என் மடியில் பூத்த மலரே-21



அத்தியாயம்-21 

சுசிலா எழுதி தந்த மருந்துகளை வாங்கிக்கொண்டு திரும்பி வந்த ஆதி, பாரதி அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தான்....

“ஒரு வேளை நான் பண்ணின டார்ச்சர்ல இனிமேல் தாங்க முடியாது என்று எஸ்கேப் ஆகிட்டாளா ??? அப்ப என் குழந்தை?? “

“சே!! அப்படி எல்லாம் இருக்காது.. அப்படி போறவளா இருந்தா ஸ்கேன் பண்றப்ப குழந்தை எப்படி இருக்கும்னு அப்படி ஏன் பயந்தாள்.. “ என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டான்... ஒரு சில விநாடிகள் அவன் எண்ணங்கள் எங்கெங்கோ சென்று வந்தது..

அவன் முழித்துக்கொண்டு நாலாபக்கம் தேடியபின் மீண்டும் யோசித்துக்கொண்டு நிற்பதைக் கண்ட ஒரு நர்ஸ் அவன் அருகில் வந்து

“சார்.. உங்க வைஃப் பை தேடறீங்களா?? “ என்றாள்

“வைஃப் ஆ ?? “ என்று முழித்தவன் அவள் பாரதியைத்தான் சொல்றாங்கனு நினைத்து ஆமாம் என்று தலையாட்டினான்..

“ஓ.. உங்க வொய்ப் அந்த பேசன்ட் ரூம்ல இருக்காங்க.. யுவர் வைஃப் இஸ் சோ ஸ்வீட்.. அந்த பையன் கிட்ட மாத்திரை சாப்பிட வைக்க மதியத்தில் இருந்து போராடறேன் நான்.. வாயில்ல போட்ட எப்படியாவது துப்பிடறான்.. ஊசியும் போட்டுக்க மாட்டேங்கறான்..

அவன் போட்ட சத்தத்தை கேட்டு உங்க வைஃப் அங்க வந்தாங்க.. வந்ததும் அவன் கிட்ட பேசியே ஈஷியா அந்த மாத்திரையை சாப்பிட வச்சுட்டாங்க.. சி இஸ் ரியலி கிரேட் சார்.. அங்க இருக்காங்க.. போய் பாருங்க” என்று புன்னகைத்து ஒரு அறையை காட்டி நகர்ந்தாள்..

“அப்பாடா.. “என்று அவனுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது..

“இந்த கேடி... ஒரு நிமிடத்துல என்னையே பயமுறுத்திட்டாளே “என்று திட்டியவாறு அந்த நர்ஸ் காட்டிய அறைக்கு சென்று எட்டிப்பார்த்தான்..

பாரதி ஒரு ஏழு வயது சிறுவனிடம் அழகாக கொஞ்சி கொண்டிருந்தாள்... அவள் சிரிக்கும் பொழுது எவ்வளவு அழகாக இருக்கு என்று அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.. அதற்குள் அந்த சிறுவன் இவனை பார்த்துவிட்டான்.. பின் அவனை சுட்டிக்காட்டி

“அக்கா... இவர் தான் மாமாவா... சூப்பரா இருக்கார் கா .. ஹீரோ மாதிரி.. உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கார் “ என்று சிரித்தான்..

பாரதியும் திரும்பி அவனை பார்த்தாள்.. அந்த பையன் சொன்ன உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கார் என்பதில் கன்னங்கள் சிவந்தன அவளுக்கு.. அதற்குள் சுதாரித்துக் கொண்டவள்

“ஐயோ!!. இந்த சிடுமூஞ்சி என்ன திட்ட போவுதோ.. இவன் வேற மாமானு சொல்லிட்டானே!! “ என்று மனதிற்குள் புலம்பியவாறு மெல்ல ஆதியை பார்த்தாள்..

அவனோ கேசுவலாக சிரித்துக்கொண்டு அந்த சிறுவன் அருகில் வந்தான்..

“Thanks for your compliment mr…. “ என்று அவன் பெயர் தெரியாததால் நிறுத்தினான்..

“My name is Siva.. Siva Balan “ என்று சிரித்தான் அந்த சிறுவன்..

“நைஸ் நேம்”

“தேங்க்ஷ் மாமா “என்றான் உரிமையாக...

“மாமா... பாரதி அக்கா இஸ் சோ ஸ்வீட்... அந்த சிஸ்டர் ரொம்ப மோசம்.. அவங்களுக்கு எப்படி மாத்திரை கொடுக்கறதுன்னே தெரியல...தினமும் அக்காவை இங்க கூட்டிட்டு வர்ரீங்களா??? “ என்றான் ஏக்கத்துடன்...

அதைக்கேட்ட பாரதிக்கு எங்க வர்ரோம்னு சொல்லி பொய்யான நம்பிக்கையை கொடுத்துடுவானோ என்று இருந்தது... அதற்குள்

“ஹ்ம்ம்ம் தினமும் வர்ரதுன்னா கஷ்டம் சிவா... ஆனால் இவங்க இங்க வர்ரப்போ உன்னை வந்து பார்ப்பாங்க சரியா.. “ என்றான் ஆதி சிரித்தவாறு..

அதை கேட்டதும் சிவாவின் முகம் வாடியது.. அதைக் கண்ட பாரதிக்கே கஷ்டமாக இருந்தது..ஆதியும் அதை உணர்ந்து

“But Siva.. I have an Idea.. இந்த அக்கா தினமும் போன் பண்ணி உன்கிட்ட பேசுவாங்களாம்... அவங்க எப்படி மாத்திரை சாப்பிடறதுனு சொல்லுவாங்களாம்.. நீயும் அதே மாதிரி சமத்தா சாப்பிடுவியாம்...

உனக்கு எப்ப எல்லாம் இந்த அக்காவை பார்க்கணுமுன்னு தோணினாலும் அவங்களுக்கு போன் பண்ணு.. இந்த அக்காவும் வெட்டியாதான் இருக்காங்க... உன்கிட்ட பேசுவாங்க “ என்று சிரித்தான்..

அதை கேட்டதும் சிவாவின் முகம் மலர்ந்தது..

“ஹ்ம்ம் குட் ஐடியா மாமா .. தேங்க்ஷ் “என்று சிரித்தான்...

அவன் சொன்ன வெட்டியாதான் இருக்கா வில் அவனை திரும்பி முறைத்தாலும் மனதுக்குள்

“பரவாயில்லையே... இந்த சிடுமூஞ்சிக்கு கூட ஏதொ யோசிக்க தெரிஞ்சிருக்கு... இந்த பிரச்சனையை ஈஷியா தீர்த்து வச்சூட்டானே” என்று பாராட்டினாள்...

சிவாவின் நன்றியை ஏற்றுக்கொண்டவன்

“ஓகே.. சிவா... நாங்க கிளம்பறோம்.. நீ சமத்தா இருக்கனும்.. அப்பதான் சீக்கிரம் குணம் ஆகி வீட்டுக்கு போக முடியும்... இந்த அக்கா நாளைக்கு போன் பண்ணுவாங்க.. டேக் கேர்.. பை..” என்று விடைபெற்றான்...

பாரதியும் அவனிடம் பை சொல்லி விட்டு மறக்காமல் அவனுடை அம்மாவின் மொபைல் நம்பரை குறித்துக்கொண்டாள்.. பின் இருவரும் காரில் ஏறவும் அவன் காரை ஓட்டினான்...

கொஞ்ச நேரம் சென்றதும் ஏதோ நினைவு வந்தவளாக

“தேங்க்ஷ்... “என்றாள் அவனை பார்த்து..

“எதுக்கு?? “என்று தன் புருவத்தை உயர்த்தினான்..

“அந்த சிவாவுக்கு ஹெல்ப் பண்ணினதுக்கு... “ என்றாள்...

“ஹ்ம்ம்ம் இட்ஸ் ஓகே... ஸ்வீட் பாய்... “என்று சிரித்துக்கொண்டான்...

பின் இருவரும் அமைதியாக அந்த நாளை அசை போட்டனர்..

ஆதியின் மனமோ தன் குழந்தையை சிரிய உருவமாக, அது சுற்றிக்கொண்டெ இருந்ததை நினைத்து பரவசமடைந்தான்...

பாரதிக்கோ சுசிலா எழுந்து வந்து ஆதியை கட்டி கொண்டது திரும்ப திரும்ப நினைவு வந்தது... இவனுமே உருகித்தான் நின்றான் அந்த தாயின் அணைப்பில் அப்பொழுது.....

இந்த சிடு மூஞ்சி கொஞ்சம் சிரிச்சதுக்கே அவர் அப்படி சந்தோஷப்படறாரே.. இவன் எப்பவும் சிரித்துக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்?? .. அதுவும் ஜானகி அத்தை துள்ளிக்குதிப்பாராக்கும்.. எப்படியாவது இவனை சிரிக்க வைக்கனும்ம்ம் என்ன பண்ணலாம் “ என்று யோசித்தாள்...

பின்

“நம்ம கோல்டன் பீச்சில் இருப்பவரை கூட சிரிக்க வச்சுடலாம் போல.. இந்த சிடுமூஞ்சியை சிரிக்க வைக்க... சரியான சிடுமூஞ்சி “என்று திட்டிக்கொண்டே ஓரக்கண்ணால் அவனை பார்த்தாள்..

ஜீன்ஸ் பேன்ட் மற்றும் டீ சர்ட்ல் இன்னும் கம்பீரமாக தெரிந்தான்... லேசாக திறந்திருந்த சன்னலில் இருந்து வந்த காற்று அவன் தலை முடியை கோத அழகாக அது பறந்து கொண்டிருந்தது... பறந்த நெற்றியும், சிரிக்கும் கண்களும், நீண்ட கூர் நாசியும் என ஒவ்வொன்றாக அவனை ரசித்து வந்தவள் ஏதோ நினைவு வர அவன் இதழ்களை நாடியது அவளின் பார்வை ஆவலாக...

அதற்குள் அவளின் அந்த ஓரப்பார்வையை கண்டு கொண்டவன் அவளிடம் நேராக திரும்பி

“ஏய்.. பட்டிக்காடு... நீ ஒன்னும் சைடுல ரகசியமா பார்த்து என்ன சைட் அடிச்சு கஷ்ட பட வேண்டாம்.. நேர்லயே நல்லா பார்த்துக்கோ ... “என்று சிரித்தான் குறும்பாக...

அவன் தன்னை கண்டு கொண்டதில் கன்னம் சிவக்க, அவசரமாக தன் பார்வையை மாற்றிக்கொண்டு

“ஆமா... சைட் அடிக்கிறதுக்கான மூஞ்சியை பார் “ என்று தன் முகத்தை நொடித்தாள் தன்னை வெளிக் காட்டிக்கொள்ளாமல்..

“ஹா ஹா ஹா ஏன் எனக்கென்ன... ?? ஹேன்ட்ஸமா இல்ல?? “ என்று கண்ணடித்தான் சிரித்தவாறு..

“ஸ்ஸ் அப்பா... க்ரேட் ஜோக்.. சரியான சிடுமூஞ்சி “ என்றாள் பொய்யாக

“என்னது சிடுமூஞ்சியா?? “என்று முறைத்தான்..

“ஆமா.. இன்னைக்கு போய் கண்ணாடியை மறக்காமல் பாருங்க.. அப்படியே எங்க ஊர் அய்யனார் முறைச்சு கிட்டு நிற்கிர மாதிரியே இருக்கும்” என்று நக்கலடித்தவள் மருபுறம் திரும்பி கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் ஜன்னல் வழியாக...

அவனும் மனதுக்குள் சிரித்துக்கொண்டே காரில் இருந்த ப்ளேயரில் இளையராஜா பாடல்களை ஒலிக்க விட்டான்...

அவனுக்கு ராஜாவின் பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும்... மனம் கஷ்டப்படும் நேரத்திலும், இல்லை மனம் ஏதாவது பாரமாக இருக்கும் நேரங்களில் அவர் பாடல்களை ஒலிக்க வைத்து ரசிப்பான்..

இன்றும் அதே மாதிரி ஓடிகொண்டிருந்த பாடல்களை ரசித்தான்..அதில் வந்த

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ

---

---



என்ற பாடலுக்கு அவன் கை விரல்கள் தானாக ஸ்டியரிங் ல் தாளம் போட மனமோ மிகவும் லேசானது.. தினமும் கேட்கும் பாடல்கள் தான் என்றாலும் இன்று என்னவோ புதுவித சுகமாக இருந்தது அவனுக்கு...

அந்த இரவு நேரத்தில் சாலையின் இருபுறமும் இருந்த மஞ்சள் விளக்குகளில் இருந்து கசிந்த அந்த மங்கிய மெல்லிய வெளிச்சமும், பாரதியின் தலையில் வைத்திருந்த அந்த கொஞ்சமேயான மல்லிகையின் வாசம் கார் முழுவதும் பரவி இருக்க , ராஜாவின் மெல்லிய இசையும் சேர்ந்து அந்த சூழலை மிகவும் ரம்மியமாக ஆக்கி இருந்தது அவனுக்கு..

மனதில் ஒரு வித மயக்கத்துடன் மெல்ல திரும்பி அவளை பார்த்தான்.. பாரதியும் இருக்கையின் பின்னால் நன்றாக சாய்ந்து கொண்டு கண் மூடி அந்த பாடல்களை ரசித்துக் கொண்டிருந்தாள்...

அடுத்து வந்த பாடலை கேட்கும்பொழுது அவன் கண்கள் தானாக மீண்டும் அவளிடம் சென்றது...

ராமனின் மோகனம்...
ஜானகி மந்திரம்..
ராமாயணம் பாராயணம்
காதல் மங்களம்….
தெய்வீகமே உறவு….



அவளும் ஓரக்கண்ணால் அவனைக் காண்பதைக் கண்டு உள்ளுக்குள் சிலிர்த்தது அவனுக்கு....

எப்பொழுதும் இல்லாமல் இன்று என்னவோ இந்த பயணம் இப்படியே தொடராதா... இவள் அருகிலயே எப்பொழுதும் இருக்க வேண்டும் போல இருந்தது அவனுக்கு...

தன் எண்ணம் போகும் போக்கை நினைத்து திடுக்கிட்டான் ஆதி..

“என்னாச்சு எனக்கு??.. நான் ஏன் இப்படி மாறினேன்.. பார்த்து ஒரு நாள் கூட ஆகலை.. அதுக்குதுக்குள்ள இவளிடம் நான் மயங்குகிறேனா??? இதேதான் ஆனது அந்த ஷ்வேதாவை பார்த்தபொழுதும்...

ம்ஹூம்.. இது சரியில்லை... இவள் ஏதோ என்னை மயக்க திட்ட மிட்டே ஏதோ செய்கிறாள்..வேணாம் ஆதி.. இந்த பொண்ணுங்க வாசமே உனக்கு வேண்டாம்...உன் வாழ்வில் இனிமேல் எந்த பொண்ணுக்கும் இடம் இல்லை... உனக்கு அந்த குட்டி பிரின்ஸஸ் மட்டும் போதும்.. வேற யாரும் வேண்டாம் “என்று அவசரமாக தன்னை திட்டிக்கொண்டு தன் எண்ணத்திற்கு கடிவாளம் இட்டான்...

பின் கார் அவர்கள் கெஸ்ட் ஹவுஸை அடையவும் செக்யூரிட்டி கேட்டை திறந்து விட உள்ளே சென்று காரை நிறுத்தியவன் திரும்பி பாரதியை பார்த்தான்..அவள் இன்னும் கண் மூடியே இருந்தாள்..

“ஏய் பாட்டிக்காடு.. வீடு வந்திருச்சு.. எழுந்திரு” என்றான் மெல்ல

ம்ஹும்.. அவளிடம் அசைவில்லை..

“அடிப்பாவி.. பாட்டை கேட்டு ரசிச்சுகிட்டு வர்ரானு பார்த்தா இப்படி தூங்கிட்டு வர்ராளே.. சுத்தம்.. “ என்றவன் அவளை எழுப்ப மனமில்லாமல் கீழ இறங்கி அந்த பக்கம் வந்து கார் கதவை திறந்து அப்படியே அவளை அள்ளிக்கொண்டான்...

அவளின் மெல்லிய உடல் ஒரு பூங்கொத்தை போல அவ்வளவு மென்மையாக இருந்தது...

“ஹ்ம்ம்ம் வாய் தான் நீளம்.. சாப்பிடறதே இல்லை போல.. இவ்வளவு வீக்கா இருக்காளே..” என்று புலம்பியவாறு அவளை அவள் அறைக்கு கொண்டு வந்து கட்டிலில் கிடத்தினான்...

முதலில் ஏதோ ஸ்பரிஷத்தை உணர்ந்தாலும் அந்த கைகளின் வெதுவெதுப்பால் தன் முகத்தை சுளித்து மீண்டும் நன்றாக தூங்கினாள்.. அவளின் அந்த முகச் சுழிப்பை கண்டவனுக்கு போதை ஏறியது... அதோடு அவள் தலையில் இருந்த மல்லியின் வாசம் இன்னும் அவனை கிறங்க வைத்தது..

அவளை கட்டிலில் கிடத்தும் பொழுது அவள் புடவை நன்றாக விலகி அவளின் எல்லா அங்கங்கங்களும் நன்றாக காட்சிக்கு வந்தாலும் அவன் பார்வை என்னவோ சென்று நின்றது அவன் பிரின்ஸஸ் குடி இருக்கும் அந்த வயிற்றின் மேலே மட்டுமே...

காலையில் இருந்து அவன் பார்க்கவேண்டும் என்று காத்துக்கிடந்த இடம்... அவளின் அந்த மாநிறமான வயிற்றையே ரசித்து பார்த்துக்கொண்டிருந்தான் சில விநாடிகள்... அவனின் பார்வையை உணர்ந்து உடனே அந்த குட்டி தேவதையும் அங்கு இருந்து அவனை பார்த்து சிரிப்பதை போல இருந்தது அவனுக்கு...

எவ்வளவு முயன்றும் தன்னை கட்டுபடுத்த முடியாமல் மெல்ல குனிந்து அவளின் வயிற்றுக்கு மென்மையாக முத்தமிட்டான் அவள் முழிக்காதவாறு..

“மை ஸ்வீட் பிரின்ஸஸ்... டாட் இஸ் வெய்ட்டிங் பார் யூ.... யூ க்ரோ பாஸ்ட்.. “ என்று முனகி மெல்ல சிரித்துக்கொண்டான்...

பின் எதேச்சையாக நிமிர்ந்தவன் அவள் படுக்கைக்கு எதிராக பார்த்தான்.. அங்கும் அவனே சிரித்துக்கொண்டிருந்தான் குறும்பு புன்னகையுடன்... பின் சுற்றிலும் அறையை பார்த்தான்..

அறை மிகவும் நேர்த்தியாக எந்த பொருளும் வெளியில் சிதறி கிடக்காமல் வைத்திருந்தாள்.. மேலே பார்த்தவன் அறை முழுவதும் அழகழகான குழந்தைகள் சிரித்து கொண்டிருக்கவும்..

“ஹ்ம்ம்ம் இதெல்லாம் இந்த அம்மா வேலையாதான் இருக்கும்” என்று சிரித்துக்கொண்டெ புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருந்த பழைய ஆதியை மீண்டும் நோக்கினான்.. அதே நேரம் அருகில் இருந்த இப்போதைய முகத்தையும் கண்ணாடியில் பார்த்தான்..

அப்பொழுது பாரதி சொன்ன சிடுமூஞ்சி ஞாபகம் வந்தது..

அவனுக்கே தெரிந்தது பழைய ஆதிக்கும் இப்பவும் எத்தனை மாற்றம் என்று.. எந்த கவலையும் இல்லாமல் சுற்றி திரிந்த அந்த காலம் நினைவு வர பெருமூச்சு ஒன்றை விட்டு அவள் மேல் போர்வையை இழுத்து மூடிவிட்டு மீண்டும் ஒரு தரம் அவள் வயிற்றில் முத்தமிட்டு அறை கதவை மூடிவிட்டு வெளியில் வந்தான்..

அப்பொழுதுதான் அவர்கள் எதுவும் சாப்பிடாதது நினைவு வந்தது ...

“சே! இவள் பாட்டுக்கு எதுவும் சாப்பிடாமல் தூங்கிட்டாளே.” என்று நினைத்தவன் காருக்கு சென்று அங்கு இருந்த ப்ரெட் மற்றும் சில பொருட்களையும் மருந்துகளையும் எடுத்துகொண்டு வந்தான்.. பின் கிச்சனுக்கு சென்று ப்ரெட்டை டோஸ்ட் பண்ணி ஒரு முட்டை ஊற்றி ப்ரெட் ஆம்லெட் ரெடி பண்ணினான்..

அமெரிக்காவில் இருக்கும் பொழுது இந்த மாதிரி சின்ன சின்ன உணவு வகைகள் அவனே தயாரித்து கொண்டதால் அது இப்பொழுது கை கொடுத்தது...

அந்த ப்ரெட் ஆம்லெட்டை சாப்பிட்டவன் அவளுக்கும் செய்து ஹாட் பாக்சில் வைத்தான்.. மீண்டும் பாலை காய்ச்சி அவளுக்கு ஒரு டம்ளர் ப்ளாஸ்க்கில் ஊற்றி பின் இரண்டையும் கொண்டு அவள் அறையில் வைத்தான். அவள் எழுந்த உடன் சாப்பிடட்டும் என்று.. பின் தானும் ஒரு கிளாஸ் பாலை குடித்து விட்டு படுக்க சென்றான்..

அதே நேரம் ஜானகி அவனை அழைத்து இருந்தார்... அதை கண்டதும் சிரித்தவாறே..

“ஹ்ம்ம் சொல்லுங்க மா.. சாப்பிட்டீங்களா” என்றான் அக்கறையாக...

“ஹ்ம்ம்ம் சாப்பிட்டேன் கண்ணா.. ஹாஸ்பிட்டல் போனீங்களா?? ஸ்கேன் பண்ணீங்களா?? .. எதுவும் பிரச்சனை இல்லையே??.. பாரதி ஏன் போன எடுக்க மாட்டேங்குறா?? “என்று தன் கேள்விகளை அடுக்கினார்....

“கூல் மா... ஒவ்வொன்னா கேளூங்க.. “என்று சிரித்துக்கொண்டே

“ஹாஸ்பிட்டல் போனோம்... ஸ்கேன் பண்ணியாச்சு.. ஒரு பிரச்சனையும் இல்லையாம்.. உங்க பேத்தி நல்லா இருக்காளாம்..

“ம்மா... உங்க பேத்தி படு சுட்டியா இருக்கா.. ஒரு இடத்தில நிக்காம ஓடிக்கிட்டேஇருந்தா மா .. சுசிலாம்மாவால அவளை பாய்ன்ட் அவுட் பண்ணவே முடியலை ஸ்கேன் பண்ண.. “ என்று சிரித்தான்

அதை கேட்டதும் ஜானகியின் உள்ளம் குளிர்ந்து போனது.. தன் மகனை இவ்வளவு சிரிச்சு பார்த்து எவ்வளவு நாள் ஆனது...

“ஹ்ம்ம்ம் ரொம்ப சந்தோஷம் கண்ணா... நீயும் சின்ன வயசுல அப்படி தான் இருப்ப... ஒரு இடத்துல நிக்க மாட்ட.. எங்கயாவது ஓடிக்கிட்டே தான் இருப்ப. அப்ப உன் வாரிசு மட்டும் அடங்கியா இருக்கும் .. “ என்று சிரித்தார்.. பின் ஏதோ நினைவு வந்தவராக

“அது என்ன கண்ணா பேத்தினு சொல்ற.. ஏன் பேரனா இருந்தால்... “என்றார் சிரித்தவாறு ...

“ம்ஹூம்.. இல்ல மா..எனக்கு உங்களை மாதிரியும் சுசிலாம்மா மாதிரியும் ஒரு குட்டி தேவதை தான் பிறப்பா... மை பிரின்ஸஸ் அவ...அது என்னவோ நான் அப்பா ஆகப்போறேனு நீங்க சொன்னப்ப ஒரு குட்டி தேவதை தான் என் கண்ணுக்கு தெரிஞ்சா...

அதோடு பொண்ணுங்கதான் அப்பா மாதிரி இருக்குமாம்.. அப்பா மேல பாசமா இருக்குமாம்... அதனால் எனக்கு என்னை மாதிரி இருக்கிற குட்டி தேவதை தான் பிறப்பா பாருங்க “ என்றான் பெருமையாக...

“ஹா ஹா ஹா.. பார்க்கலாம்... எனக்கு எதுனாலும் சரிதான்... எப்படா என் பேத்தியை கையில தூக்குவோம்னு இருக்கு “என்றார் உணர்ச்சி பொங்க....

“ஹ்ம்ம்ம் எனக்கும் அதே தான் மா... இன்னும் 7 மாசம் வெய்ட் பண்ணனுமானு இருக்கு... “என்றான் பெருமூச்சு விட்டு

“ஹ்ம்ம்ம் சரி கண்ணா.. பாரதி எங்க.. ஏதாவது சாப்பிட்டாளா...”

“ஹ்ம்ம் அந்த தூங்கு மூஞ்சி கார்ல வரையிலயே தூங்கிட்டாமா... அதான் உங்க போனை எடுக்கலையா இருக்கும்... நான் சாப்பிட ப்ரெட் ஆம்லெட் செஞ்சு வச்சிருக்கேன்.. எழுந்தா சாப்பிட்டுக்கு வா... நீங்க தூங்குங்க.. காலைல பேசலாம்.. குட் நைட் “என்று போனை வைத்தவன் மெத்தையில் படுத்து தன் குட்டி தேவதையுடன் கொஞ்சிவிட்டு உறங்கினான்...

அன்றும் அவனுக்கு நிம்மதியான உறக்கம் வந்தது....

மறுநாள் கண் விழித்த பாரதி முதலில் ஒன்றும் புரியாமல் முழித்தாள். நேற்று இரவு காரில் வந்தது நினைவு வந்தது.. அந்த பாடலைக்கேட்டு கண் மூடி ரசித்தது நினைவு வந்தது......

“அப்ப கார் லயே தூங்கிட்டேனோ??...சே!! அந்த சிடுமூஞ்சி என்ன நினைச்சிருக்கும்?? .... அதோடு நான் எப்படி இங்க வந்திருப்பேன்?? .. ஒரு வேளை அவன் எதுவும் தூக்கிக் கொண்டு வந்திருப்பானோ?? “ என்று நினைக்கையில் அவள் உடல் சிலிர்த்தது...

பின் வழக்கம் போல எதிரில் இருந்தவனை பார்த்து புன்னகைத்து எழுந்து குளியலறைக்கு சென்று குளித்து விட்டு வந்தாள்...பின் நேற்று காபி தரவில்லை என்று அவன் திட்டியது நினைவு வந்தது...உடனே கீழ போக நினைத்தவள் அதற்குள் தன் காதலன் வந்து எட்டி பார்க்கவும்,

“அவனுக்கு காபி வேணும்னா அவனே போட்டுக்கட்டும்.. நான் என்ன அவன் பொண்டாட்டியா... நான் லேட்டாதான் கீழ போவேன்.. “ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள் பின் ஜன்னலின் அருகே சென்று நேற்று நடந்த கதை அனைத்தையும் அந்த ஆதவனிடம் சொல்லி முடித்தாள்...

பின் வழக்கம் போல அவனை கொஞ்சி விட்டு திரும்பியவள் அப்பொழுது தான் கண்ணில் பட்டது அந்த ஹாட்பாக்ஷ்ம் ப்ளாஸ்க் ம்... அதை திறந்து பார்த்தாள்.. உள்ளே அவன் செய்து வைத்த ப்ரெட் ஆம்லெட்ம் பாலும் அப்படியே இருந்தது..

“ஓ.. நேற்று இரவு சாப்பிடாமல் இருந்ததால் அவனே ரெடி பண்ணி கொண்டு வந்து வச்சிருக்கான் போல “ என்று நினைக்கையில் தன் தந்தையின் ஞாபகம் வந்தது...

அவரும் அப்படித்தான்.. சில நேரம் பாரதி சாப்பிடுமுன் தூங்கி விட்டால், அவளை எழுப்பி தூககத்திலயே கொஞ்சம் ஊட்டி விடுவார்.. சில நேரம் அவள் தலைமாட்டில் எல்லாம் எடுத்து வைத்து மூடி வைத்திருப்பார்...

இரவு விழித்தால் பசிக்கும் பொழுது எடுத்து சாப்பிடட்டும் என்று... அவளும் அது மாதிரி நிறைய தடவை சாப்பிட்டிருக்காள் பாதி தூக்கத்தில் எழுந்து.... அது நினைவு வரவும் கண்ணை கரித்தது அவளுக்கு....

“பரவாயில்லையே... இந்த சிடுமூஞ்சிக்கும் கொஞ்சம் பாசம் இருக்கும் போல.. எனக்காக செஞ்சு வச்சிருக்கான் “ என்று நினைத்துக்கொண்டாள்..

பின் அந்த சிவாவின் நினைவு வரவும்அவனுக்கு போன் பண்ணி கொஞ்சநேரம் அவனிடம் பேசிவிட்டு மெதுவாக கீழ சென்றாள்...பின்

“எங்க காணோம் இவனை ?? என்று தேடினாள்... அவன் தோட்டத்தில் ஜாகிங் செய்து கொண்டிருந்தான்... கையில்லாத பனியன் அணிந்து ட்ராக் சூட்டுடன் அவன் ஓடிக்கொண்டிருந்தான்...

உடற்பயிற்சி செய்து திரண்டிருந்த அவன் புஜங்களும் அவனுடைய பரந்து விரிந்த மார்பும் அவளை காந்தமாக அவன் பக்கம் இழுக்க வச்ச கண் வாங்காமல் அவனையே ரசித்தாள் சில நிமிடங்கள் அவளை அறியாமல்...

பின் தன் தலையை தட்டிகொண்டு சமையல் அறைக்குள் சென்றாள். நேற்றை போலவே காபி கலந்து எடுத்து வந்தவள் மெல்ல பருகினாள் அந்த தோட்டத்தையும் தோட்டதில் ஓடிக்கொண்டிருக்கும் அவனையும் ரசித்தவாறு..

பின் ஆதி ஜாகிங் முடித்து வந்து அங்கு இருந்த ஷோபாவில் அமர்ந்து அன்றைய செய்திகளை படித்துக்கொண்டிருந்தான்... அவன் முன்னே சென்றவள் குட்மார்னிங் என சொல்லி அவன் கையில் ஒரு காபியை கொடுத்தாள்.. அவனும் அதை எடுத்து பருகினான்..

சிறிது நேரம் அங்கயே நின்று கொண்டு இருந்தவள் பின்

“தேங்க்ஷ் “ என்றாள். அவனை பார்த்து

“எதுக்கு??” என்றான் தலையை நிமிர்த்து அவளை கண்கள் இடுங்க பார்த்தவாறு

“ஹ்ம்ம்ம் எனக்கு சாப்பிட செஞ்சு வச்சதுக்கு.. இப்பதான் பார்த்தேன்..” என்றாள்

“ஏய்.. அப்ப நீ நைட் சாப்பிடலையா??? என் குழந்தை என்ன ஆகிறது.. சுசிலா ம்மா சொல்லி இருக்காங்க இல்ல நல்லா சாப்பிடனும் னு....அதுக்குத்தான் உனக்கு செஞ்சு கொண்டு வந்து வச்சிருந்தேன்... தூங்கு மூஞ்சி.. சாப்பாட்ட கூட மறந்து அப்படி என்ன தூக்கம்” என்று திட்டினான்...

“என் குழந்தை என்னை மாதிரி ஆரோக்கியமா இrருக்கனும்.. உன்னை மாதிரி நோஞ்சான இருக்க கூடாது.. என்னத்தை சாப்பிடற.. வெய்ட் ஏ இல்ல” என்றவன் பாதியில் நிறுத்திக்கொண்டான்..

எங்க அவள் எப்படி வந்தாள் என்று கேட்டு விடுவாளோ என்று..

ஆனால் பாரதியோ பின்னால் சொன்னதை கவனிக்காமல் அவன் முன்னால சொன்ன என் குழந்தைக்காகத்தான் பண்ணி வச்சேன் என்றதில் வாடிப்போனாள்..

“சே!! இவன் புள்ளைக்காகத்தான் செஞ்சு வச்சிருக்கான்.. நான் என்னவோ எனக்காக செஞ்சு வச்சிருக்கான் னு நினைச்சிட்டனே!! “ என்று வாடினாள்...

அவளின் முகம் வாடியதை கண்டவன் அதற்கு மேல் அவளை அதட்டாமல்

“சரி.. நீ உட்கார்.. நான் இன்னைக்கு ஏதாவது செய்யறேன். உன்னை விட்டா இன்னைக்கும் அதே உப்புமாதான் பண்ணுவ “ என்று எழுந்து சமையல் அறைக்குள் சென்றான்...

அதற்குள் தன்னை சமாளித்துக்கொண்டவள்

“ஹ்ம்ம் அது.. அந்த பயம் இருக்கட்டும்... இனிமேல் என்ன சமைக்க சொல்லுவ?? “ என்று சிரித்துக்கொண்டாள்... 




மையல் அறைக்குள் சென்றவன் தான் நேற்று வாங்கி வந்திருந்த ஓட்ஸ் பாக்கெட்டை எடுத்து ஓட்ஸ் கஞ்சியும் ஆம்லெட் ம் செய்து எடுத்து வந்தான்..

“ஹ்ம்ம் சாப்பிடு “என்றான் அவள் முன்னே வைத்து..

“நான் அப்புறம் சாப்பிடறேன்.. “என்று முனகினாள் பாரதி...

“ஏய்... நீ நைட் ஏ ஒன்னும் சாப்பிடாம படுத்துட்ட... இப்ப எதுக்கு லேட் பண்ற... என் பிரின்ஸஸ் பசியோட இருப்பா... ஒழுங்கா சாப்பிடு” என்று அதட்டினான்....

“ஸ்ஸ் அப்பா... இவன் அலப்பறை தாங்க முடியலை... விட்டா அவன் புள்ளைக்கு நேராக வயித்துக்குள்ள போயே ஊட்டி விட்டிடுவான் போல இருக்கு” என்று திட்டிக்கொண்டே அவன் கொண்டு வந்து வைத்ததை பார்த்தாள்.. அதை கண்டதும்

“ஐய இது என்ன கஞ்சி??.. “என்று முகத்தை சுழித்தாள்

“ஏன் ?? உங்க ஊர்ல கஞ்சி குடிச்சது இல்ல?? ... அதை விட இது சத்தானது..பெட்டரா இருக்கும்.. எல்லா நட்ஸ் ம் போட்டிருக்கேன்... பேசாமல் சாப்பிடு” என்று முறைத்தான்..

அவன் அதட்டலுக்கு பயந்து வேகமாக ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் வைக்கவும் புரை ஏறியது அவளுக்கு.. உடனே அவளின் தலையை தட்டினான்..

“ஏய்.. பார்த்து.. என் பிரின்ஸஸ்க்கு புரை ஏறப் போகுது.. ஏன் இப்படி வேகமா கொட்டிக்கிற..” என்று மீண்டும் அதட்டினான்

“ ரொம்பத்தான்ன்ன்... அவன் புள்ளைய பார்த்துக்கறானாம்.. “ என்று மனதுக்குள் கருவியவள் திரும்பி முறைத்தாள்..

அவள் பாதி சாப்பிட்டு முடிக்கவும்

“சரி... நான் போய் ஆபிஸ் கிளம்பறேன்.. நீ இதை எல்லாம் சாப்பிட்டு முடிச்சிருக்கனும்.. “என்று கூறி மேல சென்றான்..

பாரதியும் ஒருவழியாக அந்த கஞ்சியை வயிற்றுக்குள் தள்ளி கொஞ்சம் மீதி இருந்ததை அவனுக்கு தெரியாமல் கொண்டுபோய் வாஷ்பேஸினில் கொட்டிவிட்டு கழுவி வைத்து விட்டு வேகமாக வந்து ஷோபாவில் அமர்ந்து கொண்டாள்...

மேல சென்றவன் குளித்து ரெடியாகி கீழ வந்தான்.. பின் அவனும் தன் காலை உணவை முடித்துவிட்டு கிளம்பும் பொழுது ஏதோ நினைவு வந்தவனாக மீண்டும் மேல சென்று ஒரு சின்ன பெட்டியை எடுத்து வந்தான்.. அருகில் வந்தவன் அவள் அருகில் அமர்ந்து அதில் உள்ளே இருந்த ஸ்மார்ட் போனை எடுத்தான்...

பாரதி ஒன்றும் புரியாமல் அவனையே பார்த்துகொண்டு இருந்தாள்...

அதை ஏதோ செட் பண்ணி முடித்தவன் பின் அவளிடம் திரும்பி

“போய் உன்னோட அந்த ஓட்ட போனையும் உன் பழைய சிம்மையும் எடுத்துகிட்டு வா “ என்றான்

“எதுக்கு?? “என்று முனகியவள் அவன் முறைக்கவும் வேகமாக எழுந்து சென்று அவன் கேட்டதை கொண்டு வந்து கொடுத்தாள்...

அதில் இருந்த புது சிம்மையும் அவளின் பழைய சிம்மையும் அந்த புது அலைபேசியில் போட்டு ஏதோ நோண்டிக்கொண்டிருந்தான்...பின் அந்த பழைய சிம்மை வெளியில் எடுத்து அவளிடம் கொடுத்தான்

பாரதிக்கு ஒன்றும் புரியாமல் அவன் செய்வதையே ஆர்வமாக பார்த்துகொண்டு இருந்தாள்...பின் அவளிடம் திரும்பியவன்

“ஆமா... நீ வாட்ஸ்அப் யூஸ் பண்ணி இருக்கியா?? “

“இல்லை... ஆனா என் கூட வேலை செய்யறவங்க யூஸ் பண்ணி பார்த்திருக்கேன்.. “ என்று முனகினாள்..

“வேலையா?? நீ படிச்ச +2 க்கு அப்படி என்ன வேலை பார்த்த.. “ என்றான் நக்கலாக...

“ஹலோ... நான் ஹாஸ்பிட்டல் ல ரிசப்னிஸ்ட் ஆக்கும்... “என்று முறைத்தாள் அவளும்..

“ஹ்ம்ம்ம் பாவம்... அந்த ஹாஸ்பிட்டல் ஓனர்.. எத்தனை பேசன்ட்ஸை துரத்தி விட்ட?? “ என்று சிரித்தான்..... அவள் காரமாக முறைக்கவும்

“சரி... அதை விடு... உங்க வீட்ல யாராவது வாட்ஸ்அப் வச்சிருக்காங்களா ? “

“ஆங்க்.... என் மாமாகிட்ட இருக்கு” என்றாள் மலர்ந்த முகத்துடன். அவள் மாமா என்கவும் அவனுக்கு திக் என்றது

“என்ன?? நீ நேற்று கொஞ்சிகிட்டு இருந்தியே அந்த மாமா வா?? “ என்றான் கண்கள் இடுங்க.. அதுவரை சிரித்துகொண்டிருந்தவன் முகத்தில் அத்தனை கடுகடுப்பு..

அதை கண்டதும்

“நான் மாமான்னா இவனுக்கு என்ன ஆச்சு?? மூஞ்சிய இப்படி வச்சுகிட்டானே!! “ என்று யோசித்தவாறு

“இல்ல... இவர் எங்க அக்கா ஹஸ்பன்ட்...” என்றாள்... அவனுக்குள் ஒரு வித நிம்மதி பரவியது அவனை அறியாமல்...

“ஹ்ம்ம்ம் பரவாயில்லையே... அந்த பட்டிகாட்டுல கூட ஸ்மார்ட் போன் எல்லாம் வச்சிருக்காங்க..”என்று நக்கலாக சிரித்தவன்

“ஆமா.. அவர் என்ன பண்றார் “ என்றான் அவளை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில்..

“அது எதுக்கு உங்களுக்கு?? “ என்றாள் சந்தேகமாக தன் புருவங்களை உயர்த்தி

“ஹ்ம்ம்ம்ம் நாளைக்கு உன்னைப் பற்றி யாராவது கேட்டால் நான் முழிக்க வேண்டாம் பார்.. அதுக்குத்தான்... உன் பேக்ரவுண்ட் ஐயும் தெரிஞ்சுக்கலாம்னு... “

“ஹ்ம்ம்ம் அவர் ஒரு விஞ்ஞானி.... “

“ஆங்... விஞ்ஞானி யா.. அப்படீனா?? “என்றான் புரியாதவனாய்

“ஹ்ம்ம்ம்... விஞ்ஞானி னா தெரியலைங்கறானே... என்ன சொல்ல “ என்று யோசித்தவள்

“ஆங்... சயின்டிஸ்ட் “ என்றாள் பெருமையாக

“வாட்??? சயின்டிஸ்ட் ஆ.. அந்த பட்டிக்காட்டுலயா... “ என்று சிரித்தவன்

“ஹ்ம்ம்ம் சயின்டிஸ்ட் னா நம்ம அப்துல் கலாம் மாதிரியா ?? “ என்றான் நக்கலாக

அவன் கிண்டலடிக்கிறான் என்று தெரிந்ததும் அவனை முறைத்தவள்

“கலாம் சார் ராக்கெட் வச்சு ஆராய்ச்சி பண்ணார்... எங்க மாமா விவசாயத்தில ஆராய்ச்சி பண்றார்.. அவரும் ஒரு சயின்டிஸ்ட் தான் “ என்றாள் மீண்டும் பெருமையாக...

“ஐயோ!!! சரியா புரியற மாதிரி சொல்லித்தொலையேன் டீ... நீ சொல்றது எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது பட்டிக்காடு... “என்று சலித்துக்கொண்டான்...

“ஐய... எங்க மாம்ஸ் B.E Agri முடிச்சிட்டு, கொஞ்ச நீரை பயன்படுத்தி குறுகிய காலத்தில ஆர்கானிக் முறையில் எப்படி விவசாயம் செய்யறது னு ஆராய்ச்சி பண்ணிகிட்டிருக்கார்... அவருமே ஆர்கானிக் பார்ம் வச்சு தரமான காய்கறிகளை பயிரிடறார்...திருச்சி முழுவதும் அவரோட ஆர்கானிக் காய்கறிகள் தான் எல்லா கடைக்கும்...” என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தவள்.

“போதுமா இந்த விளக்கம்?? ... இல்லை இன்னும் விளக்கனுமாமாமா... “ என்று இழுத்தாள்...

“போதும் போதும்ம்ம் ஏதோ ஓரளவுக்கு நுழைஞ்சது.... “என்று சிரித்தான்...

“சரி.. உன் மாமா போன் நம்பரை கொடு.. “ என்றான்..

“எதுக்கு?? “ என்றாள் சற்று அதிர்ந்தவாறு...

“ஹ்ம்ம்ம்ம் உன் வண்டவாளத்தை எல்லாம்...அதான் நீ சிங்கப்பூர் போறேனு சொல்லிட்டு இங்க சுத்திகிட்டு இருக்கியே அந்த நாடகத்தை அவர் கிட்ட சொல்லத்தான்.. “ என்றான் குறும்பாக கண்களில் சிரிப்புடன்...

அதை கேட்டதும் பாரதிக்கு கொஞ்சம் நடுங்கியது...

“ஐயோ!! இவன் பாட்டுக்கு ஏதாவது உளறி வைத்தால்.... அவங்க மனசு கஷ்டப்படுமே... அதுவு இல்லாமல் இப்பவே கிளம்பி இங்க வந்திருவாங்க.. அப்புறம் இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்துக்கு பலன் இல்லாமல் போய்டும்.. “ என்று பயந்தவள் அவனை ஏறிட்டாள் வெளிறிய முகத்தோடு...

அவளின் பயத்தை புரிந்துகொண்டவன்

“ஹே... லூசு.. அப்படி எல்லாம் போட்டு கொடுக்க மாட்டேன் என் பிரின்ஸஸ் பிறக்கிற வரைக்கும்... அதனால ரொம்ப பயந்துக்காத.... நீ தான உன் குடும்பத்தில இருக்கிறவங்க கிட்ட பேசனும்னு சொன்ன.. அதுக்குத்தான்.... “என்றான் கண் சிமிட்டி...

“ஆங்... சிங்கப்பூர் சிம் கிடைச்சிருச்சா??? “என்றாள் கண்களை அகல விரித்து...

அவளின் அந்த அகன்ற விழிகளை ரசித்தவன் பின் சமாளித்துக்கொண்டு

“இவ ஒருத்தி.... ஆமா இந்த சிங்கப்புர் சிம் ஐடியா யார் சொன்னது ?? “ என்றான் சிரித்துக்கொண்டே

“ஏன்.. நான் தான்.. என் மூளையை கசக்கி கண்டுபிடிச்சது.. ஏன் நல்லா இல்லையா?? “ என்றாள் ஆர்வமாக

“வாவ்... சூப்பர்ர்ர்ர்ர்ர் ஐடியாதான் “என்று சிரித்தவாறு...

“அப்புறம் சிங்கப்பூர் சிம் இல்லாமலயே உங்க வீட்டுக்கு பேசலாம்.. ஏன் அங்க என்ன நடக்குதுனு நீ இங்க இருந்தே பார்க்கலாம்.. “என்றான்..

“நிஜமாகவா...எப்படி?? “ என்றாள் ஆச்சர்யமக

“ஹ்ம்ம்ம் அதுக்குத்தான் லேட்டஸ்ட் டெக்னாலஜிக்கு அப்டேட் ஆகனும்கிறது.. அந்த பட்டிக்காட்டுல இருந்துகிட்டு எப்படி தெரியுமாம்??... சரி சொல்றேன் கேட்டுக்கோ..

வாட்ஸ்அப் னு ஒரு ஆப் இருக்கில்ல.. இதுல உன் பழைய நம்பருக்கே புரபைல் கிரியேட் பண்ணி இருக்கேன்... இது வழியா நீ யாருக்கு வேணாலும் வாய்ஸ் கால் பண்ணலாம்... இதுலயே வீடியோ கால் ஆப்சனும் இருக்கு. இதுல கால் பண்ணா நீ அங்க இருக்கிறவங்களை எல்லாம் பார்க்கலாம்..

அதே மாதிரி அவங்களும் உன்னை பார்க்கலாம்... உன் பழைய சிம்மை இப்ப கழட்டிட்டேன்...அதனால நீ எங்க இருந்து பேசரேனு அவங்களுக்கு தெரியாது... உன் மேல சந்தேகம் வந்தால் யாராவது ரொம்ப நோண்டினாதான் கண்டுபிடிக்கலாம்.. அந்த பட்டிகாட்டுல யார் உன்னை போய் தேடப்போறா... அதனால நீ இனிமேல் இது வழியா எப்ப வேணும்னாலும் உன் வீட்டுக்கு பேசு.. ஆனா மாட்டிக்காதா “என்று விளக்கினான்...

“நிஜமாகவா?? .. இல்ல.. நீங்க என்னை ஏமாத்தறீங்க... “ என்றாள் அவனை நம்பாதவளாக

“ஏய்.. உன்னை எதுக்கு ஏமாத்தனும்.. சரி வா.. நாம அம்மாக்கு கால் பண்ணி சர்ப்ரைஸ் கொடுக்கலாம் ... “என்று சிரித்தவன் அந்த வாட்ஸ்அப் ல் ஜானகி எண்ணை ஆட் பண்ணி அவர் நம்பருக்கு வீடியோ கால் பண்ணினான்...

ஏற்கனவே ஜானகிக்கு இது பற்றி விளக்கி கூறி இருக்கிறான்.. அவன் வெளி ஊர் செல்லும் நாட்களில் வீடியோ கால் பண்ணி தன் அன்னையிடம் பேசுவான்... ஜானகிக்கு ஏற்கனவே அதை பற்றி தெரியும் எனபதால் வீடியோ கால் பண்ணி இrருந்தான் இப்பொழுது..

தன் அலைபேசி அடிக்கவும் அதை எடுத்து பார்த்தவர் பாரதியின் பழைய எண்ணில் இருந்து வீடியோ கால் வரவும் ஆச்சர்யத்ஹோடு அதை ஆன் பண்ணினார்...

மறுமுனையில் ஆதியும் பாரதியும் நெருங்கி அமர்ந்து அவரை பார்த்து கை அசைத்து சிரித்தனர்...பாரதி அவன் விளக்கியதை ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்ததால் அவன் அருகில் நெருங்கி அமர்ந்து இருந்ததை கவனிக்கவில்லை...

அவர்கள் இருவரும் ஜோடியாக அமர்ந்து இருப்பதைக் கண்ட ஜானகிக்கு உள்ளம் குளிர்ந்து போனது... மனம் எல்லாம் சந்தோஷம் வெள்ளம் பரவியது... அவர்களையே வச்ச கண் வாங்காமல் பார்த்து சிரித்தார் ஜானகி...

ஜானகியின் சிரித்த முகத்தை கண்டதும் பாரதி துள்ளி குதித்தாள்...

“ஐ .. அத்தை... “ என்று கை தட்டியவள்

“அத்தை.... எப்படி இருக்கீங்க.. என்று கத்தினாள் சந்தோஷத்தில்..

“ஏய்... கத்தாத.. மெதுவா பேசு.. விட்டா இங்க இருந்தே அங்க கேட்கற மாதிரி கத்துவ போல இருக்கு... “ என்று சிரித்தான்...

அவனை கண்டு கொள்ளாமல் அவள் ஜானகியிடம் கதை அடிக்க ஆரம்பித்தாள்..

கொஞ்ச நேரம் பொறுத்த ஆதி, இவள் இப்போதைக்கு முடிக்க மாட்டா போல என்று எண்ணியவன்

“ஏய்.. நீ மீதிய அப்புறம் பேசு.. இப்ப நான் ஆபிஸ்க்கு கிளம்பனும்... உங்க பட்டிக்காட்டு விஞ்ஞானி நம்பரை கொடு.. உனக்கு இதுல ஆட் பண்ணித் தர்ரேன்.. நீ உங்க வீட்டுக்கு பேசலாம்... “ என்றான்...

அவளும் பிறகு பேசுவதாக கூறி அந்த காலை கட் பண்ணி போனை அவனிடம் கொடுத்தாள்..பின் ஈஸ்வர் நம்பரை அவனிடம் கொடுத்தாள்...

அவனும் அதை வாட்ஸ்அப்பில் ஆட் பண்ணி எப்படி கால் பண்ணுவது என்று விளக்கினான்..

பின் இன்னொரு பெட்டியை எடுத்து

“இது இன்னொரு ஸ்மார்ட் போன்... உங்க விட்டுக்கு அனுப்பி வை.. நீ எப்ப வேணும்னாலும் அவங்க கிட்ட பேசலாம்“ என்று அவளிடம் நீட்டினான்

“இல்ல.. அது வேண்டாம்.. நான் மாமா நம்பருக்கே அழைத்து பேசறேன்” என்றாள் தயங்கியவாறு...

“ஏய்... இதுனால ஒன்னும் என் சொத்து அழிஞ்சு போகாது... இந்தா வாங்கிக்க... “ என்று முறைத்தான்...

பின் சிறிது யோசித்தவள்

“நான் எப்படி இத அனுப்பறது..நான் எங்க வெளில போறேன்.. நீங்களே கூரியர்ல அனுப்பிச்சிடுங்க.. நான் அட்ரெஸ் தர்ரேன்.. “ என்று தன் முகவரியை எழுதி கொடுத்தாள்.. பின் அவனிடம்

“நீங்க சாப்பிடுங்க.. நான் போய் எங்க வீட்டுக்கு இப்பயே பேசிட்டு வந்திடறேன்.. “என்று துள்ளி குதித்து வேகமாக ஓடினாள்..

“ஏய்.. பாத்து போ. என் பிரின்ஸஸ்க்கு ஏதாவது ஆகிடப் போகுது.. “ என்று கத்தியது அந்த காற்றில் தான் போனது.. அவள் தன் அறைக்கு சென்று தாளிட்டு ஈஸ்வர்க்கு வாய்ஸ் கால் பண்ணினாள்...

ஈஸ்வர் ம் மஹாவும் அப்பொழுது பாரதி வீட்டில் தான் இருந்தனர்... பாரதியிடம் இருந்து வந்த அழைப்பை கண்டதும் ஈஸ்வர் உற்சாகமாக அழைப்பை ஏற்றான் .. பாரதியும் அவனிடம் மஹா உண்டாயிருப்பதற்கு தன் வாழ்த்தை சொல்லி அவனிடம் கொஞ்ச நேரம் வம்பு இழுத்து பின் மஹாவிடம் கொஞ்ச நேரம் வம்பு இழுத்தாள்...

ஈஸ்வர் போனை ஸ்பீக்கரில் போடவும் அனைவரும் சுற்றி நின்று பாரதியுடன் கதை பேசினர்..

இப்பொழுது தான் அலைபேசி வாங்கியதாகவும் வாட்ஸ்அப்லயே இனிமேல் கால் பண்ணி பேசுவதாகவும் கூறினாள்.. பாரத் க்கும் ஒரு போன் சென்னையில் இருந்து வந்தவர்களிடம் கொடுத்து விட்டதாகவும் அவனுக்கு கூரியரில் அது வரும்..

அதன் வழியாக அடிக்கடி பேசலாம்..என்று ஒரு குட்டி பொய்யை சொன்னாள்.. பொய் சொல்வதற்கு அவள் மனம் வாடினாலும் வேற வழி இல்லை என்று தேற்றிக்கொண்டு உற்சாகமாக பேசினாள்..

அதை கேட்டதும் பாரத் துள்ளி குதித்தான்... பின் பாரத் வீடியோ கால் பண்ண சொல்லவும், தன் அறையை ஒரு முறை சுற்றி பார்த்து விட்டு எதுவும் வித்தியாசமாக இல்லாமல் இருக்கவும் வீடியோ கால் பண்ணினாள்...

முதன்முறையாக மூன்று மாதத்திற்கு பிறகு தன் குடும்பத்தை நேரில் இல்லை வீடியோவில் பார்த்தாள்.. அதுவே நேரில் பார்த்த மாதிரி இருந்தது... எல்லார் கண்களும் கலங்கி இருந்தது...

எல்லார் முகத்திலும் சந்தோஷம் பரவிக்கிடந்தது.... அதுவும் மஹாவை பார்க்கையில் பாரதிக்கு மனது நிறைந்து இருந்தது... தாய்மையின் அழகில் ஜொலித்தாள் அவள்.. முகத்தில் அத்தனை பூரிப்பு...

பாரத் ம் இந்திராவும் கூட வளர்ந்து விட்டதாக தோன்றியது அவள் கண்களுக்கு...

தர்மலிங்கம் உணர்ச்சி வசப்பட்டார் தன் சின்ன பாப்பாவை பார்த்து...

காமாட்சி பாட்டிக்கு தன் பேத்தியின் முகத்தில் தெரிந்த சிரிப்பும் குதூகாலமும் அவள் நன்றாக இருப்பதை காட்டவும் மனது நிறைந்து இருந்தது...

அதுவும் அவள் சிங்கப்பூர் போயும் அந்த முருகன் திருநீற்றை வைத்திருப்பது கண்டதும் தன் பேத்தி மாறவே இல்லை.. அவள் எந்த சீமைக்கு போனாலும் அவள் நம்ம ஊர் பாரதி தான்.. என்று பெருமையாக இருந்தது....

அவள் அம்மா லட்சுமி மட்டும் பாரதியின் முகத்தில் தெரிந்த பொலிவை கண்டு கொஞ்சம் யோசனை ஆனார்....பாரதியும் தாய்மையின் ஆரம்ப நிலையில் இருந்ததால் அவள் முகத்திலும் அந்த பொழிவு வந்திருந்தது..

அது அந்த தாயின் கண்ணிற்கு தனியாக தெரிந்தது... தாய் அல்லவா... அவர் கண்ணுக்கு மட்டும் தன் பிள்ளைகளின் மாற்றம் எப்பவும் தனியாக தெரியுமாம்...

“தன் மகள் எப்படி இப்படி ஜொலிக்கிறாள்.?? .” என்று சந்தேகம் இருந்தாலும் அங்கு ஏசி யி ல் இருக்கிறாள் இல்லையா.. அதுவா இருக்கும்ம்.. பாவம்.. புள்ளை இங்க வயலுக்குள்ளயே சுத்திகிட்டு கஷ்டப்பட்டா.. இப்பயாவது கொஞ்சம் சந்தோஷமா இருக்கட்டும் .. “என்று நினைத்துக்கொண்டார்...

பின் மணியிடமும் கொஞ்ச நேரம் கொஞ்சினாள்... தன் எஜமானியை நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த திரையில் காணவும் அவனும் வாலை ஆட்டிக்கொண்டு அவளை எட்டி முத்தமிட முயற்சி செய்தான்... சந்தோஷத்தில் இங்கும் அங்கும் ஓடினான்..

பின் ஒரு வழியாக அனைவரிடமும் பேசி முடித்தவள் அலைபேசியை ஆப் பண்ணும் நேரம் இதுவரை அமைதியாக தன் பேத்தியை ரசித்து கொண்டிருந்த காமாட்சி பாட்டி அந்த கேள்வியை கேட்டார்...

“ஏன் தாயி.. மணி ஆகலை?? நீ இன்னும் வேலைக்கு போகலை.?? “என்றார்..

அதை கேட்டு அதிர்ந்த பாரதி அப்பொழுது தான் சிங்கப்பூர்க்கும் இங்கும் 2.30 மணி நேரம் வித்தியாசம் என்பதை உணர்ந்து , அவசரமாக யோசித்து

“நேற்று நைட் வர லேட் ஆகியிருச்சு...ஆயா.. இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆ போகனும் “ என்று சமாளித்தாள்...

“சரி தாயி.. பத்திரமா இரு...அந்த முருகன் எப்பவும் உன் கூடயே இருப்பான்.. “ “ என்று கூறி அலைபேசியை அனைத்தாள்...

மனமெல்லாம் சந்தோஷமாக இருந்தது..அதை ஏற்படுத்தி கொடுத்தவன் மேல் அவள் மகிழ்ச்சி திரும்பியது....

“பரவாயில்லையே!! இந்த சிடுமூஞ்சி அப்பப்ப கடிச்சாலும் கொஞ்சம் நல்லவன் தான் போல.. “ என்று சிரித்துக்கொண்டாள்..

பின் அவசரமாக கீழ இறங்கி வந்தவள் அவன் இன்னும் கிளம்பாமல் அவளுக்காக காத்து இருக்கவும் வேகமாக அவனிடம் சென்று

“ரொம்ப தேங்க்ஷ்... “ என்றாள் மலர்ந்த முகத்துடன்

“ஹ்ம்ம்ம் உன் தேங்க்ஷ் ஐ நீயே வச்சுக்க... இது ஒன்னும் உனக்காக செய்யல.. என் பிரின்ஸஸ்க்காக த் தான்..

நீ சந்தோஷமா இருந்தாதான் அவளும் சிரிப்பாளாம்.. அதான்... “ என்றான்..

ஏனோ இந்த முறை அவளுக்கு வருத்தமாக இல்லை.. இவன் சும்மாதான் சொல்கிறான். உண்மையிலயே தன் மேல அக்கறையினால தான் செஞ்சிருக்கான் .. “என்று புரிந்தது....

அவளும் அலட்டிக்காமல்.

“ஹீ ஹீ நம்பிட்டேன்... “என்று சிரித்தாள்..அவளின் அந்த மலர்ந்த சிரிப்பை ரசித்தவன்

“சரி.. நான் நைட் அங்க வீட்டுக்கு போய்டுவேன்.. மாரி இப்ப வந்திருவாங்க.. நீ பத்திரமா இரு.. எல்லா மாத்திரையும் நேரத்துக்கு சாப்பிடு... என் பிரின்ஸஸ நல்லா பார்த்துக்கோ.. “ என்றான் முகத்தில் உணர்ச்சியை எதுவும் காட்டாமல்..

“ஹ்ம்ம்ம்.. “ என்று தலையை ஆட்டினாள்.. அவன் கண்கள் தானாக அவளின் வயிற்றுக்கு சென்றது...பின் வெளியில் நடந்தான்

பாரதியும் அவனுடனே வாசல் வரை சென்றாள்.. அவன் கார் எடுத்து கிளம்பவும் ஏனொ மனதுக்கு கஷ்டமாக இருந்தது... இரண்டு நாள் தான் இருந்தான் என்றாலும் ஏனொ இப்ப கஷ்டமாக இருந்தது அவளுக்கு... காரில் இருந்த கண்ணாடி வழியாக அவளை பார்த்தவன் அவள் ஏதோ ஏக்கத்துடன் நிற்பதை போல தோன்றவும் வெளியில் தலையை நீட்டி அவளை பார்த்து கை அசைத்து விடைபெற்று சென்றான்...

காரை ஓட்டி கொண்டிருந்தவனுக்கும் மனம் ஏதோ பாரமாக இருப்பதை போல இருந்தது...

முதலில் எரிந்து விழுந்தான் தான்... பின் எப்படி இப்படி மாறினேன்.. என்று யோசித்தான்..

அப்பொழுது தான் நினைவு வந்தது.. நேற்று காலை பாரதியுடன் நடந்த வாக்குவாதத்தில் பாரதி ஜானகி தான் இந்த ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தது என்று சொல்லவும் அவன் நேற்று காலை அலுவலகம் கிளம்பி போகும் பொழுது தன் அன்னையை அழைத்து முழுவிவரத்தையும் கேட்டு தெரிந்துகொண்டான்...

அதை கேட்டதும் இதில் பாரதிக்கு எந்த சம்பந்தமும் இல்லை.. இந்த லூசு தன் அம்மா சொன்னதுக்கெல்லாம் ஆடிகிட்டு இருக்கு என்று தோன்றியது..

அதோடு இவள் தான் தன் அம்மாவை அன்று கோயிலில் விழ இருந்தபொழுது காப்பாற்றியவள் என்று தெரிந்ததும் அவள் மேல் கொஞ்சமாக ஒரு சாப்ட் கார்னர் வந்திருந்தது... அதான் நேற்று மாலையில் இருந்து அவன் வேகம் குறைந்து இருந்தது...

அவளுடன் இலகுவாக பேச ஆரம்பித்து இருந்தான்... ஆனாலும் அவளை வம்பு இழுப்பதில் அவன் ஒரு தனி சுகத்தை கண்டான்... அதையே தொடர்ந்து கொண்டிருந்தான்... இப்ப அதை எல்லாம் நினைத்து சிரித்துக்கொண்டான் உல்லாசமாக

ஆதியின் மனதில் வந்த சாப்ட் கார்னர் நிலைக்குமா?? ...அவனுள்ளே மொட்டு விட்டிருக்கும் அந்த மகிழ்ச்சி மலர் மேலும் மலர்ந்து அவனுக்கு மணம் வீசுமா?? பார்க்கலாம்..

Comments

  1. Softcorner nelikala enga oru trichy kara pulaya edhachum panana chumma vidamattom writerea irunga medhi episodes yum padichitu choldrean

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!