தவமின்றி கிடைத்த வரமே-26


அத்தியாயம்-26
ர கண்ணால் அவனை பார்க்க, அவனோ இயல்பாக ரொம்ப நாள் பழகியவனை போல அவள் வயிற்றை மெதுவாக அழுத்தி கொடுத்து கொண்டிருந்தான்....

பின் ஓரளவுக்கு வலி குறைந்திருக்க

“யு பீல் பெட்டர் நௌ?? என்று வினவியவன் அவள் “ஹ்ம்ம்ம் “ என்று தலை அசைக்க,

“ சரி.. நீ இப்படியே கண்ணை மூடிட்டு இரு.. நான் வந்திடறேன்.. “ என்று அவசரமாக வெளியில் கிளம்பி சென்றான்...

அவன் சென்ற சில நிமிடங்களில் திரும்பி வந்தான் ..

வந்தவன் கையில் ஒரு பார்சல் மாதிரி சுற்றி இருந்ததை கொண்டு வந்து அவள் கையில் கொடுத்தவன்

“அக்கா இதை உனக்கு வாங்கி தர சொன்னா.... நீ பாத்ரூம் போய் இரு.. நான் போய் உனக்கு உன் ரூம்ல இருந்து வேற ட்ரெஸ் எடுத்துட்டு வர்ரேன் .. இப்போதைக்கு வேற ட்ரெஸ் மாத்திட்டு இந்த நாப்கின் ஐ யூஸ் பண்ணு...

இன்னும் ஏதோ பார்மாலிட்டிஸ் இருக்காம்.. அம்மாவும் அக்காவும் கிளம்பி வர்றாங்க இப்போ.. “ என்றான் இயல்பாக..

அதை கேட்டு அவளுக்குத்தான் தர்மசங்கடமாக இருந்தது...அவன் முன்னாால் எழுந்து பாத்ரூம் க்கு செல்ல சங்கோஜமாக இருந்தது.. அவள் தரையை பார்த்து நெழிவதை கண்டவன்

“ஹே... வசு.. டோன்ட் பி அன்கம்போர்ட்டபுள்.. இதெல்லாம் ஜஸ்ட் நம்ம பாடில நடக்கிற ஒரு சேன்ச்.. அவ்வளவுதான்.. டேக் இட் ஈசி....சரி வா.. நானே உன்னை தூக்கிட்டு போய் பாத்ரூம் ல விடறேன்.. “ என்றவன் அவள் மறுத்து வேண்டாம் என்று சொல்லு முன்னே அவளை தன் கைகளில் அள்ளி கொண்டு அருகில் இருந்த குளியல் அறைக்கு சென்றான்...

உள்ளே அவளை விட்டவன் அந்த பார்சலையும் அவளிடம் கொடுத்துவிட்டு, அவள் அறை இருக்கும் இடத்தை கேட்டு அறிந்து கொண்டவன் அவள் அறைக்கு சென்று முன்னால் இருந்த ஒரு ஆடையை எடுத்து கொண்டு வந்து கொடுத்தான்...

அவளும் தன் ஆடையை மாற்றிவிட்டு மலர் சொல்லியபடி அறிவுரைகளை பின்பற்றியவள் வெளி வர வெட்கமாக இருக்க குளியல் அறைக்குள்ளயே இருந்து விட்டாள்...

சிறிது நெரம் வெளியில் காத்திருந்தவன் அவள் வெளியில் வராமல் போக, குளியல் அறைக்கு அருகில் வந்தவன்

“வசு.. ஆர் யூ ஒகே ?? “ என்றான் அதே அக்கறையுடன்....

“ஐயோ... விட மாட்டேங்கிறானே...மானம் போச்சு.... “ என்று செல்லமாக அவனை திட்டி கொண்டே அவன் கேட்டதற்கு

“ஹ்ம்ம்ம் . “ என்று முனகியவள் மெல்ல கதவை திறந்து வெளியில் வந்தாள்...

அவளை அழைத்து சென்று மற்றொரு சோபாவில் அமர வைத்தவன் அவன் அன்னை சொல்லி இருந்த மாதிரி ஒரு கசாயத்தை ரெடி பண்ணி வைத்திருந்தான்...

அதை அவளிடம் கொடுத்து குடிக்க சொல்ல அதை கண்டதும் முகத்தை சுழித்தாள்..

“ஹே.. இது உடலுக்கு நல்லதாம்.... அம்மாதான் ரெசிபி சொல்லி செய்ய சொன்னாங்க... அவங்க சொன்ன படி நானே இதை தயார் பண்ணினேன்.... எங்க குட் கேர்ள் ஆ கண்ணை மூடிகிட்டு அப்படியே குடிச்சிடு பார்க்கலாம்.. “ என சிறு பிள்ளைக்கு சொல்வதை போல அவளிடம் கெஞ்சி கொஞ்சி அவளை அதை குடிக்க வைத்தான்...

மீண்டும் அவள் பெற்றோருக்கும் அண்ணனுக்கும் அழைக்க முயற்சி செய்ய, இன்னும் அது அணைக்க பட்டே இருந்தது...

பின் இனியவன் அவளுடன் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பாக பேசி கொண்டிருக்க, அவளும் கொஞ்சம் கொஞ்சமாக தன் வலியை மறந்து அவன் பேச்சை கேட்க ஆரம்பித்தாள்...

அவன் B.Tech Computer Science பைனல் இயர் படித்து கொண்டிருப்பதாகவும் கேம்பஸ் செலக்ஷன் நடந்து கொண்டிருப்பதால் மலர் திருமணத்திற்கு முதல் நாள் இரவு வருவதாக இருந்தது.....

அதற்குள் திருமணம் முன்னதாகவே நடந்து முடிந்திருக்க, சரி எல்லா செலக்சனும் முடிந்த பிறகு போகலாம் என்று அங்கயே தங்கிவிட்டான்....

அவன் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்ததையும் அவனிடம் யாரும் சொல்லி இருக்கவில்லை... முக்கியமான நேரத்தில் அவனை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என மலர்தான் சொல்லாமல் மறைத்து விட்டாள்...

.இப்பொழுது செலக்சன் எல்லாம் முடிந்திருக்க, இன்று காலைதான் வந்திருந்தான்... வந்ததும் தான் தன் தந்தை உடல்நிலை சரியில்லாமல் போனதும் பின் மலருக்கு மாப்பிள்ளை மாறி போய் வசீகரன் அவளை மணந்ததும் விளக்கமாக கேள்வி பட்டு வசீகரன் மீது ரொம்ப மரியாதை வந்தது அவனுக்கு..

தன் குடும்பத்தையே காப்பாற்றி விட்டாரே என பெருமையாக இருந்தது... .

அதனாலயே காலை உணவை முடித்ததும் கிளம்பி வந்துவிட்டான் தன் மாமனை பார்க்க...

அவன் சொல்லி முடித்ததும் அவன் B.Tech Computer Science என்றதும் ஆர்வமானவள்

“B.Tech Computer Science ஆ நீங்க ?? எந்த காலேஜ்...?? “ என்றாள் ஆர்வமாக..

“IIT-Bombay..” என்றான்..

அதை கேட்டு திகைத்தவள்

“வாட்?? IIT- Bombay வா?? Seriously ?? அது எவ்வளவு பெரிய IIT தெரியுமா?? இந்தியாவிலயே டாப் 3 IIT... அதுவும் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆ !!! ... சான்சே இல்ல... நிஜமாகவே அங்கதான் படிக்கறீங்களா?? “ என்றாள் கண்கள் விரிய...

அவளின் அந்த அகன்ற விழியில் ஒரு நொடி தொலைந்துதான் போனான்... ஆனால் அதற்குள் தன் தலையை உலுக்கி கொண்டவன் மெல்ல வெக்கபட்டு புன்னகைத்து

“ஹ்ம்ம்ம்ம் .. “ என்று தலையை மட்டும் ஆட்டினான்...

“வாவ்...!! சூப்பர்... அப்ப உங்க AIR (All India Rank) என்ன ?? கண்டிப்பா டாப் 50க்குள்ள இருக்கணும்... “ என்றாள் படபடக்கும் விழிகளில்..

அவனும் சிரித்தவாறே

“ஹ்ம்ம் AIR-25 “ என்றான் அதே வெக்கத்துடன்..

கொஞ்சம் கூட பெருமையும் கர்வமும் இல்லாமல்..

அதை கேட்டவள்

“ஓ.. மை காட்... AIR-25 ஆ?? “ என்று துள்ளி குதித்தாள் தன் நிலையையும் அவள் வலியையும் மறந்து...

“ஹே.. இதுக்கு எதுக்கு இவ்வளவு சந்தோஷபடற.. நானே பர்ஸ்ட் ரேங்க் எய்ம் பண்ணினேன்.. அது கிடைக்கலைன உடனே பயங்கர டிஸ்அப்பாய்ன்டட் ஆய்ட்டேன்...

அக்கா தான் என்னை கன்வின்ஸ் பண்ணினா... ஆமா.. நீயும் JEE எக்சாம்க்கு பிரிப்பேர் பண்ணிகிட்டிருக்க இல்ல.. அக்கா உன்னை பத்தியும் நிறைய சொல்லி இருக்கா..

ஆனா நான் கொஞ்சம் பிசியா இருந்ததால யார் கூடயும் போன்ல பேச முடியல... அதோட நேர்ல பார்த்தே பேசிக்கலாம்னு வந்திட்டேன்...

எப்படி போய்கிட்டிருக்கு உன் பிரிபரேசன்?? “ என்றான் அதே புன்னகையுடன்..

இன்னுமே அதிர்ச்சியில் இருந்து விலகாதவளுக்கு, அவன் தன்னை எப்படி உரிமையாக பெயர் சொல்லி அழைத்தான் என்ற ரகசியம் புரிந்தது....

“இந்த அண்ணி பார்.. என்னை பத்தி அவங்க தம்பிகிட்ட சொல்லிட்டு இவனை பத்தி என்கிட்ட சொல்லாமல் விட்டுட்டாங்களே..!! சே.. நானும் இவன் யார்னு தெரியாமல் ஏதேதோ திட்டி பல்ப் வாங்கிட்டேன்.. இந்த அண்ணிக்கு இருக்கு... “ என்று மனதுக்குள் திட்டி முடித்தவள் அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக

“ஹ்ம்ம்ம் ஏதோ போய்கிட்டிருக்கு.. எனக்கும் கம்ப்யூட்டர் சயின்ஸ்தான் படிக்கணும்னு ஆசை.... அதுவும் IIT-பாம்பே என்னுடைய் ட்ரீம் IIT.. அது இல்லைனா சுந்தர் பிச்சை படிச்ச IIT-கரக்பூர் ஆவது போய்டணும்..

அதான் ஹார்ட் வொர்க் பண்ணிகிட்டிருக்கேன்.. ‘ என்றாள் கண்கள் பளபளக்க

“குட்.. நல்லா ஹார்ட் வொர்க் பண்ணி படிச்சா, கண்டிப்பா க்ராக்(crack) பண்ணிடலாம்... ஏதாவது டவுட் னா என்கிட்ட கேள்.. “ என்றான் புன்னகைத்தவாறு...

அவனின் புன்னகையும் ஏனோ அவள் அண்ணனின் புன்னகையை விட வசீகரிப்பதை போல இருந்தது,

இத்தனை நாளாக தன் அண்ணன் புன்னகை மட்டுமே இந்த உலகத்தில் சிறந்தது என்று தன் தோழிகளிடம் பெருமை அடித்து கொண்டிருந்தவள் இன்று இனியவனின் புன்னகையை காண அப்படியே தலை குப்புற விழுந்தாள்....

அவன் புன்னகையையே ஓரகண்ணால் ரசித்து பார்க்க, அதற்குள் வெளியில் யாரோ வரும் அரவம் கேட்க, இனியவன் எழுந்து சென்று வெளியில் பார்த்தான்...

பனிமலரும் அவள் அன்னை ஜோதியும் வந்திருந்தனர்....

உள்ளே வந்த மலரை கண்டதும் எழுந்து ஓடி சென்று கட்டி அணைத்து கொண்டாள் வசுந்தரா....

மலரும் அவளை ஆதரவாக தட்டி கொடுத்து வாஞ்சையுடன் தடவி கொடுத்து அவள் முன் உச்சி நெற்றியில் முத்தமிட்டு

“ரொம்ப சந்தோஷம் டா.. வசு குட்டி... “ என்று புன்னகைத்தாள்..

வசுவும் கன்னம் சிவக்க தன் உதட்டை கடித்த படி, வெக்க பட்டு தலையை குனிந்து கொண்டாள்...அதை கண்ட மலர்.

“பாருடா.. இந்த வாயாடிக்கு கூட வெட்கம் வருவதை. “ என்று வம்பு இழுக்க

“போங்க அண்ணி... உங்க அளவுக்கெல்லாம் என்னால் பேச முடியுமா?? அதுவும் இல்லாமல் புதுசா வந்து இருக்கிறவர் முன்னாடி என் இமேஜை டேமேஜ் பண்ணாதிங்க.. “ என்றாள் ரகசியமாக..

“புதுசா வந்து இருக்கிறவரா ?? யாருப்பா அது?? “ என்று தேடி பார்க்க, வசுந்தரா இனியவனை கண்ணால் ஜாடை காட்ட

“ஓ.. இவனா.. இவனையெல்லாம் இருக்கிறவர் னு மரியாதை கொடுத்து பெரிய மனுசங்க லிஸ்ட் ல சேர்த்துட்டியா??

ஆள் உயரத்தை பார்த்து பெரிய மனுசன் னு எடை போட்டுடாத வசு.. இன்னும் எங்கம்மா முந்தானையை புடிச்சுச்கிட்டு சுத்திகிட்டிருக்கிறவன் தான்... இப்ப என்னவோ IIT ல படிக்கறேனு கொஞ்சம் காலரை தூக்கி விட்டுக்கறான்...” என்று சிரித்தாள் மலர்...

“ஹே மலர்.... இப்ப உன்கிட்ட அவ என் கதையை கேட்டாளா?? மா.. நீயும் அவளை பேச விட்டுட்டு வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க.. நீங்க வந்த வேலையை பாருங்க.. “ என்று தன் அக்காவை அதற்கு மேல் பேச விடாமல் தடுத்தான் சிரித்தவாறு......

ஜோதியும் சிரித்து கொண்டே வசுந்தராவின் அருகில் வந்தவர் அவர் கொண்டு வந்திருந்த ஸ்வீட் பாக்சை திறந்து அதில் இருந்த இனிப்பை எடுத்து வசுந்தராவுக்கு ஊட்டினார்... பின் அவளை பார்த்தவர்

“வசு கண்ணா... அம்மா அப்பா எப்ப வருவாங்க?? “ என்றார்..

“எப்பவும் இந்த நேரத்துக்கு வந்திருவாங்க ஆன்ட்டி... இன்னைக்கு என்னாச்சுனு தெரியலை.. சொல்லி வச்ச மாதிரி யாருடைய போனும் ரீச் ஆகலை.. இவர் மட்டும் வரலைனா?? “ என்றவளுக்கு தொண்டை அடைத்து கொண்டது..

அதுவரை மறந்து இருந்த பயம் மீண்டும் அவளை சூழ்ந்து கொண்டது.. அவள் கண்ணில் திரண்ட நீரை மறைக்க தலையை குனிந்து கொண்டாள்.. அதை கண்ட ஜோதி

“அடடா.. அதான் நாங்க இருக்கோம் இல்லை வசு கண்ணா.. அப்புறம் என்ன ?? அண்ணா அண்ணிக்கு சிக்னல் கிடைக்காமல் இருந்திருக்கும்.. மலர் அவங்களுக்கு மெசேஜ் போட்டு இருக்கா.. பார்த்த உடனே வந்திடுவாங்க... நீ ஒன்னும் கவலை படாத... “ என்றார் அவள் கன்னம் வருடி...

பின் மலரிடம் திரும்பியவர்

“மலர்.. நீ போய் பக்கத்து வீடல் இருக்கிற அந்த மாமியை கூட்டிகிட்டு வாயேன்.. “ என்றார் ஜோதி..

மலரும் சென்று அந்த மாமியை அழைத்து வர, அவரும் வசு ஆளான செய்தி கேட்டு மகிழ்ந்து போய் அவள் கன்னம் வருடி

“எப்படியோ .. கடைசியா அந்த ஈசன் கண்ணை திறந்துட்டான்...அதுவும் நல்ல நாள் இன்னைக்கு..கூடவே முறை செய்றவங்களும் பக்கத்துலயே இருக்காங்களே.. “ என்று பேசி கொண்டிருக்க, அதே நேரம் மீனாட்சியும் சுந்தரும் வீட்டிற்குள் வந்தனர்..

வீட்டில் இருப்பவர்களை கண்டதும் திகைத்து ஆச்சர்யமாக பார்க்க, அதற்குள் வசு ஓடி சென்று தன் அன்னையையும் கட்டி கொண்டாள்...

மீனாட்சி ஒன்றும் புரியாமல் முழித்தவாறு தன் மகளை தட்டி கொடுக்க,

“என்ன ஆச்சு அத்தை உங்க போனுக்கு ?? ..உங்க இரண்டு பேர்க்கும் போன் பண்ணா ஆப் ஆகி இருந்தது.. “ என்றாள் மலர்...

அப்பொழுதுதான் தங்கள் அலைபேசியை எடுத்து பார்க்க இருவருடையதுமே ஆப் ஆகி இருந்தது..

“அடடா ...க்ளாஸ் எடுக்கிறப்ப ஆப் பண்ணி வச்சது.... திரும்ப ஆன் பண்ண மறந்துட்டேன்... “ என்றவர்கள்

“என்னாச்சு?? எல்லாரும் வந்திருக்கீங்க... “ என்றார் குழப்பமாக.... மலர் நல்ல செய்தியை சொல்ல, மீனாட்சியும் சுந்தரும் மகிழ்ச்சியாகி போகினர்....

இதுவரை மனதை அழுத்தி கொண்டிருந்த பெரும் பாரம் விலகியதை போல இருந்தது.... முகம் தாமரையாக மலர, தன் மகளை கட்டி கொண்டார் மீனாட்சி...

பின் முகம் பூரிக்க அனைவரையும் வரவேற்றார்...அப்பொழுதுதான் அவர்கள் இனியவனை பார்க்க, அவனும் முன்னால் வந்து

“என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தை, மாமா.. “ என காலில் விழ அவன் முக சாயலில் அவன் மலரின் தம்பி என புரிய, முகத்தில் மலர்ச்சியுடன் அவர்களும் மனம் குளிர்ந்து அவனை தூக்கி ஆசிர்வதித்தனர்...

“சரி.. வாங்க ... நாம மத்த சடங்கையெல்லாம் பார்க்கலாம்... “ என்று அந்த மாமி அடுத்து செய்ய வேண்டியதை சொல்ல, வசுவை கை பிடித்து மீண்டும் குளியல் அறைக்குள் அழைத்து சென்றாள் மலர்...

மலரும் ஜோதியும் அவளுக்கு தலைக்கு தண்ணியை ஊற்றி இன்னும் சில சடங்குகளை செய்து அவள் குளித்து முடித்ததும் அவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த புது சுடிதாரை கொடுத்து அணிந்து கொள்ள சொன்னார்கள்..

அதற்குள் மலரின் மெசேஜை பார்த்ததும் வசியும் வந்து விட, அவனுமே மகிழ்ந்து போனான்...

தன் அண்ணனை கண்டதும் வெட்கபட்டு நாணி நின்றவளை மெல்ல அணைத்து கொண்டான் வசி...

அந்த மாமி முதல்நாள் கொடுக்கும் சில உணவு வகைகளை செய்யும் முறையை சொல்ல, மலர் அதை செய்து கொண்டு வந்து வசுந்தராவுக்கு ஊட்டி விட்டாள்...

அந்த வீட்டின் மருமகளாக பனிமலர் முன்னின்று எல்லாம் செய்ய, அந்த வீட்டில் இருந்தவர்கள் மனம் நிறைந்து இருந்தது..

அதிலும் வசீகரனுக்கு சொல்லவே தேவை இல்லை.... தன் மனைவியையே ஆசையாக பார்த்து கொண்டிருந்தான்..

தன் தங்கையின் முகத்திலும் தாயின் முகத்திலும் இருந்த மகிழ்ச்சி ஒரு புறம் இருக்க, அவள் அந்த வீட்டு மருமகளாக பொறுப்பாக எடுத்து செய்ய, அவளை அப்படியே அள்ளி அணைத்து கொள்ள துடித்தது அவன் உள்ளே...

ஆனால் அவளோ இவன் பக்கம் திரும்பவே இல்லை.. இவன் ஒருத்தன் அங்கு இருக்கிறான் என்றே கண்டு கொள்ளவில்லை...

அதை காணும் பொழுதுதான் கொஞ்சம் வாடியது அவன் உள்ளே... ஆனாலும் எல்லாம் சீக்கிரம் சரியாகிடும் என்று தன்னை தேற்றி கொண்டவன் தன் கேமிராவில் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை பதிவு செய்து கொண்டிருந்தான்...

பின் அனைவரும் அங்கயே இரவு உணவை முடித்து கலகலப்பாக பேசி கொண்டிருந்து விட்டு கிளம்பி சென்றனர்..

வசி மலரையே ஏக்கமாக பார்த்து கொண்டிருக்க, அவளோ கண்டு கொள்ளாமல் கிளம்பி சென்றாள்...

ஆனாலும் யாரும் அறியாமல் அவனை ஓரப்பார்வை பார்க்க தவற வில்லை..

வசியே அவர்கள் மூவரையும் வீட்டில் விடுவதாக சொல்ல காரை எடுத்து கிளம்பி சென்றான்..

வழக்கம் போல மலர் முதல் ஆளாக காரில் ஏறி பின்னால் அமர, அவளை முறைத்து கொண்டே ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான் வசி..

இனியவன் முன்னால் அமர, அவனுடன் பேசி கொண்டு வந்தான் வசி.. ஆனால் பார்வை மட்டும் பின்னாலயே இருந்தது..

எதேச்சையாக முன்னால் பார்த்தவள் அவன் பார்வையில் இருந்த ஏக்கத்தையும் ஆவலையும் காண அவள் உள்ளே படபடவென அடித்து கொண்டது...

கன்னங்கள் சிவக்க, தன் தாயிடம் திரும்பி இல்லாத கதையெல்லாம் இழுத்து வச்சு பேசி கொண்டிருந்தாள் மலர்...

ஜோதிக்கும் அவளின் கள்ளத்தனம் புரிய நமட்டு சிரிப்பை சிரித்து கொண்டு வந்தார்...

அவருக்குமே தன் மருமகனை நினைத்து கஷ்டமாக இருந்தது...

திருமணம் ஆகியும் இப்படி இருவரையும் பிரித்து வைத்து விட்டமே என்று வருத்தமாக இருந்தது....

அவருக்கும் இந்த ஆடி, புரட்டாசி என அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை.. ஆனாலும் வீட்டு பெரியவராக கனகம் பொண்ணை அனுப்ப மாட்டோம் என்று சொல்லி விட, அவரை மீறி மலரை அவள் புகுந்த வீட்டிற்கு அனுப்ப முடியவில்லை..

அதனாலயே திருமணம் முடிந்த பின் மலரை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார் ஜோதி....

ஆனால் மாப்பிள்ளை கண்ணில் தெரியும் அந்த ஏக்கத்தை காண அவருக்கு வருத்தமாக இருந்தது...

சீக்கிரம் இந்த ஆடியை முடித்து அவளை கொண்டு போய் அவள் புகுந்த வீட்டில் விட்டு விட வேண்டும் என்று எண்ணி கொண்டார்...

இனியவனுக்கும் வசீகரனை ரொம்பவுமே பிடித்து விட்டது ....

மலர் திருமணம் முடிந்த அன்றே சுருக்கமாக மலருக்கு திருமணம் நடந்து விட்டது எனவும் மாப்பிள்ளை வசீகரன் பெரிய கார்டியாலஜிஸ்ட் என தன் மகனிடம் பெருமையாக சொல்லி இருந்தார் ஜோதி....

அதை கேள்வி பட்டதுமே இணையத்தில் வசீகரனை பற்றி தேடி பார்க்க, அவனை பற்றி தெரிந்து கொண்டவன் ரொம்பவும் மகிழ்ந்து போனான்..

தன் அக்காவிற்கு நல்ல ஒரு வாழ்க்கை கிடைத்திருப்பதாக எண்ணி மகிழ்ந்தான்...

இன்று நேரில் பார்க்கவும் இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது.. அதோடு அக்கா புகுந்த வீட்டிலும் எல்லாருமே அன்போடு பழகியதை கண்டு, திடீரென்று நடந்த திருமணம் என்றாலும் தன் அக்கா நல்ல இடத்தில் தான் சேர்ந்திருக்கிறாள் என்ற மன நிறைவு அடைந்தான் இனியவன்....

அன்று இரவு படுக்கையில் விழுந்த நால்வருக்கும் மனம் கொள்ளா மகிழ்ச்சியாக இருந்தது....

மலருக்கு தன் கணவனின் கண்ணில் தெரிந்த அந்த பார்வை ஏதோ செய்ய, இப்பொழுது நினைத்தாலும் சில்லிட்டது..

வசிக்குமே அதே எண்ணம்தான்.. வழக்கம் போல தன் மனைவியின் புகைபடத்தை பார்த்து ரசித்தவாறு மார்போடு அணைத்து கொண்டு உறங்க முயன்றான்...

வசுந்தராவுக்கோ இன்னுமே ஏதோ ஒரு புது உலகத்தில் நுழைந்து விட்டதை போல மகிழ்ச்சியாக இருந்தது...

அவளை எல்லாரும் செல்லம் கொஞ்சியதும் வேண்டிய இனிப்பை வாங்கி கொடுத்ததும் தான் அவள் மகிழ்ச்சிக்கு காரணம் என எண்ணி கொண்டாள்...

ஆனால் அது மட்டுமா அவள் மகிழ்ச்சிக்கு காரணம் என அவள் ஆழ் மனம் கண் சிமிட்டி குறும்பாக சிரிக்க, அதை கண்டவள் கன்னம் சிவக்க, அவள் மகிழ்ச்சிக்கு காரணமானவன் முகம் கண் முன்னே வந்தது....

அந்த நெடியவன் முகத்தையும் வசீகர புன்னகையும் கண் முன்னே கண்டு சிலிர்த்தவள் கண் மூடி உறங்க முயன்றாள்....



Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!