லாம் நார்மலாக இருப்பதாக சொல்லி புன்னகைத்தான்....

சிவசங்கரோ வசியின் கைகளை பிடித்து கொண்டு கண் கலங்கி நன்றி சொல்ல

“இருக்கட்டும் மாமா....நீங்க இனிமேல் எதுக்கும் உணர்ச்சி வசப்படக் கூடாது.... நீங்க இதுவரை கஷ்டபட்டது போதும்.... இனிமேல் ஹேப்பியா சிரிச்சுகிட்டே இருங்க.... “ என்று புனனகைத்தான்...

பின் அவனுடைய பேசன்ட்ஸ் இன்னும் சிலர் அந்த மருத்துவமனையில் இருக்க அவர்களை சென்று பார்த்து வருவதாக சொல்லி கிளம்பி சென்றான்....

மலர், ஜோதி மற்றும் பாட்டி அங்கயே இருந்தனர்...

இரவு எட்டு மணி அளவில் மீனாட்சியும் சுந்தரும் அவர்களுக்கு இரவு உணவை எடுத்து கொண்டு வந்திருக்க, அனைவரும் அங்கயே சாப்பிட்டனர்...

பின் மலர் வசியையும் மீனாட்சியையும் பொதுவாக பார்த்து அவள் அன்று இரவு தன் தந்தையின் அருகில் இருந்து பார்த்து கொள்வதாக சொல்லி தன் அன்னையையும் பாட்டியையும் வீட்டுக்கு கிளம்ப சொல்லவா?? என்றாள்..

அதை கேட்டு முதலில் வசிக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது...திருமணம் ஆன நொடியில் இருந்தே அவளுடன் தனியாக பேசும் நொடிக்காக தவம் இருக்கிறான்...

எப்படியும் இன்று இரவு தன் வீட்டிற்கு வந்து விடுவாள்... அவளிடம் நிறைய பேச வேண்டும் என்று எதிர்பார்த்திருக்க, அவள் தன் தந்தையுடனே தங்கி விடுவதாக சொல்ல முதலில் ஏமாற்றமாக இருந்தது.....

உடனே அவள் தந்தையின் நிலை நினைவு வர, தன்னை சமாளித்து கொண்டவன்,

“ஓகே பனிமலர்... நீ மாமா பக்கத்துலயே இருந்து பார்த்துக்க...அவர் நல்லா எழுந்து நடக்கிற வரைக்குமே கூட நீ அவர் பக்கத்துலயே இரு.. “ என்றான் அவளுக்கு நன்மை செய்வதாக எண்ணி. .

பாவம்... அவனுக்கு அவனே ஆப்பு அடித்து கொண்டதை அறியாமல்....

அவன் சொன்னதை கேட்ட மலரோ

“நான் அவன் வீட்டுக்கு வர பிடிக்காமல் தான் இங்கயே இருக்க சொல்கிறான்.... “ என்று மீண்டும் ஒரு தப்பான காரணத்தை கண்டுபிடித்து மனதிற்குள் பத்திர படுத்தி கொண்டாள்...

வசியே ஜோதியையும் பாட்டியையும் அவர்கள் வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டு தன் பெற்றொர்களுடன் கிளம்பி சென்றான்...

அதன் பிறகு அவளுடன் தனியாக பேசும் சந்தர்ப்பம் மட்டும் கிடைக்கவே இல்லை.....


தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு முறை வந்து சிவசங்கரை பரிசோதித்து செல்வான் வசீகரன்.....

வழக்கமாக வசி விசிட்டிங் டாக்டராக செல்லும் மருத்துவமனைகளில் சிக்கலான அறுவை சிகிச்சைகளை மட்டுமே அவன் செய்வான்...

அறுவை சிகிச்சை முடிந்ததும் மற்ற பாலோஅப் செக்கப், ரொட்டீன் செக்கப் எல்லாம் அந்தந்த மருத்துவமனையில் இருக்கும் கார்டியாலஜிஸ்ட் ஏ பார்த்து கொள்வார்கள்....

எதுவும் கிரிட்டிகலான சமயம் மட்டும் வசி பேசன்ட் ஐ வந்து பார்ப்பான்...ஆனால் சிவசங்கர் விசயத்தில் அவர் ஒரு சாதாராண பேசன்ட் ஆக எண்ண முடியவில்லை....

அவர் தன் மாமனார் என்பதால் தினமும் அவனே வந்து பார்த்து செல்வதாக அந்த மருத்துவமனையில் இருந்த டாக்டர்களிடம் சொல்லி விட்டான்...

அவன் அங்கு வருவதற்கு மாமனார் ஒரு காரணம் என்றால் முழுக்க முழுக்க காரணம் அவன் மாமனார் பெத்த மகள் தான்....

முதலில் ஒருநாள் தன் தந்தை உடன் தங்குகிறேன் என்று ஆரம்பித்தவளை இவன் பெருந்தன்மையாக விட்டு கொடுப்பதாக எண்ணி இன்னும் கொஞ்ச நாள் தங்க சொல்ல,

மலர் அதை பிடித்து கொண்டு தன் ஆடைகளை எல்லாம் அங்கயே கொண்டு வந்து மருத்தவமனையில் வைத்து கொண்டு வீட்டிற்கு கூட வராமல் அங்கயே குளித்து விட்டு தன் தந்தை அருகிலயே அமர்ந்து கொண்டாள்...

வசிக்குத்தான் என்ன செய்வது என்று தெரியவில்லை.... அவளை பார்க்காமலும் இருக்க முடியவில்லை.... அவளை பார்க்க என்றே தினமும் இரண்டு வேளையும் அந்த மருத்துவமனைக்கு விஜயம் செய்தான் வசீகரன்....

வசி அங்கு வரும் பொழுது மட்டும் எழுந்து நின்று சிரித்து புன்னகைத்து “வாங்க....சாப்டிங்களா.. ?? “ என்று மட்டும் கேட்டு விட்டு தன் அப்பாவின் அருகில் போய் நின்று கொள்வாள் மலர்......

அவனுக்கு அவர் முன்னால் அவளிடம் என்ன பேச என்று தெரியாமல் அவர் உடல் நலம் பற்றி விசாரித்து விட்டு சென்று விடுவான்...

ஆனால் அந்த சில நிமிடங்களே அந்த நாளின் பொக்கிசமாக இருக்கும் அவனுக்கு..... அந்த சில நிமிடங்களில் அவன் கண்கள் அவனையும் அறியாமல் அவளிடமே தஞ்சம் புகுந்திருக்கும்..

அதுவும் அவள் கழுத்தில் மின்னும் அந்த பொன் மஞ்சள் தாலி கயிறு அவள் வெண்ணிற கழுத்துக்கு அவ்வளவு அழகாக இருக்க அந்த மஞ்சள் கயிற்றோடு சேர்த்து அவள் கழுத்து பகுதிக்கு முத்தமிட துடித்தது அவன் உள்ளே.. ஆனாலும் முயன்று தன்னை கட்டுபடுத்தி கொள்வான்........

மூன்று நாட்களுக்கு பிறகு ஓரளவு எழுந்து நடமாட ஆரம்பித்தார் சிவசங்கர்....

தினமும் ஜோதியும் காலையில் கிளம்பி வந்து அங்கு தங்கி விடுவார்... சிவசங்கர் நடக்க ஆரம்பித்த பிறகும் மலர் அவன் வீட்டுக்கு வருவதாக தெரியவில்லை..

அவனுக்கும் வெக்கத்தை விட்டு அவளை வீட்டுக்கு வர சொல்லி கேட்கவும் தயக்கமாக இருந்தது....

ஆனாலும் தன்னை சமாளித்து கொண்டு தன் அன்னையிடம் சொல்லி மலரை அழைத்து வர சொல்ல, அடுத்த நாள் மருத்துவமனைக்கு சிவசங்கரை பார்க்க வந்த மீனாட்சி மெல்ல பேச்சை ஆரம்பித்தார்..

“அண்ணா.. இப்பதான் நீங்க ஓரளவுக்கு சரியாகிட்டிங்க இல்லை... ஜோதி இனிமேல் உங்களை பார்த்துக்கட்டும்.... எங்க மருமகளை எங்க வீட்டுக்கு அழைச்சுகிட்டு போகலாமா..?? “ என்றார் தயக்கமாக....

அதை கேட்டதும் சிவசங்கருக்கு உச்சி குளிர்ந்து போனது.. அதுவும் எவ்வளவு பெரிய டாக்டரோட அம்மா... தன்னிடம் அவர் மருமகளை அழைத்து செல்ல அனுமதி கேட்டு நிற்கிறாரே என்று....

தானாக அவர் மனம் அவர் பார்த்த மாப்பிள்ளையின் அம்மா வை நினைத்து கொண்டது...

அந்த அம்மா ஒரு நாளும் இவரை மதித்து பேசியதில்லை.... வார்த்தைக்கு வார்த்தை இவரை பெயர் சொல்லிதான் அழைப்பார்... ஆனாலும் தன் மகள் வாழ்வு நல்லா இருக்கணும் என்று அதையெல்லாம் பொறுத்து கொண்டார்.....

இன்று அதை எல்லாம் நினைக்கையில் அந்த ஈசன் சரியான நேரத்தில் தன் மகளை காப்பாற்றி நல்ல இடத்தில் சேர்த்து விட்டார் என்றே தோன்றியது....

மீனாட்சி கேட்டதற்கு அவரும் புன்னகைத்து சம்மதம் சொல்ல வர, அதற்குள் அருகில் இருந்த அந்த பாட்டி ஆடி என்ற இடியை வசியின் தலையில் இறக்கினார்....

“சம்மந்தி மா.... இது ஆடி மாதம்.. ஆடி மாசத்துல எங்க பொண்ணை நாங்க புகுந்த வீட்டுக்கு அணுப்ப மாட்டோம்.... அவசரமா இந்த கல்யாணம் நடந்தாலும் எல்லாம் சம்பிரதாயபடி தான் நடக்கணும்.....

அதனால ஆடி மாசம் முடிஞ்சதும் நல்ல முகூர்த்த நாளா பார்த்து நாங்க எங்க பொண்ணை முறையோட உங்க வீட்டுக்கு அணுப்பி வைக்கிறோம்.... அதுவரை எங்க பொண்ணு எங்க வீட்லயே இருக்கட்டும்.... “ என்று பெரிய குண்டை தூக்கி போட்டார்....

அதை கேட்டு மீனாட்சியின் அருகில் நின்று கொண்டிருந்தவன் அதிர்ந்து போய் பின் கோபம் வர, தன்னை கட்டுபடுத்த பல்லை கடித்தான் வசி....

“சே... ஆரம்பத்துல இருந்தே இந்த பாட்டி எனக்கு வில்லியாகவே வர்ராங்களே... “ என்று அந்த பாட்டிக்கு நன்றாக அர்ச்சனை பண்ணினான் மனதுக்குள்....

மலருக்கோ மனதுக்குள் நிம்மதியாக இருந்தது....

“எப்படியோ இன்னும் ஒரு மாசம் பிரியா எங்க வீட்லயே இருக்கலாம்..” என்று நிம்மதி அடைந்தாள்....

முதல் சில நாட்கள் தன் மனைவியை அவள் அப்பா உடனே இருக்கட்டும் என்று விடப்போக அவர் எழுந்து நடமாட ஆரம்பித்த அடுத்த நாளாவது அவளை தன் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்க்ள என்று எதிர்பார்க்க, அதற்குள் ஆடி மாதம் ஆரம்பித்து விட்டது என்று குண்டை தூக்கி போட்டு அவன் மகிழ்ச்சியை குழி தோண்டி புதைத்தார் அந்த பாட்டி..

அந்த பாட்டியை மறுத்து பேச மனம் வராமல் , வேற வழி இல்லாமல் அவளை தன் வீட்டிற்கு அழைத்து வர முடியாததை எண்ணி நொந்து கொண்டான் வசி...

அட்லீஸ்ட் தினமும் மருத்துவமனையில் தன் மாமனாரை பரிசோதிக்கும் சாக்கில் சென்று அவளை தரிசித்து வருவான்... அதிகம் அவள் பேசாவிட்டாலும் அவளை பார்ப்பதே போதுமானதாக இருந்தது...

இப்பொழுது அதுக்கும் ஆப்பு வந்தது.....

ஒருவாரம் கழித்து சிவசங்கர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்று விட்டார்... அந்த பாட்டியின் உபயத்தால், கூடவே மலரும் அவள் வீட்டுக்கே சென்று விட்டாள்... வசிதான் அன்று அவரை டிஸ்சார்ஜ் பண்ணி தன் காரிலயே அழைத்து சென்று தன் மாமனார் வீட்டில் விட்டு வந்தான்....

அன்று பார்த்தது தான் அவன் ஜில்லுவை....இன்றோடு ஒரு வாரம் ஓடிவிட்டது...

அதன் பிறகு அவளை பார்க்க என்று தன் மாமனார் வீட்டுக்கு செல்ல ஏனோ தயக்கமாக இருந்தது....

என்னவென்று சொல்லி செல்வது?? அதுவும் அவர்கள் வீடு அவன் வீட்டிலிருந்து சென்னையின் மறுகோடியில் இருந்தது... அதனால் அவளை பார்க்க துடித்த தன் இதயத்தை அடக்கி கொண்டு ஆடி மாத நாட்களை எண்ணி கொண்டிருக்கிறான் இந்த ஆடி முடிய....

தன் சோக கதையை தன் நண்பர்களிடம் சொல்லி முடித்தான் வசீகரன்...

அதை கேட்ட நிகிலன்

“டேய்.. மச்சான்... இப்படி எல்லாம் கூட இருக்கா?? “ என்றான் ஆச்சர்யமாக....

அவனுக்கு திருமணம் நடந்த பிறகு இப்படி எல்லாம் எதுவும் செய்ய வில்லையே என்று எண்ணியவனுக்கு

“நான் தான் என் முட்டால் தனத்தால் என் மனைவியை வருடம் முழுவதுமே விலக்கி வைத்து விட்டேனே.....அதனால் இந்த ஆடி யெல்லாம் அம்மா கண்டு கொண்டிருக்க மாட்டார்.... “ என்று எண்ணிக் கொண்டான்....

"ஆமான்டா.... அது என்னவோ இந்த ஆடி மாசம் முழுவதும் பொண்ணை அனுப்ப மாட்டேனு சொல்லி அந்த ஹிட்லர் பாட்டி அவளை அவங்க வீட்டுக்கே கூட்டிட்டு போய்ட்டாங்க... " என்றான் மீண்டும் வருத்தமாக....

"ஹா ஹா ஹா... அப்ப கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரினு சொல்லுங்க அண்ணா.... சூப்பர்.... " என்று சிரித்தாள் பாரதி...

ஆதியோ

"டேய் மச்சான்.. இது கடவுளா பார்த்து உனக்கு கொடுத்திருக்கிற லாஸ்ட் சான்ஸ்.... நல்லா பேச்சுலர் லைப் ஐ அனுபவிச்சுக்கோ.. அப்புறம் நீயே தலை கீழா நின்னாலும் இந்த மாதிரி ஒரு சுதந்திர லைப் உனக்கு கிடைக்காது... " என்று சிரித்தான் ஆதி....

பாரதி அவனை பார்த்து முறைக்க, அவளை பார்த்து கண் சிமிட்டி குறும்பாக சிரித்தவன் அவளின் கோபத்தில் சிவந்திருந்த அந்த செவ்விதழை வருட கையை நீட்டினான்...

அவளோ அவன் கையை தட்டி விட்டு அவனை பார்த்து மீண்டும் காரமாக முறைத்தாள்.. பின் வேகமாக எழுந்து விடுவிடுவென்று நடந்து அந்த அறையை விட்டு வெளியேறினாள்....

"ஆஹா... இந்த வசிக்கு ஆறுதல் சொல்லலாம்னு வாய விட்டு இப்ப இவ கிட்ட நான் மாட்டிகிட்டனே...!!. கொஞ்சம் ஓவராதான் பேசிட்டமோ..?? இந்த கருவாச்சி மலை ஏறிட்டா போல.... அப்ப இன்னைக்கு இவ கால் ல விழ வேண்டியது தான்.... " என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டான்.....

அதன் பிறகு நண்பர்கள் மூவரும் பொதுவான சில விசயங்கள் அவர்களுடைய பள்ளி நாட்கள் என்று அரட்டை அடித்து அழைப்பை துண்டித்தனர்....

அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் மனம் முரண்டு பண்ண, தன் காரை எடுத்து கொண்டு வீட்டிற்கு வந்தான் வசீகரன்....

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!