தவமின்றி கிடைத்த வரமே-2



அத்தியாயம்-2

து ஒரு அந்தி சாயும் அழகிய மாலை நேரம்...

தான் வளர வைத்த பசுமை மிக்க மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்தி பல அடுக்கு மாடி கட்டிடங்களாக கட்டிகொண்ட அந்த மனித மூடர்கள் மீதிருந்த கோபத்தால், அனைவரையும் சுட்டெறித்துக் கொண்டிருந்த அந்த சூரிய பகவான் தன் கோபத்தை கை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகி கொண்டிந்தான்...

அதன் விளைவாக, அதுவரை சுட்டெறித்துக் கொண்டிருந்த மக்களை இப்பொழுது கொஞ்சம் மன்னித்து அவர்கள் மனதை தன் இளமஞ்சள் கதிர்கள் வீசி குளிர வைத்துக் கொண்டிருந்தான்...

அந்த மாலை நேரத்து மஞ்சள் வெயிலை ரசித்தவாறு, முகத்தை ஒரு கறுப்பு நிறத் துணியால் மூடி வெறும் கண்கள் மட்டும் வெளியில் தெரிய, கைகளுக்கும் கவசம் அணிந்து இறுகிய முகத்துடன் இருசக்கர வாகனத்தில் பறந்து கொண்டிருந்தனர் அந்த பெண்கள் இருவரும்...

பின்னால் அமர்ந்திருந்தவள் கொஞ்சம் வெளிறிய முகத்துடன் முன்னால் அமர்ந்திருந்தவள் தோளை பிடித்துக் கொள்ள, அவள் கைகளில் தெரிந்தது அவள் உள்ளுக்குள் பயந்து நடுங்குவது..

முன்னால் அமர்ந்து அந்த வாகனத்தை ஓட்டுபவளோ அதை கண்டு கொள்ளாமல் வேகமாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தாள்..

அவர்கள் சென்ற அந்த வாகனம் ஒரு பிரமாண்ட கட்டிடத்திற்குள் நுழைய, அங்கு இருந்த காவலாளியிடம் பார்க்கிங் இடத்தை விசாரித்து அங்கு சென்று வண்டியை இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தினாள்...

பின் சுற்றிலும் பார்த்துக் கொண்டே அவசரமாக தன் முக மூடியை கழற்றியவள் தலை கவசத்தையும் கை உறையையும் கழற்றி டிக்கியில் வைத்து, தன் கேன்ட் பேக்கை எடுத்துக் கொண்டு வண்டி சாவியை எடுத்து ஸ்டைலாக சுழற்றியபடி முன்னால் நடந்தாள்...

பின்னால் அமர்ந்திருந்தவளும் அதே மாதிரி செய்து விட்டு அவளுடைய ஹேன்ட் பேக்கையும் எடுத்துக் கொண்டு திரும்பி பார்க்க, முதலாமவள் பாதி தூரம் சென்றிருந்தாள்...

அவளை பிடிக்க வேக நடை நடந்து அது முடியாமல் போக பின் வேகமாக ஓடி அவளை பிடித்தவள்

“ஏன் டி மலர்.. எதுக்கு இப்படி ஆம்பளை மாதிரி இவ்வளவு வேகமா நடக்கற?? கூட ஒருத்தி வர்ராளே, நின்னு அவளையும் கூட்டிட்டு போவோம்னு மெதுவா நடக்கறியா?? எப்ப பார் ஆம்பளை மதிரி வேகமா நடக்கறது.. உன் கூட வரணும்னா ஓடித்தான் வரணும் போல.. “என்று முறைத்தாள்...

“ஹா ஹா ஹா... ஓடித்தான் வாயேன்.. அப்படியாவது நீ வளர்ரியானு பார்க்கலாம்... “ என்று கண் சிமிட்டி சிரித்தாள் அந்த மலர்....

“நான் இதுவரைக்கும் வளர்ந்ததே போதும் டீ அம்மா... இன்னும் வளர்ந்தா உன்னை மாதிரி கொக்கு மாதிரி... இல்ல.. பன மரத்துல பாதி ஆயிட்டா மாப்பிள்ளை பார்க்கறது கஷ்டமாம்...

உன்னை பார்த்த உடனே எங்க வீட்ல சொல்லிட்டாங்க... அதனால் எனக்கு இந்த உயரமே போதும்.. “ என்று சிரித்தாள் அடுத்தவள்....

முன்னவள் வேகத்தை குறைத்து பின்னவளும் கூட நடந்து வர, இருவரும் பேசி கொண்டே அந்த கட்டிடத்தின் நுழை வாயிலை அடைந்தனர்... பின் இருவரும் அண்ணாந்து அந்த கட்டிடத்தை பார்க்க,

“மித்ரா மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்” என்ற பொன்னிற எழுத்துக்கள் மின்னியது.. அந்த கட்டிடத்தின் உயரமும் அதன் செலுமையும் அது ஒரு புகழ் பெற்ற ,செல்வ வலமிக்க தனியார் மருத்துவமனை என்று பறை சாற்றியது...

அதன் உயரத்தையும் செலுமையும் கண்ட இரண்டாமவளுக்கு உள்ளுக்குள் குளிர் பரவியது... அருகில் இருந்தவளிடம்

“டீ மலர்.. பார்த்தா பெரிய இடம் மாதிரி தெரியுது...ஏதாவது பிரச்சனை ஆயிடப்போகுது.. நாம மாட்டிகிட்டம் னா அவ்வளவு தான் டி...

பேசாம நம்ம திட்டத்தை விட்டுடலாம் டி.. இப்படியே திரும்பி போய்டலாம்.. “என்றாள் கொஞ்சம் பயந்த குரலில்....

“போடி பயந்தாங்கொள்ளி.... இதுக்கெல்லாம் பயந்தா முடியுமா?? ...



பொதுவாக என் மனசு தங்கம்

ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம்

உன்மையே சொல்வேன்... நல்லதே செய்வேன்...

வெற்றி மேல் வெற்றி வரும்



அப்படீனு என் தலைவர் சொல்லியிருக்கார் என்று தன் காலரை தூக்கிவிட்டுக் கொண்டாள் மலர்......

“ஐயோ.. இவ ஒருத்தி.. நேரம் காலம் தெரியாம சினிமா வசூலுக்காக எழுதின பாட்டையெல்லாம் புடிச்சுகிட்டு தொங்கறாளே.. “என்று புலம்பியவள்

“சரி டீ... நான் வேணா இந்த போட்டியிலிருந்து விலகிக்கறேன்.. அப்ப நீ மட்டும் தான.. நீதான் இந்த போட்டியில ஜெயிச்ச மாதிரி... இல்ல.. இல்ல.. நீதான் ஜெயிச்ச.... நான் தோத்துட்டேன்.. விட்டு டீ.. இப்படியே போய்டலாம்... “ என்று அந்த மலரின் கையை பிடித்து நிறுத்தினாள்....

“ஹா ஹா ஹா...எப்படி?? ஆடாம ஜெயிச்சோமடா னு நம்ம தல அஜித் பாடுவாரே அப்படியா??

சே... சே... ஆடாம ஜெயிக்கறதுல ஒரு கிக் ஒரு த்ரில் இருக்காது கயல்... உனக்கு ஒன்னு தெரியுமா ?? ஒத்தைக்கு ஒத்தை நேருக்கு நேர் நின்னு மோதி ஜெயிக்கணும்... அதுல கிடைக்கிற கிக்கே தனிதான்....

சோ...போட்டி வச்சது வச்சதுதான்... நோ சேன்ஜ்.. “ என்று முன்னே நடக்க முயல,

அந்த கயல் அவள் கையை பிடித்து மீண்டும் இழுத்து நிறுத்தினாள்....

“ப்ளீஸ் டீ.. உன் பாலிசி எல்லாம் புரியுது.. அது தெரியாம நான் பாட்டுக்கு வாய் விட்டு இப்ப மாட்டிகிட்டு முழிக்கிறேன்...

அப்புறம் இன்னைக்கு கரி நாளாம்.... இன்னைக்கு வேண்டாம் டீ... வேணும்னா இன்னொரு நாள் வச்சுக்கலாம் நம்ம போட்டியை... “ என்று தடுத்தாள்....

“ஹே... பயந்தாங்கொள்ளி… நாம என்ன இந்த பில்டிங் க்கு பாம் ஆ வைக்க போகிறோம்.. இப்படி பயந்து நடுங்கற?? “ என்று சிரித்தாள் மலர்...

“ஹீ ஹீ ஹீ பாம் வைக்கிறது கூட ஈஷி தான் டி.... யாருக்கும் தெரியாம வச்சுட்டு ஓடி போய்டலாம்.... ஆன இது அப்படியா??.. மாட்டினோம் னா அவ்வளவு தான்... அதனால தான் சொல்றேன்.. இன்னைக்கு வேண்டாம் டி..” என்று மீண்டும் கெஞ்சினாள்...

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது டீ.. இந்த மலர் இருக்க பயமேன்.. தைர்யமா வா... யார் ஜெயிப்போம் னு பார்க்கலாம்... “ என்று அவளை பிடித்து இழுத்து கொண்டு அந்த நுழை வாயில் உள்ளே சென்றாள் அந்த மலர்...

அவர்கள் உள்ளே செல்ல, நாம் இவர்கள் யாரென்று குயிக் ஆ பார்த்துடலாம்....

கிட்டதட்ட இவர்கள் யாரென்று நீங்க ஏற்கனவே கெஸ் பண்ணியிருப்பீங்க...

யெஸ்... ஆடித்தான் ஜெயிப்பேன் என்று அடம்பிடிப்பவள் தான் நம் பயணத்தின் நாயகி.. பாதி பெயர் மலர்.. மீதி பெயர்?? விரைவில் தெரிந்து விடும் ஹீ ஹீ ஹீ...

பெண்களின் சராசரி உயரத்திற்கு அதிகமாக, கிட்ட தட்ட ஆண்களின் சராசரி உயரத்தை விடவும் அதிக உயரம்...

நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் , அந்த கண்ணில் மின்னும் குறும்பும், துடுக்குத்தனமான வாயும், யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் தைர்யமாக தன் மனதில் இருப்பதை பேசுபவள்..

B.E Computer science முடித்துவிட்டு ஒரு புகழ் பெற்ற MNC ல் software engineer ஆக வேலை பார்ப்பவள். கை நிறைய சம்பளம் வருகிறதுதான்....

ஆனால் ஏனோ அவள் மனம் அதில் ஒன்றாமல் அவளுக்கு எப்பொழுதுமே Management ல் விருப்பம் அதிகம்... அதனால் பகுதி நேரமாக MBA படித்து வருகிறாள்...

அடுத்தவள் கயல் என்கிற கயல்விழி...அவளும் BBA முடித்து விட்டு ஒரு வேலையில் சேர்ந்து கொண்டே பகுதி நேரத்தில் MBA படித்து வருகிறாள்...

குணத்தில் எதிரும் புதிருமான இருவரும் MBA முதல் வகுப்பிலயே நண்பிகளாகியது தான் எட்டாவது அதிசயம்...

சரி.. இவர்களுக்குள் என்ன போட்டி?? எதற்காக இங்கு வந்திருக்கிறார்கள்?? யார் ஜெயிக்க போகிறார்கள் ?? என்று தெரிந்து கொள்ள என்னைப் போலவே நீங்களும் ஆர்வமாக இருப்பீங்க... வாங்க அவங்கள பாலோ பண்ணலாம்....

அந்த மருத்துவமனையின் உள்ளே நுழைந்தவர்கள் ரிசப்சன் என்று எழுத்திட்ட பகுதிக்கு சென்று நின்றனர்...

அவர்களை கண்டதும் அங்கு பணியில் இருந்த அந்த பெண் நிமிர்ந்து

“யெஸ் மேம்...How can I help you? “ என்று வெண்பற்கள் பளிச்சிட புன்னகைத்தாள்...

அவளின் அந்த அழகிய தோற்றமும் ஹேர் ஸ்டைலும் அணிந்திருந்த உடை நேர்த்தியும் கண்டு வியந்த மலர்,

“எப்படித்தான் தக்காளி மாதிரி இவ்வளவு அழகா தழ தழ னு இருக்காளோ?? “ என்று பெருமூச்சு விட்டவள் எதுவும் சொல்லாமல் விழித்து கொண்டு நின்றாள் சில விநாடிகள்...

“சொல்லுங்க... OPD ஆ இல்ல Inpatient யாரையாவது பார்க்கணுமா?? “ என்றாள் அந்த பணிப்பெண் மீண்டும்...

கயல் மலரின் கையில் நறுக்கென்று கிள்ள, அதற்குள் தன்னை சுதாரித்து கொண்டவள்

“ஹீ ஹீ ஹீ.. OPD தான்.. “என்று அசட்டு சிரிப்பை சிரித்தாள் மலர்.. அந்த பெண்ணும் சிரித்துக் கொண்டே

“எனி ஸ்பெசலிஷ்ட் டாக்டர் லைக் கைனிக், ஆர்த்தோ, ந்யூரோ இல்ல ஜெனரல் ஆ?? “என்றாள் கேள்வியாக

“ஹ்ம்ம்ம் ஜெனரல் தான்.. “ என்றாள் மலர்..

“ஸ்யூர்.. லேடி டாக்டர் ஆர் ஜென்ட்ஸ் ஓகே?? “ என்றாள் அடுத்து...

அதற்குள் அருகில் நின்ற கயல்

“மலர்.. லேடி டாக்டர் னு சொல்லுடி.. அப்பதான் மாட்ட மாட்டோம்... “என்று அவள் கையை பிடித்து இழுத்து இலேசாக குனிய வைத்து எட்டி அவள் காதில் ரகசியம் சொன்னாள் கயல்...

“போடி.. லேடி டாக்டர் சரிபட்டு வர மாட்டாங்க... ஜென்ட்ஸ் தான் நம்ம வழிக்கு வருவாங்க... அதனால் நம்ம திட்டத்துக்கு ஜென்ட்ஸ் டாக்டர் தான் கரெக்ட்.. “ என்க, கயல் அவளை முறைத்தவாறே

“என்னமோ பண்ணித்தொலை.....எனக்கு இன்னைக்கு ஏழரை தான் “ என்று முறைத்தாள்...

மலரும் சிரித்துக் கொண்டே

“ஜென்ட்ஸ் டாக்டர் இஸ் ஃபைன்.. “ என்று புன்னகைத்தாள்...

ஆனால் அந்த பெண்ணோ இன்னும் விடாமல்

“எனி ஸ்பெசிபிக் டாக்டர் இன் ஜென்ட்ஸ்?? “ என்று அடுத்த கேள்வியை கேட்க, அதில் கொஞ்சம் கடுப்பானாள் மலர்...

“என்ன இது?? நம்ம கஸ்டமர் கேர் IVR system மாதிரி இத்தனை கேள்வி கேட்கறாளே இந்த தக்காளி... “ என்று முனுமுனுத்தவள்

“Nothing specific. Anyone is fine..குறிப்பா பேசன்ட்ஸ் கம்மியா இருக்கிறவரா இருந்தா பெட்டர்...... நாங்க கொஞ்சம் அவசரமா பார்க்கணும்... ” என்றாள் இலேசான சிடுசிடுப்புடன்...

அந்த பெண்ணும் அதே சிரித்த முகத்துடன் கம்யூட்டரில் ஏதொ பட்டனை தட்ட அந்த திரையில் வந்த டாக்டர்களின் பெயர்களையும் அவர்களுக்காக காத்திருக்கும் பேசன்ட்ஸ்களின் எண்ணிக்கையையும் பார்த்து

“டாக்டர் ஷ்யாம் இப்ப பிரியா இருக்கார் மேம்.. நீங்க அறை எண் 8 க்கு போய் அவரை பாருங்க.. “ என்று சிரித்தாள் அதே பளிச்சிடும் புன்னகையுடன்...

அவளின் புன்னகையை ரசித்த மலர்

“தேங்க்யூ சிஸ்டர்.. அப்புறம் ஃபீஸ் எவ்வளவு பே பண்ணனும்.. “என்றாள் தன் தோழியை ஓரக் கண்ணால் பார்த்து கொண்டே...

“நீங்க இப்ப எதுவும் பே பண்ண வேண்டாம்.. டாக்டரை பார்த்த பிறகு பே பண்ணுங்க.. “ என்றாள் சிரித்தவாறு...

அதை கண்டு கயல் தன் புருவங்களை உயர்த்தி “எப்பூடி?? “ என்று ஜடை காட்ட, மலரோ தன் நாக்கை துருத்தி அவளுக்கு அழகு காண்பித்தாள்...

பின் அந்த ரிசப்னிஷ்ட் ஐ பார்த்து

“தேங்க்யூ சிஸ்டர்.. அப்புறம் ஒரு சின்ன ரிக்வஸ்ட்... யாராவது வந்தா இந்த IVR சிஸ்டம் மாதிரி இத்தனை கேள்வி கேட்காமல் முதல்ல அவங்களை பேச விட்டு அதில் எத்தனை கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொன்னார்களோ அதை டிக் பண்ணிட்டு மீதி இருக்கிற கேள்விகளை மட்டும் கேளுங்க...

உங்களுக்கும் நேரம் மிச்சம்.. வர்றவங்களுக்கும் நேரம் மிச்சம்.. எப்புடி?? “ என்று சிரித்தாள் மலர்......

அதை கேட்டதும் அந்த ரிசப்சனிஷ்ட் தன் கண்களை அகல விரித்தாள்.. அவள் கிட்டதட்ட ஒரு 5 வருடமாக இந்த பணியில் இருக்கிறாள்... யாரும் நேரடியாக வந்து இந்த மாதிரி தன்னிடம் சொன்னதில்லை..

இந்த பொண்ணு இப்படி தடாலடியா சொல்றாளே.. சரியான வாயாடி போல.. “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டவள்

“Thanks for your suggestion… Will try to follow மேம்… “ என்று அதே பளிச்சிடும் புன்னகையுடன் பதில் அழிக்க, மலரும் தன் கட்டை விரலை உயர்த்தி காட்டி(thumbs up )

“Sure சிஸ்டர்... Have a wonderful evening!! “ என்று கன்னம் குழிய சிரித்தவாறு அங்கிருந்து அறை எண் 8 ஐ நோக்கி நடந்தாள்....

அவள் பின்னே ஓடி வந்த கயல்விழி அவளை எட்டி பிடித்து

“ஏன்டி மலர்... உனக்கு எதுக்கு தேவை இல்லாத வேலை.. அந்த பொண்ணு அதுக்கு கொடுத்திருக்கிற வேலையை செய்யறா.. நீ போய் ஏன் டி அவளை குழப்பற?? “ என்றாள் இலேசாக சிரித்தவாறு...

“ஹீ ஹீ ஹீ அதுல ஒரு மேஜிக் இருக்குடி கயல்.. அந்த தக்காளி இருக்காளே?? “ என்க

“என்னது தக்காளியா??? “ என்றாள் கயல் புரியாமல்

“ஆமாம் டீ.. எவ்வளவு சிவப்பா தழதழ னு இருக்கா,, அதான் தக்காளினு பேர் வச்சேன்... குறுக்க குறுக்க பேசாத டி.. நான் சொல்ல வந்தது மறந்து போச்சு... எங்க விட்டேன்?? “என்று தன் கன்னத்தில் கை வைத்து யோசித்தவள்

“ஆங்க் ஞாபகம் வந்திடுச்சி.. அந்த தக்காளி கண்ணு சூப்பரா இருந்தது டீ.. அதான் அந்த கண்ண அகல திறந்து முழிச்சா எப்படி இருக்கும் னு யோசிச்சேன்.. அதான் சும்மா வாய்க்கு வந்ததை சொன்னேனா..

அந்த தக்காளியும் அதே மாதிரி விழி விரிச்சு பார்த்தா பார்... சான்சே இல்ல டி.. செமயா இருக்கா.... “ என்றாள் தன் கண்களை மூடி அந்த ரிசப்னிஷ்ட் ஐ ரசித்தவாறு...

அதை கேட்ட கயல் அவசரமாக சுற்றிலும் பார்த்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு

“நல்ல வேளை.. யாரும் பக்கதுல இல்லை நீ உளறினதை கேட்க...

நீயெல்லாம் ஒரு பொண்ணா டி... இப்படி அடுத்த பொண்ணை பார்த்து சைட் அடிக்கறீயே... கருமம் கருமம்... “ என்று தலையில் அடித்துக் கொண்டாள் கயல்....

“ஹீ ஹீ ஹீ.. அழகு எங்க இருந்தாலும் அதை ரசிக்கணும் கயல் டியர்... அது பூவா இருந்தா என்ன?? பொண்ணா இருந்தா என்ன?? அந்த தக்காளி அழகா க்யூட் ஆ இருந்தா அதான் சைட் அடிச்சேன்.. இதுல என்ன தப்புனு இப்படி தலையில அடிச்சுக்கற?? “ என்றாள் மலர் சிரித்தவாறு...

“ஹ்ம்ம்ம் நீயெல்லாம் ஆம்பளையா பொறந்திருக்க வேண்டியது.. ஏதோ X, Y குரோமோசோம்னு எண்ணிக்கை சொல்லுவாங்களே.. அதுல ஏதோ கொஞ்சம் உனக்கு தப்பாயிடுச்சு போல ..

ஆணா பிறக்காம கொஞ்சம் மாறிப்போய் பொண்ணா பொறந்து தொலச்சு அதுவும் எனக்கு பிரண்ட் ஆ வந்து வாய்ச்சு என் மானத்தை வாங்கற டீ ... “ என்று முறைத்தாள் கயல் சிரித்துக் கொண்டே....

“ஹா ஹா ஹா மனசுல படறத அப்படியே வெளிப்படையா பேசுனா அது என்ன ஆம்பளை மாறினு சொல்ற??

வேகமா நடந்தா, சத்தமா சிரிச்சு பேசினா எல்லாத்துக்கும் ஆம்பளை மாதிரி னு சொல்றியேடி... ஏன் ஆம்பளைங்க மட்டும் தான் அப்படி இருக்கணுமா??

பொண்ணுங்க அந்த மாதிரி தைர்யமா இருக்க கூடாதா?? அப்படீனா இது ஒரு ஆணாதிக்க சமுதாயம்.....பெண்களுக்கு உரிமை இல்லையா?? “ என்று மலர் பெண்ணுரிமையை பற்றி லெக்சர் அடிக்க ஆரம்பிக்க, அதில் அரண்டு போன கயல்

“அம்மா.. தாயே.. தெரியாம சொல்லிட்டேன் டி ...என்னை விட்டு டு.. உன் லெக்சரை கேட்டு கேட்டு எனக்கு மனப்பாடமே ஆயிடுச்சு...

நீ எப்படி வேணா இருந்துக்க... உங்க வீட்லயே உன்னை அடக்க முடியாம தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க.. நான் சொன்னா நீ மாறவா போற?? “ என்று முறைத்தாள்...

“ஹ்ம்ம்ம் அது... இனிமேல் ஏதாவது ஆம்பளை மாதிரினு சொன்ன அவ்வளவு தான்... “ என்று தன் விரல் நீட்டி தன் தோழியிடம் பத்திரம் காட்டி எச்சரித்து சிரித்தவாறு அறை எண் 8 ஐ அடைந்தனர்..


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!