தவமின்றி கிடைத்த வரமே-42



அத்தியாயம்-42 

றுநாள் காலை கண் விழித்த பனிமலருக்கோ கை கால்களை அசைக்க முடியவில்லை..

உடல் எல்லாம் வலி பின்னி எடுக்க, அப்பொழுது தான் நேற்று இரவு தன் கணவனின் முரட்டு அணைப்பு நினைவு வந்தது..

பார்க்க ரொம்ப அமைதியாக இருப்பவன் எப்பொழுதுமே தன் மனைவியை அணைப்பதில் வேகம் இருக்கும்.. அதிலும் நேற்று இருந்த கோபத்திற்கு அவன் கோபத்தையெல்லாம் அவளிடம் வேறு விதமாக கொட்டி இருந்தான்..

அவன் முரட்டு அணைப்புக்கு முதலில் மலர் எதிர்த்தாலும் பின் அவளுமே அவனுள் அடங்கி அவனுக்கு வளைந்து கொடுத்தது நினைவு வந்தது..

ஏனொ தன் கணவன் மீது கோபம் ஆத்திரம் எதுவும் வரவில்லை அவளுக்கு. மாறாக உதட்டில் மெல்லிய புன்னகை படர்ந்தது..

“அப்பா.. சரியான முரட்டு மெக்கானிக்..” என்று செல்லமாக திட்டிக் கொண்டவள் நேற்று இரவு முதலில் ஏன் அவனை தடுத்தாள் என்றதற்கான காரணம் நினைவு வர, கூடவே நேற்று இரவு சம்பவமும் நினைவு வர, பதட்டமாக தன் அலைபேசியை எடுத்து சுசிலா எண்ணிற்கு அழைத்தாள்..

அவரிடம் சில விளக்கங்களை கேட்ட பிறகுதான் நிம்மதியாக இருந்தது.. அதன் பின் மெல்ல எழுந்து சூடான நீரில் குளிக்க, அவள் அசதியெல்லாம் பறந்து அவள் மனதில் உற்சாகம் வந்து ஒட்டி கொண்டது..

பாரதி சொன்ன மாதிரி அவள் பிரச்சனைக்கு இன்று முடிவு கிடைத்துவிடும்.. அவளுக்கு நேற்றே தன் மீதான தன் கணவனின் காதலும் மித்ராவின் வேஷமும் புரிந்து விட்டதால் அவளால் இலகுவாக இருக்க முடிந்தது..

ஆனால் வசிக்கு இன்னும் நடந்தது தெரியாது என்பதால் தான் நேற்று அப்படி நடந்து கொண்டான்

அதோடு அவள் சொல்ல துடித்த தன்னிிலை விளக்கத்தையும் அவன் கேட்க மறுத்து விட்டான்..

“எப்படியோ.. இன்றோடு இந்த பிரச்சனைக்கு ஒரு முற்று புள்ளி வைத்து விட வேண்டும்.. அப்புறம் இருக்கு இந்த மெக்கானிக் க்கு.. என்னை படுத்தினதுக்கு வட்டியும் முதலுமா சேர்த்து வாங்கறேன்.. “ என்று மனதுக்குள் எண்ணி சிரித்து கொண்டாள் பனிமலர்...

அங்கு வசியோ இன்னும் தன் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திடாததால் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்..

காலையில் கண் விழித்தவன் தன் அருகில் துவண்டு கிடந்த பனிமலரை கண்டதும்தான் தன் தவறு புரிந்தது.. அவன் எவ்வளவு மோசமாக மிருகமாக நடந்து கொண்டிருக்கிறான் என புரிந்தது..

அதுவும் அவள் மறுக்க மறுக்க ஒரு பலாத்காரம் செய்வதை போல...

“சே.. நானா இப்படி மிருகமாக நடந்து கொண்டேன்.. ஒவ்வொரு முறையும் அவளின் சம்மதம் கேட்டுத்தானே அவளை அணைத்திருக்கிறேன்.. ஆனால் நேற்று அவள் மறுத்தும் ஏன் அப்படி நடந்து கொண்டேன்?..

என்னை நினைத்தாலே அருவெறுப்பாக இருக்கிறது.. “ என்று தன் கை முஷ்டியை இறுக்கி சுவற்றில் குத்தியபடி முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தான்..

அவள் முகத்தை பார்க்க முடியாத குற்ற உணர்வில் தான் சீக்கிரம் எழுந்து கிளம்பி மருத்துவமனைக்கு ஓடி வந்துவிட்டான்..

இங்கு வந்தும் அவன் மனம் அமைதியடைய மறுத்தது.. அவள் தனக்கு செய்த அநியாயம் ஒரு பக்கம் என்றால் அதற்கு பதிலாக அவன் அவளுக்கு செய்ததும் அதை விட பெரிய அநியாயம் தான் என மாறி மாறி கண் முன்னே வந்து அவனை அலைகழித்தது..

சிறிது நேரம் நடந்து கொண்டிருக்க, அவன் அறை கதவு தட்ட பட்டது...

தன்னை மறைத்து கொண்டு

“யெஸ் கம் இன்.. “ என்றான் இந்த நேரத்தில் போய் மருத்துவமனைக்கு யார் வந்தது என்று யோசித்தவாறு..

கதவை திறந்து கொண்டு ஷ்யாம் உள்ளே வந்தான்..

அவனை பார்த்ததும் வரவழைத்த புன்னகையுடன் காலை வணக்கத்தை சொல்லியவன்

“என்னடா ஷ்யாம்.. இவ்வளவு சீக்கிரம் ட்யூட்டிக்கு வந்திருக்க? “ என்றான் வசி ஆச்சர்யமாக

“ஹா ஹா ஹா குடும்பஸ்தன்.. நீயே இவ்வளவு சீக்கிரம் வேலைக்கு வந்திருக்கனா பேச்சுலர் நான் வர்றதுக்கு என்னவாம்.. “ என்று சிரித்தான் ஷ்யாம்

“வசி அன்று சீக்கிரம் வந்ததற்கான காரணமே வேறயே.. அதை எப்படி இவனிிடம் சொல்ல முடியும்? “ என எண்ணியவன் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தான் வசீகரன்..

ஷ்யாம் நேராக வசியை பார்த்தவன்

“வசி.. இப் யூ டோன்ட் மைன்ட்.. உன்கிட்ட கொஞ்சம் பெர்சனலா பேசலாமா ? “ என்றான் கொஞ்சம் தயக்கத்துடன்..

“டேய் ஷ்யாம்.. என்கிட்ட என்ன பெர்மிசன் எல்லாம் கேட்கிற ?. நான் முன்பே சொன்ன மாதிரி எனக்கு ஆதி, நிகில் மாதிரி நீயும் ஒரு பெஸ்ட் பிரண்ட்.. அதனால் எந்த தயக்கமும் இல்லாமல் தாராளமா எது வேணாலும் பேசு.. “ என்று சிரித்தான் தன்னை மறைத்து கொண்டு.

“ரொம்ப தேங்க்ஸ் டா... சரி.. நான் நேராகவே விசயத்துக்கு வர்ரேன்.. உனக்கும் சிஸ்டர்க்கும் என்னடா பிரச்சனை? “ என்றான் வசியை ஆழ்ந்த பார்வை பார்த்தவாறு

ஷ்யாம் வேற எதுவோ கேட்க போகிறான் என்று வசி எதிர்பார்த்திருக்க அவன் தன் குடும்ப விசயத்தை பற்றி கேட்க சில நொடிகள் திகைத்து பின் சிறிது யோசித்தவன்

“அதை விடுடா.. “ என்றான் வேதனையுடன்..

“டேய்.. நேற்று சிஸ்டர் என்னை பார்க்க வந்திருந்தாங்க. நடந்ததை எல்லாம் சொன்னாங்க.. “ என்று நிறுத்தி தன் நண்பனின் முகத்தை ஆராய்ந்தான்..

“வாட்? பனிமலர் உன்னை பார்த்தாளா? எங்க? எப்பொழுது? “ என்றான் அவசர யோசனையாக

“இங்க பக்கத்துல இருக்கிற காஃபி ஷாப் ல தான்..ஏன் கேட்கற? ”

“ எத்தனை மணிக்கு ? “ என்றான் வசி பரபரப்பாக

ஷ்யாம் நேரத்தை சொல்ல

“ஓ மை காட்.. அப்ப அவ உன்கூட தான் நேற்று சிரிச்சு பேசிகிட்டிருந்தாளா? ஷிட்.. அது தெரியாம நான் போய் அவள என்னவெல்லாம் பேசிட்டேன்.. சே.. “என்று மீண்டும் தன் கையை மடித்து அந்த டேபிலில் குத்திக் கொண்டான்...

அதை கேட்டு ஷ்யாம் இன்னும் அதிர்ந்து போனான்..

“டேய் வசி...நீ என்னடா சொல்ற? நீயா உன் மனைவி வேற ஒரு ஆணிடம் சிரித்து பேசினால் அது தப்பு என்பது ? “ என்றான் நம்ப முடியாமல்..

ஏனென்றால் கல்லூரி நாட்களில் பெண்கள் சுதந்திரத்தை பற்றி, ஆணாதிக்கத்திற்கு எதிராக நிறைய கருத்தரங்கில் பேசி இருக்கிறான் வசி

அவன் ஒரு ஆணாக இருந்தாலும் அவன் எப்பொழுதும் பெண்களுக்குத்தான் சப்போர்ட் செய்வான்..

பெண்கள் திருமணத்திற்கு பிறகும் அவர்களுடைய ஒரிஜினாலிட்டியை தொலைத்து விடாமல் அதை தொடர வேண்டும்.. திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் வேற்று ஆணிடம் சிரித்து பேசக்கூடாது என்பதை எதிர்த்து அவர்களும் இயல்பாக மற்றவர்களிடம் பழக வேண்டும்..

அப்படி ஒரு பெண் வெளியில் பழகும் பொழுது அதை அந்த கணவனும் வரவேற்க வேண்டும். எந்த சூழலிலும் கணவன் தன் மனைவியை நம்ப வேண்டும். அப்பொழுது தான் பெண்கள் திருமணத்திற்கு பிறகும் வெளியில் வருவர்.. என்பது பற்றி நிறைய தரம் பேசி இருக்கிறான்..

“அப்படி பட்ட அவனா தன் மனைவியை சந்தேகித்தது ? “ என ஷ்யாம் ஆச்சர்யமாக வசியை பார்த்தான்..

அவன் பார்வையை புரிந்து கொண்ட வசி, வேதனையுடன்

“சாரி டா.. ஷ்யாம்.. என்னை அப்படி பார்க்காத. ஏற்கனவே நான் செய்த ஒரு தவறுக்காக குற்ற உணர்வில் தவிச்சுகிட்டிருக்கேன்... இப்ப இதுவும் அந்த லிஸ்ட் ல் சேர்ந்து கொண்டது..

நான் பனிமலரை சந்தேகிக்கவில்லை.. அப்ப இருந்த கோபத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி விட்டேன்..

நாக்கை அடக்குவது எப்படி என்று முதலில் கற்று கொள்ள வேண்டும்..” என்றான் வேதனையுடன்..

அவன் வேதனையை கண்ட ஷ்யாம்க்கும் கஷ்டமாக இருந்தது..

“இட்ஸ் ஓகே டா.. சிஸ்டர் நல்ல டைப்.. நீ தப்பா பேசி இருந்தாலும் அதை பெரிதாக எடுத்து கொள்ள மாட்டாங்க..” என்று வசியின் அருகில் வந்தவன் அவனை மெல்ல அணைத்து கொண்டான் ஆறுதல் சொல்லும் விதமாக

“ஹ்ம்ம் எல்லாம் அந்த மிதுவால் வந்தது.. நானே குழப்பத்தில் இருக்க அவ வேற பனிமலரை பற்றி தப்பாக சொல்ல அதில் இன்னும் கொஞ்சம் தடுமாறி போய் விட்டேன்.. “ என்றான் வசி இன்னும் வேதனை குறையாமல்...

“ஹ்ம்ம் கரெக்ட் டா .. அதுதான் உன் பிரச்சனையே வசி...” என்றான் ஷ்யாம் தயக்கத்துடன்..

அதை கேட்டு வசி புரியாமல் தன் நண்பனை பார்க்க

“சரிடா. நான் நேரடியாகவே விசயத்துக்கு வர்ரேன்.. நான் இப்ப ஒரு உண்மையை சொல்ல போறேன்.. அதை கேட்டு நீ அதிர்ச்சியாக கூடாது.. “ என்று பீடிகை போட்டான் ஷ்யாம்..

“டேய் ஷ்யாம்... நானே ஒரு கார்டியாலஜிஸ்ட்.. எனக்கே நீ அட்வைஸ் பண்றியா? “ என்று நக்கலாக சிரித்தான் வசி தன் கவலையை பின்னுக்கு தள்ளி..

“ஹீ ஹீ ஹீ .. அதான.. அப்பப்ப அத மறந்திடறேன்.. சரி.. அதோடு நான் சொல்றதை கேட்டு நீ மித்ராவை வெறுத்து விடக் கூடாது.. ப்ராமிஸ்?.. “ என்றான் ஷ்யாம்..

“மிதுவா? எங்க பிரச்சனையில் அவள ஏன் டா இழுக்கற? “ என்றான் வசி

தன் நண்பியின் மீது கொஞ்சம் கூட சந்தேகபடாமல் மிது என்ற அழைப்பு மாறாமல் இன்று வரை அவள் நட்பை கண்ணியத்துடன் போற்றி வரும் வசியை நினைத்து பெருமையாக இருந்தது ஷ்யாம் ற்கு...

“சே.. இப்படி பட்ட நல்ல நண்பனுக்கு போய் எப்படி மித்ராவால் துரோகம் பண்ண முடிந்தது? “ என்று வேதனையாகவும் இருந்தது ஷ்யாமிற்கு..

“ஹ்ம்ம்ம் எல்லாம் சொல்றேன்.. நீ முதல்ல ப்ராமிஸ் பண்ணு.. “ என்றான் ஷ்யாம்.

“ஹ்ம்ம்ம் சரிடா.. ப்ராமிஸ்.. எந்த காரணத்துக்காகவும் நான் மிதுவை வெறுக்க, ஒதுக்க மாட்டேன்.. இப்ப சொல்.. “ என்றான் வசி ஆர்வமாக..

“வந்து... உன் பிரச்சனைக்கு மூல காரணமே மித்ரா தான் டா... “ என்றான் ஷ்யாம்...

அதை கேட்டு அதிர்ந்த வசி

“வாட்?? “ என்று அவன் அமர்ந்து இருந்த இருக்கையில் இருந்து வேகமாக அதிர்ந்து எழுந்தான் வசீகரன்...

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!