தவமின்றி கிடைத்த வரமே-43



அத்தியாயம்-43 

சீகரன் மற்றும் பனிமலர் வாழ்வில் வந்த பிரச்சனைக்கு மூல காரணமே மித்ரா தான் என ஷ்யாம் கூற அதை கேட்டு அதிர்ந்து எழுந்தான் வசீகரன்...

“ஷ்யாம்... நீ என்ன சொல்ற ? “ என்றான் மீண்டும் நம்பாமல்..

“யெஸ் டா.. உனக்கும் சிஸ்டர்க்கும் நடுவுல பிரச்சனை வந்ததுக்கு மூல காரணமே மித்ரா தான்... மித்ரா உன் மேல் வைத்திருக்கும் காதல்.. இல்லை..இல்லை.. பைத்தியம் தான் காரணம்.. “

“டேய்.. நீ என்ன டா சொல்ற? என்னால நம்பவே முடியலை..கொஞ்சம் புரியற மாதிரி சொல்.. “

“ஹ்ம்ம் நம்பித்தான் ஆகணும் வசி.. நீ திடீர் கல்யாணம் பண்ணிக்க போறதை கேட்ட பொழுதே அதை நிறுத்துவதற்காக வேகமாக வந்தாள் மித்ரா. நான் தான் அவளை கட்டு படுத்தி உன் கல்யாணத்தை நடக்க வைத்தது.. அப்பயே உன்னை இழந்து விட்டதாக தவித்தாள்..

நானும் அவளுக்கு அட்வைஸ் பண்ணி விட்டு விட்டேன்.. சரி அதற்கு பிறகு அவள் பனிமலரிடம் சகஜமாக பேசவும் அவள் உன்னை மறந்து விட்டாள் என எண்ணி இருந்தேன்..

கடைசியில் இப்படி ஒரு பிரச்சனையை இழுத்து விட்டிருக்கிறாள்..” என்றவன் நடந்த ட்ராமா வை சுருக்கமாக விவரித்தான் ஷ்யாம்...

அதை கேட்டு இன்னும் அதிர்ந்து போனான் வசீகரன்..

“ஓ.. அப்ப மிது தான் பனிமலர்கிட்ட அந்த கருத்தடை மாத்திரைகளை ரெகமண்ட் பண்ணினதா? “ என்றான் வேதனையுடன்..

“ஆமான்டா .. அதுவும் நீ ஒரு வருடம் சந்தோஷமாக இருந்த பிறகு தான் குழந்தை வேண்டும் என்று சொன்னதாக சொல்லி சிஸ்டரை அதை வாங்க வைத்திருக்கிறாள்..”

“ஓ மை காட்... மிதுவா இப்படி? நான் எத்தனை தரம் அவளிடம் சொல்லி இருக்கிறேன் எனக்கு குழந்தைங்க என்றால் ரொம்ப பிடிக்கும்.. குறைந்தது மூன்று குழந்தையாவது பெத்துக்கணும்..

அதுவும் என் குழந்தையை அவதான் பிரசவம் பார்க்கணும்..அவ கையால் தான் என் குழந்தை பிறக்கணும்.. என்று எத்தனை ஆசைகளை சொல்லி இருக்கிறேன் அவளிடம்.. அதை எல்லாம் கூடவா மறந்து விட்டாள்..??

அவ போய் எனக்கு இப்படி ஒரு துரோகத்தை பண்ணுவாள் என்று நினைத்து கூட பார்க்கவில்லை ஷ்யாம்.. “ என்று இடிந்து போய் அருகில் இருந்த இருக்கையில் தொய்ந்து போய் அமர்ந்தான் வசி..

ஷ்யாம் அவன் கையை மெல்ல அழுத்தி கொடுத்தவன்

“ரிலாக்ஸ் வசி... இதெல்லாம் மித்ரா தானா செய்யலை.. உன் மேல் இருக்கிற பைத்தியக்காரத்தனம் தான் அப்படி செய்ய வச்சிருக்கு..ப்ளீஸ் டா... அவளை வெறுத்திடாத.. அவள் வில்லி இல்லை.. நல்லவள் தான்.. “ என்று மித்ராவுக்காக சப்போர்ட் பண்ணினான் ஷ்யாம்...

வசி இடிந்து போய் சிறிது நேரம் தன் தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தவன்

“ஹ்ம்ம்ம் சரி விடு.. இப்ப என்ன செய்ய? “ என்றான் இன்னும் வேதனையுடன்

“உன் மீதும் தப்பு இருக்கு டா.. நீ மித்ராகிட்ட சிஸ்டரை லவ் பண்றதை சொன்னிியா?”

“இல்லடா.. அதை சொன்னால் அவ ரொம்ப டிஸ்டர்பா இருப்பானு என் காதலை அவளிடம் சொல்லலை.. அவசரமாக நடந்த திருமணம் என்ற ரீதியில்தான் மிது கிட்ட சொல்லி இருந்தேன்..”

“அது தான் தப்பு.. அவசர கல்யாணம் தானே.. அதனால் ஈசியா உங்க இரண்டு பேரையும் பிரித்து விடலாம் என முடிவு செய்து இந்த மாதிரி செய்திருக்கிறாள் மித்ரா..

நீ சிஸ்டரை காதலிப்பதும், காதலித்ததால் தான் மணந்தாய் என அவளுக்கு தெரிந்திருந்தால் கண்டிப்பா உன்னை விட்டு விலகி இருப்பா... “

“ஹ்ம்ம்ம் சரி டா..என் தப்புதான்..இப்ப என்ன செய்ய? எப்படி மித்ராவை திருத்துவது? பனிமலர் வேற கோவிச்சுகிட்டு இருப்பா.. அவளை சமாதானம் படுத்தனும்... “

“ஹ்ம்ம் இரு.. அடுத்து என்ன செய்யணும்னு பாரதி சிஸ்டர் கிட்ட கேட்கலாம்.. “

“என்னது? பாரதியா ? யூ மீன் ஆதி வைப் பாரதியா? அவங்க எங்க இங்க வந்தாங்க ? “ என்றான் வசி லேசாக அதிர்ந்தவாறு..

“ஹீ ஹீ ஹீ ஆக்சுவலா உன் வைப் உடைய பிரச்சனையை கண்டு பிடித்தது பாரதி தானாம்..நீ சிஸ்டர்கிட்ட பேசாம முகத்தை திருப்பிகிட்டு போகவும் அவங்களுக்கு என்ன பிரச்சனை என்றே தெரியாமல் குழம்பி போய் பாரதி கிட்ட புலம்பி இருக்காங்க..

பனிமலர் சிஸ்டர் சொன்னதையெல்லாம் வச்சு இதெல்லாம் மித்ராவால தான் இருக்கும் அப்படீனு கரெக்ட் ஆ கெஸ் பண்ணிட்டாங்க.. அவங்கதான் மித்ரா பத்தி சொல்லி என்கிட போய் பேச சொல்லி பனிமலரை அனுப்பி வச்சிருக்காங்க...

அதுக்குத்தான் நேற்று பனிமலரை மீட் பண்ணினேன்... அதோடு அவங்க மித்ரா மீதான என் காதலையும் போட்டு வாங்கிட்டாங்க.. அதுக்கு தான் நேற்று நாங்க இரண்டு பேரும் சிரிச்சுகிட்டிருந்தோம்.. அப்பதான் நீ எங்களை பார்த்து இருப்ப..”

“ஓ... ஒரு கேங் ஏ தீயா வேலை செய்யும் போல என் பிரச்சனையை தீர்க்க.. !! “ என்று சிரித்தான் வசி கொஞ்சம் இலகுவாகி..

“ஹீ ஹீ ஹீ ஆமாம் டா... பாரதி இப்ப சைக்காலஜிஸ்ட்..

உன்னால ஒரு இதயத்துல என்ன பிரச்சனைனு கண்டு புடிச்சு அதை சரி பண்ணி மீண்டும் இயங்க வைக்க மட்டும்தான் முடிகிறது.. அதுக்குள்ள என்ன இருக்குனு கண்டுபிடிக்க முடியலையே...

ஆனால் அந்த இதயத்துக்குள்ள இருக்கிற மனசுக்குள்ள என்ன இருக்கும் னு கரெக்டா அவங்க சொல்லிடறாங்க போல.. அதோடு அதை எப்படி ஹேண்டில் பண்ணுவது என்பதையும் தான்..

சரி இரு.. நான் பாரதிக்கு கால் பண்றேன்.. “ என்றவன் பாரதி எண்ணிற்கு அழைத்து ஸ்பீக்கரில் போட, பாரதியும் அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் அவர்களின் நலம் விசாரித்து பின் நேராக விசயத்துக்கு வந்தாள்..

“இப்பொழுது மித்ராவை அவளுடைய மாய உலகில் இருந்து வெளி கொண்டு வருவது தான் முக்கியம். அவள் தன் தவறை பைத்தியக்காரத்தனத்தை புரிந்து கொண்டால் தான் அடுத்து இது மாதிரி எதுவும் கிறுக்குத் தனம் செய்யாமல் இருப்பாள்...

அதோடு அவளுடைய வாழ்க்கையையும் சரி செய்ய முடியும்..

அவளை வெளில கொண்டு வர ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கணும்... அதுதான் ஆபரேஸன் மித்ரா...” என்று சொல்லி சிரித்தவள் வசி மற்றும் ஷ்யாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று விளக்க, அதை கேட்டு வசி அதை ஒத்துக்கொள்ள மறுத்தான்..

“வேண்டாம் பாரதி... என்னால் இது முடியாது.. வேற ஏதாவது ப்ளான் பண்ணலாம்.. ப்ளீஸ் இது வேண்டாம்.. “ என மறுத்தான்.

“ஹலோ டாக்டர்.. நீங்க ஒரு பேமஸ் கார்டியாலஜிஸ்ட் னா நான் ஒரு வருங்காலத்தில் பேமஸ் ஆகப்போகிற சைக்காலஜிஸ்ட் ஆக்கும்..மன ரீதியா பாதிக்க பட்டிருக்கிற ஒரு பேசன்ட் க்கு எப்படி ட்ரீட்மென்ட் கொடுக்கணும்னு நான் தான் சொல்வேன்...

அஸ் அ சைக்காலஜிஸ்ட், நான் சொல்றதை நீங்க கேட்டுத்தான் ஆகணும்.. இருங்க.. மித்ராவோட வருங்கால கணவர் ஷ்யாம் அண்ணா.. உங்களுக்கு இதுல ஓகே தான ? “ என்றாள் பாரதி

“ஹ்ம்ம் நீங்க சொல்ற ப்ளானுக்கு ஒகே பாரதி சிஸ்டர்.. ஆனா மித்ராவோட வருங்கால கணவனா ஆவேணு தான் தெரியலை.. “ என்றான் ஷ்யாம் சிரித்தவாறு...

“ஹீ ஹீ ஹீ நோ வொர்ரிஸ் ஷ்யாம் அண்ணா. உங்க டார்லிங் உங்களுக்குத் தான்.. அதுக்கு நான் கேரண்டி.. “ என்று சிரித்தவள் அடுத்து செய்ய வேண்டியதை பட்டியலிட்டாள்..

அரை மனதாக வசியும் அந்த ஆபரேஸன் மித்ரா வுக்கு ஒத்துக் கொள்ள, பாரதி மீண்டும் ஒருமுறை அவள் திட்டத்தை விளக்கி முடித்ததும் அவர்களுக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லி அலைபேசியை அணைத்தாள்..

பாரதியிடம் பேசிய பிறகு வசிக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.. மித்ராவை பற்றி தெரிந்த பிறகும் ஏனோ வசிக்கு அவள் மீது கோபம், வெறுப்பு என எதுவும் வரவில்லை...

தான் நினைத்ததை அடைய துடிக்கும் ஒரு குழந்தையை போலவே தோன்றினாள்.. அவள் தனக்கு செய்த துரோகம் எல்லாம் ஏதோ விளையாட்டு பிள்ளை அது செய்யும் தவறு தெரியாமல் செய்ததை போலவே தான் தோன்றியது அவனுக்கு...

“எப்படியாவது மித்ராவையும் இந்த பிரச்சனையில் இருந்து வெளி கொண்டு வந்து அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்கணும்.. “ என்று எண்ணிய வசிக்கு பாரதி சொன்ன மித்ராவின் வருங்கால கணவன் என ஷ்யாமை அழைத்தது நினைவு வந்தது..

ஷ்யாம் மித்ராவை விரும்புவது வசிக்கும் தெரிந்தது தான்.. ஷ்யாம் மித்ராவுக்கு ஒரு நல்ல கணவனாக இருப்பான் தான்.. மித்ராதான் திருமணத்திற்கு சம்மதிக்காததால் இது பற்றி அவளிடம் பேச முடியவில்லை வசியால்..

பாரதி சொன்ன மாதிரி இந்த அதிர்ச்சி ட்ரீட்மென்ட்க்கு பிறகு மித்ரா சரியான பிறகு எப்படியாவது அவளை கட்டாயபடுத்தி ஷ்யாமை ஏற்றுக்க வைக்கணும்..

ஆனால் இவ்வளவு நடந்த பிறகு ஷ்யாம் மித்ராவை ஏற்று கொள்வானா? “ என்ற யோசனையும் சிறு கவலையும் வந்தது வசிக்கு..தன் நண்பனை நேராக பார்த்தவன்

“ஷ்யாம். நடந்ததை எல்லாம் வச்சு நீ மிதுவை வெறுத்துட மாட்ட இல்ல ? “ என்றான் ஒரு எதிர்பார்ப்புடன்..

“சே சே.. அது எப்படிடா என் உயிரை நானே வெறுக்க முடியும்?.. மித்ரா என் உயிர் டா.. அவளை முதல் முதலா பார்த்த பொழுதே என் இதயத்தில் தோன்றிய சலனம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.. அதிலிருந்தே நான் அவளை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது புரிகிறது..

அவள் என்னை ஏறெடுத்தும் பார்க்காமல் உன் பின்னே சுற்றிய பொழுது கூட அவள் மீது எனக்கு எந்த ஒரு வெறுப்பும் வரவில்லை.. அவள் தன்னையே அறியாமல் ஏதோ செய்து கொண்டிருக்கிறாள் என்று தான் தோன்றும்..

அவளிடம் என் காதலை சொல்ல தைர்யம் இல்லை..அதை சொல்லி அவள் மறுத்து விட்டால் அப்புறம் அவளை மறைந்து நின்னு பார்த்து ரசிப்பதும் முடியாமல் போய்விடும்...

அதனால் அவளை நான் தூரத்தில் இருந்தே பார்த்து ரசிப்பதே போதுமானதா இருக்கும்..

அவளுக்காக இத்தனை வருடமா நான் தவம் இருக்கிறேன் டா..அந்த தவத்துக்கான வரமாக அவ மட்டும் என்னை ஏத்துக்கிட்டா போதும்.. இந்த உலகத்திலயே பெரும் அதிர்ஷ்ட சாலி நான் தான்.. “ என்றான் தழுதழுத்தவாறு...

“ஹா ஹா ஹா.. காதலிக்கிற எல்லாரும் சொல்ற அதே டயலாக் தான்.. தன் காதலி தன்னை ஏற்று கொண்டால் உலகத்திலயே பெரும் அதிர்ஷ்டசாலி என்று...

உனக்குள்ள இப்படி ஒரு காதல் மன்னன் இருப்பது தெரியாமல் போய்டுச்சே.. நீ மிதுவை இவ்வளவு லவ் பண்றது தெரிந்திருந்தால் முன்னயே எதாவது பண்ணி உங்க இரண்டு பேரையும் சேர்த்து வச்சிருக்கலாம்..

நானும் கொஞ்சம் செல்பிஸ் ஆ இருந்திட்டேன்.. மிது எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல் நடக்கறது நடக்கட்டும் என்று விட்டு விட்டேன்...

கெட்டதுலயும் நல்லதுங்கிற மாதிரி எப்படியோ உன்னோட காதல் காவியம் வெளில வந்திடுச்சு...அதை சீக்கிரம் அரங்கேற்றம் செய்திடலாம்...” என்று தன் நண்பனின் வயிற்றில் செல்லமாக குத்தி சிரித்தான் வசி..

ஷ்யாம் லேசாக வெட்க பட்டு சிரித்தவன்

“வசி.. மித்ரா என்னை ஏத்துப்பாளா? அவள் வசதிக்கும் அழகுக்கும் நான் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லையே... “ என்றான் சிறு கவலையுடன்.

“கண்டிப்பா மித்ரா உன்னை ஏத்துப்பா டா.. அவளை பற்றி எனக்கு நல்லா தெரியும்..அவளை சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு.. அதோட வசதி பற்றி நோ வொர்ரீஸ்...நான் அங்கிள் கிட்ட பேசறேன்..

உன்னை மாதிரி ஒரு பொறுப்பான மாப்பிள்ளை கிடைக்க மாட்டானா என்று தவம் இருக்கிறார் அவர்...

மித்ரா மட்டும் ஓகே சொல்லிட்டா எந்த கழுதையையும் மாப்பிள்ளையாக்கி கொள்ள ரெடியா இருக்கிறார்.. “ என்று சிரித்தான் வசி...

“அப்ப என்னை கழுதைங்கிறியா? “ என்று வசியை முறைத்தான் ஷ்யாம்...

“ஹா ஹா ஹா பின்ன இல்லையா ?..மிதுகிட்ட உன் காதலை சொல்லாமல் மித்ரா ன்ற பேப்பர் பின்னாடியே இத்தனை வருஷமா சுத்திகிட்டிருக்கிற தடிமாட்டு கழுதை டா நீ... “ என்று அவன் முதுகில் செல்லமாக அடித்தவன்

“சரி வாடா.. மிது இந்நேரம் வந்திருப்பா... பாரதி சொன்ன ஆபரேஸனை எக்சிக்யூட் பண்ணலாம்..ரிசல்ட் நாம எதிர்பார்த்த மாதிரி வரணும்.. எதாவது சொதப்புச்சு அவ்வளவுதான் என் வாழ்க்கையே சொதப்பிடும்...

அப்பா ஈஸ்..உன்னை கெஞ்சி கேட்டுக்கறேன்.. உன் ஆட்டத்தை இந்த க்ளைமேக்ஸ் உடன் நிறுத்திக்கோ.. என்னை வச்சு செஞ்சதெல்லாம் போதும்..

எவ்வளவு சாப்ட் அன்ட் ரொமாண்டிக் ஹீரோவா இருந்த என்னையே என் பொண்டாட்டிகிட்ட வில்லன் மாதிரி நடக்க வச்சுட்ட...

என்னால முடியல..இனிமேலும் என்னை சோதிச்ச நான் அழுதுடுவேன்...

நாங்க செய்யபோற இந்த ஆபரேஸன் வொர்க் அவுட் ஆகி மிஸ்ஸன் சக்ஸஸ் ஆகணும்.. நீதான் அதுக்கு பொறுப்பு... சொல்லிட்டேன்..“ என்று அவசரமாக அந்த ஈஸ்வரனிடம் முறையிட்டு மிரட்டியவன் அந்த ஆபரேஸன் க்கு தயாரானான் வசி...

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!