தவமின்றி கிடைத்த வரமே-28


அத்தியாயம்-28
வ்வொருவராக அவளுக்கு நலுங்கு வைத்து கொண்டிருந்தனர்.... மலர் வாயிலில் நின்று வருபவர்களை வரவேற்று கொண்டிருந்தாள் புன்னகையுடன்...

அப்பொழுது வசீகரன் நண்பர்களான ஆதி மற்றும் நிகிலன் அன்னையர்கள் ஜானகியும் சிவகாமியும் அங்கு வந்தனர்... வசி திருமணத்திற்கு முன்பே தன் நண்பர்களை பற்றி மலரிடம் சொல்லி இருக்கிறான்....

அவர்கள் குடும்பத்தை புகைப்படத்தில் பார்த்து இருந்ததால் அவர்களை அடையாளம் கண்டு கொண்டு

“வாங்க ஜானகி அத்தை... வாங்க சிவா அத்தை.. எப்படி இருக்கீங்க?? எங்க மற்றவங்க எல்லாம் காணோம்...?? “ என்று சிரித்தவாறு அவர்கள் இருவரையும் வரவேற்றாள் மலர்...

அவளின் சிரித்த முகமும் தங்களை முன்ன பின்ன பார்க்காமலயே அடையாளம் கண்டு கொண்ட அவளின் புத்திசாலிதனத்தையும் கண்டு வியந்தவாறு உள்ளே வந்தனர் சிரித்தவாறு..

“ஹ்ம்ம்ம் வாடி புது மருமகளே !!.... நாங்க சூப்பரா இருக்கோம்... நீ எப்படி இருக்க?? “ என்று சிரித்தவாறு உள்ளே வந்தார் சிவகாமி...

ஜானகியும் அவளை நலம் விசாரித்து

“சிவா.. மலரை பார்க்க அப்படியே பாதி பாரதி மாதிரியும் பாதி மது மாதிரியும் இருக்கா இல்லை.... “ என்றார் அதிசயித்தவாறு...

“ஹ்ம்ம் நானும் அதையேதான் நினைச்சேன் ஜானு...என்ன மருமகளே..?? எப்படியோ சாமியாரா சுத்திகிட்டு இருந்த இந்த வசி பயலையும் வழிக்கு கொண்டு வந்திட்ட போல.... நல்லா முடிஞ்சு வச்சுக்க... “ என்று சிரித்தார் சிவகாமி....

அதை கேட்டவள் கன்னம் சிவக்க,

“வாங்க ஆன்ட்டிஸ்... இவ எங்க முடிஞ்சு வச்சுக்கறது ?? அதான் அவ வீட்ல ஒரு பாட்டி இருக்காங்களே.. ஆடி னு சொல்லி அவளை கூட்டிகிட்டு போய்ட்டாங்களே...” என்று சோகமாக சிரித்தவாறு அங்கு வந்தான் வசீகரன்...

“ஹா ஹா ஹா.. இத்தனை நாளா நீ கல்யாணம் பண்ணிக்காம மீனாட்சியை புலம்ப வச்ச இல்ல.. அதான் அந்த முருகன் இப்ப உன்னை புலம்ப வச்சுட்டான்... “ என்று சிரித்தார் சிவகாமி...

“ஆஹா... அப்ப அந்த அப்பனும் மகனும் சேர்ந்து என் வாழ்க்கையில் விளையாடறாங்களா??... வெரி பேட்.. “ என்றான் சோகமாக...

“ஹ்ம்ம் என் கதை இருக்கட்டும் ஆன்ட்டி.. எங்க நம்ம மச்சான்ஸ் அன்ட் கோ..?? அவனுங்க பொண்டாட்டி புள்ளை வந்த உடனே என்னை மறந்துட்டானுங்களே....” என்று சிரித்தான்...

“ஹா ஹா ஹா... இரண்டு பேருக்குமே ஏதோ அவசர வேலையாம் வசி கண்ணா...அதான் வசு குட்டி விசேசத்துக்கு வர முடியலை.. எங்களை தள்ளி விட்டுட்டாங்க... சரி விடு.. அடுத்த விசேசம் சீக்கிரம் வரும் இல்ல.. அதுல எல்லாம் ஒன்னா சேர்ந்துக்கங்க... “ என்று சிரித்தார் ஜானகி...

பின் மலரும் சிரித்து கொண்டே அவர்களை உள்ளே அழைத்து சென்று வசுந்தராவுக்கு அவர்களையும் நலுங்கு வைக்க சொன்னாள்...அவர்களும் நலுங்கு வைத்து அவளை ஆசிர்வதித்து அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தனர்....

மலரும் தன் நாத்தனார் கன்னத்தில் ரொம்பவே சந்தனத்தை அள்ளி பூசினாள் அவளை சீண்டி சிரித்தவாறு...

பின் தாய் மாமன் வீட்டு சீராக ஜோதியும் சிவசங்கரும் அருகில் வந்து முன்னால் வைத்திருந்த தட்டை எடுத்து கொடுக்க தயாராக, திடீரென்று என்ன தோன்றியதோ ஜோதி தன் மகனிடம் திரும்பி

“இனியா... நீயும் வாடா.. “ என்று தன் மகனையும் அழைத்தார் பரிசை கொடுக்க...

அதை கேட்டதும் திடுக்கிட்டவன் தயங்கி அமர்ந்திருக்க,

“டேய்... எழுந்து வாடா... நீ ஏன் இப்படி வெட்கபட்டுகிட்டு இருக்க..?? வெட்கப்பட வேண்டிய என் மருமகளே எப்படி நிமிர்ந்து உட்கார்ந்திருககா பார்... “ என்று சிரித்தார் ஜோதி...




மீனாட்சி சிவசங்கரை அண்ணனாக பாவித்து தாய் மாமன் முறை செய்ய ஒத்து கொள்ள, இனியவன் வசுந்தராவுக்கும் மாமன் மகன் முறை ஆவதால் வசுந்தரா தனக்கு மருமகள் என்ற ரீதியில் ஜோதி எதார்த்தமாக உறவு முறையை சொல்லி இருக்க, அதை கேட்ட அந்த இளையவர்கள் இருவருக்குமே ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு உள்ளுக்குள்...

தன் அன்னை அழைக்கவும் அவனும் எழுந்து இரண்டே எட்டியில் அவர்களை அடைந்திருக்க, அவர்களை கண்டதும் வசுந்தரா நாற்காலியில் இருந்து எழுந்து நின்றிருந்தாள்...

உட்கார்ந்து இருந்தபொழுது தெரியாத அவள் உயரம் இப்பொழுது அவன் அருகில் நிக்க காண, இனியவனின் தோளுக்கு இணையாக இருந்தாள்..

மெல்லிய உடலுடன் கொடி போல தன் அருகில் நின்றிருந்தவளை காண இனியவன் இதயம் இன்னும் எகிறி குதித்தது...

தடதடக்கும் தன் இதயத்தை அடக்கி கொண்டு தன் பெற்றோர்களுடன் இணைந்து அவளுக்கு அந்த சீர் வரிசை தட்டை கொடுத்தனர் மூவரும்...

பின் அங்கிருந்த நகை பெட்டியை திறந்து அதில் இருந்த லாக்கெட் வைத்த நீளமான தங்க சங்கிலியை எடுத்து ஜோதி வசுவின் கழுத்தில் போடப் போக, அருகில் நின்றிருந்த மாமி

“இருங்க சம்பந்தி மா.. அதான் தாய் மாமனா சீர் செய்யறீங்க இல்லை.. அப்ப மாமன் மகன் இருக்க நீங்க எப்படி செயினை போடலாம்... அவ மாமன் மகன் கிட்டயே கொடுத்து போட சொல்லுங்க... “ என்று சிரித்தார்....

ஜோதியும் சிரித்து கொண்டே

“அதுவும் சரிதான்.. மறந்துட்டேன் மாமி.. நல்ல வேளை ஞாபக படுத்தினிங்க.. இதுக்குத்தான் உங்களை மாதிரி பெரியவங்க வேணுங்கிறது.. “ என்று சிரித்து கொண்டே அந்த செயினை இனியவன் கையில் கொடுத்து

“இனியா... உன் கையாலயே என் மருமகளுக்கு போட்டு விடு டா... “ என்றார்..

அதை கேட்டவன் மயக்கம் போடாத குறைதான்...

“மா.. நான் எப்படி?? “ என தயங்கி நிக்க

“டேய்... இவ இப்ப உன்னோட அத்தை மக.. அதனால தாராளமா போடலாம்.. செயின் போடறது மட்டுமலல்.. அவளை நல்லா பார்த்துக்கறதும் உன் பொறுப்புதான்...

பெத்தவங்களை விட, தாய்மாமனுக்குதான் பொறுப்பும் கடமையும் அதிகம்.. அதனால வசுவை நல்லா பார்த்துக்கறது உன் பொறுப்பு... என்ன புரிஞ்சுதா?? “ என்றார்.

“ஹ்ம்ம்ம் கண்டிப்பா மா... அவளை நல்லா பார்த்துக்குவேன்... “ என்று சொல்லியவன் அந்த செயினை கையில் வாங்கினான்..

வசு ஏற்கனவே எழுந்து நின்றிருக்க, மெல்ல அவள் புறமாக திரும்பியவன் அந்த செயினை இரண்டு கையாலும் பிடித்து கொண்டு அதன் நடுவில் அவள் முகம் பார்க்க, அவளோ வெட்க பட்டு தலை குனிந்து நின்றாள்...

மெல்ல அவள் கழுத்து அருகில் கொண்டு வந்தவன் குனிந்திருந்த அவள் கழுத்தில் அணிவித்தான் அவளையே பார்த்து கொண்டு..

குனிந்திருந்த அவளும் மெல்ல விழி உயர்த்தி பார்க்க, இருவர் கண்களும் ஒன்றோடு ஒன்று கலந்தது அந்த நொடியில்...

விழி வழி உள் இறங்கி இருவர் இதயத்திலும் நிறைந்து இருந்தது மற்றவரின் முகம்....

மீனாட்சி சுந்தர் ஜோடியாக நின்றிருக்க, மலரும் எதேச்சையாக நகர்ந்து நின்றிருக்க, வசியும் அவள் அறியாமல் எழுந்து வந்து அவள் அருகில் நின்று கொண்டான்...

நின்று கொண்டே அங்கு நடப்பவைகளை தன் கேமராவில் பதிந்து கொண்டிருந்தான்....

கூடவே தன் மனைவியை சைட் அடித்த படி...

அப்பப்ப அவள் முகத்தையே க்லோசப்பில் வித விதமான கோணத்தில் எடுத்து வைத்திருந்தான்...

இனியவன் மெதுவாக அந்த செயினை போட்டு கொண்டிருக்க அருகில் நின்றிருந்த மலர்

“டேய்... சோம்பேறி... வீட்லதான் எதையெடுத்தாலும் ஸ்லோவா செய்வ.. சாப்பிடறது முதற்கொண்டு.. இந்த செயினை போடவுமா இவ்வளவு நேரம் ??.. சீக்கிரம் போடுடா... “ என்று கிண்டல் அடித்தாள் சிரித்தவாறு..

அதில் தன் நினைவுக்கு வந்தவன் மேலும் வெட்க பட்டு வேகமாக அந்த செயினை கீழிறக்கி அவள் கழுத்தில் போட்டு விட்டான் சிரித்தவாறு....

அவன் கை விரல்கள் அவள் கழுத்தில் பட, இன்னுமே சிலிர்த்து போனது இருவருக்கும்...

அதோடு அருகில் இருந்த கிண்ணத்தில் இருந்த சந்தனத்தையும் எடுத்து லேசாக அவள் கன்னத்தில் தடவி விட்டான் அவள் கண்ணுக்குள் தொலைந்தவாறு...

பொதுவாக வெறும் தாய்மாமன் மகன் மட்டும்தான் என்று எண்ணி மாமன் மகனையோ அத்தை மகனையோ வைத்து இந்த சடங்குகளை செய்வர்...

அதுவும் நிறைய பெண்கள் விவரம் தெரியாத வயதில் ஆளாகி விடுவதால் இந்த மாதிரி சடங்குகள் செய்வதால் அவர்களுக்கு இந்த சடங்குகளின் அர்த்தம் அவ்வளவாக தெரியாது...

ஏதோ அழகா ட்ரெஸ் பண்ணிக்கலாம் போட்டோ எடுத்துக்கலாம் நிறைய ஸ்வீட் சாப்பிடலாம் என புரிந்திருக்கும்....அத்தை மகன், மாமன் மகன் உடன் அந்த பெண்ணை சேர்த்து கேலி பேசும்பொழுது மற்றவர்களோடு சேர்ந்து சிரித்தாலும் அது அந்த நேரத்தோடு முடிந்து விடும்.....

எதுவும் மனதில் பதிந்திருக்காது... அதையும் மீறி சில பேர் அந்த உறவை சீரியசாக எடுத்து கொண்டு தங்களுக்குள்ளே ஆசையை வளர்த்து கொள்பவர்களும் உண்டு....

அந்த மாதிரி விவரம் தெரியாத சிறு பெண்ணாக இல்லாமல் வசுந்தரா ஓரளவுக்கு உலகம் புரிந்த நன்றாக வளர்ந்தவள்....

இப்ப இருக்கும் மீடியாக்கல் வழியாகவும் மற்றும் அவள் பள்ளி தோழிகள் சொல்லும் காதல் கதைகளை எல்லாம் கேட்டிருந்தவள்....

அப்பொழுது அதில் எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லாமல் சும்மா செவி வழி கேட்பதை எல்லாம் மனதில் ஒரு புறமாக தள்ளி மூடி வைத்திருந்தாள்..

ஆனால் இந்த பருவத்தில் புதிதாக ஒரு ஆண் மகனை காண அதுவும் அவள் கனவு நாயகன் போல இருக்க அவனை பார்த்த உடனே அவள் மனதில் பதிந்து விட்டான்....

பள்ளியில் கேட்ட காதல் கதைகளும் அப்பொழுது ஞாபகம் வந்திருக்க, எல்லாம் சேர்ந்து ஒன்றாக குழப்பி அவளை ஒரு வித புதுவிதமான உணர்வில் ஆட்டுவித்தது...

அதோடு இனியவன் அவளுக்கு செயின் போடவும் அவள் அருகில் நின்று ஒவ்வொன்றாக செய்ய, அவன் அருகாமையில் இன்னும் முழுமையாக கவிழ்ந்து போனாள் வசுந்தரா....

பத்தாதற்கு ஜோதி வேறு புதிதாக மருமகளே என்று அழைக்க ஆரம்பித்திருக்க, அவள் மனதில் அவசரமாக ஒரு கனவு + காதல் கோட்டை உருவாகியது...

ஒருவழியாக எல்லா பார்மாலிட்டிஸ் ம் முடிய, வசுந்தரா பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்...

அவளுடைய அண்ணா அண்ணி காலில் விழ வேண்டும் என அந்த மாமி சொல்ல, வசீகரனும் மலரும் ஜோடியாக நிக்க, இப்பொழுது வசீகரன் தவித்து போனான்...

தள்ளி நின்று பார்க்கையிலயே ஆளை கவிழ்ப்பவள் இப்படி அருகில் மிக நெருக்கத்தில் நிக்க, அவளை கட்டி அணைத்து கொள்ள துடித்த தன் இதயத்தை அடக்கியவன் தங்கள் காலில் விழுந்த தன் செல்ல தங்கையை இருவரும் குனிந்து அவசரமாக தூக்கி,

“நல்லா இருடா.. வசு குட்டி.. எப்பவும் சிரிச்சுகிட்டே சந்தோஷமா ஜாலியா இருக்கணும்.. நீ நினைத்தது எல்லாம் உனக்கு கிடைக்கணும்... “ என்று வாழ்த்த அவள் நினைத்தது என்று சொல்லவும் தானாக அவள் பார்வை இனியவனிடம் சென்றது...

இப்பொழுது அவன் வலுகட்டாயமாக தன் பார்வையை அவளிடம் இருந்து பிரித்து வேறு பக்கம் பார்த்து கொண்டிருந்தான்...

அவளும் ஒரு நொடி அவனை பார்த்தவள் பின் தன் அண்ணா அண்ணியிடம் திரும்பி

“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா... தேங்க்ஸ் அண்ணி.. “ என்று இருவரையும் கட்டி கொண்டாள்...

“அண்ணி.. உங்களுக்குத் தான் ஸ்பெசல் தேங்க்ஸ்.. இந்த மாதிரி பங்சன் பண்ண சொன்னதுக்கு... ஐ ரியலி என்ஜாய்ட்....என் வாழ்வில் மறக்க முடியாத நாள் இது.. “ என்றாள் நெகிழ்ந்து போய்...

அவள் இனியவனுடனான தருணங்களும் குறிப்பாக அவன் அவளுக்கு சந்தனம் பூசியதும் மேலும் அவளுக்கு சங்கிலியை மாட்டிவிட்டதும் என்னவோ பொக்கிசமான தருணங்களாக மனதில் பதித்து வைத்து கொண்டாள்...

பின் அனைவரும் குரூப் குரூப்பாக நின்று போட்டோ எடுத்து கொள்ள, சற்றுமுன் வந்திருந்த வசியின் நண்பன் ஷ்யாம் கேமராமேனாக மாறி அனைவரையும் அந்த கேமராவில் பதிந்து கொண்டிருந்தான்.....

பின் தோட்டத்தில் பப்பே முறையில் உணவு பரிமாறபட்டது...

எதற்கோ இனியவனை அழைக்க வந்த வசுந்தரா என்ன சொல்லி அவனை அழைக்க என புரியாமல் தயங்கி நிக்க, அதை கண்டு கொண்ட அந்த மாமி

“ஏன்டி மா வசு... என்கிட்ட வாய்க்கு வாய் மல்லு கட்டுவ.. இப்ப உன் மாமனை பார்த்து எப்படி கூப்பிடறதுனு தெரியலையா?? அவன் உனக்கு மாமன் முறை வேணும்... உன்னை கட்டிக்க போற முறையும் கூட.... அதனால மாமா னு கூப்பிடு... “ என்று அவள் கன்னத்தை பிடித்து கிள்ளி சிரித்தார்....

இந்த மாதிரி பெரியவர்கள் எதார்த்தமாக ஏதாவது சொல்லி விடுவதுதான் சிறியவர்கள் மனதில் சில நேரம் ஆழ பதிந்து விடுகிறது..

அவர்கள் என்னவோ ஏதார்த்தமாக கேலி பேச சொல்லுவார்கள்.. ஆனால் சிறியவர்கள் அதை கேலி பேச்சு என எடுத்து கொள்ளாமல் சில நேரம் அதுதான் மெய் என புரிந்து தங்கள் மனதில் பதிய வைத்து கொள்வார்கள்..

இரண்டும் கெட்டான் நிலையில் இருந்த வசுந்தராவுக்கும் அப்படித்தான் இருந்தது....எல்லாமே புதிதாக, புது உலகமாக தெரிந்தது...

“மாமாமாமாமா......” என்று மெல்ல மனதுக்குள் சொல்லி பார்க்க, அருகில் சாப்பிட்டு கொண்டிருந்த இனியவனுக்கு புரை ஏறியது...

சாப்பிட்டது மூக்கில் ஏற, இருமியவனை அருகில் நின்றிருந்த மலர் அவன் தலையை ஓங்கி தட்டினாள்..

“ஏன்டா எரும.. பனைமரம் மாதிரி இவ்வளவு உயரமா வளர்ந்திருக்க இல்லை.. இன்னும் எப்படி சாப்பிடறது னு தெரியலை?? “ என்று செல்லமாக திட்டியவள் ஏதோ நினைவு வர திரும்பி தன் கணவனை பார்க்க அவனோ பழைய நினைப்பில் அவளையே தான் குறும்பாக பார்த்து கொண்டிருந்தான்...

இவள் பார்க்கவும் கண் சிமிட்டி குறும்பாக சிரிக்க, மலருக்கு கன்னம் சிவந்து போனது...

தன்னை திட்ட ஆரம்பித்த அக்கா பாதியில் நிறுத்தி கொண்ட அதிசயத்தை நம்பாமல் நிமிர்ந்து அவளை பார்க்க அவளோ தன் கணவனை ஓரப்பார்வை பார்த்தவாறு கன்னம் சிவந்து நிக்க, அவள் பார்வை சென்ற இடத்தை நோக்கினான்...

அங்கு வசீகரன் அவளையே கண்களால் பருகி கொண்டிருக்க, அதை கண்டவன் உள்ளுக்குள் சிரித்து கொண்டான்...இப்பொழுது ஓரளவுக்கு தன் அக்கா மாமாவின் பார்வையின் அர்த்தம் புரிய ஆரம்பித்தது அவனுக்கும்...

ஏனோ அவன் கண்கள் வசுந்தராவை பார்க்க சொல்ல, மெல்ல அவள் புறம் திரும்பி பார்த்தான்...அவளும் அருகில் நின்று கொண்டு இவனையே ஒரு மாதிரி பார்த்து கொண்டிருப்பது தெரிந்தது...

அதை கண்டதும் அவன் இதயம் இன்னும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது,,,,,

“ஐயோ.. பப்ளிக் ல இப்படி பார்த்து வைக்கிறாளே..!! யாராவது பார்த்தால் என்ன ஆகும்..?? “ என்று உள்ளுக்குள் அவளை திட்டி கொண்டவன் உடனே பார்வையை வேற பக்கம் திருப்பி கொண்டான்...

அதன் பின் அவள் பக்கமே திரும்பவே இல்லை....

வசுவும் ஒரு தட்டில் தனக்கான உணவை எடுத்து வைத்து கொண்டு மலர் அருகில் வந்து நின்று கொண்டு சாப்பிட்டு கொண்டிருக்க, மலர் உணவை எடுக்க நகர்ந்து சென்றாள்..

உடனே வசியும் அவள் பின்னால் செல்ல, இனியவனும் வசுந்தராவும் மட்டும் அங்கிருந்தனர்...

மெல்ல அவன் அருகில் வந்தவள்

“மாமாமாமா.... “ என்று மெல்ல கிசுகிசுத்தவாறு அழைக்க, மீண்டும் புரை ஏறியது அவனுக்கு...

“என்னாச்சு மாமா?? ஏன் இப்படி சாக் ஆகறீங்க?? “ என்று கன்னம் குழிய சிரித்தாள் வசு..

“ஹே.. என்ன இது?? மாமாங்கிற?? “ என்றான் அதிர்ந்து போய்..

“ஹ்ம்ம் அந்த மாமிதான் சொன்னாங்க... நீங்க எனக்கு மாமாவாம்...அதனால் உங்களை மாமா னுதான் கூப்பிடணுமாம்.. நீங்களும் தான அவங்க சொன்னதை கேட்டீங்க இல்ல... அதான் மாமா னு  கூப்பிடறேன்.. என் செல்ல மாமாமாமா.... “ என்று குறும்பாக கண் சிமிட்டி சிரித்தாள்...

அதை கேட்டதும் இன்னும் அதிர்ந்து போனான்.. அவன் அப்படி கூப்பிடாத என அவளிடம் மறுத்து ஏதோ சொல்ல வர, அதற்குள் மலர் அங்கு வந்து விட, தான் சொல்ல வந்ததை பாதியில் நிறுத்தி கொண்டான்...

“ஹே வசு... இந்த டிஸ் நல்லா இருக்கு.. இதை டேஸ்ட் பண்ணு... “ என்று மலர் அவளுக்கு சஜஸ்ஸன் சொல்ல, இனியவனோ விட்டால் போதும் என்று நழுவி பெரியவர்கள் இருந்த பக்கம் சென்று நின்று கொண்டான்...

வசியும் ஷ்யாம் இடம் இனியவனை அறிமுக படுத்தி வைக்க, ஷ்யாம் அவனின் படிப்பை பற்றி விசாரிக்க, உடனே அவனும் ஆர்வமாகி ஷ்யாம் கேட்ட கேள்விகளுக்கு விளக்கங்களை கொடுத்தான்...

ஆனாலும் நடுநடுவில் அவன் பார்வை அவனையும் மீறி வசுந்தராவிடம் சென்று நின்றது...

இவன் பார்க்கும் நொடிகளில் எல்லாம் அவளுமே இவனையே பார்த்து குறும்பாக கண் சிமிட்டினாள்...

அதை கண்டு மேலும் அதிரிந்தவன்

“அன்னைக்கு பார்த்தப்ப அவ்வளவு அமைதியா இருந்தா.. திடீர்னு இப்படி டெரர் ஆ மாறிட்டாளே...!! இனியா உனக்கு ஆப்பு காத்து இருக்குது.. ஜாக்கிரதை..... “ என்று தனக்குள் சொல்லி கொண்டவன் அதன் பின் அவள் பக்கம் திரும்பவே இல்லை...

விழா இனிதாக முடிந்திருக்க வந்திருந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் தாம்பூல கவரை கொடுத்து நன்றி சொல்லி அனுப்பி வைத்தனர் மீனாட்சியும் சுந்தரும்..

அவர்கள் அருகில் நின்று கொண்டு தாம்பூல பைகளை எடுத்து அவர்களிடம் கொடுத்து கொண்டிருந்த மலரை கண்டவர்கள் மீனாட்சியிடம் அவர் மருமகளை பெருமையாக பாராட்டி விட்டு செல்ல, மீனாட்சிக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது..

“இத்தனை நாள் நான் காத்திருந்தது வீண் போகலை.. அந்த ஈஸ்வரன் என் குடும்பத்துக்கு ஏற்ற மருமகளையே அனுப்பி வச்சுட்டான் .. அதோடு எனக்கு ஒரு அண்ணன் இல்லாத குறையையும் தீர்த்து வச்சுட்டான்.. ரொம்ப நன்றி ஈஸ்வரா... “ என மனம் உருகி நன்றி சொன்னார்.....

பின் அனைவரும் கிளம்பி சென்றிருக்க, மலரும் தன் குடும்பத்துடன் கிளம்ப ஆயத்தமானாள்...

மீனாட்சிக்கு அவளை அனுப்பவே மனம் இல்லை....

“மலர்... பேசாம இங்கயே இருந்திடேன்.. “ என்றார் ஏக்கமாக..

“அத்தை... இன்னும் ஒரு வாரம்தான.. அதுக்கு பிறகு இங்கதான இருக்க போறேன்.. நீங்களே ஏன்டா இவ வந்தானு சொல்ல போறீங்க பாருங்க...

இன்னும் ஒரு வாரம் நீங்க பிரியா இருந்துக்கங்க.. அதுக்கப்புறம் என் தொல்லை எப்பவும் உங்களுக்குத்தான்.. “ என்று சிரித்தாள் .....

வாய் தன் மாமியாரிடம் பேசினாலும் கண்கள் என்னவோ தன் கணவன் மீதே இருந்தது...அதை கண்டு கொண்ட மீனாட்சி

“என்ன மருமகளே.... நீ சொன்ன தெல்லாம் எனக்கு மட்டும்தானா ?? இல்லை வேற யாருக்கோ குறிப்பு காட்டறியா?? எனக்கென்னவோ நீ எனக்கு மட்டும் சொன்னதை போல இல்லையே... “ என்று அருகில் நின்றிருந்த தன் மகனை ஜாடை காட்டி குறும்பாக கண் சிமிட்டி சிரித்தார்....

“சீ போங்க அத்தை... “ என்று மலர் கன்னம் சிவக்க, வசிக்குதான் பெரும் சோதனையாகி போனது...

அவளிடம் உரிமையோடு வந்து அருகில் நிற்கவும் முடியாமல் அவளை தள்ளி வைக்கவும் முடியாமல் போக, தன்னை அடக்கவே பெரும் கஷ்டபட்டு போனான்....

பின் சிறிது நேரம் அமர்ந்து பேசி கொண்டிருக்க, ஏதோ எடுப்பதற்காக சமையல் அறைக்குள் வந்தாள் மலர்...

ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு திரும்ப, திடீரென்று வலிய கரம் ஒன்று அவள் பின்னால் இருந்து அவளை இடையோடு இழுத்து தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்து கொண்டது....

அதில் திடுக்கிட்டவள் முகம் பார்க்காமலயே யாரென்று புரிந்து விட

"ஐயோ... விடுங்க..யாராவது வந்திட போறாங்க... " என்றாள் மெல்லிய குரலில்.. அவள் குரல் அவளுக்கே கேட்டிருக்குமா என்று சந்தேகம்தான்...

"ஹோய் பொண்டாட்டி... யாராவது வந்தாலும் என்ன பயம்??.. என் பொண்டாட்டிய நான் கட்டி புடிச்சுக்கறேன்.. இதுல என்ன தப்பாம் ?? " என்றான் வசீகரன் அவள் காதருகில் குனிந்து....

அவனின் அந்த சூடான காற்று அவள் காது மடலில் பட்டு உள்ளுக்குள் சிலிர்த்தது... அவள் காது மடல் விரைத்து கொள்ள, இன்னும் சிவந்து போனாள்...

"அப்பா.. உன் காது மடல் கூட உன்னை போலவே சிலிர்த்துக்குது பார்... " என்றவன் மெல்ல அவள் காதை தன் இதழ்களால வருட, பெண்ணவள் இதயம் இன்னும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.....

உள்ளுக்குள் ரயில் ஓட, அடிவயிற்றில் சுளீர் என்ற வலி, இன்பமான அவஸ்தையான வலி பரவியது மலர் உள்ளே....தன் கணவனின் இறுகிய அணைப்பில் நெகிழ்ந்து போனவள் வாகாக அவன் மார்பில் சாய்ந்து கொள்ள, அவனோ இன்னும் போதை ஏறி போனான்...

"ஜில்லு... பேசாம இங்கயே இருந்திடேன்.... உன்னை விட்டு என்னால பிரிஞ்சு இருக்க முடியலை...நான் வேணா மாமா அத்தைகிட்ட சொல்லிடறேன்... நீ இங்கயே இருந்திடு.... ." என்றான் தாபத்துடன்....

அவன் குரலில் இருந்த தாபத்தை கண்டதும் இன்னும் உருகி போனவள்

"ஹ்ம்ம்ம்ம் எனக்கு ஓகே தான்...உங்க மாமனார் மாமியார் எல்லாம் நம்ம பிரசிடென்ட் மாதிரிதான்.. அவங்க கிட்ட அனுமதி வாங்கி எந்த புரயோஜனம் இல்ல மெக்கானிக்... எங்க வீட்டோட பிரைம் மினிஸ்டர் எங்க பாட்டிதான்...

அவங்க கிட்டதான் எல்லா பவர் ம்... அவங்க ஊர்ல இல்லாததால் தான் நான் இவ்வளவு தூரம் வந்தது. அவங்க மட்டும் இருந்தால் என்னை இங்க அனுப்பி வச்சிருக்கவே மாட்டாங்க..

வேணும்னா அவங்ககிட்ட பர்மிசன் வாங்கிட்டு வாங்க... அதுக்கப்புறம் நான் இங்கயே இருக்கறேன்.. " என்றாள் குறும்பாக சிரித்தவாறு

"ஐயோ.. அந்த ஹிட்லர் பாட்டியா..??...நான் மட்டும் உன்னை இங்க வச்சுகிட்டது தெரிஞ்சுது, நம்ம பிரைம் மினிஸ்டர் பாகிஸ்தான் மீது ஏர் ஸ்ட்ரைக் நடத்தின மாதிரி உன் ஊர்ல இருந்தே என் மேல ஸ்ட்ரைக் நடத்திடுவாங்க.....

அப்புறம் இன்னும் ஒரு வாரத்துல வர வேண்டிய உன்னை இன்னும் இரண்டு மாசம் இழுக்கடிச்சாலும் இழிக்கடிச்சிருவாங்க... " என்றான் பயந்தவனாக சிரித்தவாறு

"ஹா ஹா ஹா..... அது.. அந்த பயம் இருக்கட்டும்..... இப்பயாவது தெரிஞ்சுதா ?? இந்த மலர் எப்படி பவர் ஆனவ னு.. " என்று கண் சிமிட்டி சிரித்தாள்..

"ஹா ஹா ஹா உன் பவர்தான் எனக்கு தெரியுமே.... சரி இன்னும் ஒரு வாரம் தாங்கற மாதிரி ஏதாவது கிப்ட் கொடு... " என்று அவளை இறுக்கி அணைத்தவன் அவள் இடையில் மெல்ல கோலமிட, அதில் கிறங்கியவள்,

“கிப்ட் ஆ.. அதெல்லாம் கிடையாது.... “ என சிணுங்கினாள்...

“ஹே.. ப்ளீஸ்... ப்ளீஸ்... " என்று வசி கெஞ்ச

"ம்ஹூம்... " என்று மறுத்தாள் மலர்...

“சரி.. நீ கொடுக்காட்டி போ.. நானே எடுத்துக்கறேன்.. “ என்று தன் மார்பின் மீது முகம் புதைத்திருந்தவளின் முகத்தை கையில் ஏந்தி கிறக்கத்துடன் அவள் இதழ் நோக்கி குனிந்தான்...

சரியாக அதே நேரத்தில்

"மலர்.... " என்று அழைத்தவாறு மீனாட்சி உள்ளே வந்தார்...

அவர் குரலை கேட்டதும் சுதாரித்த மலர் முன்பு தள்ளிய மாதிரி அவன் மார்பில் கை வைத்து தள்ள, இந்த முறை இதை அவன் எதிர்பார்த்து இருந்ததால் அவள் தள்ளியதற்கு அசையாமல் அப்படியே நின்று கொண்டான்...

அவன் பிடியையும் விடவில்லை....

“ஐயோ.. விடுங்க... அத்தை வர்ராங்க.... “ என பதற, அவனோ அவளை விடாமல் இன்னுமே இறுக்கி கொண்டான்....

அதற்குள் அவனிடம் இருந்து திமிறி அவன் கையில் இருந்து வெளி வந்தவள் ஏதோ பாத்திரத்தை எடுப்பவளை போல தள்ளி நின்று கொண்டாள்...

சமையல் அறை உள்ளே வந்தவர் தன் மகனும் சமையல் அறைக்குள் இருப்பதை கண்டு அதிசயித்தார்...

அதோடு அவன் அசடு வழிந்து நின்று கொண்டிருப்பதை கண்டதும் நமட்டு சிரிப்புடன்

"அடடா.. மறுபடியும் நானே கரடியா வந்திட்டனா?? " என்று சிரித்தார்...

அவனும் வெட்கபட்டவாறே

"மா... அது எப்படி மா உனக்கு மட்டும் கரெக்டா மூக்கு வேர்க்கும்.. நான் எங்க ரொமான்ஸ் பண்ணினாலும் கரெக்டா தேடி கண்டு பிடிச்சு வந்திடற? " என்று சிரித்தான்..

மலரோ

“ஐயோ.. மானம் போகுது... இப்படியா பேசுவான் ?? “ என்று உள்ளுக்குள் திட்டி கொண்டே கன்னம் சிவந்து தலையை குனிந்து கொண்டாள்..

“ஹா ஹா ஹா அதுவா கண்ணா...நான் எத்தனை தரம் உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கெஞ்சினேன்.. அப்பல்லாம் முறுக்கிகிட்டு போன இல்ல.. அதுக்கு பனிஸ்மென்ட் தான் அந்த ஈஸ்வரன் உனக்கு இப்படி கல்யாணம் ஆகியும் உன் பொண்டாட்டியை பிரிச்சு வச்சிருக்கார்....

பத்தாதக்கு நீ எப்ப ரொமான்ஸ் பண்ண நினைச்சாலும் அதுக்கு தடையா என்னை அனுப்பி வச்சிடறான் போல... “ என்று கண் சிமிட்டி சிரித்தார்.....

அதை கேட்ட மலர் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் நழுவ முயல

“அடடா.. என்ன மருமகளே.. இப்படி வெட்க படற?? அப்புறம் என் பையன் நேரா உன் பாட்டிய தூக்கிட்டு பேத்திய தூக்கிட்டு வந்திட போறான்... “ என்று சிரித்தார்

“சீ.. போங்க அத்தை... “ என்று கன்னம் சிவந்தவள் வெளியில் ஓடி விட்டாள்...

வசியும் அவளை ரசித்து பார்க்க, தன் மகனின் முகத்தில் தெரிந்த பூரிப்பும் மகிழ்ச்சியையும் கண்டவருக்கு மனம் நிறைந்து நின்றது.....

அவன் கன்னத்தை வருடி

“எப்பவும் இப்படியே சிரிச்சுகிட்டே இரு கண்ணா.. இன்னும் ஒரு வாரம் தான.. மலர் இங்கயே வந்திட போறா... “ என்று வாஞ்சையுடன் வருடினார்...

“ஹ்ம்ம்ம் ரொம்ப தேங்க்ஸ் மா..... “ என்று தன் அன்னையை தன்னோடு சேர்த்து மெல்ல அணைத்து அவர் உச்சியில் முத்தமிட்டான்...

பின் இருவரும் சிரித்தவாறு வெளியில் வர, அதற்குள் ஜோதி மற்றும் சிவசங்கர் அவர்களை தேடி வர, அவரை கண்டதும்

“ரொம்ப சந்தோஷம் அண்ணா.. எனக்கு ஒரு அண்ணா இல்லையே என்ற குறையை தீர்த்து வச்சுட்டீங்க... “ என்றார் மீனாட்சி தழுதழுத்தவாறு..

“இருக்கட்டும் தங்கச்சி... எனக்கும் தான் தங்கச்சி இல்லை...யாருக்கும் தாய் மாமன் சீர் செய்ய முடியலையேனு ஒரு ஏக்கம் இருந்தது.. உன்னால இன்னைக்கு அது தீர்ந்து போச்சு .. “ என்று மீனாட்சியின் தலையில் கை வைத்து தடவி கொடுத்தார்.....

அடை கண்ட சுந்தரும் நெகிழ்ந்து போய்

“ரொம்ப நன்றி மச்சான்.. “ என்றார்..

இரு குடும்பத்துக்குமே அவர்கள் சம்பந்தி என்பது மறந்து மாமா மச்சான் என்ற உரிமையுடன் அழைத்து பேசும் தங்கள் பெற்றோர்களை பார்த்து அந்த இளையவர்களுக்கும் மனம் நிறைந்து இருந்தது...

பின் அனைவரும் விடை பெற்று செல்ல, இனியவன் அனைவரிடம் சொல்லி விட்டு செல்ல அவனையும் மீறி அவன் பார்வை வசுவிடம் வந்து நின்றது...

அவனை பிரிய வேண்டுமே என்ற வலி அவள் கண்ணில் தெரிய, அவனையே ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தாள் வசு...

அடுத்த நொடி எதுவும் யோசிக்காமல் அவள் அருகில் வந்தவன்

“நல்லா படி வசு.. எதாவது டவுட் னா என்கிட்ட கேள்.. “ என்றான் அவளை நேராக பார்த்தவாறு.....

அவளும் அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவள்

“ஹ்ம்ம் சரி மாமா..யூ ஆல்சோ டேக் கேர்... “ என்று குறும்பாக கண் சிமிட்டினாள் சிரித்தவாறு..

அதை கண்டவன் வெட்க பட்டு அவளை பார்த்து செல்லமாக முறைத்தவாறு தலை அசைத்து விடை பெற்று சென்றான்..

வசியும் மனமே இல்லாமல், பிரிந்து செல்லும் தன் மனைவியையே ஆசையோடு தன் விழிகளில் நிரப்பி கொண்டான்...

திருமணம் ஆகி இந்த மூன்று வாரத்திற்கு பிறகு ஓரளவுக்கு கொஞ்சமாக அவளை நெருங்கி விட்டதை போல நிம்மதியாக இருந்தது வசிக்கு....

எப்படியும் தன் அருகில் கொண்டு வந்துவிட்டால் அவளே முழுவதுமாக தன் பக்கம் வந்து விடுவாள் என்று கனவு கண்டான் அந்த மருத்துவன்...

ஆனால் அவன் கனவு அவ்வளவு எளிதாக நிறைவேறி விடுமா?? அந்த ஈசன் தன் திருவிளையாடலை அவ்வளவு எளிதாக முடித்து விடுவானா?? வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்....


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!