தவமின்றி கிடைத்த வரமே-35



அத்தியாயம்-35

றுநாள் காலை கண் விழித்த பனிமலர் எழ முயல, அவள் நகர முடியாமல் தன்னை சுற்றி இறுக்கி அணைத்திருந்த கைகளை கண்டாள்...திடுக்கிட்டு திரும்பி முகம் பார்க்க அருகில் தன் கணவனின் முகம் காண, அப்பொழுது தான் நேற்று இரவு சம்பவங்கள் நினைவு வந்தன..

அவனின் இறுகிய அணைப்பும் முரட்டுத்தனமான முத்தமும் காட்டாறு போன்ற வேகமும் நினைவு வர, மீண்டும் உள்ளுக்குள் சிலிர்த்தது...

வெளியில் பார்க்க மென்மையாக இருந்தாலும் அவனுள் இருந்த முரட்டுத் தனமான இன்னொருவனை கண்டாள்...அந்த முரட்டு அணைப்பில்தான் இன்னும் கரைந்து போனாள்..

அமைதியாக உறங்கும் தன் கணவனையே சிறிது நேரம் ரசித்து இருந்தவள்

“என் க்யூட் மெக்கானிக்.... “ என்று மெல்ல அவன் கன்னத்தை பிடித்து கிள்ளியவள் அவன் புரளும் அரவம் கேட்க உடனே வெட்கபட்டு அவன் கையை விலக்கிவிட்டு வேகமாக எழுந்து குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்...

குளித்து முடித்து ஒரு புடவையை கட்டிக் கொண்டு கீழ வர, வழக்கம் போல சமையல் அறையில் நின்றிருந்தார் மீனாட்சி...நேராக அவரிடம் சென்றவள்

“குட் மார்னிங் அத்தை.. “ என்றாள்...

ஏனோ அவளால் அவர் முகம் பார்க்க முடியவில்லை.. காலையிலயே குளித்து முடித்து முகத்தில் லேசான பூரிப்பும் மற்றும் வெட்கத்துடன் மெல்ல நெழிந்தவாறு நின்றவளை கண்டதும் அவருக்கு புரிந்து விட, உள்ளுக்குள் அந்த ஈசனுக்கு நன்றி சொல்லியவாறே

“குட் மார்னிங் மருமகளே.... இந்த நாள் உனக்கு இனிய நாளாக அமையட்டும்... அப்படியே பூஜை அறைக்கு சென்று அந்த ஈஸ்வரனுக்கு உன் கையால் விளக்கை ஏற்றி பூஜை செய்திடறியா?.. நான் எல்லாம் தயாராக வைத்திருக்கிறேன்.. “ என்றார் சிரித்தவாறு..

அவருக்கு விசயம் புரிந்து தான் இதை செய்ய சொல்கிறார் என உறைக்க மலரும் அதற்கு மேல் அங்கு நிற்க வெட்க பட்டு சரி அத்தை என்று ஓடி விட்டாள்...

விளக்கேற்றி வைத்து பூஜை முடிக்க கை கூப்பி அந்த ஈசன் முன் நின்றவள்

“ஹாய் ஈஸ்..ஐம் சோ ஹேப்பி...நான் முன்பு வேண்டியது தான் இப்பவும்.. எனக்கு ஒரு நல்ல கணவன் நல்ல குடும்பத்தை கொடுத்திருக்கிறாய்..ரொம்ப நன்றி உனக்கு..

ஆனால் எதையும் நீ எளிதில் யாருக்கும் கொடுத்து விட மாட்டாய் என தெரியும். பல சோதனைகளுக்கு பிறகு தான் நீ அருள்வாய்..உன் பொண்டாட்டியை யே பரிட்சை வைத்து சோதித்தவன் அல்லவா..

எனக்கு நீ இந்த வாழ்க்கையை கொடுத்தது முன்பு நான் கடந்து வந்த சோதனைக்காகவா? இல்லை முதலில் எனக்கு இந்த மகிழ்ச்சியை கொடுத்து அப்புறம் என்னை சோதிக்க போகிறாயா?

எதுவாக இருந்தாலும் அதை தைரியமாக தாங்கும் சக்தியை, வலிமையை எனக்கு கொடு.. எந்த காரணத்தை கொண்டும் நான் இந்த வீட்டிலயே இருக்க வேண்டும்... “ என்று எதையோ மனதில் நினைத்து கொண்டு தன் வேண்டுதலை முன் வைத்தாள்..

பின் அருகில் இருந்த மதுரை மீனாட்சி குங்குமத்தை எடுத்து தன் மாங்கல்யத்திலும் வகிட்டிலும் வைத்துக் கொண்டவள் மீண்டும் சமையல் அறைக்குள் வந்தாள்...

“அத்தை.. நான் எதாவது ஹெல்ப் பண்றேன்... உங்களை மட்டும் தனியாக வேலை செய்ய விட கில்ட்டியா இருக்கு எனக்கு .. “ என்று சிணுங்கினாள்..

“அடடா.. அவ்வளவு தானே.. சரி இந்த காய்கறிகளை கட் பண்ணு... தெரியும் தானே?? “ என்றார் குறும்பாக சிரித்தவாறு..

“ஓ.. அதெல்லாம் நல்லாவே செய்வேன்... “ என்று சிரித்தவள் காய்கறி நறுக்கும் பலகையை எடுத்து வைத்து அங்கிருந்த காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தாள்..

சில நிமிடங்களில் யாரோ தன்னை உற்று பார்ப்பதை போல இருக்க, தலையை நிமிர்ந்து பார்க்க அப்படியே ஷாக் ஆகி நின்றாள்....

வாயிலில் நின்று மார்பின் குறுக்கே கைகளை கட்டி கொண்டு அவளையே மையலுடன் பார்த்து கொண்டிருந்தான் வசீகரன்... அவனை கண்டதும் கன்னம் சிவக்க தலையை குனிந்து கொண்டாள்....

மீனாட்சியும் நிமிர்ந்து தன் மகனை அங்கு காண, அவருக்கே ஆச்சர்யம்....

“மருமகளே.. வெளில ஏதாவது புயல் வருதானு பார்.. சமையல் அறை பக்கமே வராத என் பையன் இன்னைக்கு வீட்ல இருக்கும் சமையல் அறையை கண்டு பிடித்து வந்து விட்டானே.. “ என்றார் குறும்பாக சிரித்தவாறு...

அசடு வழிய சிரித்தவன்

“மா... நான் ஒன்னும் சும்மா வரவில்லை.. அங்கு உன் அருமை செல்ல மகள் உங்களை அழைத்து கொண்டு இருக்கிறாள்.. போய் என்னனு கேளுங்க... அதை சொல்லத் தான் வந்தேன்... “ என்றான் முகத்தை சீரியசாக வைத்து கொண்டு...

“ஓ... இந்த வசு வர வர ரொம்ப சின்ன பிள்ளையாயிட்டே வர்ரா.. ப்ரஸ், பேஸ்ட் னு எதை காணவில்லை என்றாலும் என்னையே கூப்பிடறா.. “ என்று புலம்பியவாறு வெளியே செல்ல, அடுத்த நொடி அவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள் மலர்..

அதில் திகைத்தவள்

“ஐயோ... என்ன பண்றீங்க.. அத்தை வந்திடுவாங்க... “ என்று சிணுங்கினாள்..

“அதெல்லாம் வரமாட்டாங்க... அவங்களுக்கு இங்கிதம் தெரியும்.... ஹே ஜில்லு.. உன்னை யார் அதுக்குள்ள எழுந்து வரச் சொன்னா.. நான் கண் விழிக்கிறப்ப நீ என் கண் எதிர்ல இருக்கிறது இல்லையா...

உன்னைக் காணாம எப்படி தவிச்சு போய்ட்டேன் தெரியுமா... “ என்றான் அவள் காது மடலை தன் இதழ்களால் வருடியவாறு....

“ஐயோ.. எதுவானாலும் இப்படி கட்டி பிடிக்காதிங்க.. வீட்ல வயசு பிள்ளை வேற இருக்கா... திடீர்னு வந்தா??

“ஹா ஹா ஹா அதெல்லாம் வர மாட்டா.. அவ கும்பகர்ணி மாதிரி துங்கிகிட்டு இருக்கா...”

“ஆங்.. தூங்கறாளா?? அப்ப அத்தை கிட்ட சொன்னது?”

“ஹீ ஹீ ஹீ அது சும்மா லுலுலாய்.. அவங்கள வெளில அனுப்ப “ என்று கண் சிமிட்டி சிரித்தவன் செல்லமாக அவள் காதை கடித்தான்.

“ஓ.. சரியான ப்ராட்..” என்று சிணுங்க அதில் இன்னும் கிறங்கி போனவன் தன் பிடியை இன்னும் இறுக்கினான்...

“ஐயோ.. இப்படி இறுக்காதிங்க.. வலிக்குது... விடுங்க அத்தை வந்திருவாங்க.”

“சரி அப்ப நீ மேல வா...” என்றான் அடம் பிடிக்கும் குழந்தையாக

“ம்ஹூம் . மாட்டேன்..” என்று தலையை இட வலமாக ஆட்டினாள்

“அப்ப நானும் விட மாட்டேன்.. “ என்று இன்னும் அவன் பிடியை இறுக்கி அவனோடு சேர்த்து அணைத்தான்..

மாடி ஏறி சென்ற மீனாட்சி வசுந்தராவின் அறைக்கு சென்று பார்க்க அவளோ கவிழ்ந்து படுத்து நன்றாக உறங்கி கொண்டிருந்தாள்...

“ஆங்.. இப்படி தூங்கி கிட்டிருக்காளே.. இந்த வசி பய இவள் என்னை அழைப்பதாக அல்லவா கூறினான்.. “ என்று யோசித்த படியே கீழ வந்தவருக்கு தன் மகன் தன்னை வெளியேற்றியதன் ரகசியம் புரிய நமட்டு சிரிப்புடன் கிழிறங்கி வந்தவர்

“மலர்.. அந்த அடுப்பை அப்படியே சிம்ல வச்சிடுமா...நான் அப்புறம் சமையலை கவனிச்சுக்கறேன்..நீ உன் புருசனை நல்லா கவனிச்சுக்கோ.. “ என்று நமட்டு சிரிப்புடன் தோட்டம் பக்கம் சென்று விட்டார்...

அதை கேட்ட மலர்

“ஐயோ மானம் போச்சு... “ என்று வெட்கத்தில் சிவந்த முகத்தை தன் கைகளால் மூடிக் கொள்ள அதற்கு மேல் தாங்காதவன் அடுப்பை மெதுவாக வைத்து விட்டு அப்படியே அவளை தன் கைகளில் அள்ளி கொண்டான்..

மாடி ஏறி தன் அறைக்கு சென்றவன் அறைக்கதவை மூடி தாளிட்டு அவளை கீழ இறக்கி விட, அவளோ அவனை செல்லமாக முறைக்க முயன்றாள்....

“ஹப்பா... எவ்வளவு அழகா முறைக்கிற ஜில்லு.. எங்க இன்னொரு தரம்.. “ என்று கண் சிமிட்ட அதற்கு மேல் அவளுக்கு சிரிப்பு தான் வந்தது...

‘போங்க மெக்கானிக்.. இப்படியா மானத்தை வாங்கறது?? “ என்று சிணுங்கினாள்...

“இனிமேல் நான் எழுந்து ரெடியாகிற வரைக்கும் நீ கீழ போகக் கூடாது..நான் வேணா அம்மாகிட்ட சொல்லிடறேன்.. என் பொண்டாட்டியை யாரும் டிஸ்டர்ப் பண்ண கூடாதுனு... “ என்று சீரியசாக சொல்ல

“ஐய, இதை விட மானத்தை வேற யாரும் வாங்க முடியாது “ என்று முறைக்க அந்த முறைத்த இதழுக்கு சரியான தண்டனை கொடுத்தவன் நேற்று இரவு பாக்கி இருந்த தாம்பத்திய பாடத்தை மீண்டும் ஒரு முறை தன் மனைவிக்கு கற்று கொடுத்தான்..

மீண்டும் கண் விழிக்க, மணி 10 என காட்டியது... பனிமலர் அவசரமாக எழ முயல மீண்டும் அவளை இழுத்து தன் மீது போட்டு அணைத்து கொண்டான்..

அவன் மார்பின் மீது விழுந்தவள், அவனின் அந்த சீண்டலை ரசித்தாலும்

“ஐயோ விடுங்க... அத்தை திட்ட போறாங்க.. “ என்றாள் சிணுங்கியவாறு

“ஹா ஹா ஹா அம்மா அப்பா வசு எல்லாரும் இந்நேரம் கிளம்பி அவரவர் ட்யூட்டியை பார்க்க சென்றிருப்பர்.. சோ.. நோ டென்ஷன் ஜில்லு டார்லிங்.. பி கூல்.” என்று சிரித்தவாறு அவன் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்..

“இல்லை..ஆனாலும்.. வந்து...” என்று இழுக்க அவளை ஒரு கையில் அணைத்தவாறெ அருகில் இருந்த மலரின் அலைபேசியை எடுத்து காட்டினான்..

மீனாட்சி அவளுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி இருந்தார்...

அவர் கிளம்புவதாகவும் வசி மற்றும் மலர் இருவரையும் இன்று விடுமுறை எடுத்து கொண்டு வீட்டிலயே இருக்க சொல்லி இருந்தார்..இறுதியில்

“என்ஜாய் யுவர் மேரேஜ் லைப்..போத் ஹேவ் அ வொண்டர்புல் டே...“ என்று சொல்லி குறும்பாக சிரிக்கும் ஸ்மைலி அனுப்பி இருந்தார் மீனாட்சி..

அதை கண்டவள் மீண்டும் கன்னம் சிவக்க

“அத்தை சோ ஸ்வீட்... “ என்று அவன் மார்பில் முகம் புதைத்து கொண்டாள்..

“ஹே.. அத்தை மட்டுமா ஸ்வீட்? அந்த அத்தை பெத்த இந்த உத்தம புத்திரன் ? “ என்று புருவங்களை உயர்த்தினான் குறும்பாக சிரித்தவாறு...

“ஹ்ம்ம்ம் என் அத்தை பெத்த ரத்தின மகன் சரியான ப்ராட்.. நாட்டி..” என்று கொஞ்சியவாறு அவன் மீசையை பிடித்து செல்லமாக இழுத்து விளையாட அதில் இன்னும் கிறங்கியவன்

“ஓ.. நான் நாட்டியா?.. அப்ப இந்த நாட்டி என்ன பண்றான் பார்.. “ என்று மீண்டும் அவளை சீண்டி விளையாட மலரோ திக்கு முக்காடி போனாள்..

பின் சிறிது நேரம் புது மண தம்பதிகளுக்கே உரிய பொன்னான நேரத்தை இருவரும் அனுஅனுவாக ரசித்து அனுபவித்தனர்...

தன் கணவனின் அன்பு தொல்லையில் இருந்து விடுபட்டவள் அவனை கெஞ்சி கொஞ்சி குளிக்க அனுப்ப அவனும் அவளை சீண்டியவாறே அவளையும் குளியல் அறைக்குள் உள்ளிழுத்து இருவருமே சேர்ந்தே குளித்து கழித்தனர்..

ஒரு வழியாக எல்லா ஆட்டமும் முடிய நேரம் மதியத்தை தொட்டிருந்தது.. அப்பொழுதுதான் நானும் இங்க தான் இருக்கிறேன் என்று மணி அடித்து அவர்களுக்கு நினைவு படுத்த வயிறு என்ற ஒன்று இருப்பது நினைவு அப்பொழுது தான் வந்தது இருவருக்கும்..

இருவருக்கும் பசி எடுக்க, கீழ வந்து டைனிங் டேபிலுக்கு செல்ல, அங்கு மீனாட்சி இருவருக்கும் மதிய உணவை சமைத்து ஹாட் பாக்சில் போட்டு வைத்து விட்டே சென்றிருந்தார்...

மலரும் அவரை மெச்சி கொண்டே இரு தட்டுக்களை வைத்து இருவருக்கும் உணவு பரிமாற அங்கயும் தன் லீலைகளை தொடர்ந்தான் அந்த அன்பு கணவன்..

அவளை சீண்டிய படியே சாப்பிட்டு முடிக்க, சரியாக அதே நேரம் அவன் அலைபேசி அடித்தது..அப்பொழுதுதான் அலைபேசி ஒன்று இருப்பதும் இன்று காலையில் இருந்து அதை பார்க்க வில்லையே என்பதும் நினைவு வந்தது வசிக்கு..

எதாவது எமர்ஜென்சி கால் எதுவும் வந்திருக்குமோ என்று எண்ணியவாறு எழுந்து சமையல் அறைக்கு சென்றவன் அங்கு தன் அன்னை வைத்து விட்டு சென்ற தன் அலைபேசியை எடுத்து பார்த்தான்...

நேற்று இரவு யாரும் தன் மகனை தொந்தரவு பண்ணக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக அதை வாங்கி அணைத்து வைத்திருந்த மீனாட்சி காலையில் அதை உயிர்பித்து அதன் வால்யூம் ஐ மெதுவாக வைத்திருந்தார்..

அதனால் காலையில் எழுந்ததும் மித்ரா வசியை அழைக்க, அவன் இருந்த பிசியில் அதன் சத்தம் அவன் செவியை எட்டியிருக்கவில்லை... இப்பொழுது தன் அலைபேசியை திறந்து பார்க்க, பல மிஸ்ட் கால்கள் மித்ராவிடம் இருந்து வந்திருந்தன.. வேற எதுவும் கால் வந்திருக்கா என்று அவசரமாக பார்வையிட, வேற எதுவும் வந்திருக்கவில்லை...

மித்ரா அவனுக்கு எப்பவும் வழக்கம் போல காலை வணக்கம் சொல்ல அழைத்திருப்பாள்.. அவன் எடுக்கவில்லை என்றால் பலமுறை அழைப்பது அவள் பழக்கமாகும்..

அதனால் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் நேரில் சென்று அவளுக்கு விளக்கம் சொல்லி கொள்ளலாம் என்று எண்ணியவன் அன்றைய அஜென்டாவை பார்வையிட, மதியம் சில முக்கியமான அப்பாய்ன்ட்மென்ட்ஸ் இருந்தது..

உடனே அதுவரை இருந்த அந்த குறும்புக்கார வசீகரன் மறைந்து கார்டியாலஜிஸ்ட் வசீகரன் வந்து ஒட்டி கொண்டான்...

பின் தன் மனைவியிடம் வந்தவன்,

“ஓகே ஜில்லு... எனக்கு மதியம் கொஞ்சம் அப்பாய்ன்ட்மென்ட்ஸ் இருக்கு.. நான் ஹாஸ்பிட்டல் போய்ட்டு சீக்கிரம் வந்திடறேன்... நம்ம ஆட்டத்தை இரவு தொடரலாம்.. நீயும் உன் வேலை எல்லாம் முடித்து விட்டு சீக்கிரம் வந்து விடு.. “என்று கண் சிமிட்டி சிரித்தவன் மாடி ஏறி தன் அறைக்கு சென்றான்..

அடுத்த ஐந்தாவது நிமிடம் கிளம்பி தயாராகி வந்தான்.. மலர் சமையல் அறையில் அவர்கள் சாப்பிட்டதை எல்லாம் எடுத்து வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தவள் தன் கணவன் கீழறங்கி வரவும் வெளியில் வந்தாள்.. ,

நேராக அவளிடம் சென்றவன்

“எனக்கு உன்னை விட்டு போக மனமே இல்லை ஜில்லு.. ஆனாலும் போயாகணும்.. நீயும் வெளில போகணும் இல்ல.. வாயேன் நானே உன்னை ட்ராப் பண்ணிடறேன். “ என்றான் ஏக்கமாக..

அவளை பிரிய வேண்டாம் என்றுதான் அவனுடன் வரச் சொல்கிறான் என புரிய தன் கணவனின் அன்பில் உருகி போனாள் பெண்ணவள்..

“இல்ல மெக்கானிக்.. நான் இன்று இரண்டு மூன்று இடங்களுக்கு செல்ல வேண்டும்.. என் வண்டி இல்லைனா கஷ்டம்.. அதனால நீங்க கிளம்புங்க.. நான் என் ஸ்கூட்டியிலயே போய்ட்டு வந்திடறேன்.. “ என்று சிரித்தாள்.

அவளின் மலர்ந்த சிரிப்பில் விரிந்த இதழ்கள் மீண்டும் அவனை சுண்டி இழுக்க, உடனே அவளை இழுத்து இறுக்கி அணைத்து அவள் இதழ்களுக்கு அழுந்த முத்த மிட்டு விடுவித்தவன்

“தேங்க்ஸ்... தேங்க்ஸ் பார் எவ்ரிதிங்... சீ யூ நைட்.. “ என்று அவள் கன்னம் தட்டி கண் சிமிட்டி புன்னகைத்தவாறு துள்ளலுடன் வாயிலை நோக்கி நடந்தான்...

அவன் எதற்கு நன்றி சொன்னான் என புரிய, அவள் கன்னங்கள் மேலும் சிவந்தன..உள்ளுக்குள் இனம் புரியாத பரவசம் பரவ, அவனை பிரிந்த சில நிமிடங்களிலயே மீண்டும் அவனை பார்க்க தூண்ட வேகமாக வாயிலுக்கு ஓடினாள்... 



அவனும் தன் காரை எடுத்து கொண்டு வந்து வாயிலில் நிறுத்த, ஓடி வந்த மலரின் கண்களில் தெரிந்த காதலும் அவனை பார்க்க துடித்த தவிப்பும் அவனுக்கு பெரும் கர்வத்தை கொடுத்தது..

எனக்காக அவள் ஏங்குகிறாள் என்ற நினைப்பே இந்த உலகத்தையே வென்று விட்டத்தை போல இருக்க, மீண்டும் இறங்கி சென்று அவளை இழுத்து அணைத்து கொள்ள துடித்தது அவன் இதயம்..

மலருக்கும் அதே எண்ணம் தான்.. சில நிமிடங்கள் கூட அவனை விட்டு பிரிய மனமில்லை.. அவன் மார்பிலயே தஞ்சம் புகுந்து கொண்டு நாள் முழுவதும் அவன் அருகிலயே இருக்க வேண்டும் என துடித்தது அவள் இதயம்..

ஆனாலும் கடமை ஒன்று இருக்கிறதல்லவா.. அதையும் அப்பப்ப கவனிக்க வேண்டும் என்று மண்டையில் உறைக்க, விரிந்த புன்னகையுடன் அவனுக்கு கை அசைத்து விடை கொடுத்தாள்...

அவனும் வாயிலில் நின்று தனக்கு காதலுடன் கை அசைத்து விடைக் கொடுக்கும் தன் காதல் மனைவியை கண்களில் நிரப்பி கொண்டு இதழ் குவித்து அவளுக்கு ஒரு முத்தத்தை காற்றில் பறக்க விட்டு கண் சிமிட்டி மீண்டும் கை அசைத்து காரை கிளப்பினான் மனமே இல்லாமல்...

அவனின் செய்கையில் மீண்டும் உருகி போனாள்.. அவன் சென்ற பின்னும் சில நிமிடங்கள் அங்கயே நின்று அவன் சென்ற திசையையே பார்த்து இருந்தவள் பின் நினைவுலகத்திற்கு வர, சிரித்தவாறு உள்ளே சென்றாள்...

அவளுக்கும் அன்று மதியம் அவள் MBA ப்ராஜெக்ட் க்காக கல்லூரியில் அவளும் கயலும் சென்று ஒரு புரபசரை சந்திக்க வேண்டி இருந்தது.. அதனால் முன்னதாகவே இன்று விடுப்பு எடுத்து இருந்தாள்..

அது நினைவு வர, அதோடு அவள் பணி புரியும் NGO அலுவலகத்திற்கும் செல்ல வேண்டி இருப்பது நினைவு வர,

“சே.. எப்படி இதை எல்லாம் மறந்து போனேன்..இல்ல மறக்கடித்து விட்டான் அந்த மெக்கானிக்.. சரியான நாட்டி.. “ என்று செல்லமாக திட்டி கொண்டே தங்கள் அறைக்கு சென்றவள் அவசரமாக கிளம்பி தன் ஸ்கூட்டி சாவியை எடுத்து கொண்டு துள்ளலுடன் படிகளில் தாவி இறங்கி வெளி வந்தவள் வீட்டை பூட்டி விட்டு தன் ஸ்கூட்டியை எடுத்து பறந்தாள்...

சாலையில் தங்கள் வாகனத்தை ஓட்டி கொண்டிருந்த வசி மற்றும் மலர் இருவருக்குமே அந்த உலகம் புதிதாக தெரிந்தது..உடன் பயணிப்பவர்கள் யாரும் அவர்கள் இருவரின் கண்ணுக்கும் தெரியவில்லை..

இது என்ன புது வியாதியாக இருக்கிறதே என்று தன்னையே எண்ணி சிரித்து கொண்டான் வசீகரன்..

புது உலகத்தில் சஞ்சரித்தவாறு உதட்டில் விரிந்த புன்னகையுடன் தங்கள் இடங்களுக்கு சென்று கொண்டிருந்தனர்..

இவர்கள் மட்டும் அல்ல. திருமணம் ஆன புதிதில் எல்லா தம்பதியர்களுக்கும் வரும் அதே நோய்தான் இவர்களுக்கும் வந்திருந்தது.

சென்னையில் புகழ் பெற்ற அந்த கல்லூரியை அடைந்த மலர் அதன் பார்க்கிங் இடத்திற்கு சென்று தன் ஸ்கூட்டியை நிறுத்தி அதன் சாவியை எடுத்து கொண்டு தன் ஹேண்ட் பேக் ஐ எடுக்க

“ஹே.. மலர்.. “ என்ற குரல் கேட்க பின்னால் திரும்பி பார்த்தாள்..

கயல்தான் இவளை பார்த்து கை அசைத்தவாறு உற்சாகத்துடன் இவளை நோக்கி ஓடி வந்தாள்.. அவளும் அப்பொழுது தான் அங்கு வந்திருந்தாள்.. மலரை அவளுடைய ரிசப்சனில் சந்தித்தது தான்..

அதற்கு பிறகு இன்று தான் இரு தோழிகளும் சந்திப்பதால் கயல் ஆர்வமாக அவளை நோக்கி ஓடி வந்தவள் மலரை இறுக்கி கட்டி கொண்டு பின் விடுவித்தவள்

“எப்படி டீ இருக்க? .. ஹௌ ஈஸ் யுவர் மேரேஜ் லைப் ? .. “ என்றாள் மகிழ்ச்சியுடன் தன் தோழியை ஆராய்ந்தவாறு...

மலரும் அவளுக்கு புன்னகைத்து

“ஹ்ம்ம் நான் ஜம்முனு இருக்கேன் டி.. நீ எப்படி இருக்க? .. என் தொல்லை இல்லாம ஜாலியா சுத்திகிட்டு இருக்க போல.. “ என்று சிரித்தாள் மலர்..

“ஹா ஹா ஹா.. சரி போர் டீ. நீ இல்லாம நாளை கடத்தறது கஷ்டமா இருக்கு.. பேசாம நானே உன்னை கல்யாணம் பண்ணி இருக்கலாம்..எப்பவும் ஒன்னாவே சுத்தி கிட்டிருந்திருக்கலாம்.. “ என்று கண் சிமிட்டி சிரித்தவள் மலரின் முகத்தை காண, தானாக ஒரு கேலி + குறும்பு புன்னகை வந்து ஒட்டி கொண்டது கயலுக்கு..

கயலின் பார்வையில் இருந்த மாற்றம் புரியாமல் தன் புருவங்களை உயர்த்தி என்னவென்று கேட்க

“ஹா ஹா ஹா...

கன்னத்தில் என்னடி காயம் ?

இது ஹார்ட் மெக்கானிக் செய்த மாயம்..

கனி உதட்டில் என்னடி தடிப்பு ?

என் டாக்டர் அண்ணனால் வந்த வெடிப்பு



என்று கிண்டலாக பாட அவசரமாக குனிந்து தன் கன்னத்தை ஸ்கூட்டியின் கண்ணாடியில் பார்க்க, நேற்றைய சீண்டலில் தன் கணவனின் கை விரல் நகம் பட்டு லேசாக கோடிட்டிருந்தது தெரிந்தது...

உடனே கன்னம் சிவக்க, “சீ போடி.. “ என்று வெட்கபட்டு சிரித்தாள் மலர்

“பார்டா.. இந்த ரௌடி மலருக்கு கூட வெட்கம் எல்லாம் வருதே..எப்படி இருந்த புள்ளையை இப்படி மாத்திட்டாரே என் வசி அண்ணா..நான் கூட ரொமப் அமைதியான டாக்டர் னு நினைச்சேன்.. உண்மையிலயே பெரிய ஆள்தான்.. “ என்று கண் சிமிட்டி சிரித்தாள் கயல்..

“ஹே.. அடங்கு டீ. ஏதோ கல்யாணம் ஆய்டுச்சே.. கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமா இருக்கலாம்னு அடக்கி வாசிச்சா நீ ரொம்ப ஓவரா பேசற.. அப்புறம் நீ பழைய மலரை பார்க்க வேண்டி இருக்கும் .. ஜாக்கிரதை.. “ என்று கை விரல் நீட்டி மிரட்டினாள் மலர் தன் தோழியை முறைத்தவாறு..

“ஐயோ.. வேண்டவே வேண்டாம்.. எனக்கு அந்த அந்நியன் இல்லை அந்நியனி வேண்டாம்.. இந்த க்யூட் அன்ட் ஸ்வீட் பனிமலர் தான் பிடிச்சிருக்கு. நீ இந்த கெட்டப் ஐயே மெய்ன்டெய்ன் பண்ணு தாயே.. “ என்று சிரித்தாள்..

“ஹ்ம்ம் அது.. “ என்று அவள் முதுகில் தட்டியவாறு இருவரும் முன்னே நடந்தனர்..

“ஹ்ம்ம் எப்படியோ மலர்.. உன்னை இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நீ எப்பவும் இப்படியே சிரிச்சுகிட்டே இரு.. “ என்று இலகிய குரலில் சொன்னாள் கயல்..

“ஹா ஹா ஹா எனக்கு என்னடி.. நான் எப்பவுமே சிரிச்சுகிட்டே இருக்கிற ஆள்தான்.. நடுவுல கொஞ்சம் ட்ராக் மாறிடுச்சு. எப்படியோ அந்த ஈஸ் என்னை மீண்டும் பழைய ட்ராக் க்கு கூட்டி வந்திட்டார்..

ஹ்ம்ம் அப்புறம் உன் சைட் எப்படி போய் கிட்டிருக்கு? “ என்று தன் தோழியை பற்றி விசாரித்தவாறு மற்ற கதைகளை பேசியவாறே அவர்கள் சந்திக்க வேண்டிய புரபசர் அறை இருக்கும் தளத்திற்கு சென்றனர்..

அவர்கள் முன்னதாகவே அப்பாய்ன்ட்மென்ட் வாங்கி இருந்ததால் நேராக அவரை சந்தித்து தங்களுக்கு வேண்டிய தகவல்களை வாங்கி கொண்டு அவரிடம் விடை பெற்று கிளம்பினர்..

கயல் அவள் அலுவலகத்தில் பர்மிசன் போட்டு வந்திருப்பதால் அங்கு செல்ல வேண்டும் என்க, மலரும் அந்த NGO அலுவலகத்துக்கு செல்லும் வேலை இருப்பதால் இருவரும் விடை பெற்று தங்கள் வாகனங்களை எடுத்து கொண்டு கிளம்பினர்..

கயலின் கேலியை எண்ணி சிரித்தவாறு தன் ஸ்கூட்டியை ஓட்டி கொண்டிருந்தாள் மலர்..

சிறிது துரம் சென்றதும் அவள் அலைபேசி ஒலித்தது.. ஒருவேளை அவள் கணவனாக இருக்குமோ? என்று எண்ணிய அடுத்த நொடி அவள் உதட்டில் வெட்கம் கலந்த புன்னகை மிளிர வண்டியை சாலையின் ஓரமாக நிறுத்தியவள் தன் ஹேண்ட் பேக் ஐ திறந்து தன் அலைபேசியை வேகமாக எடுத்து அதன் திரையை பார்த்தாள்..

அதில் ஒளிர்ந்த பெயரை கண்டதும் முகத்தை சுழித்தாள் மலர்..

“சே.. நான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தா இவளுக்கு பிடிக்காதே.. என் சந்தோஷத்தை அழிக்கவென்றே காத்து கொண்டிருப்பாள் போல.. இப்ப எதுக்கு என்னை கூப்பிடறா? “ என்று யோசித்தவாறு அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தாள் மலர்..

“ஹாய் மலர்.. ரொம்ப சந்தோஷம் நீயும் வசியும் உங்கள் வாழ்க்கையை ஆரம்பித்ததற்கு.. “ என்று உற்சாகமாக பேசினாள் மித்ரா..

அவள் குரலில் தெரிந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கண்ட மலருக்கு குழப்பமாக இருந்தது...

“ஆக்சுவலா இவள் எனக்கு வில்லியாக இருந்தால் இந்த விசயத்துல அவள் டென்ஷன் தான ஆகி இருக்கணும்.. திட்டணும்..இல்லை சத்தம் போடணும்.. ஆனால் இவள் கூலாக சிரிச்சுகிட்டே பேசறாளே.. இது கனவா இல்லை நனவா ?” என்று குழம்பி தன் கையை கிள்ளி பார்த்து கொண்டாள்..

“ஹா ஹா ஹா... என்னடா அன்னைக்கு அப்படி பேசினவ இன்னைக்கு இவ்வளவு சந்தோஷமா பேசறாளே னு குழப்பமா இருக்கா? .. உன் கையை கூட கிள்ளி பார்த்திருப்பியே..

ஹ்ம்ம்ம் அன்னைக்கு பேசினதும் நான்தான் இன்னைக்கு பேசறதும் நான் தான்..அன்னைக்கு எங்க நீ வசிக்கு ஏத்தவ இல்லைனு நினைச்சு அப்படி பேசினேன்..

இன்னைக்கு அவன் முகத்துல இருக்கிற மகிழ்ச்சியை பூரிப்பை பார்த்ததும் அதற்கு காரணமான உன்னை எனக்கு பிடிக்க ஆரம்பித்து விட்டது.. ஏனா எனக்கு என் வசி, அவனோட சந்தோஷம் தான் முக்கியம்..

அவன் எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கணும்.. அது உன்னால அவனுக்கு கிடைக்கிறதுனா சந்தோஷம்...

வசி என்கிட்ட எல்லாம் சொல்லிட்டான்...உங்கள் வாழ்க்கையை ஆரம்பித்ததுக்கு என் வாழ்த்துக்கள்..” என்று சிரித்தாள் மித்ரா..

மலருக்கு அவள் சொல்லியதையெல்லாம் கிரகித்து கொள்ள சில நொடிகள் ஆனது..

அதுவும் அவள் சொன்ன வசியின் சந்தோஷம்தான் முக்கியம் என்று சொன்னது ஒரு நல்ல நட்பின் அடையாளமாக அவளுக்கு தெரிய மித்ரா மீதான அவளுடைய எண்ணம் மாற ஆரம்பித்தது..

“ஒரு வேளை இவளும் நல்லவள் தானோ?.. நான் தான் ஆரம்பத்தில் இருந்தே அவளை போட்டியாக என் எதிரியாக எண்ணி விட்டேனா? எங்க விசயத்தை கூட இவளிடம் சொல்லி இருக்கிறான் என்றால் தன் கணவனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவள் தப்பாக மாட்டாள்..

தன் கணவன் அப்படி தப்பான நபரை நண்பர்களாக சேர்த்து கொள்ள மாட்டான்.. “ என்று அவசரமாக யோசித்தவள் மித்ராவின் மீதான தன் எண்ணத்தை அழித்து அவளை நல்லவளாக உருவக படுத்தினாள்..

அதற்கு தகுந்த மாதிரி மித்ராவும் முன்பு இருந்த ஒரு பகட்டை, திமிரை விடுத்து அவளிடம் உருகி பேசினாள்..

“என்னையும் உன் பிரண்ட் ஆ ஏத்துக்கறியா? “ என்று குழைந்து ஏக்கமாக கேட்க மலர் உடனே உருகி விட்டாள்..

“ஸ்யூர் மித்ரா... “ என்று சிநேகமாக புன்னகைத்தாள் மலர்..

பின் சிறிது நேரம் வசியை பற்றி அவனுக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? அவனிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று அவளுக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தாள்..

மலருக்குமே அது எல்லாம் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.. ஓரளவுக்கு தன் கணவனை பற்றி அவள் முன்பே புரிந்து வைத்திருந்தாலும் அவனை பற்றி முழுமையாக இன்னும் தெரியாது.. அவர்கள் தான் இன்னும் மனம் விட்டு பேசவில்லையே

பேசுமுன்னே தான் அவன் ஆக்சனில் இறங்கிவிட்டானே.. “ என்று மீண்டும் கன்னம் சிவந்தவள் மித்ரா சொன்ன டிப்ஸ் ஐ எல்லாம் கவனமாக கேட்டு கொண்டாள்..

அவள் சொல்லியதெல்லாம் அவளுக்கு பயனுள்ளதாக இருக்க, கடைசியாக அவள் சொன்ன ஒரு விசயத்தையும் அவள் நன்மைக்காகவே என்று எடுத்து கொண்டாள்...

அவள் சொன்ன விசயத்தை கேட்டதும் முதலில் யோசித்தாலும் மித்ரா அவளை யோசிக்க விடாமல் அவளுக்கு விளக்கம் அளித்து மலரை அவள் சொன்ன விசயத்தை ஏற்று கொள்ள வைத்தாள்..

பின் சிறிது நேரம் மற்ற விசயங்களை பேசிவிட்டு அலைபேசியை அணைத்தனர்..

மித்ராவின் தேன் கலந்த குழைந்த அக்கறையான பேச்சால் அவள் தேனுடன் கலந்திருந்த விசத்தை அறியாமல் போனாள் மலர்.

இதுவரை எதிரியாக இருந்தவள் இப்பொழுது திடீரென்று நட்பாக வலிய வந்து பழகுவதற்கான காரணத்தை ஆழ்ந்து யோசித்திருந்தாள் மித்ரா கலந்திருந்த விசத்தை பற்றி தெரிய வந்திருக்கும்..

ஆனால் அவளை அடுத்து யோசிக்க விடாமல் அவன் கண்வனின் அழைப்பு வந்தது.

மித்ராவின் அழைப்பை அணைத்ததும் உடனேயே அவள் அலைபேசி மீண்டும் ஒலிக்க, அது அவள் கணவன் என தெரிய, மீண்டும் அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்..

“ஹாய் ஜில்லு... “ என்ற அவனின் கிறங்கிய குரலில் மித்ரா வை பற்றி மறந்து போனாள் மலர்...

அவளை பிரிந்து ஒரு இரண்டு மணி நேரம் கூட அவனால் இருக்க முடியவில்லை என்றும் உடனே அவளை பார்க்க வேண்டும் போல இருக்கு என்று கணவனுக்கே உரித்தான காதல் மொழிகளை பொழிய அதை கேட்டவள் பாகு போல உருகி போனாள்..

அவளுக்குமே அவனை இப்பயே பார்க்க வேண்டும் என்ற ஆவலாக இருந்தது.. ஆனாலும் தன்னை மறைத்து கொண்டு

“ஹலோ.. மெக்கானிக்.. முதல்ல உங்க பேசன்ட்ஸ் ஐ பாருங்க.. பாவம் உங்களுக்காக எத்தனை பேர் காத்திருக்காங்க.. அவங்களை எல்லாம் அப்படி காக்க வச்சுட்டு பொண்டாட்டி கூட கொஞ்சி கிட்டிருந்தா நல்லாவா இருக்கு..

“ட்யூட்டி பர்ஸ்ட்... “ என்று செல்லமாக மிரட்டினாள்..

“ஹா ஹா ஹா நானும் அப்படி இருந்தவன் தான்.. என்னையே இப்படி பொண்டாட்டி தாசனா மாத்திடாளே இந்த கேடி ஜில்லு.. “ என்று சிரிக்க

“ஹலோ.. நான் கேடியா?? நீங்கதான் கேடி.. ப்ராட்.. அத்தைகிட்ட எப்படி எல்லாம் பொய் சொன்னீங்க.. “ என்று சிணுங்கினாள்..

சாலையின் ஒரத்தில் அதுவும் சென்னையின் கொளுத்தும் வெய்யிலில் நின்றிருந்தவள் தன் கணவனின் காதல் மழையில் நனைந்து கழித்து இருந்ததால் அந்த வெயிலும் அவளுக்கு காஷ்மீர் குளிர் காயும் தனலாகவே தெரிந்தது..

அவளை கடந்து செல்பவர்கள் எல்லாரும் அவளை ஒரு மாதிரி பார்த்து சென்றனர்... ஆனால் மலரோ யாரையும் கண்டு கொள்ள்வில்லை..

சிறிது நேரம் அவனுடன் கொஞ்சியவள் பின் மனமே இல்லாமல் இருவரும் அலைபேசியை அணைத்து பின் தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணினாள்..

தன் கணவன் தன் மீது வைத்திருக்கும் அன்பு புரிய உள்ளுக்குள் சிலிர்த்து போனாள்.. கூடவே மித்ரா அவனை பற்றி சொன்னதெல்லாம் நினைவு வர, கடைசியாக அவனுக்கு பிடிக்கும் என்று அவள் சொன்ன ஒரு விசயத்தை செயல் படுத்த முடிவு செய்தாள்..

யோசிக்காமல் அவள் எடுத்த அந்த முடிவு அவள் வாழ்க்கையில் பெரும் சூறாவளியை கொண்டு வந்து சேர்க்க போகிறது என அறியவில்லை மலர் அப்பொழுது..

மலரிடம் பேசி வைத்த மித்ரா பெரும் உற்சாகத்தில் இருந்தாள்..

நேற்று இரவு வசியை பிடிக்க முடியாமல் போய் விட, மறுநாள் காலை எழுந்த உடனே அவனுக்கு அழைத்தாள் அங்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள.. ஆனால் வசி கடைசி வரை அவள் அழைப்பை ஏற்கவில்லை..

அதனால் கோபமாக கிளம்பி மருத்துவமனைக்கு வந்தவள் அங்கு தனக்காக காத்திருக்கும் கற்பிணி பெண்களை பார்த்ததும் அவள் உள்ளே இருந்த கைனிக் மித்ரா விழித்து கொண்டாள்.

தன் ஆற்றாமையை பின்னுக்கு தள்ளி அவர்களை பரிசோதித்து முடித்தவள் மதிய உணவிற்காக வெளி வர, அப்பொழுதுதான் வசி உள்ளே வருவது தெரிந்தது..

அவன் நடையில் இருந்த துள்ளலும் அவன் முகத்தில் தெரிந்த மெல்லிதான வெட்கம் கலந்த பூரிப்பும் அவனை வேற ஒருவனாக காட்டியது.. இதுவரை அவள் பார்த்து பழகிய வசீகரன் அல்ல இவன் என உறைத்தது..

அவன் முகத்தில் இருந்தே நேற்று இரவு அவள் எது நடக்க கூடாது என்று காவல் காத்தாளோ அது நடந்து விட்டது என புரிய உள்ளுக்குள் மீண்டும் கொதிக்க ஆரம்பித்தாள்..

அவனை முழுவதுமாக வேற ஒருத்தியிடம் இழந்து விட்டதாக மனம் துடித்தது.. ஆனாலும் ஒரு சிறு நம்பிக்கையாக அவனை இழக்க கூடாது என்ன செய்யலாம் என்று அவசரமாக அவள் மனதில் தயாரித்து வைத்திருந்த செக் லிஸ்ட் ஐ அவசரமாக புரட்ட, அதில் ஒரு திட்டம் ஸ்ட்ரைக் ஆனது..

அதுதான் பகையாளியை உறவாடி கெடுப்பது என்பது.. அதை வைத்து அவசரமாக ஒரு திட்டத்தை தீட்டினாள்.

இதுதான் வசியை மலரிடம் இருந்து பிரிக்கும் கடைசி ஆயுதம் என முடிவு செய்தவள் தன்னை மறைத்து கொண்டு நேராக வசியிடம் சென்றவள் அவள் அழைப்பை ஏற்காததற்கு அவனை திட்டி தீர்க்க, அவனுமே சிரித்து கொண்டே அவளுக்கு சமாதானம் சொன்னான்..

மீண்டும் அவன் வாயை கிளறி மறைமுகமாக நேற்று நடந்தததை உறுதி செய்து கொண்டவள் அடுத்து செய்ய வேண்டியதை திட்டமிட்டாள்.. அதன் படி வசியிடம் விடைபெற்று வந்தவள் மலரை அழைத்து அவளுடன் நட்பு பாராட்டினாள்..

இல்லை நட்பு பாராட்டுவதை போல பசப்பினாள்.. மலரும் முதலில் நம்பவில்லை என்றாலும் மித்ராவின் பேச்சில் இருந்த அக்கறையை புரிந்து கொண்டவள் இறுதியில் மித்ராவை முழுவதுமாக நம்ப ஆரம்பித்து அவளை தன் தோழியாக, நலம் விரும்பியாக ஏற்று கொண்டாள்..

அதை எண்ணி ஒரு ஏளன சிரிப்பை சிரித்த மித்ரா

“எப்படியோ அந்த முட்டாள் பெண்ணை நயமாக பேசி நம்ப வச்சாச்சு.. இதுதான் நான் அவளை தாக்கும் கடைசி ஆயுதம்..கண்டிப்பாக இந்த ரவுண்ட் ல் நான்தான் ஜெயிப்பேன்..

என் வசியை அவளிடம் இருந்து பிரிப்பேன்.. அவன் எனக்கு மட்டும்தான் .. ஆமாம்.. எனக்கும் மட்டும் தான்... “ என்று குரூரமாக சிரித்து கொண்டாள் மித்ரா..

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!