என் மடியில் பூத்த மலரே-23



அத்தியாயம்-23

றுநாள் காலை அழகாக விடிந்தது..

வழக்கம் போல பாரதி எழுந்து குளித்து முடித்து அந்த ஆதவனை கொஞ்சி பின் கீழ சென்றாள்... சமையல் அறைக்கு சென்றவள் இருவருக்கும் காபி தயாரித்தாள்...

எதேச்சையாக ஜன்னலில் பார்த்தவள் அங்கு ஆதி ஜாகிங் செய்து கொண்டிருந்தான்... அவள் மனம் அவளை அறியாமல் அவனிடம் தாவியது...முன்னால் இருந்த அடர்ந்த முடி கற்றையாக காற்றில் ஆட அவன் ஓடிக்கொண்டிருக்கும் அழகையே ரசித்து கொண்டிருந்தாள்...

யாரோ தன்னை உற்று பார்ப்பது போல தோன்றவும் ஆதியும் திரும்பி பார்த்தான்... அவன் தன்னை பார்ப்பது தெரியவும் அழகாக புன்னகைத்தாள் அவனை பார்த்து...

குளித்து முடித்து புதுமலராக இருந்தவளை திடீரென்ரு பார்க்கவும் அப்படியே உறைந்து நின்றான் சில விநாடிகள்.. அவன் மனமும் அவளிடம் தாவியது... அதுக்குள் சுதாரித்து கொண்டவன் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளி வர அவளை திரும்பி முறைத்து விட்டு தன் ஓட்டத்தை தொடர்ந்தான் ...

அதைக் கண்ட பாரதியின் முகம் வாடியது...

“சே!! சிரிச்சா பதிலுக்கு ஒரு சின்ன ஸ்மைல் பண்ணாதான் என்னவாம் அவனுக்கு... காலையிலயே முறைக்கிறான்... சிடுமூஞ்சி..” என்று திட்டிகொண்டே தன் வேலையை தொடர்ந்தாள்...

ஆதிக்கோ அவன் கால்கள் தானாக ஓடினாலும் மனம் என்னவோ சமையல் அறைக்கே சென்றது... அவளை ஃப்ரெஸ்ஸாக பார்க்கவும் அப்படியே கவிழ்ந்து போனான்...

“இவள் என்னவோ என்னை பண்றாள் எனக்கு தெரியாமல்...இவளைக் கண்டாலே என் மனம் என் பேச்சை கேட்க மாட்டேங்குதே... கேடி.. “ என்று தன் கோபத்தை அவளிடமே திருப்பி அவளை முறைத்துவிட்டு சென்றான் அப்பொழுது...

அவன் முறைத்து விட்டு தன் ஓட்டத்தை தொடர்ந்தாலும் அவன் மனம் அவனுக்கு அடங்காமல் அந்த பாரதியிடமே சென்று நின்றது...அவளை சென்று பார்க்க தூண்டியது அவன் மனம்..

அதை அடக்கி சிறிது நேரம் ஓடியவன் அதற்கு மேல் தன் மனதை கட்டுபடுத்த முடியாமல் தன் ஓட்டத்தை நிறுத்தி திரும்பி வந்தான்.. ஹாலில் சிறிது நேரம் அமர்ந்தவன் பின் பாரதி கிச்சனில் ஏதோ உருட்டி கொண்டிருப்பதை கண்டு அங்கு சென்றான்..

“ஏய் பட்டிக்காடு .. என்ன உருட்டி கிட்டு இருக்க?? “ என்றான் சிரித்தவாறு

“ஆமா... இப்ப சிரி... அப்ப அப்படி முறைச்ச.. “என்று மனதுக்குள் திட்டி

அவனை முறைத்தவளின் பார்வை தானாக அவன் கையை பார்த்தது..அதை புரிந்து கொண்டவன்

“ஹ்ம்ம்ம் இப்ப பரவாலை...நீ போட்ட மருந்துல வலி எல்லாம் போயே போச்சு “ என்றான் குறும்பாக...

அவன் மருந்து என்கவும் நேற்று இரவு அவள் கொடுத்த முத்தம் நினைவு வர , அவள் முகம் சிவந்தது தானாக.. அவளின் சிவந்த கன்னத்தை கண்ட ஆதி தலை சுற்றி நின்றான்..ஏற்கனவே புதுமலராக மலர்ந்தவள் இன்னும் சிவந்து நாணி நிற்கவும் அந்த பனியில் நனைந்த சிவப்பு ரோஜாவை போல இருந்தாள் அவன் கண்ணுக்கு... அவளின் சிவந்த கன்னத்தை வருட நீண்ட அவனின் கையை கஷ்டப்பட்டு இழுத்துக்கொண்டான்...

பின் அவள் அருகில் சென்று நெருங்கி நின்று கொண்டு

“என்ன செய்யற?? “ என்றான்

அவள் ஒரு முட்டையை எடுத்து ஆம்லெட் போட ரெடி பண்ணி கொண்டு இருந்தாள்...அதைக் கண்டவன்

“ஏய்.. இரு.. நான் ஆம்லெட் போடறேன்... “ என்று அவள் கையில் இருந்ததை வாங்கினான்..

அவனின் அந்த நெருக்கம் பாரதிக்கு ஏதோ படபடப்பை கொடுத்தது... இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது...வயிற்றுக்குள் ஏதோ பட்டாம் பூச்சி பறப்பதை போல இருந்தது...

அப்பொழுதுதான் ஓடி விட்டு வந்திருந்தவனின் உடலில் இருந்து வந்த அந்த வேர்வை அவனின் ஆண்மையயும் , கம்பீரத்தையும் காட்டி இழுக்க, அவனோடு இன்னும் நெருங்கி நிற்க தூண்டியது அவள் மனம்.. அப்படியே அவன் தோளில் சாய்ந்து கொள்ள துடித்தது அவள் மனம்...இதுவரை அவள் அணுபவித்திராத அவஸ்தை + சுகம் பரவியது அவள் உள்ளே...

பின் மெதுவாக சுதாரித்துக் கொண்டவள்

“சே!! என்ன இப்படி ஒரு அவஸ்தை?? ... எனக்கு மட்டும் தான் இப்படி ஆகிறதா... ஒரு வேளை அவனுக்கும் இப்படித்தான் இருக்குமோ?? “ என்று ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள்...

அவனோ அவளை கண்டுகொள்ளாமல் ஆம்லெட் செய்வதிலயே மும்முரமாக இருந்தான்

“சே!!!! அவனுக்கு ஒரு பீலிங்ஸ் ம் இல்லை... நான் தான் புத்திகெட்டு அலையறேன் போல... “ என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டவள்

மெதுவாக அவன் அறியாமல் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டாள்...

ஒரு ஆர்வத்தில் எதேச்சையாக அவள் அருகில் நெருங்கி நின்றவனுக்கோ ஏண்டா... அப்படி நின்னோம் என்று இருந்தது...

அப்பொழுது தான் குளித்திருந்த அவளின் மேனியில் இருந்து வந்த அந்த சோப்பின் வாசமும் அவளின் வாசமும் கலந்து அவனை புரட்டி போட்டது... மிக அருகில் தெரிந்த அவளின் மெல்லிய இடையை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள துடித்த அவனின் உடலையும் மனதையும் கட்டுபடுத்த பெரும் கஷ்டமாகிப் போனது அவனுக்கு...

அவனாக விலகி நிற்கவும் அவன் மனம் ஒத்துக்கொள்ளவில்லை... அவளின் அருகாமை தந்த சுகத்தை இழக்க விரும்பாமல் அதை ரசிக்க ஆரம்பித்தது அவன் உள்ளம்

ஓரக்கண்ணால அவள் அறியாமல் அவளை கண்டவன் அவளும் அதே நிலையில் உருகி நிற்பதை கண்டு மனதுக்குள் சிரித்துக்கொண்டான்.. அதற்குள் அவள் கொஞ்சம் விலகி நிற்கவும்

“அப்பாடா... இந்த கேடி என்னை காப்பாத்திட்டா... இன்னும் கொஞ்ச நேரம் இவ பக்கத்துல இருந்திருந்தால் என்னையே கட்டுபடுத்த முடியாமல் போய்ருக்கும்...இந்த கேடி ரொம்ப டேஞ்சரானவ போல... இனிமேல் அவள் பக்கத்துலயே போகக்கூடாது.. “ என்று புலம்பியவாறு தன் வேலையை தொடர்ந்தான்..

ஒரு முட்டையை உடைத்து அவள் அடுப்பில் வைத்திருந்த சட்டியில் ஊற்றவும் அந்த வாசத்துக்கு பாரதிக்கு திடீரென்று குமட்டி கொண்டு வந்தது... எவ்வளவு முயன்றும் கட்டுபடுத்த முடியாமல் அருகில் இருந்த வாஷ்பேஸினுக்கு ஓடி வாமிட் பண்ணினாள்.

அதை கண்டதும் பதறிய ஆதி வேகமாக அவள் அருகில் வந்து அவள் தலையை மெல்ல பிடித்துக் கொண்டான்..

ஒரு இரண்டு நிமிடம் தொடர்ந்து வாமிட் பண்ணவும் டயர்ட் ஆகி தலை சுற்றி அவன் மேல் சரிந்தாள் துவண்டு...

அவள் மயங்கி சரிவதை கண்டு பயந்தவன் அவளை அப்படியே அள்ளிக்கொண்டு மாடிக்கு விரைந்தான்... அவளை படுக்கையில் கிடத்தியவன் முகத்தில் தண்ணிர் தெளித்தும் அவள் எழாமல் போக பயந்து போய் சுசிலாவுக்கு போன் பண்ண

அவரோ

“இதெல்லாம் சாதாரணமாக வருவது தான்.. பயப்படற மாதிரி ஒன்னும் இல்ல கண்ணா... கொஞ்ச நேரம் அவள அப்படியே விடு... இந்த மாதிரி ஸ்மெல் வராத ஐட்டமா சாப்பிட வை .. ரொம்பவும் வாமிட் வந்தால் நான் கொடுத்த மாத்திரையை போட்டுக்க சொல் “ என்றார்...

“மா... அவள் அப்படி வாமிட் பண்றா... நீங்க என்னவோ கூலா அப்படித்தான் இருக்கும் ங்கறீங்க..கரெக்ட் ஆ சொல்லுங்க என்னாச்சு அவளுக்கு?? “ என்று பதறினான்..

“டேய் கண்ணா... நீ பயப்படற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லை..பிரக்னென்சி டைம் ல இது மாதிரி தான் இருக்கும்.. நீயாவது போன் பண்ணி கேக்குற.. எத்தனை பேர் இந்த மாதிரி வாமிட் பண்ணா, உடனே அடிச்சுகிட்டு ஹாஸ்பிட்டலுக்கு ஓடி வருவாங்க தெரியுமா.. இதெல்லாம் பார்த்து எனக்கு பழகி போச்சு....

எல்லாம் உன் பேபியோட வேலைதான்... அவளை ஒழுங்கா சமத்தா உள்ள இருக்க சொல்லு.. பாரதிக்கு கொஞ்ச நேரத்துல சரியாகிடும்... “ என்று சிரித்துக் கொண்டே போனை வைத்தார்...

காலையில் மலர்ந்து சிரித்தவள் இப்ப கசங்கிய மலராக இருப்பதை கண்டவனுக்கு கஷ்டமாக இருந்தது...

பின் ஜன்னலை எல்லாம் திறந்து வைத்து விட்டு கீழ சென்று ஸ்மெல் வராமல் என்ன செய்ய என்று யோசித்து அருகில் இருந்த சாத்துக்குடி யை எடுத்து ஜூஸ் பண்ணிக் கொண்டிருந்தான்..

பின் அதை எடுத்துகொண்டு அவள் அறைக்கு வரவும், பாரதி எழுந்து அமரவும் சரியாக இருந்தது. அவள் அருகில் வந்து

“இப்ப எப்படி இருக்கு??.. “ என்றான் கனிவாக

“ஹ்ம்ம்ம் பரவாயில்லை.. “ என்றாள் சோர்வாக..

பின் ஆதி அந்த பழச்சாற்றை நீட்ட, அவள் அதை மறுக்க, அவன் முறைக்க அவனுக்கு பயந்து ஒரு வாய் வைத்தவளுக்கு மீண்டும் குமட்டிக் கொண்டு வந்தது.. அவள் எழுந்து செல்லு முன்னே அது முந்தி கொண்டு வரவும் அவன் மேலயே குமட்டினாள்...

பின் அதிர்ச்சியும் பயமுமாக அவனை பார்த்தாள்..அவன் என்ன திட்டப் போறானோ என்று.. அவளின் பயந்த முகத்தை கண்டவன்

“ஹே.. பரவாயில்லை விடு..என் பேபியோட வாமிட் தான... அதனால அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்.. நீ ப்ரியா இரு..

அப்புறம் நீ நேத்து என்ன கடிச்ச இல்ல.. அதுக்குத்தான் என் பேபி உன்னை இப்படி படுத்திறா... “என்று சிரித்தான்.. அதை கேட்டு

“ஐயோ!!! முருகா... இவன் படுத்தறதையே என்னால தாங்க முடியல.. இப்ப இவன் புள்ளயும் இவன் கூட சேர்ந்து படுத்த போகுதா... நீதான் என்னை காப்பாற்றனும்“ என்று மனதுக்குள் முனகிக்கொண்டாள்...

மீண்டும் அவன் பழச்சாற்றை நீட்ட அவள் வேண்டாம் என்று பாவமாக கெஞ்சவும்

“சரி.. நீ கொஞ்ச நேரம் அப்படியே படு.. நான் போய் இத வாஷ் பண்ணிட்டு வேற ஏதாவது எடுத்துட்டு வர்ரேன்.. என்று நகர்ந்தான்...

அவன் சென்றதும் படுக்கையில் விழுந்தவளுக்கு கண்ணெல்லாம் இருட்டி கொண்டு வந்தது.. அப்படியே கண் மூடி படுத்தாள்.. அவளுடைய மொத்த சக்தியும் வடிந்ததை போல இருந்தது....

சே!! என்ன இப்படி இருக்கு?? .. எப்படித்தான் இந்த அம்மா நாலு புள்ளைய பெத்துச்சோ!! .. “என்று நினைத்தவளுக்கு தன் அப்பா எப்படி தன் அம்மாவை தாங்கினார் என்று நினைவு வந்தது...

தம்பி பாரத் பிறந்தது அவ்வளவாக நினைவு இல்லை என்றாலும் தங்கை இந்திரா பிறந்தது அவளுக்கு நன்றாகவே நினைவு இருந்தது... அவள் வயிற்றில் உருவான நாள் ல இருந்தே அவள் அம்மா சோர்ந்து சோர்ந்து படுப்பதும் அதுக்கு அவள் தந்தை அவரை நடக்க கூட விடாமல் தாங்கியதும் நினைவு வந்தது..

அதுவும் பிரசவத்தின் பொழுது பாரதியும் கூடவே மருத்தவமனையில் இருந்தாள்... நாலாவது பிள்ளைதான என்று அசால்ட்டாக இல்லாமல் தன் அன்னையின் வலி உணர்ந்து தன் தந்தையும் துடித்தது அவளுக்கு இன்னும் நினைவு இருந்தது...

அவள் மனம் ஏனோ அவளையும் அறியாமல் அந்த மாதிரி ஒரு அரவணைப்பை எதிர்பார்த்தது இப்பொழுது...

பொதுவாக முறையாக திருமணம் செய்து கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு அவர்களுக்குள் அன்பையும் காதலையும் பரிமாறி பின் தாம்பத்யத்தில் திலைத்து அவர்களின் காதலின் அடையாளமாக ஜனிக்கும் குழந்தையை அது உருவான நாளிலில் இருந்தே இருவரும் ஆசையாக எதிர்பார்த்து தொட்டு தடவி மகிழ்வர்...

அந்த சமயங்களில் அந்த மனைவி மனதளவிலும் உடலளவிலும் ஒரு குழந்தையை சுமக்க தயாராகி விடுவாள்.. அவ்வாறு உருவாகும் குழந்தையை சுமக்கும்பொழுது அது தரும் வலிகளும் அந்த தாய்க்கு சுகமானதாக இருக்கும்.. மீறி துன்பப்படும்பொழுது அவள் கணவனின் அன்பையும் காதலையும் காணும்பொழுது அந்த வலியும் பறந்துவிடும்.. தன் ஆசை கணவனுக்காக எதையும் தாங்கும் சக்தி வந்து விடும் பெண்ணவளுக்கு....

ஆனால் பாரதியோ இதில் எதையும் அனுபவிக்காமல், ஒவ்வொரு ஸ்டேஜ் ஆக தாண்டாமல் எடுத்த உடனே குழந்தையை சுமக்கவும், அவள் உடல் தயாராக இருந்தாலும் மனதளவில் அவள் இன்னும் ஒரு தாயாக பக்குவ படவில்லை...

இன்னும் அவள் ஒரு விளையாட்டு பிள்ளையாகவே இருந்தாள்... தன் வயிற்றில் ஒரு உயிர் இருப்பதே அவள் முழுமையாக உணரவில்லை... ஏதோ அடுத்த வீட்டு குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்திருப்பதை போலத்தான் நினைத்து கொண்டிருந்தாள்....

ஒரு விளையாட்டாக எந்த ஒரு விளைவையும் அறியாமல் இந்த ஆட்டத்தில் இறங்கி விட்டாள்... ஆனால் அதன் விளைவை இப்பொழுதுதான் அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறாள்...

கொஞ்ச நேரம் படுத்து இருந்தவளுக்கு தன் அன்னையின் மடி தேடியது..

“அம்மா மடியில படுத்தா எப்படி சுகமா இருக்கும்?? ... “ என்று ஏங்கியது அவள் மனம்...

“ சே !! பக்கத்து வீட்டு அக்கா இந்த மாதிரி இருந்தப்போ வாமிட்க்கு போய் இப்படி அலட்டிக்கிறாங்கனு எப்படி கேலி பேசினேன்...

தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தாதான் தெரியுங்கிற மாதிரி அதை அனுபவிக்கும் பொழுது தான் அதோட வலி தெரியுது.. “ என்று புலம்பி கொண்டே கண் முடினாள்....

மீண்டும் குமட்டல் வருகிற மாதிரி இருந்தது.. ஆனால் அவளால் எழ கூட சக்தி இல்லை... அருகில் யாரையாவது கூப்பிடவும் யாரும் இல்லை...அனாதையாக கிடக்கும் தன் நிலையை நினைத்து கண்ணில் நீர் திரண்டது...

அப்பொழுதுதான் மஹாவின் நினைவு வந்தது அவளுக்கு...

“மஹாவிற்கும் இப்படிதான் இருக்குமோ?? அவளால் ஒரு சிறு வலியைக்கூட தாங்க முடியாதே... எப்படி இவ்வளவு வேதனையை தாங்குகிறாளோ?? என்று நினைத்தவளுக்கு ஈஸ்வரின் ஞாபகம் வர

“ஹ்ம்ம்ம் மாமா அவளை கஷ்டப்படாமல் பார்த்துக்குவார்... மஹா உண்டாவதற்கு முன்னயே அப்படி தாங்கியவர் இப்போ இன்னும் உள்ளங்கையில் வைத்து தாங்குவாரக்கும்... ஏன் அந்த பக்கத்து வீட்டு அக்கா மாமா கூட அப்படி பார்த்துகிட்டார் அந்த அக்காவை....” என்று நினைத்தவளுக்கு தனக்கு யாரும் அது மாதிரி பார்த்துக்க இல்லையே என்று ஏக்கமாக இருந்தது...

அதே நேரம் ஆதி கண் முன்னே வந்தான்...

“அவனும் தான் பதறினான் நான் வாமிட் பண்ணும் பொழுது..அவன் கண்ணிலும் எனக்கான கொஞ்சமேயான கவலை இருந்தது தான்.. அப்ப அவனுக்கும் என்மேல கொஞ்சமா அக்கறை இருக்கும் போல” என்று மகிழ்ந்தவள் அதற்குள்

“ம்ஹூம்.. அவன் எனக்காக செய்யலை... அவன் பிள்ளைக்காகத்தான் எல்லாம் செய்யறான் .. என்ன தான் அவன் தாங்கினாலும் அதில் ஒரு அன்னியத்தனம் தெரிந்தது..அவன் எதையும் உரிமையோடு செய்யலை..

ஒரு வேளை தப்பு பண்ணிட்டமோ?? இந்த ஆட்டத்தில் இறங்கி இருக்க கூடாதோ.. நான் இந்த குழந்தையை சுமக்கவே ஒத்துகொண்டிருக்க கூடாதோ இன்னும் என்னெல்லாம் கஷ்டப் படனுமோ?? “ என்று புலம்பியவள் குமட்டல் வராமல் இருக்க வாயை இறுக மூடி பல்லை கடித்துக்கொண்டு கந்த சஷ்டி கவசத்தை மனசுக்குள் சொன்னாள்....

சிறிது நேரம் கண் அயர்ந்தவள் அவள் அருகில் யாரொ அமரும் சத்தம் கேட்டு கண் விழித்தாள்...

ஜானகி தான் அமர்ந்து இருந்தார்...

“என்னாச்சுடா பாரதி?? என்ன என் பேத்தி ரொம்ப படுத்தறாளா ?? “ என்று மலர்ந்த சிரிப்புடன் அக்கரையாக விசாரித்தார் ஜானகி... அதைக் கண்டதும் பாரதியின் முகம் மலர்ந்தது

“சே!! இந்த அத்தைய எப்படி மறந்தேன்?? .. இவங்களுக்காகத் தானே இந்த ஆட்டத்திற்கு சம்மதித்தது.. இவர்கள் சிரிக்க , இவர் தனக்கு செய்த உதவிக்கு நன்றிக் கடனுக்காகத்தான நான் இந்த ஆட்டத்திற்கு ஒத்துக்கொண்டது...அதை எப்படி மறந்தேன்... இவருக்காக எவ்வளவு கஷ்டத்தையும் தாங்கலாம்...

இந்த ஒரு வாமிட்க்கு போய் இப்படி புலம்பி கிட்டிருக்கேனே.. “ என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டு மெதுவாக எழுந்து அமர்ந்தாள்.. பின் அவரை பார்த்து

“அத்தை.. நீங்க எப்படி இங்க?? “ என்று திணறினாள்...

“ஹ்ம்ம்ம் உன் மறுமகள் அங்க முடியாமல் கஷ்ட பட்டுகிட்டிருக்கா... நீ இங்க என்ன பண்றனு அந்த வேலன் வந்து என்னை அதட்டவும் நான் அப்படியே கிளம்பி அவனோட மயில் வாகனத்தை வாங்கிகிட்டு பறந்து வந்திட்டனாம் என் செல்ல மறுமகளை பார்க்க... “ என்று சிரித்தார்...

“ஹீ ஹீ ஹீ.. அத்தை.. எனக்கு எங்க அப்பா, ஊரெல்லாம் கூப்பிட்டு, பத்து கெடா வெட்டி அந்த முருகன் கோயில்ல உட்கார வச்சு ஏற்கனவே காது குத்திட்டார்.. நீங்க ஒன்னும் எனக்கு திரும்பவும் காது குத்த வேண்டாம்... உண்மையை சொல்லுங்க.. “ என்று தன் காதில் இருந்த தோட்டை பிடித்து காட்டி பின் ஜானகியின் கழுத்தை கட்டி கொண்டு சிரித்தாள்...

“ஹீ ஹீ ஹீ.. அதான... உன்னைப் போய் ஏமாற்ற முடியுமா?? “ என்று சிரித்தவர்

“ஆதி தான் நீ முடியாமல் சுருண்டு படுத்திருக்கிறனு போன் பண்ணினான் பாரதி மா.. உடனே கிளம்பி வரசொன்னான் .. அதான் உடனே வந்துட்டேன்.. இப்ப எப்படி இருக்கு டா ?? “ என்றார் குரலில் பரிவுடன்......

ஜானகி அறைக்குள் வந்த பொழுது பாரதி துவண்டு போய் கண்ணில் நீருடன் கசங்கிய மலராக படுத்திருப்பதை கண்டதும் அவர் மனதை பிசைந்தது...

“ஒரு வேளை தப்பு பண்ணிட்டோமோ??? இந்த விளையாட்டு பிள்ளையை இதில் இறக்கி இருக்க கூடாதோ?? “ என்று ஒரு நிமிடம் மனம் துடித்தது அவருக்கு.. அதுக்குள் பாரதி கண் முழிக்கவும் தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டு அவளுடன் சிரித்து பேசினார்...

அவர் சொன்னதை கேட்ட பாரதி

“ஹ்ம்ம்ம் அப்ப உங்க லவகுஷ ராஜகுமாரன் போன் பண்ணாதான் உங்களுக்கு என் ஞாபகமே வந்துச்சா... நீங்க ரொம்ப மோசம் அத்தை... “ என்று சிணுங்கினாள்...

அவளின் சிணுங்களை ரசித்தவர்

“ஹா ஹா ஹா ... அவன் சொல்லாட்டியும் நான் தான் நாளை மறுநாள் சஷ்டிக்கு உன்னை கோயிலுக்கு வர சொல்றதா இருந்தேன்.. அப்புறம் இங்க வந்து ஒரு நாள் புல்லா உன் கூடவே இருக்கிறதாதான் இருந்தது... அதுக்குள்ள என் பேத்தி முந்தி கிட்டா... இப்பவே வந்து என்னை பாருனு அவள் உன்னை படுத்த ஆரம்பிச்சுட்டாளாக்கும்... அதான் ஓடி வந்திட்டேன்.. “என்று சிரித்தார்...

“ஆஹா... நல்லா பேச கத்துகிட்டீங்க அத்தை... “ என்று பாரதியும் சேர்ந்து சிரித்தாள்

“ஹ்ம்ம்ம் உன்னோட ட்ரெயினிங் தான பாரதி மா... சரி இப்ப எப்படி இருக்கு?? ... “

“ஹ்ம்ம்ம் நீங்க வந்துட்டீங்க இல்ல.. இனிமேல் சரியாகிடும்...” என்று அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்.. ஜானகிக்கு மனம் நிறைந்து இருந்தது... பின் அவளை பார்த்து

“ஹ்ம்ம் ஏதாவது சாப்பிடறியா டா... நீ காலையில் இருந்து எதுவும் சாப்பிடலை னு ஆதி புலம்பினான்.. “

“ஹ்ம்ம்ம் பரவாயில்லையே... அந்த சிடு மூஞ்சிக்கு கொஞ்சூண்டு பாசம் இருக்கு போல.. “என்று நினைத்தவள் அதற்குள்

“இல்ல.. எனக்காக இருக்காது... அவன் புள்ள இன்னும் எதுவும் சாப்பிடலைனு தான் உருகி போயிருப்பான்..இல்லாட்டி ஏன் காலையில அப்படி முறைச்சானாம் “ என்று திட்டிக்கொண்டாள்...அவள் யோசித்து கொண்டிருப்பதை கண்ட ஜானகி

“சொல்லுடா.. உனக்கு என்ன சாப்பிடனும்போல இருக்கு...நான் செஞ்சு எடுத்திட்டு வர்ரேன்“ என்றார் ஜானகி... அதை கேட்டதும் அலறினாள் பாரதி..

“ஐயயோ!!! எதுவும் வேண்டாம் அத்தை... எதுவும் கிட்டவே வர விட மாட்டேங்குறா உங்க பேத்தி.. நான் கொஞ்ச நேரம் இப்படியே இருக்கறேன்..” என்றவள் என்ன நினைத்தாளோ

“அத்தை உங்க மடியில படுத்துக்கவா?? “ என்றாள் பாவமாக... அவள் முகத்தை கண்டு இலகிய ஜானகி

“ஹ்ம்ம்ம் வாடாம்மா... உனக்கு இல்லாத உரிமையா.. “என்று அவளை மடியில் படுக்க வைத்து தலையை தடவிக் கொடுத்தார்....





சுகமாக இருந்தது பாரதிக்கு... அவர் இடுப்பை கட்டிகொண்டவள்

“அத்த.. ஏன் இப்படி குமட்டிகிட்டு வருது?? “ என்று இதுவரை தன் உள்ளே இருந்த தன் சந்தேகத்தை கேட்டாள்...

“இந்த மாதிரி கன்சீவ் ஆ இருக்கிறப்போ எல்லாருக்குமே இது மாதிரி வாமிட் வர்ரது வழக்கம் தான் பாரதி மா..”

“இவ்வளவு நாள் இல்லையே... இப்ப மட்டும் ஏன் ?? “

“ஹ்ம்ம்ம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் பாரதி மா... உனக்காவது 4 மாதம் வரைக்கும் என் பேத்தி உன்னை தொல்லை பண்ணாம இருந்தா...எனக்கெல்லாம் இந்த ஆதி பய உருவான 45 ஆவது நாள் ல இருந்தே படுத்த ஆரம்பிச்சுட்டான்... பச்ச தண்ணி குடிச்சா கூட அதுக்கு மேல ரெண்டு மடங்கு வெளியில வரும்..”

“ஓ... அப்புறம் எப்படி அத்தை சமாளிச்சீங்க... மாமா உங்களை நல்லா பார்த்துகிட்டாரா?? “ என்றாள் ஒரு வித ஏக்கத்துடன்..

“ஹ்ம்ம்ம் உன் மாமா வும் சுசியும் தான் என்னை கீழ கூட விடாமல் பார்த்துகிட்டாங்க... முதல் ஐந்து மாதமும் ட்ரிப்ஸ் ல தான் சாப்பிட்டு கிட்டிருந்தேன்... பாவம்.. உன் மாமா தான் ரொம்ப துடிச்சு போய்ட்டார்.. நான் பட்ட வலியை விட அவர் பட்ட கஷ்டம் தான் அதிகம்....

பாதி நாள் ஆபிஸ்க்கே போகாமல் என் பக்கத்துலயே உட்கார்ந்து விடுவார்... எல்லா வேலையும் வீட்டிற்கே கொண்டு வந்து செய்வார்.. என்னை அப்படி உள்ளங்கையில் வச்சு தாங்கினார்... “ என்று தன் கணவனின் பெருமையை சொல்லிக் கொண்டிருந்தவர் எதேச்சையாக பாரதியின் முகத்தை பார்த்தவர் அவள் முகத்தில் தெரிந்த ஏக்கமும் கண்ணில் ஒரு வித ஆசையும் இருந்ததை கண்டவர் அப்பொழுதுதான் தன் தவறு உரைத்தது....

“பாவம்.. சின்ன பொண்ணு.. அவளுக்கும் இந்த மாதிரி ஆசை இருக்கும் இல்ல.. சே.. நான் பாட்டுக்கு அவகிட்ட இத எல்லாம் சொல்லி கிட்டிருக்கேனே... “ என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டார்...

அதற்கு பின் தன் கணவனை பற்றி பேச்சில் வராமல் பார்த்துக்கொண்டார்... தொடர்ந்து ஆதி அவர் வயிற்றில் வளர்ந்த கதையை கண்களில் ஆர்வம் மின்ன ஒரு பெருமிதத்துடன் கூறிக்கொண்டிருந்தார்...

“அவனை பெத்து கையில் வாங்கங்கேட்டி போதும் போதும் னு ஆயிருச்சு...” என்று சிரித்தார்...

“அப்புறம் அத்தை.. எப்படி உங்க ராஜ குமாரனை வளர்த்தீங்க?? “ என்றாள் பாரதி அவனை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில்...

கரும்பு தின்ன கூலி வேண்டுமா என்ன?? ஜானகிக்கு எப்பவும் தன் பையனை பற்றி பேசுவதில் அவ்வளவு பெருமை.. இதில் வேற பாரதி ஆர்வமாக கேட்கவும் அவன் வளர்ந்த கதையை சுவாரஸ்யத்துடன் கூறினார்.. பாரதியும் சிரித்துக்கொண்டே ரசித்து கேட்டாள்..

அதுவும் அவன் சிறுவயதில் செய்த சேட்டைகளை கேட்கும் பொழுது அவளுக்கு என்னவோ ஒரு வித இனம் புரியாத சுகம் பரவியது.... அவன் வளர்ந்து பள்ளிகூடம் செல்லும் முதல் நாள் வரை சொல்லி கதையை நிறுத்தினார் ஜானகி....

“மா.... போதும்... என்னை பற்றி சொல்லி உங்க பேத்தியை போரடிக்க வைக்காதிங்க... நீங்க என்னை பற்றி சொன்னதை எல்லாம் அவளும் கேட்டுகிட்டிருப்பா... அப்புறம் அவளும் என்ன மாதிரியே வாலா வரப்போறா... “ என்று சிரித்தான் பின்னால் நின்றிருந்த ஆதி...

அவனின் குரல் கேட்டு திடுக்கிட்டு தலையை திருப்பி பின்னால் பார்த்தாள் பாரதி எழுந்திருக்காமல்...

அலுவலகம் கிளம்பி இருந்த ஆதி பார்மல் பேன்ட் சர்ட்ல் இன் பண்ணி கையை மார்புக்கு குறுக்காக கட்டிகொண்டு குறும்பாக சிரித்து கொண்டிருந்தான்...ஜானகி வரும்பொழுது அவனும் கூடவே வந்திருந்தான்.. பின் ஜானகி அவனை பற்றி கதை அடிக்கவும் அவனும் அங்கயே நின்று கொண்டு கேட்டு கொண்டிருந்தான்... அவனை எதிர்பார்த்திராத பாரதி அவனை கண்டு திடுக்கிட்டவள்

“ஐயோ!! இவன் இவ்வளவு நேரம் இங்க தான் இருந்தானா?? ... இவன் இருப்பது தெரியாமல் நான் பாட்டுக்கு இவனை பற்றி வேற கதையா கேட்டு கிட்டிருந்தேனே.. என்னை பற்றி என்ன நினைப்பான்.. “ என்று தலையில் கொட்டி கொண்டாள் மானசீகமாக...

பின் எழுந்திருக்க முயன்றவளை

“நீ படுத்தக்கடா.. அவன் கிடக்கறான்... “ என்றார் சிரித்தவாறு...

“ஹ்ம்ம்ம் சரி மா.. நீங்க ரெண்டு பேரும் செல்லம் கொஞ்சி கிட்டு இருங்க.. நான் ஆபிஸ் கிளம்பறேன் .. எப்படியாவது அவளை கொஞ்சம் சாப்பிட வைங்க...கொஞ்சம் கொஞ்சமா ஏதாவது கொடுங்க... அவள் வாமிட் பண்ணாலும் விட்டறாதிங்க... ரொம்ப முடியலைனா சுசிலா மா கொடுத்த மாத்திரையை போட்டுக்க சொல்லுங்க “ என்று அடுக்கினான்..

அதை கேட்டு சிரித்தார் ஜானகி....

“கண்ணா.... நானும் ஒரு புள்ளைய பெத்தவ தான்டா... எனக்கும் எப்படி பார்த்துக்கனும் னு தெரியுமாக்கும்... நீ என்னவோ பத்து புள்ளை பெத்தவனாட்டும் சொல்ற... “ என்று சிரித்தார்...

“ஹி ஹி ஹி .. மா...ஆனாலும் “ என்று அசடு வழிந்தான்

“நீ கவலைபடாமல் ஆபிஸ்க்கு போய்ட்டு வா கண்ணா... நான் அவளை பார்த்துக்கறேன்... “என்றார்.. அவனும் சிரித்துவிட்டு பாரதி யை பார்த்து

“ஏய் பட்டிக்காடு.. ஒழுங்கா சாப்பிடு... உன் அத்தையை ஐஸ் வச்சு ஏமாத்தி சாப்பிடாமல் இருந்துக்காதா...நீ சாப்பிடலைனா நான் நேரா கிளம்பி வந்திடுவேன் “ என்று மிரட்டினான்

“ஹ்ம்ம்ம் “என்று தலைய ஆட்டினாள் பாரதி...

பின் விடை பெற்று கிளம்பி சென்றான்..

அலுவலகம் சென்றவநுக்கு வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.. அவள் முகமே கண் முன் வந்தது.. அதுவும் அவள் மயங்கி சரிந்த நிலை வேறு..

மதியம் ஜானகிக்கு போன் பண்ணி எப்படி இருக்கா என்று விசாரித்தான்..

ஜானகியும் சிரித்துகொண்டே

“நல்லா இருக்கா கண்ணா.. நீ ஒன்னும் பயந்துக்காத.. இது மதிரி தான் இருக்கும்.. நீ உன் வேலையைப் பார்...நான் அவளை பார்த்துக்கறேன்.. “ என்று போனை வைத்தார்

என்னதான் மனதை கஷ்ட பட்டு அடக்கி வேலை செய்ய முயன்றாலும் அவன் மனம் அவன் பேச்சை கேட்பதாக இல்லை.... மாலை 5 மணி வரை போராடியவன் அதுக்கு மேல முடியாது என்று கிளம்பி விட்டான்..

அவனின் உதவியாளர் சுந்தரம் அவனை ஆச்சர்யமாக பார்த்தார்.. அவன் பொறுப்பு ஏற்ற கடந்த மூன்று வருடங்களில் இது மாதிரி சீக்கிரம் அவன் போனது இல்லை...

வீட்டிற்கு வந்தவன் ஹாலில் இருந்த காட்சியை கண்டு அதிர்ந்து நின்றான்...

பாரதி தலைக்கு குளித்து தன் நீண்ட கூந்தலை உலர்த்திக் கொண்டிருந்தாள்.. ஜானகி அவள் முடிக்கு சாம்பிராணி போட்டு கொண்டிருந்தார்... அவள் அவர் மேல் சலுகையாக சாய்ந்து கொண்டு கதை அடித்துக் கொண்டிருந்தாள்...

அவரோ சாம்பிராணி போட்டு முடித்ததும் அவள் கூந்தலை தளர பின்னி தோட்டதில் பறித்த வாசமில்லாத கனகாம்பரத்தை கொஞ்சமாக ஏற்கனவே கட்டி வச்சிருக்க அதை எடுத்து அவள் தலையில் வைத்து அழகு பார்த்தார்...

“எவ்வளவு அழகா இருக்க பாரதி மா ..” என்று நெட்டி முறித்தார்...

“ஹ்ம்ம்ம் எனக்கு நொம்ப நாளாவே ஒரு பெண் குழந்தை இல்லைனு ஏக்கமா இருந்தது.. அவளுக்கு நீண்ட முடி வளர்த்தி இதே மாதிர் குளிச்சு சாம்பிராணி போட்டு தலை பின்னி பூ வைக்கணும்னு ரொம்ப நாள் ஏக்கம்... அந்த குறையை இன்னைக்கு நீ தீர்த்து வச்சுட்ட பாரதி மா “ என்று உணர்ச்சி வசப்பட்டு பேசினார் ஜானகி...

“அவ்வளவு தான அத்தை... இன்னும் என்னெல்லாம் குறை, ஆசை இருக்குனு சொல்லுங்க... எல்லாம் தீர்த்து வச்சுடறேன்... “ என்று அவர் கன்னத்தில் முத்தமிட்டு கண் சிமிட்டி சிரித்தாள் குறும்பாக...

“ஹ்ம்ம்ம்ம் இன்னும் ஒருபெரிய குறை இருக்கு... அத மட்டும் அந்த முருகன் நிறைவேற்றி வச்சுட்டா போதும்... “ என்று மனதுக்குள் புலம்பியவர் அவள் கன்னைத்தை கிள்ளி சிரித்தார்...

கதவு திறந்து இருக்கவும் அழைப்பு மணியை அழுத்தாமல் நேராக உள்ளே வந்தவன் அவர்கள் இருவரும் செல்லம் கொஞ்சி கொண்டிருப்பதை கண்டு அசந்து நின்றான்.. அதுவும் தன் அன்னையின் மனதில் இருந்த சிறு சிறு ஆசையைக் கூட அவர் இதுவரை அவனிடம் வெளி காட்டியதில்லை... “இவளிடம் அம்மா இவ்வளவு ப்ரியா பேசறாங்களே.. “ என்று ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு...

அதோடு அவனுக்கு அந்த ஷ்வேதாவின் நினைவு வந்தது... அவள் ஒரு நாளும் தன் அன்னையின் அருகில் நெருங்கியது இல்லை... எப்பவும் அவனுடனேயே இழைந்து கொண்டிருப்பாள்.. ஏன் ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை ஏதாவது தேவை இருந்தால் தவிர....

அப்ப அவள் மேல் அவனுக்கு இருந்த மயக்கத்தில் அதை எல்லாம் குறிக்காமல் போனான்.. அப்பயே கூர்ந்து கவனித்து இருந்தால் அவளின் சாயம் முன்னரே வெளுத்து இருக்கும்... அவன் குடும்பத்துக்கும் இவ்வளவு பெரிய கஷ்டம் வந்திருக்காது ...” என்று பெருமூச்சு விட்டவன் செல்லம் கொஞ்சி கொண்டிருக்கும் அவர்களையே கொஞ்ச நேரம் ரசித்து பார்த்துக்கொண்டு நின்றான்...

பின் அவர்களிடம் சென்றவன்

“என்ன மா இது?? காலைல அப்படி இருந்தா... இப்ப இப்படி கொஞ்சிகிட்டு இருக்கா?? “ என்றான் சந்தேகமாக லேசாக சிரித்தவாறு.. அவனை கண்டதும் சிரித்த ஜானகி

“அதெல்லாம் அப்படி தான் இருக்கும் கண்ணா... மாத்திரை போட்டு இருக்கவும் வாமிட் கொஞ்சம் குறைஞ்சு இருக்கு.. இன்னும் அவளால சரியாவே சாப்பிட முடியல....ஆமாம்.. நீ ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்திட்ட?? “ என்று நமட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டார்

“ஹ்ம்ம்ம் வேலை சீக்கிரம் முடிஞ்சிடுச்சு மா... அதான் வந்திட்டேன்... “என்று சமாளித்தான்... அவளை பார்க்கத் தான் சீக்கிரம் வந்திட்டேன் னு சொல்ல அவனுக்கு வாய் வரவில்லை... அதை புரிந்து கொண்ட ஜானகி

“சரி கண்ணா.. நீ போய் ரிப்ரெஸ் ஆகிட்டு வா..உணக்கு சாப்பிட எடுத்து வைக்கிறேன் “ என்றார்.. பாரதியை ஓரக்கண்ணால் பார்த்தவாறெ தன் அறைக்கு சென்று ரிப்ரெஸ் ஆகிட்டு கீழ வரவும் அவனுக்கு சாப்பிட சிற்றுண்டியை எடுத்து வைத்தார் ஜானகி...

பாரதியையும் கூட்டி வந்து டைனிங் டேபிலில் உட்கார வைத்து அவளுக்கு சாப்பிட எடுத்து வைத்தார்... , பின் மூவரும் கதை அடித்துக் கொண்டே மாலை பொழுது இனிமையாக கழிந்தது..

ஜானகிக்கு மனம் நிறைந்து இருந்தது.. இந்த மாதிரி மனம் விட்டு பேசி எவ்வளவு நாள் ஆகிறது... சீக்கிரம் இதே நிலை நீடிக்கணும் முருகா என்று வேண்டிக் கொண்டார்..

ஆதி தன் அலுவலகத்தில் விட்டு வந்த மீதி வேலையை கவனிக்க மேல செல்ல பாரதி தன் புத்தகத்தை எடுத்து படித்து கொண்டிருந்தாள்..

பின் ஜானகியே இரவு உணவை தயாரித்தார்... பாரதிக்கு ஒத்துக் கொள்கிற மாதிரி உணவையே மூவருக்கும் செய்தார்... பின் எடுத்து வந்து டைனிங் டேபிலில் வைத்து விட்டு இருவரையும் சாப்பிட அழைத்தார்... பாரதி மறுத்தாள் மீண்டும் குமட்டும் என்று.. ஜானகி அவளை சமாதான படுத்தி அழைத்து வந்தார்...

அவரே இருவருக்கும் பரிமாறினார்... பாரதி பயந்து கொண்டே முதல் வாயை எடுத்து சாப்பிட்டாள்... ஜானகியின் சமையல் நன்றாக இருக்கவும் ரசித்து விரும்பி சாப்பிட்டாள்..

ஆதியும் அவள் ரசித்து சாப்பிடுவதை பார்த்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தான்... சிறிது தான் சாப்பிட்டிருப்பாள்.. அதற்குள் அந்த குட்டி அதன் வேலையை காட்ட வேகமாக எழுந்து வாஷ்பேஸினுக்கு ஓடினாள் பாரதி... ஜானகியும் பின்னாலயே சென்று அவள் தலையை பிடித்துக் கொண்டார்...

அவள் சாப்பிட்ட கொஞ்ச உணவை விட அதிமாக வெளி தள்ளினாள்... பின் சோர்வுடன் ஜானகியின் தோளில் சாய்ந்து கொண்டாள்.. அதை கண்டு ஜானகிக்கு கஷ்டமாக இருந்தது.. இப்படி கஷ்டப் படறாளே என்று...

ஆதிக்கோ அதை விட தாங்க முடிய வில்லை...அவளின் சோர்ந்த முகத்தை கண்டவனுக்கு அதற்கு மேல் எதுவும் சாப்பிட முடியவில்லை....

“ஒரு குழந்தையை சுமப்பது இவ்வளவு கஷ்டமா?? “ என்று நினைத்தான்.. அப்பொழுது தான் ஜானகி நேற்று சொன்ன தன்னால் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று கதை நினைவு வரவும் அவனுக்கு மெய் சிலிர்த்தது.. அதுக்குத்தான் அம்மாவை தெய்வத்துடன் ஒப்பிடறமோ என்று நினைத்துக்கொண்டான்..

பாரதியை மேல கொண்டு போய் விட்டு வந்த ஜானகி அவன் எதுவும் சாப்பிடாமல் யோசித்து கொண்டிருப்பதை கண்டவர்

“என்னாச்சு கண்ணா?? ... நீ சாப்பிடு... அவளுக்கு இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு நான் லிகுடா எதாவது செஞ்சு தர்ரேன்.. “ என்றார்...

ஆனால் அவனுக்கு அதுக்கு மேல ஒரு வாய் கூட வைக்க முடியவில்லை..

“இல்ல.. வேணாமா.. அவள அப்படி பார்த்த பிறகு என்னால சாப்பிட முடியல...” என்று பாதியில் எழுந்து சென்று கை கழுவினன்...

பின் தன் அன்னையின் அருகில் வந்து அவரை கட்டி கொண்டு அவர் கன்னத்தில் முத்தமிட்டான்...

“மா... நீயும் என்னால இப்படித் தான் கஷ்டப்பட்டியா??? என்னால் உங்களுக்கு ரொம்ப கஷ்டம் இல்ல.. இப்ப வரைக்கும்“ என்றான் தழுதழுக்க கண்ணில் ஒரு வித வலி வேதனையுடன்...

“அடடா... அதெல்லாம் ஒரு கஷ்டமும் இல்ல கண்ணா... குழந்தையே இல்லைனு நான் ஏங்கி இருந்த நேரத்துல எனக்கு வராம கிடைத்தவன் நீ... நீ எப்படி எனக்கு கஷ்டமாம்?? நீ என் வயிற்றில உருவானதுல இருந்தே நான் எவ்வளவு பெருமையா மகிழ்ச்சியா இருக்கேன் தெரியுமா... இப்ப வரைக்கும்

இதெல்லாம் ஒரு தாய்க்கு வர்ர சோதனை தான் கண்ணா.. இதை எல்லாம் தாங்கி ஒரு குழந்தையை பெத்து வளர்க்க பக்குவம் வேணும் இல்லையா.. அதுக்குத்தான் இப்படி எல்லாம் டெஸ்ட் பண்றார் அந்த கடவுள்.. பாரதிக்கும் சீக்கிரம் சரி ஆகிடும்.. நீ ஒன்னும் வருத்தப்படாத... “ என்று தன் மகனின் மன நிலையை அறிந்து ஆறுதல் சொன்னார்...

“ஹ்ம்ம்ம் என்னவோ மா... நீங்க எல்லாம் தெய்வம் தான்... “ என்று சிரித்து விட்டு அவரை மேலும் அணைத்து முத்தமிட்டு தன் அறைக்கு சென்றான்...

ஜானகிக்கோ தன் மகன் அரை வயிற்றில் சாப்பிடாமல் போனது கஷ்டமாக இருந்தாலும் அவன் பாரதிக்காக தவிப்பது ஏதோ நல்ல மாற்றமாக தெரிந்தது...

“அவள் சாப்பிடாமல் போகவும் இவனுமே சாப்பிடலையே... “என்று நினைத்தவருக்கு ராமின் நினைவு வந்தது... அவரும் இப்படித்தான்.. ஜானகிக்கு முடியாமல் இருந்த பொழுது அவருமே தவித்து போனார்... ஜானகி சாப்பிடாத நேரங்களில் அவருமே தன் உணவை தவிர்த்தார்.. ஜானகி எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை...

ஜானகி தவிர்க்க முடியாமல் தன் மகனுக்காக கஷ்டப்பட்டார் என்றால் ராமோ தன் வாரிசுக்கும் ஜானகிக்கும் சேர்த்து கஷ்டத்தை அனுபவித்தார்...அலுவலகம் சென்றாலும் ஐந்து மணி ஆனால் வீட்டிற்கு ஓடி வந்து விடுவார்... அதை நினைத்த ஜானகிக்கு இப்பொழுது தன் மகனின் செயலும் தன் கணவரைப் போலவே இருக்க

“அப்பா மாதிரியே தப்பாமல் இருக்கான்... இவனோட இந்த நடவடிக்கை எல்லாம் பாரதி மேல இவனுக்கு இருக்கும் பாசம் புரிகிறதுதான்...ஆனாலும் இந்த பய எப்ப எப்படி மாறுவானு சொல்ல முடியாதே...

முருகா...இந்த பாசம் இப்படியே நிலைத்து ,மேலும் வளர்ந்து அவள் பக்கம் அவன் முழுமையா வரணும்... “ என்று வேண்டிகொண்டார்...

பின் அவருமே எதுவும் சாப்பிடாமல் எல்லாம் எடுத்து வைத்து விட்டு பாலை காய்ச்சி அவரும் குடித்து விட்டு இருவருக்கும் எடுத்து சென்றார்...

ஒன்றை ஆதியிடம் கொடுத்து விட்டு இன்னொரு டம்லரை பாரதியின் அறைக்கு எடுத்து சென்றார்....

பாலை குடித்து படுத்த ஆதிக்கோ வழக்கம் போல அவனின் குட்டி தேவதை வந்து சிரித்தாள்... திடீரென்று அந்த தேவதையோடு பாரதியின் முகமும் வந்து சிரித்தது...காலையில் அவன் கண்ட மலர்ந்த சிரித்த முகம் அவன் கண் முன்னே வந்தது... அதோடு அவள் மயங்கி சரிந்த முகமும் நினைவு வந்தது...

அதை கண்டு திடுக்கிட்டான்... இப்ப எதுக்கு இவள பற்றி நினைக்கிறேன்?? .. என்று அவளை விரட்ட முயன்று தன் தேவதையை மட்டும் கொஞ்ச ஆரம்பித்தான்... ஆனால் அவன் மனமோ மீண்டும் அந்த பாரதியிடமே சென்று நின்றது...

“சே!! என்ன இம்சை டா ... இது “ என்று புலம்பியவாறு எழுந்து அமர்ந்தான்...பின் பால்கனிக்கு சென்று கொஞ்ச நேரம் கால் வலிக்க நடந்தான்.. அந்த இரவின் கடல் காற்று சில்லென்று அவன் வெற்றுடலில் தழுவ கொஞ்சம் அவன் மனம் அமைதி அடைந்தது....மீ

ண்டும் வந்து படுத்தவனுக்கு திரும்பவும் அவன் தேவதையும் அந்த பட்டிகாடும் மாறி மாறி வந்து தொல்லை பண்ண அவர்களுடன் போராடியவாறு வெகுநேரம் கழித்து மெதுவாக உறங்கினான்...

பாரதியின் அறைக்கு சென்ற ஜானகியோ அவள் சுருண்டு படுத்திருப்பதை கண்டு மெல்ல அவளை எழுப்பினார்... கண் விழித்த அவளோ ஜானகியின் கையில் இருந்த டம்ளரை பார்த்ததும்

“ஐயோ!! திரும்பவுமா... என்னால முடியாது திரும்பவும் எழுந்து ஓட.” என்று புலம்பியவள் கண்ணை இறுக மூடிக் கொண்டாள்... ஜானகி அவளை வற்புறுத்தி எழுப்ப

“அத்தை.. எனக்கு எதுவும் வேண்டாம்... நான் தூங்கிட்டேன்.. எதுனாலும் காலையில குடிக்கறேன்.. “ என்று முனகினாள்..

ஜானகியும் சிரித்து கொண்டே

“அப்ப நான் என் பையனை கூப்பிடறேன்.. அவன் வந்தா தான் நீ எழுந்திருப்ப.. “ என்று செல்லமாக மிரட்டவும்

“ஐயோ... அந்த சிடு மூஞ்சியா... வேண்டாம் அத்தை.. கொடுங்க நானே குடிச்சு தொலைக்கிறேன்.. “என்று மெதுவாக எழுந்தவள் வாஷ்பேஸினில் அருகில் சென்று நின்று கொண்டு கொஞ்சமாக குடித்தாள் பயந்தவாறே... ஒரு வாய் மட்டும் போதும் என்றவளை ஜானகி கெஞ்சி, கொஞ்சி, மிரட்டி ஒரு வழியாக முழுவதும் குடிக்க வைத்தார்...

பின் சிறிது நேரம் அங்கயே நின்று கொண்டிருந்தாள் பாரதி எங்கே மீண்டும் எல்லாம் வெளியில் வந்து விடுமோ என்று... ஒரு வழியாக வெற்றிகரமாக அந்த பால் அவள் வயிற்றில் தங்கவும் மெதுவாக நடந்து வந்து தன் படுக்கையில் படுத்து கொண்டாள்...

ஜானகி அவளுக்கு போர்த்தி விட்டு நகரப்போக, அவர் கையை பிடித்துக்கொண்டவள்

“அத்தை... இங்கயே படுத்துக்கங்களேன்.. “ என்றாள் பாவமாக...

அதில் உருகி போன ஜானகி

“அதனால் என்ன பாரதி மா... நானும் உன் கூடவே தூங்கறேன்” என்று அவரும் விளக்கை அனைத்து விட்டு அவளுடனே படுத்துக்கொண்டார்...

பாரதியோ அவரிடம் நெருங்கி அவரை கட்டிக் கொண்டு அவர் கழுத்தின் வளைவில் தன் முகத்தை வைத்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டா.ள் அவளின் இந்த செயலை கண்ட ஜானகி உள்ளம் மகிழ்ந்து போனது..

“இன்னும் சின்ன பிள்ளை மாதிரியே இருக்காளே.. “ என்று எண்ணியவர் அவள் தலையை மெதுவாக வருடி விட்டார்... அவர் கையின் சுகத்தில் மெதுவாக உறங்க ஆரம்பித்தாள் பாரதி...

இரண்டாம் நாள் காலை சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு அன்று சஷ்டி என்பதால் பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருந்தார் ஜானகி..கடந்த இரண்டு நாட்களும் அங்கயே தங்கி விட்டார் பாரதியை பார்த்துக்கொள்ள.. அவரின் கவனிப்பில் அவளும் கொஞ்சம் தேறி இருந்தாள்... ஆதியும் அலுவலகம் முடிந்து அங்கயே தங்கிவிட்டிருந்தான்..

ஜானகி பூஜை செய்ய, பாரதியும் அவருடன் நின்று கொண்டு அவர் செய்வதை பார்த்து கொண்டிருந்தாள்... பின் ஜானகி அந்த முருகனின் பாதத்தில் இருந்த ஒரு தங்க சங்கிலியை எடுத்து பாரதியின் முன் நீட்டி

“இத போட்டுக்கோ பாரதி.. “ என்றார்...

அதை கண்டதும் பின் வாங்கிய பாரதி

“இது எதுக்கு அத்தை?? .. எனக்கு வேண்டாம் .. “ என்று மறுத்தாள்..

“ஹ்ம்ம்ம் நீ இனிமேல் அடிக்கடி ஹாஸ்பிட்டல் போக வேண்டி இருக்கும் பாரதி..

அப்ப உன் கழுத்து வெறுமையா இருந்து உன் வயிற்றை பார்த்தால் உன்னை தப்பா நினைப்பாங்க.. எதுக்கு தேவை இல்லாம அவங்க வாயில விழனும்.. உன் மனம் கஷ்டப்படும்...

இது வெறும் செயின் தான்..தாலிக்கொடி மாதிரியே இருக்கும்... இதை போட்டு கிட்டா உன்னை பார்த்து யாரும் தப்பா நினக்க மாட்டாங்க.. அதனால தயங்காம போட்டுக்க பாரதி“ என்று வற்புறுத்தினார்...

தவிர்க்க முடியாமல் அதை வாங்கிய பாரதியின் கண்கள் கலங்கியது.. இந்த அத்தைக்கு தான் எவ்வளவு பாசம்.. என்னதான் ஒரு வாடகைத்தாயாக அவங்க வாரிசை சுமந்தாலும் என் மனதையும் மதித்து எனக்காக செய்யறாங்களே... “ என்று நெகிழ்ந்து போனாள்...

பின் அதை வாங்கி அதன் கொக்கியை பிரிக்க முயன்றாள்.. அது திறக்க வில்லை.. அதே நேரம் ஆதியும் குளித்து விட்டு கீழ இறங்கி வந்து கொண்டிருந்தான்.. அவனை கண்டதும்

“கண்ணா.. ஒரு நிமிஷம் இங்க வாயேன்... “ என்றார் ஜானகி.. அவனும் அருகில் வரவும்

“இந்த செயின கொஞ்சம் ஒபன் பண்ணிக்கொடு “ என்றார்.

“என்னது மா இது?? இது அவளுக்கு எதுக்கு இப்ப?? “ என்று புரியாமல் அவரை பார்த்தான்

“ஹ்ம்ம்ம் இது உங்கப்பா போட்டிருந்த செயின் கண்ணா... இதை போட்டுகிட்டா அவரே பாரதி கூட இருக்கிற மாதிரி... உன் இளவரசி இன்னும் ஆரோக்கியமா பிறப்பாளாம்.. “ என்று கண்ணடித்தார் பாரதியை பார்த்து,,,

“அத்த.. நீங்க பெரிய கேடி தான் “ என்று முனகியவாறு அவனுக்கு தெரியாமல் சிரித்தாள் பாரதி...

அதை வாங்கியவன் “அப்படினா முன்னையே அவள போட்டுக்க சொல்ல வேண்டியது தான... “ என்று சொல்லி அதை திறந்தான..அதற்குள் ஜானகிக்கு ஒரு ஐடியா வர

“கண்ணா.. இத அப்படியே பாரதி கழுத்துல போட்டு விட்டுடுப்பா... “ என்றார்...

அதை கேட்டு திகைத்தவன்

“நான் எப்படி மா இதை போடறது??? “ என்று புரியாமல் அவரை பார்த்தான்...

“இது வெரும் செயின் தான் கண்ணா.. அதோட நீ உன் பிரின்ஸஸ்க்கு தான் போடற.. அதனால ஒன்னும் தப்பு இல்லை.. நீ போட்டு விடு.. “ என்றார் தன் சந்தோஷத்தை மறைத்துக்கொண்டு...

“ஹ்ம்ம்ம்ம் “ என்று முனகியவன் பாரதியின் அருகில் சென்றான்...

இதை எதிர்பார்த்திராத பாரதி சிலையாகி நின்றாள்.. அவள் கழுத்து மட்டும் அவன் முன்னே தானாக குனிந்து அவன் செயினை போட வசதியாக நின்றது...

பாரதியின் கழுத்தில் அந்த செயினை போட்டு அதன் கொக்கியை நன்றாக அழுத்தி விட்டான் ஆதி... அவன் கை ஸ்பரிசம் பட்டு உடல் சிலிர்த்தது பாரதிக்கு.. மனம் முழுவதும் இனம் புரியாத பரவசம் படர்ந்தது... மௌனமாகிப் போனாள் பெண்..

ஆதிக்கு மே அவள் கழுத்தில் அவன் விரல் படவும் மின்சாரம் பாய்ந்ததை போல சிலிர்த்தது.. அவனுக்கும் அதே மனம் முழுவதும் இனம் புரியாத பரவசம் படர்ந்தது...அவனுமே மௌனமாகிப் போனான்..

இருவரும் சிறிது நேரம் மோன நிலையில் நிற்க

ஜானகியோ அந்த முருகனுக்கு பால் அபிஷேகம் பண்ணிக் கொண்டிருந்தார் மனதில். இந்த காட்சியை கண்டு..

மனதார இருவரையும் ஆசிர்வதித்தார்.

“முருகா!! இதே மாதிரி அவன் அந்த மங்கல்யத்தையும் அணிவிக்க வைத்து விடு... உனக்கு காவெடி எடுக்கறேன்.. “ என்று வேண்டிக்கொண்டார்..

பின் இருவருக்கும் அந்த முருகனின் திருநீற்றை எடுத்து வைத்து விட்டார்...

சிறிது நேரத்தில் மாரி திரும்பி வரவும் அவள் அவசரமாக காலை உணவை தயாரித்து மூவரும் சேர்ந்து உண்டனர்.

பின் ஜானகி

“நான் கிளம்பறேன் பாரதி மா .. ஆதிக்கு இங்க வேலை முடிஞ்சிடுச்சாம்..இன்னையில் இருந்து சிட்டியில் இருக்கிற ஆபிஸ் ல வேலையாம்... அவன் கூடவே நானும் கிளம்பறேன்.. ” என்றார்.. அதை கேட்டு பாரதியின் முகம் வாடியது..

“அத்தை... இன்னும் இரண்டு நாள் இருக்கலாம் இல்லை.. “ என்றாள் ஏக்கமாக..

“ஹ்ம்ம்ம் ஆதி அங்க இருந்து தினமும் இவ்வளவு தூரம் வர முடியாதுடா.. உனக்கு மாரி கூடவே இருப்பா பாரதி மா. எதும் பிரச்சனை னாலும் உடனே போன் பண்ணு.. அடுத்த நிமிடம் வந்து நிப்பேன்.. “ என்று அவளை கட்டி அணைத்து அவள் முன் உச்சியில் முத்தமிட்டு நகர்ந்தார்...

பாரதிக்கும் அதற்கு மேல் அவரை வற்புறுத்த முடியவில்லை..

“அதற்கு தனக்கு எந்த உரிமையும் இல்லையே...தான் வந்திருப்பதே ஒரு வாடகைத்தாயக... இதுவரை அவர் வந்து தன்னை பார்த்துக் கொண்டதே பெருசாம்..இதில் இன்னும் இருக்க சொல்லி எப்படி கேட்பதாம்... “ என்று சமாதானப் படுத்திக்கொண்டாள்..

ஆதிக்கும் ஏனோ அவளை பிரிய மனமே இல்லை... பின் கண்களால் விடை பெற்று சென்று காரை எடுத்து கிளம்பினான்..

வாயில் வரை சென்ற பாரதி அவர்கள் இருவரையும் ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள்... இதுவரை தனியாக இருந்த பொழுதிலும் இந்த இரண்டு நாட்கள் அவர்களோடு இருந்து பழகி விட்டதால் மனம் அந்த சூழலையே மீண்டும் தேடியது...

அவள் வாயிலில் நின்று அவர்களை ஏக்கமாக பார்ப்பது காரின் பின்பக்க கண்ணாடியில் தெரிய அவள் நின்ற கோலம் அவன் மனதை பிசைந்தது...அவன் மனமோ பாரதியை விட்டு பிரிய முடியாமல் அடம் பிடித்து அவளிடமே சென்று நின்றது...

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!