காதோடுதான் நான் பாடுவேன்-35
அத்தியாயம்-35
தன் பெற்றோர்களுடன் தன் பிறந்த வீட்டிற்கு வந்த மதுவந்தினி தன் பெட்டியை கொண்டு போய் அவள் அறையில் வைக்க, அவளுடைய அறையே புதிதாக இருந்தது அவளுக்கு...
இங்குதான் 21 வருடங்களாக வாழ்ந்திருக்கிறாள்....
ஆனால் திருமணம் ஆகி இந்த 6 மாதத்தில் தான் வளர்ந்த தன் அறையே அந்நியமாக தெரியும் அளவுக்கு தன் கணவன் வீட்டாரும் கணவன் மேல் வைத்திருந்த அன்பும் காதலும் அவளை மாற்றியிருந்தது.....
ஆனால் என் அன்பை, காதலை அவன் கடைசி வரைக்குமே புரிந்து கொள்ளவில்லையே....
என்னை இன்னுமே நம்பவில்லையே.. என்னை ஒரு நாடகக்காரி, வேசக்காரி என்றுதானே நினைக்கிறான்... “ என்று எண்ணும் பொழுதே அவள் கண்கள் கரித்தன...
அதோடு அவன் வீசிய சொற்கள் வேறு அவ்வபொழுது அம்பாக மாறி அவள் இதயத்தைக் குத்தி கிழிக்க, அப்படியே கட்டிலில் படுத்து விட்டாள்...
திருமணம் ஆகி இத்தனை நாள் பிறந்த வீட்டை பிரிந்து இருந்த ஏக்கம் எதுவும் இல்லாமல் புகுந்த விட்டில் ஒட்டி கொண்ட தங்கள் மகள் இன்று தானாக விரும்பி இங்கு வரவும் சண்முகத்திற்கும் சாரதாவுக்கும் சந்தோசமாக இருந்தது..
என்னதான் புகுந்த வீடு பிடித்தாலும் அவளுக்கு பிறந்த வீட்டு பாசம் அப்படியேதான் இருக்கு என்ற சிறு கர்வம் அவர்களுக்கு...
ரொம்ப நாள் கழித்து வந்திருக்கும் தங்கள் மகளை நல்லபடியா கவனிச்சுக்கணும்..
அவளுக்கு பிடித்ததை எல்லாம் சமைத்து தரணும் என்று தன் மனைவிக்கு கட்டளை இட்டவர் தன் பிரயாண கழைப்பையும் மறந்து ஆடையை மாற்றி கொண்டு வெளியில் கிளம்பி விட்டார் மதிய சமையலுக்கு தன் மகளுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கி வர ...
சாரதாவும் வீட்டை எல்லாம் ஒரு முறை பெருக்கி ஒழுங்கு பண்ணி வைத்து விட்டு தன் மகளை காண அவள் அறைக்கு சென்றார்....
உள்ளே சென்றதும் தன் மகளின் கோலத்தை கண்டதும் அதிர்ந்து நின்றார் சாரதா....
கட்டிலில் மது சுருண்டு படுத்திருந்தாள்.. கன்னத்தில் கண்ணீர் வழிந்திருக்க, கண்களில் இன்னும் இரண்டு துளி கண்ணீர் தேங்கி நின்றது...
அதை கண்ட சாரதாவுக்கு உள்ளுக்குள் பிசைந்தது...
“என்னாச்சு இந்த பொண்ணுக்கு?? எப்பவும் பட்டாம் பூச்சியாக பறந்து மலர்ந்து சிரிப்பவள் இப்படி சுருண்டு படுத்து விட்டாளே.. அதோடு அழுகை வேறு... என்னாச்சு?? “ என்று அவசரமாக யோசித்தவளுருக்கு அப்பொழுதுதான் புரிந்தது.... தன் மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்குமான ஒதுக்கம்...
மது ஏர்போர்ட் வராத பொழுதே அவருக்கு ஏதோ சந்தேகமாக இருந்தது...
வீட்டிற்கு வந்த பொழுதும் எப்பவும் தன் கணவனை கண்டால் வரும் அந்த ஒளி தன் பெண்ணிடத்தில் மிஸ்ஸிங்... அவள் தன் கணவன் பக்கமே திரும்பவில்லை...
அவனுமே இவள் பக்கம் திரும்பாமல் அதுவும் அவளை தவிர்ப்பதற்காகவே அவசரமாக கிளம்பி சென்றதை போல இருந்தது...
அதோடு சம்மந்திக்கும் ஏதோ தெரிந்திருக்கிறது.. அதனால்தான் அவளை இங்க அனுப்பி வைத்திருக்கிறார் என்று புரிய என்னவாக இருக்கும்?? என்று யோசித்தார்....
எதுவானாலும் கணவன் மனைவி பிரச்சனை அவர்களே சரி செய்து கொள்ளட்டும்.. நாம் எதுவும் தலையிடக் கூடாது என்று முடிவு செய்தவர்
“மது கண்ணா....” என்று அழைத்தவாறு அவள் அருகில் சென்றார்...
தன் அன்னையின் குரலை கேட்டதும் அவசரமாக தன் கண்ணை துடைத்து கொண்டவள், மெதுவாக எழுந்து அமர்ந்தாள் வரவழைத்த புன்னகையுடன் ....
“என்னாச்சுடா?? ஏன் வந்ததும் படுத்துகிட்ட?? “ என்றவாறு தன் வேதனையை மறைத்து கொண்டு அவள் அருகில் சென்று அமர்ந்தார்.. ...
“ஹ்ம்ம்ம் கொஞ்சம் டயர்டா இருந்தது மா.. .அதோடு என் பெட் ஐ பார்த்ததும் அப்படியே படுத்துக்கணும் போல இருநந்தது.. அதான்... “ என்று சமாளித்தாள்....
“மா... உன் மடில கொஞ்ச நேரம் படுத்துக்கவா?? “ என்றாள் குழந்தையாக
“என்னடி இது?? பெர்மிசன் எல்லாம் கேட்டுகிட்டிருக்க?? வாடா மா..” என்க
மதுவும் தன் அன்னையின் மடியில் தலை வைத்து அவர் இடுப்பை கட்டி கொண்டாள்...
எவ்வளவுதான் பிள்ளைகள் வளர்ந்தாலும் அன்னை மடி தரும் சுகமே தனிதான்...
மது அந்த சுகத்தை கண் மூடி அனுபவிக்க, சாரதாவும் அவள் தலையை மெல்ல வருடி கொடுத்து மறு கையால் அவள் முதுகை தட்டி கொடுத்தார்....
அந்த சுகத்தில் கண்ணை மூடியவள் அப்படியே உறங்கி விட்டாள்....
சாரதாவும்
“சீக்கிரம் இவள் பிரச்சனை எதுவானாலும் தீர்த்து வச்சுடு முருகா. என் பொண்ணு எப்பவும் போல சிரிச்சுகிட்டே இருக்கணும்...” என்று வேண்டி கொண்டே ஒரு தலையணையை எடுத்து அவள் தலையை தூக்கி வைத்து அவளை நேராக படுக்க வைத்து அறை கதவை மெல்ல சாத்திவிட்டு வெளி வந்தார்....
சண்முகம் திரும்பி வந்திருக்க, அவரிடம் மது உறங்குவதாக சொல்லி அவளை எழுப்ப வேண்டாம் என்று சொல்லி விட்டு சமையலை ஆரம்பித்தார்...
சண்முகமும் தன் மனைவிக்கு உதவி செய்ய தன் மகளுக்காக ஒரு விருந்தே ரெடி பண்ணினர் இருவரும்
இதுவரை சமையல் அறை பக்கமே வராத தன் கணவன் அவர் பொண்ணுக்காக விழுந்து விழுந்து உதவி செய்வதை கண்டு சிரிப்பு வந்தது சாரதாவுக்கு...
அவரும் உள்ளுக்குள் சிரித்து கொண்டே சமைத்து கொண்டிருந்தார்...
மதியம் இரண்டு மணி அளவில் கண் விழித்த மது நேரத்தை பார்க்க
“இவ்வளவு நேரமா தூங்கினேன்?? அதுவும் மதியம் உறங்க கூடாது என்று அப்பா திட்டுவாரே...
அச்சோ நல்லா வாங்கி கட்ட போறேன்... “ என்று வேகமாக எழுந்து குளியல் அறைக்குள் சென்று முகத்தில் நீரை அடித்து கழுவினாள்...
பின் தலையை இலேசாக வாரி கொண்டு முகத்திற்கு சிறு ஒப்பனை செய்து கண்ணில் அழுத சுவடு தெரியாமல் மறைத்து கொண்டு வெளியில் வந்தாள்...
தன் கவலை பெற்றோருக்கு தெரிய வேண்டாம்... அவர்களாவது நான் நல்லா இருப்பதாக நினைச்சுகிட்டு சந்தோசமாக இருக்கட்டும்...என்று முடிவு செய்திருந்தாள்...
சமையள் அறைக்கு சென்றவள் சாரதா கடைசியாக அப்பளம் பொரித்து கொண்டிருக்க அவரை பின்னால் இருந்து செல்லமாக கட்டி கொண்டவள்
“சாரி மா...கொஞ்சம் தூங்கிட்டேன்...எழுப்பி இருக்கலாம் இல்லை... இவ்வளவு ஐடெம்ஸ் ம் நீங்க தனியாவா பண்ணுனீங்க?? எதுக்குமா இவ்வளவு?? “ என்று கொஞ்சினாள்...
சாரதாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது... திருமணத்திற்கு முன் சிறு பிள்ளையாக எப்பொழுதும் கொஞ்சி கொண்டும் சிணுங்கி கொண்டும் சமையல் அறைக்குள் கூட வந்திராதவள் இன்று இவ்வளவு பொறுப்பாக பேசுவதை கண்டு...
அந்த கொஞ்சலும் சிணுங்களும் காணாமல் போய் இப்பொழுது ஒரு குடும்பத்தின் மருமகளாக அதுவும் மூத்த மருமகளுக்கான பொறுப்போடு இருப்பது புரிந்தது....
தன் மகளை உள்ளுக்குள் மெச்சி கொண்டே சிரித்தவாறு வேலையை தொடர்ந்தவர் ஏதோ நினைவு வர,
“மது கண்ணா.... உன் மாமியார் போன் பண்ணியிருந்தாங்க... நீ தூங்கி கிட்டு இருந்ததால உன்னை எழுப்ப வேண்டாம்ன் னு சொல்லிட்டாங்க.. போய் அவங்க கிட்ட பேசு...” என்றார்...
அப்பொழுதுதான் நினைவு வந்தது.. அவரிடம் இங்கு வந்த பிறகு இன்னும் பேசவில்லையே என்று...
உடனே தன் அறைக்கு சென்று தன் அலைபேசியை எடுத்து தன் கவலையை மறைத்து கொண்டு அவரிடம் சிறிது நேரம் செல்லம் கொஞ்சி விட்டு பின் மீண்டும் ஹாலுக்கு வந்தாள்..
அங்கு சண்முகமும் சாரதாவும் டைனிங் டேபிலில் அவளுக்காக காத்து கொண்டிருக்க, நேராக அங்கு சென்றவள் தன் அன்னை ஆசையாக சமைத்ததை உண்ண ஆரம்பித்தாள்...
சண்முகமும் சாரதாவும் தங்கள் சுற்றுலாவை பற்றி சிலாகித்து பேசினர்.. இதை ஏற்பாடு பண்ணி கொடுத்த தங்கள் மருமகனை புகழ்ந்தவாறு....
சாரதா ஒரக்கண்ணால் தன் மகளை பார்க்க அவளோ எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் அவர்கள் சொல்லும் கதைகளுக்கு சிரித்து கொண்டிருந்தாள்...
பின் மூவரும் கலகலப்பாக பேசி கொண்டிருக்க, மதுவும் சிரித்து கொண்டிருந்தாள்..
என்னதான் வாய் அவர்களுடன் சிரித்து கொண்டிருந்தாலும் அவள் மனம் அப்பப்ப எதையோ நினைத்து கலங்குவது அந்த தாயின் கண்களில் இருந்து தப்பவில்லை....
“என்னவாக இருக்கும்?? “ என்று மீண்டும் யோசனையுடனே இருந்தார் சாரதா...
மாலை மூவரும் கிளம்பி அருகில் இருக்கும் அந்த முருகன் கோவிலுக்கு சென்றனர்...
வழியில் சந்திப்பவர்கள் எல்லாம் மதுவை பற்றியும் அவள் கண்வனை பற்றியும் விசாரிக்க எல்லோரிடமும் சிரித்து வைத்தாள்...
சாமி தரிசனம் முடித்து அவர்கள் வழக்காமக செல்லும் அந்த ரெஸ்டாரென்ட்க்கு சென்றனர் ...
மாதம் ஒரு முறை இந்த மாதிரி குடும்பத்துடன் வந்து இந்த ஹோட்டலில் சாப்பிடுவது வழக்கம்..
மது திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு போன பிறகு பெரியவர்கள் இருவருக்கும் அவ்வளவாக இங்கு வர பிடிக்கவில்லை..
எங்கு திரும்பினாலும் தன் மகளுடன் சிரித்து பேசியது நினைவு வரும்.... முதல் இரண்டு மாதங்கள் நாட்களை கடத்துவது பெரும் கஷ்டமாக இருந்தது அவர்களுக்கு....
இப்பொழுது தான் கொஞ்சம் பழகி இருந்தது...
மீண்டும் தங்கள் மகள் தங்களுடன் சேர்ந்து இருக்க, பழைய நினைவுகளை பேசியவாறே அந்த உணவகத்திற்கு சென்று எப்பொழுதும் மது விரும்பி சாப்பிடும் உணவு வகைகளை அவள் கேட்காமலே ஆர்டர் பண்ணினார் சண்முகம்...
மதுவுக்கும் கஷ்டமாக தான் இருந்தது அந்த நாட்களை நினைத்து ..
எவ்வளவு ஜாலியான மகிழ்ச்சியான நாட்கள் அவை.. தந்தையின் கைகளை பிடித்து கொண்டு அவர் தோளில் சாய்ந்து கொண்டு எந்த கவலையும் இல்லாமல் பட்டாம் பூச்சியாக சுற்றி வந்த நாட்கள்....
“ஏன் தான் இந்த திருமணம் என்ற ஒன்றை கண்டு பிடித்து இப்படி பொண்ணுங்க அப்பா அம்மா கூட காலம் முழுவதும் ஜாலியாக இல்லாமல் பாதியில் பிரித்து அவளை முன் பின் தெரியாத ஒரு வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்களோ ??” என்று உள்ளுக்குள் புலம்பி கொண்டே பழைய நினைவுகளை மனதினில் அசை போட்டாள்...
சாப்பிட்டு முடித்ததும் சண்முகம் தன் மகளின் முகத்தை பார்க்க, அவளோ அமைதியாக அமர்ந்திருந்தாள்..
அவருக்கே ஆச்சரியம்.. இங்க வரும்பொழுதெல்லாம் அவள் ஐஸ்கிரீம் கேட்டு அடம் பிடிப்பாள்...
அவளுக்கு ஐஸ்கிரீம் ஒத்து கொள்ளாது சளி பிடிக்கும் என்று அவர் வாங்கி கொடுக்க மறுக்க அவரிடம் கெஞ்சி கொஞ்சி தன் காரியத்தை சாதித்து கொள்வாள் மது...
ஆனால் இன்று எதுவும் கேட்காமல் அமைதியாக இருக்க, அவருக்கே வேதனையாக இருந்தது....
“இப்படி தன் மகள் தன் இயல்பை தொலைத்து விட்டாளோ?? இல்லை பக்குவமாகி விட்டாள்..திருமணம் அவளை பக்குவ படுத்திவிட்டது ... “ என்று மனதை தேற்றி கொண்டார்...
பின் மதுவிடம் திரும்பி
“என்னடா மது கண்ணா?? உன்னோட பேவரைட் ஐஸ்கிரீம் ஐ மறந்துட்டியே... ஆர்டர் பண்ணவா?? “ என்று சிரித்தார்...
அவளுக்குமே அப்பொழுதுதான் அது ஞாபகம் வந்தது.. அவளும் சிரித்து கொண்டே
“ஆனாலும் நீங்க ரொம்ப மாறிட்டீங்க பா... இப்படி நான் கேட்காமலயே வாங்கி கொடுக்கிற நல்ல அப்பாவா...
ஆனால் எனக்கு நான் கேட்டும் மறுத்து என்னை மிரட்டி கொஞ்சிய அந்த பேட் அப்பாதான் பிடிச்சிருக்கு.... “ என்றாள் கண் சிமிட்டி...
அதை கேட்டு அவரும் சிரித்து கொண்டே அருகில் அமர்ந்திருந்தவள் தலையை வாஞ்சையுடன் தடவி கொடுத்தார் கண்ணில் ஓரம் இலேசான ஈரத்துடன்...
மதுவின் கண்களுமே கலங்கியது.... சாரதா தான் பேச்சை மாற்றி அவர்களை இயல்பாக்கினார்.....
மூவரும் உணவை முடித்து நடந்தே வீட்டிற்கு வந்தனர்...
அந்த நிலா வெளிச்சத்தில் தன் தந்தையின் கையை பிடித்து கொண்டு அவரை ஒட்டி நடந்து கொண்டே வந்தாள்....
அவள் மாமியார், நாத்தனார், அப்புறம் அவள் பயிற்சி வகுப்பு பற்றியும், அதில் உதவும் ஜெயந்த் , அவள் விளையாடும் பேட்மின்டன், ரமணி, கௌதம், அந்த இல்லம் என்று எல்லா கதைகளளையும் கண்கள் மிளிர பேசி கொண்டே வந்தாள் மது...
ஏன் கௌதம் ன் மனைவி வசந்தியை பற்றி கூட சொன்னாள்...
எங்கயுமே தன் கணவனை பற்றி எதுவும் பேசாதது இருவருக்குமே யோசனையாக இருந்தது...
வழக்கமாக திருமணம் முடிந்த சில மாதங்கள் , ஏன் சில வருடங்கள் வரைக்கும் பொண்ணுங்க தன் கணவனை பற்றிதான் பெருமை அடித்து கொள்வார்கள்...
ஆனால் தங்கள் மகள் மருமகனை பற்றி வாயே திறக்கலையே... அப்படி என்றால் அவர்களுக்குள் ஏதோ சரியில்லையோ?? என்று கவலையாக இருந்தது இருவருக்கும்...
வீட்டை அடைந்ததும் சோர்வாக இருப்பதால் சீக்கிரமே தூங்க சென்றனர் அவள் பெற்றோர்கள்.. அவளும் அவர்களுக்கு இரவு வணக்கம் சொல்லி தன் அறைக்கு வந்தவள் அவளுடைய பேவரைட் நைட்டிக்கு மாறினாள்...
திருமணத்திற்கு முன், இரவில் நைட்டி அணிந்தால் மட்டுமே அவளுக்கு பிரியாக இருக்கும்... தூக்கம் வரும்...
ஆனால் அங்கு கணவன் வீட்டில் அகிலா அறையில் உறங்கிய ஒரு நாள் மட்டுமே அதை அணிந்தது.. அதன் பின் தங்கள் அறைக்கு மாறிய பின் தன் கணவன் முன்னே அணிய கூச்சமாக இருக்க, அதை தவிர்த்து விட்டாள்....
இப்பொழுது நினைக்க ஆச்சர்யமாக இருந்தது...
“எப்படி இதை மறந்தேன் ??.. எப்படி இது இல்லாமல் தூங்கினேன்..?? “ என்று யோசித்து கொண்டே தன் படுக்கையில் விழுந்தாள் மது....
இத்தனை நாட்கள் அங்கு கல்லாக இறுகி இருந்த சோபாவில் உறங்கியவளுக்கு மிருதுவாக அவளை உள்வாங்கும் அந்த மெத்தை சுகமாக இருந்திருக்க வேண்டும்...
அதுவும் இத்தனை வருடங்களாக அனுபவித்து உறங்கிய மெத்தை அது... ஆனால் ஏனோ அது அவளுக்கு ரசிக்கவில்லை...
மாறாக அவள் மனம் அந்த சோபாவின் சுகத்தை தேடியது...ஏன் என்று யோசிக்க
அப்பொழுதுதான் புரிந்தது அவள் தேடுவது அந்த ஷோபாவை அல்ல.. அதில் படுத்து கொண்டே முகரும் தன் கணவனின் வாசத்தை என்று...
இரவில் சில மணி நேரம் மட்டுமே அவன் முகத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தாலும், அவள் உறக்கத்தின் நடுவில் எழுந்து அவன் உறங்கும் அழகையே ரசித்திருப்பாள்...
உறங்கும் பொழுதும் அடம் பிடிக்கும் குழந்தையாக முகத்தில் இறுக்கத்துடனே உறங்கும் அவனை ரசித்து கொண்டே மீண்டும் படுத்து உறங்குவாள்...
இன்று அது இல்லாமல் போக அவளுக்கு அந்த பஞ்சு மெத்தை பிடிக்கவில்லை...
அவளுக்கு தன் கணவன் முகத்தை பார்க்க வேண்டும் போல இருந்தது ...
உடனே தன் அலைபேசியை எடுத்து அதில் இருந்த போட்டோ கேலரிஸ் ஐ திறந்தவள் அவள் சேகரித்து வைத்திருந்த அவன் புகைபடங்களை பார்வையிட்டாள்.....
அவள் மனம் அவன் மேல் இருந்த காதலை உணர்ந்து கொண்டதில் இருந்தே அவனுடைய் போட்டோ ஒவ்வொன்றையும் கலெக்ட் பண்ண ஆரம்பித்திருந்தாள்...
அவனுடைய சிறு வயது புகைப்படத்தில் ஆரம்பித்து அவர்களின் திருமணத்தில் பட்டு வேஷ்ட்டியில் கம்பீரமாக மணமேடையில் வீற்றிருந்ததும் அவளுக்கு தாலி அணிவித்த தருணங்களும் அதில் அழகாக பதிவாகியிருந்தது....
அவர்களுடைய திருமண ஆல்பத்தில் இருந்து சில புகைப்படங்களை தன் அலைபேசிக்கு போட்டோ எடுத்து வைத்திருந்தாள்...
அவன் அவளுடைய கல்லூரியில் பேசியது, அவளுக்கு மெடல் அணிவித்தது, போலிஸ் யூனிபார்மில் மிடுக்காக நடந்து வருவது , தன் கணவனுடன் முதல் முதலாக தனியாக காரில் சென்றது, அகிலாவை அவன் கட்டி அணைத்து கொண்டது, அப்புறம் ஆதியுடன் இணைந்து டான்ஸ் ஆடியது என்று ஏகபட்ட கலெக்ஸன்ஸ் வைத்திருந்தாள்....
ஒவ்வொன்றையும் ஆசையாக பார்த்து கொண்டு வந்தளின் பார்வை கடைசியாக அந்த புயல் அடித்த இரவு அன்று அவன் கையில்லாத டீசர்ட் அணிந்து தன் தலையை துவட்டியவாறே மாடியில் இருந்து இறங்கி வரும் அந்த கம்பீராமான அழகை தன் அலைபேசியில் பதிந்திருந்தாள் அவன் அறியாமல்...
அந்த புகைபடத்தின் மீது பார்வை சென்று நிக்க, உடனே அன்று இரவு நடந்த சம்பவங்கள் நினைவு வர, இப்பொழுதும் அவள் கன்னங்கள் தானாக சிவந்தன...
அன்று இரவு என்னிடம் எவ்வளவு அன்பாக நடந்து கொண்டான்...அந்த விருமாண்டி உள்ளேயும் இப்படி ஒரு மென்மையா என்று திகைத்து இருந்தாள்....
அதே அடுத்த நாள் தன்னிடம் அவன் முரட்டு தனமாக நடந்து கொண்டதும் நினைவு வந்தது..
முதல் நாள் இனிக்க இனிக்க தன்னை ஆட்கொண்டவன் அடுத்த நாள் வலிக்க வலிக்க தன்னை தீண்டியதும் காய படுத்தியதும் நினைவு வர, ஏனோ அவனின் அந்த முரட்டுதனமான அணைப்பும் கூட அவளுக்கு பிடித்துதான் இருந்தது...
அன்றும் அவள் எதுவும் அவனை எதிர்த்து போராட வில்லைதான்... அவன் அவளை காயபடுத்திய பொழுதும் அதை அவள் ரசித்தது இப்பொழுது புரிந்தது...
அவன் வார்த்தையால் தன்னை தேளாக கொட்டியும் ஏனோ அவன் மேல் இதுவரை வெறுப்பு வரவில்லை... ஏன் இப்ப கூட அவன் முகத்தை பார்க்கதானே துடிக்கிறது என் உள்ளம்.....
ஏன் என்று ஆராய்ந்த பொழுதுதான் புரிந்தது தன் கணவன் மேல் கொண்ட காதல்..
அந்த காதலால்தான் அவன் மேல் கோபம் கொள்ள முடியவில்லை.. மாறாக தன்னை புரிந்து கொள்ளவில்லையே என்ற வருத்தமும் வேதனையும் மட்டுமே இருந்தது.....
“எப்பொழுது தான் என்னை புரிந்து கொள்வானோ.?? “ என்று எண்ணியவள் கண் மூடி உறங்க முயல உறக்கம் வரமாட்டேன் என்று கண்ணா மூச்சி ஆடியது...
தன் கணவன் அவளை திருமணம் முடிந்ததும் விலக்கி வைத்திருந்த பொழுதும் நன்றாக உறங்கிய அவளுக்கு இன்று ஏனோ உறக்கம் வரவில்லை....
தாம்பத்தியத்தின் சுகத்தை அனுபவித்தவளுக்கு அவள் மனமும் உடலும் தன் கணவனின் மெய் தீண்டலுக்கு மீண்டும் ஏங்கியது...
அவனின் அந்த முரட்டுத்தனமான முத்தத்திற்கும் இறுகிய அணைப்பிற்கும் ஏங்கி தவித்தது அவள் மனம்....
உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவள் தன் கணவனின் புகைப்படம் இருந்த அலைபேசியை மார்போடு அணைத்து கொண்டு நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கண் அயர்ந்தாள்...
அன்று இரவு தாமதமாக வீடு திரும்பிய நிகிலன் தன் அறைக்கு செல்ல உள்ளே சென்றவன் கண்கள் தானாக சோபாவிற்கு தாவி சென்றன... அது காலியாக இருக்க,
“எங்க போய்ட்டா?? எப்பவும் நான் வரும் நேரம் தூங்கி கொண்டு இருப்பாளே.... ஒரு வேளை அகிலா ரூம்ல இருக்காளோ?? “ என்று யோசித்தவாறு குளியல் அறைக்கு சென்று குளித்து விட்டு இரவு உடைக்கு மாறினான்...
பின் அருகில் இருந்த பிளாஸ்க்கில் இருந்த சூடான பாலை ஊற்றி குடித்து விட்டு கட்டிலில் விழுந்தான்....
விழுந்தவன் கண் முன்னே தன் மனைவியின் அந்த அழகிய முகமும், அன்று அவன் தீண்டிய பொழுது வெக்கத்தில் சிவந்த செம்முகமும் நினைவு வந்தது....
“சே...” என்று திரும்பி படுத்தவன் படுக்கையின் ஓரத்தில் ஒளிந்திருந்த காய்ந்த மல்லிகை மலர் ஒன்று அவன் கண்ணில் பட அவன் எவ்வளவு கடிவாளம் இட்டும் அவன் மனக்குதிரை அடங்காமல் அந்த நாளை நோக்கி விரைந்தோடியது...
அந்த இனிமையான தருணங்கள் கண் முன்னே வர மீண்டும் அவன் உள்ளே புயல் அடித்தது....
இதுவரை எளிதாக தன்னை கட்டுபடுத்தி வந்தவனுக்கு மனைவியின் சுகத்தை அனுபவித்த பிறகு தன்னை கட்டு படுத்துவது பெரும் சவாலாக இருந்தது....
அவள் முகத்தை பார்க்க வேண்டும் போல இருந்தது அவனுக்கு..
திருமணம் ஆகி இத்தனை நாட்களில் இருவரும் ஒருவரை பிரிந்து மற்றவர் இருந்ததில்லை..
அவன் இரவு எவ்வளவு தாமதமாக வீட்டிற்கு வந்தாலும் போர்வையின் வெளியே தெரியும் அவளின் அந்த பால் வண்ண முகத்தை ரசித்து விட்டுதான் உறங்க செல்வான்.....
அதுவும் அன்று அவள் கணட கனவின் பயத்தில் தன்னை இறுக்கி அணைத்தது நினைவு வர, மீண்டும் அந்த அணைப்புக்காக ஏங்கியது அவன் மனம்....
ருசி கண்ட பூனை அதன் ருசிக்கு அலைவதை போல தன் மனைவிக்காக ஏங்கி தவித்தது அவன் கணவன் மனம்...
அதே நேரம் அவள் அலைபேசியில் பேசியது நினைவு வர, அதுவரை இலகி இருந்தவன் உடனே இறுக ஆரம்பித்தான்... அவன் முகம் கோபத்தில் இறுகியது.. உடல் விரைத்து கை முஷ்டி இறுக,
“வேசக்காரி... எல்லாம் நடிப்பு...என்கிட்ட என்னமா நடிச்சு என்னையே ஏமாத்தி இருக்கா.... நாடகக்காரி.... “ என்று ஆத்திரத்தில் பல்லை கடித்தான்...
படுக்கையை விட்டு எழுந்தவன் தரையை காலால் உதைத்து தன் ஆத்திரத்தை காட்டி பின் பால்கனிக்கு சென்றவன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டி கொண்டு முன்னும் பின்னும் அந்த பால்கனியை அளக்க ஆரம்பித்தான் வெகு நேரம்..
மறுநாள் காலை தன் ஓட்டத்தை முடித்து வந்தவன் வரவேற்பறையில் அமர்ந்து நாளிதழை படித்து கொண்டே அருகில் இருந்த கஞ்சியை எடுத்து வாயில் வைத்தவன் அடுத்த நொடி முகத்தை சுழித்தான்....
உடனே சமையல் அறை பக்கம் பார்த்து
"மா.... " என்றான் கத்தியவாறு....
"என்ன டா?? " என்றவாறு உள்ளே இருந்து கரண்டியுடன் வெளியில் வந்தார் சிவகாமி...
"என்னமா கஞ்சி இது?? வாயில வைக்க முடியல ?? " என்றான் முகத்தை சுழித்தவாறு....
"ஆமான் டா.. 31 வருசமா இதே கஞ்சியைத்தான் குடிச்ச.. இப்ப ஒரு 6 மாசமா உன் பொண்டாட்டி செஞ்ச கஞ்சியை குடிச்சதும் அம்மா செய்யறது கசக்குது இப்ப?? “ என்று முகத்தை நொடித்தார் சிவகாமி...
“என்ன மா சொல்ற?? இத்தனை நாள் அவதான் செஞ்சாளா?? “ “என்றான் சந்தேகமாக......
“ஆமான்ட அப்பா.. கல்யாணம் ஆகி ஒரு மாசத்துலயே என் புருசனுக்கு நானே சமைக்கிறேனு கிளம்பிட்டா உன் பொண்டாட்டி... அன்றிலிருந்து அவள் தான் இந்த பாடாவதி கஞ்சிய செஞ்சு தர்ரா... “ என்றார்
அதை கேட்டவன்
“இப்ப எங்க அவ?? " என்று கேட்க வாய் வரை வந்து விட, பின் தன்னை அடக்கி கொண்டவன் எதுவும் பேசாமல் அந்த கஞ்சியையும் குடிக்காமல் வேகமாக எழுந்து மேல சென்றான்..
அவன் போவதை கண்டவர்
"போடா. . போ.. இன்னும் கொஞ்சம் உப்பை அள்ளி போடறேன்.. அப்பயாவது உனக்கு உன் பொண்டாட்டி ஞாபகம் வருதானு பார்க்கறேன்... " என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டே மீதி சமையலை கவனிக்க சென்றார்....
நிகிலனும் கிளம்பி கீழ வர, காலை உணவும் அவனுக்கு ருசிக்கவில்லை...
தன் மனைவியின் கை ருசிக்கு பழகிய நாக்கு தன் அன்னையின் சமையலை பிடிக்காமல் கொஞ்சம் மட்டும் கொறித்து விட்டு கை கழுவி எழுந்து சென்றான்....
தன் மகன் தன் சமையல் பிடிக்காமல் பாதியில் எழுந்து சென்றதை கண்டதும் ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபக்கம் சாப்பிடாமல் போறானே என்று வருத்தமாக இருந்தது சிவகாமிக்கு...
அவனுக்கு தன் மருமகளின் அருமை தெரிய வேண்டும் என்றே இன்று காலையில் இருந்தே அவனுக்காக சுமாராகத்தான் சமைத்திருந்தார்....
அவர் நினைத்த மாதிரியே மனைவியின் சமையல் பிடித்து போகத்தான் தன் சமையலை வெறுத்து போகிறான் என்று புரிய உள்ளுக்குள் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது..
ஆனாலும் தாய் மனம் புள்ளை சாப்பிடாமல் போகவும் அடித்து கொண்டது மறுபக்கம்....
அவர் பண்ணிய காரியத்தையும் அதனால் தன் சாப்பாடு பிடிக்காமல் தன் மகன் சாப்பிடாமல் சென்றதையும் தன் மருமகளிடம் சொல்லி சிரித்தார் சிவகாமி...
அதை கேட்டதும் மதுவுக்கு கஷ்டமாக இருந்தது....
“என்ன அத்தை..?? அவர் வீட்ல சாப்பிடறதே காலையில் ஒரு நேரம் மட்டும்தான்.. அதையும் கெடுத்துட்டீங்களே... “ என்றாள் குறைபட்டவாறு வருத்தத்துடன்...
தன் சமையலைத்தான் தன் கணவன் விரும்புகிறான் என்று பெருமை படாமல் தன் புருசன் சாப்பிடாமல் போனதுக்காக வருந்தும் தன் மருமகளை நினைத்து பெருமையாக இருந்தது சிவகாமிக்கு....
“ஹ்ம்ம்ம் அப்படி அக்கறை இருக்கிறவ நீயே வந்து உன் புருசனுக்கு சமைச்சு கொடுடி மா....என்னால எல்லாம் நீ சமைக்கிற மாதிரி வராது.... சீக்கிரம் கிளம்பி இங்க வா...” என்று பிட்டை போட்டார் சிவகாமி தன் மருமகளின் மனதை அறிந்து கொள்ள....
அவளும் மலுப்பி சிரித்தவாறே வர்ரேன் என்றும் சொல்லாமல் வேற எதையோ பேசி சமாளித்து போனை வைத்திருந்தாள்...
“சரியான அழுத்தக்காரிதான் போல.. வாய் விட்டு எதையாவது வெளில சொல்றாளானு பார்... “ என்று பெருமையுடன் தன் மருமகளை செல்லமாக திட்டி கொண்டார் சிவகாமி...
“ஹ்ம்ம்ம் அப்படி இரண்டு பேருக்கும் நடுவுல என்னதான் நடந்திருக்கும்?? ஏதோ இருக்கு.. ஆனால் இரண்டும் வெளில காட்டிக்காம இருக்குங்க...விட்டு புடிக்கலாம்... எவ்வளவு தூரம் போவாங்கனு பார்க்கலாம்.... “ என்று பெருமூச்சு விட்டார்... பின் வழக்கம்போல அந்த முருகனை அழைத்து
“எப்படியோ முருகா... சீக்கிரம் இரண்டு பேரையும் ஒன்னு சேர்த்துடு... உனக்கு புண்ணியமா போகும்... “ என்று அந்த வேலனை வேண்டி கொண்டார் சிவகாமி.....
அதை கேட்டு
“ஹா ஹா ஹா எனக்கே புண்ணியமா?? இது நல்லா இருக்கே..” என்று குறும்பாக சிரித்து கொண்டான் அந்த சிங்கார வேலன்...
Comments
Post a Comment