காதோடுதான் நான் பாடுவேன்-31



அத்தியாயம்-31 

ரண்டு வாரம் கடந்து இருந்தது...

அன்று ஞாயிற்றுகிழமை... காலையில் இருந்தே பரபரப்பாக இருந்தாள் அகிலா... அவளுடைய வார்ட்ரோபில் இருக்கும் ட்ரெஸ் சை ஒவ்வொன்றாக எடுத்து அதை தன் மேல் வைத்து பார்த்து அது அழகாக இருக்கிறதா என்று தன் அண்ணியிடம் அபிப்ராயம் கேட்டு தன் பெட்டியில் அடுக்கி கொண்டிருந்தாள்...

அவள் முகத்தில் ஒளிர்ந்த 1000 வாட்ஸ் பல்பை கண்டு உள்ளுக்குள் பொருமியவாறு தன் முகத்தை உர் ரென்று வைத்து கொண்டு கட்டிலில் அமர்ந்து கொண்டு அகிலாவையே பார்த்து கொண்டு இருந்தாள் மதுவந்தினி....

தன் அண்ணியின் முகத்தில் தெரிந்த ஏக்கத்தை கண்ட அகிலா,

“அண்ணி... வேணும்னா நான் அண்ணாகிட்ட இன்னொரு தரம் கேட்டு பார்க்கவா... நீங்களும் எங்க கூட வர “ என்றாள் பாவமாக...

“ஆமா... அந்த சிடுமூஞ்சி கேட்ட உடனே ஈ னு இளிச்சுகிட்டு உடனே அனுப்பிட்டாலும்.... வேண்டாம் அகி... நீ கிளம்பு... “ என்றாள் மது எரிச்சலுடன்...

“ஹ்ம்ம்ம் சரி விடுங்க அண்ணி.. உங்க பரிட்சை எல்லாம் முடிங்க.. நீங்களும் நானும் மட்டும் தனியா போய் சுத்திட்டு வரலாம்.... “ என்று கண் சிமிட்டினாள் சிரித்தவாறு..

அதை கேட்டு மது புன்னகைக்க,

“ஹப்பா.. அண்ணி சிரிச்சாச்சு.. இப்பதான் பார்க்க நல்லா இருக்கீங்க... இதுவரைக்கும் அப்படியே உங்க புருசனை உரிச்சு வச்ச மாதிரி உர்ருனு இருந்தது உங்க மூஞ்சி.... “ என்று மதுவின் அருகில் வந்து அவள் குண்டு கன்னத்தை இரு பக்கமும் பிடித்து செல்லமாக ஆட்டினாள் அகிலா...

“ஹோய்.. நானும் அந்த விருமாண்டியும் ஒன்னா?? “ என்றாள் மது முறைத்தவாறு...

“சே... சே... எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கிற என் ஸ்வீட் அண்ணி எங்க??... எப்பவுமே சிரிக்காமல் முறைச்சுகிட்டே இருக்கிற அந்த விருமாண்டி அண்ணா எங்க??...

ஆனாலும் ஒரே ரூம்ல இருக்கிறதால அவனோட காத்து பட்டோ என்னவோ அண்ணி, நீங்க இப்பல்லாம் அப்பப்ப அவனை மாதிரியே முறைக்க ஆரம்பிச்சிருக்கீங்க.. “ என்று குறும்பாக சிரித்தாள்...

“ஹ்ம்ம்ம் சொல்லுவ டீ... “ என்று அவள் காதை பிடித்து திருகியவள்

“சரி.. நான் போய் அத்தை என்ன பண்றாங்கனு பார்க்கறேன்... நீ இன்னும் என்னெல்லாம் வேணுமோ எல்லாம் எடுத்து வச்சுக்க... எதையும் மறந்திடாத...” என்று அறிவுறுத்தி எழுந்து வெளியில் சென்றாள் மது....

அகிலா எங்க பரபரப்பாக கிளம்பிகிட்டிருக்கா னு பார்க்கறீங்களா??

அவளுடைய அரையாண்டு பரிட்சை முடிய, அவள் வகுப்பு தோழிகள் பாதி பேர் சுற்றுலாவுக்கு என வெளிநாடு செல்வதாக திட்டமிட்டிருந்தனர்..

அதை கேட்ட அகிலா தானும் எங்கயாவது போகவேண்டும் என்று சிவகாமியிடம் வந்து அடம் பிடித்தாள்...

இதுவரை பள்ளி விடுமுறைக்கு சென்னையை தாண்டி எங்கயும் சென்றதில்லை.. அதனால் இந்த முறை கண்டிப்பா சிங்கப்பூர் போகணும்.. என்று அடம் பிடித்தாள்...

அதை கேட்டு சிவகாமி யோசிக்க, உடனே

“இதே எங்கப்பா இருந்தால் இப்படி என்னை கெஞ்ச விடுவாரா?? நான் கேட்பதற்கு முன்னே என்னை எங்கயாவது அழைத்து சென்றிருப்பார்... I miss my dad… “ என்று கண்ணை கசக்கி சென்டிமென்டாக தாக்க, அதில் உருகி போன சிவகாமி தன் மகனிடம் கெஞ்சி அவளை வெளியில் அழைத்து செல்ல சம்மதம் வாங்கினார்...

கூடவே மதுவையும் அழைத்து செல்ல கேட்க

அவளுக்கு IAS மற்றும் பேட்மின்டன் கோச்சிங் க்ளாஸ் இருப்பதாக சொல்லி அவளை அனுப்ப மறுத்து விட்டான்...

பின் சிவகாமி மதுவின் பெற்றோர்களையும் அழைத்து கொள்ளலாம் என்று அவர்களிடம் கேட்க, அவர்களும் இது மாதிரி வெளியில் சென்றதில்லை என்பதால் இப்பொழுது தன் மகள் திருமணம் முடிந்து அவர்கள் கடமையெல்லாம் முடித்து அவர்களும் பிரியாக போரடித்து இருப்பதால் சுற்றுலா செல்ல ஒத்து கொண்டனர்...

மது ரமணியையும் வற்புறுத்தி இந்த சுற்றுலாவுக்கு ஒத்துக்க வைத்தாள்...

எல்லோரும் ஒத்துகொள்ளவும் அனைவரும் ஆலோசித்து அகிலா விருப்பப்பட்ட அருகில் இருக்கும் சிங்கப்பூர், ,மலேசியா நாடுகளுக்கு ஒரு வாரம் டூர் போவதாக முடிவு செய்தனர்...

பெரியவர்களாக செல்வதால் தனியாக அனுப்பாமல் சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனத்திடம் சொல்லி அவர்கள் ஏற்கனவே பிளான் பண்ணியிருந்த ஒரு டீமில் இவர்களையும் சேர்த்து விட்டான் நிகிலன்...

வீசா முதற்கொண்டு எல்லா அரேஞ்மென்ட்ஸ் ம் அவங்களே பார்த்து கொள்ள, அதுவே வசதியாக இருந்தது..

மது முதலில் அவள் கணவனை தனியாக விட்டு செல்லாததை நினைத்து சமாதானம் அடைந்தவள், அகிலவின் உற்சாகத்தையும் அவள் ஆட்டத்தையும் தினமும் வாய் ஓயாமல் சிங்கப்பூரில் அவள் என்னெல்லாம் ப்ளான் பண்ணியிருக்கிறாள் என்று பெருமையாக பேச, அதை பார்க்க பார்க்க மதுவுக்கும் ஆசையாக இருந்தது...

“சே.. இந்த விருமாண்டியை விட்டுட்டு நாமளும் இவங்க கூட போய்டலாம்.. “என்று தோன்றியது..

ஆனால் இனிமேல் கேட்க முடியாதே..அப்படி கேட்டாலும் அனுப்ப மாட்டான் என்று தெரிந்ததால் அமைதியாக இருந்து விட்டாள்..

அதை நினைத்து கொண்டே அகிலாவின் அறையில் இருந்து இறங்கி வந்தவள் நேராக சிவகாமியின் அறைக்கு செல்ல அவரோ அகிலாவை விட பரபரப்பாக இருந்தார்...

அடுத்தடுத்த வந்த பிரச்சனைனயால் அவருக்குமே எங்கயாவது வெளியில் சென்று வந்தால் மனம் இலேசாகும் என்பதை போல இருக்க அவருமே விருப்பமாக இந்த பயணத்தை எதிர்பார்த்தார்...

நீண்ட நாளைக்கு பிறகு இந்த மாதிரி டூர் போவதால் அவர் முகத்திலும் மகிழ்ச்சி பரவி கிடக்க அவரும் ஒவ்வொரு சேலையாக எடுத்து ரமணியிடம் காட்டி அவர் அபிப்ராயத்தை கேட்டுக் கொண்டிருந்தார்......

அதை கண்ட மது

“இவர் இன்னும் வளரவே இல்லையோ ??.. வெளில பார்த்தாதான் ரௌடி மாமியார் மாதிரி கரடு முரடாக தெரிந்தாலும் உள்ளுக்குள் குழந்தை மாதிரி தான் போல...

ஒரு வேளை தன் கணவனும் இது மாதிரி தானா?? ஆனால் அவன் உள் புறத்தை காட்டாமல் மூடி அல்லவா வைத்து கொள்கிறான்... ஒரு நாள் அவன் போட்டிருக்கும் இந்த விருமாண்டி, சிடுமூஞ்சி முகமூடியை உடைத்து அவன் உள்ளே என்ன-இருக்குனு பார்க்கணும்.. “ என்று சிரித்துக் கொண்டாள்...

சிவகாமியின் அறைக்கு உள்ளே வந்தவள் பெரியவர்கள் இருவரிடமும் கதை அடித்துக் கொண்டே தன் மாமியாருக்கு உதவி செய்தாள்...

“ப்ளைட்டில் குளிராக இருக்குமாம்.. இதை கையிலயே வச்சுக்குங்க.. “ என்று சொல்லி மறக்காமல் இருவருக்கும் ஸ்வெட்டரை எடுத்துக் கொடுத்தாள்..

மதுவின் பெற்றோர்களும் கிளம்பி மதியமே மதுவின் வீட்டிற்கு வந்து விட்டனர் தங்கள் மகளை காண...

தன் சம்மந்தியை போல பெண்ணை பெத்தவர்கள் என்ற பந்தா இல்லாமல் இயல்பாக பழகிய மதுவின் பெற்றோர்களை ரமணிக்கு மிகவும் பிடித்துவிட அவர்களிடம் சகஜமாக பழகினார் ரமணி...

மதிய உணவை அனைவருக்கும் மது பரிமாற, அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவை உண்டனர்...

தன் மகள் பொறுப்பாக நடந்து கொள்வதை கண்ட அவள் பெற்றோர் ஆச்சர்யமாக பார்க்க, மதுவோ கண் சிமிட்டி சிரித்தாள்...

அதோடு சிவகாமியும் ரமணியும் மதுவை புகழ்ந்து பேச,அதை கண்டு பூரித்து போயினர் இருவரும்......

சாப்பிட்டு முடித்த பின் சண்முகம் உறங்க சென்று விட, மற்ற பெண்கள் உட்கார்ந்து கதை அடித்தனர்..

இரவு உணவிற்கு நிகிலனும் கௌதமும் வந்து விட, எல்லோரும் கலகலப்பாக பேசி சிரித்த படியே உணவை முடித்தனர்...

மூன்று குடும்பங்களுமே இந்த மாதிரி மற்றவர்களுடன் ஒன்றாக கூடி ஒருவரை ஒருவர் கலாய்த்து பேசி சிரித்து ரொம்ப நாளாகியிருக்க, அனைவர் மனமும் இலேசாகி மகிழ்ச்சியாகி போயினர் அனைவரும்...

பின் அனைவரும் கிளம்பி விமான நிலையத்திற்கு புறப்படனர்...

ரமணி தன் மகனுடன் மனம் விட்டு பேசட்டும் என்று அவரை கௌதம் காரில் முன்னால் அமர்ந்து கொள்ள சொன்னாள் மது...

மற்றவர்கள் நிகிலன் காரில் அமர்ந்தனர்.. பின்னால் அமர வந்த மதுவை சிவகாமி முன்னால் அமர சொல்ல அவள் தன் மாமியாரை மனதிற்குள் திட்டி கொண்டே முன்னால் சென்று அமர்ந்தாள்...

பின்னால் நால்வரும் கதை அடிக்க, இவளோ தன் கணவனை ஓரப்பார்வை பார்க்க அவன் சாலையை விட்டு விழி அகற்றாமல் தன் வாகனத்தை ஓட்டினான்..

அதை கண்டவள் கடுப்பாகி வெளியில் வேடிக்கை பார்த்து வந்தாள்...

இரண்டு கார்களும் ஏர்போர்ட் ஐ அடைய, லக்கேஜ்களை எடுத்து நிகிலனும் கௌதமும் உள்ளே கொண்டு வந்தனர்...

அவனைக் கண்டதும் விமான நிலையத்திற்குள்ளே நுழைபவர்களை பரிசோதிக்க நுழை வாயிலில் நின்றிருந்த காவலர்கள் அவனுக்கு சல்யூட் வைக்க, அதை தலை அசைத்து புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு கண்களால் அந்த இடத்தை ஆராய்ந்தான்....

எல்லா பாதுகாப்பும் சரியாக இருக்க திருப்தியுற்றான்..

அந்த சுற்றுலா குழுவை தலைமை ஏற்று வழி நடத்துபவர் முன்னதாகவே வந்திருக்க, அவரை சந்தித்து தன் குடும்பத்தை அறிமுக படுத்தினான் நிகிலன்...

பின் அனைவருக்கும் ப்ளைட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விளக்கி, மற்றும் போகும் இடங்களில் எல்லாம் ஒன்றாக செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினான்..சண்முகத்தை பார்த்து

”மாமா... நீங்கதான் இவங்களையெல்லாம் பத்திரமா பார்த்துக்கணும்... “ என்க

அவரோ

“கண்டிப்பா மாப்பிள்ளை... நான் போகிற இடங்களை பார்க்கிறனோ இல்லையோ இந்த நாலு பேரையும் பார்த்துக்கிறது தான் என் வேலையே... “ என்று சிரித்தார்...

அவனும் சிரித்து கொண்டே அகிலாவிடம் திரும்பியவன்

“அகி.. போற இடத்துல உன் வால் தனத்தை காட்டாமல் ஒழுங்கா இருக்கணும்.. எங்கயும் மிஸ் ஆகிடாத... “ என்றான் அவளை அணைத்தவாறு...

அகிலாவும் தலையை உருட்டினாள் தன் அண்ணனை கட்டிக்கொண்டு..

அதை கண்ட கௌதம்

“போதும் டா.. மச்சான்.. அவங்க எல்லாம் சின்ன குழந்தை இல்ல....எல்லாம் அவங்க பார்த்துக்குவாங்க... அதான் ஆர்கனைசரும் கூட போறார் இல்ல.. அப்புறம் என்ன??

ஆமா ..உனக்கு இப்படியெல்லாம் கூட அக்கறையா பேச வருமா?? “ என்று சிரிக்க, அவனை முறைத்தான் நிகிலன்...

ரமணியும் இரு மகன்களையும் கட்டி அணைத்து பின் நிகிலனிடம் மதுவை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொன்னார்...

சிவகாமியும் அதையே சொல்ல,

“ம்மா... அவ என்ன சின்ன குழந்தையா ??.. பத்திரமா பார்த்துக்க... எல்லாம் நான் பார்த்துக்கறேன்.. நீங்க உங்க ட்ரிப் ஐ என்ஜாய் பண்ணுங்க... “ என்றான் இலேசான சிடுசிடுப்புடன்...

பின் அந்த குழுவை சேர்ந்த மற்றவர்களும் வந்து விட, அந்த ஒருங்கிணைப்பாளர் அனைவரையும் அழைத்து கொண்டு உள்ளே சென்றார்...

அனைவரும் கை அசைத்து விடை பெற மதுவும் அவர்களை ஏக்கமாக பார்த்து கொண்டிருந்தாள்...

அவர்கள் செக்இன் முடித்து உள்ளே செல்ல, மீண்டும் ஒரு முறை வெளியில் இருந்து கை அசைத்து விடைபெற்று மூவரும் கிளம்பி சென்றனர்...

வீடு திரும்பும் பொழுது மது காரின் முன் இருக்கையில் அமர்ந்து கொள்ள, எப்பவும் காரின் கதவை ஒட்டி அமர்ந்து கொள்பவள் இன்று தன் கணவன் பக்கம் நெருங்கி அமர்ந்து கொண்டாள் அவன் அறியாமல்....

சிறிது நேரம் அமைதியாக செல்ல, அவன் ஏதாவது பேசுவான் என்று ஓரக் கண்ணால் பார்க்க அவனோ அவள் ஒருத்தி இருப்பதாகவே கண்டு கொள்ளவில்லை...

அதுவும் அந்த இரவு நேரத்து பயணம்... அமைதியான போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை, சாலையின் ஓரத்தில் இருந்த விளக்குகளில் இருந்து கசிந்த மஞ்சள் ஒளியும் மனதிற்கு இதத்தை கொடுத்து ரம்மியமாக்க, தன் கணவனையே மையலுடன் நோக்கினாள் ஓரப்பார்வையால்...

“இந்நேரம் இளையராஜாவின் ரொமான்டிக் சாங் கேட்டால் எப்படி இருக்கும்?? “ என்று மது நினைக்க, அதே நேரம் நிகிலன் காரில் இருந்த ரேடியோவை ஒலிக்க விட்டான்....

அவன் கை ரேடியோக்கு செல்ல, துள்ளிக் குதித்தாள் மது...

“ஆஹா... இந்த விருமாண்டிக்கு கூட நம்ம மனச படிக்க தெரியுதே.. நான் நினைத்ததையே செயல் படுத்தறானே.. “ என்று உவகை கொள்ள, அடுத்த நொடி அவள் உற்சாகம் காற்று போன பலூனாக புஸ் சென்று ஆனது...

ஆமாம்... நிகிலன் காரில் இருந்த ரேடியோவில் நியூஸ் சேனலை ஒலிக்க விட்டு, அனைத்து மாவட்ட செய்திகளும் வாசிப்பதை கவனமாக கேட்க ஆரம்பித்தான்...

அதை கண்டு கடுப்பானாள் மது....

“சரியான சின்சியர் சிகாமணி போல.. இவன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?? இப்படி ரொமாண்டிக் சிச்சுவேசன்ல போய் நியூஸ் கேட்கறானே... நல்லா விளங்கின மாதிரிதான்... “ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்...

பின் மெல்ல நகர்ந்து கதவை ஒட்டி அமர்ந்து கொண்டு வெளியில் வேடிக்கை பார்த்து வந்தாள்....அதுவும் போரடிக்க

“அவன் பாட்டு போடாட்ட என்ன ?? நான் கேட்கறேன்..” என்று தன் அலைபேசியை எடுத்து அதில் இருந்த இயர் போனை காதில் சொருகிக் கொண்டு ராஜாவின் பாடலை கேட்க, அதில் இலயித்து கண்ணை மூடி ரசித்து வந்தாள்...

கார் வீட்டை அடைந்ததும் நிகிலன் அதை செட் ல் நிறுத்திவிட்டு கீழ இறங்க, மதுவோ இன்னும் இறங்காமல் அப்படியே அமர்ந்து இருந்தாள்...

மீண்டும் உள்ளே எட்டி பார்க்க, கண்ணை மூடி நன்றாக உறங்கியிருந்தாள்...

“ஏய்..” என்று அழைக்க, அவளோ எழவில்லை...

“சரியான இம்ச .. “என்று திட்டிக் கொண்டே காரின் மறுபக்கம் வந்தவன் அவள் பக்கம் இருந்த கதவை திறக்க, குழந்தைதனமாக அசந்து உறங்குபவளை கண்டதும் அவள் தூக்கத்தை கலைக்க மனம் வரவில்லை அவனுக்கு...

அவளை அப்படியே கையில் அள்ளி கொண்டான்... அவளின் பூச்சென்டை விட மென்மையான மேனியை சுமக்க, அவன் உள்ளே ஏதோ புரண்டது....

முன்பு வீசிய சூறாவளி இரண்டு வாரமாக அமைதியாக இருக்க இப்பொழுது மீண்டும் அவன் உள்ளே அதே புயல் அடிக்க ஆரம்பித்தது...

வழக்கம் போல தன்னை கட்டுபடுத்தி கொண்டவன் அவளை இலாவகமாக தூக்கி கொண்டு தன் அறைக்கு வந்தவன் அவளை சோபாவில் கிடத்தி அவள் மேல் போர்வையை எடுத்து போர்த்தி விட்டு, இரவு உடைக்கு மாறியவன் கண்கள் தானாக அவளிடம் சென்றன...

அவளின் பால் வடியும் முகமும் ஆரஞ்சு சுளை போல திரண்டிருந்த உதடுகளும், அவளின் குண்டு கன்னங்களும் அவனை சுண்டி இழுக்க, வழக்கம் போல பால்கனிக்கு சென்று மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான்...

மறுநாள் காலை எழுந்தவன் தன் காலை ஓட்டத்தை முடித்து கொண்டு திரும்பி வந்து வரவேற்பறையில் அமர்ந்து நாளிதழை புரட்ட, அவன் முன்னே அவன் அருந்தும் கஞ்சி ரெடியாக இருந்தது...

அதை கண்டவன்

“ஐயோ... அம்மா வேற இல்லையே.. இவளை நம்பி விட்டுட்டு போய்ட்டாங்க.. இவ அப்பன் செல்லம் கொடுத்து வளர்த்த லட்சணத்திற்கு சமையல் எவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருக்கிறாளோ??

இவள் பண்ணிய கஞ்சியை எப்படி குடிப்பது?? “ என்று யோசித்தவாறு அதை கையில் எடுத்தவன் அதை நம்பி குடிக்கலாமா?? வேண்டாமா?? என்று பட்டி மன்றம் நடத்தி கொண்டிருந்தான்..

முடிவில் சரி குடித்துதான் பார்க்கலாம்... என்று முடிவு பண்ணி வாயில் வைத்து இலேசாக அருந்த, அதன் சுவை அவன் தினமும் அருந்தும் அதே கஞ்சியின் சுவையாக இருந்தது...

“ஒரு வேளை அம்மா ஒரு வாரத்திற்கான கஞ்சியை தயார் பண்ணி பிரிட்ஜ்ல வச்சுட்டு போய்ட்டாங்களோ?? இவ அதை எடுத்து சூடு பண்ணி தராளோ??” என்ற சந்தேகத்தில் எழுந்து சென்று பிரிட்ச் ஜ திறந்து பார்க்க, உள்ளே அப்படி எதுவும் வைத்திருக்க வில்லை...

“ஹ்ம்ம்ம் அப்படி என்றால் இவள்தான் இதை செய்தாளா??” என்ற சந்தேகத்துடன் அவளை ஒரக்கண்ணால் பார்க்க, இதுவரை அவனையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தவள் அவன் தலை தன் பக்கம் திரும்பவும் அவசரமாக தலையை குனிந்து கொண்டு தன் வேலையில் கவனமாக இருப்பதாக காட்டி கொண்டாள்...

“அப்ப தினமும் இவள் தான் இதை செய்யறா போல இருக்கு.. பரவாயில்லையே... கொஞ்சம் தேறியிருக்கா.. “என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டே அதை குடித்து முடித்தவன் தன் அறைக்குச் சென்று மீதி உடற்பயிற்சியை முடித்து குளித்து கிளம்பி வந்தான்...

அதற்குள் மது அவனுக்கு காலை உணவை எடுத்து வைத்திருக்க,நேராக டைனிங் டேபிலுக்கு சென்றவன் தட்டை எடுத்து அமர்ந்தான்...

மது அவனுக்கு இட்லியை எடுத்து வைக்க, அதையும் சந்தேகமாக பார்த்தான்...

அவன் பார்வையை கண்டு கொண்டவள்

“சார்... நான்தான் செஞ்சேன்... இப்ப கொஞ்சம் கொஞ்சமா அத்தை கிட்ட சமையல் கத்துகிட்டேன்.. நீங்க பயப்படாம சாப்பிடுங்க... “ என்றாள் சிரித்தவாறு...

அதை கண்டு அவன் அவளை முறைத்தவாறு ஒரு இட்லியை பிட்டு தயக்கத்துடன் வாயில் வைக்க, அவள் பண்ணியிருந்த இரண்டு வகை சட்னியும் நன்றாகவே இருந்தது...

அதை ருசித்து சாப்பிட, அவனையே ஆவலாக பார்த்து கொண்டிருந்தாள் மது... அவனோ எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு முடித்து எழுந்து கை கழுவ சென்றான்...

“சிடுமூஞ்சி.. நல்லா இருக்கு, இல்லைனு ஒரு வார்த்தை சொல்றானா பார்... இப்ப கூட விரைச்சுகிட்டே போறானே...விருமாண்டி.... “என்று திட்டிக் கொண்டே அவன் சாப்பிட்ட தட்டை எடுத்து சென்று சிங்கில் பொத்தென்று போட்டாள்...

“ஏய்.. என்ன சத்தம் அங்க?? “என்றான் வெளியில் இருந்து..

“ஆங்... ஒன்னுமில்லை சார்... தட்டு கீழ விழுந்திருச்சு.... “ என்று சமாளித்தவாறு வெளியில் வந்தாள் மது...

அவள் அருகில் வந்தவன் ஒரு சாவிக் கொத்தை அவளிடம் கொடுத்து

“இதை வச்சுக்கோ... மாலை க்ளாஸ் முடிச்சு வந்த உடனே உள்ள லாக் பண்ணிக்கோ... பத்திரமா இரு... “ என்றவாறு முன்னே நடந்தான்...

“சார்.... நைட் சீக்கிரம் வந்திடுவீங்களா??... “ என்றாள் சத்தமாக..

அதற்கு பதில் சொல்லாமல் அவளை பார்த்து முறைத்து விட்டு வேகமாக வெளியேறி சென்றான் நிகிலன்...

“பாரேன்.. வருவேன்.. மாட்டேன் னு கூட ஒரு வார்த்தை பேச மாட்டேங்கிறான்... ஷ் அப்பா.. இவன் கூட எப்படிதான் என் காலத்தை ஓட்டறதோ?? வேல்ஸ்... நீதான் எனக்கு எனர்ஜியை கொடுக்கணும்..” என்று புலம்பி கொண்டே மீதி வேலையை கவனித்தாள் மதுவந்தினி...

வெளியில் சென்ற நிகிலன் ஒரு பைலை எடுக்க 11 மணி அளவில் திரும்ப தன் வீட்டிற்கு வந்தான்...

கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருக்க,

“அவள் க்ளாஸ் போயிருந்தால் உள்ளே ஏன் தாழ் போடபட்டிருக்கிறது?? “ என்ற கேள்வியுடன் அழைப்பு மணியை அழுத்த பதில் எதுவும் இல்லை....


பின் தன்னிடம் இருந்த சாவியை கொண்டு கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றான் ..

சுற்றிலும் பர்வையை சுழற்ற, யாரும் அங்கு காணவில்லை.. நேராக தன் அறைக்கு சென்றவன் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல அங்கு மது சோபாவில் சுருண்டு படுத்திருந்தாள் ..

“காலையில் நான் கிளம்பி செல்லும் பொழுது நன்றாகத்தானே இருந்தாள்... அதுக்குள் என்னாச்சு?? “என்று யோசித்தவாறு ஓர கண்ணால் அவளை பார்த்தவாறு சென்று தனக்கு வேண்டிய பைலை எடுத்து திரும்பி வர, அவள் இன்னும் எழுந்திருக்காமல் அப்படியே சுருண்டிருந்தாள் கண்ணை மூடி...

அதை கண்டு அவள் அருகில் சென்றவன்

“ஏய்.. என்னாச்சு?? “ என்றவாறு அவள் நெற்றியில் கை வைக்க, பீவர் எதுவும் இல்லை...

அவனின் அதட்டலில் திடுக்கிட்டு விழித்தவள் வேகமாக எழ முயல, முடியாமல் வயிற்றில் கை வைத்து கொண்டு மீண்டும் படுத்து கொண்டாள்...

“என்னாச்சு?? “ என்றான் கொஞ்சம் பதற்றமாக...

மதுவோ தன் வலியை மறைத்து கொண்டு, அவனை பார்த்து

“ஒன்னும் இல்ல சார்.. இலேசாக வயிற்று வலி.. ஹாப் டே ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்.. “ என்று புன்னகைக்க முயன்றாள்...

“As you wish..ஏதாவது முடியலைனா சொல்.. Take care“ என்றவாறு வெளியேறி கீழிறங்கி சென்றான்..

வாயில் வரை சென்றவன் ஏனோ அவளை அப்படியே விட்டு செல்ல மனம் வரவில்லை... என்ன செய்ய?? என்று யோசித்தவன் தன் அலைபேசியை எடுத்து டாக்டர் சுசிலா வை அழைத்து விவரம் சொல்ல,

“நிகிலா.. என் பிரண்ட் உன் விட்டு பக்கத்துல தான் இருக்கா.. நான் அவளை வந்து மதுவை பார்க்க சொல்றேன்.. நீ ஒன்னும் பயப்படாத...“ என்றார் சுசிலா..

பின் அவரே தன் பிரண்ட் ஐ அழைத்து சொல்ல அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் டாக்டர் மைதிலி அவன் வீட்டிற்கு வந்திருந்தார்...

கிட்ட தட்ட சுசிலாவின் வயதில் இருந்தார்.. முன் உச்சி முடி நரைத்திருக்க, முகத்தில் டாக்டருக்கே உரித்தான ஒரு கனிவுடன் அவனை பார்த்து புன்னகைத்தவாறு உள்ளே வ்நதார்...

நிகிலன் அவரை வரவேற்று தன் அறைக்கு அழைத்து சென்றான்...

டாக்டரை கண்டதும் மது மெல்ல சுதாரித்து எழுந்து அமர, அவரோ மதுவை பரிசோதித்தவாறு

“என்னாச்சுமா?? “ என்றார்...

அவள் நிகிலன் அங்கு இருக்கவே சங்கோஜமாக நெழிய, அதை புரிந்து கொண்டவர்

“நிகிலன்...நீங்க கொஞ்சம் கீழ இருங்க.. நான் உங்க வொய்ப் ஐ செக் பண்ணிட்டு வர்ரேன்.. “ என்றார்..

அவனும் வெளியேறி செல்ல, மதுவை பரிசோதித்தவர் சில நிமிடங்கள் கழித்து கீழ இறங்கி வந்தார்...

அவர் வருவதை கண்டதும் நிகிலன் சோபாவில் இருந்து எழுந்து நிற்க அவன் அருகில் வந்தவர் அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு அவனையும் அமர சொன்னார்...

“ஒன்னும் பயப்படற மாதிரி இல்லை நிகிலன்... இது பெண்களுக்கு மாதா மாதம் வரும் பிரச்சனைதான்..நீ கொஞ்சம் பயந்துட்ட போல... ” என்று உரிமையாக அவனை ஒருமையில் அழைத்து சிரித்தவாறு....

“அது என்ன பிரச்சனை டாக்டர்?? “ என்றான் புரியாமல்..

அதை கேட்டு திகைத்தவர்

“ஆமா.. வீட்ல பெரியவங்க யாரும் இல்லையா?? “என்றவாறு கண்களை சுழற்ற ஹாலில் மாட்டியிருந்த நிகிலன் குடும்ப படத்தில் அவரின் பார்வை சென்று நின்றது..

அதில் இருந்த சிவகாமியை அடையாளம் கண்டு கொண்டவர்

“அடடே... நீ சிவாவோட பையனா?? எனக்கு உங்க அம்மாவை நல்லா தெரியும்.. கோயில்ல அடிக்கடி பார்ப்போம்.. ஆமா உங்க அம்மா இல்லையா?? “என்றார் சிரித்து கொண்டே...

“இல்லை டாக்டர்.. அவங்க டூர் போயிருக்காங்க... திரும்பி வர ஒரு வாரம் ஆகும்... ஏதாவது பிரச்சனையா?? “என்றான் கொஞ்சம் பதற்றமாக....

நிகிலன் சின்ன வயதில் இருந்தே ஆண்கள் பள்ளியில் தான் படித்தான்..அவன் நண்பர்கள் மூன்று பேரும் தான் அவனுக்கு.... எங்க போனாலும் ஒன்றாகவே சுத்துவர்...

பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் அவன் NDA ல் சேர்ந்துவிட, அங்கயும் பெண்களிடம் பழகும் வாய்ப்பு கிடையாது...

அவன் தந்தை இறந்த பிறகு இன்னும் அவன் சுறுங்கி விட, தன் தங்கையிடம் கூட மனம் விட்டு பழகியதில்லை... மகிழன்தான் அகிலாவிடம் எப்பொழுதும் சுத்திக் கொண்டிருப்பான்..

அதனால் பெண்களை பற்றியும் அவர்களுடை பிரச்சனை பற்றியும் அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை...மைதிலி பிரச்சனை என்கவும் கொஞ்சம் பதறி அவரை பார்க்க

“அதெல்லாம் ஒன்னும் பயப்படற மாதிரி இல்லப்பா...இது பெண்களுக்கு ரெகுலரா வர்ற பிராப்ளம்தான்...” என்று ஒரு டாக்டராக சுருக்கமாக அவனுக்கு விளக்கினார்....

“உன் வொய்ப்க்கு மாதா மாதம் இந்த மாதிரி வலி வரும் போல...ஒவ்வொரு முறையும் மாத்திரை எடுத்துக்கு வா போல... இந்த மாதம் மாத்திரை தீர்ந்து போய்விட அவளுக்கு வலி அதிகமாயிடுச்சு.. அதான் சுருண்டு படுத்திட்டா...

பை தி வே உன்கிட்ட கொஞ்சம் பர்சனலா பேசலாமா?? பிரியா இருக்கியா??” என்றார் அவனை ஆராய்ந்தவாறு...

“ஸ்யூர் டாக்டர்.. சொல்லுங்க.. “ என்றான் நிகிலன் இன்னுமே கொஞ்சம் பதற்றத்துடன்...

“வந்து.. எனக்கு டாக்டர் சுசிலாவையும் சிவாவையும் நல்லா தெரியும்.... உன்னை பத்தியும் ஒரு சின்சியர் போலிஸ் ஆபிசர்னு நிறைய கேள்வி பட்டிருக்கேன்.. ஆனா இப்பதான் நேர்ல பார்க்க முடிஞ்சது.. ஒரு டாக்டரா இல்லாம அஸ் அ மதர் உன்கிட்ட சில விசயம் பேசலாமா?? “ என்று பீடிகையுடன் ஆரம்பித்தார் மைதிலி....

நிகிலனுக்கு இன்னும் குழப்பமாக இருந்தது.. எதை பற்றி சொல்ல வருகிறார் என்று புரியாததால்,

“ஸ்யூர் டாக்டர்... நீங்க என்ன வேணாலும் தாராளமா சொல்லுங்க.. நான் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டேன்.... “ என்று சிரித்தான்...

“தேங்க்ஸ் பா... சரி.. உங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தனை நாட்கள் ஆகிறது??” என்றார்....

“இவர் எதுக்கு சம்மந்தம் இல்லாமல் கேட்கிறார்?? “ என்று மனதில் நினைத்து கொண்டு

“ஆறு மாதம் டாக்டர்.. “என்றான்...

“அரேஞ்ட் மேரேஜ் ஆ?? “

சிறிது நேரம் யோசித்தவன்

“அந்த மாதிரிதான் டாக்டர்...” என்றான் தயங்கியவாறு..

“உனக்கு உன் வொய்ப் ஐ பிடிச்சிருக்கா?? “ என்றார் அடுத்ததாக...

அவன் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க

“சொல்லுப்பா... உங்களுக்குள் எதுவும் பிரச்சனையா?? “என்றார் மீண்டும் ஆராயும் பார்வையுடன்....

மீண்டும் சில நொடிகள் அமைதியாக இருந்தவன் ஒரு பெருமூச்சை விட்டு

“எங்க கல்யாணம் கொஞ்சம் சிக்கலா நடந்தது டாக்டர்.. “ என்று அவர்கள் திருமணம் நடந்த விதத்தை சுறுக்கமாக விளக்கினான்...அதை கேட்ட மைதிலி

“ஓ...உன்னை நினைத்தால் பெருமையா இருக்குப்பா.... ஒரு பொண்ணோட கல்யாணம் நின்னு போகாம சரியான நேரத்துல நீ அவளை, இரண்டு குடும்பத்தோட நிம்மதி சந்தோசத்தை காப்பாத்தியிருக்க....

சரி.. கல்யாணம் ஆகி இப்ப 6 மாதம் ஆகிறது இல்லையா?? உங்கள் திருமணத்தை இரண்டு பேருமே ஏற்றுக் கொண்டீர்களா?? இல்லையா?? “ என்றார்...

அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் நிகிலன் மீண்டும் முழிக்க, அதை கண்டு கொண்டவர்

“சாரி ப்பா.. ரொம்ப சுத்தி வர்ரேனா?? சரி நேரடியாகவே சொல்றேன்... உன் வொய்ப் ஐ செக் பண்ணி பார்த்ததில் அவள் இன்னும் தாம்பத்திய வாழ்க்கையை ஆரம்பிக்கவே இல்லைனு தெரியுது...

ஒரு திருமணம் என்பது வெறும் தாலி கயிற்றை கட்டி விட்டதோடு முடிந்து விடுவதில்லை...

அதையும் தாண்டி அடுத்த படியாக கணவன் மனைவி இருவரும் இணைந்து அவங்களுக்கான தாம்பத்திய வாழ்க்கையை ஆரம்பிப்பதில் தான் அந்த திருமணம் நிறைவு பெறும்... முழுமை அடையும்..

அப்பதான் அவர்கள் உண்மையாகவே கணவன் மனைவியாக மாறி அவங்களுக்கான ஒரு குடும்பத்தை உருவாக்க இருவரும் இணைந்து அடி எடுத்து வைப்பது தான் திருமண பந்தத்தின் முக்கிய நோக்கம்...

ஆனால் நீங்க இரண்டு பேருமே திருமணம் ஆகியும் இப்படி தனித்தனியாக வாழ்வதால் யாருக்கு என்ன பயன் ??

உங்க வொய்ப் கிட்ட பேசறப்போ அவளுக்கு உன் மேல இன்ட்ரெஸ்ட் இருக்கிற மாதிரி தான் தெரிஞ்சுது.. எந்த விதத்திலயும் உன்னை விட்டு கொடுக்காமல் பேசினா....

ஏன் நிகிலன் உனக்கு உன் வைப் ஐ பிடிக்கலையா ?? எதுனாலும் என்கிட்ட ஓபனா சொல்லுப்பா... இதை ஆராய்ந்து ஒரு முடிவு எடுக்காமல் இப்படியே வளர விடாதிங்க...

சொல்லு நிகிலா... என்ன பிரச்சனை?? “ என்றார் அக்கறையாக...

அவனுக்கே என்ன பிரச்சனை என்று சரியாக புரியவில்லை.. அதை இதுவரை டீப்பாக ஆராயவும் இல்லை... அதுக்கு நேரம் ஒதுக்கியதுமில்லை..

முதலில் ரமணியை மனதில் கொண்டு அவளை வெறுத்து வந்தவன் இப்பொழுது அவருமே மதுவை ஏற்றுக் கொண்டு சந்தோசமாக இருக்க அடுத்து என்ன பிரச்சனை என்று சரியாக புரியவில்லை அவனுக்கு..

ஒரு வேளை அவனுள்ளே பதிந்து போன மனைவியை பற்றிய தப்பான கருத்து இன்னும் மறைய வில்லையோ?? இல்ல இது வேற எதுவும் பிரச்சனையோ?? என்று அவசரமாக ஆராய்ந்தவன் தன் மனதில் இருந்ததை அவரிடம் சொல்லவில்லை...

அவன் அப்பொழுதே மனம் விட்டு அவரிடம் அவனுக்குள் ஒளிந்திருக்கும் பயத்தை பற்றிச் சொல்லியிருந்தால் ஒரு நல்ல தீர்வு கிடைத்திருக்கும்.... நம்ம வேலனும் இந்த ஆட்டத்தை முடித்து வெற்றி பெற்று இருப்பான்...

ஆனால் அந்த வேலனுக்கு எதிரான ஆட்டக்காரன்(opponent) நிகிலன் மனதை திறக்க விடவில்லை... அதற்கு பதிலாக வேற என்ன காரணம் சொல்வது என்று அவசரமாக ஆராய்ந்தான் நிகிலன்....

அவனுக்கு ஒரு பாயின்ட் கிடைக்க, அதை பிடித்துக் கொண்டான்... பின் மைதிலியை பார்த்து

“ஒரு சின்ன குழப்பம் டாக்டர்..” என்றான்...

“எதுனாலும் சொல்லுப்பா?? நீ சொல்லும் எந்த விசயமும் என்னை தாண்டி வெளியில் செல்லாது... அது தான் எங்கள் தொழில் தர்மம்.... நீ தயங்காமல் சொல்... “ என்று அவனை ஊக்குவித்தார்....

“வந்து.. எனக்கும் அவளுக்கும் வயது வித்தியாசம் அதிகம் டாக்டர்..... கிட்டதட்ட 9 வருடம் வித்தியாசம்... அவ இன்னும் சின்ன பொண்ணா இருக்கா... தூங்கும் பொழுது வாயில் விரல் சூப்பிகிட்டு இருக்கா...

அவள போய் என் மனைவியா அணுக கொஞ்சம் தயக்கம்.. “ என்று ஏதோ வாயில் வந்த காரணத்தை சொல்லி சமாளிக்க முயன்றான்....

அதை கேட்டு சிரித்த மைதிலி

“இவ்வளவு பெரிய போலிஸ் ஆபிசர்.. இந்த விசயத்துல விவரம் இல்லாம இருக்கியே... இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லப்பா...

அந்த காலத்துல வாரிசு இல்லைனோ இல்லை மனைவி இறந்து விட்டாலோ , ஒரு 45, 50 வயது பெரியவருக்கு கூட சின்ன பொண்ணை பிடித்து கல்யாணம் பண்ணி வைப்பர்கள்... அவங்களும் குடும்பம் நடத்தி குழந்தைங்கள பெத்து நல்லபடியா வாழ்ந்து இருக்காங்க..

தாம்பத்தியத்திற்கு வயது வித்தியாசம் ஒரு பெரிய தடை இல்ல நிகிலன்.. மனம் ஒத்து போகறதுக்குத்தான் வயது வித்தியாசம் பெரிய தடையாக வரும்..

உன்னுடைய எண்ணங்களும் உன் மனைவியோட எண்ணங்களும் உங்களோட வயதுக்கு தகுந்த மாதிரி வேற வேறயாக இருக்கிறப்போதான் வயது வித்தியாசம் தடையா இருக்கும்...

உன் வொய்ப் ஐ பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலை... அதோட 9 வருடம் என்பது ரொம்ப பெரிய வித்தியாசம் இல்லை...

அதோடு உன் வைப் பிசிக்கலாகவும் பெர்பக்ட்லி ஆல்ரைட்...சில சமயம் குணம் மெச்சூர்டாக இல்லாமல் இருந்தாலும் போக போக சரியாகிடும்...என்ன புரிஞ்சுதா?? “ என்று சிரித்தார் மைதிலி...

“ஹ்ம்ம்ம் ஓகே டாக்டர்... அதோடு வயது மட்டும் இல்லாமல் எங்க கல்யாணம் திடீர்னு நடந்ததால கொஞ்ச நாள் ஒருத்தரை ஒருத்தர் முழுமையா புரிஞ்சுக்கணுமே... அதுக்கும் தான்... “ என்றான் நிகிலன் அடுத்த காரணத்தை கண்டு பிடித்து

“ஹ்ம்ம் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் முழுதாக புரிஞ்சுகிட்டுத் தான் தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கணும்னு கிளம்பினா அது இந்த ஜென்மத்துல முடியாது..

ஏனா ஒருத்தரை ஒருத்தர் முழுவதும் புரிந்து கொள்வது என்பது இயலாதது...

இருவரும் இணைந்து தங்கள் வாழ்க்கை பாதையில் பயணிக்கும் பொழுதே புரிந்து கொள்ள வேண்டியதுதான்.. அதோடு இல்லற வாழ்க்கை இன்னும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள உதவும்... அவர்களுக்குள் நெருக்கத்தை உண்டாக்கும்...

அந்த திருமணம் முழுமை அடையும் பொழுது, கணவனுக்கும் மனைவிக்கும் நெருக்கம் அதிகமாகும் பொழுது தான் அவர்களுக்குள் புரிதலும் அதிகமாகும்...

அதனால் ரொம்ப யோசிக்காத.... எப்படியோ நடந்தாலும் உங்கள் இருவருக்கும் திருமணம் ஆனது ஆனதுதான்.. அதை ஏற்றுக் கொண்டு உங்கள் வாழ்க்கையின் அடுத்த படிக்கு செல்லுங்க...

வேணும்னா நீங்க இரண்டு பேருமே ஒரு கவுன்சிலிங் எடுத்துக்கங்க.. இன்னும் உன் மனதில் வேற எதுவும் குழப்பம் இருந்தாலும் மனம் விட்டு பேசுங்க... ஆனால் சீக்கிரம் உங்க வாழ்க்கையை ஆரம்பிங்க...

அதோடு உன்னை நினைத்தால் பெருமையா இருக்குப்பா...

திருமணம் எப்படா முடியும்?? முடிந்த அன்றைய இரவே மனைவியின் விருப்பத்தை கூட அறியாமல் அவளை தங்கள் ஆசைக்கு உட்படுத்தி கொள்ளும் ஆண்களுக்கு நடுவில்,

உன் மனைவியின் சிறுபிள்ளையான குணத்தை அறிந்து அவளை காயபடுத்தி விடாமல் இருக்கவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பிறகு உங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்க காத்திருக்கும் நீ உண்மையிலயே கிரேட் தான் நிகிலன்....

சோ.. இதுவரை காத்திருந்தது போதும்... இன்னும் லேட் பண்ண வேண்டாம்... Hope you understand… “ என்று சிரித்தார்....

“ஹ்ம்ம் ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்.... எனக்காக இவ்வளவு நேரம் ஒதுக்கி எக்ஸ்ப்ளெய்ன் பண்ணியதற்கு... “ என்று புன்னகைத்தான் நிகிலன்...

“இட்ஸ் மை ட்யூட்டி கண்ணா... நீயும் என் பையன் மாதிரி தான்.. தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை நன்றாக இல்லைனா அதை சரி பண்ணுவது பெற்றோர்களோ, அவர்களை சுற்றி இருக்கும் மற்ற பெரியோர்களுடைய கடமை...

உன்னை மாதிரி இன்றைய தலைமுறையினர் தாங்களாகவே ஒன்றை கற்பனை பண்ணி கொண்டு அதை மனம் விட்டு யாரிடமும் பேசாமல், மீறி போனால் நெட்டில் எதையாவது தேடி தாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்து தங்கள் வாழ்க்கையை குழப்பி கொள்கின்றனர்....

மனம் விட்டு யாரிடமாவது பேசினாலே பாதி பிரச்சனை தீர்ந்து விடும்...

அது மாதிரிதான் நானும் உங்களுக்குள் இருக்கும் கேப் ஐ சரி பண்ண முயன்றேன்... God bless both of you… நீங்க இரண்டு பேரும் மனம் ஒத்த தம்பதிகளா பல வருடங்கள் வாழனும்... “ என்று வாழ்த்தி விடைபெற்று சென்றார் மைதிலி....



Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!