காதோடுதான் நான் பாடுவேன்-27
அத்தியாயம்-27
ஒரு வழியாக கௌதம் வீட்டை அடையவும் கௌதம் வாசலுக்கே வந்து அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றான்....உள்ளே சென்றதும் நிகிலன் அந்த வீட்டை சுற்றிலும் பார்வையிட்டான்... அவனுக்கு பழைய ஞாபகம் எல்லாம் வந்தது..
இந்த வீட்டை ரமணியும் மூர்த்தியும் தங்கள் மகனுக்காக ஆசையாக கட்டியது... நிகிலன் எப்பொழுதும் இங்கயேதான் இருப்பான்.. இந்த வீட்டின் ஒவ்வொரு மூலையும் அவன் அறிந்ததே..
அரண்மனை மாதிரி இருக்கும் இந்த வீட்டில் ராணி மாதிரி வாழ்ந்த ரமணி இந்த வீட்டை விட்டு அனாதை மாதிரி வந்து அங்க இருக்காங்களே.. எல்லாம் அந்த பிசாசால்.. “ என்று திட்டிக் கொண்டிருக்கையிலையே அங்கு இருந்த ஒரு அறையின் உள்ளே இருந்து தன் அலங்காரத்தை முடித்து வெளியில் வந்தாள் வசந்தி....
வெள்ளை வெளேரென்று பார்ப்பவர்கள திரும்பி பார்க்க வைத்து சுண்டி இழுக்கும் நிறத்தில் இருந்தாள்...
முகத்தில் ஒரு அலட்டலும் கண்ணில் ஒரு அலட்சியம், யாரையும் துச்சமாக மதிக்கும் ஒரு பார்வையும் நடையில் யாரையும் மதிக்காத ஒரு திமிரும், மொத்தத்தில் அவள் தோற்றத்தில் பணக்கார வாடை வீசியது...
இந்த சின்ன விருந்துக்கே தன்னை முழு சிரத்தை எடுத்து அலங்கரித்து கொண்டு ஸ்டைலாக நடந்து வரும் அவளையே இமைக்க மறந்து பார்த்தாள் மது...
“கௌதம் அண்ணா ஏன் மயங்கி போனார் னு இப்ப தெரியுது... “ என்று மனதுக்குள் சொல்லி சிரித்துக் கொண்டாள்...
சிரித்து கொண்டே வந்தவள் அவர்கள் இருவரையும் வரவேற்க, நிகிலன் அவளை முறைத்து விட்டு வேறு பக்கம் திரும்பி கொண்டான்... வசந்தியும் அதை கண்டு கொள்ளாமல் மதுவை வரவேற்று அவளிடம் பேசி கொண்டிருந்தாள்....
அந்த வரவேற்பறையில் ஆங்காங்கே பலூன்கள் கட்டி இருக்க, ஹாலின் நடுவில் பெரிய கேக் வைக்க பட்டிருந்தது...
அதை கண்டவன்
“ஏன்டா.. உனக்கு எழு கழுதை வயது ஆகிறது.. நீ கல்யாணம் பண்ணின காலத்துக்கு உன் புள்ளைக்கு கேக் வெட்டாம நீ வெட்டிகிட்டு இருக்க..தடிமாடு “ என்று கௌதமை பார்த்து நக்கலாக சிரித்தான் நிகிலன்...
“ஹீ ஹீ ஹீ கல்யாணம் ஆகி எத்தனை வருசம் ஆனாலும் என் பொண்டாட்டிக்கு நான் இன்னும் குழந்தை மாதிரிதான் மச்சான்... “ என்றவன் அவன் அருகில் வந்து
“இது என் பொண்டாட்டி என்கிட்ட சொன்ன டயலாக்..
டேய் மச்சான்.... நீ சாப்டிட்டு போகிற வரைக்கும் அவகிட்ட எதுவும் பேச்சு வச்சுக்காத.. அப்புறம் என்னைத்தான் போட்டு வறுத்து எடுப்பா... “ என்று காதை கடித்தான் கௌதம்...
அதை கேட்டு முறைத்தான் நிகிலன்...
பின் வசந்தி கேக் கட் பண்ண அவர்களை அழைக்க, மூவரும் அருகில் வர,கௌதம் கேக் கட் பண்ணி தன் மனைவிக்கு ஊட்டி விட்டான்....வசந்தியும் அவனுக்கு ஊட்டினாள்... மது இதையெல்லாம் தன் அலைபேசியில் பதிவு செய்து கொண்டிருந்தாள்...
நிகிலனும் கேக்கை எடுத்து ஊட்டி, அவன் முகத்தில் சிறிது அப்பி விட்டான்... மதுவும் கௌதம் க்கு வாழ்த்து சொல்லி தங்கள் பரிசை கொடுத்தாள்...
அதை மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டவன் அதை பிரித்து பார்க்க அதில் இருந்த வாட்சை பார்த்து அதிசயித்து
“வாவ்... சூப்பர் கிப்ட்... தேங்க்ஸ் டா மச்சான்.. இந்த மாதிரி ஒரு வாட்ச் தான் நான் வாங்கணும்னு ரொம்ப நாளா தேடி கிட்டிருந்தேன்... கரெக்டா என் மனசை படிச்சு அதையே பிரசண்ட் பண்ணிட்ட.. சான்சே இல்ல மச்சான்.... நண்பேன்டா... “என்று அவன் தோளை கட்டி கொண்டான்....
அதை கண்டு தன் முகத்தை நொடித்தாள் வசந்தி யாரும் அறியாமல்
“டேய்.. ரொம்ப ஓவரா உணர்ச்சி வசப்படாத.. இது உன் தொங்கச்சி தான் வாங்கினா...
எதுக்கு தெரியுமா??.. நீ ஸ்டேசனுகு நேரத்தோட வந்து சேருவதற்குத்தான்... இனிமேல் என் வாட்ச் ரிப்பேர்னு கதை சொல்ல முடியாது பார்.. அதுக்குத்தான்.. “ என்று குறும்பாக சிரித்தான் நிகிலன்....
“ஹீ ஹீ ஹீ.. தேங்க்ஸ் சிஸ்டர்... நீங்க வாட்ச் வாங்கிக் கொடுத்ததுக்காகவே இனிமேல் டைம்க்கு நான் ஸ்டேஷன்ல ஆஜார் ஆகிடறேன்.. “என்று சிரித்தான்...
கௌதம் நிகிலனுடன் சிரித்து பேசுவதை ஒரு வித ஆற்றாமையோடு பார்த்து கொண்டிருந்தாள் வசந்தி...
அவளுக்கு ஏனோ நிகிலனை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்க வில்லை...
அவன் தன் கணவனை விட அழகிலும் பதவியுல் உயர்ந்து இருப்பதோ, இல்லை எல்லோரும் தன் அழகில் மயங்கி திரும்பி பார்த்து அவளிடம் நேரிலயே நிறைய பேர் புகழ்ந்து இருக்க, இந்த நிகிலன் மட்டும் அவளை ஒரு பொருட்டாக எப்பவும் மதித்ததில்லை என்ற காரணத்தாலோ, வேற என்ன காரணமோ... பார்த்த முதல் நாளே அவனை பிடிக்காமல் போனது...
அது இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது..
நிகிலனும் அவளிடம் அவ்வளவாக வைத்து கொள்ள மாட்டான்...அதுவும் தன் உயிரான ரமணியை அவள் படுத்தியதை கண்டதும் இந்த வீட்டு பக்கமே வரவில்லை...
நீண்ட நாட்களுக்கு பிறகு கௌதம் வற்புறுத்தலுக்காகத்தான் இன்று வந்தது..
பின் உணவு தயாராக இருக்க, நால்வரும் உணவு மேஜைக்கு சென்றனர்..
மதுவும் நிகிலனும் அருகில் அமர்ந்து கொள்ள எதிர்புறம் கௌதம் ம் வசந்தியும் அமர்ந்து கொண்டனர்.......
டேபிலில் இருந்த ஐட்டங்களை கண்ட மது
“வாவ்... அக்கா.. இத்தனையும் நீங்களா செய்தீங்க?? “என்றாள் கண்களை அகல விரித்து...
“ஹா ஹா ஹா .. நான் இதெல்லாம் செய்ய நான் என்ன இந்த வீட்டு சமையல்காரியா?? இதெல்லாம் செய்யத்தான் சமையலுக்கு ஆள் வச்சிருக்கேனே...
மெனு மட்டும் சொல்லிட்டா போதும்.. அவங்களே ரெடி பண்ண்டுவாங்க....ஓ.. உனக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்காது இல்ல.. என்னை மாதிரி பெரிய இடத்துல பிறந்திருந்தா உனக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கும் " என்றாள் வசந்தி திமிராக
மதுவும் அதை கண்டு கொள்ளாமல்
"ஹ்ம்ம்ம் கரெக்ட் தான் கா... எனக்கு இதெல்லாம் தெரியாது.. எங்க அம்மா வீட்ல அம்மா தான் எல்லாம் செய்வாங்க.. எங்க வீட்லயும் மற்ற வேலைகளை செய்ய ஆட்கள் இருந்தாலும் சமையல் அத்தையும் நானும் தான் செய்வோம்.. அத்தைகிட்ட நானும் சமையல் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கறேன்.. " என்றாள் கன்னம் குழிய சிரித்தவாறு..
அவள் சிரிப்பு ஏனோ வசந்திக்கு எரிச்சலை தர,
"அது என்ன என்னை அக்கான்ற?? உன்னை விட ஒரு மூனு வயசுதான் பெரியவ.. அதனால் நீ என் பெயர் சொல்லியே கூப்பிடு.." என்றாள் கடுப்புடன்...
"ஆகா... இந்த அக்காங்களே இப்படித்தானா?? பாரதியும் அவங்களை அக்கா னு சொன்னா டென்சன் ஆனாங்க.. இவங்களும் எதுக்கு இவ்வளவு டென்சன் ஆறாங்க?? ...
அக்கா னு கூப்பிட்டா எவ்வளவு உரிமையும் அன்பும் அதுல கலந்து இருக்கு..
ஏனோ எல்லோரும் அது தங்கள் வயதை கூட்டி காமிப்பதை போல நினைத்து கொண்டு பிரஸ்டீஜ் பார்க்கிறாங்க.. " என்று எண்ணி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் மது...
அதன் பின் வசந்தி, மது, கௌதம் என மூன்று பேரும் அரட்டை அடிக்க, நிகிலன் அதில் எதுவும் கலந்து கொள்ளாமல் தன் உணவை உண்டு கொண்டிருந்தான்.. கௌதம் அப்பப்ப அவனையும் பேச்சின் நடுவில் கொண்டு வந்து சில வார்த்தைகள் பேச வைத்தான்...
வசந்தியின் பேச்சில் முக்கால் வாசி அவள் பிறந்த வீட்டு பெருமையும், தன்னை பற்றி, தன் கணவனிடம் தனக்குத்தான் உரிமை அதிகம் என்பது போல பெருமை காட்டிக்கொண்டாள்...
அவள் அலட்டலில் சில நேரம் கடுப்பான நிகிலன் பல்லை கடிக்க, அதை கண்டு கொண்ட கௌதம் கண்ணால் ஜாடை காட்டி எதுவும் சொல்லாதே.. என்று கெஞ்ச, அவனை முறைத்தவாறே தன் வேலையை தொடர்ந்தான் கஷ்டபட்டு...
மதுவும் அவள் சொல்லும் கதைக்கு தலையாட்டி கொண்டு சாப்பிட, பாதியிலயே காது புளித்து விட்டது...
ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் கட்டுபடுத்தி கொண்டவள் ஒரு வழியாக அனைவரும் சாப்பிட்டு முடிக்கவும், நிகிலனும் கௌதம் ம் தனி அறைக்கு சென்று விட்டனர்....
வசந்தி மதுவை தன் அறைக்கு அழைத்து சென்றாள்...
அங்கிருந்த வார்ட்ரோபில் இருந்த அவளுடைய ஆடைகளையும் அந்த ஆடைகளுக்கு பொருத்தமான விலையுயர்ந்த விதவிதமான நகைகளையும் அவளுக்கு எடுத்து காட்டினாள்..
பொதுவாக மதுவுக்கு ஆடைகளிலோ நகைகளிலோ ஆர்வம் இருந்ததில்லை.. அதனால் அதை எல்லாம் பார்க்கவும் எதுவும் தோன்றவில்லை.. வசந்தி மனசு கோணாமல் இருக்க, எlல்லாம் நன்றாக இருப்பதாக சொல்லி வைத்தாள்....
மீண்டும் ஏதோ கதையடித்தவள்
“அப்புறம் மதுவந்தினி.. என்ன சொல்றா உன் மாமியார் கிழவி??...” என்றாள் வசந்தி நக்கலாக...
அதை கேட்டு புரியாமல் முழித்த மது
“யாரை சொல்றீங்க வசந்தி?? “ என்றாள்...
“அதான் உன் மாமியாரைத்தான்... “என்றாள் உதட்டை ஏளனமாக வளைத்து...
“ஓ... எங்க அத்தையை சொல்றீங்களா?? நீங்க கிழவினு சொல்லவும் நான் யாரோ னு நினைச்சிட்டேன்.. எங்க அத்தை செம யூத் தெரியுங்களா.. கோவிலுக்கு ஒன்னா போணோம்னா எல்லோரும் என்னோட அக்காவானு கேட்பாங்க.. அந்த அளவுக்கு யெங் அன்ட் ஆக்டிவ் ஆ இருப்பாங்க வசந்தி.. “ என்று சிரித்தாள் மது....
அவள் சிரிப்பில் இன்னும் கடுப்பானாள் வசந்தி...
“ஹ்ம்ம்ம் உன் அத்தை.. சொத்தையதான் சொல்றேன்.. சாதாரணமாகவே எல்லாரையும் மிரட்ட ற மாதிரியே பேசுவாங்க... என்ன உன்னை ரொம்ப மிரட்டறாங்களா?? “ என்றாள் ஆர்வமாக ஆராயும் பார்வையுடன்...
“சே.. சே.. அத்தை ரொம்ப நல்லவங்க... என்னை போய் மிரட்டறதா?? இன்பேக்ட் எங்கம்மா வீட்டை விட இங்கதான் எனக்கு பிரியா சந்தோசமா இருக்கேன்..” என்றாள் வெகுளியாக...
அவள் சிவகாமியை புகழ்ந்து பேச வசந்திக்கு இன்னும் எரிச்சலாக இருந்தது...
“ஹ்ம்ம்ம் உன்னை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு மதுவந்தினி.. இப்படி ஏமாளியா இருக்கியேனு...
எல்லா மாமியாரும் முதல்ல அப்படித்தான் இருப்பாங்க... அதுக்கப்புறம் அவங்க வேலையை காட்ட ஆரம்பிப்பாங்க.. அதுக்குள்ள நாம முந்திக்கணும்...
புருசனை கைக்குள்ள போட்டுகிட்டு மொத்தமா நம்ம கிட்ட கொண்டு வந்திட்டு அதுக்கப்புறம் அவங்கள கழட்டி விட்டுடணும்.. இல்லைனா எப்பவுமே தொல்லை தான்...
அப்பா.. என் மாமியார் கிழவி மூனு மாசம் தான் கூட இருந்திருப்பேன்.. எப்ப பார் தொணதொணனு எதையாவது குறை சொல்லி கிட்டே இருக்கும்...
வெளில எங்கயும் என் புருசன் கூட சுத்த முடியாது... நைட் லேட்டா வந்தா ஏன் இவ்வளவு நேரம்.. வெளில எங்கயாவது போனா சீக்கிரம் வந்திடுனு அட்வைஸ்.. அப்புறம் கொஞ்சம் மாடர்ன் ஆ ட்ரெஸ் போட்டா கல்யாணம் ஆன பொண்ணு இப்படியா ட்ரெஸ் பண்றதுனு.. ஆயிரத்தெட்டு குறை சொல்லும்..
நானும் கொஞ்ச நாள் பொறுத்து பார்த்தேன்.. அவங்க நச்சு அதிகமாதான் ஆச்சு... அதான் வெட்டி விட்டுட்டேன்...
இப்பதான் நிம்மதியா இருக்கேன் என் இஷ்டத்துக்கு..
அதனாலதான் உனக்கும் சொல்றேன்.. முதல்லயே நீ ஜாக்கிரதையா இருந்துக்கோ... என் புருசனாவது ஒரே பையன்தான்.. உன் சைட் நீதான் மூத்த மருமக.. உன் ஹஸ்பன்ட்க்கு கீழ தம்பி தங்கச்சி னு பொறுப்பு அதிகம் இருக்கு.. எல்லாத்தையும் உன் ஹஸ்பன்ட் தான் பார்த்துக்கணும் னு உன் மாமியார் வந்து நிப்பாங்க பார்...
அதுக்கு முன்னாடி அவங்களையெல்லாம் கழட்டி விட்டுடு.. நீ உன் புருசனை கூட்டிகிட்டு தனி குடித்தனம் போய்டு....
ஹ்ம்ம்ம் நீ ஏன் போகனும்?? .நீ இருக்கிற வீடு உன் புருசன் சம்பாதிச்சதுனு நினைக்கிறேன்.. அப்படீனா அவங்கள வீட்டை விட்டு அனுப்பிடு.. அப்பதான் நீ ஜாலியா இருக்கலாம்... “ என்று மூச்சு விடாமல் தன்னால் முடிந்த உபதேசங்களை வாரி வழங்கினாள் வசந்தி...
அதை கேட்டு கடுப்பான மது அவளை எதிர்த்து எதுவும் பேச முடியாமல், அதுமாதிரி பழக்கம் இல்லாததால் பல்லை கடித்து கொண்டிருந்தாள்...வசந்தி பேசி முடிக்கவும் அவளை பார்த்து
“ஹ்ம்ம்ம் நீங்க எனக்காக இவ்வளவு எனர்ஜி வேஸ்ட் பண்ணி அட்வைஸ் பண்ண தேவையில்லை வசந்தி... எங்க அம்மா வீட்லயும் என்னை கல்யாணம் பண்ணி புருசன் வீட்டுக்கு அனுப்பும் முன்னாடி
குடும்பம் னா என்னா?? அதுல மருமகளா போறவளோட பங்கு என்ன? அப்படீனு எங்கம்மா பெரிய லெக்சர் கொடுத்து தான் அனுப்பி வச்சாங்க...
குடும்பம் னா நீங்க நினைக்கிற மாதிரி நீங்களும் உங்க புருசனும் நாளைக்கு உங்க பிள்ளைகள் மட்டும் னு இல்லை.. அந்த புருசன் வேணும்கிறப்போ அந்த புருசனை பெத்தவங்களும் கூட பொறந்தவங்களும் சேர்த்துதான் குடும்பம் ஆகும்...
உங்க அம்மா வீட்ல இதெல்லாம் சொல்லி கொடுக்க ஆள் இல்லையா?? இல்ல அதுக்கும் வேலைக்காரிய வச்சிருக்கீங்களா..” என்றாள் நக்கலாக சிரித்தவாறு...
அதோடு நீங்க உங்க புருசன் மேல உண்மையான அன்பு இருந்தால் அவர பெத்த அவர் அம்மா மேலயும் அன்பு தானாக வரும்... உங்க புருசன் மட்டும் வேணும் அவர பெத்த அம்மா வேண்டாம்னா அது எப்படிங்க வசந்தி??
எனக்கு என் புருசன் எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி அவர பெத்த அம்மா, கூட பொறந்தவங்க எல்லாருமே முக்கியம் தான்.. பிரிக்கணும்னு அவசியமில்லை..
அதோடு எனக்கு என்னவோ நீங்க கௌதம் அண்ணாவை உண்மையா விரும்பலைனு தோணுது...
உங்க அழகையும் இளமையையும் காட்டி அவர உங்க பக்கம் இழுத்து வச்சுக்கலாம்... ஆனால் அது எத்தனை நாளைக்கு நிலைக்கும்?? ... உன்மையான அன்புதான் ஒரு வாழ்க்கைக்கு அஸ்திவாரம் மாதிரி.. அது சரியில்லாம போய் நீங்க எவ்வளவுதான் கட்டிடத்தை கட்டி விதவிதமா அலங்காரம் பண்ணினாலும் அது என்னைக்கிருந்தாலும் சரிந்து விடும்..
அது போலத்தான் உங்க இளமையும் அழகும் போகிறப்போ நீங்க முடிஞ்சு வச்சிருக்கிற உங்க புருசனும் காணாம போய்டுவார்..
அதனால் உண்மையான அன்பு செலுத்துங்க.. அப்படி உண்மையான அன்பு செலுத்தினா அவர் யார் மேல அன்பா இருக்காரோ அவர் மேலயும் நீங்க அன்பு செலுத்தனும்..
அப்பதான் அவருடைய அன்பு இன்னும் பல மடங்கு கூடும்...
இப்ப வேணா உங்களுக்கு பயந்துகிட்டு கௌதம் அண்ணா அவங்க அம்மாவை பிரித்து வைத்திருக்கலாம்... ஆனா நீங்க அவருக்கு போரடிக்கிறப்போ தாய் அன்பு தான் பெருசா தெரியும்...
அப்ப அவர தேடி போகையில் அதுக்கு தடையா இருக்கிற உங்களை கூட உதறி விட்டு போகலாம்...
அதனால் உங்க கொள்கையை விட்டு எல்லாரையும் மதிக்க, எல்லார் மேலயும் அன்பு பாராட்ட ஆரம்பிங்க.. உங்க வாழ்க்கை இன்னும் வண்ணம் மயமாகும்.. கௌதம் அண்ணா இன்னும் உங்க மேல பாசமா இருப்பார்... “ என்று சிரித்தாள் மது ...
அதை கேட்டு வசந்தி உள்ளுக்குள் கொதிக்க,
“ஏய்.... என்ன திமிரா?? ஏதோ சின்ன புள்ளை விவரம் இல்லாம இருக்கறியேனு உனக்கு அட்வைஸ் பண்ணினா நீ எனக்கே திரும்ப அட்வைஸ் பண்றியா?? “ என்று முறைத்தாள் வசந்தி...
“ஹீ ஹீ ஹீ அட்வைஸ் எல்லாம் இல்ல வசந்தி... என் மனசுல பட்டதை, நான் கத்துகிட்ட பாடத்தை எடுத்து சொன்னேன்.. அதுக்கப்புறம் உங்க இஷ்டம்....
அப்புறம் இன்னொரு சின்ன ரிக்வஸ்ட்..
உங்களுக்கு கல்யாணம் ஆகி எப்படியும் 5 வருசம் ஆகியிருக்கும்... அனேகமா குழந்தை பெத்துகிட்டா உங்க அழகு போய்டும் னு தான் குழந்தை பெத்துக்கறத தள்ளி வச்சிருப்பீங்க..
அப்படி எதுவும் பிளான் இருந்த அதையும் மாத்திக்குங்க.. ஏனா உங்க அழகு குறையறப்போ புள்ளைங்கள காட்டித்தான் புருசனை வழிக்கு கொண்டு வர முடியுமாம்....
இது எங்க பக்கத்து வீட்டு சுகந்தி அக்கா சொன்னது.. அதனால நீங்க சீக்கிரம் ஒரு குழந்தையை பெத்துக்கங்க..
சரி ... எனக்கு லேட் ஆகுது.. அத்தை பார்த்துகிட்டிருப்பாங்க.. நாங்க கிளம்பறோம்... “ என்று வசந்தியின் பதிலுக்கு காத்திருக்காமல் வெளியில் வந்தாள் மது ..
வசந்தியோ உள்ளே இன்னும் கொதிக்க ஆரம்பித்தாள்
“சே.. இந்த புள்ளபூச்சிக்கு நான் அட்வைஸ் பண்ணினா இது எனக்கு திருப்பி அட்வைஸ்பண்றாளே... இவளுக்கு இருக்கு ஒரு நாளைக்கு..” என்று மனதுக்குள் சூளுரைத்தாள் வசந்தி...
மது வெளியில் வரவும் அதுவரை அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை சன்னலின் அருகில் நின்று கேட்டு கொண்டிருந்த ஒரு உருவம் அவசரமாக நகர்ந்தது...
மது வரவேற்பறைக்கு வர, வெளியில் போன் பேசி கொண்டிருந்த கௌதம் உள்ளே வந்தான்...
“என்ன சிஸ்டர்.. அதுக்குள்ள பேசி முடிச்சிட்டிங்களா?? பொம்பளைங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு சீக்கிரம் முடிக்க மாட்டாங்கனு சொல்லுவாங்க... “என்று சிரித்தான் கௌதம்...
“ஹா ஹா ஹா இப்பதான முதல்ல பார்த்திருக்கோம் ணா ... அதனால சீக்கிரம் முடிச்சிட்டோம்...இனிமேல் அடிக்கடி சந்திப்போம் இல்ல .. நிறைய பேசிக்கலாம்... ... “ என்று சிரித்தாள் மது..
அதற்குள் வசந்தியும் நிகிலனுமே அங்கு வர, மது விடை பெறுவதாக சொன்னாள்...
கௌதம் வசந்தியை பார்த்து
“வசந்தி டார்லிங்... நீ என் தங்கச்சிக்கு கொடுப்பதற்காக கிப்ட் வாங்கி வச்சியே.. அதை கொடுக்கலையா?? “ என்றான்...
வசந்தி ஜாடை காட்டி எதையோ சொல்ல அதை புரிந்து கொள்ளாமல் கௌதம் மேலும் தொடர்ந்தான்...அதற்குள் மது
“என்ன கிப்ட் அண்ணா அது?? “ என்றாள் ஆர்வமாக
“நீயும் மச்சானும் எங்க வீட்டுக்கு முதல் முதலா வர்ரீங்க இல்லையா.. அதுக்கு கொடுக்க என்று நேற்று வாங்கி வைத்தாள்.. இரு நானே போய் எடுத்துட்டு வர்ரேன்.. “என்றவன் வசந்தியை பார்க்காமல் அறைக்குள் சென்று ஒரு கவரை எடுத்து வந்தான்..
அதில் மதுவுக்கு ஒரு புடவையும் நிகிலனுக்கு ட்ரெஸ்ம் இருந்தது... அதற்குள் வசந்தியும் வேற வழியில்லாமல் உள்ளே சென்று ஒரு தட்டை எடுத்து வந்து அதில் மங்கல பொருட்களை வைத்து அதன் மீது அந்த கவரை வைத்து இருவரையும் அழைக்க, நிகிலன் அதை வாங்க மறுத்து விட்டான்...
வசந்தி கௌதம் ஐ முறைக்க, கௌதம் மதுவை பாவமாக பார்க்க,
“நீங்க என்கிட்ட கொடுங்க அண்ணா.. அவர் சார்பா நான் வாங்கிக்கறேன்.. “என்றாள் சிரித்தவாறு...
கௌதம்,வசந்தி இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து மது அவர்கள் காலில் விழுந்து வணங்க, ஒரு நிமிடம் கௌதம்க்கு கண் கலங்கி விட்டது..
அவளை குனிந்து தூக்கி
“ நீ நல்லா இருப்ப தங்கச்சி..உனக்கு எந்த குறையும் வராது.. “ என்று மனதார வாழ்த்தினான்....
வசந்தியோ தான் நினைத்ததை நடத்த முடியவில்லையே.. என்று கொதித்து கொண்டிருந்தாள்..
அவளுக்கு நிகிலனை எப்படியாவது மட்டம் தட்ட சமயம் பார்த்து கொண்டிருந்தாள்....
அதனால் அவனுக்கு பரிசு கொடுக்கும் சாக்கில் ஜாடை சொல்ல காத்து கொண்டிருக்க, இவள் எண்ணம் புரிந்தோ என்னவோ அதை வாங்க மறுத்து விட்டான்...
அதே போல மதுவும் அவள் பேச்சைக் கேட்க வில்லை என்பதால் அவளுக்கு எதுவும் கொடுக்க வேண்டாம் என்று எண்ணி இருக்கையில் கௌதமே சென்று அந்த பரிசை எடுத்து வர அதற்கு மேல் ஒன்னும் செய்ய முடியாமல் போயிற்று...
நிகிலனுக்கு திருமணம் ஆன செய்தி கேட்டதுமே அவளுக்கு ஏனோ எரிச்சலாக இருந்தது...அதிலும் ஒருநாள் அவன் மனைவி மதுவை சிவகாமியுடன் கோவிலில் பார்க்க, அவளின் அழகும் அவள் மாமியாருடன் சிரித்து பேசுவதையும் கண்டவளுக்கு பத்தி கொண்டு வந்தது...
தன்னை மதிக்காதவனுக்கு இப்படி ஒரு அழகான மனைவியா?? அதுவும் கல்யாணம் ஆகி இத்தனை நாள் ஆகியும் தன்னைப் போல தன் மாமியாரை பிரித்து வைக்காமல் செல்லம் கொஞ்சுவதை கண்டு பொறாமை பொங்கியது...
நிகிலன் சந்தோசத்தை எப்படியாவது அழிக்கவேண்டும் என்று வன்மம் பரவியது...
மதுவை பார்க்க, சின்ன பெண்ணாக இருக்க, அவளிடம் தன் நயவஞ்சக பேச்சால் அவளை நல்லா ஏத்தி விட்டு அவள் மனதை மாற்றி நிகிலன் குடும்பத்தில் கொஞ்ச நாளாவது குழப்பத்தை ஏற்படுத்தவே இந்த விருந்தை ஏற்பாடு பண்ணியிருந்தாள்...
ஆனால் அவள் நினைத்த மாதிரி மது எடுப்பார் கைப்பிள்ளையாக இல்லாமல் தெளிவாக பேசுவதை கண்டதும் தன் திட்டம் தோழ்வியுற இன்னும் கொதிக்க ஆரம்பித்தாள் வசந்தி....
இதை அறியாத கௌதம் மதுவிடம் சகஜமாக கொஞ்சி கொண்டிருந்தான் தன் புது உறவான தங்கச்சி என்ற பாசத்தில்...
நிகிலனும் மதுவும் விடை பெற்று கிளம்பி செல்லும் பொழுது மது தயங்கி நிக்க,
“அண்ணா.. ஒரு சின்ன ஹெல்ப்... “ என்றாள் தயங்கியவாறு
“என்ன ஹெல்ப் மது?? ... சொல்லு அண்ணன் நான் இருக்கேன்.. “என்றான் கௌதம்..
“வந்து.. இந்த ப்ளேவர் கேக் அகிலாவுக்கு ரொம்ப பிடிக்கும்... அதான் கொஞ்சம் அவளுக்கு எடுத்துகிட்டு போக வா?? “என்றாள் தயங்கியவாறு...
அதை கேட்டு வசந்தி தன் உதட்டை ஏளனமாக சுழித்தாள்..
நிகிலனோ பல்லை கடித்தான்
“இவ எதுக்கு இப்படி டீசன்சி இல்லாம கேட்டு வாங்கிட்டு வர்ரா...”என்று..
“அடடா.. இதுதான் விசயமா.. நீ கூட பெருசா எதையோ கேட்க போறேனு பார்த்தா?? “ என்று சிரித்தவன்
“நீ எடுத்துக்க மா...இவ்வளவு யார் சாப்பிடப் போறா... இரு நான் போய் பாக்ஷ் எடுத்துட்டு வர்ரேன்.. “என்றவன் வேகமாக சமையல் அறைக்கு சென்று ஒரு பாக்சை எடுத்து வந்து அதில் பெரிய கேக்கை கட் பண்ணி எடுத்து வைத்து மூடி மதுவிடம் நீட்டினான்..
“தேங்க்ஸ் ணா.. “ என்று சிரித்தவாறு அதை வாங்கி கொண்டாள்...
“இதுக்கு எதுக்கு மா தேங்க்ஸ் சொல்ற... இந்த அண்ணன் கிட்ட கேட்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கு... என்ன வேணும்னாலும் தயங்காமல் கேள்.... “ என்று சிரித்தான்...
அதற்குள் மது,
“அப்படியா னா.?? அப்ப என்ன கேட்டாலும் எனக்காக செய்வீங்களா?? “என்றாள் மது வசந்தியை ஓரக் கண்ணால் பார்த்தவாறு..
“ஆமான் டா மது... நீ என்ன வேணா கேள்...இந்த அண்ணன் செய்ய ரெடியா இருக்கேன்... “என்றான் மீண்டும் சிரித்தவாறு..
அதை கண்ட வசந்தி இன்னும் கொதிக்க, தன் கணவனை எரித்து விடும் பார்வை பார்த்து கொண்டிருந்தாள்...
அருகில் நின்றிருந்த நிகிலன் கௌதம் காதருகில் குனிந்து
“டேய்... கௌதம்.. போதும் டா... நீயும் உன் தங்கச்சியும் பாசமலர் படம் ஓட்டியது.. அங்க உன் பொண்டாட்டி காதுல புகையா வந்துகிட்டிருக்கு.. இன்னும் கொஞ்ச நேரம் உன் தங்கச்சிய இப்படியே கொஞ்சினா அவ்வளவுதான்...அடுத்த என்கவுண்டர் நீதான்...
இன்னைக்கு உனக்கு ஸ்பெஷல் டே தான்.. என்ஜாய் மச்சான்... “என்று குறும்பாக சிரித்தான் நிகிலன்..
“அடப்பாவி.. நான் கொஞ்சம் சிரிச்சா உனக்கு பொறுக்காதே.. உடனே என் பொண்டாட்டி பெயரை சொல்லி இருக்கிற கொஞ்ச சந்தோசத்தையும் அழிக்கிறதுல உனக்கு அப்படி என்ன சந்தோசம்.. “என்று முறைத்தான் கௌதம்....
“ஹா ஹா ஹா உண்மைய சொன்னா உனக்கு நான் தப்பா தெரியறனா?? .. வேணும்னா திரும்பி உன் பொண்டாட்டிய பார்.. “ என்று சிரித்துக் கொண்டே வெளியில் நடந்தான்..
மதுவும் வசந்தியிடமும் கௌதமிடம் விடைபெற்று நிகிலன் பின்னால் செல்ல, அவன் காரை அடைந்து அவளும் ஏறி கொள்ள காரை கிளப்பி சென்றான்...
சிறிது தூரம் சென்றதும், மதுவின் பக்கம் திரும்பிய நிகிலன்
“ஏய்... உனக்கு அறிவு இருக்கா... அந்த வசந்தி ஏற்கனவே திமிர் பிடிச்சவ.. அவ முன்னால போய் கேக் வேணும்னு கேட்டு வாங்கறீயே...கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்ல ?? .. “என்று எரிந்து விழுந்தான் நிகிலன்....
“வந்து... அது அகிலாவுக்கு ரொம்ப பிடிக்கும்...அதான்.. “ என்றாள் கொஞ்சம் பயந்தவாறு
“அதுக்கு இந்த கேக் ஐ கேட்கறதா?? வீட்டுக்கு போறப்ப கடையில போய் வாங்கிட்டு வந்திருக்கலாம் இல்ல.. இப்ப பார் அந்த வசந்தி எவ்வளவு கேவலமா பார்த்தா... “என்று மீண்டும் சிடுசிடுத்தான்....
“கடையில வாங்கலாம் தான்... ஆனா அது இந்த மாதிரி எடுத்து போய் கொடுக்கிற சந்தோசத்துல இருக்காது..
எங்கப்பா, அம்மா எந்த பங்சன் போனாலும் ஏதாவது ஸ்பெஷலா இருந்தா உடனே எனக்காக அதை எடுத்துட்டு வந்து தருவாங்க.. அதே பொருள் வாங்கலாம் தான்.. ஆனால் அது மாதிரி நம்மளை நினைவு வச்சு எடுத்து வர்றதுதான் அதுல ஹேப்பி.. டேஸ்ட் ஆவும் இருக்கும்... “ என்றவள்
“இதெல்லாம் உங்களுக்கு எங்க புரிய போகுது.. விருமாண்டி.. “ என்று மெல்ல முனகி கொண்டாள்...
“நல்ல குடும்பம் டா சாமி.. “என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்... மது மீண்டும் எதற்கோ தன் தந்தையை பற்றி புகழ
“போதும் டீ.. உங்கப்பன் புராணம்... காது வலிக்குது.. கொஞ்சம் நிறுத்தறியா.. “என்றான் கடுப்புடன்...
“ஹ்ம்ம்ம் எங்கப்பா எனக்கு ஸ்பெஷல் தான்... நான் புகழ்ந்து சொன்னா இவனுக்கு என்னவாம்?? சிடுமூஞ்சி... “ என்று மனதுக்குள் திட்டியவாறு இலேசாக அவனை முறைத்து விட்டு சன்னல் பக்கம் திரும்பி கொண்டாள்...
சிறிது நேரம் விரைத்து கொண்டு இருந்தவள் தன் கோபம் அதற்குள் மறைந்து விட, ஏதோ ஞாபகம் வர , மெல்ல திரும்பி தன் கணவனை பார்த்து
“சா... ர்..... “ என்று இழுத்தாள்.. மெதுவாக...
அவன் இவள் பக்கம் திரும்பாமல் காரை ஓட்டிக் கொண்டிருக்க, மீண்டும்
“சா.........ர்ர்ர்ர்ர்ர்.. “ என்று கொஞ்சம் சத்தமாக அழைத்தாள்...
“ஏய்.. எனக்கு காது நல்லாவே கேட்குது.. என்ன வேணும் சொல்... “ என்றான் இன்னும் திரும்பாமல்...
“வேண்டாம்...சொன்னா திட்டுவீங்க... “ என்றாள் மது தன் முகத்தை பாவமாக வைத்து கொண்டு
அவள் முகத்தில் தெரிந்த பாவம் அவனுக்கு சிரிப்பை வரவழைக்க, மெல்ல அவள் பக்கம் திரும்பி
“திட்டற மாதிரி ஏதாவது கேட்டா திட்டுவேன்.. “ என்றான் உள்ளுக்குள் சிரித்து கொண்டே வெளியில் இன்னும் இலேசாக முறைத்து கொண்ட மாதிரி காட்டி கொண்டான்...
“அப்ப கண்டிப்பா திட்டுவீங்க... வேண்டாம்.. விட்டுடறேன்... “ என்றாள் இன்னும் தன் முகத்தை பாவமாக வைத்து கொண்டு..
“சரி சரி திட்டலை.. என்ன மேட்டர் னு சொல்.. “ என்றான் கொஞ்சம் இறங்கி வந்து....
“சார்... வந்து... அத்தை ரமணி மா பத்தி நிறைய சொன்னாங்க... அவங்க கூட இந்த பக்கம் தான் இருக்கறதா சொன்னாங்க...உங்களுக்கு டைம் இருந்தா அவங்களை போய் பார்த்துட்டு வரலாமா.. எனக்கு அவங்கள பார்க்கணும் போல இருக்கு... “ என்றாள் தயங்கியவாறு...
“ஹ்ம்ம்ம் அவங்களை பார்த்து நீ என்ன பண்ணப் போற?? “என்றான் இடுங்கிய கண்களுடன்...
“சும்மா பார்க்கணும் போல இருக்கு சார்... ப்ளீஸ் .. சார்... ப்ளீஸ்.. சார்.. மாட்டேனு சொல்லிடாதிங்க... “என்றாள் கெஞ்சலாக...
அவளின் ப்லீசிலும் அந்த குழந்தை தனமான கெஞ்சல் முகத்திலும் என்ன கண்டானோ அவனால் அதை மறுக்க முடியவில்லை... அவன் உதடுகள் தானாக சரியென்றது...
அதை கேட்டு ”யெஸ்... “என்று தன் கையை மடக்கி வெற்றி பெற்றதன் அடையாளமாக குதித்து கொண்டாள்...அவளின் குழந்தைதனமான ஆர்பரிப்பை கண்டு உள்ளுக்குள் சிரித்து கொண்டவன் காரை திருப்பி அந்த முதியோர் இல்லம் இருக்கும் சாலையில் விட்டான்....
“சே.. இந்த ஒட்டடகுச்சி இப்படி ப்ளீஸ் னு சொல்லியே நம்ம மனசை மாத்திடறாளே... ஒரு வேளை இப்படித்தான் எல்லா பொண்டாட்டிங்களும் அவங்க ஹஸ்பன்ட் ஐ மயக்கறாங்களோ?? “ என்று உள்ளுக்குள் ஆராய்ந்தவன்
“எதுக்கும் இவகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்...இனிமேல் இவ சொல்றதை எதையும் கேட்க கூடாது.... “ என்று மீண்டும் தன்னுள் உறுதி செய்து கொண்டான் நிகிலன்....
மதுவோ அந்த ரமணியை பார்க்கும் ஆவலில் மகிழ்ச்சியாகி ஆர்வத்துடன் வெளியில் வேடிக்கை பார்த்து வந்தாள்...
ஏற்கனவே தன் மருமகளின் மீது வெறுப்பாக இருக்கும் ரமணி மதுவை எப்படி வரவேற்க போகிறார்?? அவரை காண ஆவலோடு செல்லும் மதுவின் மகிழ்ச்சி இதே மாதிரி நீடிக்குமா?? பார்க்கலாம்..
Comments
Post a Comment