காதோடுதான் நான் பாடுவேன்-34
அத்தியாயம்-34
மறுநாள் கண் விழித்த நிகிலன் தலை பாரமாக இருக்க தலையை பிடித்து கொண்டே திரும்பி அருகில் பார்க்க, அங்கே மது துவண்டு கிடந்தாள்...
அப்பொழுதுதான் நேற்று அவன் நடந்து கொண்டது நினைவு வர அது கொஞ்சம் அதிகம் தானோ என்று தோன்றியது...
ஆனால் அடுத்த நொடியே அவள் அலைபேசியில் பேசியது நினைவு வர
“என்கிட்டயே அவ வேலையை காட்டினாள் இல்லை... இப்ப தெரிஞ்சிருக்கும் இந்த நிகிலன் யாரு னு?? இந்த தண்டனை அவளுக்கு தேவைதான்.. “ என்று சொல்லி கொண்டே குளியல் அறைக்கு சென்று ரெப்ரெஸ் ஆகி தன் காலை ஓட்டத்தை தொடங்கினான்...
அதை முடித்து வந்தவன் தன் அறைக்கு திரும்பி வர, மது இன்னும் சுருண்டு அப்படியேதான் படுத்திருந்தாள்...அதை கண்டவன்
“எல்லாம் நடிப்பு.. இவளுக்கா நடிக்க தெரியாது?? இப்ப இதுக்கு இந்த ட்ராமா பண்றாளோ?? “ என்று ஏளனமாக உதட்டை சுழித்தவன் பின் குளித்து கிளம்பி வர, மது இலேசாக முனகுவது கேட்டது....
“என்னாச்சு?? இவ்வளவு நேரம் படுக்கையில் இருக்க மாட்டாளே?? “ என்றவாறு அவள் அருகில் சென்றவன் அவளை உற்று பார்க்க அவள் உடல் நடுங்குவது தெரிந்தது...
அவள் முகத்தை பார்க்க, ஆங்காங்கே நகக் கீரலால் அவள் முகம் வீங்கி இருந்தது... அவனின் முரட்டுதனமான முத்தத்தால் அவள் உதடுகள் சிவந்து வீங்கி இருந்தன...
அதை கண்டதும் ஒரு நொடி அவன் தவறு புரிந்தது....
“ஒரு வேளை அவசரபட்டுட்டமோ?? இவளை வேற மாதிரி தண்டித்து இருக்கணுமோ?? இப்ப என்ன செய்வது?? “ என்று எண்ணியவாறே அவள் அருகில் குனிந்தவன்
“ஏய்.. நடிச்சது போதும்.. எழுந்திரு..” என்க அவளோ அவன் குரல் கேட்டதும் இன்னும் நடுங்கினாள் கண்ணை திறக்காமல்...
அதை கண்டவன் அவள் நெற்றியில் கை வைக்க, அது அனலாக கொதித்தது...
“அச்சோ இப்படி கொதிக்குதே...” என்று திடுக்கிட்டவன் உடனே மைதிலிக்கு போன் பண்ணி அழைக்க, அதற்குள் படுக்கையை நேராக்கி அவளுக்கு வேற ஒரு நைட்டியை மாற்றிவிட்டு மொத்தமான போர்வையை கொண்டு போர்த்தி விட்டான் அவள் நடுக்கம் குறைய...
டாக்டர் மைதிலி வந்ததும் வழக்கம் போல நீ கொஞ்சம் வெளில இருப்பா என்றவர் அவன் வெளியில் சென்றதும் அவளை பரிசோதித்தவர் அதிர்ந்து போனார்....
அவள் உடல் எங்கும் ஆங்காங்கே கீரல் பட்டிருக்க காய்ச்சலில் உடல் அனலாக கொதித்தது...
அவளை எழுப்ப அவளோ எழ முடியாமல் கிடந்தாள்... பின் அவளுக்கு ஒரு இன்ஜெக்சனை போட்டவர் கீழ இறங்கி வர, நிகிலன் குற்ற உணர்ச்சியால் தலையை குனிந்து கொண்டான்...
“என்னப்பா இதெல்லாம்?? “ என்றார் அவனை எரிக்கும் பார்வையில்...
“சாரி டாக்டர்... நேற்று கொஞ்சம் வேற மூட் ல இருந்தேன்.. அதான் கொஞ்சம்.. என் கன்ட்ரோலை இழந்திட்டேன்...” என்றான் வேதனையுடன்...
“அதுக்காக இப்படியா?? This is equivalent to rape… கட்டின பொண்டாட்டியா இருந்தாலும் அவள் சம்மதம் இல்லாமல் அவளை கட்டாய படுத்த கூடாதுனு சட்டமே இருக்கு தெரியுமா??
ஓ.. உனக்கே தெரிஞ்சிருக்குமே?? அப்படி இருந்தும் ஏன் இப்படி??.. உன்னை போய் நல்லவன் னு பாராட்டினேனே.. நீயா இப்படி?? “ என்று ஏளனமாக பார்த்தார்....
நிகிலனுக்குமே தன் தவறு புரிந்தது... அவளுக்கு ஆடை மாற்றும்பொழுது அவனே கவனித்தான்...அதை கண்டதும்தான் அவன் எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டான் என்பது புரிந்தது...
“எக்ஷட்ரீம்லி சாரி டாக்டர்.. எனக்கு எப்படி நடந்துக்கறது னு தெரியலை... இதுதான் நான் முதலும் கடைசியுமாக பண்ணின தவறா இருக்கும்.. இனிமேல் இது மாதிரி எதுவும் நடக்காது.. நீங்க என்னை நம்புங்க...” என்றான் குற்ற உணர்ச்சியுடன் ...
“ஹ்ம்ம்ம் நான் நம்பறதும் நம்பாததும் ஒன்னும் இல்லப்பா... உன் மனைவியே ஆனாலும் அவளும் ஒரு மனுசி .. அவளுக்கும் ஒரு மனசு இருக்கும்... அதை காயபடுத்தாம பார்த்துக்கோ...
இன்ஜெக்சன் போட்டிருக்கேன்.. கொஞ்ச நேரத்துல காய்ச்சல் குறைஞ்சிடும்.... கண் முழித்தால் ஏதாவது கஞ்சி மாதிரி வச்சு கொடு.. இதில் இருக்கிற மாத்திரை எல்லாம் வாங்கி வந்து கொடு.. டேக் கேர் ஹெர்.. “ என்றார்..
“ஸ்யூர் டாக்டர்... அப்புறம் அம்மாவுக்கு இந்த விசயம்.....” என்று இழுத்தான்...
“ஹ்ம்ம் நான் முன்ன சொன்னது தான் இப்பவும்... நாங்கள் பார்க்கிற பேசன்ட்ஸை பத்தின எந்த தகவலும் வெளில சொல்ல மாட்டோம்...
உன் பொண்டாட்டி ரொம்ப சாப்ட்... இனிமேலாவது அவளை நல்லா பார்த்துக்கோ...God bless you both… “ என்றவாறு வெளியேறி சென்றார்....
நிகிலனும் அந்த மாத்திரைகளை வாங்கி வந்து வைத்து விட்டு அவள் எழுந்திருக்க காத்திருந்தான்...
மதியம் அவள் கண் விழித்ததும் அவளை கட்டாயபடுத்தி ஏதோ கொஞ்சம் சாப்பிட வைத்து டாக்டர் சொன்ன் மாத்திரைகளை கொடுத்து விட்டு மீண்டும் இரவு ஒரு தரம் சாப்பிட சொல்லிவிட்டு கிளம்பி சென்றான்...
இரவு காய்ச்சல் குறைந்திருக்க, மெல்ல எழுந்து நடமாட ஆரம்பித்தாள் மது...
அவளை சமைக்க வேண்டாம் என்று சொல்லி, மீண்டும் அவன் வெளியில் இருந்து வாங்கி வந்து கொடுத்தான்.. அவள் சாப்பிட்டு முடித்ததும் இரவுக்கான மாத்திரைகளை எடுத்து கொடுத்து உண்ண வைத்து என அவன் கடமையை செய்தான்….
ஆனால் வாய் திறந்து அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை... அவன் கண்களில் அவளை வெறுக்கும் அந்த வெறித்த பார்வைதான்...
மதுவுமே அவன் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.. அவன் சொல்லியதை பொம்மை போல செய்து மீண்டும் தன் சோபாவில் படுத்து கொண்டாள்...
இரண்டு நாள் கழித்து அன்று சுற்றுலா சென்றிருந்தவர்கள் திரும்பி வரும் நாள்....
அதிகாலையில் பிளைட் சென்னைக்கு வரும்.. அவளுக்கும் ஏர்போர்ட் போய் அவர்களை எல்லாம் ரிசீவ் பண்ண ஆசை தான்...
ஆனால் அதை எப்படி அவனிடம் கேட்பது?? அவன்தான் இப்பொழுதெல்லாம் அவள் முகத்தை கூட பார்ப்பதில்லையே ..
கடந்த இரண்டு நாட்களில் வீட்டில் சாப்பிடுவதும் இல்லை...அவள் வைத்து கொடுக்கும் கஞ்சியையும் தொடுவதில்லை... இரவு மட்டும் அதுவும் அவள் உறங்கிய பின் கிட்டதட்ட 12 மணி அளவில் தான் வீட்டிற்கு வருகிறான்...
காலையிலும் எழுந்து சீக்கிரம் கிளம்பி விடுகிறான்...
இன்று காலை எழுந்ததுமே அவன் கிளம்பி தன் கார் சாவியை எடுத்து கொண்டு செல்ல, அவன் விமான நிலையத்திற்கு தான் செல்கிறான் என்று தெரிந்தது...
அவனும் அவளிடம் வருகிறாயா என்று கேட்கவில்லை.. இவளுக்கும் அவனிடம் சென்று கேட்கும் தைர்யம் இல்லை... சரியென்று விட்டு விட்டாள்...
விமான நிலையத்தில் மலேசிய விமானம் தரை இறங்க, நிகிலன் காரை நிறுத்திவிட்டு விசிட்டர்ஸ் பகுதியில் காத்திருந்தான்....
கௌதமும் வந்து சேர்ந்து கொண்டான்... இருவரும் இயல்பாக பேசி கொண்டிருக்க, அனைவரும் வந்து சேர்ந்தனர் ..
ஒரு வாரத்திற்கு பிறகு தங்கள் மகன்களை காணவும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது சிவகாமிக்கும் ரமணிக்கும்...
அகிலாதான் முதலில் ஓடி வந்து தன் அண்ணனை கட்டி கொண்டாள்....
“ I missed you ணா ...” என்று கட்டிகொள்ள, அவனும் மெல்ல அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்...
அதை கண்ட கௌதம்
“ஹோய்.. அகி குட்டி.... இந்த வருசத்தோட நம்பர் ஒன் லை(lie) இதுதான்.... உன் அண்ணன் தொல்லை இல்லாமல் ஜாலியா ஒரு வாரம் அவுத்து விட்ட கழுதை மாதிரி சுத்திட்டு இப்ப miss you ஆ?? யார் கிட்ட காது குத்தற?? “ என்று ஓட்டினான்....
“போங்கண்ணா... உங்களையும் கட்டிக்க ஒரு தங்கச்சி இல்லைனு உங்களுக்கு பொறாமை..” என்று முகத்தை நொடித்தாள் அகிலா..
“ஹா ஹா ஹா ஹா.. தங்கச்சி இல்லையா?? என் பாசமலர் மது குட்டி இருக்கா அகி... உங்க அண்ணன் தங்கச்சி பாசம் எல்லாம் எங்களுக்கு முன்னாடி ஜுஜுபி....” என்று சிரித்தான்...
அதை கேட்டு கடுப்பான நிகிலன்
“டேய்... போதும் நிறுத்தறீயா? உன் தங்கச்சி புராணத்தை... “ என்று சிடுசிடுத்தான்..
“அதான.. என் தங்கச்சிய பத்தி சொன்னா உனக்கு வந்திருமே... “ என்று முறைக்க, அதற்குள் மற்றவர்களும் அருகில் வந்திருந்தனர்....
சிவகாமி நிகிலனை கட்டி கொள்ள, ரமணி கௌதம் ஐ கட்டி அணைத்து பின் நிகிலனையும் கட்டி கொண்டார்...
நல்லா இருக்கிங்களா மப்பிள்ளை என்றவாறு சண்முகம் சாரதாவும் ஒதுங்கி நிற்க, எல்லா நல விசாரிப்பும் முடிய, அனைவர் கண்களும் யாரையோ தேடியது...
சிவகாமிதான் முதலில் கேட்டார்..
“ மது எங்க நிகிலா?? காணோம்.. கார்ல இருக்காளா?? “ என்றார் ஆர்வமாக
ரமணியும்
“ஆமாம்... அவள பார்த்து ஒரு வாரம் ஆச்சே.. அவள பார்க்காம என்னவோ போல இருக்கு... எங்க நிகில்..?? “ என்றார்...
“எப்படித்தான் எல்லோரையும் மயக்கி வச்சிருக்காளோ?? வேசக்காரி.. “ என்று உள்ளுக்குள் பொறுமியவன்
“அவ வீட்ல இருக்காமா... நான் வேற ஒரு வேலையா வெளில வந்தேன்.. அப்படியே இங்க வந்திட்டேன்... அதான் வீட்டுக்கு வரப் போறிங்க இல்ல.. அங்க வந்து பார்த்துக்குங்க.. “ என்றான் இலேசான எரிச்சலான குரலில்...
தன் மகனின் முகத்திலும் குரலிலும் இருந்து ஏதோ சரியில்லை என புரிந்து கொண்டார் சிவகாமி....
ஆனாலும் அதை வெளிகாட்டாமல்
“சரி வாங்க போகலாம்..” என்று கிளம்பினர்...
நிகிலன் ரமணியையும் வீட்டிற்கு அழைக்க
“இல்ல கண்ணா... நான் இல்லத்திற்கு போறேன்.. அங்க நிறைய வேலை இருக்கு.. அதோட அங்க இருக்கிறவங்க எலலாம் எனக்காக பார்த்துகிட்டு இருப்பாங்க..
நான் கௌதம் கூடவே போய்டறேன்.. நீங்க கிளம்புங்க.. மது வை நேரம் இருந்தால் அங்க வர சொல். இல்லைனா நானே அடுத்த வாரம் வர்ரேன்.. கேட்டதா சொல்.. “ என்று கூறி கௌதம் உடன் கிளம்பி சென்றார்...
மதுவின் பெற்றோர்களும் மதுவை பார்த்து விட்டு செல்வதாக கூறி நிகிலன் காரில் வந்தனர்...
கார் வீட்டை அடைந்ததும் முன்பு போல அகிலா முதலில் இறங்கி வீட்டிற்கு உள்ளே ஓடிவர இவர்களை வரவேற்பதற்காக வெளியில் வந்த மதுவை இறுக்கி கட்டி கொண்டாள்...
தன் அண்ணனிடம் சொன்ன அதே டயலாக் ஐ கூறி அணைத்து கொள்ள, மதுவும் அவளை கட்டி கொண்டாள்...
ஒவ்வொருவராக வந்து மதுவை அணைத்து நலம் விசாரிக்க, தன் கவலையை, வலியை மறைத்து கொண்டு வெளியில் சிரித்தாள் மது...
அனைவருக்கும் காபி கொண்டு வந்து தர, அந்த பயணத்திற்கு நம்ம ஊர் பில்டர் காபி அமிர்தமாக இருக்க ருசித்து குடித்தனர்...
பின் அகிலா தான் வாங்கி வந்திருந்த பொருட்களை கடை பரப்பி அண்ணனுக்கும் அண்ணிக்கும் எடுத்து கொடுக்க, நிகிலனும் சிரித்து கொண்டெ வாங்கி கொண்டான்....
பின் தனக்கு வேலை இருப்பதாக சொல்லி, மதுவின் பெற்றோர்களை மதியம் வரை இருக்க சொன்னான்..
அவர்கள் கிளம்புவதாக சொல்ல ட்ரைவர்கிட்ட சொல்லி காரில் அவர்களை அழைத்து சென்று விட சொல்லிவிட்டு கிளம்பி சென்றான்...
சிவகாமிதான் அவனை சாப்பிட்டு போக சொல்ல,
“இல்லமா.. அர்ஜென்ட் வேலை.. அவசரமா போகணும்... பை... “ என்று சொல்லி வேகமாக வெளியேறினான்...
தான் சமைத்ததை சாப்பிட பிடிக்காமல்தான் போகிறான் என்று புரிந்து கொண்ட மதுவின் முகத்தில் வேதனை வந்து போனது....அதற்குள் சமாளித்து கொண்டவள் அகிலாவிடம் கதை அடிக்க ஆரம்பித்தாள்...
தன் மருமகளின் முகத்தில் வந்து போன மாற்றத்தை குறித்து கொண்டார் சிவகாமி...
மதுவின் பெற்றோர்களை சென்று ரெப்ரெஸ் ஆகி வருமாறு அனுப்பி வைக்க, அகிலா தன் அறைக்கு சென்று விட்டாள்.. மது மட்டும் சமையல் அறையில் இருக்க,
உள்ளே வந்த சிவகாமி
“எப்படிடா இருக்க மது?? “ என்றார் அவளை ஆராய்ந்தவாறு....
“ஹ்ம்ம்ம் நல்லா இருக்கேன் அத்தை.. ஆனா நீங்க இல்லாம செம போர்... இனிமேல் எங்கயாவது போனால் என்னையும் கூட்டிகிட்டு போய்டுங்க... “ என்று சொல்லி சிரித்தாள்....
வெளியில் சிரித்தாலும் உள்ள அவள் ஏதோ மறைக்கிறாள் என்று புரிந்து கொண்டார் சிவகாமி...
“சரிடா... ஆமா எப்படி சமாளிச்ச இந்த பையன?? நடுவுல புயல் வேற வந்து தனியா கஷ்டபட்டியா?? ஏதாவது திட்டினானா?? “ என்றார் மீண்டும் அதே ஆராயும் பார்வையுடன்...
“சே சே அதெல்லாம் இல்லை அத்தை... ஒரு இரண்டு நாள் தான் வீட்டுக்கு வரலை.. மற்ற நாள் எல்லாம் நான் தனியா இருப்பேனு சீக்கிரம் வீட்டுக்கு வந்திட்டார்... “ என்றாள் தன் உதட்டை கடித்துகொண்டு தன் வேதனையை மறைத்தவாறு...
“ஹ்ம்ம்ம் சரிடா... எல்லாம் எடுத்து வை.. நானும் போய் குளிச்சிட்டு வர்ரேன்.. நம்ம ஊர் சாப்பாடு சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு.. “ என்றவாறு அவளை மேலும் நோண்டாமல் தன் அறைக்கு சென்றார்..
அவர் சென்றதும் மதுவின் கண்ணில் நீர் கரித்து கொண்டு வந்தது....
அங்கு இருந்த குழாயில் மீண்டும் முகத்தை தண்ணீர் அடித்து அழுந்த துடைத்தாள்... மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்து அழுத சுவடு எதுவும் தெரிய வில்லை என்று உறுதி செய்டு கொண்டு அவள் சமைத்த ஐட்டங்களை எடுத்து சென்று உணவு மேஜையில் வைத்தாள்....
அனைவரும் சாப்பிட வர, மதுவும் புன்னகைத்து எல்லோருக்கும் தட்டை எடுத்து வைத்து சுடச்சுட இட்லியையும் பொங்கலையும் வைத்து அதற்கான சட்னியையும் வைத்தாள்...
வருபவர்கள் பசியோடு வருவார்கள் என்று முன்பே இதெல்லாம் சமைத்து வைத்திருந்த தன் மகளை கண்டதும் சண்முகத்திற்கு நம்பவே முடியவில்லை...
காலை 8 மணி வரைக்கும் விரல் சூப்பி தூங்கிய தங்கள் மகளா இவ்வளவு பொறுப்பா இருக்கா என்று ..
அதையே சொல்லி அவளை பாராட்டினார் சண்முகம்...
“ஹ்ம்ம் யாரோட ட்ரெயினிங் ஆக்கும்?? இந்த சிவகாமி மருமகன சும்மா வா.. எலலாத்துலயும் என் மருமக கெட்டிக்காரி தான்... “ என்று மெச்சி கொள்ள, மது அழகாக புன்னகைத்தாள்...
பின் அகிலா தன் சிங்கப்பூர் மலேசியா கதைகளை எல்லாம் ஒன்று விடாமல் சொல்ல, அனைவரும் சிரித்து கொண்டே காலை உணவை முடித்தனர்....
மது மட்டும் அதிகம் சாப்பிடாமல் இரண்டு இட்லியோடு நிறுத்தி கொண்டதை கண்டு ஏதோ யோசனையானார் சிவகாமி...
எப்பவுமே விரும்பி சாப்பிடுபவள் இன்று சாப்பட்டை கொறிக்கிறாள் என்றால் மனதில் ஏதோ கவலை அறிக்கிறது என்று புரிந்தது...
சாப்பிட்டு முடித்ததும் மதுவின் பெற்றோர்கள் கிளம்ப, மதுவின் கண்களில் ஏதோ ஒரு ஏக்கம் வந்து போனது...
அவர்கள் அடிக்கடி அவளை பார்க்க வந்து விட்டு செல்வது வழக்கம்தான்... அப்பல்லாம் சிரிச்சுகிட்டே அவர்களை வழி அனுப்புவள் இந்த முறை ஏனோ தன் பெற்றோர்களை மிஸ் பண்ணுவதை போல இருக்க, எதோ ஒன்று அவள் உள்ளுக்குள் புரண்டது...
அதுவே அவள் கண்களில் ஏக்கமாக தெரிய, அதை கண்ட சிவகாமி
“மது... நீயும் வேணும்னா போய் ஒரு இரண்டு நாள் உன் அப்பா அம்மா வோட இருந்துட்டு வர்ரியா?? பாவம் ஒரு வாரம் தனியா சமாளிச்சிருக்க... அங்க போய் இரண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடு.. உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஷ் ஆ இருக்கும்.... “ என்றார்...
அதை கேட்டதும் திகைத்தாள் மது.. அவளுக்கும் அதே எண்ணம்தான்..
இங்கு இருக்கும் வரை அவனின் பாராமுகமும், அவன் பேசிய பேச்சுக்களும் தான் அடிக்கடி வந்து மனதை வலிக்க செய்கிறது.... அதோடு நான் இங்கு இருப்பதால் தான் அவன் வீட்டிற்கு வராமல் இருக்கிறான்.. நான் போய் ஒரு இரண்டு நாள் இருந்திட்டு வரலாம்..
எனக்கும் ஒரு மாற்றமாக இருக்கும்.. “ என்று யோசித்து கொண்டிருந்தாள்.. ஆனால் அதை எப்படி கேட்பது என்று தான் தயங்கி கொண்டிருந்தாள்...
ஆனால் தன் மாமியார் அதை கண்டு பிடித்து சொல்ல, அவளுக்கும் மகிழ்ச்சி...
“அத்தை.. நீங்க தனியா எப்படீ சமாளிப்பிங்க ?? “ என்றாள் தயங்கியவாறு..
“ அடடா... இங்க என்ன வேலை அப்படி இருக்க போகிறது... நாங்க 3 பேருக்கு சமைக்கிறது எல்லாம் பெரிய வேலையே இல்ல.. நான் பார்த்துக்கறேன்..
நீ போய் உங்கப்பா அம்மா கூட நல்லா கொஞ்சிட்டு சீராடிட்டு வா... என்னதான் புகுந்த வீட்ல நல்லா பார்த்துகிட்டாலும் பொறந்த வீட்டுக்கு போய் சீராடிட்டு வர்றதே ஒரு தனி சுகம் தான்... போய் என்ஜாய் பண்ணிட்டு வா.... “ என்று கண் சிமிட்டினார் சிவகாமி.....
“அத்தை.... அவர் கிட்ட... “ என்று இழுத்தாள்...
“அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டான்.. அப்படி கேட்டாலும் நான் சொல்லிக்கிறேன்.... நீ கிளம்புடா.. “ என்றார்...
“கரெக்ட தான்.. நான் இல்லாததுதான் அவருக்கும் நல்லது.. அதான் சொல்லிட்டானே மூஞ்சியிலயே முழிக்காதனு... சரி அவராவது என்னை பார்க்காமல் நிம்மதியா இருக்கட்டும்... “ என்று மனதுக்குள் சொல்லியவள் தன் அறைக்கு சென்று பெட்டியை எடுத்து தன் ஆடைகளை எடுத்து வைத்தாள்....
அப்பொழுதுதான் அவன் சொன்னது மீண்டும் நினைவு வந்தது.. உன் அப்பா அம்மா வர்ற வரைக்கும் இங்க இரு.. அதுக்கப்புறம் உன்னை அனுப்பிச்சிடறேன்... “ என்றானே... பேசாம அவன் அனுப்பு முன்னே நானே போய்டலாம்...
ஆமா... நானே இங்க புடிக்கலைனு போய்ட்டா ?? அவர் மேல எந்த பழியும் வராதுதான்.. அதோட அப்பாவும் என்னைத்தான் திட்டுவார்.. மாப்பிள்ளை னு அவர் எப்பவும் அவனை தூக்கி வச்சுக்கட்டும்...
ஆனால் என்ன காரண்ம் சொல்லி பிடிக்கலைங்கிறது? “ என்று யோசிக்க அவளுக்கு எதுவும் தோண்றவில்லை...எப்படி பார்த்தாலும் அவன் மேல் கோபபட முடியவில்லை அவளால்...
"சரி.. அதை அப்புறம் பார்த்துக்கலாம்.. இப்போதைக்கு அவன் வருவதகுள் இந்த வீட்டை விட்டு போய்டணும்... " என்று முடிவு செய்தவள் முக்கியமான சில ட்ரெஸ்களை மட்டும் எடுத்து பெட்டியில் வைத்தாள்....
அவளுடைய புத்தகங்கள் சிலவற்றையும் எடுத்து கொண்டு வெளியில் வர எத்தனிக்க, திரும்பி அறையில் இருந்த டேபிலில் அவனுடைய புகைபடத்தை கண்டாள்... அழகாக சிரிக்கா விட்டாலும் ஏனோ அந்த முகம் அவளுக்கு பிடித்த ஒன்று..
இனிமேல் அந்த உர்ரென்று இருக்கும் முகத்தை கூட பார்க்க முடியதே என்று நெஞ்சை பிசைந்தது அவளுக்கு...
"இருக்கட்டும்.. அவனாவது என் முகத்தை பார்க்காமல் சந்தோசமாக இருக்கட்டும்... " என்று தன்னையே சமாதானம் செய்து கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தாள்....
அவள் கொண்டு வந்த பெட்டியை கண்டு சிவகாமிக்கு யோசனையாக இருந்தது..
இரண்டு நாள் தங்கி விட்டு வரச்சொன்னால் இவள் இவ்வளவு பெரிய பெட்டியை எடுத்துட்டு வர்ராளே.. என்று...
"என்ன மருமகளே.. இரண்டு நாள் மட்டும் இருந்துட்டு வா னா இந்த வீட்டையே காலி பண்ணிட்டு போற மாதிரி பெட்டிய தூக்கிட்டு வர்ற?? " என்றார் சிரித்தவாறு....
"வந்து..என் புக்ஷ் கொஞ்சம் எடுத்துட்டு போறேன் அத்தை... எல்லாத்தையும் உள்ளயே வச்சுட்டேன்... " என்றாள் அவரை சமாளிக்க....
"ஹ்ம்ம்ம் சரிடா...இரண்டு நாள் முடிஞ்சதும் உடனே வந்திடணும்... " என்றார்....
மதுவும் சரி என்று தலை அசைத்து தன் மாமியாரை கட்டி அணைத்தாள்...
ஏனோ கண் கலங்கியது அவளுக்கு.. அகிலாவையும் கட்டி கொள்ள, அவளோ
"போங்க அண்ணி.. உங்க கிட்ட பேச நிறைய கதை இருக்கு.. நீங்க பாட்டுக்கு என்ன விட்டுட்டு போறீங்களே... " என்று முகத்தை நொடித்தாள் கோபமாக...
"அகி.. இரண்டு நாள் தான்.. சீக்கிரம் வந்திடுவேன்.. அதுக்குள்ள நீ உன் லீவ் அசைன்மென்ட் எல்லாம் முடிச்சு வச்சிடு.. நான் வந்ததும் நிறைய பேசலாம்... " என்று சமாளித்தாள் மது....
"திரும்ப வந்தால் தானே.. " என்று அவள் உள் மனம் சிரித்தது...
பின் பெட்டியை எடுத்து கொண்டு வெளியில் நடக்க , அந்த வாயிலை தாண்டும் பொழுது கால் நடுங்கியது அவளுக்கு...
இந்த வீட்டிற்கு திருமணம் முடித்து வரும்பொழுதும் இதே நடுக்கம்தான்...
அப்பொழுது இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல், இனிமேல் இங்கதான் இருக்க வேண்டுமே என்ற பயத்தில் நடுங்கியது...
இன்றோ இந்த வீட்டையும் பிடித்து இந்த வீட்டில் இருப்பவர்களையும் பிடித்து போய்விட, இந்த வீட்டை விட்டு போக வேண்டி இருக்கிறதே என்ற வேதனையில் அவள் கால் நடுங்கியது...
அந்த வாயிலை தாண்ட சில நொடிகள் தயங்கி நின்றாள் மது... பின் தன் மனதை கல்லாக்கி கொண்டு மீண்டும் ஒரு முறை திரும்பி அந்த வீட்டை ஒரு ஏக்கத்தோடு பார்த்து பின் தன் வலது காலை எடுத்து வைத்து வெளியில் சென்றாள்...
சிவகாமிக்குமே கஷ்டமாக இருந்தது...
“எப்பவுமே தன் கணவனை விட்டு பிரியக்கூடாது என்று சொல்லிய நானே இன்று வாய் தவறி அவளை பிரிச்சு வச்சுட்டனோ??...
நான் சொல்லாமல் இருந்திருந்தால் மது போகாமல் இருந்திருப்பாளோ ??... அவள் செய்வதை எல்லாம் பார்த்தால் அவள் மனதில் ஏதோ இருக்கிறது...
ஒரு வேளை அவசர பட்டுட்டமோ.. " என்று அவசரமாக யோசித்தார் சிவகாமி...
"ஹ்ம்ம் எதுவானாலும் எல்லாம் அந்த விதி படிதான் நடக்கும்... " என்று பெருமூச்சு விட்டார்...
எப்பவும் அந்த வேலன் பார்த்துக்குவான் என்று சொல்லி வந்த அவர் வாய் இன்று அந்த விதியை துணைக்கு அழைத்தது...
அதை கண்ட அந்த விதியும் கை கொட்டி சிரித்தது
“பார்த்தாயா வேலா..!! உன் பக்தையே உன்னை நம்பாமல் என்னை நம்ப ஆரம்பித்து விட்டாள்... இதிலிருந்தே தெரியவில்லை என்னை யாராலும் வெல்ல முடியாது என்று ..
வெளில சென்ற இந்த வீட்டோட மஹாலட்சுமி இனி இந்த வீட்டிற்குள் திரும்ப மாட்டாள்... இவர்கள் இருவரும் கஷ்ட படவேண்டும் என்பது தான் விதியாகிய நான் அவர்களுக்கு போட்டு கொடுத்த கட்டம்.. அதன் படிதான் அவர்கள் ஆடுவார்கள்...
"நீ தோற்று விட்டாய்.... ஹா ஹா ஹா.. " என்று கொடூர சிரிப்பை சிரித்தது அந்த விதி....
அதை கண்ட வேலனும் திரும்ப சிரித்தான்..
"ஹா ஹா ஹா.. அட மதி கெட்ட விதியே.... விதியையும் மதியால் வெள்ளலாம் என்ற பழமொழியை நீ படிக்கவில்லை போலும்...
இந்த உலகத்தை படைக்கும் பிரம்மாவிற்கும் உலகமெல்லாம் அஞ்சி நடுங்கும் என் தந்தை ஈசனுக்கும் பாடம் சொல்லி கொடுத்தவன் நான்.... என்கிட்டயே நீ சவால் விடுகிறாயா...??
உன்னை, இந்த விதியை என் மதியால் ஜெயித்து காட்டுகிறேன்... நான் என் பக்தைக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவேன்... எந்த ஆட்டத்திலும் நான் தோற்றதில்லை இதுவரை...
இந்த ஆட்டத்திலும் நானே ஜெயிப்பேன்... பொருத்திருந்து பார்.... " என்று சிரித்தான் அந்த சிங்கார வேலன்...
"ஹா ஹா ஹா.. பார்...நன்றாக பார்.. நீ தோற்க போவது நிச்சயம்...என் ஆழ்ந்த அனுதாபங்கள்... " என்று மீண்டும் இடியென சிரித்து மறைந்தது அந்த விதி.....
யார் ஜெயிக்க போகிறார்கள்?? விதியா ?? இல்லை வேலனின் மதியா ?? பார்க்கலாம்...
Comments
Post a Comment