தவமின்றி கிடைத்த வரமே-44
அத்தியாயம்-44
இன்டர்காம் ல் மித்ராவை அழைத்து தன் அறைக்கு வர சொன்னான் வசி..
ஷ்யாம் மித்ரா அறியா வண்ணம் வெளியில் நின்று கொண்டான்..
வசியே தன்னை அழைக்கவும் மகிழ்ந்து போய் அவன் அறைக்கு விரைந்தாள் மித்ரா...உள்ளே வந்தவளை கண்டதும்
“ஹாய் மிது... “ என்று புன்னகைத்தவன்
“உனக்கு ஒரு குட் நியூஸ்..என்னனு கண்டுபிடி பார்க்கலாம்.. “ என்றான் புன்னகையுடன்...
அதை கேட்டு மித்ரா லேசாக அதிர்ந்தாள்.. அவன் முகத்தில் இருந்த சிரிப்பும் குட் நியூஸ் என்று சொல்லவும்
“ஐயோ.. நான் போட்ட ப்ளான் சொதப்பிடுச்சா...வசி மலர் இடையில் இருந்த பிரச்சனை தீர்ந்து போச்சா? “ என அவசரமாக யோசித்தவள் தன்னை மறைத்து கொண்டு
“ம்ஹூம்.. என்னால கெஸ் பண்ண முடியலை டா... நீயே சொல்.. “ என்றாள் உள்ளுக்குள் பதறியவாறு..
“ஹ்ம்ம்ம் வர வர நீ மக்கு ஆய்ட்ட... சரி நானே சொல்றேன்...நான் பனிமலரை டைவர்ஸ் பண்ண போறேன்.. “ என்றான் வரவழைத்த புன்னகையுடன் வார்த்தையை தேடி பிடித்து..
அதை சொல்லும் பொழுதே உள்ளுக்குள் பதறியதுதான்... ஆனாலும் தன்னை மறைத்து கொண்டு மித்ரா வை பார்த்திருந்தான்..
அதை கேட்டு உள்ளுக்குள் துள்ளி குதித்தாள் மித்ரா...
“அப்பாடா.. எப்படியோ என் பிளான் கடைசியில் வொர்க் அவுட் ஆய்டுச்சு..” என்றவள் தன் உற்சாகத்தை மறைத்து கொண்டு
“என்னாச்சு வசி ? “ என்றாள் வரவழைத்த வருத்தத்தை காட்டி..
“ஹ்ம்ம்ம் எல்லாம் உன்னுடைய காதலால் தான் மிது.. எத்தனை நாளைக்குத் தான் நீ என்னையே நினைச்சுகிட்டு இருப்ப.. அதான் உனக்கு உன் ககதலை ஏற்று கொண்டு உனக்கு வாழ்வு கொடுக்கலாம் என்று..
அதோடு மலருக்கும் எனக்கும் செட் ஆகலை..அவள் என்கிட்ட ஒரு பெரிய உண்மையை மறச்சிட்டா.. நீ சொன்ன மாதிரி அன்று அவசரத்துல தான் அவ கழுத்துல தாலி கட்டிட்டேன்.. இப்பதான் என் தவறு புரிந்தது..
அப்பதான் எனக்காகவே காத்துகிட்டிருக்கிற உன் அருமை தெரிந்தது.. அதான் அவளை வெட்டி விட்டுட்டு உன்னோட கை கோர்க்கலாம் என்று..
என்ன உனக்கு ஓகேதான ? “ என்றான் அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தவாறு..
“வாவ்.. இதுக்குத் தான் இத்தனை வருசமா காத்திருந்தேன் வசி... தேங்க்யூ சோ மச்.. “ என்று வேகமாக முன்னே வந்து அவனை அணைத்து கொண்டவள் எக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்..
அதில் பாரதி சொன்னதை போல ஒரு குழந்தையின் உற்சாகம் மட்டுமே தெரிந்தது வசிக்கு.. அதில் காதல் என்று எதுவும் இல்லை எனவும் புரிந்தது அவனுக்கு..
“ஆனால் மிது இதை புரிந்து கொள்ள மாட்டேங்கிறாளே.. “ என்று வருத்தமாக இருந்தது வசிக்கு..
“எப்படியாவது மித்ராவுக்கு தன் மேல் இருப்பது காதல் இல்லை.. அது ஒரு மயக்கம் என்று அவளுக்கு புரிய வைத்து விட வேண்டும்.. “ என்று உறுதி கொண்டவன் அடுத்து பாரதி சொன்னதை எப்படி கேட்பது என்று தயங்கி நின்றான்..
மனக்கண்ணில் பாரதி வந்து அவனை பார்த்து முறைத்து அவள் சொல்லியதை செய்ய சொல்லி விரலை நீட்டி மிரட்ட, வசியும் தன்னை முயன்று தேற்றி கொண்டு
“சரி மிது..நம்ம காதலை உணர்ந்து கொண்ட இந்த நாளை கொண்டாடலாமா? எங்க எனக்கு ஒரு முத்தம் கொடு பார்க்கலாம்.. இங்க..” என்று தன் உதட்டை காட்டினான் வசி உள்ளுக்குள் பெரும் வேதனையுடன்...
அதை கேட்டதும் அதிர்ந்து போனாள் மித்ரா
“வாட் நான்சென்ஸ் திஸ் வசி?..” என்று முறைத்தாள் அவனை பார்த்து..
அவள் முறைப்பதை கண்டதும் தான் வசிக்கு பெரும் நிம்மதி வந்தது.. அவன் அவளிடம் முத்தம் கேட்டதுக்கு அவள் பாட்டுக்கு சரி என்று கிட்ட வந்திருந்தால் அவ்வளவுதான்..
அவனே உண்மையை உளறி இருப்பான்.. ஆனால் அவள் அவனை முறைக்கவும் மித்ராவை பற்றி பாரதி கெஸ் பண்ணியது கரெக்ட் தான் என தோன்ற உள்ளுக்குள் துள்ளி குதித்தவன் அடுத்து பாரதி சொல்லி கொடுத்திருந்த டயலாக் ஐ பேச ஆரம்பித்தான்...
“யெஸ் பேபி... நீ என்னை லவ் பண்றதான.. அப்ப ஒரு கிஸ் கொடுக்கிறதுல என்ன தப்பு.. கமான்.. லெட்ஸ் செலபரேட்.. “ என்றான் முயன்று வரவழைத்த குறும்புடன் ஒரு மார்க்கமாக பார்த்தவாறு....
இதுவரை வசி இப்படி பேசியதில்லை அவளிடம்..இப்படி பார்த்ததும் இல்லை.. அவனிடம் எப்பவும் ஒரு கம்போர்ட் இருக்கும்.. ஆனால் இந்த வசி புதியவனாக இருந்தான்.. அவன் பார்வை அவளுக்கு அருவெறுப்பு ஊட்டியது..
“கமான் மிது டார்லிங்.. “ என்று வசி மெல்ல அவள் அருகில் வர, அவள் உடல் மெதுவாக நடுங்க ஆரம்பித்தது..
அவன் அருகில் வர வர என்றும் இல்லாத பயம் வந்து ஒட்டி கொண்டது மித்ராவுக்கு..
அவனுடன் பல இரவுகள் ஒன்றாக அறையில் இருந்திருக்கிறாள்.. அப்பல்லாம் அவனிடம் இந்த மாதிரி எந்த ஒரு பீல் ம் இல்லை..ஆனால் இப்பொழுது ஏன் இப்படி இருக்கிறது? அவனை பார்த்தால் பயமாக இருக்கிறது?
நான் அவளை லவ் பண்றேன் தானே.. அப்ப ஏன் என் உடல் இப்படி நடுங்குது.. அவன் பார்வை ஒரு அருவெறுப்பை தருது.. அவன் முத்தம் தான் கேட்டான். அதை கொடுக்க ஏன் இந்த தயக்கம்? “ என அவசரமாக யோசித்தாள் மித்ரா...
அதற்குள் அவன் அருகில் வந்திருந்தான் வசி.. அவன் பார்வை இன்னும் வேற மாதிரிதான் இருந்தது
“வசி.. ப்ளீஸ் வேண்டாம்... “ என்றாள் பயந்தவளாக
“இல்லை மிது.. நீ எனக்கு இப்ப கிஸ் பண்ற..அப்பதான் நீ என்னை லவ் பண்ற னு ஒத்துப்பேன்.. கமான் மிது....” என்று இன்னும் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அவள் அருகில் நெருங்கி வர அவள் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து பின்னால் நகர்ந்தாள்..
அவளை பின்னால் நகர விடாமல் பிடித்து நிறுத்தியவன்
“கமான் மிது,,, “ என்று மேலும் வற்புறுத்த மெல்ல தலை நிமிர்ந்து அவனை பார்த்தாள்..
“எத்தனை முறை அவன் முகத்தை பார்த்திருக்கிறாள்.. அவன் கன்னத்தில் முத்தமிட்டிருக்கிறாள். அவன் கண்களை நேராக சந்தித்திருக்கிறாள்..
ஆனால் இன்று ஏன் அவனை பார்க்க, இல்லை அவன் கேட்ட முத்தமிட இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது..
இல்லை.. என்னால் முடியும்.. ஐ லவ் ஹிம்.. “ என்று தனக்குள்ளே சொல்லி கொண்டவள் எக்கி அவன் இதழ் அருகில் வர, குமட்டி கொண்டு வந்தது அவளுக்கு..
டக்கென்று எக்கிய காலை மீண்டும் சமமாக்கி தள்ளி நின்று கொண்டாள் தலையை குனிந்த படி
அதை கண்டு பெரும் நிம்மதி அடைந்தான் வசி...
“தேங் காட்.. பாரதி.. நீ நல்லாதான் கெஸ் பண்ணி இருக்கா.. இப்ப மட்டும் இவ ஏடா கூடாம ஏதாவது செய்திருந்தால் அவ்வளவு தான்.. என் ஜில்லு என் தோலை உரிச்சிருப்பா.. “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டவன் பாரதி அடுத்து சொல்லி கொடுத்திருந்த ஸ்க்ரிப்ட் ஐ வாசித்தான்...
“ஹ்ம்ம்ம் ஓகே மிது.. உன்னால முடியலை இல்ல.. சரி இரு நான் உன்னை கிஸ் பண்றேன்... “
என்றவன் வரவழைத்த தைர்யத்துடன் அந்த ஈசனை வேண்டி கொண்டு அவன் இதழ் நோக்கி குனிய, அவன் முகத்தை, அவன் இதழ்களை வெகு அருகில் கண்டவளுக்கு அதே அருவெறுப்பு, உடம்பெல்லாம் கூசுவதை போல இருக்க, டக்கென்று அவனை பிடித்து தள்ளி விட்டாள்..
அவனும் சுதாரித்து நிற்க, ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தவள் அவனை இறுக்கி அணைத்து கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்து குலுங்க ஆரம்பித்தாள்...
“என்னால முடியல வசி... எப்பவும் முடியாது... ஏன்னா நான் உன்னை லவ் பண்ணலை... நீ என் பிரண்ட்.. எப்பவும் எனக்கு நீ பிரண்ட் மட்டும் தான்.. இந்த உண்மை இப்பதான் புரிஞ்சது.. “ என்று இன்னும் குலுங்கினாள்..
அவளின் அந்த இறுகிய அணைப்பில் ஒரு தாயை தேடும் சேயைத்தான் கண்டான் வசி.. கொஞ்சம் கூட காதலும் இல்லை காமமும் இல்லை..
அவனும் மெல்ல அவளை அணைத்து கொண்டே
“எனக்கு தெரியும் மிது மா... உன்னால என்னை லவ் பண்ண முடியாது என்று.. அதனால் தான் நான் ஆரம்பத்துல இருந்து சொல்லி கிட்டிருந்தேன்.. நீதான் அதை புரிஞ்சுக்காம காதல் தான் னு அடம்புடிச்சுகிட்டிருந்த...
இப்பயாவது உனக்கு புரிஞ்சுதே..உனக்குள் இருப்பது காதல் இல்லை என்று.. உன்னை உன்னிடம் இருந்து வெளிக் கொண்டு வரத்தான் இந்த ஷாக் ட்ரீட்மென்ட்.. “ என்று கண்ணடித்தான் வசி
“ஓ...அப்ப நீ பேசியது, நடந்துகிட்டது எல்லாம்?? “ என்றாள் சந்தேகமாக...
“ஹா ஹா ஹா அது சும்மா லுலுலாய்.... “ என்று மீண்டும் அவளை மெல்ல அணைத்து கொண்டான் வசி...
“ரியலி சாரி டா...என்னை நானே புரிஞ்சுக்காம உன்னை இல்ல மலரை ரொம்ப கஷ்ட படுத்திட்டேன்... சே.. நானே உன் வாழ்க்கையை நாசமாக்க இருந்தேனே..
நான் ரொம்ப பேட் கேர்ள்.. என்னால் எப்படி அப்படி நடந்துக்க முடிந்தது ?... அதுவும் உனக்கே எதிரா.. “ என்று தன்னையே நொந்து கொண்டாள் மித்ரா..
“அது நீ என் மீது வைத்திருந்த உன்னுடையை பைத்தியத்தால் மிது.. அந்த பைத்தியம் தான் உனக்கு அறிவை மறச்சிடுச்சு.. அப்பயே இந்த மாதிரி தலையில அடிச்சு சொல்லி இருக்கணும்..
அப்புறம் என் மீதும் தப்பு இருக்கு மிது.. நான் மலரை காதலித்து தான் கல்யாணம் பண்ணினேன் என்ற உண்மையை உன்கிட்ட மறச்சிருக்க கூடாது...
அதனால் தான் மலர், இடையில் வந்தவள் என்று அவளை என்கிட்ட இருந்து பிரிக்க நினைச்சிருந்த.. அவ தான் என் சந்தோஷம் னு நான் முன்னாடியே உன்கிட்ட சொல்லி இருந்தால் இப்படி ஒரு கிறுக்கு தனத்தை பண்ணி இருக்க மாட்ட... எல்லாம் என்னால தான் “ என்றான் வருத்ததுடன்..
அதை கேட்டு அதிசயித்தவள் அவன் மார்பில் சாய்ந்த படியே விழிகளை உயர்த்தி அவனை பார்த்து
“நிஜமாகவா டா... நீ கூட லவ் பண்ணினியா? “ என்றாள் நம்ப முடியாமல்
“ஹீ ஹீ ஹீ... ஏன் மேடம்.. நானெல்லாம் லவ் பண்ண கூடாதா என்ன? என் ஜில்லுவை பார்த்த உடனே ஐயா கவுந்திட்டேன்..
இடையில் அவளுக்கு வேற ஒருத்தனுக்கு கல்யாணம் நடக்க இருக்க, எப்படியோ அவள் அப்பாவை சாக்கா வைத்து அவளை என்னிடம் கொண்டு வந்திட்டேன்.. ஸீ.. நானும் ஒரு ரொமாண்டிக் ஹீரோதான்.. “ என்று காலரை தூக்கி விட்டு கொண்டான் வசி குறும்பாக சிரித்தவாறு..
மித்ராவும் சிரித்த படி அவன் மார்பில் இருந்து விலகியவள் அவள் சாய்ந்திருந்த இடத்தில் கசங்கி இருந்த சட்டையை நீவிய படி
“சாரி டா.. நீ என்னை வெறுத்திட மாட்ட இல்லை..நீ சொன்ன மாதிரி இதெல்லாம் என்னை அறியாமல் ஏதோ செய்திட்டேன்.. ப்ளீஸ்.. என்னை மன்னிச்சிடு... என் பிரண்ட்ஷிப் ஐ கட் பண்ணிடாத.. நீ எப்பவும் என் பிரண்ட் ஆ என் கூடவே இருக்கணும்... “ என்றாள் பாவமாக
“ஹ்ம்ம் கண்டிப்பா மிது... இப்பவும் எப்பவும் நீ என் பெஸ்ட் பிரண்ட் தான்..” என்று அவள் தலையை பிடித்து செல்லமாக ஆட்டினான்..
“தேங்க்ஸ் டா... அப்புறம் மலர்க்கு நம்ம பிரண்ட்ஷிப் பத்தி தெரியும் தான..நான் பண்ணின சொதப்பல் ல என்னை அவ வெறுத்துட மாட்டா இல்லை.. உன்னை என் பிரண்ட் ஆ விட்டு கொடுப்பா தான. நீ எப்பவும் என் பக்கத்துலயே இருக்கணும் வசி .. என் பிரண்ட் ஆ . “ என்றாள் கெஞ்சலாக
“கண்டிப்பா மிது... அவளுக்கு என் சந்தோஷம் தான் முக்கியம்.. அதுக்காக என்னையே விட்டு கொடுப்பதற்காக டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட்டு என்கிட்ட நீட்டியவ.. இன்பேக்ட் உன்னை வெளில கொண்டு வரணும்னு அவதான் ரொம்ப ரிஸ்க் எடுத்தா...”
“ஓ... யூ ஆர் சோ லக்கி வசி.. “
“யெஸ் மிது.. நான் ஒரு லக்கி தான்.. மனசுக்கு பிடித்த வேலை, அன்பான அப்பா, அம்மா, தங்கை, காதலான மனைவி, பாசமான என் உயிர்த் தோழி, உயிரான என் பிரண்ட்ஸ்.. இப்படி என்னை சுற்றி எல்லாரையுமே நல்லவர்களாக அந்த ஈஸ் எனக்கு கொடுத்திருக்கான்.. ஐம் சோ ப்லெஸ்ஸ்ட் அன்ட் கிப்டட்.. “ என்று சிரித்தான் வசீகரன்..
“ஹ்ம்ம்ம் நீ எப்பவும் இப்படியே சிரிச்சுகிட்டே இருக்கணும் வசி.. “ என்று வாஞ்சையுடன் அவன் கன்னம் வருடினாள்..
“ஸ்யூர் மிது.. அதே மாதிரி நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும். செய்வியா? “
“டேய்.. என்ன இது?.. ஹெல்ப் .. அது இது னு.. நீ கட்டளை இடு.. அதை நிறைவேற்றுவது தான் இந்த மித்ரா உடைய கடமை.. “..
“ஹ்ம்ம்ம் இந்த மிது பொண்ணை ஒரு லூசு பையன் 10 வருசமா லவ் பண்றான்.. ஆனால் உன்கிட்ட வந்து புரபோஸ் பண்ண தைர்யம் வரலை. உன் வரம் வேண்டி .உனக்காகவே தவம் இருக்கும் அவனுக்கு நீ காதல் வரத்தை அருள வேண்டும் ..
அவன் வாழ்க்கையில் கல்யாண ஜோதியை ஏற்றி வை மிது..”
“வாட்? என்ன உளற வசி ? “ என்றாள் நம்ப முடியாமல்
“உளறல் இல்லை மா.. உண்மை.. அவன் உன்னை சின்சியரா லவ் பண்றான் உன்னை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்பான்.. ப்ளீஸ். எனக்காக நீ அவனை ஏத்துக்கணும்..
நீ சந்தோஷமா இருந்தால் தான் என்னால் நிம்மதியா சந்தோஷமா இருக்க முடியும்.. அதர்வைஸ் ஐ வில் பீல் கில்ட்டி...ப்ளீஸ்.. எனக்காக.. “ என்றான் வசி கெஞ்சலாக
“வசி... வந்து...நான் உன்ன லவ் பண்றேனு உன் பின்னால் சுத்தியது.. இப்ப மலரை உன்னிடம் இருந்து பிரிக்க நான் செய்த வில்லத்தனம்.. எல்லாம் தெரியுமா? அப்பவும் என்னை லவ் பண்றானா? “ என்றாள் சந்தேகமாக
“யெஸ் மிது....நீ என்னை லவ் பண்ணலை பைத்தியமா இருந்த.. அந்த பைத்தியத்தை தெளிய வைக்க இப்படி ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்யணும் என்று பாரதி சொன்னதுக்கு அவனும் ஒத்து கொண்டான்..”
“என்னது பாரதியா? அவளுக்கும் தெரியுமா? என்னை பற்றி ரொம்ப கேவலமா நினைச்சிருப்பா இல்லை.. அவளுக்கு தெரிந்தால் சுசிலா மேடம் ?? .. ஓ மை காட்... எவ்வளவு பெரிய கேவலத்தை செய்து இருக்கேன்... “ என்றாள் வேதனையுடன்..
“டோன்ட் வொர்ரி மிது.. பாரதி ரொம்ப நல்ல டைப்.. அப்படி உன்னை பற்றி யாரிடமும் சொல்ல மாட்டா.. இன்பேக்ட் ஒரு கார்டியாலஜிஸ்ட் ஆன என்னால் உன் இதயத்துல இருக்கிறதை கண்டு புடிக்க முடியலை. .
ஆனா பாரதி இப்ப ஒரு சைக்காலஜிஸ்..நம்ம போட்டோவை பார்த்தே உன் கிட்ட இருப்பது காதல் அல்ல னு கண்டு புடிச்சு இப்படி ஒரு ஆபரேஸனை தயார் பண்ணினா...
சாரி மிது... நான் பேசியதெல்லாம் தப்பா எடுத்துக்காத.. அதெல்லாம் பாரதியோட ஸ்க்ரிப்ட்.. நான் ஜஸ்ட் அதை வாசித்தேன், மற்றபடி அதில் ஒரு எழுத்து கூட என் மனதில் இருந்து வந்ததில்லை.. “ என்றான் வருத்ததுடன்
“ஹ்ம்ம் தெரியும் டா... ஏன்னா உன்னால் என் கிட்ட அப்படி பேச முடியாது.. “ என அவள் தோள் மீது சாய்ந்து கொண்டவள்
“எனக்காக எத்தனை பேர் வேலை செய்திருக்கீங்க... “ என்றாள் தழுதழுத்தவாறு
“நோ பீலிங்ஸ் மிது.. இனிமேல் ஒன்லி ஹேப்பிதான்.. சரி நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்.. “
“ஹ்ம்ம் எனக்கு இப்ப வயது 31.. இந்த வயசுலயும் என்னை காதலிக்கிறானா? “
“ஹா ஹா ஹா 31 வயசு மட்டும் இல்ல மிது.. நீ 80 வயசாயி குடுகுடு கிழவியானாலும் உன்னைத்தான் காதலிப்பேன்.. உன்னையே கரம் பிடிப்பேன் னு ஒத்த கால் ல தவம் இருக்கான்..
அவனை மேலும் காக்க வைக்காத... உனக்கும் அவனை புடிக்கும்.. யூ பீல் கம்போர்ட் வித் ஹிம் ஒன்லி... அதனால் உன் இதயத்தை திறந்து வைத்து அவனை பார்.. உன் கண்கள் அவனை கண்டு கொண்டால் அவன் காதலை உணர்ந்து கொண்டால் நீ அக்செப்ட் பண்ணிக்க..”
“அப்படி எதுவும் அவன் கிட்ட எனக்கு தோணலைனா என்னடா செய்ய ? “
“அப்பவும் அவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டு காதலை டெவலப் பண்ணிக்கலாம்.. எத்தனையோ அரேஞ்ட் மேரேஜ். கல்யாணத்துக்கு பிறகு காதல் வருவதில்லையா.. அப்படி வச்சுக்க..”
“ஆக மொத்தம் அவன் தான் என் வாழ்க்கை துணை, எனக்கு கிடைத்த அடிமை னு முடிவு பண்ணிட்ட.. “ என்று செல்லமாக முறைத்து சிரித்தாள் மித்ரா
“இல்ல மிது.. நீ எனக்காக எவ்வளவோ செஞ்சிருக்க.. உனக்காக நான் இதுவரைக்கும் எதுவும் செய்யலை.
நீ என்னை லவ் பண்றேனு சொன்னப்ப கூட அப்பயே உன்னை ஒரு கொட்டு கொட்டி உன் பைத்தியத்தை தெளிய வைத்து உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்காமல் நீ வருத்த படுவனு அப்படியே விடப் போய் இவ்வளவு தூரம் வந்திடுச்சு..
உன் வாழ்க்கையை சரியாக்குவது என் பொறுப்பு.. அதான்..அவன் ரொம்ப நல்லவன் மிது.. என்னை விட உன்னை நல்லா பார்த்துப்பான்.. ப்ளீஸ் அக்செப்ட் ஹிம்.. “ என்றான் தழுதழுத்தவாறு..
“ஹ்ம்ம்ம் சரிடா... நீ இவ்வளவு தூரம் சர்ட்டிபிகேட் கொடுக்கறனா அவன் நல்லவனாதான் இருப்பான்.. உனக்காக என் வாழ்க்கையை மாத்திக்கறேன்.. நீ சொல்றவனையே கல்யாணம் பண்ணிக்கிறேன்.. ஹேப்பி? “ என்றாள் சிரித்தவாறு..
“ஹே மிது.. நீ இன்னும் அவனை பார்க்கவே இல்லையே.. அதுக்குள்ள எப்படி? “
“அதான் நீ பார்த்துட்டா இல்லை.. என் மேல் என்னை விட உனக்கு அக்கறை அதிகம்னு தெரியும்.. நீ எனக்கு எப்பவும் நல்லது தான் செய்வ டா.. அதனால தான்..” என்றாள் கண் சிமிட்டி சிரித்தவாறு..
அதில் தழுதழுத்தவன் அவளை மெல்ல அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டவன்
“உன் நல்ல மனசுக்கு நீ எப்பவும் நல்லா இருப்ப மிது மா..சரி.. நாமலே பேசி கிட்டிருக்கோம்.. வெளில பாவம் மாப்பிள்ளை ரொம்ப நேரமா டென்ஷனா காத்து கிட்டிருப்பான்..”
“என்னது? இங்கதான் இருக்காரா? சொல்லவே இல்லை.. “ என்றாள் மித்ரா ஆச்சர்யமாக
“ஹீ ஹீ ஹீ அவன் உன்னை பார்த்து புரபோஸ் பண்ண ரெடியாதான் இருக்கான்.. நான் தான் அவனை புடிச்சு வச்சிருக்கேன்.. நீ ஓகே னு சொன்ன அடுத்த நொடி இங்க வந்திருவான்..
“ஹ்ம்ம்ம் யார் அந்த இ.வா...? சரி பார்க்கலாம்.. “ என்று சிரித்தாள்..
“நான் வெளில இருக்கேன்.. நீங்க இரண்டு பேரும் பேசிட்டு எனக்கு பாசிட்டிவ் ரிசல்ட் ஐ சொல்லுங்க..
அகெய்ன் உன் மனசுக்கு பிடித்திருந்தால் மட்டும் தான்..ஆல் தி பெஸ்ட்... டெல் மீ பாசிட்டிவ் நியூஸ்.. “ என்றவாறு வெளியேறி சென்றான் வசி...
இப்பொழுது மித்ராவின் இதயம் படபடவென்று அடித்து கொண்டது..
“யாரா இருக்கும்? என்னை இத்தனை வருடம் காதலிக்கிறான் என்றால்? அதுவும் நான் வசி மேல் பைத்தியமாக சுத்துவது தெரிந்தும் என்னை நேசிக்கிறான் என்றால் ? “ என்று எண்ணுகையிலயே அந்த அறைகதவை திறந்து உள்ளே வந்தான் ஷ்யாம்..
கையில் ஒரு சிவப்பு ரோஜா மட்டும் வைத்திருந்தான்.. கதவு திறக்கும் ஓசை கேட்டதும் அந்த பக்கம் திரும்பி பார்த்தவள் அங்கே ஷ்யாமை கண்டதும் உதடுகள் தானாக
“ஷ் யா ம்.... “ என்று ஆச்சர்யமாக உச்சரித்தது..
அவனும் மெல்ல புன்னகைத்து அவளை காதலுடன் பார்த்தவாறு அவளை நோக்கி வந்தான்.. அவன் பார்வையில் எந்த தயக்கமும் இல்லை ..முன்பு அவளை பார்க்கும் பொழுது எல்லாம் ஒரு வித மரியாதை கலந்தும் இல்லை என்றால் பயந்தும் இருக்கும்..
ஆனால் இன்று இருப்பவனோ முற்றிலும் புதியவனாக இருந்தான்.. அவளை நோக்கி மெல்ல அடி எடுத்து வைத்து வந்தான்...
அருகில் வநதவன் ஒற்றைக் காலை மடக்கி அவள் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து
“ஐ லவ் யூ கண்மணி... என்னுடைய மீதி வாழ்க்கையை உன்னோடு கை கோர்த்து அனுபவிக்க விரும்புகிறேன்.. என்னை ஏற்று கொள்வாயா? ஐ வான்ட் டு மேரி யூ.. வில் யூ பி மை பெட்டர் ஹாப்?.. “ என அந்த ஒற்றை ரோஜாவை அவள் முன்னே நீட்டியபடி இருந்தவனை கண்டதும் மித்ராவின் கண்கள் விரிந்தன...
இவனுக்கு இப்படி எல்லாம் கூட பேச வருமா? என்று ஆச்சர்யமாக பார்த்தாள்..
“ஹே மிரா.. ப்ளீஸ்.. சீக்கிரம் வாங்கிக் கோ.. ரொம்ப நேரம் முட்டி போட்டு இருக்க முடியலை.. “ என்றான் ஷ்யாம் சிரித்தவாறு..
அவனின் மிரா என்ற அழைப்பு வித்தியாசமாக இருக்க அவனின் செய்கை ஒவ்வொன்றும் அவளுள் பட்டாம் பூச்சிகளை பறக்க வைக்க, அவளுக்கே ஆச்சர்யம்.. இந்த 31 வயதில் கூட இப்படி ஒரு உணர்வு வருமா என்று..
மெல்ல வெட்க பட்டு கன்னம் சிவந்தவள் அந்த ரோஜாவை வாங்கி கொண்டாள் நாணத்துடன்
அவள் கை பிடித்து அவன் பாக்கெட்டில் இருந்த அந்த மோதிரத்தை எடுத்து அவளுக்கு அணிவித்து
“ஐ லவ் யூ சோ மச் மிரா.... “ என அவள் கையில் முத்தமிட, மித்ராவுக்கோ கிறுகிறுத்தது..
அப்படியே கிறங்கித் தான் போனாள் அவன் செய்கையில்.. ஒரு வித மயக்கத்தில் இருந்தவளின் அருகில் வந்தவன்
“மிரா... என்னை உனக்கு பிடிச்சிருக்கா? ... வில் யூ பி மை பெட்டர் ஹாப்? “ என்றான் மீண்டும் ஏக்கத்துடன்...
இப்பொழுது ஞாபகம் வந்தது மித்ராவுக்கு...
இந்த ஏக்க பார்வைதான் ஷ்யாம் அவளை பார்க்கும் பொழுதெல்லாம் வந்தது அவனிடமிருந்து. அப்பொழுது அதற்கான அர்த்தம் புரியவில்லை. ஆனால் இப்பொழுது புரிந்தது..
“ஷ்யாம்... நான் .... வசி.... “ என்று மித்ரா உளற,
“ஹ்ம்ம்ம் நீ வசி மீது பைத்தியமா இருந்தது தெரியும் மிரா.. ஆனால் அது காதல் இல்லைனு எனக்கு முன்னாடியே தெரியும்.. ஆனால் நீதான் அதை காதல் னு தப்பா புரிஞ்சு கிட்ட..” என்று அவளுக்கு பொறுமையாக விளக்கினான்...
அதை கேட்ட மித்ரா
“ஐயோ என்னை இவன் காதலிப்பது தெரியாமல் இவன் கிட்டயே போய் வசியை பற்றி என்னென்னவோ உளறி வச்சேனே.. “ என்று அசடு வழிந்தாள்.
“இட்ஸ் ஓகே மிரா.. நான் என்னைக்கும் உன்னை தப்பா எடுத்துக்க மாட்டேன்.. நீ பண்ணினதெல்லாம் ஒரு சிறு பிள்ளைத்தனமா தான் இருந்தது..
அதனால் தான் உன் மேல் கோப பட முடியவில்லை
உன்னை என் கண்ணுக்குள்ள வச்சு காப்பேன் கண்மணி. என்கிட்ட வந்திடு..” என்று கையை விரித்து நீட்ட அடுத்த நொடி அவன் மார்பில் அடைக்கலம் புகுந்து இருந்தாள் மித்ரா..
வசி திருமணத்தின் பொழுது ஷ்யாம் தோளில் சாய்ந்து கொண்டதும் அவன் கை பிடித்து இயல்பாக தன் உணர்ச்சிகளை எல்லாம் கொட்டியதும் நினைவு வர, இப்பொழுது எல்லாம் புரிந்தது மித்ராவுக்கு..
“அப்ப ஷ்யாம் தான் எனக்கானவன்..என்னருகில் இருந்தும் அவனை இத்தனை நாளாக கண்டு கொள்ளாமல் விட்டு விட்டேனே.. நான் ஒரு மடச்சி.. “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டாள்.
அவனும் மெல்ல மித்ராவை அணைத்து கொண்டு அவள் நெற்றியில் இதழ் பதித்தான்... அவன் முத்தமிடவும் அவள் உள்ளுக்குள் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்தது..
வசியும் அவளுக்கு இதே மாதிரி பல முறை முத்தமிட்டிருக்கிறான் தான்.. அப்பொழுது எல்லாம் தோன்றாத ஒரு பரவசம் இப்பொழுது ஷ்யாமிடம் இருந்து கிடைத்தது...
அதை உணர்ந்ததும் அவளுக்குள் கொஞ்சம் இருந்த சந்தேகமும் விலகிட,
“அப்படியென்றால் என் இணை இவன் தான் என இருநூறு சதவிகிதம் உறுதியானது அவளுக்கு.. .. இதை புரிந்து கொள்ளாமல் வசியை கஷ்ட படுத்திட்டேன்..இந்த மடையனும் தான் அவன் காதலை என்னிடம் சொல்லி இருக்கலாம்...”
ம்ஹூம்.. சொல்லி இருந்தாலும் வசி மேல இருந்த பைத்தியத்தில் அதை ஏற்று கொண்டிருக்க மாட்டாள் என்ற உண்மையும் உரைத்தது..
“எப்படியோ, கடைசியிலாவது என்னை எனக்கே புரிய வச்சிட்டாங்களே.. “ என்று மகிழ்ந்தவள்
“ரொம்ப தேங்க்ஸ் ஷ்யாம்.. என்னை புரிஞ்சுகிட்டு எனக்காக காத்திருந்ததுக்கு.. “ என்றாள் தழுதழுத்தவாறு
“ஹே.. நோ பீலிங்ஸ் மிரா.. ஒன்லி ரொமான்ஸ்.. இப்ப நம்ம பேசன்ட்ஸ் வேற வந்திடுவாங்க..டோன்ட் வேஸ்ட் அவர் டைம்..“ என்று கண் சிமிட்டினான் குறும்பாக சிரித்தவாறு ஷ்யாம்....
அதை கண்டவள்
“ஆங் ..” என்று கண்களை அகல விரித்தாள் மித்ரா..
அவளின் அகன்ற விழிகளையும், திரண்ட இதழ்களிலும் பார்வை பதித்தவன்
“வித் யுவர் பெர்மிசன்..என்னுடைய மறக்க முடியாத காதல் பரிசா ஒன்னே ஒன்னு கொடுக்கவா? “ என்றான் அவள் இதழ்களை தாபத்துடன் பார்த்தவாறு..
வசி அவளை இதே மாதிரி பார்த்த பொழுது தோன்றிய அருவெறுப்பு இல்லாமல் இப்பொழுது அவள் உள்ளே படபடக்க மெல்ல வெட்கபட்டு கன்னம் சிவக்க, இமைகளை மெல்ல கீழ தாழ்த்தி கொண்டாள் மித்ரா..
அவளிடம் இருந்து வந்த சம்மதத்தை புரிந்து கொண்டவன் குனிந்து நீண்ட நாட்களாக தன் கனவில் மட்டுமே ரசித்து சுவைத்து வந்த தன்னவளின் அந்த அழகிய திரண்ட இதழ்களை தன் இதழ்களால் சிறை பிடிக்க, மித்ராவோ விண்ணில் பறந்தாள்..
இது ஒரு புது விதமான அனுபவமாக இருந்தது மித்ராவுக்கு..அவள் உள்ளே உறைந்திருந்த பெண்மை விழித்து கொள்ள, இதுவரை அனுபவித்திராத பெண்ணிற்கான சுகங்கள் அவள் உடல் எங்கும் மின்சாரம் போல பரவ, அப்பொழுது தான் காதலின் மகிமையை புரிந்து கொண்டாள் மித்ரா..
“இவன் தான் என் காதலன்.. என்னவன்.. அவனிடமே மட்டுமே நான், என் பெண்மை சரணடைய முடியும்... “ என தோன்ற அந்த நொடிகளை அணு அணுவாக ரசிக்க, மயக்கத்தில் கிறங்கி நின்றவள் துணைக்காக அவன் சட்டையை கெட்டியாக பிடித்து கொண்டாள்..
Comments
Post a Comment