என் மடியில் பூத்த மலரே-17
அத்தியாயம்-17
இரண்டாம் மாதம்:
இரண்டு மாதங்களுக்கு பிறகு
அன்று அதிகாலையிலயே விழிப்பு வந்தது ஆதித்யாவிற்கு... மெத்தையில் இருந்து எழும்பொழுதே ஒரு வித உற்சாகமாக இருந்தது அவனுக்கு.. என்னவென்று தான் புரியவில்லை... எழுந்தவன் விசில் அடித்துக்கொண்டே காலை உடற்பயிற்சிகளை முடித்தான்... பின் தன் அலைபேசியில் ஏதோ செய்தி வரவும் அதை எடுத்து பார்த்தான்.....
பார்த்தவன் “ஆஹா....வாவ் “ என்று துள்ளி குதித்தான்....
அவனுக்கு ஒரு நல்ல செய்தி வந்திருந்தது அதில்.. ரொம்ப நாட்களாக அவன் எதிர்பார்த்து கிடைக்காமல் போக இருந்தது மீண்டும் அவனுக்கே கிடைத்து விட்டது.... அதனால தான் இன்று எழும்பொழுதே இவ்வளவு சந்தோஷமாக இருந்ததோ!!.. இனி எல்லாம் சுகமே என்று பாடிக்கொண்டே கிளம்பி கீழே சென்றான்...
ஜானகியும் அப்பொழுதுதான் தன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவர் அதை வைத்தவரின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்... அவரும் ஆதி மாதிரியே துள்ளிக் குதித்தார் மனதில்....
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு சிரித்தனர்.... ஒரே நேரத்தில் இருவரும் ‘குட் நியூஸ்’ என்றனர்...
“எப்படி அதுக்குள்ள இவனுக்கு தெரிந்தது” என்று ஜானகியும்
“எப்படி அதுக்குள்ள அம்மாக்கு தெரிந்தது ?? “ என்று ஆதியும் மாறி மாறி நினைத்துக் கொண்டனர்...
பின் ஆதித்யா தன் அம்மாவே சொல்லட்டும் என்று நினைத்து
“என்னம்மா ஒரே சந்தோஷமா இருக்கீங்க?? .. என்ன விஷயம்?? “ என்று ஆரம்பித்து வைத்தான்....
அவ்வளவு தான்.... ஜானகி வாயெல்லாம் பல்லாக வேகமாக சமையல் அறைக்கு சென்று அங்கு இருந்த ஏதோ ஒரு இனிப்பை அவசரமாக எடுத்து வந்து,
“கண்ணா....... நீ அப்பாவாக போற!!!!! நானும் சுசியும் பாட்டியாக போறோம்... ” என்று அவன் வாயில் அந்த இனிப்பை தினித்தார் சிரித்தவாறு.. ...
ஆதிக்கு ஒன்றும் புரிய வில்லை....
கடந்த ரெண்டு மாதமாக அவனுடைய அந்த பெரிய ஒப்பந்தத்திற்காக அலைந்து கொண்டிருந்தான்.. இடையில் அந்த ராகுல் தலையிட்டு இவனுக்கு கிடைக்காமல் செய்ய எல்லா வகையிலும் முயன்று கொண்டிருந்தான்.. அந்த ராகுலின் தலையீட்டால் தனக்கு இந்த ப்ராஜெக்ட் கிடைக்காது என்று தீர்மானித்து இருந்தான் ...
அந்த ப்ராஜெக்ட் மட்டும் தனக்கு கிடைத்து விட்டால் பெருத்த லாபம் சம்பாதிக்கலாம்... இனிமேல் யாராலும அசைக்க முடியாத ஒரு நிலைக்கு வந்து விடலாம்.. அதனாலயே இரவு பகலாக அதற்கான ஏற்பாட்டிற்காக அலைந்து கொண்டிருந்தான்...
அந்த அலைச்சலில் ஜானகி ஏற்பாடு பண்ணி இருந்த வாடகைத் தாய் விஷயம் அவனுக்கு மறந்து இருந்தது...ஜானகி திடீரென்று நீ அப்பாவாக போற என்று சொல்லவும்
“அப்பாவா??? “ என்று புரியாமல் தன் அம்மாவை பார்த்தான்,..
“ஆமான்டா கண்ணா... பாரதி கற்பம் உறுதியாயிருச்சு... இப்பதான் சுசி எல்லா டெஸ்ட்டோட முடிவையும் பார்த்துட்டு போன் பண்ணினா....
நம்ம விட்டுக்கு ஒரு குட்டி ஆதி வரப்போறான்... நாம பட்ட கஷ்டம் எல்லாம் போய் மகிழ்ச்சியை எல்லாம் மீட்க போறான்.. என் ராம் மீண்டும் நம்ம வீ ட்டுக்கு வரப்போறார்” என்று சந்தோஷத்தில் குதித்தார் கண்கள் மின்ன.. ...
அவர் சொன்னது ஓரளவு புரிய ஆரம்பித்தது அவனுக்கு... அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது அந்த வாடகைத்தாய் ஏற்பாடு...
“அப்படி என்றால்.... அப்பா... நான் அப்பாவா?? என் குழந்தை !!!! “என்று சொல்லி பார்த்தவன் ஒரு சிறிய பெண் குழந்தை ஓடி வந்து அவனை அப்பா வென்று கட்டி கொள்வதை போலவும் அவன் அதை அள்ளி எடுத்து தலைக்குமேல் தூக்கி சுற்றி அதன் பட்டு கன்னத்தில் மெல்ல முத்தமிடுகிறான்..
அந்த பட்டு ரோஜாவும் அவன் கன்னத்தில் முத்தம் இடுகிறது.... அவ்வளவுதான்… அவன் உள்ளே ஒலிந்து கொண்டிருந்த தந்தை பாசம் விழித்துக்கொண்டது... அவன் உடல் சிலிர்த்தது... ஏன் ஒரு சில விநாடிகளில் தனக்கு பெரிய பொருப்பு வந்தது போல உணர்ந்தான்...
அவன் தந்தை கண் முன்னே வந்தார்.. அவர் எப்படி ஒரு நல்ல தகப்பனா, நண்பனா , வழி காட்டியா அவன் மேல பாசத்தை காட்டி வளர்த்தாரோ அதெல்லாம் மடை திறந்த வெள்ளம் போல அவன் முன்னே வந்தது.... தன் தந்தையின் கையை பிடித்துக்கொண்டு அவன் நடந்தது நினைவு வந்தது...
அப்படி என்றால் “என் கையை பிடித்துகொண்டு நடக்க எனக்கு ஒரு குட்டி இளவரசி வரப்போறா “ என்று அவன் மனம் குதித்தது,,,
“My Princess….. “ என்று மெல்ல சொல்லிப்பார்த்தான்...
அவனுக்கு ”my dad.. my sweet dad “ என்று அந்த குட்டி தேவதையும் திருப்பி சொல்வதை போல பிரம்மை...அவன் செவிகள் இனித்தன அந்த மழலையை கேட்டு..அந்த இனிமை அவன் உடல் எல்லாம் பரவியது.... அப்படியே அசந்து நின்றான்
தான் சொன்ன நல்ல செய்தியை கேட்டு தன் மகன் அசையாமல் முழித்துக்கொண்டு நிற்பதைக் கண்ட ஜானகி
“இவன் ஏன் இப்படி நிற்கிறான்” என்று ஜானகிக்கு கொஞ்சம் குளிர் பரவியது..
“ஐயோ!!! நான் வேர அவசரப்பட்டு சொல்லிட்டேனோ.. இப்ப என்ன சொல்ல போறானோ??? ” என்று பயந்தவர்.
“ஆதி.... ஆதி கண்ணா...” என்று மெல்ல அவன் கையை பிடித்தார்....
அப்பொழுது தான் நினைவு வந்தவனாக உடலை சிலிர்த்து அவரை பார்த்து வெட்கப்பட்டு சிரித்தான் தான் அப்பாவாக போவதை நினைத்து..
“உண்மையாகவா மா ... நான் அப்பாவா??? இன்னும் எவ்வளவு நாள் ஆகும்???? “ என்றான் ஆர்வமாக..
அதை கேட்டதும் ஜானகி மயங்கி விழாத குறைதான்.. தன் பையனா இப்படி கேட்பது??? .. வழக்கம்போல ஏதாவது காச் முச்சுனு கத்துவானு பயந்தவர் அவன் ஆர்வமாக கேட்கவும் மீண்டும் ஒரு முறை துள்ளி குதித்து மகிழ்ந்தார்..
“இன்னும் 8 மாதம் கண்ணா.... இந்த அப்பாவையும் பாட்டியையும் பார்க்க ஓடோடி வந்திடுவான் இல்லை வந்திடுவா” என்று சிரித்தவர்
“நீ ஏதொ சொல்ல வந்தியே கண்ணா?? “.. என்று ஞாபகப் படுத்தினார்...
அவனும் தனக்கு அந்த பெரிய ப்ராஜெக்ட் கை நழுவி போக இருந்ததையும் பின் அது தனக்கே கிடைத்ததையும் சொல்லவும்
“பார்த்தியா!!! எல்லாம் நம்ம வாரிசு வரப்போற நேரம் தான்... உன்னை விட்டு கை விட்டு போக இருந்தது கூட உன்கிட்ட வந்திடுச்சு.. அதே மாதிர் நீ இழந்த எல்லாம் உனக்கு திரும்ப கிடைக்கும் கண்ணா... இனிமேல் உன் வாழ்வில் எல்லாம் நல்ல படியா நடக்கும் பார் “ என்றார்.....
“ஹ்ம்ம்ம் சரிமா... “ என்று அவனும் சிரித்து கொண்டே அலுவலகம் கிளம்பி சென்றான்..
அங்கு சுசிலாவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்...அவர் இதுவரை பல IVF ட்ரீட்மென்டை வெற்றிகரமாக முடித்துள்ளார்... இருந்தாலும் தான் வளர்த்த தன் மகன் ஆதியின் குழந்தையை உருவாக்கும் பொருப்பை ஏற்றதில் இருந்தே அவருக்குள் ஒரு இனம் புரியாத பரவசம்... ட்ரீட்மென்ட் ஆரம்பித்ததில் இருந்தே கொஞ்சம் பயந்து கொண்டே தான் இருந்தார்.. எல்லாம் நல்ல படியாக முடியனும் என்று...
பாரதிக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பித்த முதல் முயற்சியிலயே வெற்றி பெறனும்.. இல்லைனா இந்த ஆதி பயலை மீண்டும் சம்மதிக்க வைக்க முடியாது... அப்புறம் ஜானகி மீண்டும் சுருங்கி விடுவாள் என்ற கவலைதான் அவருக்கு...
ஒரு வழியாக பாரதியின் நாட்கள் தள்ளிப்போகவும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது அந்த இரண்டு தாய்களுக்கும்.. இருந்தாலும் முறைப்படி எல்லா டெஸ்ட் ம் எடுத்து பார்த்த பின்னரே உறுதியாக சொல்ல முடியும் என்று சுசிலா சொல்லி விட்டார்...
அதற்காக நேற்று மாலை ஜானகி வந்து பாரதியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்..சுசிலாவும் பேசிக் பிரக்னன்சி டெஸ்ட் எடுத்து பார்த்து அது பாஷிடிவ் ஆக வரவும் உள்ளம் மகிழ்ந்து போனார்...
ஆனாலும் இன்னும் மற்ற டெஸ்ட்டையும் பார்த்துட்டு ஜானகியிடம் சொல்லலாம் என்று தள்ளி வைத்தார்...பாரதியும் டெஸ்ட்டுக்கு தேவையானவற்றை கொடுத்த பின்னர் வீடு திரும்பினர்.. அதன் முடிவு அடுத்த நாள் தான் தெரியும் என்று...
சுசிலா இன்று காலையிலயேம் முதல் வேலையாக லேபிலிருந்து வந்திருந்த அந்த முடிவுகளை ஆராய்ந்தார் ஒரு வித பதட்டத்துடன்.. என்றும் இல்லாமல் அவரின் கைகள் நடுங்கின... எல்லாம் நல்ல படியா இருக்கனும் என்று நினைத்துக்கொண்டே ரிப்போர்ட்டை ஆராய்ந்தவர் அதில் பாசிடிவான ரிசல்ட் வந்திருக்கவும் மகிழ்ச்சியில் மிதந்தார்....
ஆதியின் குழந்தை இந்த உலகில் உருவாகிவிட்ட்டது... சீக்கிரம் இந்த உலகிற்கு வரப்போகிறது.. அவனை சுமந்த இதே கையால் அவன் வாரிசையும் சுமக்கப் போகிறேன் என்று அக மகிழ்ந்து போனார்... உடனேயே ஜானகிக்கு அழைத்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்...
ஜானகியிடம் பேசி முடித்து பின் பாரதியையும் அழைத்து அவளுக்கும் டெஸ்ட் ன் முடிவை சொல்லி அவள் எப்படி நடந்து கொள்ளனும் என்று சில அறிவுரைகளை வழங்கி அலைபேசியை வைத்தவரின் மனமும் நாட்களை எண்ணியது
“இன்னும் 230 நாட்கள் காத்திருக்கனும் என் பேத்தியையோ/பேரனையோ பார்க்க” என்று பெருமூச்சு விட்டார்....
ஆதி சென்றதும் ஜானகி பாரதிக்கு போன் பண்ணினார்...
அவரின் அழைப்பை கண்டதும் பாரதிக்கு ஒரு வித நாணம் பரவியது..
ஒரு பெண் கறுவுற்றதை அறிந்ததும் அதை எப்படி அடுத்தவங்களுக்கு சொல்லுவது என்று நாணம் வரும்.. ஏன் தன்னை பெற்ற தாயிடம் கூட சொல்ல தயங்கும் விசயம் அல்லவா... தான் எப்படி ஜானகியிடம் சொல்லுவது என்று வெட்கத்தால அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை....
ரொம்ப நேரம் கழித்தே
“ஹ்ம்ம்ம் சொல்லுங்க அத்தை.... “என்றாள்..
ஜானகிக்கு அவளின் நிலை புரிந்தது.. தானும் அந்த நிலையை கடந்து வந்தவர் இல்லையா... எடுத்த உடன் வம்பிழுக்கும் பாரதி இன்று அமைதியாக இருப்பதே அவள் எப்படி பட்ட மன நிலையில் இருக்கிறாள் என்பதை உணர்த்தியது அவருக்கு...
அதை மேலும் கிழராமல்.
“பாரதி மா..... இப்பதான் சுசி போன் பண்ணினாள்... எல்லா டெஸ்ட் பாசிடிவ் ஆம்..உன் கற்பம் உறுதியாயிருச்சு.... இப்பதான் எனக்கு நிம்மதியா சந்தோஷமா இருக்கு... என் வயிற்றில பாலை வார்த்த பாரதி மா... எங்க வீட்டுக்கு வாரிசு வரப்போகுது” என்று உணர்ச்சி பொங்க பேசினார்...
“பாத்து அத்தை... ரொம்ப உணர்ச்சி வசப்படாதிங்க.. “ என்றாள் அவசரமாக அவரின் உடல் நிலையை அறிந்து இருந்ததால்
“போ டீ.. இனிமேல் இந்த கிழவிக்கு என்ன வந்திடும் சொல்லு.. எவ்வளவு பெரிய பிரச்சனை எல்லாம் தாண்டி வந்துட்டேன்.. இனிமேல் என் பேரனோ பேத்தியோட விளையாடாம அவ்வளவு சீக்கிரம் போய்டுவேனா??? .எங்க குட்டி ராஜாவோ ,ராஜாத்தியோ பார்த்துட்டு , ஓடி ஆடி விளையாண்டு அதுக்கப்புறம் தான் எதுனாலும் எனக்கு வரும்.. “ என்று தளுதளுத்தார்...
அவர் உணர்ச்சி வசப்படவும் பாரதி பேச்சை மாற்றினாள்..
“அதானே இனிமேல் நீங்க என்னை எங்க கண்டுக்க போறீங்க “ என்று வம்பிழுத்தாள் பாரதி...
“ஹா ஹா ஹா.. என்னதான் எங்க வீட்டு வாரிசு வந்தாலும் எங்க குட்டித்தங்கத்தை பெத்து கொடுக்க போற என் மறுமகதான் எப்பவும் எனக்கு ஃபர்ஸ்ட் ஆக்கும் “ என்று சிரித்தார்...
“ஹ்ம்ம்ம் பார்க்கலாம் பார்க்கலாம்... உங்க வாரிசு வந்ததுக்கப்புறம் இதே மாதிரி சொல்றீங்களா.. இல்லை நீ யாரு டீ னு கேட்கறீங்களா னு பார்க்கலாம் “என்று பாரதியும் அவருடன் இணைந்து சிரித்தாள்...
“ஹ்ம்ம்ம்ம் பாரு பாரு “என்று சிரித்தவர்
“சரி பாரதி மா .. சாப்பிட்டியா??? இனிமேல் நல்லா சாப்பிடனும், நல்லா தூங்கனும்....எப்பவும் கவனமா இருக்கனும் “ என்று தன் அறிவுரைகளை வாரி வழங்கி பின் நீண்டநேரம் கழித்து அலைபேசியை வைத்தார்...
பாரதியும் தன் அலைபேசியை வைத்து விட்டு தன் அடி வயிற்றை மெல்ல தடவினாள்... ஏதோ ஒரு பரவசம் உடல் எல்லாம் பரவியது.. மெல்ல கண்மூடி அந்த சுகத்தை அனுபவித்தாள்..
அப்பொழுது அவளை அறியாமலயே அவள் மனம் அவளின் குடும்பத்திடம் சென்றது..
இந்த இரண்டு மாதத்தில் பாரதி ஒரு இரண்டு மூன்று முறை மட்டும் அங்கு வீட்டில் இருந்த லேன்ட் லைனில் இருந்து அவள் வீட்டு லேன்ட் லைனுக்கு அழைத்து அவசரமாக அனைவரிடமும் பேசிவிட்டு தான் இப்பொழுது பிஷியாக இருப்பதால் சீக்கிரம் ஒரு நம்பர் வாங்கி அழைப்பதாக கூறி வேகமாக வைத்து விட்டாள்...அவர்கள் ஏதாவது கேட்டால் தன்னால் பொய் சொல்ல முடியாது என்று தன் பேச்சை சுறுக்கமாக முடித்து விடுவாள்..
அவள் மேல் எந்த சந்தேகமும் இல்லாததால் அவர்களும்
“பாவம்.. புள்ள ரொம்ப கஷ்டப்படறாளோ?? “ என்று கவலைப்பட்டனர்...
ஆனால் ஜானகி தினமும் பாரதியின் வீட்டிற்கு அழைத்து பேசுவார்.. அங்கு நடப்பதை அறிந்து பாரதியிடம் சொல்லுவார்.. அதே மாதிரி பாரதியை பற்றியும் தனக்கு தெரிந்ததாக அவர்களிடம் கூறுவார்...அவள் நன்றாக இருப்பதாகவும் விரைவில் எல்லாரிடமும் பேசுவாள் என்று கூறி சமாளித்து வந்தார்..
இப்படி இரண்டு பக்கமும் மீடீயேட்டராக இருந்தார் ஜானகி..அதே மாதிரி முதல் மாதம் முடிந்த உடனே பாரதியிடம் கூட சொல்லாமல் ஒரு தொகையை பாரதியின் தந்தையின் வங்கி கணக்கிற்கு டெபாசிட் செய்துவிட்டு பாரதி அனுப்பியதாக சொல்லிவிட்டார்..
சில நேரம் அவருக்குமே கஷ்டமாக இருக்கும் “ இப்படி இத்தனை பேரை ஏமாற்றமே “ என்று.. அதற்குள் தன் வாரிசின் நினைப்பு வந்து விடும்.. எல்லாம் நல்லதுக்காக தான் செய்யறோம்.. சீக்கிரம் எல்லாம் சரியாகிடும் “என்று தன் மனதை தேற்றிக்கொள்வார்...
இப்படி போய் கொண்டிருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்னால் பாரதியின் அக்கா மஹா கருவுற்றிருப்பதாக சொல்லவும் பாரதியின் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியில் மிதந்தனர்..
இங்கு பாரதியோ துள்ளி குதித்தாள்..
“என் லூசு அக்கா தாயாக போறாளா?? நான் சித்தியாக போறேன்” என்று..
“நான் இப்பவே எங்க அக்காவை பார்க்கனும்.. என் குடும்பத்தை பார்க்கனும் “ என்று அடம் பிடித்தாள் திடீரென்று...
அவளை எப்படி சமாதானப் படுத்துவது என்று தெரியாமல் முழித்தார் ஜானகி... பின் ஏதோ யோசனை வரவும் ஈஸ்வரிடம் பேசி அவன் அலைபேசியில் அவங்க குடும்ப போட்டோ ஒன்றை எடுத்து அனுப்புமாறும் தான் அவங்க எல்லாரையும் பார்க்கனும் போல இருப்பதாகவும் சொல்லி சமாளித்து புகைப்படத்தை அனுப்ப சொன்னார்...
ஈஸ்வரும் அதே மாதிரி அவங்க குடும்பம் அனைவரையும் ஒன்றாக நிற்க வைத்து தானும் அவர்களுடன் இணைந்து எடுத்து ஜானகிக்கு அனுப்பி வைத்தான்...
அதை கண்டதும் பாரதியின் கண்களில் ஆனந்த கண்ணீர்.... ஒரு மாதத்திற்கு பிறகு தன் குடும்பத்தை பார்க்கிறாள்...
எல்லாரும் சந்தோஷமாக சிரித்துக்கொண்டிருந்தனர்... அதிலும் மஹா தாய்மையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் அவள் முகம் பூரித்து பொழிவுடன் மின்னியது... அவளின் பொழிவே அவள் புகுந்த வீட்டில் நன்றாக இருக்கிறாள் என்று காட்டியது..
அதை கண்ட பாரதி அப்படியே தன் அக்காவை கட்டி கொள்ள துடித்தாள்... அதே மாதிரி ஒவ்வொருவர் முகத்திலும் தெரிந்த மலர்ச்சி அவளுக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் கொடுத்தது... அவர்களாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று தன்னை தேற்றிக் கொண்டாள்..
ஜானகி பாரதியை பார்க்கும் வரும் நேரங்களில் அங்கிருந்தே அவர்கள் வீட்டிற்கு போன் பண்ணி அவர்கள் குரலை கேட்க வைப்பார்... பாரதியும் மகிழ்ந்து போவாள் தன் குடும்பத்தையே நேர்ல பார்த்த மாதிரி.....
இப்பொழுது தானும் கருவுற்றிருப்பதை நினைத்தவளுக்கு தானும் முறைப்படி திருமணம் ஆகி இந்த கருவை சுமந்து இருந்தால் தங்கள் வீட்டில் எப்படி கொண்டாடுவார்கள் என்று நினைத்து பார்த்தாள்...
அதுவும் தர்மலிங்கத்திற்கு பாரதி என்றால் உயிர்... தன் சின்ன பாப்பா தன் குட்டி பேத்தியையோ பேரனையோ சுமப்பது தெரிந்தால்.... அவரும் துள்ளி குதித்திருப்பார்... ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சிருப்பார்....
ஏனோ ... அவள் மனம் தன்னையும் அந்த குடும்ப புகைப்படத்தில் இணைத்து பார்த்தது...
தன் அம்மா , அப்பா, ஆயா நடுவில் நாற்காலியில் அமர, பாரத்தும் இந்திராவும் அவர்களுக்கு முன்னால் மண்டியிட்டு அமர, மஹாவும் ஈஸ்வரும் அவர்களின் ஒரு பக்கம் நின்றிருக்க... இன்னோரு பக்கம் பாரதியும் அவள் கணவன்...
மெல்ல உற்று பார்த்தாள் அவனை....அவள் கணவனை... அவன்... தன் கனவில் வந்தவன் தன் அறையில் புகைப்படத்தில் குறும்பு மின்ன சிரித்து கொண்டிருக்கும் அதே ஆதியே!!
இப்பொழுதும் அவன் கண்ணில் குறும்பும் உதட்டில் தவழும் புன்னகையுமாக அவளின் அருகில் நெருங்கி கம்பீரமாக நின்றிருந்தான்... அந்த கோலத்தை கண்டதும் உடல் சிலிர்த்தது அவளுக்கு... இப்படி ஒரு கம்பீரமான மாப்பிள்ளையை தன் அப்பா தன்னுடன் சேர்த்து பார்த்தால் எப்படி மகிழ்ந்து போவார் என்று சிலிர்த்தாள்....
தன் எண்ணம் போகும் போக்கை கண்டு திடீரென்று அதிர்ந்து எழுந்தாள் பாரதி...
“என்னாச்சு எனக்கு??? நான் ஏன் இப்படி எல்லாம் தப்பு தப்பா யோசிக்கிறேன்???
ம்ஹூம்.... இது சரியில்லை... நான் இங்க வந்தது இந்த குழந்தையை சுமந்து தர மட்டுமே...நான் வெறும் வாடகைத்தாய் மட்டுமே.... இந்த குழந்தை பிறந்ததும் இதுக்கும் எனக்கும் ஏன் இந்த வீட்டுக்கும் கூட எந்த சம்பந்தமும் இல்லை....
நான் பாட்டுக்கு என் வழியை பார்த்துகிட்டு போய்டனும்.. அதுக்குள்ள வேண்டாத கற்பனைகளை வளர்க்க கூடாது “ என்று தன் மனதை அடக்கியவள் தன் மனக்கதவை அறைந்து மூடினாள்...
பின் மெல்ல நடந்து தோட்டத்திற்கு சென்றாள்... அங்கு கொஞ்ச நேரம் உழாவியவளின் கைகள மீண்டும் தன் அடி வயிற்றை தடவியது.... அவள் எவ்வளவு தடுத்தும் மீண்டும் அவள் மனம் அந்த வயிற்றை தடவிப் பார்த்து
“ஹே... குட்டி... நீ குட்டி ஆதியா??? இல்லை குட்டி ஜானகியா?? “என்று குறும்பாக சிரித்துக்கொண்டாள்...
“ஹ்ம்ம்ம் இன்னும் 8 மாதம்ம்ம்ம்ம்........நீ உன் பாட்டியையும் உன் அப்பாவையும் பார்க்க... அதுவரைக்கும் நீ என் கூடத்தான் இருப்பியாம்.. நான் உன்னை நல்லா பார்த்துகிட்டு அவங்க கிட்ட பெத்து கொடுத்துடுவேனாம்... “ என்று தனக்குள்ளே பேசி சிரித்துக் கொண்டாள்
காரில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த ஆதித்யாவோ பயங்கர சந்தோஷத்தில் இருந்தான் ...
“நான் அப்பாவா??? “என்று மீண்டும் மீண்டும் சொல்லி பார்த்து கொண்டான்....அப்பொழுது சமீபத்தில் வெளியாகி வைரலான சிவகார்த்திகேயனும் அவன் மகள் ஆராதனாவும் கனா படத்திற்காக பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் நினைவு வந்தது...
வேகமாக தன் அலைபேசியை எடுத்து அந்த பாடலை யூ ட்யூபில் தேடி ஓட விட்டான்... அந்த வரிகளை ஒவ்வொன்றாக சொல்லி பார்த்து ரசித்தான்...
வாயாடி பெத்த புள்ள
வரப் போர நெல்ல போல
யார் இவ?? … யார் இவ??... ,
கையில சுத்துர காத்தாடி
காத்துல ஆடுது கூத்தாடி
கண்ணுல கலரா கண்ணாடி
வம்புக்கு வந்து நிப்பா டி
யார் இவ?? , யார் இவ??,
யார் இந்த தேவத??
ஆனந்த பூ மக
வால் மட்டும் இல்லையே
சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி,
யார் இந்த தேவத??
ஊர் கொஞ்சும் என் மக
நீ எந்தன் சாமி தான்
என்ன பெத்த சின்ன தாயே!!!
---
---
அந்த பாடலை பாடும் அந்த குட்டி தேவதை தன் உதட்டை மடித்து அழகாக பாடும் முதல் சில வரிகள் அப்படியே அவன் மனதை அள்ளியது... கண்மூடி அவன் குழந்தையும் அதைப்போல கற்பனை பண்ணிப்பார்த்தான்...
அச்சு அசல் அவன் சாயலில் அந்த குட்டி தேவதையும் தன் சிவந்த உதடுகளை உருட்டி அழகாக பாடியதைப் போல இருந்தது அவனுக்கு... உடல் எல்லாம் இனம் புரியாத சுகம் பரவியது அவன் உள்ளே....
அதே இனம் புரியாத பரவசமான மன நிலையுடன் கண்ணில் என்றும் இல்லாத ஒரு புதுவித ஒளியுடனும் உதட்டில் மின்னும் புன்னகையும் நடையில் ஒரு துள்ளலுடன் அலுவலகத்தை அடைந்தவனை அனைவரும் ஆச்சர்யமாக பார்த்தனர்...
ஆதி வெளிநாட்டில் இருந்து படிப்பு முடித்து வந்ததும் உடனே அலுவலகத்தில் பெரிதாக ஈடுபட வில்லை.. அவன் தந்தை ராமே எல்லாம் பார்த்துக்கொண்டு அவனுக்கு சொல்லி கொடுத்து கொண்டிருந்தார்...
அதற்குள் ஷ்வேதாவின் காதல் வலையில் சிக்கவும் அவனுக்கு அலுவலகத்தை விட அவளுடன் சுத்துவதற்கே நேரம் சரியாக இந்துந்தது... அதன் பின் தன் தந்தை படுக்கையில் விழுந்த பிறகுதான் அந்த அலுவலகத்தின் பொருப்பை ஏற்றான்...
அவன் பொருப்பேற்ற நேரம் பலத்த அடி வாங்கி உள்ளுக்குள் இறுகிப்போனவன் எப்பவும் சிடு சிடு வென்றே இருப்பான்... எல்லாரிடமும் கடுமையாக நடந்துகொள்வான்.. மருந்துக்கு கூட யாரிடமும் சிரித்து பேசியதில்ல கடந்த மூன்று வருடமாக....
அப்படிபட்டவன் இன்று கண்ணில் சிரிப்பும் உதட்டில் சிந்தும் புன்னகையுமாக அலுவலகம் வரவும் அனைவரும் ஆச்சர்யத்துடன் அவனை நோக்கினர்....
சிலர் “இப்பொழுதுதான் நம்ம பாஸ் நல்லா இருக்கார்... அப்படியே ராம்குமார் சாரை பார்ப்பதைப் போலவே இருக்கு... அவர் எப்பவுமே சிரித்தவன்னமே வளைய வருவார்...பரவாலை ஆதி சாரும் ஓரளவுக்கு சிரிக்க ஆரம்பிச்சுட்டார்... “ என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்..
அதை கண்டு கொள்ளாமல் தன் அறைக்கு சென்றவன் அங்கு மாட்டியிருந்த தன் தந்தையின் புகைப்படத்தை வணங்கி விட்டு அவரை பார்த்து புன்னகைத்தவாறு இருக்கையில் அமர்ந்தான்...
அவன் மனம் நிலைகொள்ளாமல் மகிழ்ச்சியில் துளிர்த்தது..தன் உதவியாளர் மோகனை அழைத்து அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் ஸ்வீட் பாக்ஷ் ஒன்றை தருமாறு கூறினான்....
அப்பொழுதுதான் தங்கள் கம்பெனிக்கு அந்த பெரிய ப்ராஜெக்ட் கிடைத்த செய்தி மெல்ல பரவியது அங்கு... அனைவரும் அதனால் தான் தங்கள் பாஸ் இவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் என்ற காரணத்தை தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் தங்கள் வேலையை கவனித்தனர்....
ஆதித்யாவும் வேலையில் ஈடுபட்டாலும் அப்பப்போ “டாடி” என்று யாரோ தன்னை அழைப்பதை போலவே உணர்ந்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.......
“இன்னும் எட்டு மாதம் காத்திருக்க வேண்டும் என் தேவதை... என் பிரின்ஸஸை பார்க்க.. “ என்று மெல்ல முனகிக் கொண்டான்
இப்படி நான்கு பேரும் (ஜானகி, சுசிலா, ஆதி, பாரதி ) ஒவ்வொரு மனநிலையில் அந்த வீட்டு ராஜ குமாரனை/ராஜ குமாரியை வரவேற்க ஆவலாக இருந்தனர்....
ஆதியின் பாரதியின்
ReplyDeleteகற்பனை ஆஹா
Oru vela twins ha irukumo illa irukum yean test tube baby na twins triplets kuda chance irukum la writerea papaom enna nadakuthunu
ReplyDelete