காதோடுதான் நான் பேசுவேன்-29


அத்தியாயம்-29

வெளியில் சென்றிருந்த நிகிலன் திரும்பி வரவும் கதைவை தட்டி உள்ளே வர, அங்கு ரமணியை சிரித்த முகத்துடன் அதுவும் தான் அவருக்காக பார்த்து பார்த்து வாங்கியிருந்த புடவையில் பார்க்க கண்களை அகல விரித்தான் ஆச்சர்யத்தில்... அவரின் அருகில் வந்தவன்

“என்ன மா இது அதிசயம்??... இவ்வளவு சூப்பரா இருக்கீங்க... அப்படியே 10 வயது குறைஞ்சுபோச்சு... எனக்கு அக்கா மாதிரி ஆயிட்டீங்க... “ என்று சிரித்தான்

அதை கேட்டு அதிசயித்த ரமணி மதுவை பார்க்க அவளும் பார்த்தீங்களா?? என்று கண்ணடித்து சிரித்தாள்..

“என்னம்மா ரகசியம்?? எதுக்கு அவளை பார்க்கறீங்க?? “ என்றான் புரியாதவனாக..

“அது வந்து கண்ணா.. நீ என்னை பார்த்து இப்படித்தான் சொல்லுவ னு மது சொன்னா... பார்த்தா அதே மாதிரி நீ சொல்ற .. அதான் அவ சிரிக்கிறா.. “என்று சொல்லி சிரித்தார் ரமணி...

இன்னும் ஆச்சர்யமாக இருந்தது ரமணி அப்படி சிரிப்பது.. .நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் மனம் விட்டு சிரித்து பார்க்கிறான்...

“எப்படியோ கண்ணா... இதே மாதிரி உன் மனச அறிந்து இரண்டு பேரும் ஒரே சிந்தனையோடு இருக்கணும்.. “ என்று வாழ்த்தினார்..

அதற்குள் கௌதம் அந்த புது ட்ரெஸ் ஐ போட்டுக் கொண்டு வர, ரமணிக்கு அவனை காணவும் கண்கள் நிறைந்து இருந்தது..

கௌதம் அவன் அப்பா மூர்த்தியை உரித்து வைத்திருப்பான்.. அதனால் அந்த ஆடையில் தன் கையை மடக்கி விட்டவாறே கம்பீரமாக வரும் தன் மகனை காணவும் அவருக்கு தன் கணவனின் நினைவு வர, அப்படியே இமைக்க மறந்து தன் மகனையே ரசித்து இருந்தார்....

தன் அன்னையின் கண்ணில் தெரிந்த பாசமும் இத்தனை நாள் காணாத ஏக்கமும் கௌதமுக்குமே மெய் சிலிர்க்க வைத்தது.. இந்த பாசத்திற்கு நிகர் எதுவும் இல்லை என புரிந்தது...

அவனும் சிரித்துக் கொண்டே வந்து அவர் காலில் விழுந்து வணங்க, மீண்டும் அவனை வாழ்த்தினார் ரமணி...

அதற்குள் அருகில் நின்ற மது,

“வாவ்... பர்த்டே பாய்.. இப்பதான் கலக்கலா இருக்கீங்க.. அப்படியே திரும்பி கொஞ்சம் எங்க கூட வர்ரீங்களா.. உங்களுக்கு இன்னொரு கிப்ட் காத்துகிட்டு இருக்கு...

ஆனா அதுக்கு நீங்க கண்ணை மூடிகிட்டு தான் வரணும்.. சரி கண்ணை மூடுங்க..” என்று தன் கைகளால் அவன் கண்ணை பொத்தி அவனை வெளியில் அழைத்து கொண்டு சென்றாள் மது ..

ரமணியும் அவளின் உரிமையான பாசத்தை கண்டு நெகிழ்ந்து சிரித்து கொண்டே வெளியில் நடக்க, அங்கிருந்த பெரிய ஹாலை அடைந்ததும் தன் கையை எடுத்தவள்

“இப்ப திறக்கலாம்.. “என்றாள்...

கண்ணை திறந்த கௌதம் ஆச்சர்யத்தில் வியந்து நின்றான்.. அந்த ஹாலின் நடுவில் பெரிய கேக் வைக்கபட்டு அவன் பெயரிட்டு வாழ்த்தி அதை சுற்றிலும் மெலுகுவர்த்தி வைக்க பட்டிருந்தது..

அதை சுற்றிலும் அந்த இல்லத்து பெரியவர்கள் நின்றிருந்தனர்...

அத்தனை பேரையும் ஒரு சேர பார்க்க அவனுக்குமே என்னவோ போல் இருந்தது...

இவர்கள் எல்லாம் தன்னை போல இவர்கள் பையனால் விலக்கி வைக்கபட்டிருக்கிறார்களே.. என்று மனம் வலித்தது அவனுக்கு.. அதை கண்டுகொண்ட மது ,

“நோ பீலிங்ஸ் ணா... ஒன்லி ஹேப்பி... இன்னைக்கு முழுவதும்..” என்றாள் ரகசியமாக...

அதை கேட்டு தன்னை சமாளித்து கொண்டவன் அனைவருக்கும் வணக்கம் சொல்லி அந்த கேக் அருகில் சென்றான்.. ரமணியையும் அழைத்து அருகில் வைத்து கொண்டு மெழுகுவர்த்தியை ஊதி கேக்கை வெட்டினான்..

மது தன் அலைபேசியில் பர்த்டே சாங்க் ப்ளே பண்ணியவாறு அங்கு நடப்பவைகளை பதிவு செய்து கொண்டிருந்தாள்..

கேக் ஐ எடுத்து தன் அன்னைக்கு ஊட்ட அவருக்கு மனம் கொள்ளா மகிழ்ச்சி... ஆசையாக வாங்கிக் கொண்டார்.. பின் கௌதமிற்கு ஊட்ட,

“எத்தனை நாள் ஆகிறது என் கையால் இப்படி இவனுக்கு கொடுத்து.. “என்று நினைத்தாலும் மது சொன்ன இன்றைய நாளை மட்டுமே நினையுங்கள் என்பது நினைவு வர, இன்று கிடைத்த சந்தோச நிமிடங்களை அனுபவித்தார்...

நிகிலனும், மதுவுமே அவனுக்கு கேக் ஊட்டி கலாட்டா பண்ண, கௌதம் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான்..

கலாட்டா முடிந்ததும்

“அண்ணா..பர்த்டே பாய்க்கு எல்லோரும் பர்த் டே பம்ப்ஸ் கொடுப்பாங்க இல்ல.. அது மாதிரி உங்க பர்த்டே பம்ப்ஸ் என்னன்னா, இங்க இருக்கிற எல்லார் கால் லயும் நீங்க விழுந்து ஆசிர்வாதம் வாங்கணும்...

பிறந்த நாள் அன்று பெரியவங்க கால்ல விழுந்து ஆசி வாங்குவது அதுவும் அவர்கள் தங்கள் கையால் நெஞ்சார தலையில் கை வைத்து ஆசி வழங்க அவ்வளவு புண்ணியமாம்.. எங்கப்பா அடிக்கடி சொல்வார்...

நீங்க ரொம்ப லக்கி ணா .. ஒரு பெரியவங்களுக்கு பதிலா இத்தனை அப்பா அம்மா ஒரே இடத்துல இருக்காங்க.. அதனால சிரமம் பார்க்காமல் எல்லார்கிட்டயும் ஆசி வாங்குங்க..

இனிமேல் உங்க லைப் இப்ப இருக்கிறதை விட இன்னும் ஹேப்பியா இருக்கும்.... “ என்று சிரித்தாள்...

“கண்டிப்பா மது... “ என்றவன் சிரித்தவாறே ஒவ்வொருவர் காலிலும் விழ அந்த பெரியவர்களும் நெகிழ்ந்து போயினர்...

இதுவரை பிறந்த நாள் விழாவுக்கென நிறைய பேர் வந்திருக்கிறார்கள்.. அவர்களுக்கு கேக், மற்ற பொருட்கள் என்று பரிசாக கொடுத்திருக்கிறார்கள் தான்...

ஆனால் யாரும் இது மாதிரி காலில் விழுந்து வணங்கவில்லை... நிகிலன் மட்டும் அவன் பிறந்த நாளுக்கு இது மாதிரி அனைவர் காலிலும் விழுந்து வணங்குவான்..

மற்றபடி யாரும் இது மாதிரி பண்ணாததால் அவர்களுக்கும் தங்கள் மகனே காலில் விழுந்து வணங்குவதை போல பூரித்து, தங்களையும் தாய் தந்தையாக நினைத்து காலில் விழுந்த கௌதமை தூக்கி மனதார வாழ்த்தினர்...

ஒவ்வொருத்தர் நெகிழ்வுமே கௌதமிற்கு ஏதோ ஒரு புதுவித இனம் புரியாத பீலிங்சை கொடுத்தது..

மதுவும் நிகிலனும் அந்த கேக் ஐ கட் பண்ணி ஒவ்வொருத்தருக்கும் கொடுக்க, அதோடு மாலை சிற்றுண்டியும் மது ஸ்பெஷலாக ஆர்டர் பண்ணியிருக்க, அதையும் கலந்து அனைவருக்கும் கொடுத்தனர்...

அனைவரும் மகிழ்ந்து போய் அந்த மாலை நேரத்தை அனுபவித்தனர்...

அதோடு அந்த சின்ன பெண்தான் தங்கள் மகன் நிகிலனின் மனைவி என தெரிந்து கொண்டு அனைவரும் மது விடம் வந்து வாழ்த்தி பாராட்டி சென்றனர்...

அதை கண்ட ரமணிக்கும் மனது நிறைந்து இருந்தது...

ஒரு வழியாக எல்லா கொண்டாட்டங்களும் முடிய, அந்த தோட்டத்தில் அமர்ந்து நால்வரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க, பின் நேரம் ஆவதை உணர்ந்து மது கௌதமை கிளம்ப சொன்னாள் வசந்தி தேடுவாள் என்று...

கௌதமும் மதுவை பார்த்து

“ரொம்ப தேங்க்ஸ் தங்கச்சி.. இந்த மாதிரி ஒரு பிறந்த நாளை நான் இதுவரை கொண்டாடியதில்லை.. மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.. நீ எப்பவும் இதே போல சிரிச்சுகிட்டே சந்தோசமா இருக்கணும்.. “என்று வாழ்த்தினான்..

“அடடா... இதுல என்ன ணா இருக்கு.. நீங்க சொன்ன தங்கச்சியா என்னால் முடிஞ்சதை செஞ்சேன்.. அப்புறம் இன்று இரவு அனைவருக்கும் ஸ்பெஷல் டின்னர் உங்க சார்பா அரேஞ் பண்ணியிருக்கார் உங்க பிரண்ட்... அதோட பில்லை மட்டும் நீங்க கட்டிடுங்க...

நான் கொடுக்கலாம் தான்.. ஆனால் பிறந்தநாள் அன்று யார் மற்றவர்களுக்கு வயிறை குளிர வைக்கிறார்களோ அவங்களுக்கு அந்த புண்ணியம் சேருமாம்... எங்கப்பா அடிக்கடி சொல்வார்...

என்றவள் தன் கணவனை ஓரக்கண்ணால் சிரித்துகொண்டே பார்க்க அவ்ள் எதிர்பார்த்த மாதிரியே நிகிலன் அவளை முறைத்தான்...

“எங்கப்பா பத்தி சொன்னா இவனுக்கு என்னவாம்.. எப்ப பார் முறைச்சுகிட்டே இருக்கான்.. “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டவள் கௌதமை பார்த்து

“அதனால் நீங்க அந்த பில்லை கட்டினாதான் அந்த புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும்..... “ என்று சிரித்தாள்..

“அதனால் என்ன மது... நானே பே பண்ணிடறேன்.. இப்படி ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த உனக்கு தான் நான் எப்படி தேங்க்ஸ் சொல்றதுனு தெரியல... “ என்று தழுதழுத்தான்...

“நீங்க அடிக்கடி வந்து அம்மாவை பாருங்க.. நேரம் கிடைக்கிற பொழுது அவங்ககிட்ட பேசுங்க.. அதுதான் நீங்க எனக்கு செய்யற நன்றி கடன் போதுமா?? செய்வீங்க இல்லா?? “என்றாள் குறும்பாக் மிரட்டும் குரலில்...

ஹா ஹா ஹா.. இந்த செல்ல தங்கச்சிக்காகவாது நீ சொல்றதையெல்லாம் கேட்கறேன் மா... “ என்று சிரித்தான்...அதை கண்ட நிகிலன்

“டேய்.. போதும் டா .. உங்க பாசமலர் டயலாக்.. தாங்க முடியல.... சீக்கிரம் கிளம்பி போ.. உன் பொண்டாட்டி அங்க உன் கன் ஐ எடுத்து கையில வச்சுகிட்டு வாசல்லயே தயாரா இருப்பா... போறப்ப மறக்காம உன் பழைய சட்டையா மாத்திகிட்டு போ..” என்று சிரித்தான் நிகிலன்....

“ஹ்ம்ம்ம் என் தங்கக்ச்சி கிட்ட கொஞ்சினா உனக்கு ஏன்டா பொறாமை... “ என்று சிரித்தவன் தன் அன்னையிடம் மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டு அனைவரிடமும் விடைபெற்று கிளம்பி சென்றான்...

நிகிலனும் மதுவும் ரமணியிடம் சொல்லி கொண்டு கிளம்ப, ரமணி மது வைக் கட்டி கொண்டு

“ரொம்ப தேங்ஷ் டா மதுகுட்டி... மனம் இப்பதான் இலேசா இருக்கு.. எல்லா பாரமும் இறங்கிட்ட மாதிரி இருக்கு.. “ என்று சிரித்தார்..

“இப்பதான் நீங்க நல்ல என் செல்ல அம்மா.. இதே மாதிரி எப்பவும் சிரிச்சுகிட்டே இருங்க... மீதி இருக்கிற வாழ்க்கையையும் சந்தோசமா கழிக்கலாம்... “ என்று அவர் கன்னத்தை செல்லமாக கிள்ளி அவர் கன்னத்தில் முத்தமிட்டாள் மது..

அவளின் அந்த செல்ல முத்தத்தில் சிலிர்த்து போனார் ரமணி

“அடிக்கடி இங்க வாடா.. உன் பேச்சை கேட்டாலே புது தெம்பு வருது.. “ என்றார் ஏக்கமாக..

“கண்டிப்பா மா... இனிமேல் உங்களை பார்க்க ஓடோடி வந்திருவேன்... நீங்க பத்திரமா இருங்க.. “என்று சொல்லி விடை பெற்று காரை நோக்கி நடந்தனர்..

ரமணியும் கூடவே வந்து கார் கிளம்பும் வரை நின்று கிளம்பியதும் கை அசைத்து விடைப் பெற்று சென்றாள் மது...

காரில் அமர்ந்ததும் வழக்கம் போல மது சன்னல் வழியாக வேடிக்கை பார்க்க, காரை ஓட்டி கொண்டிருந்த நிகிலனுக்கோ அவள் ஒரு புரியாத புதிராக இருந்தாள்...

அவள் நல்லவளா இல்லை கெட்டவளா என்ற குழப்பமே இன்னும் அவன் மனதில்...

இன்று முழுவதுமே அவனுக்கு பல ஆச்சர்யங்கள்.. தனக்கு வந்தவளின் பல முகத்தை பார்த்தான்.. முதல் ஆச்சர்யம் கௌதம் வீட்டில் ஆரம்பித்தது..

கௌதம் ம் நிகிலனும் அலுவலக சம்பந்தமாக பேசி கொண்டிருக்க, நிகிலனுக்கு கமிசனரிடம் இருந்து அழைப்பு வர, வெளியில் எழுந்து வந்து அவரிடம் பேசினான்..

பேசி முடித்ததும் வசந்தியின் அறையை கடக்கும் பொழுது சன்னல் வழியாக அவர்கள் பேசுவது கேட்டது... வசந்தி அவன் அன்னையை பற்றி விசாரிக்க ஆரம்பிக்க, மது என்ன சொல்லப் போகிறாள் என்று தெரிந்து கொள்ள ஓரமாக மறைந்து நின்று கொண்டான்...

வசந்தியின் பேச்சை கேட்டதும் நிகிலனுக்கு ஆத்திரத்தில் பல்லை கடிக்க, மதுவோ எதுவும் அலட்டி கொள்ளாமல் அவள் மாமியாரை விட்டுக் கொடுக்காமல் பேசியதும் அதோடு அவளே வசந்திக்கு அட்வைஸ் பண்ணியதையும் கேட்டதும் அவனுக்கு ஆச்சர்யம்...

அடுத்தது இல்லத்தில் அவள் நடந்து கொண்டது.. பிறந்த நாள் அன்று கூட தன் அன்னையை வந்து பார்க்காமல், பேசாமல் இருந்த கௌதமை வரவழைத்து ரமணியின் முகத்தில் சிரிப்பைக் கொண்டு வந்து கேக் வெட்டி அனைவருக்கும் அந்த நாளை இனிய நாளாக மாற்றியவளுடைய புத்திசாலி தனத்தை நினைத்து அடுத்த ஆச்சர்யம்....

பார்க்க சின்ன பெண்ணாக வெகுளியாக இருந்தாலும் சில நேரங்களில் அவள் புத்திசாலிதனமாக நடந்து கொள்வதை கண்டு இன்னும் ஆச்சர்யமாகி போனது அவனுக்கு...

மெல்ல அவளை ஓரக்கண்ணால் பார்க்க, அவளோ வெளியில் பார்வையை செலுத்தி வந்தாள்...

அவளின் அந்த குழந்தைதனமான முகமும் சிரிக்கும் கண்களும் அவனை அறியாமலயே அவளை ரசிக்க தூண்டியது... அதற்குள் தன் தலையை உலுக்கி கொண்டவன் அவள் பக்கம் திரும்பி

“தேங்க்ஸ்.. “ என்றான் மொட்டையாக...

அதிசயமாக தன்னிடம் பேசியவன கண்டதும் வியந்து விழி விரித்து

“எதுக்கு சார்...?? “ என்றாள் குறும்பாக உள்ளுக்குள் சிரித்தவாறு...

“ஹ்ம்ம்ம் எல்லாத்துக்கும் தான்...” என்றான் சாலையை பார்த்தவாறு... பின் அவளிடம் திரும்பி

“ஆமா... கௌதம் ஐ எப்படி அங்க வரவச்ச?? “ என்றான் இன்னும் அவனுக்கு புரியாமல் இருக்க...

“அது வந்து.... அண்ணா வீட்ல இருந்து வரும்பொழுது அத்தை கிட்ட கௌதம் அண்ணா நம்பர் வாங்கி அவருக்கு மெசேஜ் பண்ணினேன் அங்கு வரச்சொல்லி...

முதல்ல தயங்கினார்... அப்புறம் கொஞ்சம் மிரட்டினேனா உடனே ஒத்துகிட்டார்...அந்த வசந்தி தூங்கிகிட்டிருக்கவும் உடனே கிளம்பி வந்திட்டார்...” என்று சிரித்தாள்.....

“பாருடா.. இந்த ஒட்டடகுச்சியெல்லாம் மிரட்டற அளவுக்கு வளர்ந்திருச்சு... டேய் மச்சான்.. உன் நிலைமை இப்படியா ஆகணும் ??.. ஒரு பக்கம் உன் பொண்டாட்டி ஒரு பக்கம் உன் தொங்கச்சி உன்னை மிரட்டறாளாம்....என்ஜாய் டா “ என்று சிரித்துக் கொண்டன் மனதுக்குள்....

ஏதோ யோசித்து கொண்டிருந்த மது

“சார்ர்ர்ர்ர்ர்ர்” என்று இழுத்தாள்...

திரும்பி என்ன என்று தன் புருவங்களை உயர்த்தினான் நிகிலன்...

“வந்து.. ஒரு சின்ன யோசனை... சொல்லவா.?? “என்றாள் தயங்கியவாறு..

“ஹ்ம்ம்ம்ம்....” என்றான் இடுங்கிய கண்களுடன்

“சொல்றதே ஹ்ம்ம்ம் னு ஒரு சத்தம்... அதை கொஞ்சம் சிரிச்சுகிட்டே சொன்னாதான் என்ன??... சிடுமூஞ்சி.. விருமாண்டி “ என்று மனதுக்குள் திட்டியவள்

“வந்து.... அந்த இல்லத்தில இருக்கிறவங்க எல்லாம் ஒரு காலத்துல தங்கள் மகன் மகள் னு குடும்பமா வாழ்ந்தவங்க... அந்த குடும்ப சூழ்நிலையை விட்டு இப்படி தனியா இருக்கிறது கொஞ்ச நாளைக்கு பிடித்தாலும் இந்த வாழ்க்கையிலும் அவங்களுக்கு சலிப்பு வந்திடும் சார்....

அதனால நாம இந்த மாதிரி குடும்பத்துல இருக்க ஆசை படறவங்களை கூட்டி வந்து கொஞ்ச நாளைக்கு நம்ம கூட வச்சுக்கலாமா?? அவங்களுக்கு பிடிக்கிற வரைக்கு நம்ம கூட இருக்கட்டும்.. அவங்களுக்கு இங்க போரடிக்கிறப்போ அங்க இல்லத்திற்கு போய்டட்டும்..

அடுத்து வேற ஒருத்தங்களை கூட்டிட்டு வரலாம்... அதனால அவங்களுக்கும் ஒரு மாறுதலா இருக்கும்... யாரெல்லாம் விருப்ப படறாங்களோ அவங்கள கூட்டிகிட்டு வரலாம்.. அத்தைக்கும் பொழுது போகும்...

அதோட நம்ம ஆதி அண்ணா கிட்டயும் கேட்கலாம்.. பாரதியும் இதுக்கு ஓகே சொல்லுவாங்க.. நம்ம இரண்டு வீட்லயும் வந்து ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வாரம் இருந்தா அவங்களுக்கும் மாறுதலா இருக்கும்... கூட்டிகிட்டு வரலாமா சார்?? “ என்றாள் கண்ணில் ஆர்வத்துடன்....

அதை கேட்டு நிகிலன் ஆச்சர்யபட்டான்... இது மாதிரி ஐடியா அவனுக்கு வந்ததில்லை.. அங்கு இருப்பவர்கள் உற்சாகமாக இருக்க இவனும் முயன்று பல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறான்...

கவுன்சிலிங் கொடுப்பது, யாரையாவது அழைத்து வந்து ஸ்டான்ட் அப் காமெடி ஆன்மீக பேச்சுக்கள், வெளியில் சுற்றுலா மாதிரி அழைத்து செல்வது , விரும்புபவர்களை கடைக்கு அழைத்து சென்று இல்லத்திற்கு தேவையான பொருட்களை அவங்களே வாங்க வைப்பது .. “ என்று பல முறைகளை பின் பற்றியிருக்கிறான்...

அவன் கூட இல்லையென்றாலும் வேலாயுதமும் ரமணியிடமும் சொல்லி இது மாதிரி நிறைய செய்ய வைத்திருக்கிறான் அங்கு இருப்பவர்களுக்கு சலிப்பு வராமல் இருக்க...

ஆனால் இந்த மாதிரி அவர்களையும் தங்கள் குடும்பத்தில் ஒருத்தராக அழைத்து வந்து வைத்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதில்லை...

அவள் யோசனை அவனுக்கு பிடித்து விட, முதல் முறையாக மனம் திறந்து

“வாவ்... சூப்பர் ஐடியா... இது எனக்கு தோணவே இல்லை... தேங்க்ஸ் பார் யுவர் சஜஸ்சன்....” என்று புன்னகைத்தான்..

“ஆதி , வசி கிட்டயும் இதை பத்தி பேசறேன்.. அவனுங்களும் கண்டிப்பா கெல்ப் பண்ணுவானுங்க... இன்னும் மற்ற பிரண்ட்ஸ் சர்ர்கில்லயும் கேட்கலாம்... நீ சொன்ன மாதிர் யாருக்கு விருப்பம் இருக்கோ அவங்களை அனுப்பி வைக்கலாம் ஒரு வாரத்துக்கு...கண்டிப்பா அவங்களுக்கும் ஒரு சேன்ஜ் ஆ இருக்கும்... வெரி குட் ஐடியா... “ என்றான் மகிழ்ச்சி பொங்க..

தன் கணவனின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை கண்ட மதுவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.. இவனுக்கு இப்படி கூட சிரிக்க,பேச தெரியுமா?? என்று

எப்பொழுதும் இறுகிய முகத்துடன் உடலில் ஒரு இறுக்கத்துடன் யாரும் தன்னை நெருங்கிவிடாத மாதிரி விரைத்து கொண்டு இருப்பவன் இன்று மனம் விட்டு வாழ்த்தியதும் அவன் முகத்தில் தெரிந்த இலகிய தன்மையும் உதட்டில் பூத்த அந்த புன்னகை பூ என எல்லாமே அவளுக்கு ஆச்சர்யமாக இருக்க அதை எல்லாம் அவன் அறியாமல் ரசித்து தன் மனதிற்குள் பத்திர படுத்தினாள் மது...

நிகிலனும் மீண்டும் அவளை பற்றி ஆராய, இவள் எப்படியோ அந்த வசந்தி மாதிரி இல்லை என ஒத்துக் கொண்டான்....

அவன் முன்பு அழித்திருந்த அவள் மீதான சாப்ட்கார்னர் ஐ மீண்டும் புள்ளி வைத்து கோடு வரைய ஆரம்பித்தான்...

“இவள் என் குடும்பத்தை பிரிக்க வந்தவள் இல்லையோ?? “ என்று யோசித்தவனுக்கு திடீரென்று கடைசியாக அவன் சந்தித்த இல்லத்தில் சேர்ந்த அந்த பெண்மணி சொன்ன 5 வருசமா நல்லவளா நடிச்சா என் மருமகள் என்றது நினைவு வர,

“அப்ப இவளும் நல்லவள் போல நடிக்கிறாளோ?? என் மனசை மாற்ற, என்னை இம்ப்ரெஸ் பண்ண கூட இதையெல்லாம் செய்யலாம்...

அப்படி நல்லவளா இருந்தால் எப்படி நொடியில் என் தம்பியை மறந்து என்னை ஏற்றுக் கொண்டாள்?? “ என்று மீண்டும் அதே பல்லவிக்கு வந்து நின்றான்...

கொஞ்சமாக இலக ஆரம்பித்தவன் மீண்டும் இறுக ஆரம்பித்தான்...



அதை கண்ட அந்த சிங்கார வேலன் டென்சனாகி

“அடப்பாவி...இப்படி மீண்டும் பழைய இடத்துக்கே வந்து நின்னுட்டியே விருமாண்டி... இதுக்கா நான் இவ்வளவு தூரம் பாடுபட்டேன்??...

வாயையே திறக்காத அந்த மதுகுட்டியை இவ்வளவு பேச வச்சு, யோசிக்கவே தெரியாத அவளுக்கு சில பல ஐடியாக்களை வாரி வழங்கி உன்னை இம்ப்ரெஸ் பண்ணி என் வழிக்கு கொண்டு வர பார்த்தா நீ மறுபடியும் ஆரம்பிச்ச இடத்துக்கே வந்து நின்னுட்டியே...நீ நல்லா வருவ டா... “ என்று தலையில் அடித்து கொண்டான் ...

“ஹ்ம்ம்ம் இப்ப நான் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணுமா?? சரியான இம்சை டா உன்னோட..

உன்னை பத்தி சரியா விசாரிக்காம இந்த சிவா வேண்டுதலை கேட்டு அவசரபட்டு ஆட்டத்துல இறங்கிட்டனோ?? எப்படி போனாலும் அவன் பிடிச்சதிலயே வந்து நின்னுக்கறானே...

நமக்கெல்லாம் அந்த ஆதி, ஓடிப்போன அந்த மங்கி மகி மாதிரி ஆளுங்கதான் லாயக்கு போல..” என்று சலித்து கொண்டான் ...

“ஆனாலும் முன் வச்ச காலை பின் வைக்க மாட்டான் இந்த வடிவேலன்...

டேய் விருமாண்டி..!!! உன்னை எப்படி என் வழிக்கு கொண்டு வர்ரேன் னு பொறுத்திருந்து பார்...” என்று வில்லங்கமாக சிரித்து கொண்டான் அந்த சிங்கார வேலன்...



Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!