என் மடியில் பூத்த மலரே-19



அத்தியாயம்-19

திகாலை கடற்காற்று சில்லென்று வீசிக்கொண்டிருக்க, அந்த இளங்காலை கதிரவனின் ஒளி அந்த ஜன்னலின் வழியே பாய்ந்து வந்து அவனின் கன்னத்தை முத்தமிட்டது...அந்த முத்தம் அவனின் குட்டி தேவதையின் முத்தத்தை போல இனிக்க அதை ரசித்தவாறு போர்வையை இன்னும் இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கினான் ஆதி...

“ம்ஹ்ஹும்.. இவன் எழுந்திருக்க மாட்டான் போல.. இவனை எப்படி எழுப்பவது” என்று யோசித்த அந்த ஆதவன் அவனின் கன்னத்தில் பளீரென்று பாய்ந்தான்.. அதையும் அந்த குட்டி பிரின்ஸஸ் அவன் கன்னத்தை தன் பல் இல்லாத பொக்கை வாயில் கடித்ததை போல இருக்க செல்லமாக “ஆ” வென்று அலறியவாறு எழுந்தான் அந்த குட்டி தேவதையை பிடித்து கட்டிக்கொள்ள.....

வேகமாக எழுந்தவன் சுற்றிலும் கண்களால் தேடினான் அவன் தேவதையை காண...அவளைக் காணவில்லை... அதோடு அந்த இடம் வேற புதியதாக இருக்க நான் எங்க இருக்கிறேன் என்று தன் தலையை தட்டி மீண்டும் யோசித்தான்..

அப்பொழுதுதான் நினைவு வந்தது அவன் கெஸ்ட் ஹவுசில் இருப்பது... அதை தொடர்ந்து நேற்று இரவு நடந்த சம்பவங்கள் நினைவு வந்தன...அவசரமாக மணியை பார்த்தான்.. அது 7.30 என்று காட்டியது...

“ஐயோ!! எப்படி இவ்வளவு நேரம் தூங்கினேன்??.. “ தினமும் 5 மணிக்கே முழிப்பு வந்திடும்.. அதற்கு மேல கண்ணை மூடினாலும் அவனுக்கு தூக்கம் வராது.. அப்பயே எழுந்து காலை உடற் பயிற்சிகளை முடித்து அப்புறம் ஒரு மணி நேரம் ஜாக்கிங் செல்வான்...

இங்க மட்டும் எப்படி நல்லா அதுவும் நிம்மதியா தூங்கியது நினைவு வந்தது... எப்படி??? என்று யோசித்தவன் அப்பொழுது தான் நினைவு வந்தது அவள்... அந்த பாரதி... அவள் நேற்று கடைசியாக கொடுத்த மசாலா பால் ...

“சரியான கேடியா இருப்பா போல.. எதையோ கலந்து கொடுத்திருக்கா... இல்லைனா நான் எப்படி இப்படி தூங்கியிருக்க முடியும்.?? .. “ என்று அவளை திட்டியவாறு எழுந்து குளியலறைக்குள் சென்று முகத்தை கழுவிக்கொண்டு அவன் பிரஷில் பேஸ்ட்டை போட்டுக்கொண்டு அந்த ஜன்னலின் அருகே வந்தான்.... அதன் வழியாக பார்த்தான்.. அப்பொழுதுதான் அந்த கதிரவன் கடலில் இருந்து எழுந்து கம்பீரமாக வந்து கொண்டிருந்தான்...

ஆதிக்கும் சின்ன வயதில் இருந்தே அந்த சூரியன் மேல கொள்ளை ஆசை... இந்த கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்து விட்டால் இந்த சூரிய உதயத்தை பார்ப்பதற்கென்றே காலையில் சீக்கிரம் எழுந்து விடுவான்.. அந்த கதிரவன் காலையில் சிரித்துக்கொண்டே கம்பீரமாக வருவதை பார்க்கும் பொழுதெல்லாம் தன் தந்தை சொல்லுவது நினைவு வரும்..

“ஆதி.. நீயும் இதே மாதிரி எப்பவும் சிரிச்சுக்கிட்டே கம்பீரமா இருக்கனும்.. எத்தனை பிரச்சனை வந்தாலும் அந்த ஆதி எப்படி தன் கடமையை தவறாமல் செய்ய தினமும் சிரித்துக்கொண்டே காலையில் எழுந்து கம்பீரமாக வர்ரானோ அதே மாதிரி இந்த ஆதியும் எந்த பிரச்சனையும் தலைக்குள் போட்டுக்காமல் தைரியமாக எதிர் கொள்ளனும்” என்று அடிக்கடி சொல்வார்..

அதை கேட்டு கேட்டு அவன் நடக்கும் பொழுது அந்த ஆதவன் மாதிரியே கற்பனை பண்ணிக் கொள்வான்...

இன்றும் அந்த ஜன்னலில் நின்று அந்த ஆதியை ரசித்துக் கொண்டிருந்தான்... அவனுக்கு தன்னையே பார்ப்பதை போல இருந்தது... அதோடு அந்த ஆதவனின் வெளிச்சம் தந்த முத்தம் அவனுக்கு அந்த குட்டி தேவதையை நினைவு படுத்த அப்படியே மயங்கி ரசித்துக் கொண்டிருந்தான் சில நிமிடங்கள்..

பின் நேரம் ஆவதை உணர்ந்து கொஞ்ச நேரம் ஜாகிங் போய்ட்டு வரலாம் என்று தன் உடையை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தான்..

எதேச்சையாக பாரதி அறையை கடக்கையில் அவள் யாருடனோ சிரித்து பேசிக் கொண்டிருப்பது கேட்டது.. முதலில் அதை கண்டு கொள்ளாதவன் ஏதோ உந்த அவள் பேசுவதை கூர்ந்து கவனித்தான்...

“ஓகே டார்லிங்..ஐ மிஸ் யூ .. ஐ லவ் யூ சோ மச்...உம்மா “ என்று யாரிடமோ கொஞ்சி கொண்டிருந்ததை கேட்டதும்

நேற்று ஜானகி சொன்ன பாரதிய திட்டாத என்பதில் கொஞ்சம் இலகி இருந்தவன் அவளின் அந்த கொஞ்சல் பேச்சை கேட்டு மீண்டும் எரிமலையானான் முன்னை விட...

“சீ!! எல்லா பொண்ணுங்களும் ஒரே குட்டைல்யில் விழுந்த மட்டைங்க தான்.. எல்லாமே பணப்பேய்ங்க.. பணத்துக்காக எதையும் செய்ய தயங்க மாட்டாங்க போல... இந்த அம்மா வேற இவளைப் போய் ரொம்ப தங்கமான பொண்ணுனு ரொம்ப உருகிக்கிட்டிருக்கு...

இவளும் அதே மாதிரினு நிரூபிச்சுட்டாளே” என்று எரிமலையாக குமுறியவன் தோட்டத்தில் இறங்கி அன்று ஜாக்கிங் க்கு பதிலாக ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவனை போல வேகமாக ஓடினான் தன் கோபத்தை எல்லாம் காட்டி...

ஆதியின் கடுகடுப்பாலும் அவனின் குத்தல் பேச்சாலும் மனம் உடைந்து இருந்தவள் நேற்று வெகுநேரம் கழித்தே கண் அயர்ந்தாள் பாரதி...காலையில் சிறிது தாமதமாக கண் விழித்தவள் தன் எதிரில் சிரித்துக்கொண்டிருப்பவனை கண்டு புன்னகைத்தாள்...

தினமும் எழுந்த உடனே அவனின் அந்த புன்னகை மாறாத முகத்தில் விழித்தாழே அவளுக்கு புத்துணர்ச்சி வந்து விடும்...

இன்றும் அதே மாதிரி அவனை பார்த்து சிரித்தவள் அப்பொழுது தான் நேற்று இரவு நடந்த சம்பவங்கள் நினைவு வர, எதிரில் இருந்தவனை மீண்டும் உற்று பார்த்தாள்.. இப்பொழுது அவனின் புன்னகை மறைந்து அந்த சிடு மூஞ்சி ஆதி தெரிந்தான்

“ஐயோ!! என்ன இது ??? அந்த சிடுமூஞ்சி எப்படி இந்த போட்டோவிலும் வந்தான்.. ம்ஹும் அவன் முகமே நினைவு வரக்கூடாது... அப்புறம் இந்த குழந்தையும் அந்த சிடு மூஞ்சி மாதிரியே வந்திரும் ... “ என்று எண்ணியவள் அவசரமாக தன் அடி வயிற்றில் கை வைத்து

“ஹே குட்டி... நீ இந்த போட்டோவில் இருக்கிற உன் அப்பா மாதிரியே வருவியாம்...அவனின் நீண்ட கை, கால்களை கண்டு, இதே மாதிரி உன் கை , காலும் நீளமா இருக்குமாம்... நீ நல்ல உயரமா இருப்பியாம்..

உங்க அப்பா மாதிரி உனக்கு அடர்ந்த கறு கறுனு முடி இருக்குமாம்.. உங்க அப்பா மாதிரியே உனக்கு அழகா குண்டா சிரிக்கும் கண்ணும் அடர்த்தியான மூக்கும் குண்டு கன்னமா இருக்குமாம.. “ என்று அந்த புகைப்படத்தில் இருந்தவனை தன் மனதிற்குள் சொல்லி பார்த்தால் அது குழந்தைக்கு புரியும்...

குழந்தை அவனை மாதிரியே பிறக்கும் என்று எண்ணி ஒவ்வொன்றாக அவனை ரசித்தவளின் பார்வை அவனின் கறுத்து அடர்ந்த மீசையையும் அதற்கு கீழ இருந்த அவன் உதட்டில் படிந்தது....

அவன் முகம் என்னவோ அமுல் பேபி மாதிரி கொலுகொலுனு இருந்தாலும் அவனின் உதட்டில் தெரிந்தது அவனின் முரட்டு தனமும் பிடிவாத குணமும்...

உடனே அவளுக்கு அன்று அவன் கனவில் முத்தமிட்டது ஞாபகம் வரவும்

“இல்லையே... அன்று வலிக்காமல் மெதுவாகத்தானே முத்தமிட்டான்... இதுவே அவன் முரட்டுத்தனமாக முத்தமிட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்தவளுக்கு அவன் இறுக்கி அனைத்து முத்தமிடுவதை போல தோன்றவும் அவள் உடல் மெல்ல எடையற்று விண்ணில் பறக்க ஆரம்பித்தது.. உடல் முழுவதும் மெல்லிய சுகம் பரவியது...

தன் எண்ணம் போகும் போக்கை உணர்ந்தவள் அதிர்ந்து படுக்கையில் இருந்து எழுந்து அம்ர்ந்தாள்..

“சீ!! வயிற்றில புள்ளைய வச்சுகிட்டு என் புத்தி ஏன் இப்படி மட்டமா போகுது?? ...ம்ஹும் எதுவும் சரியில்லை...மூன்று வேளையும் நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு சுத்தியதால உடம்புல கொழுப்பு சேர்ந்திருச்சு... அதான் புத்தி எங்கயோ போகுது “என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டு திரும்பியவளின் கண்களில் அவன் இன்னும் அவளை பார்த்து குறும்பாக சிரித்தான்...

“ஐயோ!! இவன் ரொம்பவும் டேஞ்சர் ஆனவன் போல.. இனிமேல் இவனை பார்க்க கூடாது.. இந்த டேஞ்சர் ஆன ஆதிக்கு அந்த சிடுமூஞ்சி ஆதியே பெட்டர்....

இவன் என்னை எல்லாம் தப்பு தப்பா நினைக்க வைக்கிறான் “ என்று புலம்பி கொண்டே குளியலறைக்குள் சென்று ரிப்ரெஸ் ஆகி வரவும் அவளின் ஆதவன் ஜன்னல் வழியாக எட்டி பார்க்கவும் சரியாக இருந்தது..

உடனே துள்ளி குதித்து அங்கு சென்றாள்..

“ஹே!! ஆதி டார்லிங்.. நான் உன்னை பார்க்க கடலுக்கு வரலைனு நீயே என்னை தேடி வந்திட்டியா... சாரி டார்லிங்க்.. நேற்று கொஞ்சம் சொதப்பிடுச்சு.. “என்று தன் நேற்றைய கதையை அவனிடம் அளந்து பின் கடைசியாக தன்னுடைய கொஞ்சலான

“ஓகே டார்லிங்..ஐ மிஸ் யூ .. ஐ லவ் யூ சோ மச்...உம்மா “ என்று அவனுக்கு ஒரு ப்லையிங் கிஷ்ஷை கொடுத்தவள் அறியவில்லை ஆதியும் அவள் கொஞ்சியதை கேட்டு இன்னும் எரிமலையாக குமுறப் போகிறான் என்று...

தன் காதலனிடம் விடை பெற்றவள் பின் குளித்து முடித்து நெற்றியில் அந்த முருகனின் திருநீற்றை இட்டுக்கொண்டு கீழ வந்தாள்...

“ஐயோ.. இந்த சிடுமூஞ்சி இன்னும் இங்கதான் இருக்குதோ?? .. இப்ப என்ன கடிக்க போகுதோ” என்று பயந்தவாறு சுற்றிலும் பார்வை இட்டாள்.. அவன் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை.. ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தது.. காலையிலயே போய்ட்டானோ என்று வெளியில் எட்டி பார்த்தவள். அவன் கார் சரியாகி வந்து அங்கு இருக்கவும்

“இன்னும் போகலை போல... இப்ப என்ன செய்ய??” என்று சமையலறைக்குள் சென்றவள் இரண்டு கப் காபி தயாரித்தாள்.. அதே நேரம் அவன் ஜாகிங் முடிச்சு திரும்பி வந்து ஹாலில் அமர்ந்து அன்றைய செய்தித்தாளை பார்த்துக் கொண்டிருப்பது தெரியவும் ஒரு கப் காபியை ட்ரேயில் வைத்து எடுத்து கொண்டு அவன் அருகில் சென்றாள்...

அவள் மனமோ சற்று முன் போட்டோவில் கண்ட அவனின் இதழ்களை பார் என்று கெஞ்சியது.. ஆனால் அவளுக்கோ அவனை நிமிர்ந்து பார்க்க தைரியம் இல்லை இப்பொழுது..

“குட் மார்னிங்.... “ என்று மெல்ல முனகியவள் குனிந்த படியே காபியை நீட்டினாள் அவன் முன்னே..

அவனும் காபியை எடுத்துக்கொண்டே

“என்ன மகாராணிக்கு இப்பதான் எழுந்திருக்க முடிந்ததா?? சீக்கிரம் எழுந்து காபி கொடுக்கனும்னு தோணலை?? “ என்றான்

“சாரி.. கொஞ்சம் தூங்கிட்டேன்.. “என்று முனகினாள்..

“தூங்கினியா?? இல்ல உன் காதலனோட கொஞ்சிக்கிட்டிருந்தியா??? “என்று மனதினுள் திட்டியவன்

“சரி சரி ஏதாவது ப்ரேக் பாஷ்ட் பண்ணு “ என்றான்..

“என்னது மறுபடியுமா??” என்று அதிர்ந்தவள்

“எனக்கு எதுவும் சமைக்க தெரியாது.. “ என்று முனகினாள்

“ஏய்... சும்மா தப்பிச்சுக்கறதுக்காக சொல்லாத... நீ தான மாரியை அனுப்பி வச்ச.. அதனால் நீதான் ஏதாவது செய்யனும்.. போ.. போய் ஏதாவது தெரிஞ்சத செய்... என்ன புரிஞ்சுதா.. ?? “ என்று காய்ந்தான்

“ஹ்ம்ம்” என்று முனகியவள் நகர முயல

“ஆமா... யார் கூட காலைல பேசிக்கிட்டு இருந்த?? ” என்றான் கண்கள் இடுங்க..

“யார் கூடயும் பேசலையே “ என்றாள் புரியாதவளாக

“ஏய்.. பொய் சொல்லாத.. நீ கொஞ்சி கொண்டிருந்ததை தான் நான் கேட்டேனே... சும்மா நடிக்காத”

“கொஞ்சினனா?? என்று யோசித்தவள் தான் அந்த ஆதவனிடம் பேசியதைத்தான் இந்த சிடு மூஞ்சி கேட்டுச்சோ.. இதுக்கு எதுவும் நல்லதாகவே பார்க்க தெரியாதா?? “

என்று முனகியவள்

“என்ன உன் குட்டு உடைஞ்சிடுச்சா?? யார் அது உன் லவ்வரா ?? “என்றான் முறைத்தவாறு

“ஆமாம்.. என் லவ்வர் தான் “என்றாள் அவளும் கோபமாக

அவனுக்குள் ஏதோ ஒன்று உடைந்ததை போல இருந்தது... ஒரு வேளை அவள் மறுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தானோ.. அவள் மறுக்காமல் ஒத்துக்கொள்ளவும் அவனுக்கு இன்னும் கோபம் தலைக்கேறியது..

“ஏய்?? என்ன திமிரா?? ஆமா.. அவனுக்கு நீ என் குழந்தையை சுமப்பது தெரியுமா?? “என்று உருமினான்..

“ஹ்ம்ம்ம் எல்லாம் தெரியும்” என்று அவளும் திருப்பி முறைத்தாள்..

“தெரிஞ்சுமா உன்னை லவ் பண்றான்...இப்படி கல்யாணத்துக்கு முன்னாடியே அடுத்தவன் குழந்தையை சுமக்கறியே எப்படி நீயெல்லாம் காதலிக்கறேனு சொல்ற??.... வயிற்றில என் குழந்தையை சுமந்துகிட்டு அவனை கொஞ்சி கிட்டு இருக்கியே நீயெல்லாம் நல்ல பொண்ணா??

ஒரு வேளை அவன் தான் இந்த மாஸ்டர் பிளானுக்கு டேரக்ஷனா?? அவன் சொல்ற மாதிரி தான் நீ ஆடி கிட்டு இருக்கியா... உங்க ரெண்டு பேரையும் தொலைச்சுடுவேன்.

சீ.. உன்னை போய் நல்ல பொண்ணுனு எங்க அம்மா தலைல தூக்கி வச்சுகிட்டு ஆடறாங்களே.... அவங்களுக்கு மட்டும் உன் வண்டவாளம் தெரிந்தது அவங்களால தாங்க முடியாது...

அதனால் இந்த குழந்தையை பெத்து கொடுக்கிற வரைக்கும் இந்த கொஞ்சறது சுத்தறது எல்லாம் நிறுத்திட்டு இன்னும் 7 மாசம் ஒழுங்கா இரு.. “ என்று மூச்சு விடாமல் தன் கோபத்தை எல்லாம் கொட்டி தீர்த்தான்..

அதை கேட்டதும் பாரதியின் கண்களில் நீர் திரண்டு வந்தது... எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் அவள் வாயடைத்து நின்றாள் எதுவும் பேச முடியாமல்... இதற்கு மேல் அங்கு நின்றால் தன்னால் தாங்க முடியாது என்று தோண்றவும் வேகமாக கிச்சனுக்குள் சென்றாள்...

அவள் ஏதாவது எதிர்த்து பேசுவாள் என்று எதிர்பார்த்தவனுக்கோ அவள் எதுவும் பேசாமல் கண்கள் கலங்கி நின்றதை கண்டதும்

“ஒரு வேளை ரொம்ப அதிகமா திட்டிட்டோமா” என்று மனம் உறுத்தியது... ஆனால் அதே நேரம் அவள் காலையில் தன் அறையில் கொஞ்சியது நினைவு வரவும் “இவளையெல்லாம் இப்படி வைத்தால் தான் அடங்கி இருப்பா “ என்று எழுந்து மேலெ சென்றவன் படிகளில் ஏறும் பொழுது பாரதி இன்னும் கண்ணை கசக்கி கொண்டு இருப்பதை கண்டு மீண்டும் கீழ இறங்கி வந்து கிச்சனுக்கு சென்றான்..

“ஏய்... இந்த அழுது சீன் போடற வேலை எல்லாம். என்கிட்ட வேண்டாம்.. நான் இப்ப ஆபிஸ் கிளம்பனும்... சாப்பிடறதுக்கு ஏதாவது செய்.. எனக்கு இப்பயே பசிக்குது “என்று மிரட்டி விட்டு திரும்பி பார்க்காமல் மேல வேகமாக ஏறிச் சென்றான்...

அவனின் அதட்டலில் கொஞ்சம் தெளிந்தவள்

“நான் சீன் போடறேனா??... இவன் சொல்றதுக் கெல்லாம் நான் ஏன் பீல் பண்ணனும்?? ...நான் எந்த தப்பான எண்ணத்திலும் இந்த குழந்தையை சுமக்கலையே... நான் எந்த தப்பும் பண்ணாதப்ப நான் ஏன் இவன் சொன்னதுக்காக கவலைபடனும்... “ என்று தன்னை கட்டுபடுத்திக் கொண்டவள்

வேகமாக தன் முத்தில் நீரை அடித்து அழுந்த துடைத்தாள்.. கொஞ்சம் ரிப்ரெஸ் ஆக இருந்தது...

அதன் பின் அவன் சொன்ன காலை உணவு செய் என்றது நினைவு வரவும்

“செத்து சுடுகாட்டுக்கு போனாலும், போறதுக்கு முன்னாடி இவனுக்கு எல்லாம் செஞ்சு வச்சுட்டுதான் போகனும் போல...நான் கண்ணை கசக்கிறத பார்த்தும் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் அவனுக்கு கொட்டிக்க ஏதாவது செய்யுனு தான சொல்றான்...

சரியான சைக்கோ...சுயநலவாதி... சிடுமூஞ்சி அய்யனார்...” என்று எல்லா வார்த்தையும் தேடித்தேடி அவனை திட்டினாள்.. 




பின் அவன் சொன்ன மாதிரி

“என்ன ப்ரேக் பாஷ்ட் செய்யறது? தோசை மாவு வேற நேற்றே தீர்ந்து போச்சே..இந்த மாரி அக்கா எப்பதான் வருவாங்களோ?? தெரியாத்தனமா நான் அவங்களை அனுப்பிட்டு இவன் கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறேன் “ என்று புலம்பினாள்....

பாவம் பாரதி அறியவில்லை..

ஆதி இங்கு வரவும், ஜானகி நேற்று இரவே மாரிக்கு போன் பண்ணி அவள் பெண்ணின் நலம் விசாரித்து விட்டு, இன்னும் ரெண்டு நாள் கழித்தே வா...

ஆதி அங்க தான் இருக்கிறான்.. அவன் பாரதியை பார்த்துக்குவான் என்று சொல்லவும் மாரிக்கு சந்தோஷமாக இருந்தது... தன் பேரனை பார்த்துக்கொண்டு ஹாஸ்பிட்டல் லயே தங்கிவிட்டதை...

ஜானகிக்கு இவர்கள் இரண்டு பேர் மட்டும் இருந்தால் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்றே மாரியை வர வேண்டாம் என்று சொன்னது...

ஆனால் ஜானகி அறியவில்லை.. அவர்கள் இருவரும் புரிந்து கொள்வதை விட ஒருவர் மேல் ஒருவர் வெறுப்பைத்தான் வளர்த்து வருகிறார்கள் என்று...

ஜானகியின் திட்டம் ஒன்றாக இருந்தால் அந்த வேலனின் ஆட்டம் வேறாக இருந்தது ...

பாரதியோ என்ன சமையல் செய்யலாம் என்று கிச்சனில் துழாவியவள் ரவை கண்ணில் படவும் அதை எடுத்து பீன்ஷ், கேரட் எல்லாம் பொடியாக நறுக்கி போட்டு கிச்சடி செய்தாள்..

கடைசியில் அதில் கொஞ்சம் முந்திரியும் வறுத்து போட்டு கொஞ்சம் நெய் ஊற்றி, நேற்று மீதி இருந்த தேங்காய் சட்னியையும் எடுத்துச் சென்று டைனிங் டேபிலில் வைத்து விட்டு அவன் வருவது தெரிந்ததும் கிச்சனுக்குள் வேகமாக வந்து விட்டாள்...

டைனிங் டேபிலுக்கு வந்தவன் அவள் எல்லாம் வைத்து விட்டு சென்று விட்டதை கண்டவன்

“ஏய் .. நீ பாட்டுக்கு வச்சுட்டு போய்ட்டா யார் எடுத்து வைப்பாங்காளாம்.. சீக்கிரம் வா” என்று விடாமல் கத்தினான்

“சே!! ரொம்ம்ப ஆடறானே.. இவனை என்ன பண்றது?? .. இந்த ஜானகி அத்தை வரட்டும் அவங்களுக்கு இருக்கு “ என்று முனகியவாறு அவன் அருகில் சென்றவள்

அருகில் இருந்த தட்டை எடுத்து வைத்து அதில் கிச்சடியை வைத்து சட்னியை ஊற்றினாள்..

“ஏய்.. என்ன இது உப்புமாவா?? ... எனக்கு உப்புமா பிடிக்காதுனு உனக்கு தெரியாது?? “ என்று மீண்டும் கத்தினான்

“ஆந்க்... உங்களுக்கு பிடிக்காதுனு எனக்கு எப்படி தெரியுமாம்.. நீங்க தான எதையாவது செய்ய சொன்னீங்க..” என்று திருப்பி முறைத்தாள்

“அதுக்கு??? இதுதான் தெரிஞ்சுதா?? “

“ஆமா.. எனக்கு இந்த உப்புமாவும் தோசையும் மட்டும் தான் செய்ய தெரியும் னு உங்களுக்கு தெரியாது.. “என்று அவளும் திருப்பினாள்

“ஆங் உனக்கு எது தெரியும் னு எனக்கு எப்படி தெரியும்?? ..”

“அதே மாதிரி தான் உங்களுக்கு எது பிடிக்கும் னு எனக்கு எப்படி தெரியும்?? ..

வேணும்னா இதை சாப்பிடுங்க.. இல்லைனா தூக்கி கொட்டுங்க... எனக்கு என்ன வந்தது “என்று முறைத்து விட்டு வேகமாக உள்ளே சென்றாள்..

அவனும் வேற வழி இல்லாமல் அந்த கிச்சடியை சாப்பிட ஆரம்பித்தான்.. அதன் சுவை நன்றாக இருக்கவும் முழுவதும் காலி பண்ணினான்...

“நல்லா தானே செய்யறா.. அப்புறம் ஏன் எதுவும் தெரியாது னு சொன்னா??? சரியான கேடி தான் “ என்று நினைத்துக் கொண்டே எழுந்து கை கழுவிட்டு அலுவலகம் கிளம்பினான்.. கொஞ்ச தூரம் சென்றவன் பின் நின்று

“ஏய்... “ என்று மீண்டும் கத்தினான்..

“ஸ் அப்பா.. ஒரு வழியா கிளம்பிட்டானு நினைச்சா மறுபடியும் நிக்கறானே.. இப்ப என்னவாம்” என்று திட்டிக்கொண்டே வெளியில் வந்தாள்...

வந்தவள்

“என் பேர் ஒன்னும் ஏய் இல்லை.. எங்கப்பா அம்மா நாள் நட்சத்திரம் பார்த்து பாரதி னு அழகா பேர் வச்சிருக்காங்க.. அதை சொல்லி கூப்பிடுங்க” என்று முறைத்தாள்..

“ஆமா.. இப்ப உன் பேர் சொல்லி கொஞ்சறது தான் பாக்கி.. உன் பேர் என்னவோ இருந்திட்டு போகட்டும்... நான் ஈவ்னிங்க் 6 மணிக்கு வருவேன்.. ரெடியா இரு” என்றான்

“எதுக்கு?? “ என்றாள் புரியாமல்

“ஹ்ம்ம்ம் உன் கூட காதல் பண்ண.. என்ன ரெடியா?? “ என்றான் தன் புருவங்களை உயர்த்தி

“ஆங்... “என்று பேந்த முழித்தாள்... அவளின் அந்த பெரிய முழியை கண்டவன் சில விநாடிகள் உறைந்து நின்றான்.... அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டு

“யப்பா. இவள் கண்ணு ரொம்பவும் ஆபத்தானது.. அப்படியே ஆளை உள்ள இழுக்குது.. இனிமேல் இவக்கிட்ட ஜாக்கிரதையாதான் இருக்கனும்” என்று நினைத்துக் கொண்டான்

பாரதியும் “ஆமா.... இந்த சிடுமூஞ்சி அப்படியே காதல் பண்ணிட்டாலும்” என்று திட்டிக் கொண்டிருந்தாள்..

அவள் இன்னும் முழித்துக் கொண்டு நிற்பதைக் கண்டவன்

"என்ன?? இப்படி முழிச்சாவது ஆளை மயக்கலாம்னு பார்க்கறியா?? உன் தந்திரம் எல்லாம் என்கிட்ட பலிக்காது.. ஈவ்னிங்க் ரெடியா இரு.. ஹாஸ்பிட்டல் போகனும்”

"ஹாஸ்பிட்டல் எதுக்கு?? " என்றாள் இன்னும் குழம்பியவளாக...

"ஏய்... செக்கப் போகனுமாம்.. அம்மா உன்கிட்ட சொல்லலை?? "என்று முறைத்தான்..

"செக்கப் அடுத்த வாரம் தானெ.. இப்ப எதுக்கு?? .. இந்த அத்தை என்ன பண்றாங்கனு ஏதாவது சொல்லிட்டு பண்றாங்களா??? ஐயோ இவன் கூட தனியாவா?? ஆத்தாடி.. இந்த சிடுமூஞ்சி திட்டியே ஆளை காலி பண்ணிடும்.. எப்படியாவது எஸ்கேப் ஆகிடனும்" என்று அவசரமாக திட்டமிட்டவள்

"வந்து... நானே தனியா போய்க்கறேன். உங்களுக்கு எதுக்கு சிரமம்" என்றாள் தயங்கியவாறு...

"ஏன்?? இத சாக்கா வச்சுகிட்டு உன் காதலன் கூட சுத்தலாம்னு ப்ளான் போட்டிருக்கியா... என் குழந்தையை எப்ப எப்ப செக்கப் பண்ணனும் னு எனக்கு தெரியும்.. நீ எதுவும் பேசாமல் கூட வா போதும்... " என்றான்

“ஹ்ம்ம்ம் “ என்று தலையை ஆட்டியவள் பின் ஏதோ நினைவு வர அவனிடம் கேட்க நினைத்து பின் தயங்கி நின்றாள்..

அவள் தயங்கி நின்றதை கண்டவன்

“என்ன.. ஏதாவது கேட்கனுமா?? “என்று அதட்டினான்...

“ஐயோ.. இவன் கிட்ட கேட்டு அதுக்கு வேற வாங்கி கட்டிக்கணும்... தேவையா இது.. நாம் வேற ஏதாவது ஏற்பாடு பண்ணிக்கலாம்” என்று நினைத்தவள்

“ஒன்னுமில்லை.. நீங்க கிளம்புங்க “ என்றாள்.

“ஏய்.. ஏதோ சொல்ல வந்திட்டு அப்படியே நிறுத்திகிட்ட.. என்ன சொல்ல வந்த??... அதை சொல்லு அப்பதான் கிளம்புவேன் “ என்று மீண்டும் திரும்பி வந்து ஷோபாவில் அமர்ந்தான்..

“ஐயோ!! .. வேலியில் போன ஓணான எடுத்து மடியில் விட்டுகிட்ட மாதிரி அவன் பாட்டுக்கு போறவனை ஏன் தான் நிறுத்தினனோ? “என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்..

அவன் இன்னும் அவள் முகத்தையே பார்த்துகொண்டு இருக்கவும் வேறு வழி இல்லாமல்

“வந்து... வந்து... எனக்கு ஒரு சிங்கப்பூர் சிம் வேணும்.. அதான் உங்களுக்கு... நீங்க ஏற்பாடு பண்ண முடியமா னு கேட்க வந்தேன்” என்று மென்று முழுங்கினாள்..

“சிங்கப்பூர் சிம் ஆ... அது எதுக்கு உனக்கு?? “ என்றான் மீண்டும் கண்கள் இடுங்க

“ஐயோ! இதுக்கு நான் என்ன சொல்றது?? “ என்று யோசித்தவள்

“சும்மாதான் “என்று சமாளித்தாள்..

“ஏய்... உளறாத.. உண்மையை சொல்... உனக்கு எதுக்கு சிங்கப்பூர் சிம் வேணும் “ என்று அதட்டினான்..

வேற வழி இல்லாமல்

“நான் சிங்கப்பூர் போயிருக்கிறதா தான் எங்க வீட்ல சொல்லி இருக்கேன்.. அதான் அவங்க கிட்ட பேசனும்னா சிங்கப்பூர்ல இருந்து பேசற மாதிரி இருக்கணும்.. அதுக்கு அந்த சிம் கிடைத்தால் இங்க இருந்தே நான் பேசிக்கலாம் “ என்று இழுத்தாள்...

“What?? “ என்று அதிர்ந்தான்...

“ஏய்.. நீ சரியான கேடி தான் போல.. உங்க வீட்டுக்கே தெரியாமல் தான் இப்படி ஒரு காரியத்தில இறங்கி இருக்கியா ... எப்படி வந்தது உனக்கு அவ்வளவு தைரியம்??? சொல்லு உன் மாஸ்டர் ப்ளான் என்ன?? “ என்று மீண்டும் அதட்டினான்

“ஸ் அப்பா... திரும்பவும் ஆரம்பிச்சுட்டானா.. இவன் கிட்ட போய் கேட்டேனே... .என்னை எதுல அடிச்சிக்கிறது” என்று நொந்தவள்

“அந்த ப்ளானை போய் ஜானகி அத்தை கிட்டயே கேளுங்க” என்று அவளும் திருப்பினாள்..

“என்னது அத்தையா??? ஏய்.. எப்ப எங்க அம்மா உனக்கு அத்தை ஆனாங்க.. நான் எப்ப உன்னை கல்யாணம் பண்ணினேன்... ?? என்ன குழப்பற?? .. குழப்பாமல் தெளிவா சொல்லு“ என்று மீண்டும் அதட்டினான்..

“ஐயோ!! முருகா... என்னால முடியல... இவன் கிட்ட இருந்து என்ன காப்பாத்தேன்.. இப்படி மாட்ட வச்சிட்டியே... இது உனக்கு நியாயமா? “என்று முருகனை துணைக்கு கூப்பிட்டாள்..

“அந்த சிடு மூஞ்சி கிட்ட என்னால முடியாது பாரதி.... நீயே சமாளி... எனக்கு வேற ஒரு முக்கியமான வேலை இருக்கு. I’m busy “ என்று நழுவினான் வேல்ஸ்...

சிறிது நேரம் தயங்கி நின்றவள் அவன் இன்னும் அவளையே பார்த்துகிட்டிருப்பது தெரியவும்

“ஹ்ம்ம்ம் அத்தைனா எங்கப்பாவோட தங்கச்சினு ம் அர்த்தம் இருக்கு.... “ என்று மெல்ல முனகினாள்..

“உங்கப்பாவோட தங்கச்சி எங்கம்மா வா ??? ....எங்கம்மாக்கு தான் அண்ணனே இல்லையே “ என்று யோசித்தவன் பின் ஏதோ நினைவு வந்தவனாக

“ஏய்... இரு இரு... உங்கப்பா தான் ஹாஸ்பிட்டல் ல இருந்தவரா... எங்கம்மா அண்ணா அண்ணானு பணத்தை தூக்கி கொடுத்தாங்களே அந்த அண்ணனோட பொண்ணா நீ??? “ என்றான் கண்கள் இடுங்க..

“ஸ்ஸ் அப்பாடா... ஒரு வழியா அவன் மண்டைல நுழைய வச்சாச்சு.... “ என்று பெருமூச்சு விட்டவள்

“ஹ்ம்ம்ம்ம் “ என்று தலையை ஆட்டினாள்...

“ஓ.. அந்த மாபியா கும்பலை சேர்ந்தவளா நீ?? .. “

“மாபியா கும்பலா?? .. அப்படீனா?? ” என்று புரியாமல் முழித்தாள்..

“சும்மா நடிக்காதா.. என்ன உன் அப்பனை வச்சு கறந்தது பத்தலைனு இப்படி வாடகைத்தாய் மூலமா மிச்ச இருக்கிற சொத்தையும் சுருட்டலாம் னு உங்க கும்பல் திட்டம் போட்டிருக்கா??? எப்படியோ எங்க அம்மாவை மயக்கி இதுவரை நீ சாதிச்சுகிட்ட.. அதே வேலை இந்த ஆதி கிட்ட நடக்காது .. ஜாக்கிரதை..” என்று உருமியவன்

“ஆமா.. இந்த சிங்கப்பூர் ப்ளான் யாரோடது?? ..” என்றான் மீண்டும் கண்கள் இடுங்க

“ஹ்ம்ம்ம் எல்லாம் உங்க ரெண்டு அம்மாவும் போட்ட திட்டம் தான்.. வேணும்னா அவங்கள புடிச்சி ஜெயில்ல போடுங்க.. எனக்கு என்ன வந்தது?? “ என்று முறைத்தாள்

“What?? எங்கம்மாவா... அவங்களுக்கு வெளி உலகமே தெரியாது.. சுசிலாம்மாவுக்கு தன் பேசன்ட்ஸை தவிர வேற எதுவும் தெரியாது.. அவங்களாவது இப்படி திட்டம் போடறதாவது... நீதான் கேடி மாதிரி இந்த திட்டம் போட்டு அவங்கள இதுல சேத்து விட்டிருப்ப?? என்ன சரியா?? ...”

“ஸ் அப்பா... என்னால முடியலை... இவனை இதுக்கு மேல சமாளிக்க “ என்று புலம்பியவள்

“ஆமாம்... நான் தான் திட்டம் போட்டேன்.. இப்ப என்னான்றிங்க அதுக்கு... முடிஞ்சா உங்க சொத்தை எல்லாம் என்கிட்ட இருந்து காப்பாத்திக்குங்க... இப்ப என்னை ஆள விடுங்க “ என்று வேகமாக மேல ஏறி சென்றாள்...

“ஹ்ம்ம்ம் திமிரா... உன் திட்டம் எதுவும் இந்த ஆதிகிட்ட பலிக்காது “ என்று கத்தினான்..

“ஹ்ம்ம் பார்க்கலாம்.. பார்க்கலாம்.. ” என்று அவளும் திரும்பாமல் கத்தி விட்டு அவள் அறைக்கு சென்று தொப்பென்று விழுந்தாள்..

“சே!! “ என்று தரையை உதைத்து விட்டு வேகமாக வெளியேறி தன் காரை எடுத்து விரட்டினான்...

ஆதித்யாவிடம் கத்தி விட்டு தன் அறைக்கு சென்றவள் தொப்பென்று மெத்தையில் விழுந்தாள்.. அவன் பேசிய பேச்சுக்கள் எல்லாம் நினைவு வந்தது... முதல் முறையாக “நான் இந்த குழந்தையை சுமந்து இருக்க கூடாதோ...

அவனுக்கே பிடிக்கவில்லை.. அப்புறம் எதுக்கு??? இல்லையே.... என் குழந்தை னு தானே அடிக்கடி சொல்றான்.. அப்பனா என்னைதான் பிடிக்க வில்லையா?? நான் என்ன தப்பு செய்தேன்??” என்று யோசித்தவளுக்கு தலைவலி தான் வந்தது...

அப்பொழுது தான் தான் காலையில் எதுவும் சாப்பிடாதது ஞாபகம் வந்தது....இதுக்கு மேல போய் சாப்பிடவும் பிடிக்கலை அவளுக்கு...அப்படியே படுத்து இருந்தாள் கொஞ்ச நேரம்...

பின் தன் வயிற்றில் வளரும் குழந்தையின் ஞாபகம் வர, தன் அடி வயிற்றை தொட்டு பார்த்தவள்

“எனக்கு இல்லைனாலும் என் வயிற்றில் வளரும் இந்த ஜீவனுக்காக நான் சாப்பிடனும்... அது என்ன பாவம் பண்ணியது.. எது எப்படியோ.. ஆட்டத்தில் இறங்கியாச்சு.. இன்னும் 7 மாதம்.... இந்த குழந்தையை நல்ல படியா பெத்து ஜானகி அத்தை கிட்ட கொடுத்துட்டா போதும்.. அதுக்கப்புறம் என்ன ஆனா என்ன..

ஆனால் இந்த 7 மாதமும் இந்த சிடு மூஞ்சியை எப்படி சமாளிக்கிறது?? ஒரு நாள் லயே கண்ணைக் கட்டுது...

ஹ்ம்ம்ம் நடக்கிறது நடக்கட்டும்.. ஆனால் இவன் முன்னால் மட்டும் இனிமேல் கண்ணை கசக்ககூடாது..” என்று தீர்மானித்தவள் பின் கீழ சென்று காலை உணவை முடித்தாள்...பின் தன் வழக்கமான வேலைகளை செய்தாலும் மனம் மட்டும் அப்பப்போ அவனின் சுடுசொற்களை நினைத்து துவண்டது...

இந்த குழந்தையை சுமக்க சம்மதித்திருக்க கூடாதோ??? என்று மீண்டும் அதே கேள்வி அடிக்கடி வந்து அவள் முன்னே நின்றது....

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!