காதோடுதான் நான் பாடுவேன்-33



அத்தியாயம்-33 

றுநாள் காலை கண் விழித்தவள் தான் தன்னிடத்தில் இல்லாமல் தன் கணவனின் கட்டிலில் இருப்பதை கண்டு திகைத்தாள் மதுவந்தினி...

பின் நேற்று இரவு சம்பவங்கள் கண் முன்னே வர, அவள் கன்னங்கள் தானாக சிவந்தன...

அதுவும் வெளியில் பார்ப்பதற்கு கரடு முரடாக, இறுகி, முரட்டுதனமாக தோன்றும் தன் கணவன் அவளிடம் மென்மையாக நடந்து கொண்டதும் அவளுக்கு வலித்து விடுமோ என்று தயங்கி மென்மையாக அவளை தீண்டியதும் நினைவு வர அவன் மேல் இன்னும் காதல் பெருகியது அவளுக்கு....

“எவ்வளவு நல்லவன் என் புருசன்...!!! இவனை கணவனாக அடைய நான் கொடுத்து வச்சிருக்கணும்... ரொம்ப நன்றி வேல்ஸ் இப்படி ஒரு புருசனை எனக்கு கொடுத்ததுக்கு... “ என்று அந்த நிலையிலும் தன் நண்பனுக்கு நன்றி சொன்னாள் மது...

பின் மெதுவாக தலையை நிமிர்த்தி ஓரக் கண்ணால் தன் கணவனை பார்க்க, அவளை அணைத்தவாறே அவன் அசந்து உறங்கி கொண்டிருந்தான்....

கடந்த இரண்டு நாட்களாகவே அவனுக்கு சரியாக தூக்கம் இல்லாமல் அலைந்தவன் இப்பொழுது அடித்து போட்ட மாதிரி உறங்கி கொண்டிருந்தான்...

உறங்கும் பொழுதும் விரைத்து கொண்டே உறங்குபவனை, அவன் நாசியில் இருந்து வரும் மூச்சு காற்றை அவன் இறுகிய முகத்தை வெகு அருகில் இருந்து ரசித்து கொண்டிருந்தாள் மது....

அவனின் இறுகிய அணைப்பை விட்டு வெளி வர மனமில்லாமல் அவன் அருகிலயே ஒட்டி கொண்டாள்....

ஆனால் பொழுது விடிய ஆரம்பிக்க அவளுக்கு ஏனோ தயக்கமாக இருந்தது.. அதோடு அவன் எழுந்தால் அவன் முகத்தை எப்படி பார்ப்பது?? என்று சிவந்தவள் அதனால் அவன் எழுமுன்னே எழுந்து விட எண்ணி எழ முயன்றாள்...

ஆனால் அவனின் வலிய கரங்கள் அவளை விடுவதாக இல்லை... உறக்கத்திலும் இறுக்கி அணைத்திருந்தான்...

மெல்ல தன் பலத்தை கொண்டு அவன் கையை கஷ்டபட்டு விலக்கியவள் மெதுவாக நகர்ந்து அவனை எழுப்பிவிடாமல் கீழ இறங்கி குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்....

தலைக்கு குளித்தவள் ஒரு சுடிதாரை அணிந்து கொண்டு தலையில் ஒரு டவலை சுற்றி கொண்டு அந்த அறையின் கதவை மெதுவாக திறந்து அதை மீண்டும் மெதுவாக மூடி விட்டு வெளியில் வந்தவள் நேராக பூஜை அறைக்கு சென்றாள்...

அங்கு இருந்த வேலன் இவளை பார்த்து குறும்பாக சிரிப்பதை போல இருக்க

“சீ... போ வேல்ஸ்... அப்படி பார்க்காதா?? “ என்று வெக்கபட்டு சிணுங்கி அங்கிருந்த விளக்கை ஏற்றி பின் பூஜை செய்து கண் மூடி நின்றாள்....

தனக்கு ஒரு நல்ல கணவனை, நல்ல குடும்பத்தை, நல்ல வாழ்க்கையை, கொடுத்த அனைத்து கடவுளுக்கும் மனதார நன்றி சொன்னாள்....

பின் சமையல் அறைக்கு சென்று இப்பொழுது மின்சாரம் வந்திருக்க, பிரிட்ஜில் நேற்றே வாங்கி வைத்திருந்த பாலை எடுத்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பை பற்ற வைத்தாள் தன் மனதுக்க்கு பிடித்த பாடலை பாடி கொண்டே ....

அதே நேரம் ஹாலில் வைத்திருந்த அவள் அலைபேசி ஒலிக்க, வேகமாக சென்று அதை எடுத்து காதில் வைத்து கொண்டே சமையல் அறைக்கு வந்து பாலை பார்த்து கொண்டே நின்று கொண்டு அலைபேசியில் பேசி கொண்டிருந்தாள்...

மறுமுனையில் என்ன கேட்டார்களோ?? அவள் கன்னம் செவ்வானமாக சிவந்தது....

“ஹ்ம்ம்ம்.. “ என்று வெக்கபட்டு பதில் அழித்தாள் சிரித்து கொண்டே....

மறுமுனையில் மீண்டும் ஏதோ விசாரிக்க,

“ஹ்ம்ம்ம்ம் இப்ப தெரிஞ்சுதா இந்த மது யார் னு?? என்னவோ நான் சின்ன பொண்ணு.. எனக்கு ஒன்னும் தெரியாது... என்னால முடியாதுனு சொன்னிங்க... இப்ப பார் நான் சாதிச்சு காட்டிட்டேன்..

என் திட்டப்படி அந்த சாமியார் இப்ப என் வழிக்கு வந்தாச்சு... இனிமேல் இங்க நான் வச்சதுதான் சட்டமாக்கும்... இதுக்குத்தான் நான் இவ்வளவு நாள் காத்திருந்தேன்....

நான் காத்திருந்தது வீண் போகலை... நான் போட்ட திட்டம் படியும் ஆடின ஆட்டத்திலும் அந்த சாமியார் என் கிட்ட மயங்கி இப்ப என்கிட்ட சரண்டர் ஆகியாச்சு......

இப்பயாவது தெரிஞ்சுகிட்டீங்களா இந்த மது நினைச்சா எதையும் சாதிப்பா னு ... “ என்று வெற்றி சிரிப்பை சிரித்தவள் எதேச்சையாக நிமிர்ந்து வாயில் பக்கம் பார்க்க, அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்...

அவள் கையில் இருந்த அலைபேசி தானாக நழுவி கீழ விழுந்து பிரிந்து அதில் இருந்த பேட்டரி தனியாக வெளியில் வந்து விழுந்தது...

அங்கே கண்ணில் கோபம் கொப்புளிக்க உடல் இறுகி விரைத்து கொண்டு எரிமலையாக நின்று கொண்டிருந்தான் நிகிலன்...

அவனை அங்கு எதிர்பாராதவள் அவன் கொதித்து கொண்டிருக்கும் தோற்றத்தை கண்டதும் அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது....

கண்ணில் குரோதத்துடன் அவளை எரித்து விடும் பார்வை பார்த்து கொண்டே நிகிலன் மெதுவாக அடி எடுத்து வைத்து முன்னால் வர, பயந்து போய் பின்னால் நகர்ந்தாள் மது....

பின்னால் நகர்ந்தவள் சமையல் அறையின் சுவற்றில் சென்று முட்டி கொண்டு நிக்க, இரண்டே எட்டில் அவளை நெருங்கியவன் அவள் கழுத்தில் கை வைத்து அவளை சுவற்றோடு சேர்த்து மேல தூக்கினான் கண்ணில் இரத்த சிவப்புடன்....

“சொல்லுடி?? யார் கூட இப்ப பேசிகிட்டிருந்த?? எதுக்கு இந்த நாடகம்?? என்ன திட்டத்தோட இங்க வந்திருக்க?? உன் பின்னால் இருப்பது யார்?? “ என்று உறுமினான்....

அவனின் முரட்டு கைகள் அவள் கழுத்தில் பதிந்திருக்க, அதில் நெரிபட்ட கழுத்து வலியால் துடிக்க, மூச்சு காற்றுக்காக தவிக்க ஆரம்பித்தாள் கண்ணில் வழியும் நீருடன்....

“சொல்லுடி?? உன் பின்னால் இருப்பது யார்?? உன் அப்பா அம்மாவா?? அவங்க ரொம்ப வெகுளி ஆச்சே... அவங்களுக்கு இப்படி எல்லாம் திட்டம் போட வராது.... சீ... அவங்க வயித்துல போய் நீ பொறந்திருக்கியே... சொல்.. யார் உன் பின்னால் இருப்பது?? உன் திட்டம் என்ன?? “ என்று கர்ஜித்தவன்



இன்னும் கொஞ்சம் தன் பிடியை இறுக்கி பிடிக்க அவள் கை கால்கள் இழுக்க ஆரம்பித்தன.... அதை கண்டவன் தன் பிடியை தளர்த்தி

“சீ.. நீயெல்லாம் ஒரு பொண்ணா?? உன்னைப் போய் நல்லவ னு எல்லாரும் நம்பி கிட்டிருக்காங்களே... நானும் உன் நடிப்பை நம்பிட்டேனே...

உன் சுயரூபம் தெரிந்துதான் என் தம்பி உன்னை விட்டுட்டு ஓடிட்டான் போல... கடைசியில நான் வந்து உன் வலையில மாட்டிகிட்டேன்...

இந்த மாதிரி ஏதாவது ஒரு திட்டத்தோட தான் நீ வந்திருப்பனு தெரிஞ்சுதான் உன் பக்கமே வராமல் இருந்தேன்.. அப்படியும் என்னமா என் கிட்ட நேற்று இரவு நாடகம் ஆடி என்னை மயக்கி உன் காரியத்தை சாதிச்சுகிட்ட....

என்னா நடிப்புடா சாமி... நீ மினுக்கிகிட்டு இருக்கறப்பயே நான் சுதாரிச்சிருக்கணும்... உன் வேசம் என் கண்ணையும் அறிவையும் மறைச்சிடுச்சு...

இப்படி புருசனையே மயக்கறவ நீ இன்னும் என்னவெல்லாம் பண்ணியிருப்ப??... சே... உன்னை போய் நான் ல.... “ என்று ஏதோ சொல்ல வந்தவன் பாதியில் நிறுத்தி கொண்டு

“சீ... உன்னை தொட்டதை நினைச்சா எனக்கே அறுவெறுப்பா இருக்கு... இனிமேல் என் கண் முன்னாடி வராத...

உங்க அப்பா அம்மா வரட்டும் அவங்க கிட்டயே உன்னை ஒப்படைச்சிடறேன்... அதுக்கபுறம் இந்த வீட்ல உனக்கு இடம் கிடையாது.... அவங்க வருகிற வரைக்கும் வேணா இங்க இருந்துக்க...

ப்லடி சீட்டர்......” என்று காலை தரையில் ஓங்கி உதைத்து விட்டு அவளை அப்படியே மேலிருந்து கீழ விட்டுவிட்டு வேகமாக வெளியேறினான்....

அவன் வேகமாக விட்டதில் கீழ விழுந்தவள் அப்படியே சுருண்டு படுத்து விட்டாள்.... அவன் இறுக்கிய கழுத்து பகுதி சிவந்து வலி உயிர் வரை பரவியது...

அந்த வலியை விட அவன் பேசிய வார்த்தைகள் அவள் இதயத்தை கிழித்து எரிந்தது.....

கண்ணில் நீர் அருவியாக கொட்ட அப்படியே மயங்கி சுருண்டாள்...

எத்தனை நேரம் அப்படியே கிடந்தாளோ..பின் மெல்ல நினைவு வர, மெதுவாக கண்ணை சுழற்றியவள் இன்னும் தான் சமையல் அறையில் இருப்பதை உணர்ந்து மெல்ல சுவற்றை பிடித்து எழ முயன்றாள்....

கால்கள் தள்ளாட மெதுவாக எழுந்தவள் கழுத்து இன்னும் வலிக்க, அதை கையால் நீவி கொண்டே மெல்ல வரவேற்பறைக்கு வந்தாள்...

சோபாவில் அமர்ந்ததும் கண்களில் இருந்து கண்ணீர் மீண்டும் அருவியாக கொட்டியது அவளுக்கு....

நேற்று இரவு தான் தன் கணவன் தன்னை புரிந்து கொண்டு தன்னை மனைவியாக ஏற்று கொண்டு சந்தோசமாக ஆரம்பித்த தன் திருமண வாழ்க்கை அடுத்த நாள் காலைக்குள் எல்லாம் தலை கீழாக மாறிவிட்டதே...



“முருகா.. இதெல்லாம் உன் விளையாட்டா?? எதுக்கு இப்படி எனக்கு சந்தோசத்தை கொடுத்து உடனேயே அதை பறிச்சுகிட்ட...?? " என்று புலம்ப, அந்த வேலன் அதை கண்டு மனம் வருந்த அந்த விதியோ கை கொட்டி சிரித்தது...

சிறிது நேரம் அப்படியே தலையை பிடித்து கொண்டு அமர்ந்து இருந்தவள் எதனால் இதெல்லாம் என்று யோசித்தாள்.. அப்பொழுது தான் நினைவு வந்தது...

“காலையில் நான் போனில் பேசியதால் தான் இத்தனையும்? யார் அவங்களை இப்ப போன் பண்ண சொன்னது? நான் ஏன் அப்படி பேச வேண்டும்?? அந்த நேரம் பார்த்து அவன் ஏன் அங்கு வரவேண்டும் ?? “ என்று பல விடை தெரியாத கேள்விகளை தன்னுள்ளே கேட்டு கொண்டாள்....

“கடைசியாக தான் போனில் பேசி கொண்டிருக்கும் பொழுதே பாதியில் அது கீழ விழுந்திருக்க, மறுமுனையில் என்னை அழைக்க திரும்பவும் முயன்றிருப்பார்கள்... போன் ஆப் ஆகி இருக்குமே.." என்று எண்ணி மெல்ல எழுந்தவள் சமையல் அறைக்கு சென்று தன் அலைபேசியின் பாகங்களை தேடி எடுத்து அதை பொருத்தி ஆன் பண்ணினாள்....

உடனே ஜெயந்த் கிட்ட இருந்து அழைப்பு வந்தது... அதை அவள் ஏற்க

"என்னாச்சு மது?? நான் ரொம்ப நேரமா உன் போன்க்கு ட்ரை பண்ணினேன் ?? எடுக்கவே இல்லை... " என்றான் பதற்றமாக....

"ஒ ஒ ஒன்னும் இல்லை சார்.... சார்ஜ் போயிருந்திருக்கும்.... " என்று சொல்லி சமாளித்தாள்...

"ஆமா... ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு?? எனி பிராப்ளம்?? " என்றான்..

எப்பவுமே மதுவின் குரல் உற்சாகத்துடன் இருக்க இன்று பிசிரு தட்டி அவள் அழுததை போல இருக்க சந்தேகமாக கேட்டான் ஜெயந்த் ....

அவன் அக்கறையை கண்டதும் அவள் கண்கள் இன்னும் கரித்தன... ஓ வென்று அழ வேண்டும் போல இருந்தது அவளுக்கு...

ஆனாலும் தன்னை முயன்று கட்டுபடுத்தியவள்

"நத்திங் சார்... மழைக்கு சலி பிடிச்சிருக்கு... " என்றாள்

"ஆர் யூ ஸ்யூர்..?? " என்றான் மீண்டும் நம்பாமல்...

"யெஸ் சார்... ஒன்னும் பிரச்சனை இல்ல.. " என்று மீண்டும் சமாளித்தாள்..

“ஹ்ம்ம் ஓகே மது... மழையினால இன்ஸ்டியூட்ல கொஞ்சம் ரெனவேசன்(renovation) போய்கிட்டிருக்கறதால க்ளாஸ் இன்னும் ஒரு வாரத்துக்கு விடுமுறை..

எல்லா நோட்ஸ் ம் வொர்க் சீட்ஸ் ம் ஈமெயில் அனுப்பிடுவாங்க.. நீ வீட்ல இருந்தே பிராக்டிஸ் பண்ணு...டோன்ட் வேஸ்ட் யுவர் டைம்... டேக் கேர்...” என்று சொல்லி வைத்தான்...

அவளும் அதை வைக்க, மீண்டும் அவள் அலைபேசி ஒலித்தது... இப்பொழுது சிவகாமி அழைத்திருந்தார்...

"மது.... என்னாச்சுடா??? காலையில் இருந்து போன் பண்ணிகிட்டிருக்கேன்.. ஏன் போனை எடுக்கலை ?? என்றார் பதட்டமாக.....

"ஒன்னும் இல்ல அத்தை... சார்ஜ் இல்லாமல் ஸ்விட்ச் ஆப் ஆகிடுச்சு போல... " என்று சமாளிக்க

அவருக்குமே அவள் குரலில் ஏதோ வித்தியாசமாக இருக்க அதை பர்றி விசாரித்தார்... மதுவும் ஏதோ சொல்லி சமாளித்தாள்...

“சரி.. உன் புருசன் உன்னை நல்லா பார்த்துக்கறானா?? நேரத்தோட வீட்டுக்கு வர்ரானா?? " என்றார் ஆர்வமாக...

அவரின் திட்டமே அதுதான்.. அவர்கள் வீட்டில் இல்லையென்றால் பொண்டாட்டிய பார்த்துக்கவாவது வீட்டிற்கு வந்துதான ஆக வேண்டும்... எப்படியாவது அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணிதான் மதுவை அங்கயே விட்டு சென்றது....

தன் மகனிடம் எதுவும் முன்னேற்றம் இருக்குமோ என்று விசாரித்தார் சிவகாமி...

அவர் கேட்ட கேள்விக்கு

"ஹ்ம்ம்ம் ..." என்று தலையை ஆட்டினாள்...

அதை கேட்டு மகிழ்ந்தாலும் மதுவின் குரலில் உற்சாகம் இல்லாததை கண்டு ஏதோ யோசனையுடன் போனை ரமணியிடன் கொடுக்க அவருமே அவளிடம் கொஞ்ச நேரம் கொஞ்சி விட்டு போன் சண்முகத்திடம் சென்றது...அதை வாங்கியவர்

"மது கண்ணா... எப்படி இருக்க?? காலையில் இருந்து உனக்கு ட்ரை பண்ணிட்டே இருக்கோம்.. லைன் கிடைக்கவே இல்லை... " என்றார்..

தன் தந்தையின் குரலை கேட்டதும் அதுவரை கட்டுபடுத்தி வைத்திருந்த அழுகை அவளையும் மீறி வெடித்து கொண்டு வந்தது...

“அப்பா....” வென்று கத்திவிட்டாள் அழுகையுடன் ...

அவளின் அழுகையை கண்டு திடுக்கிட்டு பதறியவர்

"என்னாச்சு டா?? ஏன் அழற?? “ என்று அவர் பதறி கேட்க, அப்பொழுதுதான் அவள் தவறு புரிந்தது....

அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவள்

"ஒ ஒ ஒன்னும் இல்லப்பா.. முதல் முறையா உங்களை எல்லாம் பிரிஞ்சு இருக்கவும் ஒரு மாதிரி ஆயிடுச்சு... அதுவும் சொல்லி வைத்த மாதிரி அத்தை, நீங்க , அம்மா யாரும் இங்க பக்கத்துல இல்லை யா?? அதான்... ஐ மிஸ் யூ பா.... சீக்கிரம் வந்துடுங்க... " என்று சமாளித்தாள்...

“கண்டிப்பா டா.. எங்களுக்கும் தான் உன் ஞாபாகமாகவே இருந்தது.. அதுவும் இன்னைக்கு காலையில் இருந்து என் கண்ணு வேற துடிச்சுகிட்டே இருக்கா.. அதான் உனக்கு என்னவோனு பயந்து கிட்டே இருந்தேன்..." என்றார்...

அவரின் பாசத்தை கண்டு நெகிழ்ந்து போனாள் மது...

“இப்படி பட்ட அப்பாவை கூட மறந்து அவனுக்காக எங்க வீட்டிற்கு போய் ஒரு நாள் கூட தங்காமல் இங்கயே இருந்தேனே.. கடைசியில் என்னை புரிஞ்சுக்கவே இல்லையே... " என்று உள்ளுக்குள் மருகினாள்..

சாராதாவும் அவள் அழுததை கண்டு அவளிடம் பதற்றத்துடன் விசாரிக்க அதே கதையை மீண்டும் தன் அன்னையிடமும் சொன்னாள்..

ஒரு வழியாக அனைவரையும் சமாளித்து முடித்து போனை வைத்தவளுக்கு பசி வயிற்றை கிள்ளியது.. மணியை பார்க்க அது மதியம் 1 ஐ காட்டியது...

“இவ்வள்வு நேரமா இப்படியா இருந்தேன்? “ என்று நினைத்தவள் தலைக்கு குளித்த ஈரம் வேறு காயாமல் தலையை வலிக்க அதோடு கழுத்து வலியும் சேர தைலத்தை எடுத்து கழுத்தில் தடவி கொண்டு சமையல் அறைக்கு சென்றாள்..

அங்கு அவள் காலையில் வைத்திருந்த பால் பொங்கி வழிந்து அடுப்பு அணைந்திருந்தது.. ஆனால் அதில் இருந்த கேஸ் இன்னும் லீக் ஆகி கொண்டிருக்க , அதை கண்டவள்

"பேசாமல் அப்படியே அடுப்பை பற்ற வைத்து விடலாமா?? இவ்வளவு வலி வேதனை எல்லாம் தேவை இருக்காது... “ என்று யோசித்தாள்...

உடனே

"இறப்பது என்பது கோழைத்தனம்.. எத்தனை பிரச்சனை வந்தாலும் தைர்யமாக நின்று பிரச்சனையை பேஸ் பண்ணனும்.. "என்று தன் தந்தை சொல்லி கொடுத்த பாடம் நினைவு வர, தன் மனசை மாற்றி கொண்டு அடுப்பை அனைத்தவள் வேகமாக அந்த சமையல் அறையின் சன்னல்களை எல்லாம் திறந்து விட்டாள்...

அடுப்பு மெலிதாக வைத்திருக்க கொஞ்சமாகத்தான் கேஸ் வெளியேறி இருந்தது... ஆனாலும் சிறிது நேரம் காத்திருந்து வெளி வந்திருந்த கேஸ் முழுவதும் வெளியேற விட்டு பின் அடுப்பை பற்ற வைத்து பால் இல்லாமல் பிளாக் காபியை தயாரித்து சூடாக பருக கொஞ்சம் தெம்பாக இருந்தது...

அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை...

அவன் பேசிய பேச்சுக்களே மீண்டும் மீண்டும் நினைவு வந்தன...

அதுவும் தன்னை பிடிக்காமல் தான் அவன் தம்பி ஓடி விட்டான் என்று தன் கணவனே அவளை குற்றம் சாட்ட, இதுவரை எத்தனையோ பேர் அவளை குறை சொல்லிய போதும் கலங்காத அவள் உள்ளம் இன்று அடிபட்டு போனது...

காபியை குடித்து முடித்ததும் எழுந்து தோட்டத்திற்கு சென்றாள்... அங்கு எல்லா செடிகளிலும் மரங்களிலும் மழைநீர் ஒட்டி கொண்டிருக்க வழக்கமான நாட்கள் என்றால் ஓடிப்போய் அதை தட்டி விட்டு அதில் இருந்து விழும் துளிகளில் நனைந்திருப்பாள்...

ஆனால் இன்று ஏனோ எதுவும் ரசிக்கவில்லை... சிறிது நேரம் அப்படியே தோட்டத்தில் அமர்ந்து இருந்தவள் மீண்டும் பசிக்க ஆரம்பிக்க, திரும்பி வந்து தோசை ஊற்றி சாப்பிட்டு முடிக்க மீண்டும் அவள் அலைபேசி ஒலித்தது...

“சே... எல்லாம் இந்த சனியனால் வந்தது... “ என்று திட்டி கொண்டே அதை எடுக்க, கௌதம் தான் அழைத்திருந்தான் இப்பொழுது...

"மது குட்டி எப்படி இருக்க?? " என்று உற்சாகமாக ஆரம்பித்தான்...

"நல்லா இருக்கேன் ணா.. நீங்க, வசந்தி எப்படி இருக்காங்க??." என்று விசாரித்தாள் அந்த நிலையிலும்..

"ஹ்ம்ம்ம் பைன் டா... “ என்றவன் மேலும் கொஞ்ச நேரம் அவளை பற்றி விசாரித்து விட்டு

"மது.. கேட்கறேனு தப்பா எடுத்துக்காதா ?? வீட்ல எதுவும் பிரச்சனையா?? " என்றான் தயங்கியவாறு..

அதை கேட்டவள் கண்ணில் மீண்டும் நீர் சுரக்க, அடுத்தவரிடம் தன் குடும்ப பிரச்சனையை சொல்ல கூடாது என்று தன் தாய் போதித்த பாடம் நினைவு வர

"அதெல்லாம் ஒன்னும் இல்லனா?? ஏன் கேட்கறீங்க ?? "என்றாள் தயங்கியவாறு

"ஹ்ம்ம்ம் சும்மாதான் மா... “ என்றான் யோசித்தவாறு...பின்

“வந்து... மச்சான் இன்னைக்கு கொஞ்சம் வேற மூட்ல இருக்கான்.. பார்க்கறவங்களை எல்லாம் கடிச்சு குதறி கிட்டு இருக்கான்...

அவன் ட்யூட்டி யில் சேர்ந்த நாளில் இருந்து இந்த மாதிரி யார்கிட்டயும் கடுமையா நடந்து கிட்டதில்லை.. பார்க்கத்தான் முரடனா இருப்பான்.. ஆனா அக்யூச்ட் யாரையுமே கை நீட்டி அடிச்சதில்லை...

அவன் பார்வையிலயே மிரட்டியே காரியத்தை சாதிச்சிடுவான்..

ஆனால் இன்னைக்கு என்னடான்னா அடி பின்னி எடுக்கறான்.. இவன் அடிக்கிற அடியில் இத்தனை நாள் உண்மையை சொல்லாதவனுங்க கூட எல்லாத்தையும் கக்கறானுங்க....

இன்ஸ்பெக்டர்ஸ் , சப் இன்ஸ்பெக்டர்ஸ், கான்ஸ்டபிள்ஸ் னு எல்லாத்தையும் கூட விட்டு வைக்கலை ....

எல்லாரையும் ட்யூட்டி சரியா பண்ணலனு கடிச்சு குதறரான்...

இந்த மாதிரி எப்பவும் நடந்துகிட்டது இல்லை.... அதான் வீட்ல எதுவும் பிரச்சனையா னு கேட்டேன்.. "என்றான் தயங்கியவாறு...

“அதெல்லாம் ஒன்னும் இல்லைனா... "என்று எதையோ சொல்லி சமாளித்தாள் மது...

"ஹ்ம்ம்ம் சரி மா.. எதுக்கும் நீயும் கொஞ்சம் தள்ளி இருந்துக்க.. இங்க இருக்கிற ஆத்திரத்தை எல்லாம் கொண்டு வந்து உன்கிட்ட காட்டினாலும் காட்டுவான்... அவன் ஏதாவது பேசினால் கூட நீ திருப்பி எதுவும் சொல்லிடாத... அட்ஜஸ்ட் பண்ணி போ..

அப்படி எதுவும் உன்கிட்ட கத்தினானு எனக்கு போன் பண்ணு... டேக் கேர் டா.." என்று போனை வைத்தான்..

அண்ணன் என்ற வார்த்தையில் கூப்பிட்டதற்கு இன்று ஒரு நல்ல அண்ணனாக நிரூபித்து விட்டான் கௌதம்... அதை நினைத்து இதுவரை நின்று போயிருந்த அவள் கண்ணீர் மீண்டும் தொடர ஆரம்பித்தது...

“முருகா....இந்த மாதிரி ஒரு அண்ணா எனக்கு கிடைச்சிருக்காரே...

என்னை உயிரா பாவிக்கும் அப்பா அம்மா, தங்கமா தாங்கும் அத்தை , நாத்தினார், பாசமுள்ள அண்ணா, எனக்கு உதவ துடிக்கும் சந்தியா, ஜெயந்த் போன்ற நண்பர்கள்....

இப்படி எல்லா உறவுகளையும் எனக்கு நல்லதாக கொடுத்த நீ என் புருசன் என்கிற உறவை மட்டும் ஏன் இப்படி சிக்கலாக்கிட்ட.. நான் போன ஜென்மத்துல பண்ணின பாவம்தான் என்னை தொடருதோ??

இதிலிருந்து எனக்கு விமோட்சனமே இல்லையா?? என் புருசன் என்னை எப்பத்தான் புரிஞ்சுக்குவான்?? " என்று மீண்டும் புலம்ப ஆரம்பித்தாள் மது..

இரவு உணவிற்கும் நிகிலன் வீட்டிற்கு வரவில்லை .. கௌதம் சொன்னது வேறு மனதை அரித்து கொண்டே இருந்தது.. அதோடு நேற்று இரவு அவள் கன்ட கனவு வேற வந்து அவளை பயமுறுத்தியது...

அவ்வளவுதான்... அதுவரை தன் கணவன் மேல் இருந்த கோபம் மறைந்து அவனுக்காக வேண்ட ஆரம்பித்தாள்.. வேகமாக பூஜை அறைக்கு சென்று அவனுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது... அவன் பத்திரமா வீட்டுக்கு வரணும்.. என்று வேண்டி கொண்டாள்..

இரவு 10 ஆகியும் வீட்டிற்கு திரும்பியிருக்கவில்லை...அவன் பேசிய வார்த்தைக்கு அவன் பக்கமே திரும்ப கூடாது என்று இழுத்து பிடித்து வைத்திருந்த தன் மனதை தேற்றி கொண்டு அவன் அலைபேசிக்கு அழைக்க அதுவோ அணைக்கபட்டிருந்தது...

அதை கண்டதும் அவளுக்கு திக் என்றது.. கௌதம் எண்ணிற்கு அழைக்க அதுவும் அணைக்க பட்டிருந்தது...

“என்ன செய்வது?? “ என்று பயந்து கொண்டே தன் அறையில் அமர்ந்து கொண்டு அந்த வேலனை வேண்டி கொண்டிருந்தாள்...

அப்பொழுது மாடியில் யாரோ ஏறி வரும் ஓசை கேட்கவும் கொஞ்சம் நிம்மதி அடைந்தாள் மது...

நிகிலன் தான் கதவை திறந்து கொண்டு வேகமாக உள்ளே வந்தான்... உள்ளே வரவும் அவன் மேல் மது வாடை அடித்தது..

“ஐயோ !! குடித்திருக்கிறான் போல..” என்று எண்ணியவள் கண்ணில் மிரட்சி தெரிய, அதை கண்டவன் இன்னும் எரிமலையாகி

“என்னடி?? எதுக்கு என்னை பார்த்து அப்படி பயப்படற மாதிரி ட்ராமா பண்ற ?? அதான் உன் ஆட்டம் எல்லாம் எனக்கு தெரிஞ்சு போச்சே.. இன்னும் என்ன?? அதுனாலதான் இன்னைக்கு மேக்கப் போட்டு மினுக்காமல் இருக்கியா??

சீ.. இந்த பொம்பளைங்களே மோசம்.. எல்லாம் வேசக்காரிங்க.... அதனாலதான் இந்த கல்யாணம் கருமாந்திரம் எல்லாம் வேண்டாம்னு தலையால அடிச்சு கிட்டேன் .. இந்த அம்மா கேட்டாங்களா??

இவ என்னடான்னா கட்டின புருசனையே மயக்கி காரியத்தை சாதிச்சுகிட்டேன், வழிக்கு கொண்டு வந்திட்டேன் ங்கிறா.. அங்க ஒருத்தி கல்யாணம் ஆகியும் பொண்டாட்டி கூட சேர்ந்து வாழாம இருக்கேன் னு சொல்லி என்னை ஆம்பளையானு கேட்கறா??

அவ.. அந்த மாலினி... அவ விரிச்ச வலையில் நான் விழலைன உடனே நான் ஆம்பளை இல்லைங்கிறா .. என்னடி நினைச்சுகிட்டி இருக்கிங்க எல்லாரும் உங்க மனசுல?? ... “ என்றவாறு அவளை நோக்கி வந்தான்...

அவன் கண்ணில் தெரிந்த ஏதோ ஒரு வெறித்தனத்தை கண்டு இன்னும் மிரண்டாள் மது.....புலியை கண்டு மிரளும் மான் குட்டியை போல அவள் பதுங்க அது அவனை இன்னும் சீண்டியது...

“நான் ஆண்மை இல்லாதவனா?? சொல்லுடி... அவ .. அந்த மாலினி என்னை பார்த்து அப்படி சொல்லி ஏளனமா சிரிக்கிறா..நான் ஆண்மை இல்லாதவனா?? .. இப்ப காட்டறேன் நானும் ஒரு ஆம்பளைதான் னு...” என்று நடுங்கி கொண்டிருந்த அவளை தன் கைகளில் அள்ளி கொண்டான்...

அவளை கட்டிலில் கிடத்தி முரட்டு தனமாக அவளை அணைத்தான்.. .

நேற்று இரவு தென்றலாக அந்த பூவை தீண்டியவன் இன்று சூறாவளியாக மாறி அந்த பூங்கொடியை துவைத்தான்...

அந்த புயலின் வேகம் தாங்காமல் அந்த கொடியும் துவண்டு போனாள்....

இன்று காலை நிகிலன் கண் விழித்ததும் தன் மீதும் படுக்கையின் மீதும் இருந்த மலர்கள் நேற்று இரவு சம்பவத்தை நினைவு படுத்த, அவன் இதழில் தானாக புன்னகை அரும்பியது....

அவளின் மென்மை இப்பொழுதும் அவனை சிலிர்க்க வைக்க, திரும்பி தன் மனைவியை பார்க்க அவள் இல்லை அங்கு...

ஏனோ அவளை, தன் மனைவியை பார்க்க வேண்டும். தன்னை பார்க்கும் பொழுது அவள் முகத்தில் மலரும் வெட்கத்தை ரசிக்க எண்ணி எழுந்து குளியலறைக்கு சென்றவன் ரெப்ரெஸ் ஆகி கீழ வந்தான்...

மது குளித்து தலையில் ஈரம் சொட்ட சமையல் அறையில் நின்று கொண்டிருந்த வளை மாடியில் இருந்து இறங்கும் பொழுதே கண்டதும் மீண்டும் அவன் உள்ளே சிலிர்த்து போனான்... அப்படியே பின்னால் இருந்து அவளை அள்ளி அணைக்க எண்ணி சமையல் அறைக்கு சென்றான்...

அப்பொழுதுதான் மது யாரிடமோ அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க வாயிலிலயே நின்று கொண்டான்...

மது பேசியதில் இருந்து அவள் திட்டம் புரிய எரிமலையானான்

நல்லவள் என்று நம்பி இருந்தவள் பொய்த்து போகவும் கோபத்தில் அவளை கழுத்தை நெறித்தவன் பின் விட்டு விட்டு சென்று விட்டான்...

தன்னை ஒருத்தி ஏமாற்றி விட்டாள் அதுவும் தன் மனைவியாக உள்ளே வந்தவள்.. வெகுளி என்று எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கியவள் இப்படி விஷமாக இருப்பாள் என் நினைக்காததால் அவனின் ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியவில்லை..

அதே ஆத்திரத்தில் கண்டவர்களை எல்லாம் கடித்து குதறினான்... ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் ரவுண்ட்ஸ் போக அங்கு ட்யூட்டியை சரியாக பண்ணாதவர்களை எல்லாம் காய்ச்சி எடுத்தான்....

அப்பொழுது தான் மாலை நேரம் ரவுண்ட்ஸ் வரும்பொழுது அந்த இன்ஸ்பெக்டர் மாலினி வேலை செய்யும் ஸ்டேசனுக்கு சென்றான்....

மாலினி இரண்டு வாரம் முன்பு கோவிலுக்கு சென்றிருக்க, அங்கு சிவகாமி ஜானகியிடம் நிகிலனை பத்தி புலம்பி கொண்டிருந்தார்..

இந்த பய இன்னும் மாறவேயில்லை... பொண்டாட்டியை ஏற்று கொள்ளவேயில்லை என்று ஜானகியிடம் புலம்ப அதை கேட்டு மாலினி துள்ளி குதித்தாள்..

அவள் ஆசைபட்டு அவளாகவே சென்று புரபோஸ் பண்ணியும் தன்னை நிராகரித்தவன் வாழ்க்கையில் எப்பொழுதும் சந்தோசமாகவே இருக்க கூடாது என்று சூழுரைத்தாள்...

அவள் கேட்டதை வைத்து இன்னும் நிகிலனை வெறுப்பேத்த திட்டமிட்டு சரியாக அவன் வரும் நேரத்தில் தனக்கு கீழ் வேலை செய்யும் கான்ஸ்டபிள் ஒருத்தியிடம்

“நம்ம ACP நிகிலன் சார் திருமணம் ஆகியும் இன்னும் வாழ்க்கையை ஆரம்பிக்கவில்லையாம்....சும்மா பேருக்காகத் தான் கணவன் மனைவியா வாழறாங்களாம்...

அவர் இத்தன வருசம் கல்யாணம் வேண்டாம்னு இருந்தப்பவே ஏதாவது குறை இருக்கும் னு சந்தேகமா இருந்துச்சு..

அது இப்பதான் கன்பார்ம் ஆகிடுச்சு... அவர் ஒரு ஆண்மை இல்லாதவர்....“ என்று இன்னும் ஏதேதோ சொல்லி ஏளனமாக பேச அதை கேட்டு பல்லை கடித்தான் நிகிலன்...அவளை அறைய கைகள் துடித்தன...

ஆனால் அந்த மாலினியை ஒரு இன்ஸ்பெக்டரை தனிபட்ட விரோதத்திற்காக காரணம் இல்லாமல் தண்டிக்க முடியாது என்று தன் கரங்களை கஷ்டபட்டு கட்டுபடுத்தி கொண்டான்....

அதனால் அவள் பணியில் இருக்கும் குறைகளை சுட்டி காட்டி ஒரு வாரத்துக்கு அவளை சஸ்பென்ட் பண்ணினான்...

அதே வெறியோடு கிளம்பி வர, வரும் வழியில்

“ஒரு பாரில் சில ரௌடிகள் குடித்து விட்டு தகராறு பண்ணுவதாகவும் அந்த பகுதி போலிஸ் ஸ்டேஷன்ல கம்ப்லெய்ன் கொடுத்தாலும் ஏற்று கொள்ள மாட்டேங்குறாங்க.. அவனுங்க பெரிய இடம் சார்.. அதான் யோசிக்கறாங்க போல..

நீங்கதான் எப்படியாவது வந்து தட்டி கேட்கணும்.. “ என்று அந்த பாரின் உரிமையாளர் நிகிலனை அழைத்து முறையிட நிகிலன் காரை நேராக அந்த பாரை நோக்கி திருப்பினான்...

அந்த உரிமையாளர் சொன்னமாதிரியே சில ரௌடிகள் கலாட்ட பண்ணி கொண்டிருக்க நிகிலன் தன் கோபத்தை எல்லாம் திரட்டி அவர்களை பந்தாடினான்.. அப்பொழுது நடந்த சண்டையில் ஒரு மதுப்பாட்டில் விழுந்து அவன் மேல் கொட்டிவிட்டது...

அந்த ஏரியா ஹெட் கான்ஸ்டபிளை அழைத்து அந்த ரௌடிகளை ஒப்படைத்து விட்டு வேற ட்ரெஸ் அணிவதற்காக வீட்டிற்கு வந்தான்.....

வந்ததும் அவன் அறையில் மதுவை பார்க்க, அவள் காலையில் பேசியதும் அதோடு அந்த மாலினி பேசியதும் நினைவு வர தன்னை மறந்தான்....தன் நிலையை, தன் மனைவியின் மென்மையை என்று அனைத்தையும் மறந்து வேட்டையாடும் புலியாக அந்த புள்ளிமானை துவைத்து எடுத்தான்...



Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!