காதோடுதான் நான் பாடுவேன்-25


அத்தியாயம்-25
தற்குள் மாப்பிள்ளை ஓடிவிட்ட செய்தி இலேசாக பரவ ஆரம்பிக்க, அந்த செய்தி மதுவுக்கும் எட்ட, அவள் மனதுக்குள் குத்தாட்டம் போட்டு துள்ளி குதித்தாள்...

“வாவ்.. சூப்பர் வேல்ஸ்.. நீதான் என் பெஸ்ட் பிரண்ட்.. எங்கப்பா அம்மா கூட நான் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னத காதுலயே போட்டுக்கல.. ஆனா பார் நீ மட்டும் என் பக்கம் நின்னு இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்காக அந்த மாப்பிள்ளையையே ஓட வச்சுட்டியே...

நீதான் கிரேட்.. Thank you so much வேல்ஸ்.. I love you..” என்று உள்ளுக்குள் மகிழ்ந்தவள் அதை வெளியில் காட்டாமல் கஷ்டபட்டு அடக்கி கொண்டு முகத்தை இலேசாக சோகமாக வைத்து கொண்டாள்....

ஆனால் அவள் மகிழ்ச்சியின் ஆயுட்காலம் சில நிமிடங்கள் தான் என்று அறிய வில்லை அவள்...

மாப்பிள்ளை ஓடி போய்ட்டான் என்ற செய்தி மதுவின் சொந்தக்காரர்களிடம் பரவ, வம்பு பேசும் பெண்கள் வாய்க்கு அவல் கிடைக்க மணமகள் அறையை நோக்கி படையெடுத்தனர்...

உள்ளே வந்தவர்கள் எல்லாம் மதுவை பாவமாக பார்த்தனர்...

சிலரோ எதுக்காக மாப்பிள்ளை இப்படி மகாலட்சுமி மாதிரி இருக்கிற பொண்ணை வேண்டாம் னு ஓடி போய்ட்டான் ?? என்று தங்கள் ஆராய்ச்சியை தொடங்கினர்...

ஒவ்வொருவரும் தங்கள் கற்பனை குதிரையை தட்டி விட, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் கிடைத்தது..

சில பேர் பொண்ணுக்கு ஏதோ வியாதி இருக்கு.. அது கடைசி நேரத்துல தெரிஞ்சு மாப்பிள்ளை ஓடிட்டான்... இல்லை மாப்பிள்ளை வேற யாரையோ விரும்புவாரா இருக்கும்.. கட்டாயபடுத்தி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க வைத்திருப்பார்கள்... அதனால கடைசி நேரத்துல கம்பி நீட்டிட்டான்... என்றனர்..

இன்னும் சிலரோ பொண்ணு யாரையோ விரும்பும் போல.. அது தெரிஞ்சுதான் விட்டுட்டு ஓடி போய்ட்டன்.. என்று ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்ல, அதை விட சில பேர் சாரதாவிடம் வந்து, நீங்க பொண்ணு பக்கத்துலயே இருங்க.. கல்யாணம் நின்ன சோகத்துல பொண்ணு ஏதாவது செஞ்சுக்க போறா?? “என்று அட்வைஸ் பண்ணினர்...

அதையெல்லாம் கேட்க கேட்க பத்தி கொண்டு வந்தது மதுவுக்கு...

“சே... அந்த மாப்பிள்ளை ஓடிட்டானா நான் ஏன் தற்கொலை பண்ணிக்கனும்?? இப்படி அறிவு இல்லாமல் ஏதேதோ உளறுகிறார்களே... “என்று பல்லை கடித்தாள்..

சிலர் அவளிடம் வந்து அவளை கவலைப்படாமல் இரு என்று அட்வைஸ் பண்ண, தன் கோபத்தை எல்லாம் வெளி காட்ட முடியாமல் உள்ளுக்குள் அழுத்தி கொண்டு வெளியில் தலையாட்டி வைத்தாள்...

ஒவ்வொருவராக வந்து துக்கம் விசாரிக்க, மதுவுக்கோ இதையெல்லாம் தூக்கி போட்டு விட்டு எங்கயாவது ஓடிடணும் போல இருந்தது...

அப்பொழுது தான் பாரதி உள்ளே வந்தாள்...

தன்னை அனைவரிடமும் அறிமுக படுத்திக் கொண்டு அங்கு இருந்த மற்ற உறவினர்களை வெளியேற வைத்து நிகிலன் திருமணத்திற்கு சம்மதம் சொன்னதை கூறினாள்...

அதைக் கேட்டதும் திக்கென்றது மதுவுக்கு...

“ஐயோ.. இப்பதான மாப்பிள்ளை ஓடிட்டான்.. இந்த கல்யாணம் நடக்காதுனு சந்தோஷமா இருந்தேன்.. அது உனக்கு பிடிக்கலையா வேல்ஸ்??.. கடைசியில இப்படி கவுத்திட்டியே.. இது உனக்கே நியாயமா?? தர்மமா?? அடுக்குமா?? ... ஐ ஹேட் யூ.. “ என்று அந்த முருகனிடம் மனதிற்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள் மது...

பாரதி சொன்னதை கேட்டதும் அனைவரும் சந்தோச பட்டனர் மதுவை தவிர...

“ஆனா அவர் உங்க பொண்ணோட விருப்பத்தையும் கேட்க சொன்னார்... ஒரு வேளை மது மனசுல மகிழன் மேல ஆசையை எதுவும் வளர்த்துகிட்டிருந்தானா அவன் அண்ணனை ஏத்துக்கறது கஷ்டமாதான் இருக்கும்...

அதுதான் பொண்ணுகிட்ட சம்மதம் கேட்டுக்க சொன்னார் நிகிலன் மாமா... நீங்க மது கிட்ட கேட்டு சொல்லுங்க.. “ என்றாள் பாரதி..

அதை கேட்ட மது

“ஆமா... அவன் மூஞ்சி கூட எப்படி இருக்கும்னு தெரியாது... இதுல நான் அந்த ஓடிப்போனவன் மேல ஆசைப்படறதாம்.. கிரேட் ஜோக்... “என்று அந்த நிலையிலும் உள்ளுக்குள் சிரித்து கொண்டவள் பின் பாரதி சொன்ன பொண்ணோட சம்மதத்தை கேளுங்க என்றதில் மீண்டும் உற்சாகமானாள்....

“அப்ப நான் பிடிக்கலைனு சொல்லிட்டா, இந்த கல்யாணம் நின்னு போய்டுமா??

ஐ.. சூப்பர்.. சாரி வேல்ஸ்.. உன்னை அவசரபட்டு திட்டிட்டேன்... நான் திட்டினதை எல்லாம் டெலீட் பண்ணிடு...ப்ளீஸ்...I hate you இல்ல I love you தான்.. இப்ப நான் பிடிக்கலைனு சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்த போறேன்.....

எந்த அண்ணனும் எனக்காக அவன் கொள்கையை விட்டு தியாகம் பண்ண வேண்டாம்.. “ என்று உள்ளுக்குள் அவசரமாக யோசித்து கொஞ்சம் தெளிவானாள்..

பாரதியும்

“இருங்க நானே மது கிட்ட கேட்கறேன்.. “என்று தலையை குனிந்து கொண்டு கட்டிலில் அமர்ந்து இருந்த மதுவின் அருகில் வந்தாள் பாரதி...

“மது... நான் நிகிலன் மாமாவோட பிரண்ட் ஆதியோட வைப் தான்... எனக்கு சிவா அத்தையையும் அவங்க பசங்களையும் நல்லா தெரியும்..

மகிழன் நல்லவன்தான்.. ஏன் இப்படி செஞ்சானுதான் தெரியலை...அதை கண்டுபிடிக்க இப்ப நேரமில்லை.. ஆனா அதுக்கு பதிலா நிகிலன் மாமா உன்னை கல்யாணம் பண்ணிக்கறேனுட்டார்...

அவரும் ரொம்ப நல்லவர்... நீ எதுவும் யோசிக்காம ஓகே சொல்லிடு.. சிவா அத்தை உன்னை ரொம்ப நல்லா பார்த்துக்குவாங்க.. “என்று ஐஸ் வைத்தாள்...

சாரதாவுக்கோ திக் என்றது.. கல்யாணம் நின்னு போகப்போகுது என்று கேள்வி பட்ட உடனே தன் மகளின் முகத்தை தான் ஆராய்ந்தார் சாரதா..

அதை கேட்டு தன் மகள் வருத்தப்படாமல், முகத்தில் 1000 வாட்ஸ் பல்ப் எரிய, உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டது அந்த தாய்க்கு நன்றாகவே தெரிந்தது..

“ஐயோ.. இவ பாட்டுக்கு சம்மதம் இல்லைனு சொல்லபோறா..ஏற்கனவே இந்த கல்யாணம் வேண்டாம் என்று பாட்டு பாடினவதானே.. இப்ப என்ன சொல்லப் போறாளோ.. இந்த பாரதி பொண்ணு இல்லைனாலும் ஏதாவது கெஞ்சி அவளை சம்மதிக்க வைத்திருக்கலாம்...

இந்த பொண்ணு வேற தானே கேட்கறேன் என்று நின்று விட்டதே.. இப்ப எப்படி சமாளிப்பது?? “ என்று கவலையுடன் மதுவை பார்த்தார் சாரதா...

சண்முகமும் அதே எண்ணத்துடன் தான் தன் மகளின் முகம் நோக்கி காத்திருந்தார்...

மது யோசிப்பதை கண்ட பாரதி,

“வயது வித்தியாசம் எதுவும் இருக்குனு யோசிக்காத மது.. எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் கூட கிட்ட தட்ட உங்க இரண்டு பேர் மாதிரியும்தான்..

நான் ஒரு சின்ன கிராமத்துல இருந்து வந்தவ.. நானே இங்க எல்லாத்தையும் சமாளிச்சு இருந்திட்டேன்... என்னை இங்க நல்லா பார்த்துக்கிறாங்கனா நீ இங்கயே வளர்ந்தவ... உன்னால சமாளிக்க முடியாதா..

எல்லாம் சமாளிச்சுடலாம்.. அப்படி எதுவும் உனக்கு பிரச்சனைனா அக்கா நான் இருக்கேன்... அதனால தயங்காம நீ நிகிலன் மாமாவுக்கு கழுத்த நீட்டு..நீ சந்தோசமா வாழ நான் கேரண்டி... “ என்று அவள் கன்னத்தை பிடித்து செல்லமாக ஆட்டினாள்...

மதுவுக்கோ மனதுக்குள் பிடிக்கலைனு சொல்லிடு என்று அவள் மனசாட்சி ஆணையிட ஏனோ வாயை திறந்து பிடிக்கவில்லை என்று சொல்ல வாய் வரவில்லை...

ஒருவேளை அந்த வடிவேலன்தான் அவள் வாயை அடைத்து விட்டானோ என்னவோ...

எல்லோரும் அவளையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க, தன் பெற்றோர்களின் முகத்தில் இருந்த யாசிப்பை கண்டவளுக்கு அதற்க்கு மேல் தாமதிக்காமல் அவள் தலை தானாக ஆடியது சம்மதம் தெரிவிக்கும் விதத்தில்....

அதை கண்டு பாரதி அவளை கட்டி கொண்டாள்...

“ரொம்ப தேங்க்ஸ் மது... நீ ரொம்ப கொடுத்து வச்சவ இந்த மாதிரி குடும்பத்துல வாழ்க்கை பட....ஐ பெட் யூ.. நீ உன் வீட்ல இருக்கிறத விட, சிவா அத்தை வீட்ல இன்னும் சிரிச்சுகிட்டு ஜாலியா இருக்க போற....

அந்த முருகன் உனக்கு எப்பவும் துணை இருப்பான்.... “ என்று அவளை அணைத்து கொண்டு நெற்றியில் முத்தமிட்டு, அங்கிருந்தவர்களுக்கும் நிகிலனை பற்றி எடுத்துக்கூறி

“நீங்க தயங்காம உங்க பொண்ணை கொடுங்க.. நாங்க எல்லாம் இருக்கோம்... நல்லா பார்த்துக்குவோம்.. “என்று அவர்கள் மனதில் நம்பிக்கை வர வைத்து பின் மணமகன் அறைக்கு விரைந்து சென்றாள் பாரதி...

அங்கு சென்று மது சம்மதித்த செய்தியை கூற, சிவகாமியும் ஆதியும் மகிழ நிகிலனோ இன்னும் அதிர்ந்து போனான்....

“எப்படி?? என் தம்பியை விரும்பியவள் அவனை கல்யாணம் பண்ணிக்க இருந்தவள் அவன் ஓடிட்டான் என்ற உடனே மனதை மாற்றிக் கொண்டாளா?? அப்படி நிமிடத்தில் மனதை மாற்றுபவள் எப்படி நல்லவளா இருக்க முடியும்??” என்று யோசிக்க உடனே அவனுக்கு ரமணியின் முகம் நினைவில் வந்தது..

அதை தொடர்ந்து அவர் நிலைக்கு காரணமான அவர் மருமகள் வசந்தியின் முகமும் நினைவு வர,

“அப்ப இவளும் ஏதோ திட்டத்துடன் தான் இந்த கல்யாணத்திற்கு ஒத்து கொண்டிருக்கிறாள்... மகிழன் திருமணம் செய்து கொள்வதாக சொன்ன பொழுது கூட, வரப்போறவ அவனை பிரித்துச் சென்றாலும் நான் தன் அன்னையையும் தங்கையையும் பார்த்து கொள்வேன்..

இவன் எப்படியோ இருந்துட்டு போகட்டும்.”என்று எண்ணியே மகிழன் திருமணத்திற்கு சம்மதித்தது....

ஆனால் இப்பொழுது எல்லாம் மாறிப்போய் தான் தாலி கட்டும் நிலை வந்து இருக்கே.. அப்ப இவ ஏதாவது திட்டம் போட்டிருந்தாள் ரமணி மா மாதிரி என் அம்மாவையும் கஷ்ட படுத்தி குடும்பத்தின் நிம்மதி சந்தோசம் எல்லாம் இழக்க வேண்டுமே.. “ என்று அவசரமாக யோசித்தவன்

“இல்லை... இவள் எண்ணம் நடக்க கூடாது.. இந்த நிகிலன் யாரென்று இவளுக்கு நான் காட்டறேன்.. தாலி தான கட்ட போகிறேன்.. மற்றபடி இவளுக்கு மனைவி என்ற ஸ்தானம் கிடைக்காது...

ஏன்டா இவனை கல்யாணம் பண்ணினோம் என்று இவள் தினமும் எண்ணி அழுவனும்.. வேதனை படணும்.. பட வைப்பான்.. இந்த நிகிலன்.. “ என்று பல்லை கடித்தவன் வெளியில் இறுகிப் போனான்...

அதன் பின் அவசர அவசரமாக மாப்பிள்ளை உடையை அணிந்து ஆதி அவனை மணமேடைக்கு அழைத்து வர, கலைந்து செல்ல ஆரம்பித்து இருந்த கும்பல் மீண்டும் திருமணம் நடக்க இருக்கிறது என்று கேள்வி பட்டு மீண்டும் இருக்கையில் அமர்ந்து அமைதியாயினர்...

ஒரு வழியாக எல்லா சடங்குகளும் வேகமாக முடிந்து பெண்ணை அழைத்து வந்து மணமகன் அருகில் அமர வைக்க, மதுவுக்கோ உடல் நடுங்கியது...

“எந்த கல்யாணத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள எண்ணி அந்த வேலனை நொடிக்கொரு தரம் வேண்டினாளோ அவனும் கடைசியி கை விட்டுட்டான்...

இல்லை நான் தான் என்னையும் அறியாமல் ஏன், எப்படி சம்மதிச்சேன்?? “என்று பொருமிக் கொண்டே வெளிறிய முகத்துடன் உள்ளுக்குள் இறுகிப் போய் அவன் அருகில் தள்ளி அமர்ந்து கொண்டாள்...

இருவருமே ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்காமல் இறுகி போய் அந்த அக்னி முன்னால் அமர்ந்து இருக்க, கைகள் மட்டும் அந்த ஐயர் சொன்னதை செய்து கொண்டிருந்தன...

கடைசியாக மாங்கல்யத்தை அனைவரிடமும் ஆசி பெற்று கொண்டு வந்து நிகிலனிடம் கொடுக்க, அதை கையில் எடுத்தவன் இன்னும் இறுகி போனான்...

நிமிர்ந்து அருகில் நின்றிருந்த தன் அன்னையை பார்க்க, அவரோ கண்களால் அவனை வேண்டிக் கொண்டிருந்தார்... மறுத்துவிடாதே என்று சொல்லும் வகையில்..

அவரை ஒரு எரித்து விடும் பார்வை பார்த்தவன் பின் மதுவின் பக்கம் திரும்பாமலயே அந்த மாங்கல்யத்தை கட்டினான்...

அதுவரை கல்யாண சந்தோசத்தில் அந்த மண்டபத்தை வளைய வந்து கொண்டிருந்த அகிலா இந்த கலாட்டாவில் எதுவும் முழுதாக தெரியாத போதும் சின்ன அண்ணன் ஓடிட்டான் பெரிய அண்ணன் மாப்பிள்ளை ஆயிட்டான் என்ற வரைக்கும் புரிய, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை...

நிகிலன் தாலி கட்டும்பொழுது அந்த சடங்கு செய்யும் பெண்மணி அகிலாவை அழைத்து அருகில் நிக்க வைத்துக் கொண்டு நிகிலன் இரண்டு முடிச்சிட, அகிலாவை மூன்றாவதாக நாத்தனார் முடிச்சிட வைத்தார்...

அகிலாவுக்கு கொள்ளை சந்தோசம்... எப்படியோ வீட்டிற்கு அண்ணி வரப் போறாங்க.. அது சின்ன அண்ணியா இருந்தா என்ன ?? பெரிய அண்ணியா இருந்தா என்ன??.. எனக்கு இனிமேல் நல்லா பொழுது போகும்.. “என்று எண்ணி சிரித்து கொண்டாள்...

அதன் பின் மற்ற சடங்குகளையும் பல்லை கடித்து கொண்டு செய்து முடித்தனர் இருவரும்... பாரதிதான் அடிக்கடி இருவரையும் சிரிக்க சொல்லி ஓட்டி கொண்டிருந்தாள்...

சிவகாமிக்கோ தன் மூத்த மகனை மணக்கோலத்தில் காண மனம் நிறைந்து நின்றது..

ஒரு பக்கம் சின்னவன் இப்படி பண்ணிட்டானே என்று கவலையாக இருந்தாலும் இன்னொரு பக்கம் பெரியவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சே.. “என்ற மகிழ்ச்சிதான் மேலோங்கி நின்றது...

சண்முகமும் சாரதாவுக்கும் இதே எண்ணம் தான்... எப்படியோ நிக்க இருந்த தங்கள் மகள் கல்யாணம் நல்ல படியா முடிஞ்சிடுச்சே.. என்ற நிம்மதி மூச்சு விட்டனர்...

அதோடு அவர்கள் ஜோடி பொருத்தம் அருமையாக இருக்க ,மனதுக்குள் நிம்மதியும் சந்தோசமும் பரவியது...

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன நிலையில் இருக்க, மேடையில் ஜோடியாக அமர்ந்து இருந்தவர்களை கண்டு

“எப்படியோ.. அந்த மகிழனை ஓட வச்சு நான் நினைத்த மாதிரி இவர்கள் இரண்டு பேரையும் ஒன்னு சேர்த்தாச்சு... என் ஆட்டத்தின் முதல் பாதி முடிந்தது... “ என்று சிரித்து கொண்டான் அந்த சிங்கார வேலன்...

பழைய நினைவுகளில் இருந்து மீண்டனர் சிவகாமியும் மதுவும்...

“இப்ப புரியுதா மது உன் புருசன் ஏன் உன்னை விட்டு தள்ளி தள்ளி போறா னு... எங்க வரப்போற பொண்டாட்டி குடும்பத்தை பிரிச்சிடுவாளோ..என்ற பயத்துல தான் அவன் கல்யாணம் பண்ணிக்காம இருந்தது...

எல்லாம் அந்த ரமணியால வந்தது..” என்று மீண்டும் அந்த ரமணியை ஒரு முறை திட்டி தீர்த்தார் சிவகாமி..

“அவளை பார்க்காம இருக்கிறவரைக்கும் கொஞ்சம் இறங்கி வர்ரான்.. அவள போய் பார்த்துட்டா பழசெல்லாம் ஞாபகம் வந்திரும் போல... உடனே வேதாளம் முருங்கை மரம் ஏறின மாதிரி உச்சானி கொம்புல போய் உட்கார்ந்துக்கறான்...

அவளும் இவன் போய் பார்க்காம இருந்தாலும் போன் பண்ணி வர வச்சுடறா.. கடங்காரி.. என்ன செய்ய??.. “என்று பெருமூச்சு விட்டார் சிவகாமி...

ஆனால் மதுவோ அவர் சொன்னதை எல்லாம் காதில் வாங்கவில்லை... வேற எதையோ யோசித்துக் கொண்டிருந்தவள்

“அத்தை.. அப்ப முதல்ல நீங்க எங்கப்பா கிட்ட பேசினது உங்க பெரிய பையனுக்குத்தானா?? “ என்றாள் ஆர்வமாக...

“இவ ஏன் சம்மந்தம் இல்லாம கேட்கறா?? “ என்று எண்ணி கொண்டே

“ஆமா மது மா.. உன் போட்டோவை பார்த்த பொழுதே நீ எனக்கு மூத்த மருமகளா வரணும்னு தான் வேண்டி கிட்டேன்.. ஆனால் அதுக்குள்ள பெரியவன் மறுக்க, இடையில் சின்னவன் புகுந்து எல்லாம் குழப்பிட்டான்...

கடைசி வரைக்கும் இந்த சின்னவன் ஏன் அப்படி பண்ணினான்?? இப்ப எங்க இருக்கிறான்?? என்று மட்டும் தெரியவே இல்லை...

ஆனால் உங்கப்பா ஜாதகம் எல்லாம் பார்த்து உனக்கும் சின்னவனுக்கும் 10 பொருத்தமும் இருக்கு.. அது கூட இராமன் சீதா ஜாதகம் னு சொன்னாரே.. அப்படியிருக்க இந்த பய ஏன் பாதியில் ஓடிப் போனான்..” என்று யோசித்தவர் மனதில் திடீரென்று மின்னல் வெட்டியது...

உடனே வேகமாக எழுந்து பூஜை அறைக்கு சென்று அங்கு இருந்த ஏதோ ஒரு பேப்பரை எடுத்து பார்க்க, அவர் முகம் பிரகாசமானது... அதே பூரிப்புடன் திரும்பி வந்தவர்

“மருமகளே... இப்பதான் எனக்கு நினைப்பு வந்தது.. உங்கப்பா ஜாதகம் கேட்டப்போ நான் கம்ப்யூட்டர் சென்டருக்கு போனனா... அவனுங்க சின்னவன் பிறந்த தேதி கேட்க ஏதோ ஒரு நினைப்புல பெரியவன் பிறந்த தேதியத்தான் சொல்லியிருக்கேன்..

அவனுங்களும் அந்த தேதிக்கு ஜாதகம் போட்டு கொடுத்திருக்கானுங்க.. நானும் அதை பார்க்காம அப்படியே கொண்டு போய் உங்கப்பா கிட்ட கொடுத்திட்டேன்...

அப்ப உங்கப்பா பொருத்தம் பார்த்தது உனக்கும் உன் புருசனுக்கும் தான்... அதான அந்த ஜோசியர் சரியாதான் சொல்லியிருக்கார்...நீங்க இரண்டு பேரும் தான் இந்த ஜென்மத்துல இணையனும் னு விதி இருக்கு போல...

அதனாலதான் அந்த வேலன் இப்படி ஒரு நாடகத்தை ஆடி உங்க இரண்டு பேரையும் எப்படியோ சேர்த்து வச்சுட்டான்... ” என்று மனம் நிறைந்த பூரிப்புடன் சிரித்தார்... பின் மதுவை பார்த்து

“மருமகளே.. அந்த ஜோசியர் சொன்ன மாதிரி நீங்க இரண்டு பேரும் அந்த இராமனும் சீதையும் மாதிரி ஒன்னா எப்பவும் இருக்கனும்..

இராமனுக்கு கஷ்டம் வந்த பொழுது, அந்த காட்டுக்கே போனப்போ கூட எப்படி சீதாதேவி இராமனை விட்டு பிரியலயோ அதே மாதிரி நீயும் உன் புருசன் ஏதாவது கோபத்துல சொன்னாலும் அதை எல்லாம் மனசுல வச்சுக்காம அவனை விட்டு பிரியாமல் அவனோடவே இருக்கணும்... “ என்றார் தழுதழுத்த குரலில்...

“கண்டிப்பா அத்தை...நான் எப்பவும் அவர விட்டு பிரிய மாட்டேன்... “ என்றாள் மதுவும் சிரித்து கொண்டே...

அவள் அறியவில்லை...விரைவில் தன் கணவனை விட்டு பிரிய போகிறாள்... அவள் மாமியாரே அவளை பிரித்து வைக்க போகிறாள் என்று...

அதற்குள் சிவகாமியின் அலைபேசி ஒலிக்க, அதை எடுப்பதற்காக எழுந்து சென்றார்.. மதுவும் சோபாவில் இருந்து எழுந்து வேகமாக பூஜை அறைக்கு சென்றாள்....

அங்கு சென்று அந்த வேலன் முன்னால் நின்றவள்

“வேல்ஸ்... இப்பதான் உன் ஆட்டம் எனக்கு புரிஞ்சிருக்கு... நான் என்னை பார்க்க வரப்போற மாப்பிள்ளைக்கு என்னை பிடிக்க கூடாது னு வேண்டிகிட்டதால தான முதல் முதலா என்னை பார்க்க வந்த என் புருசனுக்கு என்னை பிடிக்காம செய்துட்ட...

அதே மாதிரி இந்த கல்யாணம் நிக்கணும் னு நான் வேண்டிகிட்டதால தான அந்த ஓடிப்போனவனை ஓட வச்சு இந்த கல்யாணத்தை நிறுத்தின....

சே.. நான் ஒரு முட்டாள்.. என் புருசன் எவ்வளவு நல்லவன்.. அதை புரிஞ்சுக்காம நான் பாட்டுக்கு தத்து பித்து னு ஏதோ வேண்டி வைக்க, நீயும் அதை கேட்டு கொஞ்சம் கூட யோசிக்காம அப்படியே நடக்க வச்சுட்டியே....

சின்ன வயசுல துவாச முனிவர் கொடுத்த வரத்தை பரிசோதிக்கும் ஆர்வத்தில்(curiosity) அதன் விளைவை அறியாமல் குந்தி தேவி சூரிய தேவனை வேண்டி அந்த மந்திரத்தை சொல்ல, அந்த சூரிய தேவனும் திருமணம் ஆகாமல் எப்படி குழந்தை வரம் கொடுப்பது என்று யோசிக்காமல் குழந்தையை கொடுக்கப் போய் தானே பாவம் குந்தி கர்ணனை பெத்து எடுத்து கஷ்ட பட்டா....

அதே மாதிரி எனக்கு விவரம் இல்லாம நான் பாட்டுக்கு ஏதோ வேண்டப் போய் அதையே நிறைவேற்றி வச்சுட்டியே... இது நியாயமா?? தர்மமா?? நீயாவது என் மண்டைல அடிச்சு புத்தி சொல்லியிருக்கலாம் இல்ல...

இப்ப பார் என் புருசன் என்னை பார்த்தாலே பிடிக்காம விலகி விலகி போறார்... எல்லாம் உன் ஆட்டம் தானு தெரியுது... you are very bad God.. I hate you..

வேணும் னா நான் வேண்டினதை வாபஸ் வாங்கிக்கறேன்....என் புருசன் மனச மாத்தி என்னை அவர் பொண்டாட்டியா ஏத்துக்க வச்சிடேன்...” என்றவள் சுற்றிலும் பார்த்து யாரும் அருகில் இல்லை என்று தெரிந்து கொண்டு மெதுவாக அந்த வேலன் அருகில் வந்து

“You know வேல்ஸ்... I love my சிடுமூஞ்சி விருமாண்டி husband sooo much..ப்ளீஸ் .. எப்படியாவது என் புருசனை என்னை லவ் பண்ண வச்சுடேன்....” என்றாள் ரகசியமாக அந்த வேலன் காதில்...

அந்த வேலனும் குறும்பாக சிரிக்க, அதை கண்ட மது

“என்ன வேல்ஸ்.. நக்கலா சிரிக்கிற... அந்த வள்ளி உன்னை லவ் பண்ண வைப்பதற்காக உன் அண்ணன் கணேசன் உனக்கு ஹெல்ப் பண்ணின மாதிரி என் புருசன் என்னை லவ் பண்ண வைக்க நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்....

நான் வேணா உனக்கு காவெடி எடுக்கறேன்..” என்று சொல்ல வந்தவள் மற்றவர்கள் காவெடி எடுத்ததை பார்த்து இருக்கிறாள்.. அது எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பது நினைவு வர,

“இல்ல...காவெடி வேண்டாம்.. அது ரொம்ப கஷ்டமா இருக்கும்.. நான் வேணா உனக்கு பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், சந்தன அபிஷேகம் ஏன் விபூதி அபிஷேகம் கூட பண்ணிடறேன்... ப்ளீஸ்... ப்ளீஸ்... என் கோரிக்கையை நிறைவேற்று வேல்ஸ்... “ என்று அந்த வேலனிடம் கெஞ்சி கொஞ்சி கொண்டிருந்தாள் மது...

அவளின் அந்த குழந்தைதனமான கெஞ்சலையும் கொஞ்சலையும் கண்ட  அந்த வேலன்

“ஹா ஹா ஹா மதுகுட்டி.. இப்பயாவது என்னை புரிஞ்சிகிட்ட இல்ல... சந்தோசம்... உன் ஆசை மட்டுமில்ல அந்த சிவா ஆசை படி அந்த சிடு மூஞ்சி விருமாண்டி போலிஸ்காரனை எப்படி மடக்கி என் வழிக்கு கொண்டு வர்ரேனு பொறுத்திருந்து பார்...”என்று சிரித்து கொண்டான் அந்த சிங்காரவேலன்....



Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!