என் மடியில் பூத்த மலரே-29



அத்தியாயம்-29

காலையில் கண் விழித்தவள் ஆதியின் கை தன்னை சுற்றி அணைத்திருப்பதை கண்டு திகைத்தாள்...மீண்டும் ஒரு முறை தன் கண்ணை நன்றாக தேய்த்துக் கொண்டு நன்றாக உற்று பார்த்தாள்... அவனே தான் அவளை கட்டி கொண்டு தூங்கி கொண்டிருந்தான்... சிறு பிள்ளையாக பிடிவாத குணத்துடன் தூங்கும் அவனையே சிறிது நேரம் ரசித்து பார்த்து கொண்டிருந்தாள்..

அவளின் பார்வை அவன் உதட்டை தழுவ, தூங்கும்பொழுதும் அதே போல பிடிவாத குணத்துடன் இருந்தன அவன் இதழ்கள்… அவளுக்கு அவன் உதட்டை வருட கைகள் துடித்தன..

அதற்குள் தன்னை சமாளித்துகொண்டு

“அவனை தொட்டு பார்ப்பது, தூங்கற சிங்கத்தை எழுப்பற மாதிரி.. வேணாம் காலையிலயே அவன் கிட்ட வாங்கி கட்டிக்கணும்..” என்று தன்னை கட்டு படுத்தி கொண்டவள் இன்னும் அவன் அருகில் நெருங்கி படுத்துகொண்டு அவன் விடும் மூச்சு காற்றை அனுபவித்தாள்...

பின் நேரம் ஆவதை உணர்ந்து மெல்ல அவன் கையை விளக்கினாள்.. அவனோ இன்னும் அவளை இறுக்கி கொண்டான்.. அவனின் முரட்டுத்தனமான கையை மீண்டும் தன் பலத்தைக் கொண்டு மெல்ல தூக்கி அவன் தூக்கம் களையாமல் அவன் மேல் வைத்து விட்டு குளியல் அறைக்குள் சென்றாள்..

பின் குளித்து முடித்ததும் கீழ சென்று ஜானகிக்கு காலை வணக்கத்தை சொன்னாள் சிரித்தவாறு..

காலையிலயே குளித்து புத்தம் புது மலராக கன்னம் குழிய சிரித்து கொண்டிருக்கும் அவளையே ரசித்து பார்த்தார் ஜானகி.. பின் அவரும் சிரித்து கொண்டே

“என்ன மறுமகளே.. நேற்று சொன்ன மாதிரியே போய் என் பையன் சட்டையை புடிச்சியா?? .எத்தன பட்டனை பிச்சு எடுத்த?? "என்று சிரித்தார் ஜானகி...

"ம்க்க்கூம்.. இல்ல அத்தை.. உங்க பையன் நேத்து டீஷர்ட் அதுவும் டைட்டான டீ ஷர்ட் போட்டிருந்தாரா... அதனால சட்டையும் பிடிக்க முடியலை.. பட்டனையும் பிக்க முடியல.. போனால் போகட்டும் பொழச்சு போங்கனு விட்டுட்டேன்.. “ என்று கண் சிமிட்டி சிரித்தாள்..

“ஹே கேடி.. “என்று இருவரும் பேசிக் கொண்டே பூஜைக்காண ஏற்பாட்டை பண்ண பாரதியும் அவருக்கு உதவினாள்.. பின் இருவரும் பூஜை முடித்து திருநீற்றை எடுத்து நெற்றியில் வைத்துகொண்டனர்.. பாரதி குங்குமத்தை எடுத்து வகிட்டிலும் பின் தன் மாங்கல்யத்திலும் வைத்துக் கொண்டு அதை தன் கண்களில் ஒற்றிக்கொண்டாள்...

அதை கண்டதும் ஜானகிக்கு தன்னை மாதிரியே தன் மறுமகளும் தாலியை மதிக்கிறாளே!! என்று மனம் நிறைந்தது.... பின் கொஞ்சம் திருநீற்றை எடுத்துக் கொண்டு சுசிலாவை தேடிப்போனாள் பாரதி..

அவர் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருக்க, அவர் அருகில் சென்று

“குட் மார்னிங் அத்தை.. எங்க கண்ண மூடுங்க..” என்று சொல்லி அவர் நெற்றியில் அந்த திருநீற்றை வைத்து விட்டாள்...

சுசிலா இதை எல்லாம் வைப்பதில்லை என்றாலும் பாரதியின் செய்கையை மறுக்காமல் ஏற்று கொண்டு பின் அவளுடன் கதை பேசி கொண்டே தங்கள் நடையை தொடர்ந்தனர்...

சிறிது நேரத்தில் விழித்து எழுந்த ஆதி அவன் அருகில் பார்க்க, பாரதி இல்லை என்பதை உணர்ந்து

“கேடி... அதுக்குள்ள எழிந்திருச்சிட்டாளா?? “ என்று சிரித்தவாறே எழுந்து குளியலறைக்கு சென்று முகம் கழுவி ப்ரஸ் பண்ணிக்கொண்டே ஜன்னல் வழியாக தோட்டத்தை பார்த்தான்..

அங்கு சுசிலாவும் பாரதியும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதை கண்டு மனம் நிறைந்து நின்றது... பாரதி தன் இரு அம்மாவையும் சமமாக நடத்துவதை பார்க்கும் பொழுதும், நேற்றிலிருந்தே அவர்கள் முகத்தில் நிலவிய மகிழ்ச்சியும் பூரிப்பும் அவனுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது... நான்கு வருடங்களுக்கு பிறகு திரும்பிய சந்தோஷ நிமிடங்கள்.. இதுக்கெல்லாம் காரணம் இந்த கேடி தான் “என்று சிரித்துக் கொண்டான்...

காலையிலயே குளித்து பூஜை முடித்த அடையாளமாக அவள் நெற்றியில் இருந்த விபூதியும் வகிட்டில் இருந்த குங்குமமும் அப்படியே தன் அம்மாவை நினைவு படுத்தியது அவனுக்கு..

ஜானகி எப்பவும் அதிகாலையிலயே எழுந்து பூஜை முடித்த பின் தான் தன் வேலையை ஆரம்பிப்பார்... இவளும் அதையே பாலோ பண்ண அவனுக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது...

அவன் மனம் தானாக அந்த ஷ்வேதாவை நினைத்தது.. அவளை நினைக்க கூடாது என்றாலும் இது தான் கடைசி முறை என்று அவளை சந்தித்த முதலில் இருந்து அவளின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பாரதியுடன் ஒப்பிட்டான்..

ஷ்வேதா ஒரு நாளும் காலையில் அவனுக்கு முன்னாடி எழுந்ததில்லை.. அவன் அலுவலகம் கிளம்பி சென்றதும் தான் எழுவாள்.. அதே மாதிரி அவளை ஒரு நாளும் பூஜை அறையில் பார்த்ததில்லை... அதோடு தன் அம்மாவிடமும் அவள் நெருங்கியதும் இந்த மாதிரி சிரித்து பேசியதும் இல்லை....

“அவளின் நோக்கம் எல்லாம் நான் மட்டுமே.. என்னை கைக்குள்ள போட்டுக்கறதிலயே குறியா இருந்திருக்கா.. அது கூட உண்மையான அன்பால் இல்லை... வெறும் நடிப்பால்...” என்று நினைத்தவனின் உடல் விரைக்க ஆரம்பிக்க, அதே நேரம் பாரதி சொன்ன “அவளை நினைக்கும் பொழுதெல்லாம் எங்களை , உங்க இளவரசியை நினைச்சுக்கங்க..” என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட்டது நினைவு வர, ஷ்வேதாவால் அவன் உள்ளே எரிய ஆரம்பித்த நெருப்பு பாரதியின் மருந்தால் அப்படியே சாரல் மழை பொழிந்து உடனேயே அனைந்து போனது..

தன்னுள் வந்த கோபத்தையும் அது அனைந்த வேகத்தையும் உணர்ந்து,

“நானா இது?? எப்படி இப்படி மாறினேன்?? 4 வருடமா என்னுள் எரிந்த இந்த நெருப்பை இந்த கருவாச்சி தன் ஒரு முத்தத்தால் அனைத்து விட்டாளே...!!! சரியான கேடி தான்.. “என்று சிரித்து கொண்டான்...

“எப்படியோ... அந்த ஷ்வேதா பிசாசிடம் இருந்து தப்பியாச்சு... இனிமேல் அவள் யாரோ... அவளை பற்றி நினைக்க கூடாது.. “ என்று நினைத்தவனுக்கு இரவில் அவன் நினைத்த தன் மனைவி மகள்.. என்றது நினைவு வந்தது..

“அப்படி என்றால் இவளை என் மனைவியாக ஏற்றுக்கொண்டேனா?? .. “ என்று அவனையே கேட்டு கொண்டான்...அதில் அவனுக்கு சாதகமாக பதில் வர, அவன் உள்ளம் மகிழ்ந்தது...

அப்பொழுது தான் அவனை பார்த்து அவள் சொன்ன

“எனக்கு உங்களை பிடிக்கலை.. அதுவும் ஏற்கனவே ஒருத்தியோடு வாழ்ந்தவனுக்கு இரண்டாம் தரமா என்னால வரமுடியாது.. நான் என் காதலனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்... உங்களால முடிஞ்சதை பாருங்க.....”

என்பது நினைவு வந்தது

“அப்படி என்றால் அவள் வேற ஒருத்தனை விரும்புகிறாளா?? “ என்று எண்ணியவனுக்கு மனம் எல்லாம் கசந்தது... அதே நேரம் திருமணத்தின் பொழுதும் மற்றும் காரில் வரும் பொழுதும் பாரதியிடம் இருந்து அடிக்கடி வந்த போன அந்த பார்வைக்கு என்ன அர்த்தம்??

அவளுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால், என்னை ஏன் அவ்வளவு ஆசையாக பார்த்தாள்?? ... இதில் அவள் சொன்னது பொய்யா இல்லை இப்ப இருப்பது நடிப்பா?? “ என்று யோசித்தவனுக்கு குழப்பம் தான் அதிகமானது...

குளியல் அறைக்கு சென்றவன் தன் முகம் கழுவி டவலால் அழுந்த துடைத்து பின் அறைக்கு வந்தவன் அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து தலையை இரண்டு கையால் பிடித்துகொண்டு சிறிது நேரம் யோசித்தான் .. பின் ஒரு முடிவுக்கு வந்தவனாக

“அவளின் கடந்த காலம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை... அவள் விரும்பியோ விரும்பாமலோ எங்கள் திருமணம் நடந்துவிட்டது.. .அக்னி சாட்சியாக அவள் கழுத்தில் நான் தாலி கட்டி இருக்கிறேன்.. இனி அவள் என் மனைவி.. எனக்கு மட்டுமே சொந்தமானவள்..

இனிமேல் அவளை இழக்க முடியாது.. இந்த வீட்டின் சந்தோசம், மகிழ்ச்சி, நிம்மதி எல்லாம் நிலைத்து இருக்கணும்னா அவள் இங்கு இருக்கநும்.... என் மனைவியாக இருக்கணும்.. இனிமேல் அவளை என்னால் விட முடியாது.. இனி என் வாழ்வில் மை பேபி இந்த பட்டிகாடு, மை மாம்ஸ் மட்டுமே!!

அவள் அப்படியே வேற ஒருத்தனை விரும்பி இருந்தாலும் அவளை அதை மறக்க வைத்து என்னை விரும்ப வைப்பேன்.... கண்டிப்பா அவளுக்கும் என் மேல் விருப்பம் இருக்கிறது.. அதனால் சீக்கிரம் மாறி விடுவாள்“

என்று உறுதி கொண்டவன் தன் காலை உடற்பயிற்சிகளை தொடங்கினான்..

ஜாகிங்க் முடித்து வந்தவன் காபி கேட்க, பாரதி தயங்க, ஜானகி அவளை பிடித்து தள்ளி விட தயங்கியவாறே காபியை எடுத்து வந்தாள்...

அவளை அருகில் காணவும் மாடியில் இருந்து பார்த்ததை விட இன்னும் அசத்தலாக இருந்தாள்...கழுத்தில் மின்னும் புதுத்தாலியும் கண்களில் இருந்த நாணம்+பயம் என்று எல்லாம் கலந்திருந்த அவளின் அந்த அழகு முகத்தையே ரசித்தவன் தன்னை சமாளித்துக் கொண்டு

“ஏய்.. ஒரு காபி எடுத்து வர இவ்வளவு நேரமா?? .. இனிமேல் நான் வருவதற்குள் எல்லாம் ரெடியா இருக்கனும்.. என்ன புரிஞ்சுதா??.. “ என்று அதட்டினான் உள்ளுக்குள் சிரித்தவாறு...

அவளும் தலை அசைத்தாள்..

பின் ஜானகியிடம் சென்று ஆபிஸ் கிளம்புவதாக கூறவும் இன்னும் கொஞ்சம் நாள் இருந்துட்டு போ கண்ணா என்றார்..

“இல்ல மா.. நிறைய வேலை இருக்கு... உங்க பேத்தி பிறக்கறப்போ வேற நிறைய லீவ் எடுக்கணும்... அதுக்குள்ள இப்பவே கொஞ்சம் எல்லாம் க்ளியர் பண்ணி வச்சுடறேன்....அப்பதான் பின்னால ப்ரீயா இருக்க முடியும் “ என்றான்..

சுசிலாவும் கிளம்புவதாக கூற, ஆதியே ட்ராப் பண்ணுவதாகவும் இரவு நேராக இங்க வந்து விடுமாறு கூறினான்...

அதன்படி அவன் மேல சென்று குளித்து அலுவலகம் செல்ல தயாராகி கீழ வந்து காலை உணவை சாப்பிட, பாரதி ஆதிக்கும் சுசிலாவுக்கும் பரிமாறினாள்...

சாப்பிட்டு முடித்தவன் அவளை மேல அழைக்க, அவளும் அவனை தொடர்ந்து சென்றாள்..

உள்ளே சென்றதும் கதவை மூடியவன், அவள் வயிற்றின் அருகில் குனிந்து

“ஹாய் ப்ரின்சஸஸ்... அப்பா ஆபிஸ் போய்ட்டு வர்ரேன்.. நீ பத்திரமா இரு.. “ என்றவன் அவள் புடவையை விளக்கி அவள் வயிற்றுக்கு முத்தமிட்டான்... பின் நிமிர்ந்தவன் அவள் முகம் பார்க்க, அவள் கண்களில் ஒரு எதிர்பார்ப்பு மின்னியது.. அவனையே ஏக்கத்துடன் பார்த்தாள்..

“அவன் புள்ளைக்கு மட்டும் தான் முத்தமிடுவானா?? எனக்கில்லையா?? “என்றிருந்தது அவளின் அந்த ஏக்க பார்வை...

அவள் முகத்தில் தெரிந்த அந்த ஏக்கத்தை, ஆசை பார்வையை கண்டவன் அவளை அப்படியே மார்போடு அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட துடித்தது அவன் மனம்... ஆனாலும் தன்னை கட்டுபடுத்திக் கொண்டவன், அவளை பார்த்து

“பத்திரமா இரு.. நான் வர்ரேன்.. “ என்று தலை அசைத்து விடை பெற்றான்...

அதே ஏக்கத்துடன் அவளும் தலை அசைத்து அவன் பின்னே இறங்கி வந்தாள்... சுசிலாவும் ரெடியாக இருக்க, ஜானகியும் பாரதியும் கார் வரை சென்று வழி அனுப்பி வைத்தனர்.. பின் இருவரும் சாப்பிட்டு தங்கள் கதையை தொடர்ந்தனர்...

அலுவலகம் சென்றவனுக்கோ வேலையே ஓடவில்லை.... நேற்று முழுவதும் ஒரு நாள் அவள் அருகில் இருந்ததால் அவளின் கொழுசு சத்தமும், வாய் ஓயாமல் பேசிய பேச்சும், சிரிப்பும் என்று எதை எடுத்தாலும் அவள் நினைவே!! .. எங்கு பார்த்தாலும் அவளின் அந்த ஏக்க முகமே!!

“சே!! என்ன இது?? .. இப்படி படுத்தறா?? எனக்கு தான் என்னாச்சு.. என்னவோ டீன் ஏஜ் பையன மாதிரி அவ மேல இப்படி தலை சுத்தி போறேன்?? ம்ஹும் இது தப்பு....இதை தொடரக்கூடாது “ என்று தன்னை கட்டுபடுத்தி மதியம் வரை வேலையில் கவனம் செலுத்தியவன் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவள் குரலையாவது கேட்கலாம் என்று ஜானகிக்கு போன் பண்ணினான்...

அவன் எப்படியும் போன் பண்ணுவான் என்று முன்பே எதிர்பார்த்தவர் தன் கணிப்பு தப்பவில்லை என்று சிரித்து கொண்டே பேசிவிட்டு பாரதியிடம் கொடுத்தார்...

அவளும் அதை வாங்கி ஹலோ என்கவும் அவளின் அந்த குரலே அவன் உயிர் வரை பாய்ந்தது அவனுள்..

அவனிடம் பதில் இல்லாமல் போகவும் மீண்டும் “ஹலோ.. இருக்கீங்களா.. “ என்றாள் மெல்லிய குரலில்..

“ஹ்ம்ம்ம்... .” என்று ஹஸ்கி வாய்ஸ் ல் மெல்ல முனகினான் அவனையும் மீறி... அவனின் அந்த குரல் அவள் உள்ளும் என்னென்னவோ செய்தது... அவளுக்கும் ஏனோ அவனை பார்க்க வேண்டும் போல இருந்தது.. அவன் இன்னும் லைனில் இருப்பதை உணர்ந்து

“சாப்பிட்டீங்களா?? “என்றாள் அவனிடம் என்ன பேசுவது என்று தெரியாமல்...அதற்குள் தன்னை சுதாரித்துக் கொண்டவன்

“ஹ்ம்ம் சாப்பிட்டேன்.. என் ப்ரின்ஸஸ் சாப்பிட்டாளா?? “ என்றான் சிரித்தவாறே..

“இப்பவும் அவன் இளவரசியைத் தான் கேக்கறான்... நான் சாப்பிட்டனானு கேட்டா என்ன குறைஞ்சா போய்டுவான.. “என்று திட்டிக் கொண்டவள்

“ஹ்ம்ம்ம் எல்லாம் நேரத்துக்கு சாப்பிட்டா... ” என்றாள் குரலில் எரிச்சலை காட்டி..

அவளின் எரிச்சலுக்கான காரணம் புரிய அவனும் சிரித்துகொண்டே சிறிது நேரம் அவளை வம்பு இழுத்து விட்டு தன் அலைபேசியை துண்டிக்கையில்,

“ஈவ்னிங் சீக்கிரம் வர்ரீங்களா?? “ என்றாள் ஏக்கத்துடன் தன்னையும் மறந்து... அவள் சொன்னதுக்கப்புறம் தான் உறைத்தது அவள் உளறியது.. உடனே தன் நாக்கை கடித்து கொண்டாள் கன்னங்கள் சிவக்க...அதை புரிந்து கொண்டவன்

“ஹ்ம்ம்ம் சீக்கிரம் வர்ரேன்... என் பேபிக்காக.. “ என்று சிரித்தவாறு அலைபேசியை வைத்தான்

அவளின் அந்த குரலில் இருந்தே இப்பொழுது எப்படி இருப்பாள் என்று கற்பனை பண்ணியவனுக்கு அவள் முகத்தை இப்பவே பார்க்கணும் போல இருந்தது...

ஈவ்னிங் சீக்கிரம் வர்ரீங்களா?? என்ற அவளின் குரலே திரும்ப திரும்ப அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது...

“சே!! .. ரொம்ப படுத்தறாளே.. “என்று தன் தலையில் தட்டிகொண்டு நொடிக்கொரு தரம் அவள் பக்கம் தாவிய தன் மனதை இழுத்து வைத்து வேலையை தொடர்ந்தான்..

அப்பவும் சமாளிக்க முடியாமல், மாலை ஐந்து மணிக்கே வீட்டிற்கு வந்து விட்டான்...உள்ளே வந்தவன் கண்கள் தானாக பாரதியை தேட, அவள் சமையல் அறையில் இருக்க, நேராக மேல சென்று ரெப்ரெஸ் ஆகி கீழ வந்தவனை கண்டதும் ஜானகி நமட்டு சிரிப்பை சிரித்தார்...

“என்ன கண்ணா... நிறைய வேலை இருக்குனு காலையில பறந்த.. இப்ப சீக்கிரமே வந்துட்ட.. “ என்று வேண்டும் என்றே அவனை சீண்டினார்...

“ஹீ ஹீ ஹீ ஒரு பைலை இங்கயே வச்சுட்டு போய்ட்டேன் மா.. அதான் சீக்கிரம் வந்துட்டேன்.. “ என்று அசடு வழிந்தான்...

“அப்படியா?? அந்த பைல் பேரு என்ன?? பாரதியா?? .. “என்று கண் சிமிட்டினார்... அதை கண்டு அவன் முகம் வெக்கத்தால் சிவந்தது...அவனின் அந்த மெல்லிய வெக்கம் கலந்த சிரிக்கும் கண்களையும் அவன் குறும்பு முகத்தையும் மனம் குளிர ரசித்தார்... அதற்குள் தன்னை சமாளித்தவன்

“மா... அந்த கேடி கூடசேர்ந்து நீங்களும் நல்லா பேச கத்துகிட்டீங்க.. “ என்று பேச்சை மாற்றினான்..

“ஹா ஹா ஹா “ என்று சிரித்தவர் அவன் அருகில் வந்து அவனுக்கு திருஷ்டி கழித்தார்.. “உன்னை இப்படி சிரித்த முகமா பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..!!! நீ எப்பவும் இப்படியே சிரிச்சுகிட்டே இருக்கணும் கண்ணா.. “ என்று அவனை கட்டி கொண்டு அவன் மார்பில் முத்தமிட்டார்...

அவனும் அவரை அணைத்து சில நொடிகள் நிற்க,

“ம்ஹூம்.. நானும் இங்க தான் இருக்கேன்.. போதும் உங்க கொஞ்சல் ஸ் அத்தை... “ என்று சிரித்த படியே சிற்றுண்டி தட்டை எடுத்து வந்தாள் பாரதி...

“உனக்கு ஏன் டி பொறாமை.. என் பையன் நான் கட்டிக்குவேன்.. உனக்கு வேணும்னா நீயும் உன் புருஷனை கட்டிக்கோ.. “ என்று ஜானகியும் கண் சிமிட்ட, அதை கேட்டு தான் அவனை கட்டி கொண்டாள் எப்படி இருக்கும் என்று யோசித்தவளுக்கு அவன் அன்று மருத்துவமனையில் ஷ்வேதாவை பார்த்த பிறகு தன்னை இறுக்கி அணைத்தது நினைவு வர, கன்னம் சிவந்தது அவளுக்கு...

ஆதியும் அதையே நினைத்து கொண்டு அவளை குறும்பாக பார்த்து,

“ஹ்ம்ம் நான் ரெடி மா... உங்க மறுமக ரெடியானு கேளூங்க.. “ என்று அவளை பார்த்து கண் சிமிட்ட, அவளோ மேலும் சிவந்து

“சீ... ஆசையை பார்... “ என்று ஓடிவிட்டாள்... அவனும் சிரித்துகொண்டே அவள் கொடுத்த சிற்றுண்டியை சாப்பிட்டு விட்டு தான் விட்டு வந்திருந்த வேலையை தொடர தன் அலுவலக அறைக்குள் சென்றான்..

இரவு உணவின் பொழுது சுசிலாவும் வந்துவிட, நால்வரும் அமர்ந்து பேசி சிரித்தவாறே உணவை உண்டனர்.. சுசிலா அன்று மருத்துவமனையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளை கூற, வாய் விட்டு சிரித்தான் ஆதி...

அவனின் அந்த சிரிப்பையே இமைக்காமல் பார்த்து இருந்தாள் பாரதி..

“எவ்வளவு நல்லா சிரிக்கிறான்.. இப்படி இருக்கிறதை விட்டுட்டு எப்ப பார் ஏன் அப்படி மூஞ்சிய தூக்கி வச்சுகிட்டிருந்தான்.. “ என்று யோசித்தாள்..

அப்பொழுதுதான் நினைவு வந்தது..

“ஓ... அவன் தன் அம்மாக்களுடன் இருக்கும் பொழுது இப்படித்தான் கலகலனு சிரிப்பான் போல.. என்னைக் கண்டால் மட்டும் தான் எரிஞ்சு விழுவானாக்கும்.. “என்று தானாக ஒரு விளக்கத்தை கண்டுபிடித்தாள்..

அதை உணர்ந்ததும் அவள் முகம் வாடினாலும் “இருக்கட்டும் இப்படியாவது அவர்கள் முன்னால் சிரிச்சுகிட்டே இருக்கட்டும்....என்னை அவன் அடிக்கடி பார்க்காமல் இருந்துக்கலாம் “ என்று எண்ணி அவனையே ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள்...

எதேச்சையாக திரும்பியன் அவளின் அந்த ரசிப்பு பார்வையை கண்டு கொண்டு, அவளை பார்த்து கண் சிமிட்டி சிரிக்க

அவளுக்கோ வெக்கமாகி போனது.. தன் பார்வையை மாற்றி கொண்டு மறுபடியும் அவன் பக்கம் திரும்பவே இல்லை..

அவர்களின் நாடகத்தை கண்டு கொண்ட ஜானகியும் சுசிலாவும் கண்ணால் ஜாடை செய்து அவர்களுக்குள் சிரித்து கொண்டனர்... 




பின் அனைவரும் சாப்பிட்டு முடித்து ஆதி மேல சென்று விட, பாரதி சுசிலாவிடம் கொஞ்ச நேரம் வம்பு இழுத்து சிரித்து பேசி முடிக்கவும் ஜானகி அவளை அழைத்து அவளுக்கு குங்கும பூ போட்ட பாலை அருந்தவைத்து, ஆதிக்கும் கொடுத்து அனுப்பினார்...

அவளும் அதை வாங்கி கொண்டு மேல செல்ல நேற்று இருந்த தயக்கம் கொஞ்சம் குறைந்து இருந்தது...கதவை தட்டியும் பதில் வராததால், உள்ளே சென்றாள் பாரதி.. பால்கனியில் நின்று போன் பேசிக் கொண்டிருந்தவன் அவளை கண்டதும் உள்ளே வந்து அவளை பார்த்து மெல்ல புன்னகைத்தான்..

அவனின் இந்த மயக்கும் புன்னகை அவளுக்கு புதியதாக இருந்தது... அவள் கண்ணையே நம்ப முடியாமல் அவனையே இமைக்க மறந்து பார்த்தாள்..

“ஏய்.. பட்டிக்காடு.. என்ன இப்படி நேராவே என்னை சைட் அடிக்கிற.. ரொம்பவும் தைரியம் தான் உனக்கு.. “ என்று சிரித்தான் குறும்பாக..

அவன் தன்னை கண்டு கொண்டதை கண்டு முகம் சிவக்க தன் தலையை குனிந்து கொண்டே பாலை அவனிடம் நீட்டினாள்... அவனும் அதை வாங்கி கொண்டு அருந்த அவள் சென்று படுக்கையில் அமர்ந்து கொண்டவளின் பார்வை அந்த குளிர்சாதன பெட்டிக்கே சென்றது...

அவளின் அந்த ஆசையான பார்வையை புரிந்து கொண்டவன் சிரித்துக் கொண்டே அந்த பிரிட்ஜை திறந்து அதில் இருந்த ஐஸ்கிரீமை எடுத்து அவளிடம் கொடுத்தான்..

அதை கண்டதும் அவள் முகம் இன்னும் மலர, அதை வாங்கி ருசித்து சாப்பிட்டாள்.. எப்பவும் போல அவனுக்கும் சேர் பண்ணிவிட்டு சாப்பிட அவனோ அவள் சாப்பிடும் அழகையே ரசித்துகொண்டிருந்தான் அவள் அறியாமல்...

அதை முழுவதும் சாப்பிட்டு முடித்து, அருகில் இருந்த குளியல் அறைக்கு சென்று கை கழுவி விட்டு வர, அவன் அதற்குள் படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தான்.. பாரதியும் விளக்கை எல்லாம் அனைத்து விட்டு அவளும் சென்று படுக்கையில் அமர்ந்து ஒரு தலையணையை எடுத்து சாய்ந்து கொள்ள வைக்க அவனோ அதை பிடுங்கி வைத்து கொண்டு,

“இங்க வா.. என் மேல சாஞ்சுக்கோ.. “ என்றான் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல்..

அவளுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை... அவள் கேட்டது நிஜமா என்று புரியாமல் அவனை பார்க்க, அவன் மீண்டும் அதையே சொல்ல,

“இல்ல.. இருக்கட்டும்.. நான் இப்படியே சாஞ்சுக்கறேன்.. “ என்று தயங்கினாள்..

“ஹோய் பட்டிகாடு.. ரொம்பத்தான் பிகு பண்ணாத.. நேற்று புல்லா என் மேல தான் தூங்கின... தெரியுமா?? “ என்றான் சிரித்தவாறு

“ஆங்க்..நிஜமாகவா?? “என்று தன் பெரிய கண்ணை திறந்து முழித்தாள் நம்பாதவளாக..

“ஆமா... ரொம்ப பிகு. பண்ணாத.. வா... இப்படி சாஞ்சுக்கோ.. “ என்கவும் அவளும் தயங்கியவாறு மெல்ல நகர்ந்து அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்..

முதல் முதலாக ஒரு ஆடவனின் அதுவும் அவள் மனம் கவர்ந்த கணவனின் மார்பில் சாய்ந்தவளுக்கு மனம் எல்லாம் படபட வென்று அடித்து கொண்டது... வானில் சிறகடித்து பறப்பதை போல இருந்தது....

அவளாலயே நம்ப முடியவில்லை.. தன்னை மனைவி இல்லை என்று திட்டியவன் இப்ப எப்படி அவன் மார்பில் சாய அனுமதிக்கிறான்??.. ஒரு வேளை என்னை மனைவியாக ஏற்றுக்கொண்டானா?? “ என்று குழம்பியவளுக்கு, விடை உடனே கிடைத்தது

“இந்த இடம் ஒன்னும் உனக்காக இல்லை... என் பிரின்ஸஸ் க்காக... “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டே அவளை வெறுப்பேற்ற சொல்ல, அவளோ உள்ளுக்குள் நொறுங்கி போனாள்...மேல சிறகடித்து பறந்து கொண்டிருந்தவள் சிறகு ஒடிந்து பொத்தென்று தரையில் விழுந்த மாதிரி இருந்தது

“அப்பனா இவன் இன்னும் என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ள வில்லையா?? ... அவன் செய்யறது எல்லாம் அவன் இளவரசிக்கு மட்டும் தானா?? .. அவள் என் வயிற்றில் இருப்பதால் தான் இவ்வளவு அக்கறையும் பாசமும் மா?? .. அவள் பிறந்து விட்டாள் அவன் என்னை கண்டு கொள்ள மாட்டானோ?? ஆமாம்.. அதான் முன்னாடியே சொல்லிட்டானே என்னை ‘பேபி சிட்டர்னு’.. “ என்று எண்ணி மனம் வாடினாள்...

ஆனாலும் தன்னை சமாளித்து கொண்டு,

“எப்படியோ.. இந்த கொஞ்ச காலமாவது அவன் உடன் இருக்கும் பாக்கியம் கிடைத்ததே.. அதுவே போதும்.. அவன் என்னை மனைவியாக ஏற்றுக்கொள்ளா விட்டாலும் அவன் தான் என் கணவன்.. அவனை நினைத்து கொண்டே வாழ்ந்து விடுவேன்.. “ என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள்...

ஆதி அவள் முகத்தில் வந்து போன மாற்றங்களை கவனிக்க வில்லை.. அவள் தன் மார்பில் சாய்ந்ததும் அவனுக்குமே மழைச் சாரல் அடித்தது அவன் உள்ளே... அவள் தலையை மெல்ல வருட துடித்தன அவன் கைகள்.. .ஆனாலும் தன்னை கட்டுபடுத்திக் கொண்டவன் தன் கையை எடுத்து அவளின் வயிற்றில் வைத்து தன் மகளுடன் கொஞ்ச ஆரம்பித்தான்.

சிறிது நேரம் தன் மகள் மட்டுமே என்று நினைவில் கொண்டு விளையாண்டவன் பாரதியை மனதால் தன் மனைவியாக ஏற்று கொள்ள இப்பொழுது அவள் தன் மனைவி என்ற எண்ணம் வரவும் அவனின் தீண்டல் மாறியது...

மகள் என்ற உணர்வும் அவளை சுமப்பது தன் மனைவி என்ற உரிமையும் கூட சேர அவனின் ஒவ்வொரு தொடுகையிலும் அதை உணர்த்தினான்.. அவன் அவள் வயிற்றில் அழுந்த முத்தமிடுகையில் அவன் மனைவிக்குமான பங்கும் அதில் இருந்தது...

பாரதிக்கு அவன் மனதில் வந்த மாற்றம் தெரியாததால், அவனின் ஒவ்வொரு தீண்டலும், அவன் முத்தமும் அவளுள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது... அதுவும் நேற்றைய அவன் தொடுகைக்கும் இன்றைய தீண்டலுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக தோண்ற, அதை பற்றி ஆராய்ச்சி பண்ண முடியாமல் அவனின் தீண்டலையும் அது தரும் சுகம்+ அவஷ்தையையும் பொறுத்து கொள்ள வேண்டியதாயிற்று...

அவனின் ஒவ்வொரு தொடுகைக்கும் அவளுள் நிகழ்ந்த மாற்றத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருக்க, அவள் படாத பாடு படவேண்டி இருந்தது...தன் உதட்டை பற்களால் அழுந்த கடித்து கொண்டு அந்த சுகமான அவஷ்தையை பொறுத்துக் கொண்டாள்...

எதேச்சையாக அவள் முகத்தை கண்டவன் அவள் முகம் இரத்த சிவப்பாக மாறி இருப்பதையும் அவள் உதடுகள் துடித்து கொண்டிருக்க அதை அவள் கஷ்டப்பட்டு அடக்கி கொண்டிருப்பதையும் கண்டவனுக்கு அப்பொழுதுதான் அவன் தவறு புரிந்தது..

அவள் இன்னும் கன்னிப்பெண் எனபதும், இந்த குழந்தை அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக கூடி மகிழ்ந்து உருவானது இல்லை என்பதும், அவள் மனைவியாகாமல் நேராக தாயானவள் என்பதும் நினைவு வர ,அவன் தொடும் பொழுது அவள் உள்ளே நிகழும் மாற்றங்களை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது இப்பொழுது...

அவன் ஏற்கனவே அந்த சுகத்தை அனுபவித்தவன்.. ஆனால் அவளுக்கு இந்த தீண்டல் புதிது.. அவள் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பாள் என்று நினைத்தவன்

“சே!!. நான் பாட்டுக்கு அவள் உணர்ச்சிகளை புரிஞ்சுக்காமல் அவளை தூண்டி விட்டுட்டேனே...அவளுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்?? ...

இப்படி எல்லாம் என் மனம் மாறும் என்று தெரிந்திருந்தால், முன்பே அம்மா சொன்ன மாதிரி இவளை முறைப்படி திருமணம் செய்திருக்கலாம்... இவளும் எல்லா சுகத்தையும் அனுபவித்தே இந்த ஸ்டேஜ் ற்கு வந்திருக்கலாம்...

அதெல்லாம் விட்டு என்னோட முட்டாள் தனத்தால் இப்படி ஒரு காரியத்தை பண்ணி அவளை ரொம்ப கஷ்டபடுத்திட்டேனோ?? இல்லை ஒரு வேளை இது எல்லாம் அந்த வேலனின் விளையாட்டா?? எனக்கு இப்படித்தான் நடக்கணும் என்று கட்டம் போட்டு அதில் காயை நகர்த்தறானா??

அப்பா முருகா, என் அம்மா உன் பக்தை.. தும்மினால் கூட உன் பேரைத்தான் சொல்லுவாங்க.. அவங்களுக்காவாது என் மண்டைல நல்லா உறைக்கிற மாதிரி முன்னாடியே சொல்லியிருக்கலாம் இல்லை... நான் இவளையே கல்யாணம் பண்ணி இருப்பேனே...இந்த மாதிரி வந்து நின்றிருக்காதே!!

அத விட்டு எதுக்காக என்னை இப்படி தலைய சுத்தி மூக்கை தொட வச்ச?? பாவம் அவளுக்கும் ரொம்ப கஷ்டம்.. எல்லாம் உன் ஆட்டமா?? .. என்ன வச்சு ஏதாவது செய்யறதா இருந்தா சொல்லிட்டு செய் பா... உன் ஆட்டத்தை எல்லாம் என்னால தாங்க முடியாது.. நான் பாட்டுக்கு ஏதாவது சொதப்பி வச்சு இன்னும் என்னை சிக்கலில் இழுத்து விட்டறாத.. “ என்று புலம்பினான் ஆதி..

அதை கேட்டு அந்த வேலன்

“அப்பாடா.. ஒரு வழியா இந்த சிடுமூஞ்சிக்கு இதெல்லாம் நம்ம ஆட்டம்னு புரிஞ்சிருச்சு... ஆனாலும் எத்தன முறை என் பக்தை ஜானகி அவனை திருமணம் செய்து கொள்ள சொல்லி மன்றாடினாள்.. அப்பல்லாம் விட்டுவிட்டு கடைசியில் நான் அடிச்சு சொல்ல வில்லை என்று ப்ளேட்டையே திருப்பிட்டானே...

இவன் திருமணம் வேண்டாம் என்று முறுக்கிகொண்டு இருக்கத்தானே நான் இந்த ஆட்டத்தை ஆரம்பித்து, திட்டம் போட்டு கட்டம் போட்டு என் காயை நகர்த்தினேன்... இப்ப என்னடான்னா என் ஆட்டமே தப்புன்றான்...

ம்ஹூம்...இவனுக்கு இது பத்தாது.. இன்னும் கொஞ்சம் சுத்த விடலாம்...என்னை பற்றி நன்றாக தெரிந்து கொள்ளட்டும்.. ஹா ஹா ஹா..” என்று வில்லன் சிரிப்பை சிரித்துக் கொண்டான் வேல்ஸ் ..

ஆதியோ புலம்பி முடித்து,

“என் பிரின்ஸஸ் பிறக்கிற வரைக்கும் இனிமேல் கொஞ்சம் கவனமா இருக்கணும்..இவளை எதுவும் ரொம்பவும் சீண்டக் கூடாது “ என்று முடிவு செய்தவன் அவன் விளையாட்டை நிறுத்தி கொண்டு கதை சொல்ல ஆரம்பித்தான்..

வழக்கம் போல அன்று அலுவலகத்தில் நடந்ததை சொல்லி கொண்டிருந்தான்... அவன் மார்பில் சாய்ந்திருந்தவளை எதேச்சையாக அவள் தோளின் மேல் கை போட்டு மெல்ல அணைத்துக் கொண்டான்... அவன் அருகாமை கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு பழகட்டும் என்று..

அவளும் அந்த செல்ல அணைப்பில் மயங்கி இன்னும் அவன் மார்பில் நன்றாக சாய்ந்து கொண்டாள்...

பின் எதற்கோ நடுவில் தன் கதையை நிறுத்தியவன்

“ஏய்.. பட்டிக்காடு.. உனக்கு தூக்கம் வந்தால் முன்னாடியே சொல்லு.. நேத்து மாதிரி நான் பேசிகிட்டிருக்கும் பொழுதே தூங்கிடாத.. “ என்றான் குறும்பாக

“ஹ்ம்ம்ம்ம் ஏன் அப்படி நான் தூங்கினாதான் என்னவாம்?? “ என்றாள் அவளும் செல்லமாக முறைத்தவாறு..

“ அப்புறம் அந்த அபிமன்யு மாதிரி ஆகிடுவா என் பேபியும்... “ என்று சிரித்தான்...

“அபிமன்யு வா.. அது யாரு?? “ என்று ஆரம்பித்தாள் பாரதி..

“ஹே... உனக்கு அபிமன்யு கதை தெரியாது?? “

அவளுக்கு அபிமன்யு வின் கதை தெரிந்ததே என்றாலும் அவன் வாயால், ஏற்ற இறக்கத்துடன் அந்த கதையை மீண்டும் கேட்க வேண்டும் போல இருந்தது அவளுக்கு... அதனால் தனக்கு தெரியும் என்பதை மறைத்து கொண்டு

“ம்ஹூம்.. எனக்கு தெரியாதே.. சொல்லுங்க.. சொல்லுங்க.. “ என்று ஆர்வமாக கேட்டாள்..

அவளின் அந்த ஆர்வமான குரலையும் அவளின் படபடக்கும் இமைகளையும் ரசித்தவன்,

“மஹாபாரதத்துல ஒரு கிளைக்கதை தான் அபிமன்யு பற்றியது.. அபிமன்யு தன் அன்னை சுபத்ராவின் வயிற்றில் இருக்கும்பொழுது அவன் தந்தை அர்ஜுனன் நிறைய கதைகள் சொல்வது வழக்கமாம்...

ஒரு நாள் இரவு அர்ஜுனன் போரில் சக்ரவியூகம் பற்றி சுபத்ராவிற்கு விளக்கியிருக்கிறான்.. சக்ரவியூகம் என்றால் என்ன?? அதை எப்படி உடைத்து கொண்டு உள்ளே செல்வது என்று விளக்கியுள்ளான்...இதை சுபத்ராவின் வயிற்றில் குழந்தையாக இருந்த அபிமன்யும் கேட்டு கொண்டிருந்தான்..



துரதிருஷ்டவசமாக அர்ஜுனன் அந்த சக்ரவியூகத்தில் இருந்து எப்படி வெளியில் வருவது, அதை எப்படி அழிப்பது என்று விளக்குகையில் உன்ன மாதிரி தூங்குமூஞ்சி சுபத்ரா தூங்கிவிட்டாளாம்... அதனால் அபிமன்யுவிற்கு அந்த யுக்தி தெரியவில்லை..



பாரத போரில் ஒரு கட்டத்தில் கௌரவர்கள் சூழ்ச்சி செய்து அபிமன்யு தன் தந்தையர் யாரும் இல்லாமல் தனித்து இருக்கும் நேரத்தில் இந்த சக்ரவியூகத்தை அமைக்க, தனியாக இருந்த அபிமன்யு கலங்காமல், தான் குழந்தையாக இருக்கும் பொழுது கற்ற யுக்தியை நினைத்து கொண்டு தைரியமாக அதை உடைத்துகொண்டு உள்ளே சென்றுவிட்டான்...

ஆனால் உள்ளே சென்ற பிறகு தான் புரிந்தது அதில் இருந்து எப்படி வெளியில் வருவது அதை எப்படி அழிப்பது என்று அவனுக்கு தெரியவில்லை.. அதனாலயே கௌரவர்கள் அவனை எளிதாக வீழ்த்தி விட்டார்கள்...



பாரதத்தில் எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமான பகுதி இந்த அபிமன்யுவின் இறப்புதான்.. “ என்று மனம் வருந்தி அந்த கதையை முடித்தான்..

அதனால் தான் நீயும் தூங்கிடாத னு சொன்னேன்.. “ என்று சிரித்தான்...



அதை கேட்டதும் பாரதிக்கும் பாரதத்தில் அதுவே மிகவும் கஷ்டமான, பிடிக்காத நிகழ்ச்சி..ஏன் பாஞ்சாலியை சபையில் துகில் உரியும் பொழுது கூட பாஞ்சாலி மீண்டும் எழுந்து ஜெயிக்கணும், கெட்டவர்களை அழிக்கணும் என்ற கோபம்தான் பாரதிக்கு தோண்றியதே தவிர, பாஞ்சாலிக்காக வருத்தபட தோண்றவில்லை.. ஆனால் அபிமன்யுவின் இறப்பை பற்றி தன் ஆயா கதை சொன்ன பொழுது அதை கேட்டு அப்படி அழுதாள் பாரதி..



அதுவும் அவன் அப்பொழுதுதான் திருமணம் முடித்து அவன் குழந்தை அப்பொழுதுதான் கருவில் உருவாகி இருக்க, அந்த இளம் வீரனை இரக்கமே இல்லாமல் சூழ்ச்சியால் அழித்து விட்டார்களே “ என்று வருந்தினாள்



இரண்டு நாட்கள் அவள் மனம் ஆறவே இல்லை.. அதே மதிரி தான் ஆதியும் உணர்ந்திருக்கிறான் என்று தெரியவும் ஒரு சின்ன அல்ப சந்தோசம் அவள் உள்ளே..இருவரும் ஒரே மாதிரி நினைத்திருக்கிறோம் என்று..



அதோடு அவன் பாரதத்தை இவ்வளவு தெரிந்து வைத்திருப்பது அவளுக்கு இன்னும் ஆச்சர்யமாக இருந்தது... அதையே அவனிடம் கேட்டாள்..

“உங்களுக்கு எப்படி இந்த கதை எல்லாம் தெரிந்தது..?? “ என்றாள் கண்களை அகல விரித்து..



“ஹ்ம்ம்ம் மை டாட் இந்த மாதிரி நிறைய கதை சொல்லி இருக்கார்... ஆபிஷில் எவ்வளவு வேலை இருந்தாலும் இரவு 10 மணிக்கு மேல் படுக்கைக்கு வந்து விடுவார்... என்னை அவர் மார்பின் மேல் போட்டுகிட்டு என் தலையை தடவியபடியே நிறைய கதை பேசுவார்...



ஏன்... அவர் அலுவலகத்தில் நடந்ததை எல்லாம் கூட என்னிடம் அந்த சிறுவயதிலும் கூறுவார்... அம்மாவும் என் கூட இருந்து என்னை தட்டி கொடுப்பாங்க...நான் 10 வயது வரைக்குமே என் டாட் மேலயேதான் தூங்குவேன்.. அது எல்லாம் என் வாழ்வின் பொற்காலம்... He is my hero.. I love my dad so much.. I miss him now… “ என்று நிறுத்தி மூச்சை இழுத்து விட்டுக் கொண்டான்



நானும் அந்த அபிமன்யு மாதிரி என் டாட் வாழ்க்கையை பற்றி கதை சொல்றப்போ எங்கயோ தூங்கிட்டேன் போல.. அதனால தான் நல்லவங்க யார், கெட்ட வங்க யார்னு எனக்கு கண்டுபிடிக்க தெரியாமல் போயிருச்சு..



ஒரு கட்டத்தில் என்னால இந்த தொழிலை அதில் இருக்கும் சூழ்ச்சிகளை, அந்த ஷ்வேதாவின் நாடகத்தை எல்லாம் கண்டுபிடிக்க முடியாமல் போயிருச்சு...



நல்ல வேளையாக அந்த அபிமன்யு மாதிரி வீழ்ந்துவிடாமல் மை டாட் விட்டு சென்ற குறிப்புகளும் மை டூ மாம்ஸ் ம் என்னை காப்பாத்திட்டாங்க..

இல்லைனா நான் எப்போதே.. “ என்று சொல்ல வந்தவன் வாயில் அவசரமாக கை வைத்து பொத்தினாள் பாரதி... அவன் உணர்ச்சி வசப்படுவது புரிந்ததும் மெல்ல அவன் கையை பிடித்து அழுத்தி விட்டாள்...



“அதோடு இதுதான் முதல் முறை அவன் மனம் திறந்து தன்னிடம் பேசுவது..எப்பவும் முறைச்சுகிட்டு இருப்பவன் உள்ளே இப்படி ஒரு இளகிய மனமா?? “என்று ஆச்சர்யபட்டாள்...அதுவும் இந்த 31 வயதில் அவனே ஒரு குழந்தைக்கு அப்பா ஆகிற நிலையில் அவன் அப்பாவிற்காக ஏங்குகிறானே!!



நாம் எவ்வளவு வளர்ந்தாலும் நம்ம பெற்றோர்கள் எப்பவும் ஸ்பெஷல் தான் போல .. “ என்று எண்ணிக்கொண்டாள்



அதற்குள் தன்னை சுதாரித்துக் கொண்டவன்



“என்ன கதை பிடிச்சிருக்கா.. பிரின்ஸஸ்.. “ என்றான் அவள் வயிற்றை பார்த்து சிரித்துகொண்டே... அவன் இளவரசியும் அதற்கு தலை ஆட்டினாள் வயிற்றுக்குள் இருந்து..



பாரதிக்கு ஆச்சர்யம்.. இதெல்லாம் உண்மையா?? ..குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது நாம் பேசுவது கேட்குமா?? .. ஆனால் இவன் பேசும்போதெல்லாம் தன் வயிற்றில் நிகழும் அசைவுகளையும் அவன் கூறுவதற்கு அந்த குட்டியின் ரியாக்சனும் அவளை நம்ப வைத்தது...



ஆனாலும் அவனிடமே தன் சந்தேகத்தை கேட்டாள்..

“நிஜமாகவே நீங்க பேசறது எல்லாம் உங்க புள்ளைக்கு கேட்குமா?? “ என்றாள்..அதை கேட்டவன்



“ஹா ஹா ஹா.. அதுல என்ன சந்தேகம் பட்டிக்காடு.. பேசறது மட்டும் இல்ல... உன் எண்ணங்கள் கூட அவளுக்கு புரியும்... அதனால் தான் நீ மனசுக்குள்ள என்னை திட்டும் பொழுது கூட உன்னை அவ உதைக்கிறா.. “ என்று சிரித்தான்..



“ஐய... ரொம்பத்தான்... ஆமா.. இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்?? “ என்றாள்..

“ஏதோ இரண்டு மூனு புள்ளைங்கள பெத்தவன் மாதிரி பேசறானே..” என்று நினைத்துக் கொண்டாள்..



“ஹ்ம்ம்ம் சுசிலா மா சொல்லி இருக்காங்க.. அதோட Parenting guide, Parenting tips னு குழந்தை வயிற்றில இருக்கும் பொழுதும் அதன் பின்னரும் எப்படி எல்லாம் பார்த்துக்கணும்னு நிறைய புத்தகங்கள் இருக்கு... எல்லாம் அதுல படிச்சு தெரிஞ்சுகிட்டது தான்.. “ என்று கண்ணடித்தான்...



“இதுக்கெல்லாமா புத்தகம் இருக்கு.. “ என்று கண்ணை அகல விரித்தவள்

“ ஏன் How to be a good husband? “ னு புத்தகம் எதுவும் இல்லையா?? .. அத படிச்சாவது ஒரு பொண்டாட்டி கிட்ட எப்படி நடந்துக்கிறதுனு கத்துக்கலாம் இல்ல...எப்ப பார் முறைச்சுகிட்டே இருக்கிறது... “ என்று மெல்ல முனகினாள் அவனுக்கு கேட்காதவாறு...



ஆனாலும் அவள் உதடுகள் அசைவிலிருந்தே அவன் கண்டுகொண்டான் அவள் என்ன சொன்னாள் என்று..



“ஹா ஹா ஹா.. அதுக்கெல்லாம் புத்தகம் தேவை இல்லை பேபி... அது எப்படி னு எனக்கு நல்லாவே தெரியும்.... என் பேபி பிறக்கட்டும்.. அப்புறம் உனக்கு காட்டறேன் நான் எவ்வளவு ஒரு நல்ல ஹஸ்பன்ட் னு ..அதுவரைக்கும் நீ எனக்காக இப்படியே ஏங்கிகிட்டே இருப்பியாம் கருவாச்சி...



ஹ்ம்ம்ம்ம் இன்னும் 3 மாசம் வெய்ட் பண்ணனும்... அதுவரைக்கும் என்னை என்கிட்ட இருந்தே காப்பாத்தறதே பெரும் சோதனையாக இருக்கும் போல... “ என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டான்..



பின் சிறிது நேரத்தில் அவள் அவன் மார்பிலயே உறங்கி இருக்க, அவளை நேராக படுக்க வைத்து அவள் மேல் போர்வையை போர்த்தி அவள் நெற்றியில் முத்தமிட்டு பின் தானும் அவள் அருகில் நெருங்கி படுத்துகொண்டு அவளை கட்டி கொண்டு தூங்கினான் நிம்மதியாக





பாரதி அந்த வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகி இருந்தது... இந்த ஒரு வாரத்தில் நன்றாக ஒட்டியிருந்தாள் அந்த வீட்டில்.. அங்குள்ள வேலைக்காரங்களுக்கும் அவள் பிரியமான சின்ன எஜமானி ஆகியிருந்தாள்.. எல்லாருமே அந்த ஷ்வேதா போனதே நல்லது. இப்படி ஒரு தங்கமான மறுமகள் கிடைக்க தான் அத்தனை கஷ்டம் போல.. என்று சொல்லி கொண்டனர்...

காலையில் ஆதி எழுந்தது முதல் அவன் அலுவலகம் கிளம்பி செல்லும் வரை அவளை அவனுடனே சுத்த வைத்தான்.. ஏதாவது காரணத்தை சொல்லி அவளை அவன் உடனே வைத்துக் கொண்டான்.. ஏனோ அவள் முகத்தை பார்த்து கொண்டே இருக்கணும் போல இருந்தது அவனுக்கு.. அவனை அனுப்பிவிட்டே ஜானகியுடன் நேரம் செலவழிக்க முடிந்தது பாரதிக்கு..

இதை எல்லாம் கண்டு ஜானகிக்கு மனம் நிறைந்து இருந்தது... எப்படியோ பையன் நம்ம வழிக்கே வந்து, பாரதியை ஏற்றுக்கொண்டானே.. அதுவே போதும்.. “ என்று எண்ணி மகிழ்ச்சி கொண்டார் ஜானகி....



என்ன வேல்ஸ்.. ஒரு வழியா நம்ம சிடுமூஞ்சி அய்யனார் பாரதியை மனைவியா ஏத்துகிட்டார்... அப்ப நம்ம ஆட்டத்தை முடிச்சிடலாமா??

வேல்ஸ்: ஹா ஹா ஹா இப்பதான் லீக் ஆட்டம் முடிஞ்சிருக்கு... அடுத்து குவாட்டர் பைனல், செமி பைனல் ,பைனல் ஆட்டம் இல்லாம் இருக்கே.. அதுக்குள்ள எப்படி முடிக்கிறதாம்

ஓ.. அப்ப அடுத்து குவாட்டர் பைனல் ஆ?? சூப்பர்... ஆனாலும் நம்ம ஹீரோ ஆதியை ரொம்ப சுத்த விடாதிங்க வேல்ஸ்.. பாவம்.. இப்பதான் பொண்டாட்டி புள்ளைனு கொஞ்சம் நிம்மதியா இருக்கான்...

வேல்ஸ்: ஹா ஹா ஹா அது அவன் நடந்துக்கறத வச்சு இருக்கு.. என் பிரெண்ட் பாரதியை ஏதாவது படுத்தினான் இன்னும் கொஞ்சம் சுத்த விட்டுடுவேன்.. “ என்று சிரித்தான் வேல்ஸ்..

Comments

  1. அருமையான பதிவு

    ReplyDelete
  2. Apdi chollunga vels idhan madhiri othaya porandha payalugalukellam enga pombala pulaingaloda arumai theriyudhu? papom indha manga payan enna panaporanu

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!