தவமின்றி கிடைத்த வரமே-24


அத்தியாயம்-24

ன் கண்ணை நம்பாமல்மீண்டும் கண்ணை கசக்கி விட்டு பார்க்க, அது அவர்கள் அந்த கிராமத்திற்கு முகாமிற்கு சென்ற பொழுது முகாமின் முடிவில் அனைவரையும் ஒன்றாக நிற்க வைத்து அவள் நண்பன் எடுத்த புகைபடம்....


அதுதான் இது.. அதில் அவள் வசீகரன் உடன் ஒட்டி நின்றிருந்தாள்... புகைபடம் எடுக்கும் பொழுது அவன் வேற ஏதோ ஒரு சிந்தனையில் இருந்ததால் அவள் அருகில் நின்றிருந்தது அப்பொழுது அவனுக்கு தெரியவில்லை...

ஆனால் இந்த புகைபடத்தில் பார்க்க இருவரும் வெகு அருகில் ஒட்டி நின்றிருந்ததை பார்க்க உள்ளுக்குள் மழைச்சாரல் அடித்தது... அதையே ஆசையாக ரசித்து பார்த்தவன்,

“இது எப்படி?? “ என்றான்...

அவளும் அவன் கண்டு கொண்டதை கண்டு தன் உதட்டை மடித்து கொண்டு

“என் பிரண்ட் கிட்ட இருந்து வாங்கி பிரின்ட் பண்ணி வச்சேன் டாக்டர்.... “ என்று அசடு வழிந்தாள் சிரித்தவாறு...

அவசரமாக முன் பக்கம் திருப்ப, இந்த மாதிரி அவள் கலந்து கொண்ட மற்ற முகாம் போட்டோ எதுவும் அதில் இல்லை... தன்னுடன் இருக்கும் இந்த போட்டோவை மட்டும் தனியாக எடுத்து வைத்திருக்கிறாள் என்றால் ??

“அப்ப என்னை பிடித்து போய்தானே வைத்திருக்கிறாள்..”. என்று கொஞ்சம் சரியாக யோசிக்க ஆரம்பித்தான் வசி...

அவன் எங்கே தன்னை கண்டு கொள்வானோ என்று அவசரமாக யோசித்தவள்

“இந்த மாதிரி முகாம் போகிற பொழுது எடுக்கும் கலெக்சன்ஸ் எல்லாம் வேற ஒரு ஆல்பத்தில் இருக்கு டாக்டர்... அதில் இடம் இல்லை என்பதால் இந்த போட்டோ மட்டும் இதில் வைத்து விட்டேன்.... “ என்று அவள் அந்த புகைபடத்தை மட்டும் வைத்ததற்கான விளக்கத்தை சொல்லி சமாளித்தாள்..

அதை கேட்டவனுக்கு முகம் வாடிவிட்டது...

“நான் இருப்பதால் தான் வைத்திருக்கிறாளோ ?? “ என்று துள்ளி குதித்தவனுக்கு அவள் வேற கதை சொல்லவும் காற்று போன பலூனாய் உற்சாகம் வடிந்து விட்டது.......

இப்பொழுது இருக்கும் millennials தலைமுறைகளில் விதவிதமான கேமராக்கள் தங்கள் கையில் இருக்கும் அலைபேசியிலும், ஸ்மார்ட் போனிலுமே வந்து விட, தினமும் நடக்கும் சின்ன சின்ன நிகழ்வுகளை எல்லாம் புகைபடங்களாக எடுத்து தள்ளி அதையும் மறக்காமல் வாட்ஸ்அப், பேஸ்புக், Insta என்று பல சமூக வளைதளங்களில் பதிவிட்டு, அதை கண்டு நண்பர்கள் ஆரவரித்து லைக் பண்ண காத்து கிடக்கிறார்கள்....

ஓரளவுக்கு கணிசமான லைக் வந்தால் மட்டுமே மனம் நிம்மதியாக இருக்கும்.... அதன் பின் அந்த புகைபடங்கள் எல்லாம் டிஜிட்டல் ஆல்பமாக போட்டு கேஜட்ஸ் களிலயே வைத்து விட்டு விரைவிலயே மறந்தும் விடுகின்றனர்....

முன்பு இருந்த மாதிரி, நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல் அன்ட் ஸ்வீட் மொமென்ட்ஸ் களை புகைபடங்களாக எடுத்து இந்த மாதிரி பிரின்ட் போட்டு இப்படி ஆல்பமாக்கி வைத்து நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அதை திருப்பி பார்ப்பது ஒரு சுகமே...

என்னதான் டிஜிட்டல் ஆல்பத்தை பார்த்தாலும் இந்த மாதிர் பேப்பரை அதுவும் தங்கள் மனதுக்கு பிடித்தவர்களை புகைப்படங்களில் தொட்டு தடவி பார்க்கும் சுகமே தனிதான்....

அதனால் தான் பனிமலர் இன்னும் இந்த ஆல்பங்களை மெயின்டெய்ன் பண்ணி வருகிறாள்..

தன் அன்னை கற்று கொடுத்தது அவள் வளர்ந்த பிறகு அவளுக்கு பிடித்த புகைபடங்களை அவளாகவே சேகரித்து அதை பிரின்ட் பண்ணி ஆல்பத்தில் வைத்து கொள்வாள்...

அவள் தம்பிக்கும் இவளே ஆல்பம் தயார் பண்ணி அவனுக்கு ஒரு தனி ஆல்பமாக்கி வைத்திருக்கிறாள்....

அவளின் பழைய புகைபடங்களோடு சமீபத்தில் எடுத்த புகைபடங்களை கூட அவள் ஆல்பத்தில் சேர்த்து வைத்திருப்பதை புகழ்ந்து பாராட்டி கொண்டே அனைத்து ஆல்பங்களையும் ரசித்து பார்த்து முடித்தான்...

இதற்குள் அவர்களுக்குள் இருந்த ஒரு இறுக்கம், தயக்கம் மறைந்து சகஜமாக பேசும் நிலைக்கு வந்திருந்தனர் இருவருமே....

மலர் பழைய படி அவனிடம் வாயடித்து கொண்டிருக்க, அவனும் அவளிடம் இயல்பாக பேசினான்...

அவன் ஏதோ சொல்ல, அதை கேட்டு மலர் வாய் விட்டு சிரித்தாள்... வசியும் அவளின் மலர்ந்த சிரிப்பை ரசித்தவன் அவளுடன் இணைந்து சிரிக்க, அவர்கள் இருவரின் சிரிப்பு சத்தம் சமையல் அறையில் இருந்த மலரின் பெற்றோர்களுக்கும் கேட்டது...

அதை கேட்டதும் அவர்கள் முகத்தில் நிம்மதி பரவியது....

எங்கே திடீர் என்று நடந்த கல்யாணம்.. அதுவும் தனக்காகத்தான் டாக்டர்,  தன் மருமகன் தன் மகளை மணந்து கொண்டானோ?? அவனுடைய அழகுக்கும் திறமைக்கும் எத்தனையோ பெரிய இடத்து பெண்கள் வரிசையில் அவனுக்காக காத்து இருக்க அதை விட்டு தன் உயிரை காப்பாற்ற எண்ணிதான் தங்கள் பெண்ணை மணந்தது இருவர் உள்ளேயும் உறுத்தி கொண்டே இருந்தது...

“ஒரு வேளை இது பேருக்காக நடந்த கல்யாணம் ஆகி விடுமோ?? அவர் சரியானதும் மாப்பிள்ளை தங்கள் பெண்ணை மறுத்து விட்டாள்?? “ என்று குழம்பி கொண்டிருந்தனர் இருவரும்....

அதே போலத்தான் தங்கள் பெண்ணை நினைத்தும் தவித்தனர்....

மூன்று மாதங்கள் முன்னாடியே தன் மகளுக்கு திருமணம் நிச்சயித்து இவன்தான் உன் கணவன் என்று சொல்லி இருக்க, உடனேயே அவன் இல்லை உன் கணவன், வேற ஒருவன் தான் உன் கணவன் என்று மாற்றி சொன்னால் அதை எப்படி எடுத்து கொள்வாளோ ?? என்று தவிப்பாக இருந்தது...

அவளுக்கு முன்பு நிச்சயித்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றாலும் தங்களுக்காகத்தான் ஒத்து கொண்டால் என்றாலும் எப்படியும் பெண்ணின் மனதில் ஒரு மூலையில் அவள் கணவனை பற்றிய நினைப்பு, எதிர்பார்ப்பு, கனவு கண்டிப்பா இருக்கும்...

அப்படி இருந்தால் அதை மறந்து புது மாப்பிள்ளையை அவளால் ஏற்று கொள்ள முடியுமா?? என்ற அச்சமும் இருந்தது.....

அதுக்கு தகுந்த மாதிரி தங்கள் பொண்ணும் மாப்பிள்ளையும் திருமணத்திற்கு பிறகும் நெருக்கமாக பழகவில்லை....

சிவசங்கர் மருத்துவமனையில் இருக்கும் பொழுது மருமகன் ஒரு மருத்துவனாக இரு வேளையும் வந்து அவரை பரிசோதித்து சென்றான்தான்...

ஆனால் அவன் வரும் வேளைகளில் தங்கள் மகள் தன் பின்னால் பதுங்குவது கண்டு யோசனையாக இருந்தது...தன் கணவன் என்றோ தன் மனைவி என்றோ இருவரும் ஆசையாக பார்த்து கொள்ளவில்லை...

அதே போல அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்த பிறகு அவர் மாப்பிள்ளை தன் மகளை போனில் அழைத்து பேசவில்லை...

சம்மந்தி, வசு என மகள் புகுந்த வீட்டில் இருந்தவர்கள் தினமும் அழைத்து பேசினாலும் உடையவன் எந்த ஒரு இன்ட்ரெஸ்ட் ம் காட்டாத மாதிரி இருந்தது...

அது வேறு அவர்களுக்கு கவலையாக இருந்தது..எங்கே அவசரபட்டு தங்கள் மகள் வாழ்க்கையை பாழியாக்கிட்டமோ என்று கவலையாகவே இருந்தது இருவருக்கும்....

இன்று தங்கள் மாப்பிள்ளையே அவர்கள் வீடு தேடி வரவும் அவர்களுக்கு சந்தோசமாக இருந்தது.. அதை விட இப்பொழுது கேட்கும் இருவரின் சிரிப்பொலி அவர்கள் அச்சத்தை போக்கி மனதில் நிம்மதியை கொடுத்தது....

இருவரும் ஏதோ பேசி சிரித்து கொண்டிருக்க, அப்பொழுது ஜோதி மலரை அழைத்தார்....அவளும் துள்ளலுடன் எழுந்து தன் அறையை விட்டு வெளியில் வந்தாள்....

அதை பயன்படுத்தி கொண்டு அந்த ஆல்பத்தில் இருந்த அவன் மனதுக்கு ரொம்ப பிடித்த சில புகைபடங்களை தன் அலைபேசியில் பதிந்து கொண்டான் வசி...

சமையல் அறைக்கு ஓடியவள் அங்கு தன் தந்தையை காணவும் அதிசயித்து நின்றாள்....

“என்ன ஜோ?? நம்ம வீட்டு வாத்தியார் இன்னைக்கு கிச்சன் ல பாடம் சொல்லி கொடுக்கிற மாதிரி இருக்கு... “ என்றாள் சிரித்தவாறு....

“அதை ஏன்டி கேட்கற ??... மாப்பிள்ளைய பார்த்த சந்தோசத்தில் உங்க அப்பாவுக்கு 10 வயது குறைஞ்சு போய்டுச்சு... உடனேயே என்னை மாப்பிள்ளைக்கு அதை பண்ணு இத பண்ணு னு சமையல் அறைக்கே வந்திட்டார்...

பத்தாதற்கு எனக்கு உதவி செய்யறேன் னு வேற நிக்கிறார்...கல்யாணம் ஆகி இத்தனை நாள் ல சமையல் ரூம் வாசல் எந்த பக்கம் னு கூட தெரியாத மனுசன் மாப்பிள்ளையை பார்த்த குசியில் தேடி புடிச்சு கிச்சனுக்கே வந்திட்டார்.... நீயே இந்த அதிசயத்தை கேள்... “ என்று சிரித்தார் ஜோதி..

அதை கேட்டு நம்பாதவளாய்,

“நிஜமாவா பா..... என்ன இந்த திடீர் மாற்றம்....?? “ என்று வாயில் கை வைத்து அதிசயித்தாள் மலர்....

“ஹீ ஹீ ஹீ மாற்றம் எல்லாம் ஒன்னும் இல்ல மா....

உங்கம்மா சரியா செய்ய மாட்டா.... புதுசா செய்யறேன் பேர்வழினு வாயில வைக்க முடியாத எதையாவது செஞ்சு கொடுத்து மாப்பிள்ளையை அலறி அடிச்சு ஓட வச்சுட்டா ?? ..

அதான் நான் பக்கத்துலயே இருந்து பக்குவம் சொல்லி அவள் செய்றதை எல்லாம் டெஸ்ட் பண்ணிதான் மாப்பிள்ளைக்கு கொடுக்கறேன்.. “ என்று சிரித்தார்...

தன் தந்தை சிரித்ததை கண்டு அவள் மயங்கி விழாத குறைதான்...

எப்பவும் விரைத்து கொண்டே ஸ்ட்ரிக்ட் ஆபிசராக வலம் வருபவர் இன்று  வாய் விட்டு சிரிக்க, அவளாலயே நம்ப முடியவில்லை...அவரையே ரசித்து பார்த்தாள்....

இந்த ஒரு சின்ன இல்லை பெரிய அட்டாக் அவரை எப்படி மாற்றி விட்டது?? பின்ன இருக்காதா?? சாவின் விளிம்பு வரை சென்று வந்தவர் இல்லையா ?? “ என்று எண்ணிகொண்டாள்....

அவரும் அதைதான் சொன்னார்...

“நம்ம வாழ்வு நம்ம கையில இல்லை... துடிச்சுக்கிட்டிருக்கிற இந்த இதயம் எப்ப வேணாலும் எப்படி வேணாலும் நிக்கலாம் என்கிற பொழுது இருக்கிற கொஞ்ச நாளையும் ஜாலியா அனுபவிச்சுட்டு போகணும் னு புரிஞ்சுகிட்டேன் மா....

அதான் இனிமேல் பிரியா ஜாலியா இருக்க போறேன்.. என் பொண்ணு மாதிரி எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்க போறேன்.. “ என்றார் தழுதழுத்தவாறு.....

அதை கேட்டு மலருக்குமே கண் கலங்கியது.. ஆனாலும் தன்னை சமாளித்து கொண்டு

“வாவ்... சூப்பர் வாத்தி..... இத.. இத.. இதத்தான் எதிர்பார்த்தேன் உங்க கிட்ட...இனிமேல் எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியா சந்தோசமா இருங்க... “ என்று நின்று கொண்டிருந்தவர் இடுப்பை கட்டி கொண்டு அவர் தோளில் சாய்ந்து கொண்டாள் மலர்...

அவரும் அவள் நெற்றியில் முத்தமிட்டு

“எத்தனையோ வாழ்க்கையில் மிஸ் பண்ணிட்டேன்.. உங்களை எல்லாம் ரொம்பவும் கஷ்ட படுத்திட்டேன்.. அதுவும் உன் கல்யாணத்துல உன்னை கூட கேட்காம வெறும் ஜாதகம் ஜோசியம்னு நம்பி நல்ல மாப்பிள்ளையை செலக்ட் பண்ணாம அடி முட்டாளா இருந்திட்டேன்...

என்னை மன்னிச்சிடு மா.... “ என்று தழுதழுக்க அவர் உணர்ச்சி வச படக்கூடாது என்று உடனே பேச்சை மாற்றினாள் மலர்...

“அடடா... வாத்திக்கு இப்படி எல்லாம் கூட பேச வருமா??? ஜோ.. நீ கொடுத்து வச்சவ.... என் புருசனும் இருக்காரே.... வாயை திறந்து நாலு வார்த்தை பேச வைப்பதற்குள் எனக்கு நாக்கு தள்ளுது....

அப்பா.. உங்க கிட்ட அவரை ட்யூசன் அனுப்பறேன்... அவரையும் உங்கள மாதிரி மாத்திடுங்க..... “ என்று சிரித்தாள்...

தன் மகள் அவள் புருசன் என்று உரிமையோடு சொன்னதை கேட்டதும் இன்னும் மனம் நிறைந்து போனது அவருக்கு....

அவரும் சிரித்து கொண்டே

“ஹா ஹா ஹா என் பொண்ணு தான் வாய் ஓயாமா பேசறவ ஆச்சே... அவ பேச்சை கேட்டாளே பிறந்த குழந்தை கூட அடுத்த நாளே பேச ஆரம்பிச்சுடும்....

அப்படி இருக்க, மாப்பிள்ளையும் உன் வாயை பார்த்து பயந்து போய் தானா பேச போறார் பார்... அவருக்கு ட்யூசன் எல்லாம் தேவை இல்ல மா.... “ என்று சிரித்தார்

“பா... யூ டூ ?? “ என்று செல்லமாக சிணுங்கினாள் மலர்...

அவரும் சிரித்து கொண்டே

“சரி டா மா.. மாப்பிள்ளை மட்டும் தனியா இருக்கார் பார்... இதை கொண்டு போய் கொடு... “என்று ஒரு தட்டில் அடுத்து செய்த ஐட்டத்தை எடுத்து வைத்து அவளிடம் கொடுத்து தன் மகளை விரட்டினார்...

அவளும் சிரித்து கொண்டே

“ரொம்ப சந்தோசம் பா.... உங்களை இப்படி சிரிச்சு பார்க்க... இப்படியே இருங்க... ஐ லவ் யூ.... “ என்று தன் தந்தையின் கன்னத்தில் எக்கி முத்தமிட்டு தன் அறைக்கு ஓடி வந்தாள்...

சிவசங்கரும் இத்தனை வருடங்கள் கழித்து தன் மகளுடன் செல்லம் கொஞ்ச, அவள் தந்த முத்தத்தில் திகைத்து ரசித்து நின்றார்...

ஜோதிக்கும் தன் கணவனின் மாற்றத்தை கண்டு மகிழ்ச்சியாக இருந்தது... எல்லாத்துக்கும் காரணமான தன் மருமகன் மீது மதிப்பு கூடியது அவருக்கு....

தன் தந்தையின் மாற்றத்தை கண்டவள் அந்த மகிழ்ச்சியில் துள்ளி குதித்தவாறு தன் அறைக்கு ஓடி வந்தாள்....

அவள் வருவது தெரிந்ததும் அவள் ஆல்பத்தை அவசரமாக கீழ வைத்து விட்டான் வசி... அவள் மீண்டும் ஒரு தட்டு நிறைய பதார்த்தங்களை கொண்டு வந்ததை கண்டு

“ஹே.. பனிமலர்.. என்ன இது?? ஒரே நாள்ல என்னை குண்டாக்கிடலாம் னு திட்டமா?? ஏற்கனவே சாப்பிட்டு வயிறு புல்... “ என்று சிரித்தான்..

“ஹ்ம்ம் என்னை கேட்டா ?? .. உங்க மாமனாரோட உத்தரவு.... இதையெல்லாம் சாப்பிடிட்டு தான் ஆகணும் னு... “ என்று சிரித்தாள்...

அவள் சொன்ன மாமனார் என்றதில் உள்ளுக்குள் பனிச்சாரல்....

“அப்படி என்றால் அவர்கள் இருவருக்குமான திருமண உறவை ஏற்றுக்கொண்டாளா ?? “ என்று யோசித்து கொண்டே அவனும் இணைந்து சிரித்து கொண்டே தட்டில் இருந்த ஒன்றை எடுத்து வாயில் வைக்க அதே நேரம் அவன் அலைபேசி ஒலித்தது...

அதை எடுத்து காதில் வைத்தவன்

“ஆங்... சொல்லு மிது..... “ என்றான்...

ஏனோ மிது என்ற பெயரை கேட்டதும் அதுவரை இருந்த உற்சாகம் வடிந்து விட்டது மலருக்கு....உள்ளுக்குள் மனம் சுணங்க, அவன் பேசுவதையே கூர்ந்து கவனித்தாள்...

மறுமுனையில் மித்ரா அவனை எங்க இருக்க என்று கேட்டிருக்க வேண்டும்...

“நான் கொஞ்சம் வெளில இருக்கேன்..... ஓ.. சரி.. இப்பவே வர்ரேன்... டேக் கேர்... பை.... “ என்றவாறு அலைப்பை அணைத்தான்...

அவன் தன் மாமனார் வீட்டில் இருக்கிறேன் என்று சொல்லாமல் ஏன் வெளில இருக்கேன் னு சொன்னான் என்று அவசரமாக யோசித்தாள் மலர்....

அவள் எண்ணம் புரியாதவன்

“சாரி பனிமலர்.. ஒரு அர்ஜென்ட் வொர்க்.... மிது கூப்பிடறா.... நான் அப்ப கிளம்பறேன்... “ என்று எழுந்தான்...

அவளும் தன்னை சமாளித்து கொண்டு அவனுடன் இணைந்து வெளியில் வந்தாள்..

இருவரும் ஜோடியாக வெளியில் வருவதை கண்டு அவள் பெற்றோர்களின் மனம் பூரித்து போனது..

அவர்களின் ஜோடி பொருத்தம் சூப்பராக இருக்க அதுவும் தன் மருமகன் கம்பீரமாக ராஜகுமாரனை போன்ற ஒரு ஆளுமையுடன் நடந்து வருவதை கண்டு இமைக்க மறந்து பார்த்து ரசித்தனர் இருவரும்......

அவர்கள் அருகில் வந்ததும்

“சாரி மாமா.. அத்தை.. ஒரு அரெஜென்ட் வொர்க்.. உடனே கிளம்பணும்... “ என்றான்..

“நைட் சாப்பிட்டு போகலாம்... மாப்பிள்ளை.. “ என்றார் ஜோதி அவசரமாக

“ஐயோ.. அத்தை நீங்க செஞ்சு கொடுத்ததை சாப்பிட்டதே இன்னும் ஒரு வாரத்துக்கு தாங்கும் போல..இவ்வளவு எல்லாம் நான் சாப்பிட்டதே இல்லை..

சூப்பரா இருக்கவும் நிறைய சாப்டிட்டேன் .... ரொம்ப தேங்க்ஷ் அத்தை.. எல்லா ஐட்டங்களும் சூப்பரா இருந்தது ..” என்று பாராட்ட ஜோதிக்கு உச்சி குளிர்ந்து போனது...

உடனே சமையல் அறைக்கு ஓடிப் போய் ஒரு டப்பாவில் எல்லா பதார்த்தங்களையும் போட்டு கொண்டு வந்து

“இதை கொண்டு போய் அண்ணா அண்ணிக்கும் வசுக்கும் கொடுங்க மாப்பிள்ளை,,,, வசு நேற்றே என்கிட்ட கேட்டா.. எதாவது டிப்ரன்ட் ஆ பண்ணி கொடுங்க ஆன்ட்டி னு.. அவளுக்கு பிடிக்கும்... “ என்று சொல்லி அவன் கையில் உரிமையோடு அந்த டப்பாவை திணித்தார்....

இந்த இரண்டு வாரங்களில் இரு குடும்பங்களுமே நன்றாக பழக ஆரம்பித்திருந்தனர்...

ஜோதி அவர் உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லாமல் வீட்டில் ஒரே பொண்ணு என்பதால் சுந்தரை அண்ணா அண்ணி என்று உரிமையோடு அழைக்க, மீனாட்சியும் சிவசங்கரனை அண்ணா என்றும் ஜோதி அவரை விட வயது குறைந்தவர் என்பதால் ஜோதி என்று உரிமையோடு அழைத்து பேச ஆரம்பித்தனர்....

அதை கண்டு வசிக்கும் அதிசயமாக இருந்தது...

“ஒரு திருமணத்தால் கணவன் மனைவி என்ற புது உறவு மட்டும் தோண்றுவதில்லை போலும்.. இந்த மாதிரி அண்ணா அண்ணி என்ற வேற சில புது உறவுகளுமே கூட உருவாகிறது.. “ என்று எண்ணி சிரித்து கொண்டான்...

பின் அனைவருக்கும் தலை அசைத்து விடை பெற்று சென்றான்...

வாயில் வரை சென்று மூவரும் கை அசைத்து விடை கொடுக்க அவனுமே தன்னவளை மீண்டும் ஒரு முறை ஆசை தீர பார்த்தவாறு காரை கிளப்பி சென்றான்...

வீட்டிற்குள் வந்த சிவசங்கர் தன் மாப்பிள்ளையை புகழ்ந்து தள்ளி விட்டார்...

எவ்வளவு பெரிய ஆள்... கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் வெகு இயல்பாக தங்கள் வீட்டில் பொருந்தி கொண்டதை கண்டு பெருமையாக இருந்தது...

அதை நினைக்கும் பொழுது அவருக்கு தான் பார்த்த அந்த கூஜா மாப்பிள்ளை நினைவுக்கு வந்தான்...

கவர்ன்மென்ட் வேலையில் இருக்கிறோம் என்ற ஆணவமும் யாரையும் மதிக்காத அலட்டலும் அந்த அம்மா முகத்தில் இருக்கும்.. சம்பந்தி ஆக போகிறவர் என்ற ஒரு மரியாதை கொடுத்து கூட பேச மாட்டார்...

ஏதோ அவர் பொண்ணை தானாக கொண்டு போய் அவர் பையனுக்கு கொடுக்கிற மாதிரி பில்டப் பண்ணுவார்...

ஆனால் என் மாப்பிள்ளை ?? இவரின் ஒரு நாள் சம்பளம் அவன் ஒரு மாச சம்பளத்து மேலயே இருக்கும்... எத்தனை மருத்துவமனைகள் என் மாப்பிள்ளை கால் பதிக்க காத்திருக்கின்றன..

அப்படி இருக்க எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் பழகுகிறார்.. அதோடு அவன் குடும்பத்தில் இருப்பவர்களூமே தங்கமாக பழகுவதை கண்டு மகிழ்ந்து போனார் சிவசங்கர்...

“ரொம்ப நன்றி ஈஸ்வரா.. இப்படி ஒரு மாப்பிள்ளையை எனக்கு காட்டத்தான் நீ இப்படி ஒரு திருவிளையாடலை நடத்தினியா???

இது புரிஞ்சுக்காம நான் பாட்டுக்கு வெறும் ஜாதகத்தை மட்டும் நம்பி மனுசங்க மனசை பார்க்காம விட்டுட்டேன்.. எனக்கு புத்தி வரத்தான் உன் திருவளையாடல் னு புரிஞ்சுகிட்டேன்..

உன் திருவிளையாடல் எல்லாம் எப்பவும் நன்மையில் முடியும் என்பது போல என் பொண்ணுக்கு நல்ல ஒரு வாழ்க்கை கிடைச்சிடுச்சு... இனிமேல் எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை... “ என்று வேண்டி கொண்டார்...

இரவு வீடு திரும்பியவன் காரை விட்டு இறங்க அப்பொழுது தான் ஜோதி கொடுத்த டப்பா கண்ணில் பட்டது... அதை எடுத்து கொண்டு துள்ளலுடன் உல்லாசமாக விசில் அடித்தபடியே வீட்டிற்குள் வந்தான்..

தங்கள் மகனை அந்த மாதிரி துள்ளலுடன் காண அவன் அப்பா அம்மாவுக்கு மனம் நிறைந்து நின்றது.... இதே துள்ளல்தான் முன்பு அவனிடம் இருந்தது..

அப்புறம் கொஞ்ச நாளாக அது மிஸ்ஸிங்... எதையோ பறி கொடுத்த மாதிரி இருந்தான்.. இப்ப மீண்டும் அதே துள்ளல் திரும்பி இருக்க மீனாட்சிக்கு ஆச்சர்யமாக இருந்தது..

ஆனாலும் அவனிடம் எதுவும் கேட்காமல் அவனை பார்த்து புன்னகைக்க, அவனும் பதிலுக்கு புன்னகைத்து மற்றவர்கள் டைனிங் டேபிலில் இருக்க, நேராக அங்கு சென்றான்....

“பா.... இந்தாங்க உங்க அருமை தங்கச்சி.. இந்த அண்ணனுக்காக ஆசையா செஞ்சு கொடுத்து விட்டது... “ என்று அந்த டப்பாவை தன் தந்தையின் கையில் கொடுத்தான்...

தங்கச்சி ?? என்று சுந்தர் முழித்து கொண்டிருக்க, மீனாட்சி க்கு உடனே ஜோதி நினைவு வர

“ஓ.. ஜோதி கொடுத்தாளா?? “ என்று சிரித்தார்....

“பா.. நீங்க சரியான ட்யூப் லைட்.. அம்மா பார் எப்படி டக் னு புடிச்சிட்டாங்க... உங்க லவ் ஐ சொல்றதுல மட்டும் பாஸ்ட் ஆ இருந்தா பத்தாது.. இந்த மாதிரி பொது அறிவுலயும் கொஞ்சமாவது பாஸ்ட் ஆ இருங்க... “ என்று சிரித்தான்....

“ஹீ ஹீ ஹீ.. நானும் பாஸ்டா ஆ தான் இருந்தேன் மகனே..... உங்கம்மாவை கட்டின பிறகு இவளை பார்த்தாலே என் மூளை வேலை நிறுத்தம் செய்துடுதா.... யோசிக்கவே மறந்திட்டேன்.. அது அப்படியே பழகி போச்சு... “ என்று கண் சிமிட்டி சிரித்தார்....

அதை கண்டு மீனாட்சி கன்னம் சிவக்க,

“சும்மா இருங்க.. பசங்க முன்னாடி பேசற பேச்சா இது...?? “ என்று செல்லமாக முறைத்தார் தன் கணவனை பார்த்து...

“பாருடா.. என் பொண்டாட்டிக்கு இன்னும் வெக்கத்தை.. வசி.. நீயே சொல்.. இப்படி வெக்க படர முகத்தை பார்த்தால் மனுசனுக்கு வேற ஏதாவது யோசிக்க தோணும்?? “ என்றார் சிரித்தவாறு....

அவனிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போக, தன் மகனை நிமிர்ந்து பார்க்க, அவனோ தன் மனைவியின் நினைவில் மெய் மறந்து நின்றான்...

“பா... போயும் போயும் இவன் கிட்ட கேட்கறீங்களே.. நீங்களாவது உங்க பொண்டாட்டிய நேர்ல பார்த்தா தான் ஆப் ஆகிடறீங்க... டாக்டர் சார் கனவுல பார்த்தா கூட எப்படி ப்ரீஸ் ஆகி நிக்கறார் பார்... “ என்று வாரினாள் வசு...

அவனும் வெக்கபட்டு சிரித்து கொண்டவன் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கதை பேச ஆரம்பித்தான்...

“வசி கண்ணா !!! மலர் வீட்டுக்கு போயிருந்தியா?? “ என்றார் மீனாட்சி ஆர்வமாக

“ஹ்ம்ம்ம்... அந்த வழியா போனேன் மா.. அப்படியே போய் மாமாவை பார்த்துட்டு வந்தேன்.... “ என்றான் தன்னை மறைத்து கொண்டு....

“டேய்.. அண்ணா... மாமா வை மட்டும்தான் பார்க்க போனியா ?? .. இல்லை... மாமா பொண்ணை சைட் அடிக்க போனியா?? எனக்கு இப்ப உண்மை தெரிஞ்சாகணும்.... “ என்று தன் கையால் அந்த டேபிலை தட்டி சிரித்தாள்...

“ஹே வாயாடி... உன் வாய குறை டி... “ என்று அவள் காதை பிடித்து திருகினான்....

மீனாட்சியும் சிரித்தவாறு

“என் மருமக எப்படி இருக்கா?? “ என்றார்

“மா.... இதெல்லாம் உனக்கே நியாயமா...?? தினமும் போன் பண்ணி மணி கணக்கா இரண்டு பேரும் பேசறீங்க.. பத்தாதற்கு கோவில்ல வேற தினமும் பார்த்துக்கறீங்களாம்....

நேத்துதான பார்த்திங்க.. அதுக்குள்ள உங்க மருமக குறைஞ்சு போய்ட்ட மாதிரி எப்படி இருக்கானு கேட்கறீங்க?? “ என்று முறைத்தான்...

“ஹீ ஹீ ஹீ.. அது நேற்று பார்த்தது டா... இன்னைக்கு எப்படி இருக்கானு தெரியனும் இல்லை...

சே.. இந்த ஆடி மாசம் மட்டும் குறுக்க வராம இருந்திருந்தால் இந்நேரம் மலரும் நம்ம கூட இருந்திருப்பா....

இப்படி கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலைங்கிற மாதிரி இத்தனை நாள் கழித்து கல்யாணம் ஆச்சுனா இப்படி மருமகளை தள்ளி வச்சு பார்க்க வேண்டி இருக்கே... எப்பதான் இந்த ஆடி முடியும் அவளை போய் இந்க கூட்டி வந்து வச்சுக்கணும்னு இருக்கு... “ என்று பெருமூச்சு விட்டார் மீனாட்சி....

“ஹ்ம்ம்ம்ம்ம் எனக்கும் அதே தான் மா.... “ என்று உள்ளுக்குள் பெருமூச்சு விட்டு கொண்டான் வசீகரன்..

பின் சிறிது நேரம் பேசி கொண்டிருந்து விட்டு மீனாட்சி அவனை சாப்பிட சொல்ல வயிறு புல்லாக இருப்பதாக சொல்லி பால் மட்டும் கொடுக்க சொல்லி மாடி படிகளில் துள்ளலுடன் ஏறி சென்றான்...

அவன் துள்ளலை, நடையில் இருக்கும் உற்சாகத்தை கண்டு மூவருமே ஜாடை செய்து சிரித்து கொண்டனர்...

தன் அறைக்கு வந்தவன் குளித்து விட்டு இரவு உடைக்கு மாறி கட்டிலில் படுத்து கொண்டு அவன் எடுத்து இல்ல சுட்டுட்டு வந்த மலரின் புகைபடங்களை பார்த்து கொண்டிருந்தான் ஆசையாக....

அப்பொழுது மீனாட்சி பால் டம்ளருடன் உள்ளே வந்து அவனிடம் பால் டம்ளரை கொடுத்தார்....

அவனும் அதை வாங்கி பருக

“வசி.. உன்கிட்ட ஒன்னு கேட்கணும்.. கேட்கவா?? “ என்றார் தயங்கியவாறு ...

“அடடா என்கிட்ட என்ன மா தயக்கம்?? எதுவானாலும் கேளுங்க... “ என்றான் சிரித்தவாறு...

“வந்து .. உனக்கு மலரை முன்னாடியே தெரியுமா??? “ என்றார் ஆர்வமாக

அதை கேட்டதும் அவன் குடித்து கொண்டிருந்த பால் தலைக்கேறியது... புரை ஏற, உடனே அவன் தலையை தட்டியவர்

“என்ன டா இது ?? .. ஒரு பாலை கூட ஒழுங்கா குடிக்க தெரியலை.. நீயெல்லாம் என்ன டாக்டரோ ? “ என்று சிரித்தவாறு அவன் தலையை தட்டினார்..

உடனே அவனுக்கு பனிமலரின் நியாபகம் வந்தது... அன்று அவனுக்கு புரை ஏற, அவளும் இதே மாதிரிதான் செய்தாள்... ஏன் அவள் பேசிய டயலாக் கூட இதே தான்...

தன் அன்னையை போலவே தன் மீது பாசமாக இருக்கும் மனைவி கிடைத்தது எவ்வளவு பெரிய பாக்கியம்... தன் அன்னையின் குணம் அப்படியே அவளிடம் இருந்ததாக தோன்றியது......

ஒரே ஒரு வித்தியாசத்தை தவிர.... இவர் வாயை திறக்கவே மாட்டார்.. அவள் வாயை மூடவே மாட்டாள்.... “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டான்...

மீனாட்சி இன்னும் அவனையே பார்த்து கொண்டிருக்க அவன் முகத்தில் வந்து போன புன்னகையை கண்டு அவருக்கு ஏதோ புரிந்து விட, அவன் பதிலுக்காக ஆர்வமாக காத்திருந்தார்...

“ஹ்ம்ம்ம்ம் தெரியும் மா.... ஒரு சின்ன பொண்ணோட ஹார்ட் ஆபரேசன் ல நாங்க சந்திச்சது.... “ என்று மட்டும் சொல்லி நிறுத்திக் கொண்டான்..

“அதற்கு பிறகு நாங்கள் நண்பர்களாக இருந்தோம்... இவளைத்தான் நான் காதலித்தேன்... காதலிக்கிறேன்.... “என்று சொல்ல வெக்கமாக இருக்க, அதை மறைத்து கொண்டான்...

தாய் அறியாத சூல் உண்டா...??

தன் மகனின் முகத்தில் இருந்தே அவர் விசயத்தை கிரகித்து கொண்டார்...

“ஹ்ம்ம்ம் சரி டா கண்ணா.... குட் நைட்... ஸ்வீட் ட்ரீம்ஸ் ... “ என்று மெல்ல அணைத்து அவன் முன் உச்சியில் முத்தமிட்டு அவன் அறைகதவை சாத்திவிட்டு சென்றார்...

இந்த அன்னையின் முத்தத்திற்கும் இந்த அணைப்பிற்கும் தான் எவ்வளவு சக்தி.. அப்படியே மயங்கி நின்றான்.. இப்படி ஒரு அன்பான அம்மாவும் அழகான காதல் மனைவியும் கிடைக்க நான் என்ன தவம் செய்தேனோ ..” என்று பூரித்து போனான்....

தன் மகன் அறையை விட்டு வெளியில் வந்தவருக்கு பெரும் நிம்மதியாக சந்தோசமக இருநது,…

என்னதான் தன் மகன் தன் பேசன்ட் ஐ காப்பாற்ற என்று திடீர் கல்யாணம் செய்து கொண்டாலும் அவனுக்கு பிடிக்காத கல்யாண வாழ்க்கையா இருந்து விட போகிறது என்ற பயம் அவர் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருந்தது....

இது மாதிரி ஏன் இதைவிட எத்தனையோ சிக்கலான கேஸ் வந்த பொழுதெல்லாம் அதை வேற விதமாக கையாண்டு அவர்களை காப்பாற்றி இருக்கிறான்....

ஆனால் இவரை காப்பாற்ற கல்யாணம் வரைக்கும் சென்றிருக்கிறானே என்பது அவருள் உறுத்தி கொண்டே இருந்தது....

இந்த திருமணத்திற்கு பிறகு அவன் முகத்தில் வந்திருந்த குதூகலமும் அதற்கு முன் அவன் முகத்தில் தெரிந்த வேதனையும் வைத்து அவரே சில புள்ளிகளை வைத்து கோலமிட்டார்....

இன்று அவன் மலரை முன்னரே தெரியும் என்று சொல்லவும் அவர் போட்ட கணக்குக்கு விடை கிடைத்து விட்டது...

“அப்ப மலர்தான் அவன் விரும்பிய பெண்.. அவளுக்கு திருமணம் ஆகப் போவதை அறிந்துதான் இந்த பய சோககீதம் வாசித்து கொண்டிருந்தான் போல.. “என்று புரிந்து விட, மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் பூஜை அறைக்கு சென்று அந்த ஈசன் முன்னே கண் மூடி நின்றார்....

“ஈஸ்வரா....எப்படியோ என் ஒரு வேண்டுதலை நிறை வேத்தி வச்சுட்ட... எனக்கு பிடித்த மருமகளையே என் மகனுக்கும் பிடித்து போக, அவளையே என் வீட்டுக்கு விளக்கேத்த அனுப்பி வச்சுட்ட.. ரொம்ப சந்தோசம்.....

அதே மாதிரி என்னுடைய அடுத்த கோரிக்கையையும் தீர்த்து வச்சுடேன்... வசுக்கும் ஒரு நல்ல வழியை காட்டிட்டா நான் நிம்மதியா இருப்பேன்.. ப்ளீஸ்... அவளுக்கும் கொஞ்சம் கருணை காட்டு... ...” என்று வேண்டி கொண்டார்....

மீனாட்சியின் வேண்டுதலுக்கு அந்த ஈசன் செவி சாய்ப்பாரா ?? பார்க்கலாம்...



Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!