தவமின்றி கிடைத்த வரமே-41
அத்தியாயம்-41
அமைதியாக சந்தோஷமாக சென்று கொண்டிருந்த பனிமலரின் திருமண வாழ்வில் குழப்பத்தை கொண்டு வந்த மித்ரா வை பற்றி மேலும் தெரிந்து கொள்ள, ஷ்யாமை சந்திக்க சொல்லி இருந்தாள் பாரதி..
ஷ்யாம் வேலை செய்யும் மித்ரா மருத்துவமனையின் அருகில் இருந்த காஃபி ஷாப் ல் சந்திக்கலாம் என ஷ்யாம் சொல்ல, மலரும் அடுத்த அரை மணி நேரத்தில் அங்கு சென்றிருந்தாள்..
தன் வண்டியை பார்க்கிங் ல் நிறுத்திவிட்டு உள்ளே செல்ல, அது அந்த காஃபி ஷாப் அவர்கள் திருமணத்திற்கு முன்பு வசி மலருடன் அடிக்கடி சந்தித்து பேசும் இடம்தான்..
அந்த காஃபி ஷாப் உள்ளே நுழைந்த மலரின் கால்கள் தானாக அவர்கள் வழக்கமாக அமரும் இடத்திற்கு சென்றது.. அந்த இருக்கையில் அமர்ந்ததும் அவளுக்கு பழைய நினைவுகள் எல்லாம் கண் முன்னே வந்தன..
அவன்தான் தன் கணவனாக வரப்போகிறான் என்று அறியாமல் என்னவெல்லாம் சொல்லி அவனை ஓட்டி இருக்கிறாள்.. அவனுமே அவளின் வம்பு பேச்சுக்கு சிரித்து கொண்டே சமாளித்தானே..
அந்த குறும்பு பார்வையின், வசீகர சிரிப்பின் அர்த்தம் அப்பொழுது புரியவில்லை..
வசீகரன் மலரை காதலித்துதான் மணந்தான் என்று பாரதி சொன்னதை கேட்டதில் இருந்தே மலருக்கு உள்ளே பெரும் மகிழ்ச்சியாக நிம்மதியாக இருந்தது...
“முன்பே என்னை மனசில நினைத்து கொண்டுதான் என்னுடன் பழகி இருக்கிறான். ப்ராட் மெக்கானிக்.. கொஞ்சம் கூட வெளில காட்டலையே.. இதுக்குனே இருக்கு அவனுக்கு..
முதல்ல இந்த மித்ரா பிரச்சனை முடியட்டும். அப்புறம் வச்சுக்கறேன் அந்த மெக்கானிக் ஐ.. “ என்று உள்ளுக்குள் செல்லமாக திட்டி கொண்டவளின் உதட்டில் புன்னகை தானாக அரும்பியது..
கடந்த ஒரு வாரமாக சிரிப்பை மறந்திருந்த அவள் இதழ்கள் உற்சாகத்தில் இன்னும் அழகாக வளைந்தன.. தனக்குள்ளயே சிரித்து கொண்டே ஷ்யாமின் வருகைக்காக காத்திருந்தாள்..
அவளை அதிகம் காக்க வைக்காமல், சிறிது நேரத்தில் ஷ்யாம் வந்திருந்தான்..
பனிமலரை பார்த்து கை அசைத்து புன்னகைத்தவாறே அவள் அமர்ந்திருந்த மேசைக்கு அருகில் வந்தவன்
“ஹாய் சிஸ்டர்.. எப்படி இருக்கீங்க? வீட்ல எல்லாரும் நலமா? “ என்று நலம் விசாரித்தான்..
மலரும் அவனுக்கு பதில் அழித்து அவன் நலம் விசாரித்தவள் எப்படி கேட்பது என்று மெல்ல தயங்கினாள்..
அவளின் தயக்கத்தை புரிந்து கொண்ட ஷ்யாம்
“என்ன ஆச்சு சிஸ்டர் ? நீங்களும் என் தங்கை மாதிரிதான்.. என்கிட்ட என்ன கேட்கணும்னாலும் தாராளமா கேளுங்க.. தயங்க வேண்டாம்.. “ என்று புன்னகைத்து அவளை ஊக்குவித்தான்..
மலரும் சிறிது நேரம் யோசித்தவள்
“அண்ணா... நான் சொல்றது எல்லாம் நமக்குள்ள மட்டும் இருக்கட்டும்.. “ என்று ஒரு டிஸ்க்ளைமர் ஐ போட்டு மித்ராவின் ட்ராமை வை பற்றி சுருக்கமாக விவரித்தாள்..
மித்ரா, வசி மற்றும் மலர் இருவரையும் பிரிக்க சதி செய்ததையும் விளக்கினாள்..அவள் செய்த சதியால் வசி இப்பொழுது அவளுடன் கோவித்து கொண்டிருப்பதையும் சொல்லி முடித்தாள்..
அதை கேட்ட ஷ்யாம் அதிர்ந்து போய்
“ஓ மை காட்.. நான் எது நடக்க கூடாதுனு பயந்தேனோ அது நடந்திருச்சே... மித்ராவால் வசியை விட்டு கொடுக்க முடியாது னு தெரியும்.. ஆனால் அவ உன்கூட இப்ப நல்லா பேசறதால அவள் வசியை மறந்து விட்டாள் என்றல்லவா நினைத்து இருந்தேன்..
உள்ளுக்குள் இப்படி ஒரு தப்பான கேவலமான எண்ணத்தை வைத்திருப்பாள் என்று நினைக்கவே இல்லை.. ஓ.. காட்.. இது மட்டும் வசிக்கு தெரிந்தது அவ்வளவு தான்..அவள் பக்கமே திரும்ப மாட்டான்..
அதை விட இப்ப உங்க வாழ்வு சரியாகணும்.. அதுக்கு என்ன செய்யலாம் ?.. “ என்றான் யோசித்தவாறு..
ஷ்யாம் சொன்னதை கேட்டிருந்த மலர் மேலும் பாரதி ஷ்யாமை பற்றி சொன்னதும் நினைவு வர,
“அதுக்கு ஒரே வழி.. நீங்க மித்ராவை கல்யாணம் பண்ணிக்கிறதுதான் ஷ்யாம் அண்ணா.. “ என்றாள் மலர் குறும்பாக சிரித்தவாறு..
அதை கேட்டு லேசாக அதிர்ந்தவன்
“சிஸ்டர்... நீங்க என்ன சொறீங்க ? “ என்றான் யோசனையுடன்..
“ஹீ ஹீ ஹீ உங்க லவ் மேட்டர் எனக்கு தெரியும் ணா.. “ என்றாள் கண் சிமிட்டி.
“ஹீ ஹீ ஹீ ஓ.. வசி சொன்னானா? “ என்றான் சிறு வெட்க சிரிப்புடன்..
“ஆமா.. அவர் காதலையே சொல்லலை.. இதுல அவர் பிரண்ட் ஓட காதலை பற்றி என் கிட்ட சொல்லிட்டாலும்.. “ என்று முகத்தை நொடித்தவள்
“ஹீ ஹீ ஹீ.. சும்மா நானே கெஸ் பண்ணினேன் அண்ணா.. அத கன்பார்ம் பண்ணிக்கிறதுக்காக இப்ப போட்டு வாங்கினேன்.. பாருங்க.. நீங்களே உண்மையை ஒத்துகிட்டீங்க.. “ என்றாள் கண் சிமிட்டி சிரித்தவாறு
“ஓ..அடடா.. அப்ப நானாதான் உளறிட்டேனா ?.. நீங்க சரியான கேடிதான் சிஸ்டர்.. வசி எப்படி உங்களை வச்சு சமாளிக்கிறானோ? “ என்று சிரித்தான் ஷ்யாம்..
மலரும் இணைந்து சிரிக்க, அவர்கள் இருவரின் சிரிப்பை கண்டு இரண்டு ஜோடி கண்கள் அனலை கக்கியது..
அவர்கள் அமர்ந்திருந்த டேபிலுக்கு சில டேபில்கள் தாண்டி வசியும் மித்ராவும் அமர்ந்து இருந்தனர்..
அன்று மித்ராவுக்கு வேலை சீக்கிரம் முடிந்து விட்டதால் வசியை கட்டாய படுத்தி இந்த காஃபி ஷாப் ற்கு அழைத்து வந்திருந்தாள் மித்ரா.. உள்ளே வந்தவன் பார்வை முன்பு மலருடன் வரும்பொழுது அவர்கள் வழக்கமாக அமரும் அந்த மேசைக்கு சென்று வந்தது...
மனம் தானாக பழைய நினைவுகளை தொட்டது..
எவ்வளவு ஜாலியான நாட்கள் அவை.. எவ்வளவு தரம் மலர் அவனை கிண்டல் அடித்தும் மனம் குலுங்கி சிரித்திருந்தனர்..
“இன்று எல்லாம் கானல் நீராய் போய்விட்டது.. அவன் ஜில்லு பொய்த்து விட்டாள்..” என மனம் வேதனை பட, தன் மனதை வெளிக்காட்டாமல் உள்ளே இருந்த பேமிலி அறைக்கு சென்றனர் இருவரும்..
அவர்களுக்கு பிடித்த சிற்றுண்டியை ஆர்டர் பண்ண, மித்ரா வசியிடம் மலரை பற்றி விசாரித்தாள்.. அவன் வாயில் இருந்து எதாவது வரும் அதை வைத்து மலரை பற்றி போட்டு கொடுக்கலாம் என்று எண்ணி வாயை கிளற, வசியோ எந்த இடத்திலும் மலரை தன் மனைவியை பற்றி வாயை திறக்கவில்லை..
“சரியான அழுத்தக்காரன்.. “ என்று உள்ளுக்குள் முனகியவள்
“அப்புறம் வசி.. கல்யாணம் ஆகி கிட்ட தட்ட 2 மாசம் முடிஞ்சிருச்சே.. எதுவும் குட் நியூஸ் இல்லையா ? “ என்றாள் அவனை ஒரு ஆராயும் பார்வை பார்த்தவாறு..
அதை கேட்டதும் அவன் முகத்தில் ஒரு நொடி பெரும் வேதனை வந்து போனது.. ஆனாலும் உடனே சமாளித்து கொண்டவன் சிரித்து சமாளித்தான்..
அதில் இன்னும் கொதித்தாள் மித்ரா..
“பார்.. இப்ப கூட வாயை திறந்து ஏதாவது சொல்றானா னு..” என்று உள்ளுக்குள் திட்டியவள் அதுக்கு மேல் அவனிடம் நோண்டி பார்க்க முடியாததால் சிறிது நேரம் மருத்துவம் பற்றி பேசியவர்கள் சிற்றுண்டியை முடித்து கிளம்பி வெளியில் வந்தனர்..
எதேச்சையாக வசியும் மலரும் வழக்கமாக அமரும் அந்த மேசைக்கு சென்ற வசியின் கண்கள் அப்படியே உறைந்து நின்றன.. ஆம்.. மலர் தான் அங்கு உட்கார்ந்து மலர்ந்து சிரித்து கொண்டிருந்தாள்
நேற்று இரவு அப்படி கலை இழந்து அழுது வடிந்து இருந்தவள் இன்று பளிச்சென்று சிரிக்க, அவனுக்கு எங்கயோ இடித்தது
“அப்ப என்னிடம் காட்டும் முகம் வேறா? வெளியில் அவள் நன்றாகத்தான் சுத்திகிட்டிருக்கா..என்னை பார்த்தால் மட்டும் முகத்தை சோகமாக வைத்து கொள்கிறாளோ? “
என்று அவசரமாக யோசித்தவன் அவள் எதிரில் பார்க்க, வழக்கமாக அவன் அமரும் இடத்தில் வேற ஒரு ஆடவன் அமர்ந்திருந்தான்..
அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்து இருந்ததால் அவன் முகம் தெரிய வில்லை.. ஆனாலும் அந்த இடத்தில் அவளை சிரித்த முகமாக வேற ஒரு ஆடவனுடன் பார்க்க, வசியின் கை நரம்புகள் புடைத்தன..
அவனுள் இருக்கும் அந்த ஆண் என்ற ஆணவ மிருகம் விழித்து எழ, அவன் அறிவை அது மலுங்கடித்து அவள் சிரிப்புக்கு தப்பு அர்த்தம் கற்பித்தது..
அதே நேரம் மிதராவும் அவர்களை காண மலரின் சிரிப்பை கண்டதும் பற்றி கொண்டு வந்தது மித்ராவுக்கு..
உடனே வசியிடம் திரும்பி
“வசி.. அது மலர் தான? யாருடன் இப்படி சிரித்து பேசி கிட்டிருக்கா? அதுவும் இப்படி பப்ளிக் ஆ ? அவள் க்ளோஸா சிரிக்கிறதை பார்த்தால் அந்த ஆள் அவளுக்கு ரொம்ப வேண்ட பட்டவனா இருக்கும் போல.. ஒரு வேளை அவளோட பாய் பிரண்ட் ஓ? .. “ என்று இழுத்தாள் வசியை ஓர கண்ணால் பார்த்தவாறு..
அதில் பல்லை கடித்தவன் தன் கோபத்தை மறைத்து கொண்டு,
“லெட்ஸ் கோ மிது... “ என்று அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு சென்று விட்டான்..
மலரும் உற்சாகமாக பேசி கொண்டிருந்ததில் அவர்களை கவனிக்கவில்லை..
ஷ்யாமிடம் பேசிய பின் பாரதியின் எண்ணிற்கு அழைத்து அலைபேசியை கொடுத்து ஷ்யாமை பேச சொன்னாள் மலர்..
பாரதியும் மித்ராவை எப்படி ஹேண்டில் பண்ணுவது என்று அவனுக்கு சில அறிவுரைகளை சொல்லி வசியிடம் நாளை பேச சொல்லி வைத்தாள்..
மலரும் அவனுக்கு நன்றி சொல்லி விடை பெற்று வீட்டிற்கு கிளம்பி சென்றாள்..
அன்று இரவு வீட்டிற்கு கொஞ்சம் சீக்கிரமாக திரும்பி இருந்தான் வசி..
அனைவரும் அப்பொழுது தான் இரவு உணவை உண்டு கொண்டிருக்க, மீனாட்சி தன் மகனை கண்டதும் அவனை சாப்பிட அழைக்க அவன் வேண்டாம் என்று மறுத்து விட்டு தன் அறைக்கு சென்று விட்டான்..
மறந்தும் மலர் பக்கம் திரும்பவில்லை..
மீனாட்சி ஜாடையில் தன் மருமகளை பார்த்து என்னாச்சு ? என்று கேட்க,
“சும்மா... டாக்டர் கொஞ்சம் முறுக்கி கிட்டு இருக்கார் அத்தை.. சீக்கிரம் லூசாக்கிடலாம்.. “என்று கண் சிமிட்டி சிரித்தாள்..
கடந்த ஒரு வாரமாக தன் மருமகளின் முகத்தில் இல்லாத சிரிப்பு இன்று வந்திருக்க அவருக்கு நிம்மதியாக இருந்தது..
“எப்படியோ பெருசா ஒன்னும் பிரச்சனை இல்லை போல.. " என்று நிம்மதி அடைந்தவர் சாப்பிட்டு முடித்து பாலை காய்ச்சி வசி க்கு ஒரு டம்ளரில் ஊற்றி மலரிடம் கொடுத்தார்..
மலரும் அதை வாங்கி கொண்டு அவருக்கு இரவு வணக்கத்தை சொல்லி தன் அறைக்கு வந்தாள்..
தைர்யமாக அறைக்கு உள்ளே வந்து விட்டவள் அவனிடம் என்ன பேசுவது எப்படி பேசுவது ? என்று தயக்கமாக இருந்தது..
பாரதி நாளை வரை பொறுத்திருக்க சொன்னதால் இன்று அவனிடம் எதுவும் பேச வேண்டாம் என முடிவு செய்தவள் தங்கள் அறைக்கு வந்து கதவை சாத்தி விட்டு உள்ளே வந்திருந்தாள்..
வசி இரவு உடைக்கு மாறியவன் கட்டிலில் அமர்ந்து பின்னால் ஒரு தலையணையை எடுத்து வைத்து சாய்ந்து அமர்ந்து கொண்டு எதையோ யோசித்து கொண்டிருந்தான்..
அவனிடம் சென்றவள் பால் டம்ளரை நீட்ட,
“என்னை அழைக்க கூட அவளுக்கு பிடிக்க வில்லை போலும்.... " என்று உள்ளுக்குள் மருகியவன் அதை வாங்கி குடித்துவிட்டு டம்ளரை அவளிடம் நீட்டினான்...
அவளும் உள்ளுக்குள் சிரித்து கொண்டு முகத்தை பாவமாக வைத்து கொள்ள அவளின் அந்த பாவமான முகத்தை கண்டு இன்னும் கொதிக்க ஆரம்பித்தது வசிக்கு..
“அங்கு காஃபி ஷாப் ல் அப்படி வாய் கிழிய சிரித்தாள். இப்ப பார் எப்படி மூஞ்சிய வச்சிருக்கா.. “ என்று குமுறியது.. அவன் ஆத்திரம் கண்ணை மறைக்க,
“யார் அவன் ? “ என்றான் மொட்டையாக அவளை நேராக பார்க்காமல்..
வசி திடீரென்று கேட்கவும் திடுக்கிட்டு முழித்தவள்
“யாரை கேட்கறீங்க? “ என்றாள் மலர் புரியாமல்...
“ஓ.. அப்ப நிறைய பேர் பாய் பிரண்ட்ஸ் இருக்காங்களா? அதான் யார் னு சொல்ல முடியலையா? “ என்றான் ஏளனமாக உதட்டை வளைத்து..
அதை கேட்டு ஒரு நொடி அதிர்ந்து போய் அவள் இரத்தம் கொதித்தாலும் தன்னை கட்டு படுத்தி கொண்டவள்
“ப்ளீஸ் மெக்... வசி..இப்படி எல்லாம் பேசாதிங்க. “ என்றாள் தன் உதட்டை பற்களால் அழுந்த கடித்த படி.
“வேற எப்படி பேசறதாம்.? இப்படி பாவமா மூஞ்சை வச்சிருக்கிறவ காஃபி ஷாப் ல மட்டும் எப்படி அப்படி சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டிருந்த.. இங்க வந்ததும் அப்படியே மூஞ்சியை மாத்திக்கறியே..ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒவ்வொரு முகமா ? ..
ஓ.. நீதான் நல்ல வேசக்காரி ஆச்சே... சே..உன்னைப் போய் நான் காதலிச்சேன் பார்.. என்னை அடிச்சுக்கணும்.. “ என்று தலையில் அடித்து கொண்டான் வசீகரன்..
“அடப்பாவி.. இத முன்னாடியே சொல்லி தொலச்சிருந்தா இவ்வளவு பிரச்சனையே இல்லையே.. நான் ஏன் அந்த மித்ரா பேச்சை கேட்க போறேன்.. “ என்று மனதுக்குள் புலம்பினாள் மலர்.
"எவ்வளவு ஆசையா கல்யாணம் பண்ணினேன் உன்னை .. எனக்கு துரோகம் பண்ணிட்டியே.. " என்றான் முகத்தை சுளித்து தன் வேதனையை மறைத்து கொண்டு..
“இல்ல வசி.. நான் எதுவும் தப்பா செய்யலை.. " என்று தன்னிலை விளக்கம் கொடுக்க முயன்றாள் மலர்..
"போதும் நிறுத்து டீ.. இனிமேலும் என்னை ஏமாற்ற முடியாது.. இதுவரை நீ ஏமாற்றி வந்ததெல்லாம் போதும்.. சே.. கேவலம் உன் உடல் சுகத்துக்காக என் குழந்தையை சுமக்க பிடிக்காமல் அதை தடுக்க மாத்திரை சாப்பிட்டவள் இல்லை நீ..
அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காமல் நீயே முடிவு பண்ணி இருக்க.. அப்படி என் குழந்தையை சுமக்க பிடிக்காதவள் நான் தொடறப்பயும் தள்ளி போயிருக்கணும்...
ஆனால் நீதான் உடல் சுகத்தை பெரிதாக தேடுபவள் ஆச்சே... என் குழந்தைக்காக எத்தனை ஆசையா காத்திருக்கேன் தெரியுமா?.. ஆதி, நிகில் குழந்தைகளை பார்க்கிறப்ப எல்லாம் என் இளவரசி எப்ப வருவானு எவ்வளவு ஏக்கமா காத்துகிட்டிருக்கேன் தெரியுமா?
அம்மா வேற என்கிட்ட முதல் முதலா கேட்டது ஒரு பேர குழந்தையை.. அதை கூட கொடுக்க முடியாமல் இப்படி பண்ணிட்டியே நீ ..
எப்படி டீ மனசு வந்தது உனக்கு? “ என்றவன் வேதனையுடன் கண்களை மூடி கொண்டான்.. கழுத்து நரம்புகள் புடைக்க தன் கோபத்தை கட்டுபடுத்துவது புரிந்தது மலருக்கு..
அவனை அப்படி காண, அவள் உள்ளேயும் வேதனை பரவியது.. உடனே அவள் மனமும் வாட,
“இல்ல வசி.. நான் வந்து... “ என்று மலர் ஏதோ சொல்ல வர
“நீ பேசாத.. என்கிட்ட எதுவும் பேசாத.. நீதான் காதலே இல்லாமல் வெறும் கடைமைக்காக என்னுடன் குடும்பம் நடத்துபவள் ஆயிற்றே. உனக்கு எப்படி என் மனம் புரியும்..”
“என்ன உளறீங்க? “ என்றாள் மலர் இப்பொழுது கொஞ்சம் கோபமாக
“நான் ஒன்னும் உளறலை.. நீ அன்னைக்கு வசுகிட்ட சொன்னது நியாபகம் இல்லை? ஓ அதுக்குள்ள மறந்திருக்காதே.." என்றான் நக்கலாக
மலர் அன்று வசுவிடம் என்ன பேசினாள் என்று அவசரமாக ரிவைன்ட் பண்ணி பார்த்தாள்..
அன்று மலரிடம் பேசி கொண்டிருந்த வசு தயங்கியபடி,
“வந்து... லவ் ஐ பற்றி இவ்வளவு டீப் ஆ சொன்னீங்களே.. நீங்க யாரையாவது லவ் பண்ணீங்களா? பண்றீங்களா அண்ணி? “ என்றாள் குறும்பாக சிரித்தவாறு ..
அதை கேட்ட மலர் கன்னம் சிவக்க, ஆனாலும் தன் கன்ன சிவப்பை மறைத்து கொண்டு
“நான் யாரையும் லவ் பண்ணலையே.. “என்றாள் சிரித்தவாறு..
வசுவும் விடாமல்
“ஹா ஹா ஹா நம்பிட்டேன் அண்ணி... பொய் சொல்லாதிங்க.. என் அண்ணனைத்தான் நீங்க பார்த்த உடனே லவ் பண்ணினீங்க?.. “ என்றாள் மீண்டும் கண் சிமிட்டி.
அப்பொழுது தான் அவளுக்கே உரைத்தது அது.. அவனை முதல் முதலாக பார்த்த உடனே அவள் மனதில் ஒரு பாதிப்பு.. அதனால் தான் அவன் ஸ்டெதசை எடுத்து அவள் வயிற்றில் வைக்க வர, அவளால் அதை தாங்க முடியாமல் உடனே எழுந்து விட்டாள்..
“அப்ப அப்பயே எனக்கு அவனை பிடித்து விட்டதா??.. அதனால் தான் எனக்கு பார்த்த அந்த கூஜா மாப்பிள்ளையிடம் எந்த ஆர்வமும் இல்லை..”
ஏன் கல்யாணத்திலுமே அவளுக்கு ஆர்வம் துளியும் இல்லாமல் அது நின்று விடாதா என்று உள்ளுக்குள் வேண்டி கொண்டது நினைவு வந்தது..
அதோடு திருமண நாள் நெருங்க நெருங்க எதையோ இழப்பதை போன்ற உணர்வு அதற்கான உற்சாகம் கொஞ்சம் கூட இல்லை.
அப்ப வசியை மனதில் வைத்து கொண்டு தான் அந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தது.. அதுவே அந்த திருமணம் நின்று விட்டது என தெரிய அப்படி ஒரு நிம்மதி சந்தோஷம் பரவியது அடி மனதில்.
அதெல்லாம் டாக்டரின் மேல் இருந்த காதலால் தான் என்று இப்பொழுது புரிந்தது மலருக்கு... அதனால்தான் அவனை உடனே கணவனாக ஏற்று கொள்ள முடிந்தது என்ற உண்மையும் இப்பொழுது விளங்கியது..
“ஹலோ... அண்ணி.. என்ன அதுக்குள்ள ப்ளாஸ் பேக் போய்ட்டீங்களா? என்ன நான் சொன்னது கரெக்ட் தான.. என் அண்ணனை பார்த்து தான் பர்ஸ்ட் மயங்கினிங்க? .. அவனைத்தானே அப்பவும் இப்பவும் லவ் பண்றீங்க? “ என்று புருவம் உயர்த்தி கேட்க
“சீ போடி... “ என்று வெட்க பட்டு வசுவின் அறையில் இருந்து ஓடி வந்து விட்டாள் அன்று..
மலர் சொன்ன நான் யாரையும் காதலிக்கவில்லை என்றதைத்தான் வசி கேட்டிருந்தான்..
அவள் எப்படியும் தன் பெயரைத்தான் சொல்ல போகிறாள் என்று ஆர்வமாக எதிர்பார்த்தவனுக்கு அவள் சொன்ன யாரையும் காதலிக்கவில்லை என்ற பதில் அவன் தலையில் இடியை இறக்கியது...
“அப்படி என்றால் அவள் என்னை காதலிக்கவில்லை.. காதல் இல்லாமல் வெறும் கடமைக்காக மனைவி என்ற கடமைக்காகத்தான் என்னிடம் இணைகிறாளா? காதல் இல்லாத தாம்பத்தியம் எப்படி நிலைத்து நிற்கும்?
எனக்குள் இருக்கும் காதல் அவளிடம் இருக்கும் என்று தானே எதிர்பார்த்தேன்.. நான் ஆரம்பத்தில் இருந்தே அவளை காதலுடன் பார்த்து வர, அவள் என்னை வெறும் பொழுது போக்குக்கானவன் என்று மட்டும் தான் பார்த்து வந்திருக்கிறாள்..
அப்ப என்னிடம் மனைவியாக நடித்து வருகிறாள்...உண்மையாகவே அவள் மனம் என்னை காதல் கணவனாக ஏற்று கொள்ளவில்லை
“என் ஜில்லுவா இப்படி? எப்படி அவளால் இப்படி நடிக்க முடிந்தது? “ என்று எண்ணியவனுக்கு அவளுடன் பழகிய நாட்களில் இருந்து பழசையெல்லாம் நினைவு படுத்தி பார்த்தான்..
ஒரு கட்டத்தில் உண்மை புரிய,
“சே.. அரம்பத்தில் இருந்தே நான்தான் அவள் மீது பைத்தியமாக இருந்திருக்கேன்.. அவள் துளியும் என் மீது விருப்பம் காட்டியிருக்கவில்லை.. அதனால் தான் இப்பொழுது கூட என் குழந்தையை சுமக்க பிடிக்காமல் தடுத்து வருகிறாள்.. “ என்று எரிமலையானான்..
அதை நினைத்து பார்த்தவள்
அவள் சொன்ன முதல் பாதியை மட்டும் கேட்டிருக்கிறான்.. பின்னால் வசு கேட்டதுக்கு அவள் வெட்க பட்டு ஓடி வந்ததை அவன் கேட்டிருக்க மாட்டான் என புரிந்தது..
“நான் அவனை காதலிக்கவில்லை என்று தான் இவ்வளவு கோபமா ? “ என்று இப்பொழுது புரிந்தது..
அவள் பக்கம் இருந்து விளக்கம் சொல்ல முயல அவனோ அதை கேட்கும் மன நிலையில் இல்லை..
அவன் ஒரு இதய நல மருத்துவனாக இருந்தாலும் அவன் மனைவியின் இதயத்தில் என்ன இருக்கிறது என்று அறிய முடியாமல் போய் விட்டது..
அவள் மனதிலும் அதே காதல் தான் இருக்கிறது என்று அறிந்து கொள்ளாமல் வாய்க்கு வந்ததை பேசி கொண்டிருந்தான்.. அவன் மன குமுறலை எல்லாம் வார்த்தையால் கொட்டி கொண்டிருந்தான்..
மலர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க
“சொல்லு டி.. உனக்கு தேவை என் காதல் இல்லை.. உன்னால் என்னை காதலிக்க முடியவில்லை.. ஆனால் மனைவிக்கான கடமையை மட்டும் செய்வாய்.. சரி வா.. அப்ப நானும் கணவனுக்கான கடமையை செய்கிறேன்...
இந்த சுகம்தானே உனக்கு வேண்டும்.. வா.. “ என்றவன் அவள் எதிர்பாராத வண்ணம் வேகமாக எழுந்து வந்தவன் அவளை இழுத்து இறுக்கி அணைத்தான் வசி..
அதில் அதிர்ந்தவள்,
“ப்ளீஸ் விடுங்க வசி.. “ என்று கெஞ்சிய மலரோ அவன் பிடியில் இருந்து விடுபட முயன்றாள்..
ஆனால் அவனின் வலிய கரங்களில் இருந்து வெளி வர முடியாமல் பெண்ணவள் அடங்கி விட, அவளை வெறுப்பேத்த என்று அணைக்க ஆரம்பித்தவன் ஒரு வாரம் தன் மனைவியை பிரிந்து இருந்த ஏக்கம் வீறு கொண்டு எழ, அவள் சற்று முன் பற்களால் மடித்திருந்த இதழை முரட்டு தனமாக முத்தமிட ஆரம்பித்தவன் அதற்கு மேல் கட்டு படுத்த முடியாமல் அவளை கையில் அள்ளி கொண்டு கட்டிலை அடைந்தவன் அவளை புள்ளிமானை வேட்டையாடும் வேங்கை போல ஆட் கொண்டான்..
Comments
Post a Comment