என் மடியில் பூத்த மலரே-24
அத்தியாயம்-24
அன்று வழக்கம் போல அந்தி சாயும் நேரத்தில் தோட்டத்தில் உலாவி விட்டு வீட்டிற்குள் வந்த பாரதி ஷோபாவில் அமர்ந்து தன் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள்... ஆனால் அவள் நினைவுகளோ ஆதியை சுற்றியே வந்தது... இதோடு அவனை பார்த்து ஒரு மாதம் ஆகிறது...
ஜானகியும் ஆதியும் கிளம்பி சென்றவுடன் மிகவும் சோர்ந்து போனாள் பாரதி... ஆனால் ஜானகி அடிக்கடி போனில் பேசி அவளை தனியாக இருக்க விடாமல் பார்த்துக் கொண்டார்...மார்னிங் சிக்னெஸ் ம் கொஞ்சம் குறைய கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்தாள்... ஆனால் ஏனோ அவள் தனியாக இருக்கும் நேரத்தில் மட்டும் அவள் மனம் ஆதியிடம் சென்று விடும்... அவனின் அருகாமையை தேடும்....
இது ஐந்தாவது மாதம் அவளுக்கு... பாரதியின் வயிறு மெல்ல தெரிய ஆரம்பித்தது..
நாளை செக்கப் க்கு ஹாஸ்பிட்டல் போகணும்...இந்த முறையும் அவன் கூட வருவானா?? என்று ஒரு ஆவல்... அவன் வர வேண்டும் என்று ஏங்கியது அவள் மனம்...
“இவன் எதுக்கு வந்தான் என்று திட்டிய நானா அவன் வரவை எதிர்பார்ப்பது?? எப்படி இப்படி மாறிப்போனேன்... அப்படி என்னதான் மாயம் பண்ணினானோ... திருடா...” என்று செல்லமாக திட்டிக்கொண்டாள்....
பின் தன் வயிற்றில் கை வைத்து
“ஹே... குட்டி... என்ன உங்க அப்பா நாளைக்கு வருவாரா?? நீ தான் அவன் இளவரசி ஆச்சே... நீதான் உங்க அப்பாவை உன்ன பார்க்க வரவைக்கணும் .. “ என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே வாயில் அழைப்பு மணி அடித்தது...
யாரா இருக்கும் இந்நேரத்தில் ?? என்று யோசித்தவாறே வேகமாக எழுந்து சென்று கதவை திறந்தாள்...
வெளியில் நின்றவனை கண்டதும் அவள் முகம் செந்தாமரையாக மலர்ந்தது... அவனை பார்த்து பெரிதாக புன்னகைத்தாள் தன்னை மறந்து...
ஆனால் அவனோ, அவளையோ அவளின் புன்னகையோ கவனிக்கும் நிலையில் இல்லை...
பாரதி கதவை திறந்ததும் தள்ளாடியவாறு உள்ளே வந்தான்...எப்பவும் கம்பீரமக அவளை முறைத்துக் கொண்டு நிற்பவன் இன்று நிற்க கூட முடியாமல் தடுமாறவும் திகைத்து நின்றாள் சில விநாடிகள்..
அதற்குள் உள் நோக்கி நடக்க ஆரம்பித்தான் ஆதி.. நடக்கும் பொழுதே தடுமாறவும் முதலில் அவனுக்கு என்னாச்சு என்று முழித்து பின் ஒடிச்சென்று அவனை தாங்கிக் கொண்டாள்... முதலில் அவளை விளக்கினாலும் பின் அவளை பிடித்தவாறே மாடியில் ஏறினான்..
மேல சென்றதும் முதலில் இருந்த பாரதி அறைக்குள் நுழைந்தான்... பின் அவள் படுக்கையில்ன் அருகில் சென்று பொத்தென்று விழுந்தான்.. அவனின் மீதிருந்து மதுவின் நெடி வீசியது.. அப்பொழுதுதான் அவன் குடித்திருக்கிறான் என்று உரைத்தது பாரதிக்கு...
மெதுவாக அவன் காலை எடுத்து நேராக வைத்து அவன் அணிந்திருந்த ஷூவை கழட்டினாள்.. அதற்குள் அவன் எதையோ முனுமுனுத்தான்.. மெல்ல கூர்ந்து அவன் என்ன சொல்றான் என்று கவனித்தாள்...
“மா.... நான் தோத்து போய்ட்டேன்.. அவ என்னை ஏமாத்திட்டா... அவள் மட்டும் நிம்மதியா அந்த ராஸ்கல் கூட சுத்திகிட்டிருக்கா... ஆனால் நான் எங்கப்பாவை இழந்து அம்மா சந்தோஷத்தை துடைத்த பாவி ஆகிட்டேன்... என்னால முடியல மா... “ என்று ஏதோ புலம்பி கொண்டிருந்தான்...
அதை கேட்டு பாரதியின் மனம் கனத்தது... அவன் அந்த ஷ்வேதாவை நினைத்து தான் புலம்பறான் என்று புரிந்தது.. இன்னும் அவளை மறக்கலை போல என்று நினைக்கும் பொழுது கஷ்டமாக இருந்தது அவளுக்கு...
“அவன் இந்த அளவு குடிக்கிறளவுக்கு என்ன நடந்திருக்கும் இன்று?? “ என்று யோசித்தாள்..
அதே நேரம் ஜானகியும் அவளை அழைத்தார்.. அப்பொழுது தான் உரைத்தது அவர் இன்று காலையில் இருந்து தன்னை அழைக்க வில்லை என்று .. வழக்கம் போல காலையிலும் மதியம், மாலை என்று பேசுபவர் இன்று ஒரு முறை கூட அழைக்கவில்லை என்பது உரைத்தது...அவசரமாக போனை எடுத்தாள் பாரதி...
“ஹ்ம்ம் சொல்லுங்க அத்தை.. “
“பாரதி மா... ஆதி அங்க வந்தானா?? என்றார் தழுதழுத்த குரலில்.. அழுதிருப்பார் போல..
“ஹ்ம்ம் ஆமா அத்தை.. இப்பதான் வந்தார்... நாளைக்கு செக்கப் போகணும் இல்லையா.. அதான் வந்திருப்பார் போல.. “ என்றாள் அவசரமாக... அவன் நிலையை பற்றி சொல்ல மனம் வரவில்லை...
“சரி டா ம.. அவனுக்கு சாப்பிட எதுவும் கொடு.. “என்றார் இன்னும் அதே கனத்த குரலில்..
“ஹ்ம்ம்ம் சரி அத்தை.. அப்புறம் என்னாசுசு அத்தை?? ஏன் உங்க குரல் ஒரு மாதிரி இருக்கு?? ... காலையில் இருந்து ஏன் போன் பண்ணலை.. “ என்றாள்.. கொஞ்சம் தயங்கியவாறு..
அதை கேட்டதும் கொஞ்சம் நேரம் கழித்தே பேசினார் ஜானகி..
“இன்று உங்க மாமா இறந்த நாள் பாரதிமா.. அதான் திதி கொடுக்க போயிருந்தோம் ... எப்பவும் இந்த நாள் ல ஆதி ரொம்பவும் உடைஞ்சு போய்டுவான்.. திதி கொடுத்து முடிஞ்சதும் வீட்டுக்கு வந்து அவன் ரூமுக்குள் போய் கதவை சாத்திக்குவான்... அன்று முழுவதும் வெளியில் வரமாட்டான்... ஆனால் இன்னைகு அவனை காணோம்.. அதான் கொஞ்சம் பயந்துட்டேன்.. “என்றார் இன்னும் அதே கலங்கிய குரலில்..
அத கேட்டு பாரதியின் கண்களும் கலங்கியது...
“ஓ சாரி அத்தை... நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்க... நான் அவரை பார்த்துக்கறேன்.. நீங்க ஏதாவது சாப்பிட்டீங்களா?? “
“இல்... “ என்று சொல்ல வந்து “ஆமா.. சாப்பிட்டாச்சு.. “ என்று சமாளித்தார்..
அவர் சமாளித்ததை கண்டுகொண்டவள்
“அத்தை.. உங்க மறுமகள் கிட்டயே பொய் சொல்றிங்களே....நீங்க இப்ப சாப்பிடலைனா நானும் உங்க பேத்தியும் சாப்பிட மாட்டமாக்கும்.. இப்ப போய் முதல்ல சாப்பிடுங்க...
மாமா இறந்தநாள் அன்று எதுவும் சாப்பிடாமல் இருந்தா தான் அவருக்கு கஷ்டமா இருக்குமாம்.. நீங்க நல்லா சாப்பிட்டு சிரிச்சு கிட்டு இருந்தாதான அவருக்கு பிடிக்கும்.. போய் முதல்ல சாப்பிடுங்க.. சாப்பிட்டு எனக்கு போன் பண்ணனும்ம்... “ என்று அதட்டினாள் அக்கரையாக..
பின் ஆதியை பார்த்தவள் அவன் இன்னும் ஏதோ புலம்பி கொண்டிருக்கவும்
“எப்படி இருந்தவன்.. இப்படி கிடக்கிறானே.. “ என்று மனது பிசைந்தது..
பின் கீழ சென்று கொஞ்சமாக சாப்பிட எடுத்து வந்து அவனை வற்புறுத்தி ஊட்டி விட்டாள்... பின் அவன் அருகில் அமர்ந்து அவனையே பாவமாக பார்த்து கொண்டிருந்தாள்..
என்ன நினைத்தானோ,
“சுசி மா ... உங்க மடில படுத்துக்கவா?? “ என்று எழுந்து அவள் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்...
பாரதி முதலில் திகைத்தாலும் அவள் கை தானாக அவன் தலையை வருடியது...
அவள் இடுப்பை கட்டி கொண்டவன்
“நான் தப்பு பண்ணிட்டேன் சுசி மா... நான் அந்த ஷ்வேதாவை பார்த்தே இருக்க கூடாது .. “என்று அதே பழைய புராணத்தை பாடினான்..
பின்
“சாரி மா ... நீங்க அவ்வளவு தூரம் சொல்லியும் என்னால உங்க வாக்கை காப்பாத்த முடியல... அந்த ஷ்வேதாவை அந்த ராகுலுடன் பார்க்கவும் என்ன கட்டு படுத்த முடியல.. தாங்க முடியல மா ... அதான் உங்க பேச்சையும் மீறி இன்னைக்கு குடிச்சிட்டேன்... சாரி மா... “என்று மீண்டும் புலம்பினான்...
எப்பவும் இந்த நாளில் ஆதி மிகவும் உடைந்து விடுவான்.. தன்னால் தான் தன் தந்தை இறந்தார் என்ற குற்ற உணர்வு அவனை வாட்டும்.... தன் அறைக்குள் புகுந்து கொள்வான்...
ஆனால் இன்றோ அறைக்குள் இருந்தவனுக்கு மாலை ஒரு தவிர்க்க முடியாத பார்ட்டி இருந்தது நினைவு வந்தது.... இது எல்லா தொழிலதிர்பர்களும் கலந்து கொள்ளும் பார்ட்டி அது...
அவனும் தவிர்க்க முடியாமல் அந்த பார்ட்டிக்கு கிளம்பி சென்றான்...
அந்த பார்ட்டிக்கு ஷ்வேதாவும் வந்திருந்தாள் ராகுல் உடன்...
அவளை கண்டதும் ஆதியின் உடல் விரைத்தது... தன் தந்தையின் மறைவு தினத்தில் அவர் மறைவுக்கு காரணமானவளையே பார்க்க நேர்ந்ததும் அவனுள் இன்னும் பெரும் வலி பரவியது..
ஷ்வேதாவும் அவனை கண்டு கொண்டாள்...
கடந்த மாதம் ஆதியை பாரதியுடன் அந்த உணவகத்தில் பார்த்ததில் இருந்தே அவளுக்குள் கனன்று கொண்டிருந்தது...
“அது எப்படி அவன் அவ்வளவு சந்தோஷமாக இருக்கலாம்??... அவன் எப்பவும் தன்னையே நினைத்திருப்பான்.. “ என்று எதிர்பார்த்தவளுக்கு அவன் வேற ஒரு பொண்ணுடன் சிரித்து பேசுவதை கண்டதும் அவள் கண்கள் பொறாமையில் வெந்தது... இவன் எப்படி சந்தோஷமாக இருக்கலாம் என்று கருவினாள்..
அவனை பழிவாங்க இது ஒரு நல்ல சான்ஸ் என்று எண்ணி அவள் ராகுலுடன் மிகவும் நெருக்கமாக இழைந்தாள் ஆதியை ஓரக்கண்ணால் பார்த்தவாறு..
அதோடு பார்ட்டியின் இடையில் நடனம் இருந்ததால் அவள் ராகுலுடன் சேர்ந்து மோசமாக இழைந்து கொஞ்சி ஆடினாள்.. ராகுலுக்குமே ஆதியை பழி வாங்க கிடைத்த சந்தர்ப்பம்.. அவன் ஷ்வேதாவை தன்னிடம் இருந்து பறித்துக்கொண்ட ஆத்திரம் இன்னும் தீராமல் இருக்க அதை தீர்த்து கொள்ள அவனும் அவளுடன் மிக நெருக்கமாக இருப்பதாக காட்டிக்கொண்டான்...
அதை கண்ட ஆதிக்கு பற்றி கொண்டு வந்தது.. ஒரு காலத்தில் தன்னுடன் இப்படி இழைந்தவள் தானே.. அதோடு பழைய நினைவுகள் கண் முன்னே வர அவன் உடல் வில்லாக விரைத்தது.. கண்கள் கோபத்தில் கொப்புளிக்க வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினான்...
அவன் மனம் அப்பவும் ஆறவில்லை.. அவள் அந்த ராகுல் உடன் கொஞ்சி குழைந்து ஆடியதே அவன் கண் முன்னே மீண்டும் மீண்டும் வந்து அவனை வாட்டியது...
ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் தானாக கண்ணில் தெரிந்த அருகில் இருந்த மதுக்கடைக்கு சென்றான்.. அந்த ஷ்வேதாவை அவள் ஆடிய ஆட்ட்டத்தையும் மறக்கும் அளவுக்கு குடித்தான்...
ஒரு வழியாக அவன் மனம் அவளை மறந்து போதையில் மிதக்க அவன் குடிப்பதை நிறுத்தி காரை எடுத்தவன் எப்படியோ தன் கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்து சேர்ந்தான்...
அந்த நினைவில் இன்னும் அவளை பற்றியே உளறிக் கொண்டிருந்தான்....
அவன் தன்னை சுசிலா டாக்டர் என்று தான் நினைத்திருக்கிறான் என்றதும் பாரதி தானாக ஒரு தாயாக மாறிப் போனாள்..
அவன் முடியை ஆதரவாக தடவினாள்.. அவளின் அந்த மெல்லிய வருடலில் அவன் இலேசாக கண் அயரவும் மெல்ல எழுந்து அவனை நேராக படுகக வைத்து போர்வையை போர்த்தி விட்டு நகர முயன்றாள்..
அதற்குள் ஆதி எட்டி அவள் கையை பிடித்தான்.. ஒரு நிமிடம் திக் என்றது... அவன் வேறு குடித்திருக்கிறானே.. இப்ப கையை பிடிக்கிறானே என்று இருந்தது....
ஆனால் அவனோ
“சுசி மா ... இன்னைக்கு ஒரு நாள் என் கூட தூங்குங்களேன்... என்னை விட்டு போகாதிங்க.. அந்த ஷ்வேதா பேய் மறுபடியும் வந்து என்னை தொல்லை பண்ணும்.. என் கூடவே இருங்க... “ என்றான் கெஞ்சும் பார்வையில்....
அதை கேட்டு உருகிப்போனாள் பாரதி..
எதுவும் யோசிக்காமல் அவன் அருகில் சென்று படுக்கையின் ஒரு ஓரத்தில் படுத்துக் கொண்டாள்...
உடனே அவன் கையை எடுத்து அவளின் இடுப்பை சுற்றிகொண்டு
“தேக்ஷ் மா... ஐ லவ் யூ..” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு இறுக்கி கட்டிக்கொண்டான்....
பாரதிக்கோ முதலில் ஒரு மாதிரி இருந்தாலும் பின் அவன் தன்னை ஒரு தாயாக பாவிப்பது தெரிந்ததும், அவள் மனது கரைந்து போனது...
“இவ்வளவு வளர்ந்து , கம்பீரமான ஆண்மகனாக இருந்தாலும் உள்ளுக்குள் இன்னும் குழந்தையாகவே இருக்கானே... இன்னும் தன் அம்மா மடியை தேடுறானே.. “ என்று பரிதாபமாக இருந்தது...
அப்பொழுது தான் நினைவு வந்தது தானும் இது மாதிரி தன் தந்தையை கட்டிக்கொண்டு தூங்குவது..
ஏன் அவள் சென்னை கிளம்பும் இரண்டு நாள் முன் கூட அவள் மனம் அவர்களை பிரிய போகும் அழுத்ததில் அன்று இரவு சென்று தன் தந்தையுடன் படுத்துக் கொண்டு அவரை கட்டி கொண்டதும் அவர் அவள் தலையை ஆதரவாக தடவியதும் இன்று நினைவு வந்தது...
“பிள்ளைகள் எவ்வளவு வளர்ந்தாலும் அவர்கள் பெற்றோரிடம் இன்னும் குழந்தையாக்வே இருப்பாங்க போல.. “என்று எண்ணி சிரித்தவள் ஓரக்கண்ணால் ஆதியை பார்த்தாள்...
அவன் அவளின் அருகில் அப்பொழுது தான் உறங்க ஆரம்பித்து இருந்தான்... மீசை வைத்த குழந்தையை போலவே இருந்தது அவன் முகம்..
இவனே இப்படி குழந்தை மாதிரி கட்டிகிட்டு தூங்கறான்.. இவனுக்கு ஒரு குட்டி... அது இன்னும் எப்படி கட்டிகிட்டு தூங்குமோ.?? ... என்று நினைத்து பார்த்து சிரித்தவள் அவளும் நிம்மதியாக உறங்கினாள் அவன் கை அணைப்பில்...
மறுநாள் கண் விழித்தவள் அவன் கை இன்னும் தன்னை சுற்றி இருப்பதை கண்டு குறுகுறுத்தது பாரதிக்கு.. அவனையே கொஞ்ச நேரம் ரசித்தவள் பின் மெல்ல அவன் கையை விலக்கி எழுந்து குளியளறைக்குள் சென்றாள்... பின் குளித்து முடித்து அங்கயே உடை மாற்றி கொண்டு கீழ சென்றாள்..
மாரி அவளுக்காக காபி ரெடியாக வைத்திருந்தாள் .. அதை வாங்கி கொண்டு புன்னகைத்தவள் ஆதி வந்திருப்பதாகவும் அவனுக்கு காலை உணவு தானெ செய்வதாக சொன்னாள்..
மாரியும் சிரித்துக்கொண்டே
“சரி பாரதி மா.. .இன்னைக்கு நான் தப்பிச்சேன் உங்க சமையல் டெஸ்ட் பண்றதில் இருந்து... பாவம்... சின்ன ஐயா மாட்டிகிட்டார்.. “ என்று சிரித்தாள் மாரி..
இந்த ஐந்து மாதத்தில் பாரதிக்கும் மாரிக்கும் ஒரு அழகான நட்பு உறுவாகியிருந்தது.. மாரிக்கும் பாரதியின் குணம் மற்றும் அவளின் கலகலப்பான பேச்சும் ரொம்ப பிடித்துப் போனது.. ஜானகி அம்மா குணத்துக்கு இந்த மாதிரி பொண்ணு மறுமகளா வந்தா நல்லா இருக்கும்... ஏன் .. பாரதி மா வே அந்த வீட்டிற்கு மறுமகளா வரணும்னு அடிக்கடி நினைத்து கொள்வாள்...
மாரி சொன்னதை கேட்ட பாரதி
“மாரி கா . அப்படி எல்லாம் விட்டுட முடியாது..எப்பவும் போல நீங்க தான் முதல்ல டெஸ்ட் பண்ணநும்... உங்க ரிசல்ட் ஐ வச்சு தா ன் உங்க சின்ன ஐயா வுக்கு கொடுக்கறதா வேண்டாமா னு முடிவு பண்ணுவேன் “என்று சிரித்தாள்...
அதற்குள் ஆதி இறங்கி வரும் அரவம் கேட்கவும் வேகமாக சமையல் அறைக்குள் புகுந்துகொண்டாள்...
ஏனோ .. அவனை பார்க்க அவளுக்கு வெக்கமாக இருந்தது... முதன் முறையாக தன் குடும்பத்தாரை தவிர்த்து அன்னிய ஆணுடன் உறங்கியது என்னவோ போல இருந்தது.. என்னதான் அவன் தாயாக நினைத்தாலும் அவளுக்குள் இருக்கும் பெண்மை அவளுக்கு ஒரு கூச்சத்தை கொடுத்தது...
கீழ இறங்கிய ஆதி வழக்கம் போல தன் ஓட்டத்தை ஆரம்பித்தான்.. ஆனால் அவன் மனமோ பெரும் குழப்பத்தில் இருந்தது... நேற்று இரவு என்ன நடந்தது என்று சரியாக தெரியவில்லை அவனுக்கு...
அந்த ஷ்வேதாவை கண்டதும் தான் அதற்கு மதுக்கடையை நாடிச் சென்றதும் நிறைய குடித்ததும் நினைவு வந்தது.. “ஆனால் தான் எப்படி இங்க வந்தேன், அதுவும் அவள் அறைக்கு எப்படி சென்றேன்?? “ என்று குழப்பமாக இருந்தது...
சிறிது யோசித்தவனுக்கு அவன் சுசிலா கூட பேசியது நினைவு வந்தது...
“அப்படீனா சுசிலா மா இங்க வந்திருந்தாங்களா??”
“ஐயோ.. என்னை அந்த நிலைமையில் பார்த்து ரொம்ப கஷ்டப் பட்டிருப்பாங்களே.. அன்னைக்குத்தான் அப்படி சிரிச்சாங்க நான் சந்தோஷமாக இருப்பதாக நினைத்து.. அந்த மகிழ்ச்சி மீண்டும் அழிந்ததா என்னால்?? ...
அதை விட அந்த பட்டிக்காடு என்ன நினைப்பாள் என்னை பற்றி.. அதுவும் அவள் அறையில் சென்று தூங்கி இருக்கேனே!! .
சே! எல்லாம அந்த பிசாசால் வந்தது... அவளை பார்த்தால் மட்டும் ஏன் தான் என் கன்ட்ரோலை இழந்து விடுகிறேனோ?? “ என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டான்... சிறிது நேரம் ஓடியதும் ஓரளவுக்கு தன் நிலைக்கு வந்தவன் ஏதோ தோண்ற,சமையல் அறை சன்னலுக்கு சென்றது அவன் பார்வை...
அவன் எதிர்பார்த்த மாதிரி பாரதியும் அவன் ஓடிக் கொண்டிருப்பதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள் அதே புதுமலராக.. இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகாக இருந்தாள் அவளின் தாய்மையால்...
அவன் பார்ப்பது தெரிந்ததும் அவசரமாக மறைந்து கொண்டாள் பாரதி... அவன் பார்த்தால் முறைப்பான் என்றாலும் அவளுக்குமே அவனை நேராக பார்க்க தைரியம் இல்லை...
அவள் மறைந்து கொண்டதை கண்டவன் அதுவரை அவனை அழுத்தி வந்த பாரம் மறைய சிரித்துக் கொண்டே தன் ஓட்டத்தை தொடர்ந்தான்..
பின் ஓடி முடித்ததும் ஹாலில் அமர்ந்து அன்றைய செய்திதாளை புரட்டி கொண்டிருந்தான்.. பாரதி மாரியிடம் காபி கொடுத்து அவனுக்கு கொடுக்க சொன்னாள்...
அதை வாங்கியவனுக்கும் அவளை பார்க்க வேண்டும் என்று ஆவல் இருந்தாலும் “நேற்று என்ன நடந்ததோ.?? . அவள் என்னை பற்றி எப்படி எடுத்துக் கொண்டாளோ?? .. “ என்று யோசித்துக் கொண்டிருந்தான்...
காபியை அருந்தியவன் நேராக மேல சென்று அலுவலகம் செல்ல தயாராகி கீழ வந்தான்.. இப்பொழுதும் மாரியே எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருக்க பாரதியை காணாதவன்
“இந்த பட்டிக்காடு ரொம்பத்தான் பண்றா... இவள?? .. “என்று திட்டியவன்
“மாரி... போய் அவளை வரச்சொல்லுங்க.. “ என்று சிடுசிடுத்தான்...
மாரியும் உள்ளுக்குள் சிரித்து கொண்டே போய் பாரதியை அனுப்பி வைத்தாள்...
“என்ன மேடம்க்கு சாப்பாடு எடுத்து வைக்க கூட முடியாதா.?? . அவ்வளவு பிசியா?? “ என்று முறைத்தான் பாரதியை பார்த்து..
“இல்ல... வந்து... “ என்று ஏதோ உளறினாள் என்ன சொல்வது என்று தெரியாமல்..
“இனிமேல் நான் வந்தா நீ தான் எல்லாம் எடுத்து வைக்கனும்..என்ன புரிஞ்சுதா?? “ என்றான் மீண்டும் முறைத்தவாறு..
“ஹ்ம்ம் “என்று தலை ஆட்டியவள் உள்ளுக்குள் மகிழ்ந்தாள்... அவனுக்கு தான் எடுத்து வைக்கத்தான் விரும்பினாள்... மாரி இருக்க நான் செய்ய போய் இவன் ஏதாவது கத்துவான் என்று தான் ஒதுங்கி இருந்தாள்...
அவனே அதை சொல்லவும் அகம் மகிழ்ந்து போனாள் பாரதி..
“அதை கொஞ்சம் சிரிச்சுகிட்டே சொன்னாதான் என்னாவாம்... சிடுமூஞ்சி.. “ என்று முனகி கொண்டே அவனுக்கு சாப்பிட எடுத்து வைத்தாள்...
பாரதி செய்த சமையல் நன்றாக இருக்கவும் அவனும் ருசித்து சாப்பிட்டு கொண்டே
“ஆமா.. சுசிலா மா எங்க?? நைட் இருந்தாங்களே.. “ என்றான் பாரதியை பார்த்து..
“அடப்பாவி... நைட் என்னை அப்படி கட்டிகிட்டு தூங்கினது ஞாபகம் இல்லை.. இவன் மப்புல உளறுன சுசிலா மா மட்டும் இன்னும் தெளிவா இருக்கு... “என்று மனதுக்குள் திட்டியவள்
“ஹ்ம்ம்ம்ம் அவங்க காலையிலயே கிளம்பிட்டாங்க... “ என்றாள் அவனை முறைத்தவாறு...
“என்கிட்ட சொல்லாம ஏன் கிளம்பினங்க... “என்று சொல்லிக்கொண்டே சாப்பிட்டு முடித்து கை கழுவ சென்றான்.. பின்
“சரி.. நான் ஆபிஸ் கிளம்பறேன்... “என்று பொதுவாக சொல்லி விட்டு நடந்தான்...
“யப்பா சாமி.. இவனா நேற்று அப்படி மப்புல உளறினான் னு சொன்னா யாரும் நம்பவே மாட்டாங்க... என்னமா பில்டப் பண்றான் ஒன்னுமே நடக்காத மாதிரி.. அட்லீஸ்ட் ஒரு சாரியாவது சொன்னானா குடிச்சிட்டு வந்ததுக்கு...
கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டாத மாதிரியே பில்டப் கொடுக்கறது தான் தாங்க முடியல... “ என்று கருவிக் கொண்டிருந்தாள்... அவன் சிறிது தூரம் சென்றதும் அவள் நினைவு வந்தவளாக
“ஈவ்னிங் எத்தன மணிக்கு வருவீங்க?? ... “ என்று சத்தமாக கேட்டாள்.. அவனை எப்படி அழைப்பது என்று இன்னும் தெரியவில்லை... அவன் முன்னே செல்லவும் முடியாது.. அவன் பல அடிகள் நடந்திருந்தான்...சரி என்று சத்தமாக கேட்டாள்...
“ஏய்... உன்ன மாதிரியே எனக்கு காது செவுடா?? எதுக்கு இப்படி கத்தற... நீ தான் 1000 தடவை பெல் அடிச்சாலும் வந்து திறக்கமாட்ட.. “என்று பழசை சொல்லி காட்டினான்...
அதற்குள் அவன் அருகில் வந்திருந்தாள் பாரதி..
“ஆமா.. எதுக்கு நான் வருவேனு கேட்ட?? எனக்கு நாளைக்கு இங்கு வேலை இல்ல. அதனால் நான் அப்படியே போய்டுவேன்.. “என்றான்..
அதை கேட்டதும் அவள் முகம் வாடியது...
“இவ்வளவு தான் இவன் அக்கறை.. என்னவோ பிரின்ஸஸ் னு உருகினான்.. இப்ப அந்த பிரின்ஸஸ்க்கு செக்கப் பண்ணனும் ங்கிறது கூட நினைவு இல்லை.. அந்த அளவுக்கு மறந்தானா இல்லை அந்த ஷ்வேதா பார்த்ததால மறந்திட்டானா?? “ என்று புலம்பினாள் மனதுக்குள்...
அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தவன் அவள் எதுவும் பேசாமல் முகம் வாடி இருக்கவும் ஒன்றும் புரியாமல்
“ஏய்.. என்னனு சொல்லு.. எனக்கு நேரம் ஆகுது.. “என்று அதட்டினான்...
“ஹ்ம்ம்ம் வந்து இன்னைக்கு செக்கப் போகணும்.. அதான் நீங்க எப்ப வர்ரீங்கனு கேட்டேன்.. “ என்று மெல்ல முனகினாள்.. அவள் குரல் கம்மியது...
அப்பொழுது தான் உரைத்தது அவனுக்கு...
“ஆமா இல்லை.. இன்றோடு என் பிரின்ஸஸ்க்கு 5 ஆவது மாதம்.. .எப்படி மறந்தேன் இதை?? .. நேற்று காலை கூட நினைச்சு கிட்டிருந்தேனே... பாவி... எல்லாம் அந்த ஷ்வேதாவால்... அவளை கண்டதும் என் பிரின்ஸஸை கூட மறந்துட்டேனே... “ என்று தன்னைத் தானே திட்டி கொண்டவன்
“சாரி... கொஞ்சம் பிசில மறந்துட்டேன்... ஈவ்னிங் 6 மணிக்கு ரெடியா இரு.. நான் வர்ரேன்... “ என்று அவளை நேராக பார்க்காமல் கீழ பார்த்து சொல்லி விட்டு நகர்ந்தான்... நகரும் பொழுது அவன் பார்வை அவளின் வயிற்றுக்கு சென்றது..அவள் சல்வார் அணிந்திருந்ததாலும் மேலும் துப்பட்டாவை கீழ் வரை விட்டிருந்ததால் அவளின் வயிறு தெரியவில்லை... ஏக்கத்துடன் பார்த்து விட்டு தன் காரை எடுத்து கிளம்பினான்..
சிறிது தூரம் சென்றதும் ஜானகியின் நினைவு வர
“ஐயோ!! அம்மாவையும் மறந்திட்டேனே... நேற்று இரவு என்னை எதிர்பார்த்திருப்பாங்களே.. “ என்று எண்ணி வேகமாக தன் அலைபேசியை எடுத்து ஜானகியை அழைத்தான்
ஜானகி அழைப்பை ஏற்றதும்
“சாரி மா... நான் இங்க கெஸ்ட் ஹவுஸ்க்கு போய்ட்டேன்... “ என்றான் அவசரமாக
“ஹ்ம்ம் தெரியும் கண்ணா.. பாரதி தான் சொன்னா....
இன்னைக்கு செக்கப் இருக்கிறதால நீ அங்க வந்திட்டதா சொன்னா.. நீ சீக்கிரம் தூங்கிட்ட னு சொன்னா... அதான் நானும் உனக்கு போன் பண்ணலை..
சரி கண்ணா...ஈவ்னிங் ரெண்டு பேரும் செக்கப் க்கு போய்ட்டு என்னனு சொல்லுங்க .. “ என்று அலைபேசியை வைத்தார்..
“பரவாயில்லையே.. இந்த கேடி அம்மா கிட்ட மாட்டி விடாமல் தான் இருந்திருக்கா... சரியா சமாளிச்சு இருக்காளே.. அம்மாக்கு நான் மறுபடியும் குடிச்சிட்டு வந்தது தெரிந்திருந்தால் இன்னும் உடைஞ்சி போயிருப்பாங்க.. இனிமேல் இந்த கருமத்தை தொடக்கூடாது.. “ என்று புலம்பி கொண்டே அலுவலகம் சென்றான்...நேற்றை விட இன்னும் பெரிய வலியை இன்றே அனுபவிக்க போகிறான் என்று அறியாமல்...
அதோடு பாரதியின் மேல் கொஞ்சமாக வளர்ந்திருந்த சாப்ட் கார்னர் இன்னும் பெரிதாகியது அவனை அறியாமல்...
இவன் இன்னும் அவள
ReplyDeleteநினைத்து நிம்மதிய
இழக்கிறான்
Ayyo innum enna enna seiyaporano
ReplyDelete