தவமின்றி கிடைத்த வரமே-20


அத்தியாயம்-20
வசர கல்யாணம் என்றாலும் மலரின் ஒன்னு விட்ட பாட்டி கனகம் எல்லா முக்கியமான திருமண சடங்குகளையுமே செய்ய வைத்திருந்தார்....

ஒரு வழியாக எல்லா பார்மாலிட்டிஸ் ம் முடிய, சிவசங்கரை ஓய்வு எடுக்க சொல்லி, அவர் அருகிலயே ஒரு நர்ஸ் ஐ இருக்க சொல்லி பின் அவர் அறைக் கதவை மூடி விட்டு வெளியில் வந்தனர் அனைவரும்.....

இந்த திடீர் கல்யாணத்தின் மகிழ்ச்சியை சந்தோசத்தை பகிர்ந்து கொள்ள, பாரதியும் நிகிலன் ம் அங்கு வந்திருந்தவர்களுக்கெல்லாம் இனிப்பு வழங்கினர்.... 



அதோடு திருமண பரிசாக, அங்க இருந்த பேசன்ட்ஸ் ஒவ்வொருத்தருக்குமே இனிப்பு வழங்கினர்...கல்யாண சாப்பாடாக, அங்கிருந்த பேசன்ட்ஸ்க்கும் அங்கு கேன்டினில் வந்து சாப்பிட வருபவர்கள் அனைவருக்குமே அன்று வசியின் திருமணத்தின் பெயரால் சாப்பாடு இலவசமாக கொடுக்க சொல்லி இருந்தனர்....

அதை கேட்ட அனைவரும் மனம் நிறைந்து அந்த மணமக்களை மனதுக்குள் வாழ்த்தினர்.. சிலர் ஆர்வமாக வந்து அவர்களை பார்த்தும் மேலும் சிலர் நேரிடையாக அவர்களை வாழ்த்தியும் சென்றனர்....

வசீகரனின் இந்த திடீர் திருமணத்தை அறிந்த அந்த மருத்துவமனையில் அவனுக்கு தெரிந்த டாக்டர்கள் வந்து மணமக்கள் இருவரையும் வாழ்த்த, அவனும் புன்னகையோடு ஏற்று கொண்டான்...

அப்பொழுது தான் மித்ரா வும் ஷ்யாமும் மெதுவாக அவன் அருகில் வந்தனர்....

மித்ராவை கண்டதும்

“ஹே.. மிது... நீ எப்ப வந்த?? ..” என்றான் வசி கண்கள் விரிய

அதற்குள் ஒரளவுக்கு தன்னை சமாளித்து கொண்டிருந்தாள் மித்ரா...

வசியிடம் தன்னை வெளிபடுத்த கூடாது அவனிடம் எதுவும் கேட்க கூடாது என்று ஷ்யாம் அவளுக்கு முன்னரே அறிவுறுத்தி இருக்க, தன் உள்ளே இருக்கும் வேதனையை மறைத்து கொண்டவள்

“ஏன்டா.. பொண்டாட்டி வந்த அடுத்த நொடியே என்னை மறந்துட்ட இல்ல....நீ தாலி கட்டறப்ப இங்கயே தான் நிக்கறோம்...நீதான் எங்களை கண்டுக்கவே இல்லை... “ என்றாள் அவனை முறைத்தவாறு...

“சாரி மிது.. கொஞ்சம் டென்சன்.. அதான்... “

அதற்குள் ஷ்யாம் முன்னே வந்து

“கன்கிராட்ஸ் டா.... Wish you have a happy married life !! “ என்று வசியை கட்டி அணைத்து அவன் கை பற்றி குலுக்கிய ஷ்யாம் பின் வசியின் அருகில் நின்றிருந்த பனிமலரை பார்த்து

“கன்கிராட்ஸ் சிஸ்டர்... “ என்று புன்னகைத்தான்...உடனே வசியும் அவளிடம் திரும்பி

“பனிமலர்... இவன் ஷ்யாம்.. என் ப்ரண்ட்...” என்று அறிமுக படுத்த ஷ்யாம் என்றதும் அன்று இவன் அறைக்குத்தான் அவள் டாக்டரை பார்க்க சென்றது நினைவு வந்தது...

அன்று மட்டும் இந்த ஷ்யாம் அறையில் இருந்திருந்தால் இந்த வசீகரனை  சந்திக்க முடியாமல் போயிருந்திருக்கும்.... அப்புறம் அவன் நட்பு கிடைக்காமல் போயிருந்திருக்கும்.....

நட்பு மட்டும் தானா என்று கேள்வி கேட்ட தன் மனதை அப்பொழுது அடக்கியவள் அவன் நட்பு கிடைக்காமல் இருந்திருந்தால் இன்று தன் தந்தையின் உயிரை காப்பாற்றி இருக்க முடியாது.....

எல்லாத்துக்கும் இந்த ஷ்யாம் அன்று வெளியில் சென்றிருந்த அந்த 10 நிமிடங்கள் தான் காரணம்.. அந்த 10 நிமிடங்கள் தன் வாழ்க்கையை எப்படி மாற்றி விட்டது...!!! .

தன் தந்தையை காத்ததோடு, தன்னை ஒரு புகழ் பெற்ற மருத்துவனிின் மனைவியாக்கி பெருமையடைய வைத்ததும் இவனால்தான்... “ என எண்ணியவள் மெல்ல புன்னகைத்தாள் ஷ்யாமை பார்த்து.....

வசிக்குமே அதே நினைப்பு தான்... இவனால் தான் தன்னவளை கண்டு கொள்ள முடிந்தது....இன்று அவளே தன் மனைவியும் ஆகி விட்டாள்.. என்று உள்ளுக்குள் சிலிர்த்தவன்

“ரொம்ப தேங்க்ஸ் டா ஷ்யாம்..... உன்னால தான் எனக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்கு... உனக்கு எப்பவுமே நான் கடமை பட்டிருக்கிறேன்.. “ என்று ஷ்யாமை கட்டி அணைத்து கொள்ள, மலருக்குமே அவன் சொல்வதன் அர்த்தம் புரிய உள்ளுக்குள் இலேசாக மழைச்சாரல் அடிக்க ஆரம்பித்தது....

ஆனால் ஷ்யாம் அன்ட் மித்ராவுக்குத்தான் அவன் சொல்வதன் அர்த்தம் புரியவில்லை.... அவர்கள் ஏதோ யோசிக்க, அவர்களை மேலும் யோசிக்க  வைக்காமல் மித்ராவை பனிமலரிடம் கை காட்டி

“பனிமலர்.... இவள் மிது ... மித்ரா... என்னோட பிரண்ட்.. “ என்று மித்ராவை அறிமுக படுத்தி வைத்தான்...

அவன் மிது என்றதுமே அன்று அவன் கேம்பில் இருந்து திரும்பும் பொழுது காரில் மிது என்று அழைத்து பேசியது நினைவு வந்தது...

“மிது என்று உரிமையோடு அழைக்கிறான் என்றால் ரொம்ப குலோசா இருக்குமோ??

வெறும் ப்ரண்ட் மட்டும்தானா?? இல்லை அதுக்கு மேலயும் இருக்குமோ?? “ என்று அவசரமாக யோசித்தாள் பனிமலர்...

பனிமரின் முகத்தில் இருந்த குழப்ப ரேகைகளை கண்டு கொண்டாள் மித்ரா...

மலரின் குழப்பத்தை கண்டு கொண்டு துள்ளி குதித்தவள் அவள் ஆழ் மனதில் இருந்த பொறாமை , வசியை இழந்து விட்டனே என்ற ஏமாற்றம், இயலாமை என்ற சாத்தான் தலை தூக்க, அந்த நொடியில் குரோதமாக யோசிக்க ஆரம்பித்தாள் மித்ரா....

“என்னை என் வசியிடம் இருந்து பிரித்தவள் நல்லா இருக்க கூடாது... நான் வசியை பிரிந்து எவ்வளவு கஷ்ட படுகிறேனோ அதே வலி வேதனையை இவளும் அனுபவிக்கணும்..... அனுபவிக்க வைப்பாள் இந்த மித்ரா.... “ என்று மனதுக்குள் சூளுரைத்தவள் உடனே அவசரமாக ஒரு திட்டத்தை தீட்டினாள்....

பின் வசியை பார்த்து

“என்னடா வசி.. நான் உனக்கு வெறும் ப்ரண்ட் மட்டும் தானா?? “ என்றாள் தலையை சரித்து குறும்பாக சிரித்தவாறு ஓரகண்ணால் மலரை நோட்டமிட்டவாறு...

அதை கேட்டு வசி முழிக்க பனிமலருக்கும் அவன் என்ன சொல்ல போகிறானோ என்று ஆர்வமாக தன் கணவனை பார்த்து இருந்தாள்...

அவன் முழிப்பதை கண்ட மித்ரா,

“நான் உனக்கு குலோஸ் ப்ரண்ட் இல்லையா?? “ என்று குலோஸ் என்பதை  ரொம்ப அழுத்தி சொன்னாள் கண்களை படபடவென்று கொட்டி அதே குறும்பாக சிரித்தவாறு..

வசி அதை கண்டு கொள்ளாமல் புன்னகைத்தான்....ஆனால் மித்ரா குலோஸ் க்கு கொடுத்த அழுத்தத்தை பனிமலர் கண்டு கொண்டாள்..

ஏற்கனவே அவளுள் இருந்த தன் தந்தைக்காகத்தான் தன்னை மணந்து கொண்டான் என்ற விதை இப்பொழுது மித்ராவை கண்டதும் கொஞ்சமாக முளை விட ஆரம்பித்தது....

அப்பொழுது நிகிலன், பாரதி, சுசிலா என எல்லாரும் அவர்கள் அருகில் வர,

சுசிலாவுக்கும் பாரதிக்கும் மித்ராவை முன்பே தெரியும் என்பதால் அவளை பற்றி நலம் விசாரித்து அவளோடு பேசி கொண்டிருந்தனர்.. பின் பாரதியும் அவளை நலம் விசாரித்து, மித்ராவை பார்த்து

“என்ன மித்ரா... உன்னோட ப்ரண்ட் வசி அண்ணாவே திடீர் கல்யாணம் பண்ணி அசத்திட்டார்.. நீ எப்ப கல்யாண சாப்பாடு போடப் போற?? “ என்றாள் சிரித்தவாறு...

“ஹ்ம்ம்ம் இந்த ஜென்மத்துல எனக்கு அந்த பாக்கியம் இல்ல பாரதி... “ என்றாள் கண்ணில் வேதனையுடன் வசியை ஓர கண்ணால் பார்த்தவாறு..

அவள் சொல்லியதன் அர்த்தம் புரிந்தவனாக வசியின் முகத்திலும் ஒரு நொடி வேதனை வந்து போனது..

இருவர் கண்ணிலும் தெரிந்த ஏதோ ஒரு மாற்றம் பனிமலர் கண்ணில் இருந்தும் தப்பவில்லை... அவள் சந்தேகபடறது மாதிரி அவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ இருக்கு என்ற அளவில் அவள் கற்பனை குதிரையை பறக்க விட்டு கொண்டிருந்தாள் மலர்...

பின் பனிமலரின் உறவினர்கள் அவர்கள் அருகில் வந்து இருவரிடமும் சொல்லிவிட்டு விடை பெற்று செல்ல, கழுத்தில் கனமாக தொங்கி கொண்டிருந்த மாலையை கழற்றி வைத்து விட்டு கொஞ்சம் மூச்சு விட்டாள் பனிமலர்....

மற்றவர்கள் வசியிடம் பேசி கொண்டிருக்க, பனிமலர் அருகில் இருந்த ரெஸ்ட் ரூம் க்கிற்கு சென்றாள்...உள்ளே சென்றவள் முகத்தை நீரால் அடித்து கழுவ கொஞ்சம் ரெப்ரெஸ்ஸாக இருந்தது....

கடந்த சில மணி நேரங்களில் எத்தனை எத்தனையான உணர்ச்சிகள், வலி வேதனைகள்....

கடைசியில் அவற்றை எல்லாம் போக்கி தன் தந்தையை காத்ததோடு தன்னையும் ஒரு நிம்மதியான இடத்தில் சேர்த்து விட்டான் அந்த ஈசன் என மனதுக்குள் எண்ணி பூரித்து போனாள்....

பின் சிறிது நேரம் கழித்து ரெஸ்ட் ரூம் ல் இருந்து திரும்புகையில் ஒரு அறையில் இருந்து மெல்லிய பேச்சு குரல்கள் கேட்டன...

“என்னடா இப்படி முட்டாளா இருக்க?? “ என்று ஒரு பெண் குரல் கேட்க, அந்த குரல் மித்ராவுடையது என்பதால் அங்கயே ஒரமாக நின்று கொண்டாள் மலர்..

“இல்ல மிது .. எனக்கு அப்ப வேற வழி எதுவும் தெரியலை... அதான்...” என்றது ஒரு ஆணின் குரல்....

இது அவன்... அவள் கணவன் வசியுடையது தான் என உடனே புரிய , ஆர்வமாக மீண்டும் காதை தீட்டி வைத்து கொண்டு அங்கயே மறைந்து நின்றாள் மலர்....

“ஒரு உயிரை காப்பாற்றுவது முக்கியம் தான்... அதுக்குனு முன் பின் தெரியாத ஒரு பொண்ணுக்காக கல்யாணம் வரைக்குமா போவாங்க??...

அப்படிதான் கல்யாணம் நடத்தனும் என்றால் எத்தனை பேர் தெரிஞ்சவங்க இருந்திருப்பாங்க... அதில யாரையாவது கேட்டிருக்கலாம்... இல்லையா இந்த ட்ராமா கல்யாணம் மாதிரியாவது பண்ணி அவரை நம்ப வச்சு அவர் உயிரை காப்பாத்தி இருக்கலாம்..

அதை விட்டு இப்படி நிஜ கல்யாணம், அவசர கல்யாணத்தை பண்ணி வச்சிருக்கியே.. அதையும் வேற ரிஜிஸ்டர் பண்ணி வச்சிருக்க... “ என்றாள் கோபமாக...

அதை கேட்டு அவன் என்ன சொல்லுவானோ என்று ஆர்வமானாள் மலர்...

மித்ரா பனிமலரை பற்றி முன்பின் தெரியாதவள் என்று சொல்லும் பொழுது

“எனக்கு முன்னயே தெரிந்தவள் அவள்... அவளைத் தான் விரும்புகிறேன்.. “ என்று வசி சொல்லியிருந்திருக்கலாம்... ஆனால் ஏனோ அதை மித்ராவிடம் சொல்ல முடியவில்லை...

ஒரு வேளை அதை கேட்டு அவள் எப்படி எடுத்து கொள்வாளோ?? வசி மித்ராவை விரும்பாமல் வேற ஒரு பொண்ணை விரும்புவதை கேட்டு அவள் மனம் வாடி விடுமோ என்று அஞ்சி சொல்லாமல் விட்டானோ ?? இல்லை இதெல்லாம் அந்த ஈசனின் திருவளையாடலோ !! அந்த ஈசனுக்கே வெளிச்சம்...

மித்ரா பனிமலரை பற்றி முன்பின் தெரியாதவள் என்று சொல்லியதற்கு அவன் மறுத்து எதுவும் சொல்லாமல் ,

“ம்ச்.. அத விடு மிது.. ஏதோ நடந்தது நடந்து போச்சு... இனிமேல் அதை மாற்ற முடியாது... எனக்கு அப்ப இருந்த நிலையில வேற எதுவும் தோணலை.. அவர் உயிரை காப்பாற்றணும்.. அவ்வளவுதான்.. காப்பாத்திட்டேன்... “ என்று பெருமூச்சு விட்டான் மலரை மணந்ததற்கான உண்மையான காரணத்தை சொல்லாமல் மறைத்த படி...

அதை கேட்டு பனிமலர் இடிந்து போனாள்....

“அப்படி என்றால் டாக்டர் என் தந்தைக்காகத்தான் என்னை மணந்தான்... ஒருவேளை வேற யாரையாவது ஏன் இந்த மித்ராவையே கூட டாக்டர் விரும்பி இருந்திருக்கலாம்...

அதனால் தான் இத்தனை நாட்களாக திருமணத்தை தள்ளி வைத்திருக்கிறான் போல...கொஞ்ச நாளில் இருவரும் மணந்து கொள்ள திட்ட மிட்டிருக்கலாம்..... ஆனால் அதற்குள் நான் இடையில் வந்திட்டனோ?? ..

நான் கொஞ்சம் கூட அவனுக்கு பொருத்தம் இல்லை...அவர் எங்க?? நான் எங்க??? “ என்ற ரேஞ்சில் யோசித்தவள் அதற்கு மேல் அங்கு நிக்க முடியாமல் நகர்ந்து சென்றாள்....

பின் சிறிது நேரம் ஏதோ பேசியபின் வசி மற்றும் மித்ரா அந்த அறையில் இருந்து வெளியில் வர, ஷ்யாமும் அருகில் வந்து அவனுக்கு மீண்டும் வாழ்த்து சொல்லி கிளம்ப மித்ராவும் வசியிடம் விடை பெற்று ஷ்யாம் உடன் சென்றாள்.....

செல்லும் பொழுது மலரை ஓர கண்ணால் பார்க்க அவள் முகத்தில் முன்னை விட இன்னும் குழப்ப ரேகைகள் ஒரு வித வேதனை படர்ந்திருப்பதை கண்டவள்

“யெஸ்.... “ என்று தன் கையை மடக்கி உள்ளுக்குள் குதித்து கொண்டாள் மித்ரா....

சற்று நேரம் முன்பு மலர் மறைந்து நின்று அவர்கள் பேசுவதை கேட்டதை மித்ராவும் கண்டு கொண்டாள்.. அதனாலயே கொஞ்ச்ம வசியிடம் வேற மாதிரி பேச வைத்தாள்...

அவள் திட்டபடியே அதை கேட்ட பனிமலர் முகம் வாடவும் மகிழ்ச்சியாக இருந்தது மித்ராவுக்கு..... அதே உற்சாகத்துடன் துள்ளல் நடையுடன் ஷ்யாம் உடன் நடந்தாள் முகத்தில் சிரிப்புடன்....

“ எப்படியும் வசி இவளை தன் பேசன்ட்க்காகத்தான் மணந்திருக்கிறான்.... எப்படியாவது இவளை வசியிடம் இருந்து பிரித்து அவனை மீண்டும் தனக்கு சொந்தமாக்கி கொள்ள வேண்டும்.. “ என்ற குரோத எண்ணம் இன்னும் ஆழ பரவியது அவள் உள்ளே....

அறையில் வசி பேசியதை கேட்டவள் மனம் வருந்த , வேற யாரையும் பார்க்க பிடிக்காமல் தன் தந்தை இருந்த அறைக்கு செல்ல முயன்றாள் மலர்....

அப்பொழுது கயல் மலர் அருகில் வந்து மீண்டும் ஒரு முறை அவளை கட்டி அணைத்து அவளுக்கு வாழ்த்து சொல்லி விடை பெற்றாள்...

மலர் தன் தோழியிடம் தன் உள்ளே இருக்கும் வேதனையை காட்டாமல் தன்னை மறைத்து கொண்டு சிரித்து பேச, அவள் சிரிக்கும் பொழுது அவள் கன்னத்தில் விழுந்த குழியும், அழகாக விரிந்த அவளின் சிவந்த இதழ்களையும் கண்டு தன்னை மறந்து ரசித்திருந்தான் வசி....

ஷ்யாம் மித்ராவும் விடை பெற்று சென்றிருக்க, தனியாக நின்று கொண்டிருந்த வசிக்கு மலரின் இந்த சிரிப்பு மனதுக்கு இதத்தை கொடுத்தது...

அவள் அப்பாவுக்கு முடியவில்லை என்றதில் இருந்தே வேதனையில் இறுகி இருந்தவள் இப்பொழுது தான் கொஞ்சம் வெளி வந்து சிரிக்க ஆரம்பித்து இருக்கிறாள்.... அதனால் அவளையே இமைக்க மறந்து ரசித்து பார்த்து கொண்டு இருந்தான் வசி.....

“ம்ஹூம்....... “ என்று யாரோ தன் அருகில் தொண்டையை செருமுவது கேட்க திடுக்கிட்டு தன் பார்வையை தன் மனைவியிடம் இருந்து பிரித்து கொண்டு அவன் அருகில் பார்த்தான் வசி....

தன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டி கொண்டு அவனை பார்த்து குறும்பாக சிரித்து கொண்டிருந்தாள் பாரதி.....

அவளை கண்டதும் உள்ளுக்குள் இலேசாக அதிர்ந்தவன் ஆனாலும் தன்னை மறைத்து கொண்டு அசட்டு சிரிப்பை சிரித்தான் வசி... அவளும் அவனை பார்த்து சிரித்தவாறே

“டாக்டர் அண்ணா.... எனக்கு இப்ப ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.... “ என்றாள் மீண்டும் அதே குறும்பு சிரிப்புடன....

“ஆஹா... இந்த வாயாடி நான் என் ஜில்லுவை சைட் அடிச்சதை பார்த்துட்டா போல இருக்கே...!! இவ கிட்ட மாட்டினேனா அவ்வளவு தான்... “ என்று உள்ளுக்குள் கலவரமானவன்

“ஹீ ஹீ ஹீ என்ன உண்மை சிஸ்டர்?? “ என்றான் அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு...

“வாவ்... சூப்பர் ப்ரதர்.... நொடியில் அப்படியே ரொமான்ஸ் லுக் ல இருந்து அப்பாவி லுக் க்கு எப்படி முகத்தை மாத்தினிங்க?? “ என்றாள் தன் புருவத்தை உயர்த்தி சிரித்தவாறு

“ஹீ ஹீ ஹீ .. அதெல்லாம் ஒன்னுமில்லை சிஸ்டர்.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... இருங்க வந்திடறேன்... “ என்று நழுவ மயல அவளோ அவன் கையை பிடித்து இழுத்து நிறுத்தியவள்

“எவ்வளவு முக்கியமான வேலைனாலும் அதை எல்லாம் அப்புறம் பாருங்க டாக்டர் சார்... இப்ப எனக்கு ஒரு உண்மையை சொல்லிட்டு இந்த இடத்தை விட்டு நகருங்க.. “ சென்று செல்லமாக மிரட்டினாள்...

“ஆஹா.. வசி ... நல்லா மாட்டிகிட்ட... எப்படியாவது சமாளி டா... “ என்று தன்னையே நொந்து கொண்டவன்

“என்ன உண்மை சிஸ்டர்?? நான் எப்பவுமே உண்மையைத் தான் சொல்வேன்... நான் சொல்வதெல்லாம் உண்மை... “ என்று இழுத்தான் அசடு வழிந்தவாறு...

“ஹா ஹா ஹா... நீங்க சொல்வது உண்மையா இல்லையானு இப்ப நீங்க சொல்றதில் தான் இருக்கு.... “ என்று பீடிகை போட்டவள் வசியின் அருகில் நெருங்கி வந்து

“நீங்க பனிமலரை உண்மையாலுமே அவ அப்பாவை காப்பாற்றத்தான் கல்யாணம் பண்ணி கிட்டீங்களா?? இல்லை.... லவ்வு கிவ்வு னு ?? ஏதாவது... ??

எதுனாலும் என்கிட்ட உண்மையை மறைக்காமல் சொல்லிடுங்க ப்ரதர்... நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்.... .ஆனால் பாரதிக்கு உண்மை என்னனு தெரிஞ்சாகணும்... “ என்று செல்லமாக விரல் நீட்டி மிரட்டினாள்..

அவளின் உரிமையான செல்லமான மிரட்டலை கண்டவன் மேலும் அவள் கண்ணில் இருக்கும் ஏதோ ஒன்றை கண்டவன் அவளிடம் உண்மையை மறைக்க தோன்றவில்லை....

“ஹீ ஹீ ஹீ... அது வந்து சிஸ்டர்...... யார் கிட்டயும் சொல்லக் கூடாது.. ப்ராமிஸ் ?? “ என்று கை நீட்டினான் அசட்டு சிரிப்புடன்....

அவளும் “கண்டிப்பா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்..” என்று அவன் கை பிடித்து சத்தியம் செய்தாள்....

“வந்து...... ஜில்லுவை எனக்கு முன்பே தெரியும்....” என்றான் தயங்கியவாறு இலேசான வெக்கத்துடன்....

“ஜில்லுவா?? அது யார்? “ என்றாள் குழப்பமாக...

அப்பொழுதுதான் அவன் உளறியதை உணர்ந்தவன் தன் நாக்கை கடித்து கொண்டு

“ஹீ ஹீ ஹீ... பனிமலர் தான்.. அவளுக்கு நான் வைத்திருக்கிற செல்ல பெயர் ஜில்லு.... “ என்று மீண்டும் அசட்டு சிரிப்பை சிரித்தான் முகம் சிவக்க....

“வர்ரே வாவ்...!! . சூப்பர்... சூப்பர்...!! ப்ரதர்...

இந்த பூனையும் பால் குடிக்குமா என்ற ரேஞ்சில் ஒன்னும் தெரியாதவராக வெளில வேசம் போட்டுகிட்டு உள்ளுக்குள்ள ஒரு ரோமியோ ஜூலியட் படத்தையே ஓட்டி கிட்டு இருந்திங்களா ?? “ என்றாள் ஆச்சர்யம் + நக்கலாக சிரித்தவாறு

“ஹீ ஹீ ஹீ... அவளை முதல் முதலா பார்த்த உடனே எனக்குள் மணி அடிச்சு, பல்ப் எரிஞ்சு லவ் வந்திடுச்சு சிஸ்டர்.... அவளை சின்சியரா லவ் பண்றேன்....” என்று மெல்லிய வெக்கத்துடன் தரையை பார்த்தவாறு சொன்னான் வசி..

அதை கண்டவளுக்கு இன்னும் ஆச்சர்யம்...

வசி எப்பவுமே அதிகம் பேசாதவன்... பொதுவாக அவர்களின் தானா சேர்ந்த கூட்டம் எப்பவாது கூடும் பொழுது மற்றவர்கள் அதிகம் பேசுவார்கள்.. அதுவும் ஆதி, அவன் மனைவி பாரதியின் தயவால் இப்பொழுது நன்றாகவே பேச ஆரம்பித்திருக்கிறான்...

நிகிலனும் முன்னை விட இப்பொழுது கொஞ்சம் பேசுவான்.... ஆனால் வசி மட்டும் எத்தனை அடி அடித்தாலும் அசராமல் அதே ட்ரேட் மார்க்கான வசீகர புன்னகையிலயே பதில் அழித்து அவர்கள் பேசுவதை கேட்டு ரசித்து கொண்டிருப்பான்.....

அப்படி பட்டவன் இப்படி எல்லாம் கூட வெக்க படுவானா?? என்று ஆச்சரியமாக இருந்தது பாரதிக்கு... அவன் சொல்லியதை கேட்டு அவசரமாக யோசித்தவள்

“ஆங்... இருங்க... மீதி கதையை நான் சொல்றேன்....

ஹ்ம்ம்ம் இந்த ஹீரோவுக்கு காதல் வந்ததும் உங்க காதலை மனசுக்குள்ளயே போட்டு பூட்டி வச்சுகிட்டிங்க... ஒரு வழியா தைர்யம் வந்து உங்க காதலை சொல்ல வர்ர்ப்ப நம்ம ஹீரோயின் அவள் கல்யாண பத்திரிக்கையை நீட்டிட்டாள்...

உடனே இந்த ஹீரோவும் கடமை, கண்ணியம் கட்டுபாடுனு வீர வசனம் பேசி எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தி காதலை சொல்லாமல் மனசுக்குள்ளயே புதைச்சுகிட்டிங்க...

ஓ.... அதான் இரண்டு வாரமா சோகம் கீதம் வாசிச்சு கிட்டிருந்தீங்களா?? பாவம் ஆன்ட்டி... உங்களுக்கு என்ன ஆச்சோ என்று பயந்து எங்க கிட்ட புலம்பினாங்க...

நாங்க உங்க கிட்ட கேட்டப்ப கூட ஒன்னும் இல்லைனு மறச்சுட்டிங்களே ப்ரதர்.... அப்பயாவது உண்மையை சொல்லி இருந்தால் இந்த பாரதி ஏதாவது ஒரு வீர தீர சாகசம் எல்லாம் செய்து முடிஞ்சால் உங்க ஜில்லுவை தூக்கிட்டு வந்து உங்க கிட்ட சேர்த்திருப்பேன் இல்ல...

அதை விட்டு... இத்தனை நடந்திருக்கு.. வெளில மூச்சு விடாம உங்களுக்குள்ளயே போட்டு பூட்டி வச்சுகிட்டிங்களே ப்ரதர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....இது நியாயமா??

ப்ரண்ட்ஸ் னு நாங்க எதுக்கு இருக்கோம்?? உங்களுக்கு ஒன்னுனா ஒரு நல்ல வழி சொல்ல மாட்டமா?? உங்க பிரச்சனையை தீர்த்து வச்சிருப்போம் இல்ல....“ என்றாள் அவனை பார்த்து முறைத்தவாறு...

“சாரி சிஸ்டர்... அப்ப எனக்கு என்ன செய்யறது னு தெரியல.. பனிமலர் கல்யாணம் நின்னால் அவங்க குடும்பம் கஷ்டபடும். அதோடு ஜில்லுவின் மனம் தெரியாமல் நான் மட்டும் எப்படி இதை நிறுத்துவது..

ஒரு வேளை அவளுக்கு அந்த மாப்பிள்ளையை பிடித்து இருந்தால்?? அதான் எதையும் வெளில காட்டிக்கலை... “ என்றான் கொஞ்சம் சோகமாக

“ஹ்ம்ம்ம்ம் நல்ல டாக்டர் நீங்க ப்ரதர்.... எப்படியோ நீங்க கும்பிடற அந்த ஈசனும் என் வேலனும் சேர்ந்துதான் உங்க ஜில்லுவை உங்ககிட்டயே சேர்த்துட்டாங்க போல....

இல்லைனா காலம் பூரா தேவதாஸ் மாதிரி தாடிய வளர்த்துகிட்டு வாழ்வே மாயம்.. இந்த வாழ்வே மாயம் னு கமல் மாதிரி பாட்டு பாடி சுத்தி கிட்டு இருந்திருப்பிங்க... “ என்று செல்லமாக கடிந்து கொண்டாள் பாரதி...

“ஹ்ம்ம்ம் கரெக்ட் தான் சிஸ்டர்.. எல்லாம் அந்த ஈசனின் கருணைதான்... “ என்று புன்னகைத்தான்...

“ஆமா சிஸ்டர்.... என் மேட்டர் எப்படி உனக்கு தெரிந்தது?? “ என்றான் ஆச்சர்யமாக..

“ஹீ ஹீ ஹீ.... இந்த பாரதி கண்ணு கழுகு கண்ணு ப்ரதர்.... என்கிட்ட இருந்து யாரும் தப்ப முடியாது... அதுவுமில்லாமல் நான் ஒரு சைக்காலஜிஸ்ட் ஆக்கும்... மற்றவங்க முகத்தை பார்த்தே மனதை படிப்பவள் ஆக்கும்.....” என்று இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டாள் சிரித்தவாறு....

“நீங்க சொன்ன திடீர் கல்யாணத்துக்கான காரணம் தான் என்னை யோசிக்க வைத்தது....ஒரு பேசன்ட் ஐ காப்பாற்ற கல்யாணம் வரைக்குமா போவாங்க..??. அதுவும் இல்லாமல் உங்க திறமையை பத்தி எனக்கும் தெரியும் ப்ரதர்....

கண்டிப்பா இந்த கல்யாணம் இல்லாமலயே கூட நீங்க அவரை காப்பாற்றி இருக்கலாம்.... ஆனா அதை விட்டு இப்படி ஒரு வழியை ஏன் தேர்ந்தெடுத்தீங்கனு என் தூங்கிட்டிருந்த மூளையை தட்டி எழுப்பி அதுக்கு வேலை கொடுத்து யோசிக்க சொன்னேன்....

அப்புறம் நான் இங்க வந்ததில் இருந்தே உங்களையே வாட்ச் பண்ணிகிட்டு தான் இருந்தேன்..

ஆனா சும்மா சொல்லக் கூடாது ... உங்க பொண்டாட்டிய பார்க்கும் நொடிகள் எல்லாம் உங்க கண்ணில் ஒரு பல்ப் எரியும் பாருங்க...அட அட அட செம்யா இருக்கும் அதை பார்க்க.... அதுவே காட்டி கொடுத்து விட்டது நீங்க அவளை விரும்பிதான் மணக்கறீங்க னு....

என்னுடைய சந்தேகத்தை உறுதி படுத்திக்கத்தான் இப்ப கேட்டது....இந்த பாரதி கெஸ் பண்ணியது கரெக்ட் தான்... சூப்பர் பாரதி.. நீ கலக்கிட்ட... “ என்று தன் முகத்துக்கு நேராக தன் ஆட்காட்டி விரலை நீட்டி தன்னைத்தானே பாராட்டி கொண்டாள் பாரதி....

“அப்புறம் ப்ரதர்.. உங்க லவ் ஐ உங்க ஆள் கிட்ட சொல்லிட்டிங்களா?? “ என்றாள் ஆர்வமாக

“இன்னும் இல்லை சிஸ்டர்.... அதுக்கான சந்தர்ப்பம் கிடைக்கலை...அவ அப்பாக்கு இப்படி ஆய்டுச்சுனு டென்சன்ல இருக்கா.. இப்ப போய் நான் பாட்டுக்கு காதல் கீதல் னு உளறினா நல்லா இருக்காது... ஒரளவுக்கு அவள் தெளிவாகட்டும்... அப்புறம் சொல்லிக்கலாம்.... “ என்றான் மெல்ல சிரித்தவாறு...

“ம்ம்ம்ம் நீங்க சொல்றதும் பாய்ன்ட் தான் ப்ரதர்.. ஆனாலும் ரொம்ப லேட் பண்ணிடாதிங்க.... சீக்கிரம் சொல்லிடுங்க...

எனிவே உங்க மனசுக்கு பிடிச்சவளையே மணந்ததுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...நீங்க இரண்டு பேரும் மனம் ஒத்த தம்பதிகளா பல வருசம் சந்தோசமாக வாழணும்.... “ என்று அவன் கை பற்றி குலுக்கி வாழ்த்தினாள் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன்....

அவனும் நெகிழ்ந்து

“ரொம்ப நன்றி சிஸ்டர்....அப்புறம் இந்த விசயம் யாருக்கும் இப்போதைக்கு தெரிய வேண்டாம்.. உன் புருசனையும் சேர்த்துத்தான்.. “ என்றான் கெஞ்சலுடன்.....

“ஹீ ஹீ ஹீ.... என் புருசன் கிட்ட சொல்லாமல் இருக்கறது கொஞ்சம் கஷ்டம் தான்....என் முகத்தை பார்த்தே கண்டு பிடிச்சிடுவார் என் ஆதி மாமா....ஆனாலும் சமாளிக்கறேன்.... ஆனா அதுக்கு நீங்க எனக்கு ஒரு லஞ்சம் கொடுக்கணுமே... “ என்றாள் தலையை சரித்து சிரித்தவாறு...

“லஞ்சமா?/ என்னது அது?? “ என்றான் கொஞ்சம் கலவரத்துடன்...

“ஹீ ஹீ ஹீ ரொம்ப கலவரமாகாதிங்க வசி அண்ணா.... உங்க சொத்துல பாதியெல்லாம் கேட்க மாட்டேன்..

என்னை இந்த மாதிரி சிஸ்டர் னு கூப்பிடறதை விட்டுட்டு உங்க தங்கச்சி போல பாரதி னு உரிமையா கூப்பிடுங்க... அது போதும்.. “ என்று கண் சிமிட்டி சிரித்தாள்...

“ஹீ ஹீ ஹீ அவ்வளவுதானா?? கொஞ்ச நேரத்துல நான் பயந்தே போய்ட்டேன்.. சரி சிஸ்.... “ என்று சொல்ல வந்தவன் அவள் முறைக்கவும்

“சரி பாரதி.... உன்னை நினைத்தால் ரொம்ப பெருமையா சந்தோசமா இருக்கு.. எப்படியோ இருந்த என் நண்பன் வாழ்க்கையை மாற்றி வசந்தமாக்கின...

ஜானகி ஆன்டியும் சுசிலா ம்மாவும் இப்படி சிரிச்சுகிட்டு சந்தோசமா இருக்காங்கனா அது உன்னாலதான்....

இப்படி உன்னை சுத்தி இருக்கிற எல்லாரையும் சிரிக்க வச்சுகிட்டே இருக்க... இதே மாதிரி எப்பவும் நீயும் சிரிச்சுகிட்டே இருக்கணும்... “ என்று நெகிழ்ந்தவன் அவள் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தான் ஒரு அண்ணனாக..

அவனின் நெகிழ்ச்சியும் பாசமும் கண்டு பாரதிக்குமே அதே பீல்தான்...

இதுவரை அவளுக்கு அண்ணன் என்ற ஒரு உறவு மட்டும் இல்லை... நிகிலன் ஐ கூட ஆரம்பத்தில் அண்ணனாக எண்ணினாலும் அவனை மாம்ஸ் என்று வம்பிழுத்து ஓட்ட அரம்பித்ததில் இருந்து அவனை அண்ணனாக எண்ண முடியவில்லை...

அவள் தலை மீது கை வைத்து ஆசிர்வதித்த வசியின் அந்த வருடல் அவளுக்குள் ஒரு சிலிர்ப்பை உண்டாக்க

“ரொம்ப தேங்க்ஷ் ணா... உங்க நல்ல மனசுக்கும் நீங்களும் உங்க பொண்டாட்டி புள்ளைங்களோட சந்தோசமா இருப்பீங்க... “ என்று கன்னம் குழிய சிரித்தாள் பாரதி...

அப்பொழுது சோமு மலரை அழைத்து கொண்டு அவர்கள் அருகில் வந்தவர்

“மாப்பிள்ளை ... சிவா சைட் சொந்தக்காரங்க எல்லாம் நாளன்னைக்கு கல்யாணம் என்று எல்லாரையும் அழைத்து இருப்பதால் அன்றே அட்லீஸ்ட் வரவேற்பு வச்சிக்கலாம்னு சொல்றாங்க...

திருமணத்துக்கு என்று அழைத்திருந்தவர்களுக்கும் மாற்றி சொல்ல தேவை இல்லை... நீங்க என்ன சொல்றீங்க?? “ என்றார் தயக்கத்துடன்...

அதை கேட்டவன் உடனே மறுத்து

“இல்ல அங்கிள்.. மாமா நல்லா குணம் ஆகி வரட்டும்.. அதற்கு பிறகே எல்லாரையும் அழைத்து கிராண்ட் ஆ ரிசப்சன் வச்சுக்கலாம்.. இப்ப மாமா உடல் நிலை சரியில்லாததால் கல்யாணம் முன்னாடியே நடந்திருச்சு னு எல்லாருக்கும் தகவல் சொல்லிடுங்க.. “ என்றான் வசீகரன்....

அதை கேட்டு மலர் இன்னும் குழம்பினாள்..

ஒரு வேளை இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லாமல் தான் ரிசப்சன் வைக்க வேண்டாம் கிறானா ?? என்றவாறு யோசித்தாள்...

சோமுவும் வசி சொன்னதை ஒத்து கொண்டு நகர்ந்து சென்றார்....

பின் அனைவரும் விடை பெற்று கிளம்பி செல்ல, மீதி இருந்தவர்கள் எல்லாம் அங்கு வந்தனர்..... அப்பொழுது அந்த பாட்டி கனகம் அங்கு இருந்த மீனாட்சியையும் ஜோதியையும் பார்த்து

“மணக்கோலத்தில் மாப்பிள்ளையும் பொண்ணும் மாப்பிள்ளை வீட்டுக்கு போய்ட்டு விளக்கேத்தி வச்சிட்டு வரட்டும்.. இன்னைக்கு நல்ல முகூர்த்த நாள்.. அதனால் இன்னைக்கே கூட்டிட்டு போய்ட்டு வந்திடலாம்...அதான் சிவா இப்ப நல்லா இருக்கானே.... “என்றார்...

அதை கேட்டு அனைவரும் யோசிக்க,

சிவசங்கர் இப்பொழுது ஓய்வு எடுத்து கொண்டிருப்பதால் அதற்குள் மாப்பிள்ளை வீட்டிற்கு போய்ட்டு வந்திடலாம்.. என்று அனைவரையும் சம்மதிக்க வைத்தார்....

மணமக்கள் ஒரு காரிலும் மீனாட்சி, சுந்தர், ஜோதி, வசுந்தரா என மற்றவர்கள் மற்றொரு காரிலும் செல்வதாக இருந்தது....பாரதி வசியின் அருகில் வந்தவள்

“அண்ணா... இதுதான் நல்ல சந்தர்ப்பம்... உங்க லவ்வை இப்பவே சொல்லிடுஙக... நாம மட்டும் தான் கார்ல இருக்க போறோம்.. மலரும் இப்ப சரியாகிட்டா... அதனால் உங்க லவ்வை சொல்லிடுங்க...

எனக்கும் ஒரு லைவ் ரொமான்ஸ் சீன் பார்த்த மாதிரி இருக்கும்.... “ என்று கண் சிமிட்டி சிரிக்க, அவளை செல்லமாக முறைத்தான் வசி...

மலர் பின் இருக்கையில் சன்னல் ஓரம் அமர்ந்து கொள்ள, வசி அவளை ஒட்டி அமர்ந்து கொண்டான்..

கார் கிளம்பும் நேரத்தில் அந்த பாட்டி மற்ற காரில் இடம் இல்லை என்று இந்த காருக்கு வந்து பின் இருக்கையில் வசியின் அருகில் அமர்ந்து கொண்டார்...

நிகிலன் காரை ஓட்ட பாரதி அவன் அருகில் முன்னால் அமர்ந்து நிகிலனை வம்பிழுத்து கொண்டே வந்தாள்...

எப்பொழுதும் வசியிடம் வம்பிழுத்து பேசும் மலரோ ரொம்ப அமைதியாக வேடிக்கை பார்த்து வந்தாள்.... இல்லை வேடிக்கை பார்ப்பதாக காட்டி கொண்டாள்....

ஏனோ டாக்டர், அவள் கணவன் அந்த வசீகரன் காரில் அவள் அருகில் அமர்ந்த நொடியில் இருந்து அவள் உள்ளே படபடப்பாக இருந்தது...

இதுவரை அவனை என்னவெல்லாம் சொல்லி சீண்டி இருக்கிறாள்...

அப்பொழுதெல்லாம் எந்த தயக்கமும் இல்லாமல் அவனிடம் வாயடித்தவள் இன்று அவனே தன் கணவனாக அவள் அருகில் அமரவும் உள்ளுக்குள் பட்டாம் பூச்சிகள் பறக்க, புது வெள்ளம் பாய்ந்தோடுவதை போல இருந்தது...

அவனின் அருகாமை அவளுக்குள் குறுகுறுப்பை மூட்ட மெல்ல நகர்ந்து சன்னலை ஒட்டி அமர்ந்து கொண்டாள் அவன் மீது மோதாமல் இருக்க....

கார் கிளம்பி சென்றதும் சிறிது நேரத்தில் ஒரு குழியில் விட்டு கார் குலுங்க வசியும் மலரும் தோளோடு தோள் உரசிக் கொள்ள, அந்த மெய் தீண்டலில் இருவருக்குள்ளும் சிலிர்த்தது...

கார் குலுங்கியதை சாக்காக வைத்து கொண்டு வசி அவளை ஒட்டி இன்னும் நெருங்கி அமர்ந்து கொண்டான்...

இப்படி தன்னவள் தன் அருகில் நெருங்கி அமர்ந்து இருப்பாள் என்றே கனவிலும் நினைத்திராதவன் மகிழ்ச்சியில் மிதந்தான்...

அவள் கழுத்தில் தாலி அணிவித்து அவளை மனைவியாக்கி கொண்ட பிறகு அவள் அப்பாவுக்காக த்தான் அவளிடம் பேசியது...

அவர் சரியான பிறகு அவளிடம் தனியாக பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.... சரி... இப்பவாது ஏதாவது பேசலாம் என்று ஆரம்பிக்க சரியாக அந்த நேரம் அந்த பாட்டி அவனை பிடித்து கொண்டார்....

ஏதேதோ அவனிடம் பேசி கொண்டே வந்தார்....

வசியோ அவருக்கு பதில் சொல்லியபடியே மலரை ஓரக் கண்ணால் ஏக்கமாக பார்த்த படியே வந்தான்...

அவரும் விடாமல் தொண தொணக்க ஒரு கட்டத்தில் எரிச்சலின் உச்சத்திற்கே சென்றான்...

பாரதி அதை கண்டு கொண்டவள் பின்னால் திரும்பி குறும்பாக கண் சிமிட்ட, அவனோ வெக்க பட்டு சிரித்து பின் செல்லமாக அவளை முறைத்தான்...

கார் வீட்டை அடைந்ததும் மணமக்கள் வீட்டினுள் நுழைந்தனர்...

இனிமேல் அவள் தனக்கில்லை... அவளை பார்க்கவே முடியாது என்று வேதனை பட்டவனுக்கு இன்று அவளே தன் மனைவியாக இந்த வீட்டு மருமகளாக காலடி எடுத்து வைத்து வந்ததை நினைத்து துள்ளி குதித்தான்...

எல்லா பார்மாலிட்டிஸ் ம் முடிந்து தன் அறைக்கு சென்றவன் தன் மகிழ்ச்சியை கொண்டாட குத்தாட்டம் போட்டு பின் கட்டிலில் விழுந்தவனுக்கு இன்னுமே நம்ப முடியவில்லை அவன் ஜில்லு இப்பொழுது அவன் மனைவியாகி விட்டாள்... இனி தன்னோடு தன் அருகிலயே இருக்க போகிறாள் என்று....

இதுக்கு காரணமான அந்த ஈசனுக்கு மீண்டும் மனதார நன்றி சொன்னான்...

“தேங்க் யூ சோ மச் ஈஸ்வரா.... என் வலி வேதனையை புரிந்து கொண்டு, என் மனதை புரிந்து கொண்டு எனக்கான வரத்தை கொடுத்து விட்டாயே...!!! இவள் எனக்கு நான் தவமின்றி கிடைத்த வரமாகும்... இந்த வரத்தை என்றும் நான் தவற விட மாட்டேன்... “ என்று கண் மூடி வேண்டி சிரித்து கொண்டான்....

அவன் வாங்கியது வரமா?? இல்லை சாபமா?? என்று வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்....

ஒரு வழியாக நம் பயணத்தின் முதல் பாகம் நிறைவு பெற்றது... நம் மெக்கானிக் மற்றும் ஜில்லுவின் திருமண வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்று இடைவேளைக்கு பிறகு பார்க்கலாம்....

மெக்கானிக் மற்றும் ஜில்லு உடன் இன்னொரு புது காதல் ஜோடி இரண்டாம் பாகத்தில் நம்மை சந்திக்க இருக்கிறார்கள்...அது யாரென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...



************ இடைவேளை**********

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!