காதோடுதான் நான் பாடுவேன்-19
அத்தியாயம்-19
அன்று அதிகாலையில் எழும்பொழுதே மிகவும் உற்சாகமாக உணர்ந்தான் ஜெயந்த்..
இன்று மட்டுமா?? அவளை சந்தித்த நாளில் இருந்தே ஒவ்வொரு நாளும் அவனுக்கு உற்சாகமான நாள் தான்...
இரவு எவ்வளவு தாமதமாக உறங்கினாலும் காலையில் எழும்பொழுது அதுவும் தன் மனதுக்கு பிடித்தவளின் முகத்தை நினைக்கும் பொழுதே அவனுக்கு சோர்வு பறந்து புத்துணர்ச்சி வந்து ஒட்டி கொள்ளும்...
இன்றும் அலார்ம் அடித்து முடித்ததும் அதை நிறுத்தியவன் படுக்கையில் இருந்தவாறே அவளின் அந்த பால்வடியும் முகத்தை மனதில் கொண்டு வந்தான்...
உடனேயே அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.. அதுவும் நேற்று அவள் அணிந்து வந்திருந்த சுடிதாரும் தன் நீண்ட சடையில் தொங்க விட்டு வைத்திருந்த மல்லிகை பூவும் இப்பொழுதும் அவனை கட்டி இழுத்தது..
நேற்று ஏனோ அவள் வகுப்பு நடக்கும் இடத்தை அடிக்கடி தாண்டி சென்றான்... ஏன் என்ற காரணம் தெரிந்த பொழுதும் சிறு பையனாக அதை ரசிக்கவே செய்தான்..
ஏனோ தொலைவில் இருந்து ரசிக்க வரும் தைர்யம் அவளை நேருக்கு நேராக பார்க்கும் பொழுது , பார்த்து தன் மனதில் இருப்பதை சொல்லுவதற்கு தான் தைர்யம் வரவில்லை..
கடந்த 5 மாதங்களாக அவளை தொலைவில் இருந்தும் தன் மனதுகுள்ளே மட்டுமே ரசித்து வருகிறான்... தினமும் அவளை பார்த்து எப்படியாவது மனதில் இருப்பதை சொல்ல வேண்டும் என்று கிளம்பி செல்வான்..
ஆனால் ஏனோ அவள் முகத்தை பார்க்கும்பொழுது அதெல்லாம் மறந்து விடும்... அதுவும் அவளின் சார் என்ற அழைப்பில் முற்றிலும் காதல் மனம் தொலைந்து அவளின் ஜெயந்த் சாராக மட்டுமே அவள் முன்னால் நிக்க முடியும்....
அவள் கிளம்பி சென்று விட்டால் ஜெயந்த் சார் மறைந்து மீண்டும் காதல் வசபட்ட ஜெயந்த் ஆகி விடுவான்...
அவனை நினைத்தே அவனுக்கு சிரிப்பாக இருந்தது...
ஆனாலும் இன்று எப்படியாவது தன் மனதில் இருப்பதை சொல்லி விடவேண்டும்..என்று முடிவு செய்தான்..
ஆனால் தன் காதலை ஏற்றுக் கொள்வாளா?? என்று ஒரு பக்கம் அச்சமாக இருந்தது... இந்த 5 மாதத்தில் தன் மனதில் வந்த மாற்றத்தைப் போல அவள் மனதிலு ஏதாவது மாற்றம் வந்திருக்குமோ?? என்று நினைவு கூர்ந்து பார்த்தான்...
ம்ஹூம்.. அப்படி எதுவும் தெரியவில்லை அவளிடம்.. முதல் முதலில் பார்த்த அதே மருண்ட கண்களுடன் தான் எப்பவும் தன்னை பார்க்கிறாள் என்று நினைத்தவனுக்கு டக்கென்று ஏதோ வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தான்...
ஆம் அவள் கண்களில் சமீபத்தில் ஏதோ ஒரு ஒளி தெரிவதை போல இருந்தது.. முன்பு இருந்த மிரட்சியும் பயமும் நீங்கி அந்த கண்களில் ஏதோ ஒரு மாற்றமும் முகத்தில் ஒரு குதூகாலிப்பு உதட்டில் சிறு புன்னகையும் அதிகமாக இருப்பதாக தோன்றியது...
ஒருவேளை இதெல்லாம் தன்னை பார்க்கும் பொழுதா?? என்று ஆராய்ந்தவனுக்கு ஒரு சிறு ஏமாற்றம்... அவள் வீட்டிலிருந்து வரும்பொழுதே இப்பொழுதெல்லாம் உற்சாகத்துடன் வருவது தெரிந்தது..
ஏனென்றால் அவள் வரும் நேரத்திற்கு அவன் மாடியில் இருந்து அவளையே தான் பார்த்துக் கொண்டிருப்பான்...
அவனை பார்க்கும் பொழுது மீண்டும் அந்த மருண்ட கண்களுக்கு மாறி விடுவது தெரிந்தது..
“அப்படி என்றால் அவள் உற்சாகத்திற்கு நான் காரணமில்லை.. வேற என்னவாக இருக்கும்?? “ என்று சிறிது நேரம் யோசித்தவன் ஒன்றும் புரிபடாமல் போக
“ம்ஹூம்.. இனிமேலும் தள்ளிப் போடக்கூடாது.. சொல்லாத காதல் வெல்லாது என்பதை போல இனியும் தாமதிக்க கூடாது.. “ என்று முடிவு செய்தான்...
“அவளிடம் காதலை சொல்லி அவள் தன்னை ஏற்று கொண்டதும் அடுத்து அவள் வீட்டில் சென்று பேசி சம்மதம் வாங்கியதும் உடனே திருமணத்தை நடத்தி விட வேண்டும்....
ஹ்ம்ம்ம்ம் இப்பொழுது அவள் படித்துக் கொண்டிருக்கிறாளே.. ஒருவேளை இந்த திருமணம் அவள் படிப்புக்கு, லட்சியத்திற்கு தடையாக இருக்குமா?? பேசாமல் இன்னும் இரண்டு வருடம் கழித்து அவள் IAS பாஸ் பண்ணின பிறகு வைத்துக் கொள்ளலாமா?? “ என்று யோசிக்க, அவன் அன்னையின் முகம் கண் முன்னே வந்தது...
அவர் முகத்தில், குரலில் தன் மகனுக்கு திருமணம் ஆக வில்லையே என்ற ஏக்கம் கண் முன்னே வர
“சே.. சே.. அம்மா வ அவ்வளவு நாள் காக்க வைக்க முடியாது... இப்பயே நான் எப்ப நல்ல செய்தி சொல்வேன் என்று தினமும் போன் பண்ணி கிட்டிருக்காங்க... அவங்கள இதுக்கு மேலயும் காக்க வைக்க முடியாது..
இப்ப என்ன?? திருமணத்திற்கு பிறகும் அவள் இன்ஸ்டிடியூட் வந்து படிக்கட்டும்... அதுவும் நானே ‘ஸ்பெஷலா’ தினமும் வீட்டிலயே சொல்லி கொடுத்தா இன்னும் சீக்கிரம் பாஸ் பண்ணிடுவா.....” என்று தன் கற்பனை குதிரையை 200 ஹார்ஸ் பவரில் தட்டி விட்டவன்
தன் மனைவிக்கு ஸ்பெஷலாக பாடத்தை சொல்லி கொடுப்பதை போல காட்சி விரிய, உள்ளுக்குள் சிலிர்த்தது அவனுக்கு... உடலெல்லாம் புதுவெள்ளம் பாய்ந்தோடுவதை போல இருந்தது...
ம...து...வ ந்... தி.. னி ... என்ற அவள் பெயரின் ஒவ்வொரு எழுத்தையும் நிறுத்தி உச்சரித்து பார்க்க அவன் நாவெல்லாம் இனிப்பதை போல இருந்தது...
எப்படியாவது அவள் தன் மனைவியாக வேண்டும்.. “என்று உள்ளுக்குள் நினைக்க,
“இதெல்லாம் நடக்குமா?? “ என்று அவன் மற்றோரு மனம் கேள்வி கேட்டது...
“நடக்கும், நடக்கணும் ... “ என்று அந்த இறைவனை வேண்டி கொண்டே நேரம் ஆவதை உணர்ந்து தன் படுக்கையில் இருந்து எழுந்து உற்சாகமாக விசில் அடித்து கொண்டே தன் அன்றைய நாளை துவக்கினான் ஜெயந்த்...
பாவம் அவன் அறிந்திருக்கவில்லை.. அவன் கட்டிய கற்பனை கோட்டை, காதல் மாளிகை இடிந்து பெரும் அதிர்ச்சியை விரைவிலயே சந்திக்க போவதை…
அன்று மாலை தன் வகுப்பு முடிந்ததும் வழக்கம் போல கீழ வந்து தன் அலைபேசியில் ஆட்டோவை தேடி கொண்டிருந்தாள் மது...
அவள் கீழ நிற்பதை மாடியிலிருந்து பார்த்தவன் இப்பயாவது தன் மனதில் இருப்பதை சொல்ல வெண்டும் என தோன்ற அவசரமாக கீழிறங்கி வந்தான்..
அவனும் காலையில் இருந்து பல முறை முயன்று விட்டான் அவளிடம் தனிமையில் பேச..
அதற்கான சந்தர்ப்பம் நிறைய முறை கிடைத்தும் ஏனோ அவன் மனதை மட்டும் திறக்க முடிய வில்லை.. அதற்கான தைர்யம் வரவில்லை...
இப்பொழுது வகுப்பு முடிந்து அவள் வீட்டிற்கு செல்வதால் பிரியாக இருப்பாள் , என்று எண்ணி வேகமாக கீழிறங்கி வந்தான்..
ஜெய்ந்த் ன் நல்ல நேரம் அவள் தேடிய ஆட்டோ கிடைக்காததால் மீண்டும் முயற்சி செய்து கொண்டிருந்தாள் மது ...
அவள் அருகில் சென்றவன்
“ஹாய்.. மது.. என்ன எங்க நின்னுகிட்டிருக்க... நின்னுகிட்டிருக்கீங்க ??.... “ என்றான் சிறிது தடுமாறிய்வாறு..
அவனின் குரலை கேட்டதும் சிறிது மிரண்டவள் அழைத்தது ஜெயந்த் என புரிய கொஞ்சமாக புன்னகைத்தவள்
“ஆட்டோ வை தேடி கிட்டிருக்கேன் ஜெயந்த் சார்... எல்லா ஆட்டோவும் பிசி போல... எதுவும் இந்த லைன் க்கு வரமாட்டேங்குது.. “ என்றாள் தன் உதட்டை பிதுக்கி...
அவளின் அந்த சுழித்த இதழ்களை அவள் அறியாமல ரசித்தவன், தன் தலையை தட்டி கொண்டு
“ஓ அப்படியா.. இப்ப பீக் ஹவர்ஸ் ங்கிறதால அப்படிதான் இருக்கும்... வாங்களேன் ஒரு கப் காபி சாப்டிட்டு கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி அப்புறம் ட்ரை பண்ணுங்க கிடைக்கும்... “ என்றான் உள்ளுக்குள் அவள் வரவேண்டுமே என்ற படபடப்புடன்...
மதுவுக்கோ உள்ளுக்குள் கொஞ்சம் அதிர்ந்து நின்றாள்.. இதுவரை யாருடனும் தனியாக சென்று காப்பி சாப்பிட்டதில்லை. அப்படி ரொம்ப பிடித்தால் தன் அப்பாவுடன் வெளியில் சென்று சாப்பிடுவாள்...
இன்று இவன் காப்பி சாப்பிட கூப்பிடவும் எப்படி ரியாக்ட் பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்..
அதற்குள்
“வா மது.. ரொம்ப யோசிக்காத.. ஒரு 5 நிமிசம் தான்.. ஆட்டோ கிடைக்கிறதுக்குள்ள குடிச்சிட்டு வந்திடலாம்... “என்றவன் அவள் பதிலுக்கு காத்திருக்காமல் முன்னே நடக்க, அதற்கு மேல் தயங்கி நிக்க மனம் இல்லாமல் வேற வழி இல்லாமல் அவன் பின்னே நடந்தாள்....
அது ஒரு பெரிய சாலை.. அந்த பகுதியில் பல கம்பெனிகள் இருப்பதால் கார்கள் இரண்டு பக்கமும் சென்றவன்னம் இருந்தன.. சாலையை கடப்பதற்கு என்று இருந்த இடம் தொலைவில் இருந்ததால், ஜெயந்த் அதை பின்பற்றாமல் நேராக சாலையில் இறங்கி நடக்க, வேற வழி இல்லாமல் மதுவும் அவன் பின்னே ஓடினாள்...
சாலையை கடக்க பயந்து கொண்டு அவன் அருகில் சென்று ஒட்டி நடந்தாள்...திடீரென்று தன் அருகில் ஒட்டி நடந்தவளை கணடதும் ஜெயந்திற்கு அதிசயமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது...
வெகு அருகில் நடந்ததால், அவளின் மெண்மையும், அவள் மேனியில் இருந்து வந்த ஏதோ ஒரு வாசமும் அவனை சுண்டி இழுக்க, அவளின் அருகாமையை வெகுவாக ரசித்து கொண்டே மெதுவாக நடந்தான்...
அவள் அந்த சாலையை கடக்க பயந்து கொண்டுதான் தன் அருகில் ஒட்டி நடக்கிறாள் என்று புரிந்ததும்,
“நீ மட்டும் எனக்கு சம்மதம் சொல்லிடு கண்மணி... இந்த சாலையை கடக்க மட்டும் அல்ல,.. இந்த காலம் முழுவதும் உன் கை பிடித்து உன்னை காப்பேன்.... “ என்று மனதுக்குள் சொல்லி கொண்டவன் அவளின் மெதுவான நடைக்கு தகுந்த மாதிரி அவனும் மெதுவாக நடக்க ஆரம்பித்தான்...
இதுவரை வேக நடையுடன் நடந்தவன் இப்பொழுது மெதுவாக நடக்கவும் தனக்காகத்தான் மெதுவாக நடக்கிறான் என்று புரிந்து கொண்டாள் மதுவும்.... உடனே அவள் எண்ணம் அவள் கணவனை நினைத்தது...
“யாரோ ஒரு தெரியாத வெறும் மாணவியான எனக்காக, இந்த ஜெயந்த் சார் எவ்வளவு அக்கறையாக பார்த்து பொருப்பா கூட்டி கிட்டு போறார்...
ஆனால் அந்த விருமாண்டியும் இருக்கானே,… என்னைக்காவது இவ்வளவு அக்கறையா அட்லீஸ்ட் பின்னாடி வர்றவ கூட வர்ராளானு கூட பார்த்ததில்லை.. .அவன் பாட்டுக்கு நேரா போய்கிட்டே இருப்பான்... நாமதான் அவன் நடைக்கு ஈடு கொடுத்து லொங்கு லொங்கு னு ஓடணும்....
ஜெயந்த் சார் எவ்வளவு நல்லவர்... என்னையே இப்படி கவனிச்சு பொருப்பா கூட்டிகிட்டு போறவர் அவர் மனைவியை எப்படி பார்த்துக்குவார்?? .... அவர் மனைவி ரொம்ப கொடுத்து வச்சவங்க... “ என்று மனதுக்குள் புலம்பியபடியே ஜெய்ந்த் உடன் இணைந்து நடந்தாள்...
சாலையை கடந்ததும் அருகில் இருந்த காபி டே கடைக்குள் நுழைந்து ஓரமாக இருந்த ஒரு டேபிலில் அமர்ந்தான் ஜெயந்த்..
அவன் பின்னால் வந்த மதுவும் தயங்கியபடியே அவனுக்கு எதிர்புறம் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்... ஆனாலும் உள்ளுக்குள் ஏதோ ஒரு தயக்கம், பயமாக இருந்தது இந்த மாதிரி வெளியில் வந்து அடுத்தவருடன் அமர்ந்து இருப்பது...
சுற்றிலும் கண்களை சுழல விட்டவள் முக்கால் வாசி மேஜையில் எல்லாம் ஆணும் பெண்ணுமாக அமர்ந்து இருக்க, என்னவோ தன்னையே பார்ப்பதை போல இருந்தது.. ஒரு வித சங்கோஜமாக இருந்தது...
அவளின் முகத்தில் இருந்த டென்சனை கண்ட ஜெயந்த்,
“ஈசி.. மது.. ஏன் இவ்வளவு டென்சன் ஆகற?? “ என்றான் மென்மையாக....
“வந்து... நான் இது மாதிரி எல்லாம் தனியா வெளில வந்ததில்லை சார்.... அதான் ஒரு மாதிரி இருக்கு... “ என்று தன் மனதை மறைக்காமல் கூற அவனுக்கோ இன்னும் ஆச்சர்யம் அவளை நினைத்து...
பின் அவளின் முகத்தை பார்த்து தான் சொல்ல வந்ததை எப்படி ஆரம்பிப்பது?? சொன்னால் புரிந்து கொள்வாளா?? என்று யோசித்தவன் அவளை இயல்பாக்க எண்ணி அவளின் படிப்பை பற்றி பேச்சை ஆரம்பித்தான்...
அதை கேட்டதும் மது தனக்குள் இருந்த தயக்கத்தை விலக்கி கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய பிராக்டிஸ், எப்படி படிக்கிறாள், அவளுடைய பிளான் என்று விளக்க, ஓரளவுக்கு அவன் நினைத்த மாதிரியே சகஜ நிலைக்கு வந்திருந்தாள்...
ஜெய்ந்த் கண்கள் விரிய பேசும் அவளையே இமைக்க மறந்து பார்த்திருந்தான் அவள் எதுவும் தப்பாக எண்ணாமல்..
“சரியான படிப்ஸ் போல இருக்கு.. ஜெயந்த் நீயே பரவாயில்லைடா.. இவ உனக்கு மேல இருக்கா... உன் பாடு கொஞ்சம் கஷ்டம் தான்... “ என்று மனதுக்குள் சொல்லி சிரித்துக் கொண்டான்...
ஒரு வழியாக அவள் பேசி முடிக்கவும் மீண்டும் தன் மனதை சொல்ல எண்ணி,
“மது.. உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்.... “ என்று இழுத்தான் கொஞ்சம் தைர்யத்தை வரவழைத்து கொண்டு....
“ஹ்ம்ம்ம் சொல்லுங்க ஜெயந்த் சார்..... “ என்றாள் வெகுளியாக புன்னகைத்தவாறு..
அவளின் அந்த புன்னகையை கண்டவன் எப்படி சொல்வது என்று மீண்டும் தயங்க, மதுவோ அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்...
“வந்து.. வந்து... “ என்று இழுத்து வார்த்தை வராமல் தந்தி அடித்தது...
இதுவரை சரளமாக பேசியவன் தன் காதலை சொல்ல எண்ணும் பொழுது ஏனோ வார்த்தை சிக்கி கொண்டது.. தொண்டையை தாண்டி எதுவும் வெளியில் வரவில்லை... அவனும் எவ்வளவோ முயன்றான்...
ம்ஹும்ம்.. வெறும் காத்துதான் வந்தது..
“சே... எதுக்கு இப்படி பயப்படறேன்?? இந்த காதலை சொல்வது எவ்வளவு பெரிய கஷ்டமானது னு இப்பதான் தெரியுது.. இதுக்கு நான் ஒவ்வொரு வருசமுமே IAS பாஸ் பண்ணிடலாம் போல இருக்கு.. “
என்று நொந்து கொண்டவன் மீண்டும் ஒரு முறை மனதுக்குள் சொல்லி பார்த்து கொண்டே மெல்ல வாய் திறந்து ஏதோ சொல்ல வர, அதற்குள் அந்த கடையில் ன் நுழை வாயில் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த நெடியவனை கண்டதும் ஜெயந்த் ன் முகம் பிரகாசித்தது...
உதட்டில் புன்னகை அரும்ப அவனையே பார்த்து கொண்டிருந்தான்.....அந்த நெடியவனும் எதேச்சையாக ஜெயந்த் இருந்த பக்கம் திரும்ப அவனும் ஜெயந்த் ஐ கண்டு கொண்டு புன்னகைக்க, ஜெயந்த் கை அசைத்தான்...
உடனே அந்த நெடியவனும் ஜெயந்த் இருந்த டேபில் அருகே வந்து
“ஹாய்.. ஜெயந்த்.. எப்படி இருக்க?? “என்று அவன் முதுகை தட்டினான்..
“நான் நல்லா இருக்கேன் சார்... நீங்க எப்படி இருக்கீங்க?? “ என்றான் எழுந்து அவனுக்கு கை குழுக்கியவாறு...
“டேய்... இந்த சார் அ விடு.. நிகிலன் னு கூப்பிடு னு எத்தனை தரம் சொல்லியிருக்கேன்.. நீ இன்னும் திருந்தவே மாட்டேங்கறியே... “ என்று புன்னகைத்தான் அந்த நெடியவன்...
நிகிலன் என்ற பெயரையும் அந்த குரலையும் கேட்ட மது, அதுவரை குனிந்து கொண்டிருந்தவள் வேகமாக தலையை நிமிர்த்தினாள்...
எதிரில் தன் கணவனை கண்டதும் ஆச்சர்யம், சந்தோஷம், அதிர்ச்சி, பயம் என்ற அத்தனை பாவங்களும் வந்து போனது அவள் முகத்தில்....
நிகிலனும் அவளை கண்டதும் சிறு ஆச்சர்யம் ... ஆனாலும் அவளை கண்டு கொள்ளாமல் ஜெயந்த் இடம் பேசி கொண்டிருந்தான்..
ஜெயந்த் அவனை அமர சொல்ல, ஜெயந்த் ம் மதுவும் எதிர் எதிரில் அமர்ந்து இருக்க, பக்க வாட்டில் இருந்த நாற்காலியை இழுத்து அமர்ந்தான் நிகிலன்...
அமர்ந்தவன் பார்வை மதுவிடம் செல்ல, ஜெயந்த் அப்பொழுதான் மதுவை அறிமுக படுத்தவில்லை என்று உணர்ந்து
“நிகிலன்... இவ... இவங்க மது.. மதுவந்தினி.. என் ஸ்டூடன்ட்.. வெரி பிரில்லியண்ட்.. எல்லா பாடத்தையும் குயிக் ஆ பிக்கப் பண்ணிக்கிறாங்க... “ என்று மதுவை பற்றி புகழ்ந்து பேசினான்....
அதை கேட்ட நிகிலன்
“ஓ.. அப்படியா?? அப்ப பர்ஸ்ட் அட்டெம்ட் லயே கிளியர் பண்ணிடுவாளா?? “ என்றான் மதுவை பார்த்தவாறே...
ஜெயந்த் ற்கு சிறு ஆச்சர்யம்.. நிகிலன் மதுவை ஒருமையில் அழைத்ததால்.. UPSC exam எழுத சென்ற பொழுது இருவரும் பரிச்சயமானார்கள்.. அதன் பிறகு பல முறை சந்திக்க நேர்ந்ததும் நிகிலன் ACP ஆக ஜாயின் பண்ணியதும் வாழ்த்து சொன்னான் ஜெயந்த் ..
அதோடு அவனுடை பயிற்சி மையத்துக்கு நிகிலன் பிரியாக இருக்கும் சமயங்களில் சிறப்பு வகுப்பும் IAS தேர்வுக்கு முன்னால் மாணவர்களுக்கு சில டிப்ஸ் கொடுக்க சொல்லி அழைப்பான்..
நிகிலனும் நேரம் இருக்கும் சமயங்களில் அங்கு சென்று அந்த மாணவர்களை ஊக்குவிப்பான்..
அதோடு நிகிலனுடைய ஆளுமை குணம், அவன் கம்பீரம் எல்லாம் கண்டு ஜெயந்த் பல முறை வியந்து இருக்கிறான்... அவனை மாதிரி சில முறை பின்பற்றியும் இருக்கிறான்.....
நிகிலனை பற்றி தெரிந்து இருந்ததால் அவன் யாரையும் மரியாதை குறைவாக அழைத்ததில்லை...
அப்படி இருக்க, மதுவை அவன் ஒருமையில் அழைத்தது எங்கயோ இடித்தது...
ஆனாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல்
“Definitely… பர்ஸ்ட் அட்டெம்ட் லயே கிளியர் பண்ணிடுவாங்க நிகிலன்...இன்னும் கொஞ்சம் மட்டும் பிரிபரேசன் வேணும்.. கண்டிப்பா அடிச்சிடலாம்.. “என்றான்...
“ஹ்ம்ம்ம் பார்த்தா அப்படி தெரியலையே... இந்த சிட்டியோட Assistant Commissioner ஏ யார் னு தெரியல அவளுக்கு... அவர்கிட்டயே போய் நீங்களும் IAS exam எழுந்துங்கனு அட்வைஸ் பண்றா உங்க ஸ்டூடன்ட்.. “ என்றான் குறும்பாக சிரித்தவாறு...
கீழ குனிந்து கொண்டே அவர்களின் உரையாடலை இதுவரை கேட்டு கொண்டிருந்த மது கடைசியாக நிகிலன் சொன்னதை கேட்டதும்
“ஐயோ.. நான் முன்னாடி ஏதோ உளறினத இன்னும் ஞாபகம் வச்சிருக்கானே... “என்று வெக்க பட்டு தன் உதட்டை கடித்து கொண்டாள்....
நிகிலனின் குறும்பை கண்ட ஜெயந்த் க்கு ஏதோ புரிவதை போல இருந்தது.. அவனை இந்த மாதிரி சிரித்து இலகுவாக பேசி பார்த்ததில்லை.. எப்பவுமே விரைத்துக் கொண்டு இருப்பவன் இன்று அந்த நாற்காலியில் சாகவாசமாக சாய்ந்து கொண்டு இப்படி குறும்பு மின்ன பேசுவதை கண்டு அதிசயமாக இருந்தது...
அவனுக்கு ஏதோ மின்னல் அடிக்க,
“நிகிலன்.. மதுவ உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?? “ என்றான் ஆர்வமாக
சிறிது நேரம் அமைதியாக இருந்த நிகிலன்
“ஹ்ம்ம்ம்ம்” என்றான் மதுவை பார்த்தபடியே
“ஓ.. உங்களுக்கு எப்படி தெரியும்?? இருங்க நானே கண்டு பிடிக்கறேன்... “ என்றவன் சிறிது நேறம் இருவரையும் மாறி மாறி பார்த்து விட்டு
“மது உங்க சிஸ்டர் தானே.. “ என்றான் ஜெயந்த்...
அதை கேட்டு மது நமட்டு சிரிப்புடன் தன் சிரிப்பை அடக்கி கொண்டு குலுங்கி சிரித்தாள் தலையை குனிந்தவாறே...
நிகலனோ அவனை பார்த்து முறைத்தான்...
அவன் முறைப்பதை கண்டதும்
”ஐயயோ.. எதுவும் மாத்தி சொல்லிட்டனோ.. இந்த முறை முறைக்கிறாரே ACP .. “என்று அவசரமாக புலம்பியவன்
“சாரி.. நிகிலன்.. ஏதோ தப்பா சொல்லிட்டேன் போல.. நீங்களே சொல்லுங்க மதுவை எப்படி தெரியும் என்று.. “ என்று அசடு வழிந்தான்....
“ஹ்ம்ம்ம் அத அவ கிட்டயே கேளு ஜெயந்த்.. “ என்றான் அதே குறும்பு சிரிப்புடன்...
ஜெயந்த் ம் மதுவை பார்த்து
“ஹ்ம்ம் சொல்லுங்க மது.. நிகிலன் சார தெரியுமா?? என்ன வேணும் உங்களுக்கு... “ என்றான் ஆர்வமாக...
அதை கேட்ட மது
“ஐயோ!! முருகா... இப்ப எதுக்கு என்னை இழுக்கறான் இந்த விருமாண்டி.. நான் ஏதாவது சொல்ல போய் நல்லா திட்ட போறான்... “ என்று மனதுக்குள் புலம்பியவள்
சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்...
பின் ஜெயந்த் தன்னையே பார்த்து கொண்டிருப்பதை உணர்ந்து மெல்ல தலையை நிமிர்ந்து
“என் ஹஸ்பன்ட்.. சார்.. “ என்றாள் மெல்ல தயங்கியவாறு....
அதை கேட்டதும் நிகிலனுக்கு என்னவோ புதுவித உணர்வு.. இதுவரை அவள் கணவன் என்று தன்னை சொல்லியதுமில்லை கேட்டதுமில்லை.. மெல்ல புன்னகைத்தான்..
ஜெயந்த் ஓ அதிர்ச்சியில் தரை நழுவி உள்ளே சென்றதை போல அதிர்ந்து விழித்தான்..
இதை எதிர்பார்க்கவில்லை.. உடனடியாக குனிந்து அவள் காலை பார்க்க, அப்பொழுதுதான் கண்டான் அவள் காலில் அணிந்திருந்த மெட்டியை...
“சே.. இத எப்படி கவனிக்காமலிருந்தேன் ... மற்றொருவனுக்கு உரிமையானவளையா என் மனம் விரும்பியது??...
அவளுக்கு திருமணம் ஆகி விட்டதா இல்லையா என்று கூட விசாரிக்காமல் அவளை பற்றி எதுவும் தெரியாமல் கண்டதும் காதல் என்று டீன் ஏஜ் பையன் மாதிரியல்லவா நடந்திருக்கேன்...
சே... என்ன அவ்வளவு முட்டாளா நான்.. “ என்று தன்னைத் தானே திட்டி கொண்டான்.. அதற்குள் நிகிலன் அவனை பரத்து
“என்ன ஜெயந்த்... அப்படி முழிக்கிற?? .. ஓ.. இந்த ஒட்டடகுச்சி போய் எப்படி என்னை ஹஸ்பன்ட் னு சொல்றா னா?? “ என்றான் மீண்டும் குறும்பாக சிரித்தவாறு...
தன்னை அவன் ஒட்டடகுச்சி என்கவும் கோபமானவள் தன்னை மறந்து நிமிர்ந்து நேராக அவனை பார்த்து
“நான் ஒன்னும் ஒட்டடகுச்சி இல்ல... “ என்று சொல்லி முடிக்குமுன்னே அவன் கண்ணை பார்க்கவும் அப்பொழுதுதான் அவனிடம் நேராக பேசியது உரைக்கவும் அவசரமாக நாக்கை கடித்துக் கொண்டு சிறு வெக்கத்துடன் அசட்டு புன்னகையுடனும் மீண்டும் குனிந்து கொண்டாள் மது...
அவள் முகத்தில் வந்து போன கோபமும் பின் சிறுவெக்கமும் அதன் பின் அசட்டு சிரிப்பும் என்ற பல பாவணைகளை கண்டதும் வியப்பாக இருந்தது நிகிலனுக்கு...
எப்பவும் பயந்த பாவணையில் இருப்பவளை வேறுவிதமாக பார்க்க கொஞ்சம் வியந்துதான் போனான் அவள் கணவன்...
பின் ஜெயந்த் ஐ பார்த்து
“பாருடா... வீட்ல என்னை நேரா பார்த்து பேசவே பயப்படுவா.. இங்க என்னடான்னா எனக்கு நேராவே எதிர்த்து பேசறா... என்ன ஜெயந்த் நீ இருக்கிற தைர்யமா உன் ஸ்டூடண்ட்க்கு??... “ என்று மீண்டும் சிரித்தான்...
“ஆனாலும் இந்த ஒட்டடகுச்சி ய போய் என் தங்கச்சினு கெஸ் பண்றியே... இப்ப தெரியுது உன்னை ஏன் IAS ல பெயில் ஆக்கினாங்கனு.. “ என்று கண் சிமிட்டி சிரித்தான்..
“ஐயோ அதெல்லாம் இல்ல நிகிலன்.. “என்று பதறி ஏதோ சொல்ல வர
“ஹா ஹா ஹா.. நோ டென்ஷன் மேன்.. ஜஸ்ட் பார் பன்...” என்றவன் அவன் சந்திக்க வேண்டிய நபர் உள்ளே வரவும்
“ஓகே... யு போத் கேர்ரி ஆன்... “ என்று எழுந்து ஒரு எட்டி வைத்தவன் பின் மதுவின் அருகில் நின்று
“எனக்கு இப்ப வேலை முடிஞ்சிடுச்சு.. வீட்டுக்கு தான் போறேன்.. பேசி முடிச்சிட்டு ரெடியா இரு.. நானே கூட்டிட்டு போறேன்...” என்று அவளிடம் சொன்னவன் முன்னால் நகர்ந்தான்...
மதுவுக்கோ தன் காதுகளையே நம்ப முடியவில்லை... அவனா தன்னிடம் அதுவும் தன்னை காரில் கூட்டி போறேனு சொன்னது?? அதை விட அதிசயம் சற்று முன் சிரித்து பேசியது...
எப்பவும் சிடுமூஞ்சி மாதிரி இருப்பவன் இன்னைக்கு இவ்வளவு ப்ரியா அதுவும் குறும்புடன் பேசியதை கேட்டு அதிசயித்து போனாள்...
“இன்னைக்கு என்ன இவ்வளவு சர்ப்ரைஸ் எனக்கு?? “ என்று வியந்தவளாக தலையை நிமிர்ந்து
“ஹ்ம்ம்ம்” என்று வேகமாக தலையை உருட்டினாள்... பின் அவன் செல்வதையே விழி அகல பார்த்திருந்தாள்...
அவள் கண்களில் இருந்த ஒளியை கண்ட ஜெயந்திற்கு இப்பொழுது புரிந்தது அவள் முகத்தில் இருக்கும் ஒளிக்கு காரணம்...
“சே.. இது கூட புரிஞ்சுக்காம இருந்திட்டனே.. “என்று மீண்டும் புலம்பினான்..
அதற்குள் மீண்டும் மது அவனை பார்க்க, தன் நிலைக்கு வந்தவன்,மதுவை பார்த்து
“நீங்க கொடுத்து வச்சவங்க மது.. நிகிலன் சார் மாதிரி ஒரு ஹஸ்பன்ட் கிடைக்க.. இந்த காலத்துல இவர் மாதிரி ஒரு நேர்மையான போலிஸ் ஆபிசர் பார்க்கறது கஷ்டம்..
வெறும் ஆபிசர் மட்டும் இலல.. நிறைய பேருக்கு நிறைய உதவி செய்வார்.. எனக்கு கூட இந்த இன்ஸ்டிடியூட் ஆரம்பித்த நாட்களில் சில வகுப்புகளை வந்து பிரியாவே எடுத்து கொடுத்தார்...
சச் அ நைஸ் பெர்சன்.. “ என்று நிகிலனை புகழ்ந்தவன்
“ஆமா உங்களுக்கு மேரேஜ் ஆகி எவ்வளவு நாளாச்சு?? “ என்றான் யோசனையாக.....
அவள் விண்ணப்ப படிவத்தில் மிஸ் என்று எழுதியிருந்ததும் அவள் ஹஸ்பன்ட் பெயர் எழுதாததும் தான் இவ்வளவுக்கும் காரணம்.. நான் பாட்டுக்கு என்னென்னவோ கற்பனை பண்ணிட்டேன் என்று யோசித்தவாறு...
“5 மாசம் சார்... “ என்றாள் மெல்ல
“வாட்?? 5 மாசமா?? அப்பதான நீங்க வந்து இங்க சேர்ந்தீஙக.. “ என்றவன் பாதியில் நிறுத்திக் கொண்டான்...
“அவள் சேர்ந்து எத்தனை மாசம் ஆச்சுனு அவனுக்கெப்படி நினைவு இருக்கும் என்று கேட்டு விட்டாள்?? “
அவன்தான் ஒவ்வொரு நாளையும் எண்ணி கொண்டிருந்தானே...
ஆனால் மது தன் கணவன் நினைவில் மூழ்கியிருந்ததால் ஜெயந்த் சொன்ன மாத கணக்கையெல்லாம் கவனிக்க வில்லை...
அவன் கேட்டதுக்கு சிறிது யோசித்தவள்
“நான் இங்கு சேருவதற்கு இரண்டு நாள் முன்னால் தான் எங்க திருமணம் நடந்துச்சு சார்... “ என்றாள்..
அதை கேட்டு வியந்தவன்
“ஹ்ம்ம்ம் எல்லாரும் கல்யாணம் ஆனா உடனே ஹனிமூன் போவாங்க... நீங்க வித்தியாசமா IAS பிராக்டிஸ் க்ளாஸ்க்கு வந்திருக்கீங்க.. இதிலயிருந்தே தெரியுது நிகிலன் சார் எவ்வளவு நல்லவர் என்று..
உங்க லட்சியத்தை புரிஞ்சுகிட்டு உங்களை இங்க அனுப்பி வச்சிருக்காரே .. “என்று சிரித்தான் தன் வேதனையை மறைத்து கொண்டு....
“ஆமாமா.. ரொம்பபப நல்லவர் தான்.. “ என்று உள்ளுக்குள் திட்டி கொண்டவள் தன் திருமணம் நடந்ததை பற்றி சுருக்கமாக சொல்லி முடித்தாள்..
அதை கேட்டு இன்னும் வியந்தான் ஜெயந்த்..
“அப்ப உங்களுக்கு அவர பிடிக்காதா?? “ என்றான் மீண்டும் ஆர்வத்துடன் அவள் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்..
“அப்ப பிடிக்காம கொஞ்சம் பயமா இருந்துச்சு சார்... “ என்று நிறுத்தினாள்
“இப்ப??? “ என்றான் விடாமல்
“இப்ப ரொம்ப பிடிக்கும் சார்... “ என்றாள் சிறு வெக்கத்துடன் சிரித்தவாறு...
அவள் இதுமாதிரி சிரிப்பதை இப்பொழுது தான் காண்கிறான் ஜெயந்த்...
அவள் சிரித்துக் கொண்டிருக்கும் பொழுதே நிகிலன் சந்திக்க வேண்டியவரை சந்தித்து அனுப்பி விட்டு மீண்டும் அவர்கள் டேபில் அருகில் வந்தான்...
அவன் வருவதை கண்ட மது வேகமாக எழுந்து நின்று கொண்டாள்.. எதுவும் திட்டுவானோ என்று...
அருகில் வந்தவன்
“என்ன பேசியாச்சா?? போகலாமா?? என்றான் மதுவை பார்த்து...
மதுவும் தலையாட்ட, பின் ஜெயந்திடம் விடை பெற்று முன்னால் நடக்க, மதுவும் தலையாட்டி விடைபெற்று தன் கணவன் பின்னே நடந்தாள்...
அவள் போவதையே ஒருவித ஆற்றாமையுடன் பார்த்து கொண்டிருந்தான் ஜெயந்த் ...
இந்த 5 மாதமாக இருந்த உற்சாகம், பரவசம் எல்லாம் வடிந்து விட்டதை போல இருந்தது...நெஞ்சில் பாறாங்கல்லை வைத்து அழுத்தியதை போல வலி...
“ம்ஹும் இனிமேல் அவளை பத்தி நினைக்க கூடாது.. எப்ப இன்னொருத்தர் மனைவி என்று தெரிந்ததோ அப்பயே என் மனதை மாற்றி கொள்ள வேண்டும்..இனி என் மனதில் மது இல்லை...“ என்று ஆழ்ந்து யோசித்து தனக்குள்ளே உறுதி செய்து கொண்டான்....
அப்பொழுது அவனது அலைபேசி ஒலிக்க அதை எடுத்து பேசியவன் வைக்கும் பொழுது கை தானாக வாட்ஸ்அப்பிற்கு செல்ல, ஏதோ ஒரு மெசேஜை படித்தவன் கை எதேச்சையாக தன் அன்னையிடம் இருந்து வந்திருந்த மெசேஜை திறக்க, அதில் ஒரு பெண் அழகாக புன்னகைத்து கொண்டிருந்தாள்..
அப்பொழுது தான் நினைவு வந்தது அது அவன் அம்மா அனுப்பிய பெண்ணின் புகைப்படம் என்று..
இத்தனை நாள் கண்டுக்காமல் இருந்த புகைப்படம் இன்று திறப்பது ஏன்?? என்று யோசித்தவாறு
அதை உற்று பார்க்க அப்படியே மதுவின் சாயல் இருந்தது...ஒரு நொடி திகைத்து நின்றான்.. பின் ஏதோ புரிந்ததை போல
“அப்ப எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவள் தானோ.. இது தெரியாமல் நான் போய் மது கிட்ட உளறாம தப்பிச்சேன்... “ என்று மெல்ல புன்னகைத்துக் கொண்டான்...
நிகிலன் காரை அடைந்ததும் அவள் தயங்கி நிக்க, அவன் முன் கதவை திறந்து விட்டு அவளை பார்க்க, வேகமாக உள்ளே ஏறி அமர்ந்து கொண்டாள்...
காரில் வரும்பொழுது சிறிது நேரம் எதுவும் பேசாமல் வந்தனர்.
மதுவுக்கோ உள்ளுக்குள் பயமாக இருந்தது.. தான் ஜெயந்த் சார் உடன் அமர்ந்து இருந்ததை பரத்து தப்பாக எதுவும் எண்ணுவானோ, திட்டுவானோ?? என்று..
ஆனால் அவள் பயந்தமாதிரி எதுவும் கேட்காமல் அவளின் பேட்மின்டன் பிராக்டிஸ் பற்றி விசாரித்தான்...
அதை கேட்டதும் பெரும் நிம்மதியும் தன் கணவன் மேல் இன்னும் மதிப்பும் காதலும் கூடியது அவளுக்கு...
அவளும் கண்கள் விரிய அவளின் இரண்டு பயிற்சி வகுப்புகளை பற்றியும் பெருமையாக விளக்கினாள்...
கொஞ்சம் நேரம் ஆனதும் அவள் பயம் விலகி ஓரளவுக்கு இயல்பாக உரையாட ஆரம்பித்தாள்.. இருவரும் பேசிகொண்டே வீட்டிற்கு வந்திருக்க, நிகிலன் காரை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கி ஒன்றாக வீட்டிற்குள்ளே வந்தனர்...
ஹாலில் அமர்ந்து டீவி சீரியல் பார்த்து கொண்டிருந்த சிவகாமிக்கு முதன் முறையாக தன் மகனும் மருமகளும் ஒன்றாக சேர்ந்து உள்ளே வரக் காண அதுவும் தன் மருமகளின் முகத்தில் இருந்த மலர்ச்சியும் தன் மகனின் முகத்தில் இருந்த இலகிய தன்மையும் கண்டு உள்ளம் குளிர்ந்து போனார் சிவகாமி...
அவர்களையே ஆச்சர்யமாக பார்த்து கொண்டிருக்க, நேராக இருவரும் அவரிடம் சென்றனர்..
நிகிலன் வழியில் அவளை பார்க்கவும் அழைத்து வந்ததாக தன் அன்னையிடம் விளக்கம் கூறிவிட்டு மேல சென்றுவிட்டான்... மது அன்றைய கதையை தன் மாமியாரிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டாள்..
அதை கேட்டு சிவகாமிக்கு இன்னும் தலை கால் புரியாமல் போனது தன் மகன் இவ்வளவு குறும்பாக பேசி இருக்கிறானே.. என்று...
சீக்கிரம் அவன் பழைய படி வந்திடனும் என்று வேண்டி கொண்டார்... இன்னும் சிறிது நேரத்தில் அவர் மகிழ்ச்சி பறி போவதை அறியாமல்..
அன்று இரவு உணவின் பொழுதும் நிகிலன் ஒரு வித இலகிய நிலையிலயே இருந்தான்... வழக்கம் போல மது எல்லார்க்கும் எடுத்து வைத்து விட்டு அமர்ந்து கொள்ள, அகிலா தன் பள்ளிக் கதைகளை அளந்து கொண்டிருந்தாள்..
அனைவருமே ஒரு வித சிரித்த மனநிலையில் இருக்க, அப்பொழுது நிகிலன் உணவு மேஜையின் மீது எடுத்து வைத்திருந்த அவனுடையபெர்சனல் அலைபேசி ஒலித்தது...
எல்லாரும் அதன் திரையை பார்க்க
Ramani Calling… என்று ஒளிர்ந்தது அதன் திரையில்..
அதனை கண்டதும் நிகிலன் முகத்தில் 1000 வாட்ஸ் பல்ப் எரிய, அந்த அலைபேசியை எடுத்து காதில் வைத்து பேச ஆரம்பித்தான்...
சிவகாமிக்கோ திக் என்றது...
“இவ எதுக்கு இந்த நேரத்துல போன் பண்ணியிருக்கா?? .. இப்பதான் இவன் கொஞ்சம் இலக ஆரம்பித்திருக்கான்.. இவன் பொண்டாட்டி கூட முறைக்காம ஒன்னா சேர்ந்து வந்திருக்கான்..
அதுக்குள்ள இந்த வீணா போனவ எதுக்கு போன் பண்ணியிருக்காளோ??.. “ என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டே தன் மகனை பார்த்தார்...
அவனோ தன் பேச்சில் மும்முரமாக இருந்தான்.. முதலில் ஆர்வமாக பேசியவன் மறுமுனையில் தொடர்ந்து பேசுவதை கேட்டதும் முகம் மாறியது...
ஒரு வித கவலையும் இறுக்கமும் வந்து சூழ்ந்து கொண்டது அவன் முகத்தில்...
“சரி.. நான் இப்பயே கிளம்பி வர்ரேன்... “ என்று அலைபேசியை அனைத்தவன் பாதி சாப்பாட்டிலயே எழுந்து கை கழுவ சென்றான்..
சிவகாமி ஏதோ சொல்ல வர, அதை காதில் வாங்காமல் வேகமாக மாடி ஏறி சென்று வேறு உடைக்கு மாறி அவசரமாக வெளியேறி சென்றான்...
அதை கண்டதும் சிவகாமியின் மனம் வாடி விட்டது.. அவரும் பேருக்கு ஏதோ சாப்பிட்டு பின் எழுந்து ஹாலுக்கு சென்று சோபாவில் தளர்ந்து அமர்ந்தார்..
மது அகிலாவும் சாப்பிட்டு முடித்ததும் எல்லாம் ஒழுங்கு பண்ணி வைத்துவிட்டு, ஹாலுக்கு செல்ல, அங்கு தன் மாமியார் தளர்ந்து போய் அமர்ந்திருப்பதை கண்டு கஷ்டமாக இருக்க, அவரின் அருகில் சென்றாள்....
சிவகாமியோ கண்ணை மூடி அமர்ந்து கொண்டு
“சே.. எல்லாம் இந்த ரமணியால வந்தது.. எப்படி இருந்த என் பையனை இப்படி மாத்தி வச்சுட்டாளே... என் குடிய கெடுக்கறதுக்குனே வந்திருக்கா போல..
இனனைக்கு தான் கொஞ்சம் சிரிச்சானா அதுக்குள்ள பொறுக்குள்ள அவளுக்கு.. உடனே போன போட்டு கூப்டிட்டா... விளங்காதவ... “ என்று வாய் விட்டு புலம்பி கொண்டிருந்தார்...
அவரின் அருகில் அமர்ந்த மது அவர் கையை மெல்ல அழுத்தி
“யார் அந்த ரமணி அத்தை?? ..” என்றாள்...
தன் மருமகளின் குரலை க்ஏட்டுதிடுக்கிட்ட சிவகாமி
“ஐயோ... வாய் விட்டா உளறினேன்?? ... சே.. இப்படியா சொல்றது?? இப்ப என்ன செய்யறது?? “ என்று அவசரமாக யோசித்தார்...
அதற்க்குள் மது
“சொல்லுங்க அத்தை... யார் அந்த ரமணி.. நீங்க ஏன் அவங்களை திட்டிகிட்டு இருக்கீங்க??
அதோட நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே?? இவர் ஏன் இவ்வளவு நாளா கல்யாணம் பண்ணிக்காம இருந்தார்?? அதுக்கும் இந்த ரமணிக்கும் ஏதாவது சம்மந்தமா?? “ என்று தன் மனதில் இருந்த கேள்விகளை வரிசையாக அடுக்கினாள் மது தயங்கியவாறு....
அதை கேட்ட சிவகாமி இனிமேலும் மறைக்க முடியாது என தோன்ற
“ஹ்ம்ம்ம்ம்.” என்று தலையை ஆட்டினார் தன் மருமகள் கடைசியாக கேட்ட கேள்விக்கு..
அதை கேட்டு உள்ளுக்குள் இலேசாக அதிர்ந்தாள் மது..
“ஐயோ.. அப்ப நான் சந்தேக பட்டது சரிதான் போல... அவருக்கு ஏற்கனவே வேற பொண்ணு மேல் விருப்பம் இருக்கிறதால தான் என்னை கண்டுக்கவே இல்ல... “ என்று உள்ளுக்குள் புலம்பியவள் ஆனாலும் சிவகாமி என்ன சொல்ல போறாரோ என்று அவரையே ஒரு வித ஆர்வத்துடனும் கொஞ்சம் பயத்துடனும் பார்த்து கொண்டிருந்தாள்....
சிவகாமியும் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு கொண்டு கடந்த கால கதையை சொல்ல ஆரம்பித்தார்....
காதல் கதை இருக்கா
ReplyDelete