காதோடுதான் நான் பாடுவேன்-22


அத்தியாயம்-22
ன்று இரவு தன் மூத்த மகனுக்காக ஆவலோடு காத்து கொடிருந்தார் சிவகாமி...

அந்த போட்டோவை பார்த்ததில் இருந்தே அவர் மனதுக்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி.. அதுவும் சண்முகத்திடம் பேசிய பிறகு நல்ல குடும்பமாக இருக்க, இந்த பொண்ணே எப்படியாவது தன் மருமகளாக வந்து விட வேண்டும் என்று நொடிக்கொருதரம் அந்த வேலனை வேண்டி கொண்டிருந்தார்...

இரவு டைனிங் டேபிலில் மகிழன் ம் அகிலாவும் அமர்ந்து இருக்க, சிவகாமி அவர்களுக்கு எடுத்து வைத்து விட்டு தானும் இரண்டு சப்பாத்தியை தட்டில் போட்டு கொண்டு அமர்ந்தார்...

ஆனால் அவர் கண்கள் என்னவோ இங்கில்லை... அடிக்கடி வாசல் பக்கமே சென்று வந்தது...

மகிழனும் அகிலாவும் அதை கண்டு கண்ணால் ஜாடை காட்டி என்ன என்று கேட்க இருவருக்கும் ஒன்ரும் தெரியவைல்லை என்றனர் சைகையால்...

பின்

"ஹ்ம்ம்ம் என்னமா விசேசம் இன்னைக்கு?? உன் அருமை மூத்த மகனை இவ்வளவு ஆவலா எதிர்பார்த்துகிட்டிருக்கீங்க?? " என்றான் மகிழன்...

"ஹீ ஹீ ஹீ .. அதெல்லாம் ஒன்னும் இல்லையே... சும்மாதான் டா பார்த்துகிட்டிருக்கேன்.. "என்று சமாளித்தார்....

"நம்பிட்டோமே..... " என்று இருவரும் கோரசாக ராகம் இழுக்க, அவர்களை பார்த்து முறைத்தார் சிவகாமி...

"ராஜா மாதா சிவகாமி தேவி... நீ எப்ப எப்படி இருப்பனு எங்களுக்கு தெரியும்.. இன்னைக்கு என்னவோ சம்திங் ஸ்பெஷல்.. உன் மூஞ்சியில ஒரு ஒளி வட்டம் தெரியுதே... what is the matter?? " என்று கண் சிமிட்டினாள் அகிலா...

'போடி வாலு.. அதெல்லாம் ஒன்னும் இல்லை.. நீ முதல்ல வாயை மூடிகிட்டு சாப்பிடு.. " என்று செல்லமாக அதட்டினார்

"ஹா ஹா ஹா வாயை மூடிகிட்டு எப்படி மாதா சாப்பிடறது?? " என்று சீரியசாக சொல்ல,

"ஐயோ.. இது பழைய மொக்க ஜோக் டீ.. இத இன்னும் நீ விடலையா.. " என்று தலையில் அடித்துக் கொண்டான் மகிழன்....

"ஆமா... இந்த போலிஸ்கார ஸ்ட்ரிக்ட் ஆபிசர்க்கு தங்கச்சியா பொறந்தா இந்த மாதிரி பழைய ஜோக் தான் தெரியும்.. அந்த ஸ்ட்ரிக்ட் ஆபிசர் எங்க எல்லார் கிட்டயும் சிரிச்சு பேச விடறான்??

எப்ப பார் படி படி னு .. சிரிச்சா எதுக்கு சிரிக்கிற?? சத்தமா சிரிக்க கூடாது பிரண்ட்ஸ் கூட பேசக்கூடாது னு ரூல்ஸ் வேற .. இதுல நான் எப்படி  அப்டேட் ஆ இருக்கிறதாம்?? பேசாம நான் வேற வீட்ல தங்கச்சியா பொறந்திருக்கலாம்.. "என்று முகத்தை நொடித்தாள் அகிலா....

"ஹா ஹா ஹா .. நீ மட்டும் வேற வீட்ல பொறந்திருந்த பொறந்த முதல் நாளே உன்னை வச்சு சமாளிக்க முடியாம அனாதை தொட்டில் ல போட்டுட்டு வந்திருப்பாங்க..

ஏதோ நாங்களாச்சும் உன்ன வைச்சு சமாளிச்சுகிட்டிருக்கோம்ம்..." என்று சிரித்தான் மகிழன்...

"ஐய.. போடா மங்கி மகி.. நீ சொல்றது மட்டும் என்ன.. இதுவும் பழைய டயலாக் தான்... என்னவோ பெருசா சாப்ட்வேர் என்ஜினியர் னு பெருமை அடிச்சிக்கிற.. உனக்கும் லேட்டஸ்ட் ஆ எதுவும் தெரியாதா... வவ்வே.. " என்று பழிப்பு காட்டி அவனுடன் வம்பு இழுத்துக் கொண்டிருந்தாள் அகிலா...

இருவரும் மாறி மாறி சண்டை போட்டு கொண்டிருப்பதை ரசித்தவாறு தன் உணவை உண்டாலும் அவர் கவனம் என்னவோ வாசல் பக்கமே இருந்தது...

அவர் எதிர்பார்த்த மாதிரி நிகிலன் வரவே இல்லை.. இரவு 12 மணிக்கு மேல வந்தவன் வரவேற்பறையில் சோபாவில் அமர்ந்தபடியே உறங்கி கொண்டிருந்த தன் அன்னையை கண்டதும் அவர் அருகில் சென்றவன் ஒரு ஆழ்ந்த பார்வையை செலுத்தினான்..


வர் அயர்ந்து உறங்குவது தெரிந்ததும் அவரை நேராக சோபாவில் படுக்க வைத்து அவர் அறைக்கு சென்று ஒரு போர்வையை கொண்டு வந்து அவருக்கு போர்த்தி விட்டு ஏதோ யோசனையுடன் தன் அறைக்கு சென்றான்....

மறுநாள் காலையில் தன் காலை ஓட்டத்தை முடித்து கொண்டு திரும்பிய நிகிலன் வரவேற்பறையில் அமர்ந்து தினசரியை புரட்டி கொண்டிருக்க, அவ்ன் அருந்தும் அந்த கஞ்சியை கொண்டு வந்து வைத்து விட்டு அவன் அருகில் அமர்ந்தார் சிவகாமி...

பேப்பரில் மூழ்கி இருந்தவன் தன் தலையை திருப்பாமல்

"ஹ்ம்ம்ம் சொல்லு மா... என்ன விசயம்?? எதுக்காக நேற்றில் இருந்து என்னை எதிர்பார்த்துகிட்டிருக்கீங்க?? "என்றான் குறும்பாக சிரித்தவாறு...

"இந்த பய எப்படி தான் என் மனதை கண்டு பிடிப்பானோ?? " என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டவர்

"ஹீ ஹீ ஹீ .. அதெல்லாம் ஒன்னும் இல்ல பெரியவா... " என்று சமாளித்தார்....

தினசரியை மூடி வைத்தவன் அவரிடம் திரும்பி அவர் தலையை பிடித்து ஆட்டி

“இந்த மண்டைக்குள்ள இருந்து ஏதோ குடையறது எனக்கு நல்லா தெரியுது மா .. என்ன விசயம் னு சொல்லுங்க.. "என்றான் மேலும் சிரித்தவாறு...

"ஹ்ம்ம்ம்ம் வந்து.... எல்லாம் உன் கல்யாணம் விசயம்தான் பெரியவா...ஒரு நல்ல இடம் வந்திருக்கு..பொண்ணு பார்க்க மஹாலட்சுமி மாதிரி இருக்கா.. நம்ம ஊர் பக்கம் தான்..

பொண்ணும் நல்ல குணமா இருக்க.. நீ இந்த போட்டோவ பார்த்து பிடிச்சிருக்கானு சொன்னினினா இந்த பொண்ணையே முடிச்சிடலாம்.... " என்று இழுத்தார் தயங்கியவாறு...

திருமணம் என்றதும் அதுவரை இழகி இருந்தவன் உடல் விரைத்து முகம் இறுக ஆரம்பித்தது...

"மா... எத்தன தரம் சொல்றது?? எனக்கு கல்யாணம் வேண்டாம்னு.. சொன்ன கேட்க மாட்டீங்க... " என்று சிடுசிடுத்தான்..

"டேய்.. பெரியவா.. எத்தன நாளைக்கு இப்படியே இருப்ப?? ...எனக்கு பின்னாடி உன்னை பார்த்துக்க... " என்று அவர் முடிக்கு முன்னே

"போதும் மா ... இதே டயலாக் அ 4 வருசமா கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சு... ஏன் கல்யாணம் பண்ணிக்காம இருக்க முடியாதா?? ...

அப்துல் கலாம் சார் கல்யாணம் பண்ணிக்காம நிம்மதியா சந்தோசமா இல்ல.. எத்தனையோ பேர் கல்யாணம் பண்ணிக்காம சந்தோசமாவே வாழ்ந்திருக்காங்க... நீங்க ஏன் இப்படி நச்சரிக்கிறீங்க?? " என்று மேலும் எரிந்து விழுந்தான்....

"ம்ம்ஹூம்... அவங்களுக்கெல்லாம் அந்த ரமணி மாதிரி தன் பையன தண்ணி தெளிச்சு விட்ட அம்மாவா வந்து மாட்டியிருப்பாங்க.. நான் என் பையன அப்படி விட்டுட முடியுமா ?? என் பையன் இப்படியே கல்யாணம் ஆகாம சாமியாரா இருக்க பார்த்துகிட்டெல்லாம் இருக்க முடியாது... " என்று மனதுக்குள் புலம்பியவர்

"எனக்கு மத்தவங்க எப்படி இருந்தாங்கனு அக்கறை இல்ல.. என் பையன் கல்யாணம் பண்ணி குடும்பம் குழந்த குட்டினு சந்தோஷமா இருக்கணும்... "என்று முறைத்தார்..

"ஏன் இப்பவும் நான் சந்தோசமா தான இருக்கேன்.. இன்னொருத்தி வந்துதான் நான் சந்தோசம இருக்கனும் என்றெல்லாம் ஒன்னும் இல்லை. இந்த பேச்சை விடுங்க.. "என்று முடிக்க முயன்றான்...

அவன் திருமணத்தை மறுப்பதை கண்டு சிவகாமிக்கு ஏதோ யோசனையாக இருந்தது.. சிறிது நேரம் யோசித்து கொண்டிருந்தார்...

"ஹ்ம்ம்ம் இப்ப என்ன மா யோசனை?? அடுத்து எப்படி மடக்கலாம் னா?? "என்றான் குறும்பாக சிரித்தவாறு...

"அது இல்ல பெரியவா.. எனக்கு எப்படி கேட்கறதுனு தெரியல.. உங்கப்பா இருந்தா இதையெல்லாம் உன்கிட்ட தயங்காம பேசியிருப்பார்.. அந்த பாவி மனுசன் இப்படி என்ன அம்போனு விட்டுட்டு போய்ட்டாரே.."என்று புலம்பியவர்

“இதெயெல்லாம் நான் கேட்க கூடாது தான்.. ஆனால் எனக்கு வேற வழி இல்ல...

வந்து... உனக்கு ஆக்சிடென்ட் ஆனப்போ ஏதாவது அடி எதுவும் பட்டிருச்சா... அதாவது டாக்டர் உன்னை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த கூடாதுனு எதுவும் சொன்னாரா?? .. " என்றார் தயங்கியவறு...

அவர் சொல்ல வருவதின் அர்த்தம் புரிய கோபத்திற்கு பதில் சிரிப்பு வந்தது நிகிலனுக்கு...

"மா ... இதுக்கு தான் நிறைய சீரியல் பார்க்காதங்கிறது.... கல்யாணம் வேண்டாம் னா உடனே லவ் பெயிலியர் இல்லனா ஏதாவது ஆக்சிடென்ட் ஆகி உடம்புல ஏதாவது கோளாறுனு தான் நினைக்கிறாங்க...

அப்படி எல்லாம் எதுவும் இல்ல மா.. I'm perfectly alright.. அதாவது எனக்கு அந்த மாதிரி எந்த குறையும் இல்ல.. போதுமா.. "என்று அவர் கன்னத்தை தன் இரு கையால் பிடித்து ஆட்டி சிரித்தான் ....

அதை கேட்டு நிம்மதி அடைந்த சிவகாமி,

“அப்ப ஏன்டா கல்யாணம் வேண்டாம்னு சொல்ற??.. ஏதாவது காரணத்தை சொல்.. உன் பிரண்ட்ஸ் ங்க எல்லாம் கல்யாணம் பண்ணிகிட்டு குடும்பமா இல்ல.. ஆதி ஒரு கல்யாணத்துக்கு இரண்டு கல்யாணம் பண்ணி பொண்டாட்டி புள்ளைனு எவ்வளவு சந்தோசமா இருக்கான்...

அந்த வசந்த் பயலும் கல்யாணம் பண்ணிட்டான்.. அவ்வளவு ஏன் உன்னை விட சின்னவன் கௌதம்.. அவன் கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோசமா இல்ல...அந்த வசி மட்டும் உன்ன மாதிரியே சுத்திகிட்டு இருக்கான்.. ஓரளவுக்கு மற்றவங்க எல்லாம் செட்டில் ஆகிட்டாங்க இல்ல..உனக்கு மட்டும் என்னடா?? ஏன் வேண்டாம்ங்கிற " என்று அவன் முகத்தை ஆர்வமாக பார்த்தார்....

அவனோ கௌதம் என்ற பெயரை கேட்டதும் அதை தொடர்ந்து ரமணியின் பழைய சிரித்த முகமும் இப்பொழுது இருக்கும் ஜீவன் இல்லாத சிரிக்க மறந்த முகமும் ஞாபகம் வர, அவன் உடல் விரைத்தது....

ஒரு நிமிடம் கண்ணை மூடி அமர்ந்து கொண்டான்.. அவன் உள்ளுக்குள் படும் வேதனை அவன் முகத்தில் வந்து போனது..

சிவகாமிக்கு ஒன்றும் புரியவில்லை.. கல்யாணம் பண்ணிக்க சொன்னா இவன் எதுக்கு இந்த அளவுக்கு வேதனை படறான்.. அப்ப அவன் மனசுக்குள்ள என்னவோ இருக்கும் போல... " என்று அப்பொழுது தான் புரிந்தது...

“அதை எப்படியாவது தெரிஞ்சுக்கணும்.. " என்று எண்ணியவர்

"ஹ்ம்ம் சொல்லுப்பா... நீ ஏன் கல்யாணம் வேண்டாம்கிற?? " என்றார் விடாமல்..

ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவன்

“ஹ்ம்ம்ம் நீங்க சொன்னீங்களே.. அவனுங்க எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி எவ்வளவு நிம்மதியா அவனுங்க குடும்பத்தோட சந்தோசமா இருந்தானுங்க...

அந்த பாழாய்போன கல்யாணம் னு ஒரு கருமத்தை பண்ணி புதுசா ஒருத்தி உள்ள வந்ததுக்கப்புறம் ஒவ்வொருத்தனும் அனுபவித்த வலியும் வேதனையும் எனக்குத்தான் மா தெரியும்...

ஆதி எவ்வளவு சந்தோஷமா இருந்தான்.. அவன் முதல் பொண்டாட்டி வந்த பிறகு எத்தனை பிரச்சனை..

பாவம் ராம் அங்கில் எவ்வளவு நல்ல மனுசன்.. வந்த மூனே மாசத்துல அவரையே இந்த உலகத்தை விட்டு அனுப்பிட்டா அந்த பிசாசு.. அவன் வாழ்க்கையையே வெறுத்து எப்படி பேருக்கு வாழ்ந்தா னு கூட இருந்த எனக்குதான் தெரியும் மா..

அந்த வசந்த் ம் அப்படிதான்.. வெளில பொண்ணு எடுத்தா மருமக அனுசரிக்க மாட்டானு சொந்த அண்ணா பொண்ணையே அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க அவன் அம்மா...

அந்த பொண்ணும் அப்படி தான்.. வந்த மூனு மாசத்துலயே சொந்த அத்தைனு கூட பார்க்காம அவங்க கிட்ட சண்டை போட்டுகிட்டு அவனை தனியா பிரிச்சு கூட்டிகிட்டு போயிருச்சு..

அவன் தங்கச்சி அவன் மேல எவ்வளவு பாசமா இருப்பா.. சொந்த அண்ணன்கிட்டயே நேர்ல பார்த்து பேச முடியாம மறஞ்சு நின்னு பார்க்கிற அளவுக்கு வச்சிருக்கு அந்த பொண்ணு...

அவ்வளவு ஏன்.நம்ம கௌதம்... ரமணி மா எவ்வளவு சந்தோசமா இருந்தாங்க.. அவர் முகத்துல சிரிப்பை தவிர எந்த கவலையும் நான் பார்த்ததில்லை...

இந்த நாய் லவ் பண்றேனு ஒரு பிசாச கூட்டிகிட்டு வந்து அந்த குடுபத்தோட நிம்மதி சந்தோசம் எல்லாம் அழிச்சுட்டான்...

மூர்த்தி அங்கிள் அவர்குடும்பத்து மேல எவ்வளவு உயிரா இருந்தார்.. ஒரே நொடியில அவரையும் இந்த உலகத்தை விட்டே அனுப்பிச்சிட்டா அந்த ராட்சசி...

என்னதான் இருக்கோ.. அந்த பயனும் இன்னும் பொண்டாட்டி பின்னாடியே சுத்திகிட்டு இருக்கான்.. அவன் அம்மா இப்படி தனியா இருந்தும் கொஞ்சம் கூட கவலைபடாம எப்பயாவது வந்து பார்த்துட்டு போறான்...

ரமணி மா அவர் மருமக பண்ணின கொடுமையெல்லாம் என்கிட்ட சொன்னாங்க...அவங்க முன்னாடி இருந்த முகத்தையும் இப்ப ஜீவனே இல்லாம வாழற வாழ்க்கையையும் நினைச்சு பார்த்தால் நானும் அந்த மாதிரி ஒரு தப்ப பண்ண மனசு வருமா?? சொல்லுமா..??

எனக்கு நீயாவது நல்லா இருக்கணும்... என் தம்பி தங்கச்சிய பார்த்துக்கிற பொறுப்பு எனக்கு இருக்கு..

பொண்டாட்டினு ஒருத்திய கூட்டி வந்து அவளால என் குடும்ப நிம்மதிய தொலைக்க விரும்பல....” என்று முடித்தான்...

அப்பொழுது தான் சிவகாமிக்கு இவன் ஏன் கல்யாணத்தை வேண்டாம்கிறானு புரிஞ்சுது..அதற்கு காரணம் அந்த ரமணி என புரிய அவர் கோபம் அந்த ரமணி பக்கம் திரும்பியது

“எல்லாம் அந்த வீணாப் போனவ அவ கதையை எல்லாம் என் பையன் கிட்ட ஏந்தான் சொன்னாளோ?? மாமியார் மருமக னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும்.. அத அனுசரிச்சு போகாம மருமக கிட்ட முறுக்கி கிட்டு வந்ததோட, அதை எல்லாம் இவன் கிட்ட சொல்லி இந்த பய அதை புடிச்சுகிட்டு தொங்கறானே...

நான் இப்ப எப்படி இவன் மனச மாத்தறது? “ என்று ரம்ணியை திட்டிக் கொண்டே அவசரமாக யோசித்தார்....

தன் தாயின் முகத்தில் இருந்த சிந்தனையை கண்டவன்

“ஹ்ம்ம் இப்ப புரிஞ்சுதாமா.. நான் ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்றேனு... “

“பெரியவா... எல்லா பொண்ணுங்களும் அந்த மாதிரி இருக்க மாட்டாங்க டா .. ஏன் நம்ம பாரதி எவ்வளவு நல்லா அவ மாமியார பார்த்துக்கறா.. ஆதியும் இப்ப சந்தோசமாதான இருக்கான்...

ஏதோ உன்னை சுத்தி இருக்கிறவங்களுக்கு தப்பாயிருச்சுனா உனக்கும் அதே மாதிரி தான் அமையும் னு இல்லடா...

அந்த முருகன் நல்ல மருமகளாதான் அனுப்பி வைப்பான்... அப்படியும் இல்லனாலும் நீ உன் பொண்டாட்டி புள்ளைனு சந்தோசமா இருந்தா போதும்.. எங்களுக்கென்ன இனிமேல்....

சின்னவன் இப்பயே கை நிறைய சம்பாதிக்கிறான்..

உங்கப்பா பென்சன் இருக்கு.. நான் பார்த்துக்குவேன் அகிலா வை ...” என்று அவர் முடிக்குமுன்னே

“போதும் மா... ஏன் என் தங்கச்சியை பார்த்துக்க கூட முடியாத அந்த கல்யாணமும் சந்தோசமும் எனக்கு தேவை இல்லை... எனக்கு குடும்பம் னா அது ரமணி, நீங்க, என் தம்பி, தங்கச்சி அவ்வளவுதான்.. அதுக்கு மேல வேற யாருக்கும் இடம் இல்லை.. இந்த பேச்சை இதோட விடுங்க.. “ என்றான் கோபமாக.....

“பாரேன்.. அப்ப கூடா அந்த ரமணியத்தான் முதல்ல சொல்றான் இவன்.. அந்த அளவுக்கு அவன மாத்தி வச்சுட்டாளே... கடங்காரி.... “ என்று மனதுக்குள் கருவியவர்

“டேய்... இந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணுடா..... “ என்று அவர் முடிக்கு முன்னே

“போதும் மா.. நான் ஒன்னு முடிவு எடுத்தா அது எடுத்தது தான்.. அத நானே மாத்திக்க மாட்டேன்.. அப்படி உங்களுக்கு மருமகள் பேரன் பேத்திய பார்க்கணும் னா அதான் உங்க செல்ல மகன் மகி இருக்கானே..

அவனுக்கு கல்யாணத்த பண்ணி வச்சு அழகு பாருங்க.. என்னை ஆள விடுங்க.. எனக்கு வேலை இருக்கு... “ என்று எழுந்தவன் வேகமாக தன் அறைக்கு சென்றான்...

அவன் செல்வதையே ஒரு வித இயலாமையுடன் பார்த்தவர் மனம் தளர்ந்து போனார்....கையில் இருந்த போட்டோவை மீண்டும் ஒரு முறை பார்க்க, அந்த பெண்ணின் சிரித்த முகத்தை கண்டு மீண்டும் வருந்தினார்....

“முருகா.. எப்படியாவது இந்த பொண்ணை என் மருமகளாக்கிடேன்... “ என்று மீண்டும் அந்த வேலனிடம் முறையிட்டார்....

தன் அண்ணனுடன் ஏதோ விவாதித்து கொண்டிருந்த தன் அன்னையின் முகத்தில் இருந்த கவலையையும் அவர் ஓய்ந்து போய் சோபாவில் தளர்ந்து அமர்ந்திருப்பதையும் கண்டவன் தன் உடற்பயிற்சியை நிறுத்தி விட்டு ஜிம்மில் இருந்து தன் முகத்தை துடைத்தபடியே வெளியில் வந்தான் மகிழன்...

தன் அன்னையின் அருகில் சென்றவன் அவர் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டு அவர் தோள் மேல் கையை போட்டு கொண்டவன்

“என்ன ராஜா மாதா சிவகாமி தேவி... இந்த சின்ன பாகுபலி இருக்கும் பொழுது என்ன கவலை உங்களுக்கு?? காலையிலயே கப்பல் கவுந்த மாதிரி இவ்வளவு கவலையா உட்கார்ந்திருக்கீங்க... என்ன சொல்றான் உங்க அரும மகன்?? “ என்றான் சிரித்தவாறு...

“ஆமான் டா.. அவன் என்னடான்னா உன்ன செல்ல மகன்கிறான்.. நீ என்னடான்னா அவனதான் நான் கொஞ்சறேனு அரும மகன்கிற... உங்க இரண்டு பேர் நடுவுலயும் மாட்டிகிட்டு நான் தான் முழிக்கிறேன்..

இதுக்குத்தான் பேசாம அந்த ரமணி மாதிரி ஒத்த புள்ளையோட நிறுத்தியிருக்கணும் “

என்று தன் கோபத்தை சின்னவனிடம் திருப்பினார் சிவகாமி..

“ஹா ஹா ஹா அந்த ரமணி ஆன்ட்டி ஒத்த பையன பெத்ததால தான் கௌதம் கை விட்ட உடனே வேற வழி இல்லாமல் முதியோர் இல்லத்தில போய் உட்கார்ந்திருக்காங்க..

நீங்க மூனு புள்ளைங்கள பெத்ததால ஒருத்தர் கை விட்டாலும் இன்னொருத்தர் பார்த்துக்குவோம் இல்ல....யூ ஆர் சோ லக்கி மா... அதோட நாங்க உன்னை அந்த மாதிரி விட்டுடுவோமா?? சோ நோ வொர்ரீஸ் மம்மி... “ என்று அவரை கட்டி கொண்டான்...

“அதோட காலையில் எப்பவும் பிரஸ்ஸா சிரிச்சுகிட்டே இருக்கணும்.... சரி சொல்லுங்க என்ன பிரச்சனை??.. “ என்றான்..

“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லடா... நீ போய் உன் வேலைய பார்.. “ என்று சமாளித்தார்...

“ஹ்ம்ம்ம் நம்பிட்டேன்.. நீங்க ஒன்னும் இல்லங்கிறதிலயே ஏதோ விசயம் இருக்குனு தெரியுதே.. அதோட நேத்து நைட் ல யிருந்து பார்த்துகிட்டே இருக்கேன்..

உங்க மண்டைக்குள்ள இருந்து ஏதோ ஒன்னு குடஞ்சுகிட்டே இருக்கு... என்கிட்ட சொல்லு மா.... “ என்று சிரித்தான்...

அண்ணனும் தம்பியும் என்னை கண்கானிக்கிறதுல மட்டும் ஒரே மாதிரி இருக்காணுங்க... மத்ததெல்லாம் எதிரும் புதிரும்தான்... “ என்று சலித்துக் கொண்டவர்
“ம்ச்... உன்கிட்ட சொல்லி என்ன ஆகப்போகுது?? எனக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்... “ என்று அலுத்துக் கொண்டார்...

“அடடா.. விசயம் என்னன்னே சொல்லாம புலம்பினா எப்படி மா.... “ என்றவன் அப்பொழுதுதான் அவர் கையில் இருந்த புகைபடத்தை கண்டான்.. உடனே அதை அவர் கையில் இருந்து பிடுங்கி பார்வையிட்டவன்

“வாவ்... யாருமா இந்த பொண்ணு?? ..சூப்பரா இருக்கா… “ என்றான் கண்கள் விரிய...

“ஹ்ம்ம்ம் உனக்கு தெரியுது.. அந்த வீணாப் போனவனுக்கு தெரியலையே.. போட்டோவை கூட பார்க்காம முறுக்கிகிட்டு போறான்.. “ என்று புலம்பினார்...

“யாருமா அந்த வீணாப் போனவன்?? ஓ.. உன் அருமை பெரிய மகனா?? ஏன் முறுக்கிகிட்டு போறான்?? “

“நீயே சொல்லுடா.. இந்த பொண்ணு எவ்வளவு அழகா இருக்கா.. இந்த பொண்ணு வீட்லயும் பேசிட்டேன்.. நம்ம பக்கத்து ஊர் தான்.. நல்ல குடும்பமா தெரியுது.. கல்யாணம் பண்ணிக்கடானா எனக்கு கல்யாணமே வேண்டாம்... நான் இப்படியே சாமியாரா போறேன் னு சொல்லிட்டு விடச்சுகிட்டு போறான்...

இந்த பொண்ண பார்த்த உடனே என் மனசுக்குள்ள இவதான் நம்ம வீட்டு மருமகள் னு தோணிச்சு.. அதுவும் அந்த முருகனே என் கண்ணுல காமிச்ச மாதிரி இந்த போட்டோ கோவில்ல நான் சுத்திவர்றப்போ என் கால் ல பறந்து வந்து விழுந்தது...

அத பார்த்த உடனே எனக்கு நம்பிக்கை வந்துச்சு.. இவதான் என் வீட்டு மருமகனு...

நானும் எவ்வளவு ஆசையா வந்தேன்.. இந்த பயலுக்காக நேத்திலயிருந்து காத்துகிட்டிருக்கேன்... சரி போட்டாவ பார்த்தாலாவது மனசு மாறுவானு காமிச்சா திரும்பி கூட பார்க்கல.. எல்லாம் அந்த ரமணியால வந்துச்சு..

என் பையன எப்படி மாத்தி வச்சிருக்கா.. கடன்காரி... “ என்று திட்டினார்...

“மா... இப்ப எதுக்கு அந்த ஆன்ட்டிய திட்டுறீங்க... உன் பையன் கல்யாணம் பண்ணிக்காதற்கு அவங்க என்ன பண்ணுவாங்க... “

“ஹ்ம்ம்ம் உனக்கு என்னடா தெரியும்.. என் கவலை எனக்கு... “ என்று மூக்கை உறிஞ்சினார் முகம் வாட்டத்துடன்.....

மகிழனுக்கு தெரியும் தன் அண்ணனுக்கு கல்யாணம் ஆகலையேனு தினமும் அவர் வருந்தி வருவது.. அவனிடம் தான் தினமும் புலம்புவார்... இன்று ஏனோ ரொம்பவும் சோர்ந்து போய் அவரை பார்க்கவே அவனுக்கு கஷ்டமாக இருந்தது..

“இந்த அண்ணன் ஏன் தான் இப்படி பண்றானோ?? அம்மாவுக்காகவாது கல்யாணம் பண்ணி தொலைக்க வேண்டியதுதான.. அப்படி என்ன பெரிய இலட்சியம்.?? “ என்று மனதுக்குள் திட்டியவன் அவன் கையில் இருந்த போட்டோவை திரும்பவும் ஆழ்ந்து பார்த்தான்..

அதில் மது அழகாக சிரித்து கொண்டிருந்தாள்.. அவளின் குழந்தைதனமான கள்ளம் கபடமற்ற முகத்தை கண்டதும் அவனுக்குள் ஏதோ இனம் புரியாத உணர்வுகள்...

கண்ணை மூடி சிறிது நேரம் ஆழ்ந்து யோசித்தவன் பின் சில கணக்குகளை போட்டு பார்த்தான்... அது சரியாக வரவும் முகத்தில் புன்னகை அரும்ப

“சரி மா... இப்ப உன் பிரச்சனை என்ன?? உன் மூத்த மகனுக்கு கல்யாணம் ஆகலைங்கிறதா?? இல்ல இந்த பொண்ணு உனக்கு மருமகளா வர முடியலைங்கிறதா?? “ என்றான்..

“இரண்டுமே தான் டா... “

“ஹ்ம்ம் இரண்டாவது கவலையை தீர்க்க என்கிட்ட ஒரு தீர்வு இருக்கு.. சொல்லவா?? “என்றான் புருவங்களைஉயர்த்தி...

“இரண்டாவது கவலையா?? நீ என்ன டா சொல்ற??”

“அதான் மா... இந்த பொண்ணு உனக்கு மருமகளா வர என்கிட்ட ஒரு வழி இருக்கு..” என்றான் புதிராக

“டேய்.. அது எப்படி உன் அண்ணன் கல்யாணத்துக்கு ஒத்துக்காம இந்த பொண்ணு எனக்கு மருமகளா வர முடியும்?? குழப்பாம தெளிவா சொல்லுடா..

எனக்கு நல்ல நாள் ல தெளிவா சொன்னாலே புரிய ரொம்ப நேரம் ஆகும்.. இதுல நீ வேற புதிர் போட்டு சொன்னா எனக்கு எப்படி விளங்கும்??.. நீ சொல்றத தெளிவாவே சொல்லுடா.. “ என்று அலுத்துக் கொண்டார்....

“ஹ்ம்ம்ம் மருமகள் னா நீ நினைக்கிற மாதிரி மூத்த மருமகளா இல்ல... உன்னோட சின்ன மருமகளா வரலாம்...”என்றான் சிரித்தவாறு..

“சின்ன மருமகளா?? அது எப்படி?? .. “என்று சிறிது நேரம் யோசித்தவர் சிறிது நேரம் கழித்தே அவன் சொன்னதின் அர்த்தம் புரிய

“டேய் சின்னவா?? நீ என்ன டா சொல்ற?? கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுடா... “ என்றார் குழப்பம் தீராமல்...

“ஐயோ.. அம்மா... இத விட இன்னும் விளக்கமா எப்படி சொல்றது??.. நீ சரியான மக்கு அம்மாதான்.. உனக்கு எப்ப பார் உன் மூத்த மகன் மட்டும் தான் கண்ணுக்கு தெரிவான்.. அவனுக்கு அடுத்து 2 வருசம் 9 மாசம் கழிச்சு பிறந்த என்னை கண்ணே தெரியாது..

எனக்கும் 27 வயது முடிஞ்சு 28 ஆரம்பிச்சு கல்யாண வயசு ஆயிடுச்சு... அவனுக்கு மட்டும் 26 வயசு ஆன உடனே பொண்ணு பார்க்க ஆரம்பிச்ச.. அப்ப ஆரம்பிச்சது.. அந்த தடியனுக்கு இப்ப 31 வயசு ஆகுது.. இன்னும் பார்த்துகிட்டே இருக்க..

நீ கொடுத்த புரோக்கர் பீஸ் ஐ வச்சே முதல்ல சைக்கிள் ல வந்துகிட்டிருந்த அந்த புரோக்கர் இப்ப பெரிய கார்ல இல்ல வந்து இறங்கறார்... மாசா மாசம் சம்பளம் வாங்கற மாதிரி உன்கிட்ட கமிசன் மட்டும் கரெக்டா வங்கிடறார்...

எனக்கும் 26 ம் முடிஞ்சு, 27ம் முடிஞ்சிருச்சு. நீ ஒன்னும் கண்டுக்கற மாதிரியே தெரியல...

எங்க டீம்ல எத்தன பொண்ணுங்க என்னை பார்த்து சைட் அடிக்கிறாங்க தெரியுமா.. அவ்வளவு ஏன் நிறைய பேர் நேரடியாவே வந்து புரபோஸ் பண்ணுச்சுங்க...

நான்தான் குட் பாயா எங்கம்மா பார்க்கிற பொண்ணதான் கட்டிக்குவேனு எல்லாத்தையும் ரிஜக்ட் பண்ணிட்டேன்..

நீ என்னடான்னா என்ன பத்தி கண்டுக்கவே மாட்டேங்கற.. எப்ப பார் அவன பத்தி மட்டுமே யோசிச்சு கிட்டிருக்க.. அதான் இப்பயாவது சொல்லலாம்னு... எடுத்து கொடுத்தேன்... “ என்று நிறுத்தினான்...

அவன் சொல்லியதை எல்லாம் கேட்ட சிவகாமி வாயடைத்து போய் ஆச்சர்யமாக பார்த்தவாறு அமர்ந்து இருந்தார்...

“என்னமா?? இப்படி சாக்காகி உட்கார்ந்துட்ட..?? “என்று அவர் தோளை பிடித்து உலுக்கினான்..

மெல்ல சுதாரித்து கொண்ட சிவகாமி

“டேய்.. மகிழா... நீ என்னடா சொல்ற?? உனக்கு 28 வயசு ஆயிடுச்சா?? டேய்.. இப்பதான் பிறந்த மாதிரி இருக்கு.. அதுக்குள்ள இவ்வளவு வருசம் ஓடிப்போச்சா??..

ஹ்ம்ம்ம் நீ சொல்றதும் கரெக்ட்தான்.. பெரியவனுக்கு கல்யாணம் ஆகலையேன்ற கவலையில் உன்னை மறந்துட்டேன் டா..

ஏன்டா நீயாவது முன்னாலயே சொல்லியிருக்க கூடாதா. “ என்றார் குற்ற உணர்வுடன்...

“ஹீ ஹீ ஹீ நானே எப்படிமா எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க னு நேரடியா சொல்றது/? எனக்கு வெக்கமா இருந்தது.. அதான் நீங்களா இந்த பேச்சை ஆரம்பிப்பீங்கனு நினைச்சேன்.. “ என்றான் மெல்லிய வெக்கத்துடன்...

அவன் வெக்க படும் அழகை ரசித்தவர்

“ஆமா.. இப்ப எப்படி தைர்யம் வந்ததாம் ?? “ என்றார் சிரித்தவாறு

“இந்த பொண்ணு முகத்தை பார்த்த உடனே அதோட நீங்க கஷ்ட படறத பார்க்க முடியல்.. அதான் இப்படி ஒரு வழி தோணுச்சு.. “ என்று சிரித்தான்..

பின் சிறிது நேரம் யோசித்தவர்

“சரிடா.. நீ சொன்ன மாதிரியே பண்ணலாம்.. உனக்கு இந்த பொண்ண புடிச்சிருக்கா?? “என்றார் ஆர்வமாக

“எனக்கு பிடிச்சிருக்கிறது முக்கியம் இல்லமா... உனக்கு பிடிச்சிருக்கணும்.. நீ சந்தோசமா இருக்கணும்... நீ எந்த பொண்ண காட்டினாலும் எனக்கு ஓகே தான்.. “என்று அவர் கழுத்தை கட்டி கொண்டான்...

அதை கண்டு நெகிழ்ந்து போனார் சிவகாமி...

“அந்த பெரியவனும் இவன் மாதிரி இருந்திருக்க கூடாதா?? எவ்வளவு சந்தோசமா இருந்திருக்கும்.. “ என்று பெருமூச்சை விட்டவர்

“ஆனாலும் பெரியவன் இருக்க உனக்கு எப்படிடா கல்யாணம் பண்றது?? “என்றார் தயங்கியவாறு...

“மா... கல்யணம் வேண்டாங்கிறவன போய் நாம என்ன பண்ண முடியும்?? சின்ன குழந்தையா இருந்தா அடிச்சு திருத்திடலாம்... அவனுக்கே உரைக்கணும் அம்மா எவ்வளவு கஷ்ட படறாங்கனு...

அவனுக்கு அவன் வைராக்கியம் தான் முக்கியம் னு போறான்.. நீ அவன தண்ணி தெளிச்சு விட்டுடுமா.. எப்படியோ போகட்டும்.. “என்றான் சிறிது கோபமாக

“டேய்.. அது எப்படி அப்படி விட முடியும்??.. “என்றார் அவனை முறைத்தவாறூ

“அப்பனா நீங்களும் தினமும் ஒரு போட்டோவ காட்டி கல்யாண பாட்ட பாடுங்க.. அவனும் உங்கள முறச்சுகிட்டே போகட்டும்.. அப்படியே கண்டின்யூ பண்ணுங்க... அதுக்குள் அவனுக்கு 50 வயசு ஆகிடும்.. நேரா 60 வது கல்யாணம் தான்..

இவன் கூட பிறந்த பாவத்துக்கு நானும் அவன் கூடவே சாமியார போய்டறேன்.. இப்ப நிம்மதியா?? “ என்றான் திருப்பி தன் அன்னையை முறைத்தவாறு..

“டேய்.. ஏன்டா இப்படியெல்லாம் சொல்ற?” என்று சிவகாமி கண் கலங்க அதற்குள் இறங்கி வந்தவன்

“சாரி மா.. கொஞ்சம் உணர்ச்சி வசபட்டுட்டேன்.. சரி விடுங்க உங்களுக்கு பிடிக்கலைனா வேண்டாம்.. “ என்றான் அந்த போட்டோவை மீண்டும் பார்த்தவாறு

தன் மகனின் முகத்தில் இருந்த ஆர்வத்தை புரிந்து கொண்டவர்

“சரிடா... நீ சொன்ன மாதிரியே நடத்தலாம்... இன்னும் அந்த பொண்ணு வீட்ல உன்னை புடிக்கணும்.. நான் இன்னைக்கே அவங்ககிட்ட பேசிட்டு சொல்றேன்... “ என்று சிரித்தார்...

“ஹ்ம்ம்ம் இப்படி சிரிச்சா எவ்வளவு நல்லா இருக்கு.. இப்பதான் நீ எங்க சிவகாமி தேவி.. “என்று அவர் கன்னத்தை பிடித்து கிள்ளியவன்

“சரிமா எனக்கு ஆபிஸ்க்கு லேட் ஆகுது.. நீங்க சீக்கிரம் பேசிட்டு சொல்லுங்க.. “ என்று எழுந்தவன்

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே……
அது என்னென்று அறியேனடி….

என்று உல்லாசமாக பாடியவாறு விசில் அடித்துக் கொண்டே துள்ளலுடன்  மாடி படியில் தாவி ஏறினான்...

அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை கண்டு இவனாவது நல்லா இருக்கட்டும் என்று தன் மனதை தேற்றி கொண்டவர் அந்த புகைபடத்தை மீண்டும் எடுத்து பார்த்துக் கொண்டார் சிவகாமி....

தான் போட்ட கணக்கு சரியா வரணும் என்று எண்ணியவாறே மாடிப்படியில் உற்சாகமாக தாவி ஏறி கொண்டிருந்தான் மகிழன்..

பாவம்... அவன் போட்ட கணக்கை விட அவனுக்கு மேல இருக்கும் அந்த ஆறுமுகன் வேற கணக்கை போட்டு தன் ஆட்டத்தை ஆடி கொண்டிருப்பதையும் அவனை வைத்து அந்த வேலன் அடுத்த காயை நகர்த்த போவதையும் அறியவில்லை மகிழன்...



Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!