காதோடுதான் நான் பாடுவேன்-37
அத்தியாயம்-37
இரண்டு மாதம் கடந்து விட்டது மது தன் புகுந்த வீட்டிற்கு திரும்பி வந்து..
வாழ்க்கை அதன் போக்கில் போய் கொண்டிருக்க, மதுவின் வாழ்வில் அடித்து சென்ற புயல் விட்டு சென்ற சேதாரம் மட்டும் சரியாகாமல் அப்படியேதான் இருந்தது....
வழக்கமாக தன் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்தாள் மதுவந்தினி...
நிகிலன் இன்னுமே அவளிடம் பேசுவதில்லை... அவளை பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு வெறித்த பார்வைதான்...
ஆரம்பத்தில் தன் கணவனின் அவளை நம்பாத அந்த வெறித்த பார்வை அவள் மனதை வலிக்க செய்தது...இப்பொழுது எல்லாம் அதுவும் பழகி விட்டது அவளுக்கு...
அதே போல அவளிடம் இருந்த ஒரு துள்ளலும் தன் கணவனை கண்டாலே அலை பாயும் அந்த கண்களும் தொலைந்து போய் விட்டன...
அவளிடமுமே ஒரு வெறுமையான பார்வைதான் இருக்கும் அவனை கண்டால்..
தன் மாமியார், நாத்தனார் , ரமணி, தன் பெற்றோர் என்று எல்லோரிடமும் பேருக்காக சிரித்து பேசினாலும் தன் கணவனை கண்டால் அப்படியே ஆப் ஆகி விடுவாள்...
சிவகாமியும் இதை கண்டு மனதுக்குள் வேதனை கொண்டார்..
“இவர்களுக்கு தனிமை கொடுத்தால் இந்த பய திருந்துவான் என்று மதுவை விட்டு சுற்றுலா சென்று வர, இவன் ஏதோ பண்ணி முதலுக்கே மோசமாயிட்ட மாதிரி இரண்டு பேருக்கும் நடுவுல இன்னும் மோசமாயிடுச்சே...
முருகா... என்னதான் பண்ணிகிட்டிருக்க??.. சீக்கிரம் என் புள்ளைங்களுக்கு ஒரு வழிய காட்டு... “ என்று சண்டையிட்டார் சிவகாமி அந்த வேலனிடம்....
அன்று மாலை வழக்கம் போல தன் வகுப்பில் இருந்து திரும்பி வந்த மதுவந்தினி தன் மாமியார் கொடுத்த காபியை குடித்தவள் அப்படியே சோபாவில் சுருண்டு படுத்து விட்டாள்...
சிவகாமி பதறி போய் “என்னாச்சுடா.. “ என்று விசாரிக்க
“ஒன்னுமில்லை அத்தை.. இலேசா மயக்கம் வர்ற மாதிரி இருக்கு.. “ என்றவள் சமாளித்து எழுந்து அமர, அடுத்த நொடி வாஷ்பேசினை நோக்கி ஓடினாள்...
அடி வயிற்றை பிடித்து கொண்டு வாமிட் பண்ண, அதை கண்ட சிவகாமி பயந்து போய் மைதிலிக்கு போன் பண்ணினார்....
கோவிலில் சந்தித்த பொழுது இருவரும் நண்பர்களாகி விட மைதிலியின் எண்ணை வாங்கி வைத்திருந்தார் சிவகாமி...
அகிலாவுக்கு இது மாதிரி எதுவும் தொந்தரவு வரும் வேலையில் மைதிலியிடமே கூட்டி கொண்டு போய் காட்டுவார்... இன்று தன் மருமகள் இருந்த நிலையை கண்டு அஞ்சி அவரிடம் நேராக போக முடியாது என தோன்ற மைதிலியை வீட்டிற்கு அழைத்து இருந்தார்....
அவரும் அப்பொழுது தான் மருத்துவமனையில் இருந்து திரும்பி இருக்க சிவகாமி அழைக்கவும் உடனே வந்து விட்டார்...
சோபாவில் தளர்ந்து போய் அமர்ந்திருந்த மதுவை கண்டதும் அவள் அருகில் சென்றவர் அவள் நாடி பிடித்து பரிசோதித்தார்...
பின் அவளுடைய நாள் கணக்கை கேட்க அப்பொழுது தான் மதுவுக்கும் உறைத்தது.... அவள் இருந்த கவலையில் இதை எல்லாம் கவனித்திருக்கவில்லை...
அவள் சொன்ன கணக்கை கேட்டு சிவகாமி மற்றும் மைதிலியின் முகம் மலர, மைதிலி கையோடு கொண்டு வந்திருந்த அவருடை மெடிக்கல் பேக்கில் இருந்த ஒரு பிரக்னன்சி கிட் ஐ எடுத்து பரிசோதித்து பார்க்க மது உண்டாகியிருப்பது உறுதியானது ...
அதை கேட்டு சிவகாமி துள்ளி குதித்தார்...சிறு பிள்ளையாக மகிழ்ந்து குதித்தவாறு வேகமாக பூஜை அறைக்கு ஓடி அந்த முருகனிடம் அவசரமாக நன்றி சொல்லி அவன் விபூதியை கொண்டு வந்து தன் மருமகளுக்கு வைத்து விட்ட்டார்..
பின் சமையல் அறைக்கு சென்று கையில் கிடைத்த ஒரு ஸ்வீட் ஐ எடுத்து கொண்டு வந்து மைதிலியின் வாயில் திணித்தார்.... பின் மதுவுக்கும் கொடுக்க அதை கண்டு மைதிலியும் மகிழ்ந்து சிரித்தார்....
“என்ன சிவா??... உன் பேரனோ பேத்தியோ வரப்போறது தெரிந்த உடனே 10 வயசு குறஞ்ச மாதிரி துள்ளி குதிக்கிற? “ என்று சிரித்துகொண்டே சிவகாமியை ஓட்டினார் மைதிலி...
“பின்ன இருக்காதா மைதிலி?? இதுக்குத் தான் இத்தனை நாளா தவம் இருக்கறோம்.. எங்க வீட்லயும் ஒரு குழந்தை சத்தம் கேட்காதானு..” என்று சிரித்தார் சிவகாமி....
“ஹ்ம்ம்ம் ஆனாலும் எப்படியோ என்னை உன் வீட்டுக்கு மாசம் ஒரு தரம் வர வச்சிடறீங்க இந்த மது குட்டிக்காக... “ என்று மதுவின் கன்னம் வருடி சிரித்தார் மைதிலி ..
அதை கேட்டு குழம்பிய சிவகாமி
“என்ன சொல்ற மைதிலி??.. என் மருமகள உனக்கு முன்னாடியே தெரியுமா?? நீ ஏற்கனவே இங்க வந்திருக்கியா?? “ என்றார் சந்தேகமாக....
அதற்குள் மது அவரிடம் கண்ணால ஜாடை காட்டி முன்பு நடந்தது எதுவும் சொல்ல வேண்டாம் என்று கெஞ்ச, மைதிலியும் சமாளித்து கொண்டு
“ஆமா சிவா... நீ ஊர்ல இல்லாதப்போ ஒரு தரம் மதுவுக்கு வயிற்று வலி வந்திருச்சு... உன் பையனும் உன்னை மாதிரி தான்..
நீ இப்ப எப்படி பதறி எனக்கு போன் பண்ணினியோ அதே மாதிரி பதறி எனக்கு போன் பண்ணினான்..... நான் தான் வந்து பார்த்தேன்.. அதனால மதுவை எனக்கு முன்னாடியே தெரியும் ..” என்றார் உண்மையை மறைக்காமல்...
“பாரேன்.. இவ்வளவு நடந்திருக்கு. இந்த இரண்டு பேரும் மூச்சு விடலை... “ என்றார் யோசனையுடன்....
பின் மைதிலியை அனுப்பி வைத்து விட்டு தன் மருமகளின் அருகில் வந்து அமர்ந்தவர் , அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து கொண்டு
“இப்பதான் சந்தோசமா நிம்மதியா இருக்கு மது மா.... எப்படியோ இந்த வீட்ல தொலஞ்சு போன சந்தோசம் எல்லாம் சீக்கிரம் திரும்ப வந்திடனும்.. உன் மாமனாரே உன் வயித்துல வந்து பிறக்க போறார் பார்... “ என்றார் கண்ணில் தேங்கிய நீருடன்....
மதுவும் அவரை ஆதரவாக அனைத்து கொண்டாள்...
பின் மைதிலி சொன்ன மாதிரி அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்று எல்லா டெஸ்ட் ம் எடுத்து பார்க்க, மதுவின் கர்ப்பம் உறுதியானது....
அதை கண்டு சிவகாமி இன்னும் அகம் மகிழ்ந்து போனார்....அருகில் இருந்த ஸ்வீட் ஸ்டாலுக்கு சென்று நிறைய ஸ்வீட்ஸ் வாங்கி வந்தார் தெரிந்தவர் களுக்கெல்லாம் கொடுக்க என்று...
அடுத்த நாள் காலை நிகிலன் ஓட்டத்தை முடித்து கொண்டு வந்து பேப்பரை புரட்டி கொண்டிருக்க, அவன் அருகில் சென்ற சிவகாமி
“நிகிலா வாயை திற..” என்று சொல்லி அவனுக்கு தான் வாங்கி வைத்திருந்த இனிப்பை திணித்தார்....
அதை சாப்பிட்டவன் திகைத்து,
“என்ன மா விசேசம்?? காலையிலயே இவ்வளவு சந்தோசமா இருக்க?? “ என்றான் புன்னகைத்தவாறு தன் அன்னையின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை ரசித்தவாறு ...
“ஹ்ம்ம்ம் எல்லாம் சந்தோசமான நியூஸ் தான் பெரியவா.. நம்ம வீட்டுக்கு புதுசா ஒரு ஆள் வரப் போறார்... “ என்றார் சிரித்தவாறு...
உடனே அவன் மகிழனை நினைத்து கொண்டு
“அந்த ஓடிப்போன நாய் இங்க எதுக்கு வர்ரான்?? ...அவன் இங்க எல்லாம் வரக் கூடாதுனு சொல்லுங்க.. “ என்றான் கோபத்துடன்....
“சரியான மக்கு டா நீ... அவன் வந்தால் கூட அவன் எப்படி புது ஆளாவான்??.. அவன் பழைய ஆள் தான்...அவன் ஒன்னும் இங்க வரலை... நான் சொன்னது புது ஆள்.. “ என்றார் சிரித்தவாறு
“புது ஆளா?? அது யார்?? ஓ ஊர்ல இருந்து யாராவது வர்ராங்களோ?? “ என்றான் யோசனையாக..
“சுத்தம்.. சரியான ட்யூப் லைட் டா நீ...உன் கிட்ட போய் நான் சஸ்பென்ஸ் வச்சு பேசினேன் பார்.. என்னை அடிச்சுக்கணும்... “ என்று தலையில் அடித்து கொண்டவர்
“நேராவே சொல்றேன்.....நான் பாட்டியாக போறேன்.. நீ அப்பா ஆக போற டா....நம்ம வீட்டுக்கு உன் அப்பாவே வாரிசா வரப் போறார்... “ என்று சிரித்தார்....
அதைக் கேட்டு முதலில் முழித்தாலும் பின் தன் அன்னை என்ன சொல்கிறார் என்று புரிய ஒரு நொடி அவனுள்ளேயும் சந்தோசம் ஊற்றெடுத்தது.... முகத்தில் புன்னகை அரும்பியது..
சமையல் அறையில் இருந்து கொண்டே தன் கணவனின் முகத்தையே ஆர்வமாக பார்த்து கொண்டு இருந்த மதுவந்தினிக்கு அவன் முகத்தில் வந்திருந்த புன்னகையை கண்டதும் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது...
நேற்று இரவே தன் கணவனின் வருகைக்காக ஆவலாக காத்திருந்தாள் மது.. வழக்கம் போல அவன் தாமதமாக வந்திருக்க, அதற்குள் மது உறங்கி இருந்தாள்...
இன்று காலையில் எழுந்து உற்சாகத்துடன் சமையலை கவனித்து கொண்டிருந்தவளை சிவகாமி போய் அவள் கணவனிடம் இந்த நல்ல செய்தியை சொல்ல சொல்லி வாயிலை நோக்கி தன் மருமகளை முன்னால் தள்ள, அவளோ தயங்கியவாறு
“அத்தை.. நீங்களே போய் சொல்லுங்களேன்... எனக்கு வெக்கமா இருக்கு.. “ என்று தயங்கி அவள் மாமியாரின் பின்னால் போய் நின்று கொண்டாள் வெக்கத்துடன்..
ஒரு பெண் தாயானதை முதலில் தன் கணவனுக்குத் தான் சொல்லுவாள்... ஆனால் இங்கோ தன் மருமகள் அவள் கணவனிடம் சொல்ல அஞ்சி தயங்கி நிற்பதை கண்டு சிவகாமிக்கு சிரிப்பு வந்தது..
“நல்ல பொண்ணு மா... நீ . “ என்று சிரித்தவாறு தன் மகனை காண வந்தார் சிவகாமி...
அவர் எதிர்பார்த்த மாதிரியே அவர் சொன்ன நல்ல செய்தியை கேட்டு அவனும் முதலில் மகிழ்ந்தான் தான்..
ஆனால் அந்த விதியின் சதியால் அடுத்த நொடி இது எப்படி என்று யோசித்தவன் அந்த நாட்கள் நினைவு வர அதை தொடர்ந்து அன்று அவள் அலைபேசியில் பேசிய பேச்சுக்கள் கண் முன்னே வந்தது...
என் திட்டப்படி அந்த சாமியார் இப்ப என் வழிக்கு வந்தாச்சு... இனிமேல் இங்க நான் வச்சதுதான் சட்டமாக்கும்... இதுக்குத்தான் நான் இவ்வளவு நாள் காத்திருந்தேன்....
நான் காத்திருந்தது வீண் போகலை... நான் போட்ட திட்டம் படியும் ஆடின ஆட்டத்திலும் அந்த சாமியார் என் கிட்ட மயங்கி இப்ப என்கிட்ட சரண்டர் ஆகியாச்சு......
இப்பயாவது தெரிஞ்சுகிட்டீங்களா இந்த மது நினைச்சா எதையும் சாதிப்பா னு
என்னுடைய திட்டப்படி வழிக்கு கொண்டு வந்துட்டேன் என்றது நினைவு வர அவன் முகம் இறுகியது....
அவள் திட்டம் என்று சொன்னது மீண்டும் மீண்டும் நினைவு வர,
“ஒரு வேளை.. இது தான் அவள் திட்டமோ??... இந்த குழந்தையை வைத்து அவள் திட்டம் போட்டிருக்கிறாளோ?? “ என்று அவசரமாக யோசித்தவன்
“அப்படி என்றால் அவள் எண்ணம் நிறைவேறக் கூடாது... இந்த குழந்தை இருந்தால் தானே அவள் திட்டம் நிறைவேறும்... இது இல்லாவிட்டால் ?? “ என்ற விதத்தில் அவசரமாக யோசித்தான்....
அவன் முகத்தில் வந்த மாற்றத்தை கண்ட சிவகாமி உள்ளுக்குள் பதறி
“என்னடா... இவ்வளவு பெரிய சந்தோசமான செய்தி சொல்லியிருக்கேன்... உன் மூஞ்சியில அந்த சந்தோசத்தை காணோமே.. “ என்றார் கொஞ்சம் பயந்தவாறு..
இப்ப என்ன குண்டை தூக்கி போடப் போறானோ என்று உள்ளுக்குள் உதறலுடன் பயந்தவாறு....
அதற்குள் அவசரமாக யோசித்திருந்தவன்
“அம்மா... வந்து... அவ இன்னும் சின்ன பொண்ணா இருக்கா.. அவளால ஒரு குழந்தையை சுமக்க முடியுமா?? “ என்றான் தயங்கியவாறு..
அதை கேட்டு நிம்மதி அடைந்தவர்
“ஹா ஹா ஹா இதுதான் உன் குழப்பமா ??.. நான் கூட வேற என்னவோ னு நினைச்சிட்டேன்... பெரியவா.... நான் 18 வயசுல உன்னை சுமந்து பெத்தேன்.. அதுவும் அப்பல்லாம் இந்த மாதிரி நவீன வசதிகள் எல்லாம் எதுவும் இல்லை..
இப்பதான் எத்தனையோ நவீன வசதிகள் வந்திருச்சே.... அதோட மது ஒன்னும் சின்ன பெண் இல்லை... கிட்ட தட்ட 23 வயசாகுது.. அதெல்லாம் தாராளமா பெத்து எடுத்துடுவா என் மருமக... “ என்றார்....
“ஆனாலும் இப்ப அவ பிராக்டிஸ் எல்லாம் போய்கிட்டிருக்கா.. அவளுக்கு IAS எக்சாம் வேற வருது.. அதோடு நேசனல் லெவல் டோர்னமென்ட் வருது மா.. இவ பிராக்டிஸ் பண்ணினதெல்லாம் வீணா போய்டும் ...
குழந்தை தான.. எப்ப வேணாலும் பெத்துக்கலாம். இது அவளோட லட்சியம்.. கனவு... வசந்த் ரொம்ப நம்பிக்கையா இருக்கான் இவ இந்த முறை கப் வாங்கிடுவானு.. அவள் கனவை கலைக்க வேண்டாம்.. “ என்று அடுத்த காரணத்தை கண்டு பிடித்து கூறினான்..
அதை கேட்ட சிவகாமி கடுப்பானார்...
“டேய் பெரியவா.. விளையாட்டு தான.. அது எப்ப வேணாலும் போய்க்கலாம்.. கப் தான எப்ப வேணா வாங்கிக்கலாம்.. இந்த வருசம் இல்லைனா நீ சொல்றியே நேசனல் டோர்னமென்ட் னு.. அந்த விளையாட்டு அடுத்த வருசமும் தான் வரும்..
என் மருமக சின்ன வயசுதான.. அந்த விளையாட்டை எப்ப வேணாலும் போய் விளையாடட்டும்.. இந்த குழந்தை அந்த வேலனே பார்த்து கொடுத்த வரம் டா... “ என்றார்...
“மா... உனக்கு சொன்னா புரியாது... இரு அவளையே கூப்பிட்டு கேட்கறேன்.. அவளுக்கு இந்த விளையாட்டு மேலயும் IAS ஆகணும்னு எவ்வளவு கனவு..
அதை விட்டுட்டு இந்த குழந்தைக்காக அவளை அத எல்லாம் விட வைக்க வேண்டம்.. இரு அவளையே கூப்பிட்டு கேட்கலாம்.. “ என்றவன் சமையல் அறை பக்கம் பார்த்து
“ஏய்.. இங்க வா... “ என்றான் ..
மதுவும் இது வரை தன் மாமியார் அவனிடம் பேசி கொண்டிருந்ததை எல்லாம் கேட்டு கொண்டிருந்தாள் தான் ...இப்பொழுது தன் கணவன் குரல் கேட்கவும் மெல்ல வெளியில் வந்தாள்...
”நீயே சொல்லு.. உனக்கு IAS ஆகணும்னு கனவு தான .. அதோடு இந்த நேசனல் லெவல் போட்டியிலயும் பார்ட்டிசிபேட் பண்ண கிடைச்சிருக்க ஒரு நல்ல வாய்ப்பு..
நீ இன்னும் மேல வந்திடலாம்.. ஆசியன் கேம் எல்லாம் அடுத்து போகலாம்.. அதை விட்டு இந்த குழந்தையை இப்பயே பெத்துக்க வேண்டாம்... அம்மாகிட்ட சொல்.. “ என்றான் மிரட்டும் குரலில்....
உடனே சிவகாமி
“மது மா... நீ இப்ப விட்டா அடுத்த வருசம் கூட இந்த விளையாட்டை விளையாடலாம்... அதனால் அவன் சொல்றதை கேட்காதா.. “ என்றார் கெஞ்சலாக...
அதை கேட்ட மது என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தாள்...
“IAS ஆகணும் என்பது அவள் கனவு தான்.. அதே மாதிரிதான் இந்த விளையாட்டிலும்.. இத்தனை நாளாக தன் உள்ளே இருந்த திறமையை அவள் ஆசையை வெளியில் கொண்டு வந்தவன் அவள் கணவன்..
என்னதான் அவளை திட்டினாலும் இந்த இரண்டு விசயத்தில் அவள் மேல வரணும்னு பாடுபட்டான்.. இப்ப எல்லாம் வீணா போய்டும் போல இருக்கே... பேசாம அவன் சொல்ற மாதிரி கேட்கலாமா.. “ என்று யோசித்தாள்...
அடுத்த நொடி தன் வயிற்றில் ஒரு ஜீவன் அதுவும் தன் ஆசை கணவனின் உயிர்.... அதை எப்படி வேண்டாம் என்று அழிப்பதாம்..
எத்தனை பேர் இந்த பாக்கியம் கிடைக்காமல் தவம் இருக்கின்றனர் .. சுகந்தி அக்காவே கல்யாணம் ஆகி மூனு வருசம் ஆகியும் குழந்தை இல்லாமல் தானே அவள் மாமியார் அவளை திட்டியது...
அதுவும் இல்லாமல் அன்று நிகிலன் கார்த்தி குட்டியை கொஞ்சிய்து நினைவு வந்தது..
அதே மாதிரி அவன் சாயலில் ஒரு குழந்தை அவள் கையில் இருக்க அதன் கழுத்தை நெறிப்பதை போல கற்பனை பண்ணி பார்க்க அவள் உடல் நடுங்கியது ...
“என் கனவு லட்சியம் எல்லாம் எனக்கு வேண்டாம்.. எனக்கு இந்த குழந்தை, என் கணவனின் வாரிசு அவன் உயிர் தான் வேண்டும்.. “ என்று முடிவு பண்ணியவள் தலையை நிமிர்த்தினாள்..
மற்ற இருவரும் அவளையே பார்த்து கொண்டிருக்க, சிவகாமி ஏதோ சொல்ல வர, நிகிலன் கையை நிட்டி அவரை தடுத்தான்..
“அவளே சொல்லட்டும் மா.... நீ அவளை குழப்பாதா.. “ என்றான்...
அவளும் இருவரையும் பொதுவாக பார்த்து
“அத்தை சொல்ற மாதிரி இந்த குழ்ந்தை இருக்கட்டும்... என் கனவு இலட்சியம் எல்லாம் வேண்டாம்...எனக்கு இந்த குழந்தைதான் வேணும்.... “ என்றாள் மெதுவாக..
அதை கேட்டு சிவகாமி வேகமாக முன்னே வந்து அவளை கட்டி கொண்டார்...
“அப்படி சொல்லுடி என் ராஜாத்தி .. இப்பதான் என் வயித்துல பாலை வார்த்த... “ என்று அனைத்து கொண்டார்...
ஆனால் அவள் சொன்னதை கேட்டு மேலும் கடுப்பானான் நிகிலன்...
“அவள் இந்த குழந்தையை வச்சு ஏதோ ப்ளான் பண்ணி இருக்கா.. அதனால் தான் அவள் இலட்சியத்தையும் தூக்கி போட்டுட்டு இப்ப இந்த குழந்தை வேணும் ங்கிறா...” என்று முடுவு செய்தவன்
“அம்மா .. அவ சொல்றதையெல்லாம் நம்பாத.. அவ இந்த குழந்தைய வச்சு ஏதோ திட்டம் போட்டிருக்கா... அதான் இந்த குழந்தை வேண்டும் னு சொல்றா ..” என்றான் அடுத்த காரணத்தை கண்டு பிடித்து....
அதை கேட்டு இரண்டு பெண்களுமே திடுக்கிட்டனர்...
மதுவுக்கு இப்பதான் புரிந்தது அவன் ஏன் இந்த குழந்தையை வேண்டாம் என்று சொல்கிறான் என்று... தான் அவன் குழந்தையை சுமப்பது பிடிக்கவில்லை.. அதுக்குத்தான் அவள் மேல் அக்கறையாக இருப்பதாக இதுவரை காட்டி கொண்டான்....
அதை கேட்டு மதுவுமே அவன் தனக்காக பார்க்கிறான் என்று ஒரு நிமிடம் நம்பி விட்டாள்..
ஆனால் உள்ளுக்குள் அவன் இப்படி ஒரு எண்ணத்தை வைத்து கொண்டுதான் இதுவரை பேசியிருக்கிறான் என்று புரிய அடுத்த நொடி இறுகி போனாள்...
“இன்னும் கூட என்னை நம்பவில்லையே.. நான் அவனை ஏமாற்ற வந்தவ என்று தானே நம்பி கொண்டிருக்கிறான்.... “ என்றவள் கண்களில் நீர் சுரக்க, அதை கண்ட சிவகாமி தன் மகனிடம் கோபமாக திரும்பினார்...
“என்னடா திட்டம்..?? “ என்றார் அவனை ஆராயும் பார்வையுடன்...
“அவ நம்மளை எல்லாம் ஏமாத்தறா மா.... அந்த வசந்தி மாதிரி ஏதோ ஒரு திட்டத்தோடதான் வந்திருக்கா... அதான் என்னை மயக்கி.....” என்று ஏதோ சொல்ல வந்து பின் பாதியில் முழுங்கியவன்
“இந்த குழந்தையை வைத்து ஏதோ ப்ளான் பண்ணியிருக்கா... “ என்றான் இன்னும் அதே கோபத்துடன்...
“சீ.. போதும் நிறுத்துடா... இந்த நல்ல செய்தியை கேட்டு, நான் கூட நீ திருந்திட்ட.. பொண்டாட்டி கூட சந்தோசமா இருக்க னு நினைச்சிருந்தேன்.. நீ இன்னும் மாறவே இல்லை...
ஒருத்தரை பார்த்தாலே அவ நல்லவளா கெட்டவளானு கண்டு பிடிக்க தெரியாத நீ எல்லாம் என்னடா பெரிய போலிஸ் ஆபிசர்... உன்னையெல்லாம் நம்பி இந்த வேலைய கொடுத்திருக்காங்க பார்... “ என்றார் சிவகாமி பதிலுக்கு கோபமாக..
அவன் இன்னும் முறைத்து கொண்டே நிக்க,
“சரி.. இப்ப என்னதான் சொல்ல வர்ற?? “ என்றார் சிவகாமி வெறித்த பார்வையுடன்..அவனும் அசராமல் தன் அன்னையை பார்த்து
“இந்த குழந்தை இப்ப வேண்டாம்.. இதை கலைச்சி.... “ என்று அவன் முடிக்கு முன்னே ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்திருந்தார் சிவகாமி....
“சீ.. நீயெல்லாம் எப்படிடா என் வயித்துல வந்து பொறந்த ?? மூத்த பையன்.. எதையும் பொறுப்பா செய்வான்..
எந்த முடிவு எடுத்தாலும் சரியா இருக்கும் னு சின்ன வயசுல இருந்தே உன்னை அடிச்சு வளர்க்காம உன்னை நீயாவே யோசிச்சு முடிவு எடுக்கற மாதிரி வளர்த்தோம் பார்.... எங்களை அடிக்கணும்...
அப்பயே உன்னை அடிச்சு வளர்த்திருந்தா இப்படி தப்பு தப்பா முடிவு எடுக்காம நாங்க சொல்றதை கேட்டிருப்ப... உன் கல்யாணத்துல ஆரம்பிச்சு இப்ப வரைக்கும் இந்த ஒரு விசயத்துல ஏன்தான் இப்படி அடி முட்டாளா இருக்கியோ ??
உன்னை நினைச்சு இத்தனை நாள் பெருமை பட்டேன் பார்.. என்னை செருப்பால அடிச்சுக்கணும்.. உனக்கு அந்த ஓடிப் போனவன் எவ்வளவோ பரவாயில்லை.. “ என்றார் வெறுப்புடன்...
தன் அன்னை அடித்ததில் திகைத்து போய் நின்றிருந்தான் நிகிலன்..
அவர் சொன்ன மாதிரி இதுவரை அவனை யாரும் அடிச்சு வளர்த்ததில்லை..
சிறுவயதில் கூட அவன் தவறே செய்தாலும் அவன் தந்தை அவன் செய்த தவறு அவன் மனதில் பதியுமாறு ஏதாவது ஒரு கதையை சொல்லி அவனையே அவன் தப்பை உணர வைப்பார்...
சிவகாமியும் மூத்த மகன் தப்பு எதுவும் செய்ய மாட்டன் என்று அவனை அவன் போக்கிலயே விட்டு விட்டார்... அவன் படிப்பு, வேலை முதற்கொண்டு எல்லாமே அவனே முடிவு செய்ததுதான்...
அவன் மட்டும் இல்ல மற்ற இரண்டு பிள்ளைகளையுமே கூட சிவகாமி அடிச்சு வளர்த்ததில்லை..
பார்ப்பதற்கு அவர் முரட்டுதனமாக தெரிந்தாலும் தன் பிள்ளைகளை புத்தி சொல்லிதான் வளர்த்தினார்..
அப்படி இருந்த தன் அம்மா இன்று தோளுக்கு மேல வளர்ந்து திருமணம் ஆகிவிட்ட தன் மகனை கை நீட்டி முதல் முறையாக அடித்திருக்க, அவனோ திகைத்து நின்றான்....
இதற்கெல்லாம் இவள்தான் காரணம் என்று தன் கோபத்தை மதுவிடம் திருப்பினான். அவளை பார்த்து முறைத்தவன்
“மா... நான் சொன்னா சரியாதான் இருக்கும் னு நீ நம்பற இல்ல.. இவ நல்லவ இல்லை….” என்று பழைய பாட்டையே பாட, சிவகாமி உள்ளுக்குள் கொதித்து போனார்..
அவரும் அவனிடம் ஆர்க்யூ பண்ண அவன் வீசிய ஒவ்வொரு ஆயுதத்தையும் தடுத்து சமாளித்து கொண்டிருந்தார்.... பொருமையாக அவனுக்கு விளக்கம் சொன்னார்....
அவன் வீசிய ஆயுதம் எதுவும் தன் அன்னையிடம் பலிக்கவில்லை என தெரிய, ஆத்திரத்தில் தன் அறிவை இழந்தான்..
அடுத்து இன்றைய தலைமுறையினர் பயன்படுத்தும் வஜ்ராயுதத்தை கையில் எடுத்தான்.. அது தன் அன்னையை எப்படி காயபடுத்தும் என்று உணராமல் அந்த வஜ்ராயுதத்தை எரிந்தான் அவரை நோக்கி........
“மா... இது என் குடும்ப விசயம்.. அவ என் பொண்டாட்டி.. எங்களுக்கு என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்.. நீ இதுல தலையிடாத... “ என்றான் கோபம் தலைக்கேற...
அதை கேட்டு இருவருமே அதிர்ந்து போயினர்...
அவன் எரிந்த வஜ்ராயுதத்தை விட பவர்புல்லான சொல் ஆயுதம் சிவகாமி நெஞ்சை சரியாக குறி வைத்து தாக்க, அதை எதிர் கொள்ள முடியாமல் கீழ சரிந்தார்....
அதை கண்டதும்
“அத்தை ..... “ என்று பதறிய மது அவர் அருகில் ஓடி வந்து அவரை கட்டி கொண்டாள்.. அவர் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து மெல்ல அழுத்தினாள் அவள் கண்ணிலும் கண்ணீர் வழிந்தோடியது..
அவளாலயே நம்ப முடியவில்லை தன் கணவன் இப்படி எல்லாம் பேசிவிட்டானே என்று...
சிவகாமியாலும் தன் மகன் சொன்ன வார்த்தைகளை சீரணித்து கொள்ள முடியவில்லை.. அப்படியே சிறிது நேரம் அமைதியாக ஆழ்ந்து ஏதோ யோசித்து கொண்டிருந்தார்....
பின் தன் மருமகளின் கையை விலக்கி எழுந்து வேகமாக தன் அறைக்கு சென்று கதவை சாத்தி கொண்டார்....
அதை கண்டதும் மதுவுக்கு திக் என்றது...
“ஐயோ.. அத்தை.. “ என்று கத்தியவாறு அவர் அறைக்கு விரைந்தவள் கதவை தட்ட, அது திறக்காமல் போக இன்னும் பயந்து போய் தன் கணவனை பார்த்து
“ப்ளீஸ்.. அத்தை எதாவது பண்ணிக்க போறாங்க... சீக்கிரம் வாங்களேன்... “ என்றாள் தவிப்புடன்...
அப்பொழுது தான் அவனுக்கு உறைத்தது தான் எப்படி ஒரு வார்த்தையை சொல்லி விட்டோம் என்று
அவனும் வேகமாக முன்னே வந்து கதவை தட்ட முயல அதற்குள் சிவகாமியே கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தார் கையில் ஒரு பெட்டியுடன்...
தன் மருமகளை பார்த்து
“பயப்படாத மா.. தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு நான் கோழை இல்ல..
என் புருசன் என்னை விட்டு போனப்ப கூட நான் கலங்காமல் என் மூனு புள்ளைங்களையும் வளர்த்து இதோ இவ்வளவு பெரிய ஆளாக்கி அவனுக்கு ஒரு குடும்பத்தையும் உருவாக்கி கொடுத்திட்டேன்....
இனிமேல் அவனாச்சு.. அவன் பொண்டாட்டி ஆச்சு.. நான் தப்பு பண்ணிட்டேன்.. அவனுக்கு கல்யாணம் ஆன உடனே என் கடமை முடிஞ்சதுனு நான் கிளம்பி இருக்கணும் ... இங்க இருந்தது என் தப்புதான்...
இது அவன் வீடு... அவன் பொண்டாட்டி.. அவன் என்னை கழுத்தை பிடித்து வெளில தள்ளும் முன்னே நானே போய்டறேன்.. “ என்றவர் வாயிலை நோக்கி நடந்தார்...
அதை கேட்டு பதறிய மது வேகமாக அவர் முன்னே வந்து அவர் கையை பிடித்து கொண்டாள்....
“ஐயோ.. அத்தை.. அவர் ஏதோ கோபத்துல தெரியாம சொல்லிட்டார்... அதை எல்லாம் பெருசா எடுத்துக்காதிங்க... இது உங்க வீடு...நீங்க எங்களை விட்டு எங்கயும் போகக்கூடாது.... ” என்று சமாதானம் செய்ய முயன்றாள்...
“ம்ச்... இல்ல மா... இது உன் புருசன் வீடு.. நீ போய் அகிலா வ எழுப்பி வர சொல்றியா ?? சின்னவனும் அவன் வாழ்க்கையை அவன் தேடிக்குவான்.. இவ ஒருத்திதான் என்னை நம்பி இருக்கா... இவளையும் ஆளாக்கி ஒருத்தன் கையில புடிச்சு கொடுத்திட்டனா போதும்..
என் உடம்புல இன்னும் தெம்பு இருக்கு மா.. என் பொண்ணை காப்பாத்தற அளவுக்கு.. அந்த முருகன் இருக்கான் எனக்கு துணைக்கு.. நீ போய் அவள வரச் சொல்.. “ என்றார் தன் முகத்தை கடுமையாக்கி கொண்டு....
நிகிலனோ அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தான்... இந்த மாதிரி தன் அன்னை தன்னை விட்டு பிரியக்கூடாது.... தனக்கு மனைவியாக வருபவள் தன் அன்னையை பிரித்து விடுவாள் என்று தானே அவன் இவ்வளவு நாள் பயந்து இருந்தது...
இப்ப நானே அதை செய்துட்டனே.... “ என்று துடித்தவன் தன் அன்னையிடம் விரைந்து வந்து
“சாரி மா....என்னை மன்னிச்சிடு... நான் கோபத்துல ஏதோ சொல்லிட்டேன்... “ என்றான் வார்த்தை வராமல்...
“இருக்கட்டும் பா... மனசுல இருக்கிறது தான் வாயில வருமாம்.... உன் மனசுல இருந்தது இப்ப வெளில வந்திருச்சு.. நான் தான் இதை இத்தனை நாளா புரிஞ்சுக்கலை...
இப்ப தெளிவாகிட்டுது... நீ என்னதான் என்னை சொன்னாலும் என் பையன் டா நீ... உன் மேல போய் எனக்கு கோபம் வருமா.. இவளை உன் பொண்டாட்டினு இப்பயாவது ஒத்துகிட்ட இல்ல அதுவே எனக்கு சந்தோசம்...
இனிமேல் உன் வழியை நீ பார்... என் வழியை நான் பார்க்கறேன் .... உன்னை நம்பி வந்தவளை மட்டும் அவள் கெட்டவளே ஆனாலும் கை விட்டுடாத... “ என்றவர் மேல பார்த்து
“அகிலா எழுந்து வா.... “ என்று குரல் கொடுத்தார்....
அப்பொழுதுதான் அவர் எடுத்த முடிவின் தீவிரம் புரிய நிகிலன் கலங்கி போனான்....
“ஐயோ.. மா.. நான் அந்த அர்த்தத்துல சொல்லல.. உன்னை வீட்டை விட்டு போகணும்னு எல்லாம் சொல்லலை....உன்னை எப்படி ஒத்துக்க வைக்கிறதுனு தெரியலை.. அதனால தான் அப்படி சொன்னேன்.. ப்ளீஸ் மா. அதை போய் பெருசா எடுத்துக்காத.. “ என்றான் அவர் கையை பற்றி கொண்டு...
“இருக்கட்டும் பா.. என்னைக்குனாலும் நான் வெளில போய் தான் ஆகணும்..
ராணி மாதிரி அந்த அரண்மனையில் இருந்த ரமணியே இப்ப ஒன்டி குடிசையில இருக்கலையா.. எனக்கு என்னடா..? நீ உன் பொண்டாட்டி புள்ளையோட சந்தோசமா இருந்தா அதுவே எனக்கு போதும்.... “ என்றார் கண்ணில் நீர் மல்க..
அதை கண்டவன் அதற்கு மேல் தாங்காமல் அவரை கட்டிகொண்டு கண் கலங்கினான்..
“ப்ளிஸ் மா.... அப்படியெல்லாம் பேசாத.. என்னால தாங்க முடியாது... நீ நல்லா இருக்கணும்னு தான் நான் கல்யாணமே வேண்டாம்னு இருந்தேன்... நீயே இப்படி வேதனை பட்டு வீட்டை விட்டு போகிற மாதிரி ஆகும்னு நான் நினைக்கலை..
உனக்கு என்ன இந்த குழந்தை தான வேணும்... சரி விடு.. நீ ஆசை படற மாதிரியே இருக்கட்டும்.. அதுக்காக என்னை விட்டுட்டு போய்டாத.. எனக்கு உன்னை விட்டா வேற யார் இருக்கா... “ என்று கதறினான் தன் அன்னையை கட்டி கொண்டு...
எப்பவும் சிங்கம் மாதிரி இருப்பவன் கண்ணீர் விட்டு அழவும் அதற்கு மேல் சிவகாமியாலும் தாங்க முடியவில்லை...தன் பிடிவாதத்தை விட்டு கீழிறங்கி வந்தவர்,
“போதும் டா... நீ ஏன் அழற??.. என் பையன் ராஜா மாதிரி எப்பவும் கம்பீரமா இருக்கணும்.. இதெல்லாம் நல்லா இல்லை.. முதல்ல அழுகையை நிறுத்து.. “ என்று தன் முந்தானையால் அவன் கண்ணை துடைத்து விட்டார்...
அவனும் அதற்குள் தன்னை கட்டு படுத்தி கொண்டவன்
“இனிமேல் என்னை விட்டு போக மாட்ட இல்ல மா.. ??“ என்றான் மீண்டும் தன் தாயின் முகத்தை ஏக்கமாக பார்த்து சிறுபிள்ளையாக...
“கிறுக்கா.. உன்னை விட்டு நான் எங்க போகப் போறேன்... அப்படியே போனாலும் என் உடல் தான் அங்க இருக்கும்.. என் உயிர் இங்க தான் சுத்திகிட்டு இருக்கும்...” என்றார் தன் கண்ணீரை துடைத்து கொண்டு...
பின் தன் மகனை பார்த்து
“ஆனாலும் நீ மனசு மாற மாட்டியே...?? இந்த குழந்தை நம்ம குல வாரிசு டா.. முதல் குழந்தை.. அதை போய் அழி.. “ னு சொல்ல என்னால தாங்க முடியலை.. இதுமாதிரி எதுவும் கிறுக்கு தனம் பண்ண மாட்ட இல்ல.. “ என்றார் சந்தேகமாக...
“இல்ல மா.. என்னை நம்புங்க.. இதுதான் உங்க சந்தோசம்னா நான் ஏன் அதை கெடுக்க போறேன்...எனக்கு உங்க சந்தோசம்தான் முக்கியம்... “ என்றான் ...
“அப்ப எனக்கு சத்தியம் பண்ணு ... “என்று கையை நீட்டினார்...
“என்னம்மா இதெல்லாம் ??.. என் மேல நம்பிக்கை இல்லையா..?? சத்தியம் அது இது னு..” என்றவன் தன் அன்னையின் கையை பிடித்து
“உங்க சந்தோசத்தை கெடுக்கற மாதிரி எந்த காரியத்தையும் நான் பண்ண மாட்டேன்.. எனக்கு உங்க சந்தோசம் தான் முக்கியம்.. “ என்று மெல்ல அவரை அனைத்து கொண்டான்....
அதே நேரம் வாயிலில் அழைப்பு மணி ஒலிக்க, மூவரும் திடுக்கிட்டனர்...
“இந்த நேரம் யாரா இருக்கும் ??“ என்று யோசிக்க, நிகிலன் சென்று அருகில் இருந்த வாஷ்பேசினில் தன் முகத்தை கழுவி அழுந்த துடைத்து கொண்டு வாயிலை நோக்கி நடந்தான்....
அதற்குள் சிவகாமியும் மதுவுமே தங்கள் கண்களை துடைத்து கொண்டனர்... ஆனாலும் இருவர் முகமுமே அழுத சுவடு தெரிய, அருகில் இருந்த அறைக்கு சென்று முகத்தை கழுவி கொண்டு வந்தனர்....
அதற்குள் கதவை திறந்தவன் வெளியில் நின்றிருந்த சண்முகத்தையும் சாராதாவையும் கண்டு அதிர்ந்து நின்றான்....
“என்ன மாப்பிள்ளை.. இப்படி சாக்காகி நிக்கறீங்க..?? ஓ.. எங்களை எதிர் பார்க்கலையா... எல்லாம் நல்ல செய்தி கேட்டுத்தான் ஓடி வந்தோம்... வாழ்த்துக்கள் மாப்பிள்ளை..
எப்படியோ எங்களை தாத்தா பாட்டி ஆக்கிட்டீங்க.. “ என்று சண்முகம் அவன் கையை பிடித்து குலுக்கியவாறு இருவரும் சிரித்த முகத்துடன் பூரிப்புடனும் உள்ளே வந்தனர்.....
அவர்களை கண்டவன் தன்னை மறைத்து கொண்டு புன்னகைத்து அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து வந்தான்....
அதற்குள் சிவகாமியும் மதுவுமே ஹாலுக்கு வந்திருக்க, சண்முகம் நேராக தன் மகளிடம் சென்று அவளை கட்டி அணைத்து கொண்டார்...
“மது கண்ணா.. கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்குடா...விவரம் தெரியாத விரல் சூப்பிகிட்டிருந்த என் பொண்ணும் இப்ப ஒரு குழ்ந்தைக்கு தாயாக போறானு என்னால நம்பவே முடியலை.. “என்று அவருமே கண் கலங்க. மதுவும் ஆனந்த கண்ணிருடன் அவரை கட்டி அணைத்து கொண்டாள்....
“அடடா.. என்ன அண்ணா... நல்ல நாள் அதுவுமா கண் கலங்கிட்டு... “ என்று சிவகாமி தான் அவரை கடிந்து கொண்டார் தன்னை சமாளித்து கொண்டு...
“இது ஆனந்த கண்ணீர் சம்பந்தி...தாத்தா ஆக போற சந்தோசத்துல வர்றது... “ என்று சிரித்தார் சண்முகம்...
சாரதாவும்
“நீங்க வேற அண்ணி.. நைட் நீங்க போன் பண்ணி விசயத்தை சொன்ன உடனே அப்பயே கிளம்பிட்டார் என் பொண்ணை பார்க்கணும்னு... நான் தான் இந்த நேரத்துல வேணாம்னு பிடிச்சு வச்சிருந்தேன்..
அப்பவும் அதிகாலையிலயே எழுந்த உடனே கிளம்பி உட்கார்ந்திருக்கார்.. நான் தான் நீங்க இன்னும் எழுந்திருக்க மாட்டீங்க.. காலையிலயே போய் தொந்தரவு பண்ண வேண்டாம்னு சொல்லி புடிச்சு வச்சேன்... “ என்று சிரித்தார் சாரதா....
“போடி.. உனக்கு என்ன தெரியும்?? என் பொண்ண பார்க்காம எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா?? நைட் எல்லாம் தூக்கமே இல்லை...என் மதுகுட்டியை எப்ப போய் பார்ப்போம்னு இருந்தது.. “ என்றார் தன் மனைவியை முறைத்தவாறு..
மதுவும் சிரித்து கொண்டே தன் தந்தையின் தோளில் சாய்ந்து கொள்ள, சாரதா அவள் தலையை வாஞ்சையுடன் தடவி
“எப்படிடா இருக்க மது கண்ணா.. டாக்டர் என்ன சொன்னார்...?? “ என்றார் கனிவுடன்...
சிவகாமி தாங்கள் நேற்று போய் டெஸ்ட் எடுத்ததை பற்றி சொல்லி பேசி கொண்டிருந்தார்...
மூவருக்குமே இது முதல் பேரக் குழந்தை என்பதால் பூரிப்புடனும் மகிழ்ச்சியுடன் கதை பேசி கொண்டிருந்தனர்...
அதற்குள் அகிலாவும் எழுந்து வந்து விட அவளும் தன் அண்ணி தாயாக போவதை அறிந்து
“ஐ... நான் அத்தையாக போகிறேன்... என் கூட விளையாட என் மருமகன் வரப்போகிறான்... “என்று குதித்தாள்...
இப்படி அங்கு இருந்த அனைவரும் அவர்களின் வாரிசு வரப்போகும் மகிழ்ச்சியில் இருக்க, அந்த குழந்தையின் தந்தையோ இன்னும் உள்ளுக்குள் விறைத்து கொண்டுதான் இருந்தான்...
அதை கண்டு அந்த விதியும் கை கொட்டி சிரித்து கொண்டது....
“எப்படியோ என் ஆட்டம் படி இருவரும் மகிழ்ச்சியாக இருக்க கூடாது.. இந்த வேலன் என்ன பண்ணினாலும் கடைசியில் என் ஆட்டம் தான் வெல்லும்..” என்று சிரித்து கொண்டது...
Comments
Post a Comment