காதோடுதான் நான் பாடுவேன்-18



அத்தியாயம்-18

வீட்டிற்கு வந்ததும் தான் வாங்கிய தங்க மெடலை அந்த வேலனுக்கு அணுவித்து விட்டு, அவன் மேடையில் தனக்கு உதவாததற்கு அவனை ஒரு முறை முறைத்து விட்டு நேராக தங்கள் அறைக்குள் சென்றாள் மது...

உள்ளே சென்றவள் மனம் எல்லாம் நிரம்பி வழிந்தது.. டேபிலின் மேல் இருந்த அவனின் புகைபடத்தை அப்பொழுதுதான் முதல் முதலாக ஆவலாக எடுத்து பார்த்தாள்...

அவனின் கட்டுமஸ்தான உடலும், இறுகிய முகமும் அதே மிரட்டும் கண்களும் ஊடுருவும் பார்வையும் முன்பு பார்த்து பயந்து நடுங்கியவளுக்கு இன்று ஏனோ அவனின் தோற்றம் அவளை வசீகரிப்பதாக இருந்தது...

“சிடுமூஞ்சி.. போட்டோல கூட அந்த விருமாண்டி மாறி முறைச்சுகிட்டே இருக்கான் பார்... கொஞ்சம் சிரிச்சா எவ்வளவு அழகா இருக்கும்..” என்று அவனை செல்லமாக திட்டி கொண்டே மெல்ல தன் கையை எடுத்து அவன் கன்னத்தை தடவி பார்த்தாள் அந்த போட்டோவில்...

அவனின் நிழல் படத்தை தொடுகையிலயே அப்படி ஒரு சிலிர்ப்பு அவள் உள்ளே... மெல்ல வெக்கம் வந்து சூழ்ந்து கொள்ள மீண்டும் அவன் கன்னத்தை ஆசையாக வருடினாள்...

காரை ஓட்டிகொண்டிருந்த நிகிலனுக்கு யாரோ தன் கன்னத்தை வருடுவதை போல இருக்க, அவன் உள்ளூம் அதே சிலிர்ப்பு... ஏன் என்று தெரியாமலயே அவன் இதழ்களில் புன்னகை அரும்பியது..

அவன் புகைபடத்ஹையே மீண்டும் உற்றுப் பார்க்க, அவன் முழியை பார்த்தவள் சமீபத்தில் அவள் கேட்ட பாடல் ஒன்று நினைவில் வந்து அதையே பாட ஆரம்பித்தாள்..

ஏ சண்டக்காரா.. என்று ஆரம்பித்தவள்

இல்ல இல்ல ஏ போலிஸ்க்காரா.. என்று மாத்தி பாடி, ஆங்க் இதுதான் கரெக்ட் ஆ இருக்கும் என்று சிரித்துகொண்டே



ஏ போலிஸ்க்காரா.. உன் குண்டு முழியில
ரெண்டு உயிரத் தேடிப்பாயுது
குத்துச்சண்டை இத்தோட நிப்பாட்டுப் போதும்
முத்தச்சண்டை என்னோட நீ போட வேணும்
தனிமை துரத்த அலையுறேன் நானும்
மனசத் திறந்து என்னைக் காப்பாத்து



தேடி கட்டிக்கப்போறேன் தாவி ஒட்டிக்கப்போறேன்
தாலி கட்டிக்கப்போறேன் ஆமா………..
மோதி முச்சுக்கப்போறேன் பாதி பிச்சுக்கப்போறேன்



பாவி வச்சுக்கப்போறேன் ஆமா…………
எதுரான என் அழகாளனே
உனை வந்து உரசாம ஒதுங்கி நடந்தேன்
எது மோதி நான் இடமாறுனேன்
தடுமாறி முழிச்சா நான் உனக்குள்ள கிடந்தேன்
கண்கட்டி வித்தை காட்டி
என எப்ப கட்டிப்போட்ட
நான் என்ன எழுதி நீட்ட
அதில் வெட்கம் மட்டும் கிழிச்சு போட்ட



தேடி கட்டிக்கப்போறேன்... தாவி ஒட்டிக்கப்போறேன்…

என்று அந்த வரிகளை பாடும்பொழுதே அவளுக்கு வெக்கமாக இருக்க, அந்த புகைபடத்தை அப்படியே வைத்துவிட்டு தன் சோபாவிற்கு ஓடிவந்து அமர்ந்து கொண்டு தன் கைகளால் தன் முகத்தை மூடிக் கொண்டாள்...

சிறிது நேரம் அப்படியே வெக்கபட்டு சிரித்து கொண்டே அமர்ந்து இருந்தவள் பின் தன் தலையை தட்டி கொண்டு

“எனக்கு ரொம்பத்தான் பைத்தியம் ஆயிருச்சு போல... ம்ஹூம்... இது சரியில்லை.. அடக்கி வாசி மது.. “ என்று தன்னையே கடிந்து கொண்டவள் தன்னை சமாளித்துக் கொண்டு தன் புத்தகத்தை எடுத்து பிரிக்க, அது அவன் அவளுக்காக படிக்க கொடுத்த புத்தகம்...

அன்று இதை கொடுத்த பொழுது அவன் நிலை அறியாமல் அவனையும் தன்னுடன் சேர்ந்து IAS எக்ஷாம் எழுத சொன்னது நினைவு வர,

“ஐயோ!!! மானம் போச்சு... நான் கேட்டப்ப எவ்வளவு நக்கலா என்ன பார்த்து சிரிச்சு இருப்பான்.?? . “என்று யோசித்தவள் அப்பொழுதுதே அவன் தன் சிரிப்பை அடக்கி கொண்டு இருந்தது இப்பொழுது புரிந்தது...

“திருடா... அன்னைக்கே சொல்லி தொலைய வேண்டியதுதான நான் ஒரு IPS ஆபிசர் னு...

என்னை வச்சு நல்லா காமெடிபண்ணியிருக்கான்.. நல்ல வேளை.. நானும் அதுக்கு மேல எதுவும் சொல்லலை.. இல்லைனா இன்னும் மீதி இருக்கிற மானமும் போயிருக்கும்.... “ என்று தனக்குள்ளே சிரித்து கொண்டாள்...

பின் அதே மனம் கொள்ளா மகிழ்ச்சியில் புத்தகத்தை புரட்ட ஒரு வார்த்தை கூட அவள் மனதில் பதியவில்லை... நினைவெல்லாம் அவனே வந்து இம்சிக்க, அதற்குமேல் சமாளிக்க முடியாமல் புத்தகத்தை மூடி வைத்து விட்டு சோபாவில் படுத்து கொண்டு போர்வையை இழுத்து மூடி கொண்டு உறங்க முயன்றாள்...

ஆனால் உறக்கமும் அவளை தழுவ மறுத்து கண்ணாமூச்சி காட்ட, நீண்ட நேரம் ஏதேதோ நினைத்து கடைசியில் உறங்கி போனாள்...

அன்று தன் வேலை முடித்து வெகு நேரம் கழித்தே வீடு திரும்பியிருந்தான் நிகிலன்... உள்ளே வந்தவன் கண்கள் தானாக சோபாவிடம் செல்ல,அங்கு மது இழுத்து போர்த்திக் கொண்டு உறங்கியிருந்தாள்...

அவள் அந்த மேடையில் இவனிடமிருந்து பரிசை வாங்கம் வேண்டும் என்று அடம் பிடித்து நின்றது நினைவு வர ,இலேசாக புன்னகைத்தவாறு குளியலறைக்குள் சென்று குளித்துவிட்டு தலையை துவட்டியவாறே வெளியில் வந்தான்....

இப்பொழுது உறக்கத்தில் இருந்தவள் மீதிருந்த போர்வை இலேசாக விலகியிருக்க, அவள் ஒரு கை வெளியில் தொங்கி கொண்டிருந்தது...

அதில் அவள் நாட்டியத்திற்காக வைத்திருந்த மருதாணியில் அவள் கை அழகாக ஜொலித்தது ..

உள்ளங்கையில் வைத்திருந்த வட்டமான அந்த மருதாணியும், அவள் பிஞ்சு விரலை சுற்றி வைத்திருந்த டிசைனும் அவனை கட்டி இழுத்தது.. அவள் அந்த நாட்டியம் ஆடும் பொழுது கையை விரித்து ஆடிய அசைவுகள் நினைவில் வர, அவள் கையை தொட்டு பார்க்க, அவளின் அந்த மென்மையான கையை எடுத்து தன் கனனத்தில் வைத்து கொள்ள துடித்தது அவன் மனம்.....

அதற்குள் தன் கையை உள்ளே இழுத்து போர்வையை இழுத்துக் கொள்ள, இப்பொழுது அவள் கால் பாதம் நன்றாக வெளியில் தெரிந்தது...

கைகளை போலவே காலுக்கும் அவள் பாதத்தை சுற்றி மருதாணி பூசியிருக்க, அவள் கணுக்காலில் அணிந்திருந்த மெல்லிய கொலுசும் அதை தொடர்ந்து அவளின் சிவந்த மென்மையான பாதமும் அதையும் தாண்டி அவள் கால் விரலில் அணிந்திருந்த மெட்டியும்.. என்று ஒவ்வொன்றும் அவனை கட்டி இழுத்தது....

அதுவும் அவன் அணிவித்த அந்த மெட்டியை பார்க்க, என் உரிமையாளன் நீதான் என்று அவனை அருகில் அழைப்பதை போல இருந்தது...

“ம்ஹூம்... இது சரியில்ல... “ என்று தன் தலையை உலுக்கி கொண்டு தன் பார்வையை பிடித்து இழுத்து கொண்டு நகர முயல, இப்பொழுது தூக்கத்தில் அவள் மேலும் புரள, அவள் முகத்தை மூடியிருந்த போர்வை விலகி அவள் முகம் வெளியில் தெரிந்தது....

எதேசையாக திரும்பியவன் அவள் முகத்தைக் காண, பால் நிலா போன்ற பளிச்சென்றிருந்த அவள் முகமும், தன் வலது கை கட்டை விரலை எடுத்து வாயில் வைத்து கொண்டு சிறுபிள்ளையாக உறங்கும் அவள் அழகையும் கண்டதும் அவன் மனம் எகிறி குதிக்க ஆரம்பித்தது....

வாயில் வைத்திருந்த அந்த விரலின் மேல் அவன் பார்வை பட, ஏனோ தன் இடத்தை அந்த விரல் பிடித்துக் கொண்டதை போல அதன் மேல் பொறாமை வந்தது அவனுக்கு.... .

அவன் ஆறடிக்கும் மேலான உயரத்திற்கு மெல்ல குனிந்தவன் அவள் வலது கை விரலை மெல்ல அவள் வாயிலிருந்து இழுத்து விட்டான் தன் பொறாமையை தீர்த்து கொண்ட சிறு சந்தோசத்தில்....

ஆனால் அடுத்த நொடி

“ப்ளீஸ் மா... “ என்று சிணுங்கியவாறு அவள் மீண்டும் தன் கையை வாயின் அருகில் கொண்டு வர, அந்த செல்ல சிணுங்கலில் இன்னும் உருகி போனான்....

அவள் கை மீண்டும் அவள் வாயை எட்டும் முன்னே அதை மீண்டும் விலக்கியவன் இப்பொழுது அவளின் செவ்விதழ்களை வருடினான் அவனையும் அறியாமல்...

அவனின் வலிய முரட்டு கரத்திற்கு அவளின் இதழ்களின் மென்மையை தீண்ட அவனுக்குள் ஏதோ புரள்வதைபோல இருந்தது...

முதன்முதலாக ஒரு பெண்ணின் அருகாமையும் அவளின் பட்டு இதழ்களை தீண்டும் அனுபவமும் மெய் சிலிர்க்க ,அப்படியே கிறங்கி நின்றான் அந்த சுகத்தில்...

செவ்விதழ் தீண்டிய அவன் விரல்கள் மெல்ல முன்னேறி அவளின் ஆப்பிள் போன்ற குண்டு கன்னத்தை வருட எத்தனிக்க, சரியாக அந்த நேரம் அவன் அலைபேசி ஒலித்தது...

அந்த சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தவன் ஏதோ ஒரு மயக்கத்தில் இருந்து விழித்தவன் போல முழித்து கொண்டு நின்றான் சில விநாடிகள்...

அப்பொழுதுதான் தான் அவள் அருகில் குனிந்து நின்றிருந்த கோலமும் அவளின் இதழ்களை வருடி கொண்டிருக்கும் அவனின் விரல்களும் அறிவில் பட, அடுத்த நொடி தீச்சுட்டதை போல வெடுக்கென்று தன் கையை இழுத்துக் கொண்டான்...

வேகமாக விலகி வந்து தன் அலைபேசியை எடுத்து ஆன் பண்ணி காதில் வைத்தவாறு வேகமாக வெளியேறி பால்கனிக்கு சென்றான்..

மறுமுனையில் கௌதம் ன் குரல் கேட்க

“தேங்க் காட்... நீ என்னை காப்பத்திட்ட டா மச்சான்... “ என்று வாய்விட்டு சொல்ல மறுமுனையில் இருந்த கௌதம் ஒன்றும் புரியாமல் முழித்தான்...

“டேய் மச்சான்.. என்னடா உளர்ற??... நான் எப்ப உன்னை காப்பாத்தினேன்..? “என்று கௌதம் குழப்பமாக கேட்க அப்பொழுதுதான் அவன் வாய்விட்டு உளறியது உரைத்தது நிகிலனுக்கு...

“ஹீ ஹீ ஹீ.. அது வந்து மச்சான் ஒரு பேட் ட்ரீம் டா... அதான் நீ போன் பண்ணவும் அந்த ட்ரீம் ல இருந்து என்னை காப்பாத்திட்டனு சொன்னேன்.. “என்று சமாளித்தான் நிகிலன்...

“டேய்.. இரு.. இரு.. நீயாவது இத்தன மணிக்கு தூங்கறதாவது?? அப்படியே தூங்கினாலும் நீ அலையற அலைச்சலுக்கு படுத்த உடனே மட்டை ஆயிடுவா.. உனக்கெல்லாம் கனவு வர்றதே பெருசு.. அப்படியே வந்தாலும் அது எப்படி பேட் கனவா இருக்கும்??.. எங்கயோ இடிக்குதே?? கணக்கு சரியா வரமாட்டேங்குதே...What is the matter?? “ என்றான் சந்தேகமாக...

“”பாவி.. இதெல்லாம் நல்லா விளக்கமா யோசி.. வேற ஏதாவது கேஸ் விசயத்துல மட்டும் உருப்படியா ஒன்னும் தோணாது?? “என்று மனதுக்குள் தன் நண்பனை திட்டியவன்

“டேய்.. நீ உன் ஆராய்ச்சிய அப்புறம் வச்சுக்க.. இப்ப எதுக்கு நீ போன் பண்ணுன?? அத சொல்...அப்புறம் கொஞ்சம் நேரம் கழிச்சு கேட்டா நீ மறந்து போய்டுவ.. அப்புறம் நான் தான் மண்டைய குடஞ்சுகிட்டு இருக்கணும்.. “என்று பேச்சை மாற்றினான்...

“ஆமான் டா மச்ச்சான்... .நீ சொல்றதும் கரெக்ட் தான்.. ஆ மா.. நான் எதுக்கு போன் பண்ணினேன்?? ..” என்று தன் தலையை தட்டி யோசிக்க, மறுமுனையில் நிகிலன் ரிவால்வரை தூக்குவதை போல இருக்க, நல்ல வேளையாக ஞாபகம் வந்தது கௌதம் க்கு...

“ஆங் வந்திருச்சு மச்சான்.. கமிசனர் காலையில உன்ன பார்க்கணுமாம்..அவர் போன் பண்ணினப்போ உன் போன் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்துச்சாம்.. நான் அந்த நேரம் போனனா உன்கிட்ட சொல்லிட சொன்னார்...

சோ மறக்காம போய்டு மச்ச்சான்… “ என்றான்..

“ஹ்ம்ம்ம் சரி டா... ஆமா எதுக்குடா வரச்சொன்னார்?? “ என்றான் யோசனையாக

“எனக்கெப்படி தெரியும்?? என்ன , யாரையாவது என்கவுண்டர்ல போடவா இருக்கும்... உனக்குத்தான் என்கவுண்டர் னா அல்வா சாப்பிடற மாதிரி ஆச்சே... நீயே போய் அந்த நல்ல செய்திய காதால கேட்டுக்கோ...

அப்புறம் மச்சான் நீ முதல்ல சொன்ன மேட்டர்.. என்னடா அந்த சீக்ரெட் ?? “என்று குறும்பாக சிரிக்க,

“ஹ்ம்ம்ம் நீதான் போலிஸ்காரன் ஆச்சே.. நீயே அத கண்டு பிடிச்சுக்க.. அப்படியாவது உன் துரு பிடிச்ச மூளைய கொஞ்சம் வேலை செய்ய வை.. வைடா போன.. குட் நைட்.. “ என்று சிரித்தவாறு போனை அனைத்தான் நிகிலன்...

பின் மார்பின் குறுக்காக கைகளை கட்டி கொண்டு மேல அண்ணாந்து பார்க்க தலைக்கு மேல பௌவுர்ணமி நிலவு ஜொலித்து கொண்டிருந்தது ..

அதை உற்று பார்க்க அதில் மதுவின் அந்த சிரித்த முகமே தெரிய ஒரு விநாடி திகைத்து நின்றான்...

அடுத்த நொடி அந்த ரமணியின் சிரித்த முகமும் அந்த நிலவில் தெரிய, அடுத்த நொடி அவன் உடல் இறுகியது...

“சே!! இத எப்படி இவ்வளவு நேரம் மறந்தேன்?? “ என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டான்...

அதோடு மதுவுக்கும் மகிழனுக்குக்கும் நடந்த நிச்சயம் மற்றும் தனக்கு நிச்சயித்தவன் விட்டு சென்றதும் அடுத்த நொடியே அவன் அண்ணனான அவனுக்கு அவள் கழுத்தை நீட்டியதும் நினைவு வர, அவன் முகம் பாறை போல இறுகியது...

கை நரம்பு புடைக்க

“சே!! எல்லாம் நாடகம்.. என்னமா நல்லவ மாதிரி நடிக்கிறா.. சரியான வேசக்காரி.. எப்படி என்கிட்டயே இப்படி நடிக்கிறா பார்?? அவளுக்கு காட்டறேன் இந்த நிகிலன் யாரென்று... “ என்று மனதுக்குள் உறுமியவன் அதே இறுக்கத்துடன் சிறிது நேரம் பால்கனியில் கால் வலிக்க நடந்து பின் தன் அறைக்கு திரும்பி வந்து தன் படுக்கையில் விழுந்தான் எதிரில் உறங்குபவளை முறைத்தவாறே....

“ஆஹா... திரும்பவும் இந்த வேதாளம் மரம் ஏறிட்டானே... இவன புடிச்சு மீண்டும் இறக்குவதற்குள் எனக்கு கண்ணை கட்டும் போல... இவன் சாதாரணமானவன் அல்ல ... நம்ம மதுகுட்டி சொல்றதை போல சரியான விருமாண்டி தான் போல...

ஒரு முழம் ஏறினா இரண்டு முழம் சறுக்கறான்...

இவனுக்கு அப்ப இந்த ஆட்டம் எல்லாம் பத்தாது... இனி வேற மாதிரி ஆட்டத்தை ஆட வேண்டியது தான்... விருமாண்டி... என் ஆட்டத்தை பொறுத்திருந்து பார்... “ என்று வில்லங்கமாக சிரித்தான் நம்ம வேல்ஸ்.... 






*****இடைவேளை***** 



இத்துடன் நம்ம வேல்ஸ் ன் ஆட்டத்தின் முதல் பாதி முடிந்தது... முதல் பாதியில் ஆட்டத்தின் நாயகி ஒரு வழியாக தன்னை, தன் காதலை, தன் கணவனை உணர்ந்து கொண்டாள்.. 

ஆனால் நாயகனோ இன்னும் முறுக்கி கொண்டிருக்க, இவர்களை வைத்து நம்ம வேல்ஸ் எப்படி காயை நகர்த்த போகிறான் என்று இரண்டாம் பகுதியில் பார்க்கலாம்..தொடர்ந்து படியுங்கள்...

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!