என் மடியில் பூத்த மலரே-16



அத்தியாயம்-16 

திகாலை....

வெளியில் பனிக்காற்று சில்லென்று வீசிக்கொண்டிருந்தது.. பாரதி அயர்ந்து தூங்கிகொண்டிருந்தாள்... அந்த அறையின் கதவை திறந்து கொண்டு அந்த நெடியவன் உள்ளே வந்தான்.. உள்ளே வந்தவன் அவளின் அருகில் வந்து கையில் கொண்டு வந்திருந்த காபியை அருகில் இருந்த டீபாயில் வைத்தான்... பின் அவளை நோக்கி குனிந்து

“ஹே ரதி.. எழுந்திருடீ.. காலைல விடிஞ்சி மணி எட்டாயிருச்சு பார்...இன்னும் என்ன தூக்கம்?? “ என்று அவளை எழுப்பினான்

“போ ஆதி... எனக்கும் இன்னும் தூக்கம் தூக்கமா வருது.. நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கனும் “ என்று போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தாள்..

“ஹே!! கும்பகர்ணி... எல்லார் வீட்லயும் பொண்டாட்டி தான் காபி கொண்டு வந்துட்டு புருஷனை எழுப்புவாங்க.. இங்கு எல்லாம் தலைகீழா இருக்கு.. பார்.. உன் புருஷன் நான் வந்து உன்னை எழுப்ப வேண்டி இருக்கு.. எழுந்திருடீ ... “ என்று மெல்ல அவள் மேல் இருந்த போர்வையை இழுத்தான்..

“போடா ஆதி.... நீ எங்க என்னை நைட் எல்லாம் தூங்க விட்ட... தூங்க விடாமல் இம்சை பண்ணிட்டு இப்ப வந்து நான் தூங்கறேன் ங்கிற... “ என்று அவன் இழுத்த போர்வையை மிண்டும் இழுத்துக்கொண்டாள்..

“பாருடா!!! நான் உன்னை தூங்க விடலையா... அப்படி பிடிக்காதவ எழிந்திருச்சு போக வேண்டியது தான.. நீ ஏன் இந்த மாமாகிட்ட மயங்கி ஒட்டிகிட்டியாம்....” என்று குறும்பாக சிரித்தான்

“ஹ்ம்ம்ம் நான் ஒன்னும் மயங்கலை.. “ என்று முகத்தை சுளித்தாள்...

“ஆமா ஆமா.. நீ மயங்கலை... நான் தான் உன்னை மயக்கிட்டேன்.. போதுமா.. சரி எழுந்திடுச்சு வாடி... உன் முகத்தை பார்த்துட்டு தான் நான் ஆபிஸ்க்கு கிழம்பனும்ம்...”

“ஹ்ம்ம்ம் சரி.. போனா போகுது... எனக்கு தர வேண்டியதை கொடு.. எழுந்திருக்கிறேன்“ என்று கொஞ்சினாள்...

“காலையிலயே ஏன்டி இப்படி படுத்தற?? என்று செல்லமாக திட்டிகொண்டே மெல்ல குனிந்து அவளின் மேல் இருந்த போர்வையை விளக்கி அவளின் அந்த பட்டு கன்னத்தில் மெல்ல முத்தமிட்டான்...

அவனின் முத்தத்தில் மயங்கியவள்,

‘சீ... மீசை குத்துது... ட்ரிம் பண்ண மாட்டியா??? “ என்று செல்லமாக முனகினாள் கண்களை திறக்காமல்

“ஹேய்ய்ய் இரு... இரு... நைட் இதே மீசைதான் உனக்கு அழகா இருக்கு மாமா னு கொஞ்சின.. இப்ப உனக்கு குத்துதா” என்று சிரித்தான்

“ஹீ ஹீ ஹி அது அப்போ.... இது இப்போ... “ என்று பலிப்பு காட்டினாள் உதட்டை சுழித்து...

அவளின் அந்த சுழித்த இதழில் மயங்கி கிறங்கி நின்றான் அவன்.. மெல்ல அவனின் கைகள் நீண்டு அவளின் மெல்லிய சிவந்த உதடுகளை வருடின.....

“ஹே !! இரு.. இரு.. நீ என்ன மறுபடியும் முதல் ல இருந்து ஆரம்பிக்கற ஆதி?? அப்புறம் நீ ஆபிஸ் போன மாதிரிதான்” என்று அவசரமாக அவன் கைகளை தட்டிவிட்டாள்

“ஹா ஹா ஹா.. தெரியுது இல்ல.. அப்புறம் சீக்கிரம் எழுந்து வா டீ ... இல்லைனா நான் இன்று ஆபிஸ்க்கு லீவ்”

“ஐயோ!! உன்னை வீடல வச்சு என்னால சமாளிக்க முடியதுப்பா... இரு நானே முழிச்சுக்கறேன்.. “

என்று தன் இமைகளை மெல்ல பிரிக்க முயன்றாள்..

அது அவளை விட்டு பிரிய மறுத்தது...அதை கண்ட அவன்

“ஹே இருடி.. எங்கிட்ட ஒரு மருந்து இருக்கு... உன் இமைகள் உடனே பிரிஞ்சிடும்” என்று சிரித்துக்கொண்டே குனிந்து அவளின் இமைகளில் முத்தமிட்டான்...

“சீ திருடா.. இது தான் அந்த மருந்தா ... உன் மருந்து ஒன்னும் வேலை செய்யல.... பார்.. என்னால இன்னும் முழிக்க முடியலை... சரி ஒன் , டூ, த்ரீ சொல்லு.. நானெ முழிச்சுக்கறேன்”

“சரி சரி...படுத்தாத.. சொல்லி தொலைக்கிறேன்... ஒன்..... டூ..... த்ரி...........” என்றான்....

பாரதி மெல்ல தன் இமைகளை பிரித்தாள் தன் ஆசை கணவனின் முகத்தை காண!!!!

இமைகளை பிரித்தவள் மெல்ல கண்களால் துழாவினாள் ஆவலுடன் அவனை கண்டுகொள்ள...

ம்ஹூம்... அவனை காணவில்லை...

மெல்ல திரும்பி கட்டிலின் நாலா பக்கத்திலும் தேடினாள்... காணவில்லை அவனை..

“திருடா... அதுக்குள்ள எங்க ஒழிஞ்சுகிட்ட.. இரு கண்டுபிடிக்கிறேன்” என்று மெல்ல எழுந்து கட்டிலின் கீழ குனிந்து பார்த்தாள்...

அவளுக்கு ஏமாற்றமே மிச்சம்..

“எங்க போய்ட்டான் இந்த ஆதி?? .. இப்ப என்கிட்ட இருந்தானே “ என்று யோசித்தவள் தலையை நிமிர்த்தவும் கட்டிலின் ஓரத்தில் இடித்து கொண்டாள்...

“ஸ் ஆ ஆ“ என்று தலைய தேய்த்தவாறே மெல்ல எழுந்தவள்

“எதுக்காக குனிந்தேன்??? கட்டிலுக்கு அடியில் என்ன தேடினேன்??? “ என்று யோசித்தாள்...

“மெல்ல ஞாபகம் வந்தது.. அவன்.... ஆதி... அவள் கணவன்... அவனைத்தானே தேடினேன்... எங்க போனான்?? “ என்று மெல்ல கண்ணை கசக்கி திரும்பவும் தேடினாள்..

அப்பொழுது ஜன்னல் வழியே மெல்லிய வெளிச்சம் வந்து அவள் கன்னத்தை வருடியது.. அது சற்று முன்பு அவன் கொடுத்த முத்தத்தை போல .... உடல் சிலிர்த்தது... அவளுக்கு...

மெல்ல மெல்ல அவளின் அறிவு விழித்து கொள்ள ஆரம்பித்தது....

அப்படி என்றால்....

“இதுவரை நான் கண்டது கனவா??? ... இல்லையே.... அப்படியே நேர்ல பார்த்த மாதிரியே இருந்ததே....இன்னும் தித்திக்கிறதே அவன் கொடுத்த முத்தம்... இது எப்படி கனவாகும்??” என்று நினைத்தவள் அவன் முகத்தை நினைவு படுத்த முயன்றாள்...

ம்ஹும்.. அது தெரியவில்லை...

“சே!!! நான் கொஞ்சம் சீக்கிரம் முழிச்சிருக்கலாம்.. அவன் முகத்தையாவது பார்த்து இருக்கலாம்” என்று தன்னை தானே திட்டி கொண்டவள்.. அந்த இளங்காலை நேர வெயில் மீண்டும் அவள் முகத்தில் பட்டு வருடவும் ஏதோ ஞாபகம் வந்தவள் போல ஜன்னலின் அருகே ஓடினாள்... அங்கு இருந்த அந்த திரையை மெல்ல விளக்கினாள்....

திரையை விளக்கியவள் அப்படியே அதிசயித்து மயங்கி நின்றாள்...

ஆம் அவளின் காதலன் ஆதி தான் அருகில் இருந்த கடலில் இருந்து எழுந்து மேலே வந்து கொண்டிருந்தான் கம்பீரமாக ...

அவனை கண்டதும் துள்ளி குதித்தாள் பாரதி...

“ஹே!! ஆதி டார்லிங்...நீயா??? நீ என்னை தேடி இங்கயே வந்திட்டியா??? “ என்று குதித்தாள்

“ஆம் ரதி!!! நான் நேற்று சொன்னேன் இல்லை... நீ எங்க போனாலும் உன்னை பார்க்க நான் வருவேன் என்று.. அதே மாதிரி உன்னைக்காண இங்கயே வந்திட்டேன் “ என்று இவளை பார்த்து குறும்பாக கண்ணடித்தான் அந்த ஆதவன்

(நாம் ஆதவனின் ப்ராமிஷை மறந்து இருந்தால், இரண்டாவது எபியை படியுங்கள்....)

“ஹே!! உண்மையாகவே நீதானா ஆதி??? நீயா என்னை பார்க்க இங்க பட்டணத்துக்கு வந்த?? ஷோ ச்வீட் ஆப் யூ.. “ என்று மீண்டும் குதித்தாள்

“ஹ்ம்ம்ம்...

நானே!! உன்னை பார்க்க வந்ததும் நானே!!

உன் கனவில் வந்ததும் நானே!!

உன் கன்னத்தில் முத்தமிட்டதும் நானே!!

உன்னை மணக்கப் போவதும் நானே!! “

என்று உல்லாசமாக விசில் அடித்தான் அந்த ஆதவன்

“ஹ ஹா ஹா ... ஹே!! நீ பாட்டெல்லாம் கூட பாடுவியா??? .. நீ பாடறதை பார்த்தால் எனக்கும் உன் கூட சேர்ந்து டூயட் பாடனும்னு ஆசையாதான் இருக்கு ...ஆனால் இன்னைக்கு நேரம் ஆச்சு...கொஞ்சம் வெளியில போகணும்... நாளையில் இருந்து நான் வெட்டியாதான் இருப்பேன்.. ஜாலியா கதை அடிக்கலாம்ம்ம்..உன்கிட்ட நிறைய பேசனும்ம்...”

“ஹ்ம்ம்ம் சரி ரதி!! தினமும் வருவேன் உன்னை பார்க்க..” என்று சிரித்துக்கொண்டே கிளம்பினான் தன் வேலையை கவனிக்க...

“குட் பாய்... அப்புறம் நீ இந்த பட்டணத்துல இன்னும் அழகாயிட்ட டா... இனிமேல் தினமும் உன்னை இங்க இருந்தே பார்த்து சைட் அடிக்கலாம்...நாளைக்கும் வரணும் சரியா...

லவ் யூ டா...

சரி .. நேரம் ஆச்சு... நாளைக்கு பார்க்கலாம்... பை ... “என்று ஒரு ப்ளையிங் கிஸ் ஐ அவனுக்கு கொடுத்து விட்டு ஜன்னலில் இருந்து திரும்பியவள் அப்படியே அதிர்ந்து நின்றாள்...

அவள் எதிரே ஆறடி உயரத்தில், முறுக்கிவிட்ட மீசையுடன் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிகொண்டு கண்ணில் குறும்பு சிரிப்புடன் நின்றிருந்தான் அவன்....

“ஐயோ!! யார் இவன்??? ... நான் பேசியதை கேட்டிருப்பானோ???

“சீ!! நான் வேற என்னென்னவோ பேசிட்டேன்... “என்று வெட்கம் வர மெல்ல நிமிர்ந்து அவனை பார்த்தாள்..அவன் இன்னும் அவளையே தான் பார்த்து கொண்டிருந்தான்...

“சீ என்ன இவன் இப்படி பார்க்கறான்.. வச்ச கண் வாங்காமல் “ என்று கன்னம் சிவக்க மீண்டும் அவனை பார்த்தாள்.. அவன் இன்னும் அந்த இடத்தைவிட்டு அசைய வில்லை...அவளையே தான் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான்... அவள் மெல்ல அடி எடுத்து வைத்து அவன் அருகில் சென்றாள்...

அவன் இன்னும் கூட அசையவில்லை..

அருகில் சென்று உற்று கவனித்தாள்.. அப்பொழுதுதான் புரிந்தது அது நிஜம் அல்ல... ஒரு ஆணின் நிழல்படம் என்று...

“சே!! எனக்கு என்ன ஆச்சு இன்று ???? காலைல இருந்தே எல்லாம் தப்பு தப்பா தெரியுதே“ என்று புலம்பியவாறு தன் கன்னத்தில் கை வைத்து அருகில் இருந்த கட்டிலில் அமர்ந்தவள் தான் கண்ட கனவை மறுபடியும் நினைத்து பார்த்தாள்..

பாரதி சிறு வயதில் இருந்தே தன் தந்தைக்கு விவசாயத்தில் உதவியாக இருப்பாள்.. பள்ளி முடிந்து வந்த உடனே உடையை மாற்றி கொண்டு சேற்றில் இறங்கி விடுவாள்.. அந்தி சாயும்வரை அங்கு உள்ள வேலைகளை செய்வாள்... அப்புறம் ஆடு மாடு என்று அதை கவனிப்பாள்..

இரவு உணவு உண்டபின் தன் தம்பி தங்கையுடன் கொஞ்சநேரம் வம்பு இழுத்துவிட்டு படுத்தால் அலைந்த கலைப்பில் அப்படியே உறங்கி விடுவாள்.. மறுநாள் காலையில் அவள் எழுமுன்பே அவளின் வேலைகள் அலாரம் வைத்து எழுந்து அவள் முன்னே நிக்கும்...நிற்க நேரம் இல்லாமல் எப்பொழுதும் சுத்திக்கொண்டே இருப்பாள்...

பள்ளி நாட்களில் அவளின் தோழிகள் கன்னி பருவத்தில் வந்த கனவுகளை பற்றி பேசி கொண்டிருக்கும் பொழுது இவளுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.. இப்படியெல்லாம் கூட கனவு வருமா என்று..

தனக்கு ஏன் அந்த மாதிரி கனவு எதுவும் வருவதில்லை என்று யோசித்திருக்கிறாள்....

“கனவு எல்லாம் சும்மா... அவளுங்களே கனவு கண்ட மாதிரி கதை விடறாளுங்க “ என்று எண்ணிக்கொண்டே தன் வேலையை தொடர்வாள்

அப்படி வளர்ந்தவளுக்கு இன்று புதிதாக கனவு வரவும் அவளால் அதை பொய் என்று நம்ப முடியவில்லை... அவள் மீண்டும் அந்த கனவை நினைத்து பார்த்தாள்....

“சே!!! ஏன் இப்படி ஒரு கனவு எனக்கு வந்தது... ??? அதுவும் அவன்.... என்ன பெயர் சொன்னேன் அவனை??......என்று திறும்பவும் நினைத்து பார்த்தாள் ... ஆதி.......ஆமாம் ..ஆதி என்று தான் அழைத்தது நினைவு வந்தது...

ஒருவேளை சின்ன வயதில் இருந்தே தன் மனதுக்குள் அந்த ஆதவனை கண்டு தினமும் அவன் பெயரை ‘ஆதி’ என்று சொல்லி கூப்பிட்டது.. அதுதான் அதே பெயர் அப்படியே கனவாக வந்திருக்கும்... ஆனாலும் அவன் குடுத்த முத்தம்....”என்று மீண்டும் அதை நினைத்து பார்த்தாள்...உடனே தன்னை சமாளித்து கொண்டு

“பாரதி... நீ இந்த பட்டணத்துக்கு வந்து இந்த காத்து பட்டு ரொம்ப கெட்டு போய்ட்ட..தப்பு தப்பா நினைக்கிற... உன்னை அய்யனார் கோயிலுக்கு கூட்டிட்டு போய் மந்திரிச்சாதான் சரி வருவ!! ஆமா ... இங்க அய்யனார் கோயில் இருக்கானு தெரியலையே!!! இப்படினு தெரிஞ்சிருந்தா வரும்பொழுதே மந்திரிச்ச திருநீற்றை எடுத்துகிட்டு வந்திருப்பேன் உனக்கு ஓட்ட “ என்று அவளை மிரட்டியது அவளின் மனசாட்சி...

அவளும் தன்னை நினைத்து சிரித்து கொண்டே எழுந்து குளியலறைக்குள் புகுந்தாள்... ப்ரஸ் பண்ணிட்டு வெளியே வந்தவள் அப்பொழுதுதான் அந்த அறையை சுற்றி பார்த்தாள்...

அவள் எழுந்த உடனே அவளின் கண்ணில் படுமாறு இருந்தது அவனின் புகைப்படம்..அவன் கண்ணில் மின்னும் குறும்பும் உதட்டில் தெரியும் ஆளை வசீகரிக்கும் புன்னகையும் அவள் உள்ளே ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தியது... அவனையே மீண்டும் உற்று பார்த்தாள்....அவனின் குறும்பு பார்வை அவளுள்ளே சில்லென்று ஊடுறுவியது...

“ம்ஹும்.. இவன் கிட்ட ஏதோ மாயம் இருக்குது... இனிமேல் இவனை பார்க்க கூடாது “என்று தன் பார்வைய அவசரமாக விலக்கி அறையை சுற்றிலும் சுழல விட்டாள்.. அறையின் மற்ற பக்கத்தில் பார்த்தவள் அசந்து நின்றாள்... அறையை சுற்றிலும் பல குழந்தைகளின் புகைப்படங்கள்.. ஆணும் பெண்ணும் மாறி மாறி கொழுகொழு வென்று அழகாக சிரித்தனர் இவளை பார்த்து...அந்த குழந்தைகளை ரசித்தவள்

மீண்டும் ஒருமுறை திரும்பி அவனை பார்த்தாள் ... அவனும் இவளையே தான் பார்த்து சிரித்து கொண்டிருந்தான்...

“யாரா இருக்கும்??? இதெல்லாம் இந்த ஜானகி அத்தையோட வேலையாதான் இருக்கும்... இவங்களுக்குத்தான் தன் வாரிசை பார்க்கனும்னு எவ்வளவு ஆசை...

அவங்க ஆசையை சீக்கிரம் நிறை வேற்றி வை முருகா” என்று வேண்டி கொண்டெ கீழே இறங்கி சென்றாள்..

அதே நேரம் ஜானகியும் அவளுக்கு போன் பண்ணி இருந்தார்...

“பாரதி மா.. நல்லா தூங்கினியா...?? “ என்று அக்கறையாக விசாரித்தார்

“எங்க தூங்கினேன்?? “ என்று மனதிற்குள் முனகியவள்

“ஆமாம் அத்தை..நல்லா தூங்கினேன்... இப்பதான் எழுந்தேன்... ஆமா.. என் ரூம்ல ஒரு போட்டோ இருக்கே. யார் அது அத்தை??? “ என்று ஒரு ஆர்வத்துடன் கேட்டாள்

“அவன் தான் என் பையன்... ஆதி..... ஆதித்யா… பிடிச்சிருக்கா??? “என்று கேட்டவர் தன் நாக்கை கடித்து கொண்டார்...

“ஆதி...” என்று அவள் கனவில் வந்தவன் பெயரை சொல்லவும் அதிர்ச்சியில் ரிசிவரை அப்படியே தவற விட்டாள் பாரதி.... . 




துவரை ஜானகி “ என் பையன், ராஜகுமாரன் என்று தான் சொல்லி இருந்தார்... பாரதியும் அவர் பையன் பெயரை இதுவரை கேட்டிருக்க வில்லை... இப்பொழுது அவன்தான் ஆதி எங்கவும் கனவில் தான் ஆதி னு தானே கூப்பிட்டேன் “ என்று உறைந்து நின்றாள் சில விநாடிகள் ..

ஜானகியோ பாரதி பாரதி.. என்று கத்தி கொண்டிருந்தார்.....

மெதுவாக தன்னை சுதாரித்து கொண்டவள் ரிசிவரை எடுத்து மீண்டும் பேச ஆரம்பித்தாள்...

“என்னாச்சு பாரதி... நான் பயந்தே போய்ட்டேன்... “

“ஒன்னும் இல்லை அத்தை...லைன் சரியா கிடைக்கலை போல... அப்புறம் என்ன கேட்டீங்க??? “ என்று சமாளித்தாள்...

“ஹ்ம்ம்ம்ம் உனக்கு அந்த வீடு, அந்த இடம் எல்லாம் பிடிச்சிருக்கானு கேட்டேன்... “ என்று தான் நினைத்ததை மறைத்து சொன்னார்...

வீடு எனவும் தான் கண்ட அந்த சூரிய உதயம் கண் முன்னே வந்தது..

“சூப்பரா இருக்கு அத்தை... வீட்டையும் பிடிச்சிருக்கு.. வீட்டோட சொந்தக்காரன் உங்க பையனையும் ரொம்ப பிடிச்சிருக்கு!!!”

“சே !! நான் மட்டும் 3 வருஷம் முன்னாடியே அந்த ஷ்வேதா பார்க்கும் முன்பே உங்க பையனை பார்த்து இருந்தால் நானே கடத்தி கொண்டு போய் தாலி கட்டியிருப்பேன்.. மிஸ் பண்ணிட்டேன்.. “ என்றாள் குறும்பாக

“ஹ்ம்ம்ம் நானும் உன்னையே பார்க்காமல் போய்ட்டேனே “என்று மனதுக்குள் சொல்லியவர்

“வாயாடி.. நீ செஞ்சாலும் செஞ்சிருப்ப... இவ்வளவு வாய் அடிக்கிறவ என் பையன் முன்னாடி இப்படி பேசுவியானு பார்க்கறேன்..

“உங்க பையன் என்ன பெரிய ராஜாவா?? ... அவன்கிட்டயும் நான் இப்படித்தான் பேசுவேன்..”

“பார்க்கலாம் .பார்க்கலம். ஒருநாள் எப்படியும் அவனை பார்க்கத்தான போற.. அப்ப நான் பார்க்கிறேன்.. நீ வாயடிக்கிறியா.. இல்லை வாயடங்கி வார்த்தை வராமல் தவிக்கிறியானு” என்று சிரித்தார்...

ஹ்ம்ம்ம்ம் பார்க்கலாம்.... பார்க்கலாம்..”என்று பதிலுக்கு சிரித்தாள் பாரதி...

“சரி மா.. சீக்கிரம் கிளம்பி இரு. நான் கார் அனுப்பி இருக்கேன்.. அதுலயே நம்ம முருகன் கோயிலுக்கு வந்திடு.. அதுக்கப்புறம் நாம ஹாஸ்பிடலுக்கு போகலாம்...”

“ஹ்ம்ம்ம் சரி அத்தை.. நான் போய் ரெடியாகிறேன்” என்று போனை வைத்துவிட்டு அவசரமாக மேலே ஓடினாள்...

இங்கு ஜானகி போனை வைத்ததும் அவர் அருகில் வந்த ஆதித்யா

“யாருமா போன்ல??? ஒரே வாயெல்லாம பல்லா இருக்கு??? “ என்று சிரித்தான் ஆதி

“பாரதி தான் கண்ணா.. இன்னைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கனும் இல்லையா... அதான் அவளை கிளம்பி வர சொன்னேன்..” என்று சிரித்தார்...

பாரதி என்றதும் அவன் முகம் இறுகியது..உடல் விரைத்தது... பின் வேகமாக தன் அறைக்கு சென்று அவன் தயாரித்து வைத்திருந்த அந்த கத்தை பேப்பரை எடுத்து வந்து ஜானகியின் முன்னால் இருந்த டேபிலில் போட்டான்..

“என்ன ஆதி இதெல்லாம்???? “ என்று புரியாமல் கேட்டார் ஜானகி...

“அக்ரிமென்ட் மா... எல்லாம் டீடெய்லா எழுதியிருக்கேன்.. குழந்தை பிறக்கும் வரைக்கும் தான் அவள் இருக்கனும்.. குழந்தை பிறந்த அடுத்த நிமிடம் குழந்தையை நம்ப கிட்ட கொடுத்துட்டு போய்டனும்... மறுபடியும் ஏதாவது உறவுனு சொல்லிகிட்டு நாம இருக்கிற பக்கம் கூட வரக்கூடாது...குழந்தையை காட்டி, நம்ம சொத்திலயும் எந்த உரிமையும் கேட்ககூடாது... அவ கிட்ட முதல்ல கையெழுத்து வாங்கிடுங்க... அப்புறம் தான் மத்ததெல்லாம்... “ என்றான் கடுமையாக

அவனை முறைத்தார் ஜானகி...

“நீ திருந்தவே மாட்டியா ஆதி???... என்னால எல்லாம் பாரதிக்கிட இதை பற்றி பேசமுடியாது.. நீ சுசிகிட்டயே கொடுத்து என்ன வேணுமோ பண்ணிக்கோ.. நீ வேனா பார்.. நீ காட்டற இடத்திலெல்லாம் கையெழுத்து போடுவா பாரதி படிச்சு கூட பார்க்காமல்...

சரி வா போகலாம்.. என்னை கோயில்ல விட்டுட்டு நீ போய் சுசிலாவை பார்... “ என்று கோபமாக அவனை முறைத்துவிட்டு வேகமாக வெளியில் சென்று காரில் ஏறி அமர்ந்தார்...

பாரதியோ வேகமாக சென்று அவசரமாக குளித்து ஒரு காட்டன் புடவையை எடுத்து கட்டி கொண்டிருந்தாள்... எதேச்சையாக எதிர்புறம் பார்த்தவள் தன் முன்னே கைகட்டி குறும்புடன் சிரித்து கொண்டிருப்பவனை பார்க்கவும் கன்னம் சிவக்க

“சீ... “ என்று பின்னால் திரும்பி நின்று கொண்டு புடவையை கட்டினாள்.. அழகான அந்த காட்டன் புடவை அவளுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது....தன் நீண்ட கூந்தலை தலற பின்னி, சிறிய பொட்டு இட்டு அதற்கு மேல் தன் ஊரில் இருந்து கொண்டு வந்திருந்த அந்த முருகனின் திருநீற்றை எடுத்து சிறிதாக பொட்டுக்கு மேலே வைத்தாள்...

தன் பையை திறந்து அதில் இருந்த கண்ணாடி வளையல்களை எடுத்து அணிந்து கொண்டு கீழ வரவும் கார் வரவும் சரியாக இருந்தது.. அவசரமாக காலை உணவை சாப்பிட்டு விட்டு காரில் அமர்ந்தாள்..வரும் வழியில் மீண்டும் அந்த கனவு வந்து அவளை சிவக்க வைத்தது..

“ம்ஹ்ம்ம் இது தப்பு.. இனிமேல் இந்த மாதிரி நினைக்க கூடாது... நாம் இங்கு இருப்பது ஜானகி அத்தைக்காக மட்டும் தான்.. அந்த வேலை முடிந்ததும் நம் கிராமத்துக்கே போய்டப் போறோம்.. அதுக்குள் வேண்டாத கற்பனைகள் வேண்டாம்” என்று தன் மனதை அடக்கியவள் அந்த காலை வேளையில் சென்னை நகரத்தையும் அதன் போக்குவரத்து நெரிசலையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள்...

கோயிலை அடைந்ததும் காரில் இருந்து இறங்கியவள் முன்னதாகவே வந்திருந்த ஜானகியை கண்டுகொண்டாள்...தானாக முகத்தில் புன்னகை அரும்ப அவரை நோக்கி இரண்டு இரண்டு படியாக தாண்டி சென்று அவர் முன்னே நின்றாள்...

ஜானகி பாரதியை இதுவரை புடவையில் பார்த்ததில்லை..அவள் எப்பொழுதும் சுடிதார் அணிந்து கொண்டு இரண்டு பக்கமும் சாலை இழுத்து பின் பண்ணிதான் பார்த்திருக்கிறார்... முதல் முதலாக புடவையில் பார்க்கவும் அதிசயித்து நின்றார்....

கொடிபோன்ற அவளின் உடலுக்கு அந்த காட்டன் புடவை மிகவும் எடுப்பாக இருந்தது.. நெடுநெடுவென்று உயரமாக தெரிந்தாள் இன்று ... ஜானகி அவசரமாக தன் மகனை அவள் அருகில் நிறுத்தி ஜோடி பொருத்தம் பார்த்தார்...

அவனின் கம்பீரமான ஆண்மைக்கும் அவளின் கொடி போன்ற மேனிக்கும் அம்சமாக இருந்தது... மேலும் அவனின் கண்களில் தெரியும் குறும்பு சிரிப்பும் அவளின் உதட்டில் எப்பொழுதும் தவழும் குறும்பு புன்னகைக்கும் அவ்வளவு பொருத்தமாக இருந்தது... அந்த முருகனையும் வள்ளியையும் ஜோடியாக கண்டதுபோல இருந்தது அவருக்கு...

ஒவ்வொன்றாக பொருத்தம் பார்த்து வந்தவருக்கு எங்கயோ இடித்தது.. என்ன அது என்று யோசித்ததும் விளங்கியது பாரதியின் நிறம்...

ஆதி பிறந்ததில் இருந்தே நல்ல கொலு கொலுவென்று வெள்ளையாக இருப்பான்... ஆனால் பாரதி மாநிறம் தான். ஆனால் அவள் முகம் கலையாக இருக்கும்.. இருவர் நிறத்திலும் கொஞ்சம் வித்தியாசம் தெரிய கொஞ்சம் மனம் வாடியது அவருக்கு...

அதற்குள் வெள்ளை வெளேறென்று இருக்கும் அந்த ஷ்வேதா நினைவு வர

“நிறத்தில் என்ன இருக்கு?? .... அந்த ஷ்வேதாவின் வெள்ளைத்தோலை கண்டு மயங்கி பட்ட கஷ்டம் போதும்... என்ன... வெயிலில் அலைந்ததால் பாரதி கொஞ்சம் நிறம் கம்மியாக இருக்கிறாள்... மற்றபடி இனிமேல் இங்கு வீட்டுக்குள்ளயே அதுவும் ஏஷியில் தான இருக்க போகிறாள்... சீக்கிரம் அவளும் என் பையன் நிறத்திற்கு வந்து விடுவாள் என்று தன்னை சமாதானப் படுத்தி கொண்டார்...

தன்னையே இமைக்காமல் பார்த்து கொண்டிருக்கும் ஜானகியின் முன்னே கையை நீட்டி சொடக்கு போட்டாள் பாரதி

“என்ன அத்தை?? ... நின்னுகிட்டே தூங்குறீங்க... என்னை பார்க்கிற சந்தோஷத்துல நேற்று இரவெல்லாம் தூங்கலையா?? “ என்று கன்னம் குழிய சிரித்தாள்...

பாரதியின் குரலை கேட்டதும் தன் கற்பனை குதிரைக்கு கடிவாளம் இட்டு நிறுத்தினார்...பின் பாரதியை பார்த்து அசட்டு சிரிப்பை சிரித்தார்...

“போதும் அத்தை...கோல்கெட் விளம்பரத்துக்கு போஸ் கொடுக்கிற மாதிரி இருக்கு... சரி அதை விடுங்க.. இந்த சாரியில நான் எப்படி இருக்கேன்?? “ என்று தன் முந்தானையை ஒரு கையில் பிடித்து விரித்து இப்படியும் அப்படியும் தன்னை திருப்பி காட்டினாள்...

அவளின் அந்த சிறுபிள்ளைத் தனமான செயலை ரசித்தவர்,

“உனக்கென்ன பாரதி... என் ராஜாத்தி.. உனக்கு எல்லா ட்ரெஸ்ஷுமே சூப்பரா தான் இருக்கும்... ஆனாலும் இந்த சாரியில இன்னும் கலக்கற... என் கண்ணே பட்டுடும் போல இருக்கு” என்று நெட்டி முறித்தார்....

“போங்க அத்தை ... “ என்று செல்லமாக சினுங்கியவள் அப்பொழுதுதான் ஞாபகம் வந்ததை போல பாரதியின் கண்கள் தானாக யாரையோ தேடியது...

“என்னாச்சு பாரதி?? யாரை தேடுற???? “ என்றார் ஜானகி

“ஒன்னுமில்லை அத்தை...வாங்க நம்ம ப்ரெண்டை பார்க்க போகலாம் “ என்று மழுப்பி அந்த முருகனின் சன்னதிக்கு அவரை அழைத்து சென்றாள்...

பின் இரு பெண்களும் எல்லாம் நல்ல படியா நடக்கனும்_ என்று அந்த முருகனை வேண்டிக் கொண்டு சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தனர்...

இருவர் மனதிலும் ஏதோ ஒரு கலக்கம் மெல்ல சூழ ஆரம்பித்தது...

பின் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று வரலாம் என்று அங்கே சென்றனர்... அம்மனை வணங்கி நிமிரும் பொழுது அங்கு ஒரு பெண்மணி எல்லாருக்கும் மஞ்சள் கயிற்றை கொடுத்து கொண்டிருந்தாள்.. அவள் கணவனுக்காக ஏதொ வேண்டுதல் என்று.,,

பாரதி அவர் அருகில் வரவும்

“இந்தாம்மா... நீயும் இந்த கயிற்றை கட்டிக்கோ... கல்யாணம் ஆகலைனா சீக்கிரம் கல்யாணம் ஆகும்... குழந்தை இல்லைனா சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் “என்று ஒரு கயிற்றை பாரதியின் கையில் கொடுத்தார்....

அதை வாங்கிய பாரதி அதை என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு நிற்க,

“பரவாலை பாரதி மா.. கட்டிக்கோ.. சாமி காயிறுதான.. கட்டிக்கலாம்.. எங்க இங்க கொடு.. நானே கட்டி விடறேன் “ என்று அந்த கயிற்றை வாங்கியவர் பின் அவளின் கழுத்தில் கட்டினார்....

பாரதிக்கு ஏனோ அதிகாலை கனவில் வந்த அவனே இந்த கயிற்றை கட்டுவது போல உடல் சிலிர்த்தது...மனமெல்லாம் மெல்லிய சுகம் பரவியது ...

அதற்குள் ஜானகி

“சரி பாரதி.. சீக்கிரம் போகலாம் வா.. நல்ல நேரம் முடியறதுக்குள்ள நாம அங்கு போகனும் “ என்று அவளை அழைத்துக்கொண்டு சென்றார்....

இருவரும் மருத்துவமனையை அடைந்தததும் சுசிலாவின் அறையை அடைந்தனர்...

ஆதி முன்பே சுசிலாவை பார்த்து அவனுடைய பார்மாலிட்டிசை முடித்து விட்டு சென்றிருந்தான்...

சுசிலாவின் அறைக்குள் நுழைந்ததும் மீண்டும் பாரதியின் கண்கள் யாரையோ தேடியது...ஆனால் யாரை தேடுகிறோம் என்று அவளுக்கே புரியவில்லை...

“சே!! என்ன தேடுகிறோம்?? “ என்று அவசரமாக தன்னை திட்டிகொண்டவள் சுசிலாவின் முன்னே சென்று அமர்ந்தாள்...

சுசிலாவும் அவளை பார்த்து புன்னைகத்து அவளின் நலம் விசாரித்தார்.. பின் ஆதி கொடுத்த அந்த பேப்பரை எடுத்து அவளின் முன்னே வைத்தார்...

பாரதி புரியாமல் அவரை பார்க்கவும்

“இது ஒன்னுமில்ல பாரதி.. ஒரு பார்மலிட்டிஸ்க்காக உங்கிட்ட கையெழுத்து வாங்கனும்... நீ படிச்சு பார்த்துட்டு சைன் பண்ணு” என்றார் தர்ம சங்கடமாக...

அவருக்குமே இந்த மாதிரி கையெழுத்து வாங்குவதில் உடன்பாடில்லை... ஆனால் ஆதி கையெழுத்து வாங்கியே ஆகனும் என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டதால் அவராலும் அதை தட்ட முடியவில்லை....அவரின் அந்த நிலையை புரிந்து கொண்ட பாரதி

“பரவாலை டாக்டர்.. கொடுங்க.. எங்க சைன் பண்ணனுமோ அங்க பண்றேன்” என்று சிரித்து கொண்டே அவர் நீட்டிய அத்தனை பக்கத்திலும் தன் கையெழுத்தை போட்டாள்..

ஜானகிக்கு பெருமிதமாக இருந்தது...இப்படி ஒரு பெண் கிடைக்க என்ன புண்ணியம் பண்ணினனோ!! என்று உருகி நின்றார்...

பின் நல்ல நேரம் ஆரம்பித்து விட்டதால் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கலாம் என ஜானகி கூறவும் பாரதி எழுந்தாள்...

எழுந்தவள் என்ன நினைத்தாளோ

“அத்தை... என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க... “என்று ஜானகியின் காலில் விழுந்தாள்...

இதை எதிர்பார்க்காத ஜானகி பதறி அவளை குனிந்து தூக்கி

“உன் நல்ல எண்ணத்திற்கு நீ ராணி மாதிரி இருப்ப பாரதிமா...உனக்கு எந்த குறையும் வராது... நீ எந்த குறையும் இல்லாமல் நல்ல படியா எங்க வீட்டு வாரிசை பெத்து கொடுப்பியாம்” என்று உச்சி முகர்ந்தார்...

பின் சுசிலாவிடமும் ஆசி வாங்கியவள் சுசிலா காட்டிய அந்த அறையை நோக்கி மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்தாள்......

அந்த அறையை நெருங்க நெருங்க ஒரு வித பயம் + கலக்கம் அவளின் அடி வயிற்றில் பரவியது....

முதலிறவு அறையை நோக்கி செல்லும் மணப்பெண்ணை போல மெல்ல தயக்கதுடன் நகர்ந்தாள்...

உள்ளே சென்றதும் அவளை ஒரு படுக்கையில் படுக்க வைத்தனர்... அதுவரை கொஞ்சம் இருந்த தைரியமும் காற்றில் போனது... பயம் மீண்டும் சூழ்ந்து கொண்டு அடி வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன...

அவள் ஒரு காய்ச்சல் வந்தபோது கூட மருத்துவமனைக்கு சென்றதில்லை ஊசி போட்டால் வலிக்கும் என்று...அப்படியும் வற்புறுத்தி அழைத்து சென்றால் அந்த மருத்துவமனையையே அலர வைப்பாள்...

தான் மருத்துவமனையிலயே வேலை செய்த போதும் எந்த நோயாளிக்காக ஊசி போடுகிறார்கள் என்றால் அந்த இடத்தை விட்டு ஓடி விடுவாள்.. ஏனொ அந்த ஊசியை பார்த்தால் மட்டும் அவ்வளவு பயம் அவளுக்கு....

எதேச்சையாக அவள் முன் இருந்த உபகரணங்களை பார்த்தபொழுது அவளுக்கு உடல் நடுங்கியது.. பேசாமல் எழுந்து போய் விடலாமா என்று இருந்தது...

ஆனால் ஜானகியின் அந்த மகிழ்ச்சியான சிரித்த முகம் ஞாபகம் வந்தது...

“ஹ்ம்ம்ம் அவங்களுக்காகவாது இதை எல்லாம் தாங்கி கொண்டுதான் ஆகனும்” என்று தன்னை தானெ சமாதானம் செய்து கொண்டாள்..மனதிற்குள் கந்த சஷ்டி கவசத்தை சொல்லிக்கொண்டாள்...

சுசிலாவும் அவளின் நிலையை புரிந்துகொண்டு

“ஒன்னும் பயப்படாத பாரதி.. சீக்கிரம் முடிச்சிடலாம்... வலி எதுவும் இருக்காது...

நீ உனக்கு பிடிச்சதை எதையாவது ஒன்னை நினைச்சுகிட்டு கண்ணை மூடிக்கோ!!! “ என்றார்...

அவளும் தன் நண்பன் முருகனை ஒரு முறை வேண்டிகொண்டு தன் குல தெய்வங்கள், தன் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் நினைவில் கொண்டு வந்தாள்.. தன் காதலனான அந்த ஆதவனையும் நினைத்துக்கொண்டே வந்தவளின் நினைவுகளில் அவளின் கனவு மீண்டும் நினைவு வந்தது...

அவன் தன்னை ரதி என்று அழைத்ததும் அதற்கு பின் நடந்த அந்த முத்தமும்.. மெல்ல நினைவு வந்தது. இன்னும் இனித்தது அவளுள்ளே... உறக்கத்தில் இருந்தவள் மெல்ல தன் கண்ணை திறந்து பார்த்தாள்.. இப்பொழுது தன்னை எழுப்பியவனின் முகத்தை கண்டு கொண்டாள்...

ஆம்.. அந்த முகம்.. அவன்.... அவள் அறையில் சிரித்து கொண்டிருந்த ஜானகியின் மகன் ஆதித்யாவின் முகமே!!...

”அப்படி என்றால்??? ஜானகி அத்தையின் மகனா என் கனவில் வந்தது?? “ என்று மேனி சிலிர்த்தாள்

அப்பொழுதுதான் நினைவு வந்தது தான் அவனின் குழந்தையை சுமக்க போகிறேன் என்று.... அதை நினைக்கையில் ஒரு பரவசம் அவளுள்ளே!!! என்னவென்றெல்லாம் யோசிக் கவில்லை அவள்...

“என் கனவில் வந்து என்னை முத்தமிட்டு கொஞ்சிய அவனின்... என் ஆதியின் குழந்தைக்கு நான் தாயாக போகிறேன்” என்பதே இனித்தது அவளுக்கு..

அதன் பின் அவளுக்கு எந்த வித வலியும் தெரியவில்லை.. அவனின் அணுக்கள் அவள் உள்ளே செலுத்த படும்பொழுது அவளுள் ஒரு வித பரவசம் பரவியது...கனவில் தன்னை கொஞ்சிய அவனே அவளுடன் கூடியதை போல பரவசமடைந்தாள்...மனமெல்லாம் மகிழ்ச்சி பூக்கள்... உடலெல்லாம் புதுவித சுகம் பரவியது.... அந்த மோன நிலையை ரசித்து ருசித்து அனுபவித்தாள் பாரதி... அவளின் மனமோ

“முருகா.... நீயே வந்து ஜானகி அத்தையின் வீட்டுக்கு வாரிசா பிறக்கனும்... அவனின்.. அந்த ஆதியின் குழந்தை அவன மாதிரியே அழகா,.அறிவா, எல்லார் மேலயும் பாசமா இருக்கனும்.. இந்த குழந்தைக்காக எத்தனை பேர் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்... இந்த குழந்தைதான் எல்லாரையும் சிரிக்க வைக்க போகிறது.. இது...அவன் குழந்தை.... நல்ல படியா உருவாகனும்” என்று மனம் உருகி வேண்டிக்கொண்டாள்....

இதே மனம் இந்த குழந்தையை நான் ஏன் சுமந்தேன் என்று வருந்தும் நாள் விரைவில் வரும் என்பதை அறியவில்லை பாரதி அப்பொழுது !!!!

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!