என் மடியில் பூத்த மலரே-3






அத்தியாயம்-3

ல்யாணம் ஆகியா போறா” என்றதும் பாரதிக்கு சுருக் கென்றது. ஒரு வேளை நான் செய்ய போகும் செயலும் கல்யாணம் ஆகிறதை போலதானோ? என்று அவளின் மனம் கேள்வி கேட்டது...

அதற்குள் காமாட்சி பாட்டி,

“டேய், மஹா இங்க பக்கத்தில் இருக்கிற ஊருக்கு தான் போயிருக்கா. நினைச்சா ஒடியாந்திரலாம். ஆனால் பாரதி கண்ணு அப்படியா. ரொம்ப தூரம் இல்ல போறா “

“ஐயோ ஆயா, உனக்கு உலகமே இன்னும் புரியல.”

“மஹா இங்க பக்கத்தில இருந்தாலும், அவளால நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வர முடியாது. அவ ஊருக்கு பஸ் ஷே கிடையாது. இப்பதான் போனா பொகுதுனு ஒரு மினி பஸ் விட்டிருக்காங்க. அதுவும் தினமும் ஒரு முறைதான் வரும். பாதி நாள் வர்ரதே இல்லை.”

மஹா கிளம்பி வரதுன்னா , தோட்டத்துல ஏதாவது ஒரு செடியை ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கிற நம்ம மாமாவுக்கு தகவல் சொல்லி, அவர் வந்து, அவரோட புல்லட் ஐ ஷ்டார்ட் பண்ணி , அது ஷ்டார்ட் ஆகி, அவங்க ஊர் ரோட்ல பஞ்சர் ஆகாம வர்ரதுக்குள்ள ஒரு நாள் ஆகிடும்.”

“பாரதி ஒன்னும் தூரமா போகலை. இங்க இருக்கிற சிங்கப்பூர்க்குதான் போறா.. உடனே ப்லைட் ஏறினா, நான்கு மணி நேரத்தில இங்க வந்திடுவா... இப்ப சொல்லு, யாரு தூரமா இருக்கானு “ என்று பாட்டியை சமாதானப்படுத்தினான் பேரன்.

“டேய் மச்சான். ஷான்ஸ் கிடைச்சுதுனு எங்க ஊரை இப்படியா கேவலமா பேசுவ.“ என்று முறைத்தான் அந்த விட்டு மாப்பிள்ளை.

“ஐயயோ! மாம்ஸ், ஆயாவை சமாதான படுத்தறதுக்காக நீங்க இருக்கிறதை மறந்துட்டு உங்க ஊரை பத்தி பெருமையா சொல்லிட்டேன். நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க”

“ஆனாலும் உண்மையை சொல்லுங்க. உங்க ஊருக்கு பஸ் வசதி உண்டா. ஒரு நல்ல ரோடு தான் உண்டா.”

“மஹா கல்யாண வேலையா மூனு தரம் உங்க ஊருக்கு வந்தேன். மூனு தரமும் என் பைக் பஞ்சர். தள்ளிகிட்டேதான் வந்தேன். இனிமேல் உங்க ஊருக்கு வர்ரதா இருந்தா ஷ்டெப்னி யோடதான் வரணும். இல்லைனா வண்டி எப்ப, எங்க பஞ்சர் ஆகும்னே சொல்ல முடியாது”

“எங்க அக்கா நிச்சயத்துக்கு முன்னாடியே உங்க ஊரை வந்து பார்த்திருந்தேனா, எங்க அக்கா வ அங்கு குடுத்து இருக்கவே மாட்டோம். என்ன செய்ய. நிச்சயம் முடிஞ்சதுக்கப்புறம் இல்ல உங்க ஊரை கூட்டி போய் காமிச்சீங்க...

அதுக்கப்புறம் மாற்றவா முடியும். வேற வழி இல்லாமதான் எங்கக்காவை உங்க ஊருக்கு அனுப்பி வச்சோம்.” என்று சிரித்தான்.

“எல்லாம் என் நேரம் டா. நீயெல்லாம் எங்க ஊரை ஓட்டற அளவுக்கு ஆயிருச்சு. இதுக்காகவே கலெக்டரை பார்த்து எங்க ஊர் ரோடை சரி செய்யனும்.”

“அதை செய்யுங்க மாம்ஸ் முதல்ல. இல்லைனா ஒவ்வொரு தரமும் பஞ்சர் ஒட்ட நீங்க தான் காசு தரனும். அதுவும் இல்லாம உங்க ஊருக்கு யாரும் பொண்ணு தர மாட்டாங்க.. நீங்க எப்படியோ தப்பிச்சிட்டீங்க.

உங்க ஊருல இருக்கிற மற்ற பசங்களுக்காகவாது சீக்கிரம் ரோடை சரி பண்ணுங்க “ என்று வாரினான்.

மாப்பிளளை, மச்சான் பேச்சை கேட்டு எல்லாரும் சிரித்தனர்.

ஆனால் பாரதிக்கோ, தன் தம்பி சொன்ன சிங்கப்பூர் என்றதிலேயே மனம் உழன்றது.

“ஐயோ, சிங்கப்பூர் போறேனு பொய் சொல்லி இல்ல நான் கிளம்பறேன்... நாளை, நான் சிங்கப்பூர் போகலைனு தெரிஞ்சா எப்படி இருக்கும் இவர்களுக்கு “ என்று கலங்கியது

அனைவர் முகத்திலும் சிரித்திருக்க, பாரதியின் முகம் மட்டும் வாடி இருப்பதை கண்ட தர்மலிங்கம்

“என்ன சின்ன பாப்பா. உனக்கு எங்களை விட்டு அவ்வளவு தூரம் போக பிடிக்கலையா. நீ கஷ்டபட்டு அங்க போக வேண்டாம். கூலோ, கஞ்சியோ இங்க இருந்தே எல்லாரும் ஒன்னா குடிக்கலாம். “

பாரதிக்கு ஒரு கனம் இது தான் சரியோ. பேசாம உண்மையை சொல்லி இங்கயே இருந்திடலாம். இவ்வளவு கஷ்டம் தனக்கு தேவையில்லை என்று தோன்றியது.

ஆனால் அடுத்த நிமிடம், கழுத்தில் மின்னும் தாலியும், கண்களில் மின்னும் புது பெண்ணிற்கான கலையுமாக அக்கா மஹா பட்டாள்.

மஹாவை ஒரு திருமணத்தில் கண்டு, பிடித்துபோய், வரதட்சிணை எதுவும் வேண்டாம் என்று மணந்தவன் ஈஸ்வர். B.Sc விவசாயம் முடித்ததும், விவசாயத்தின் மேல் உள்ள ஆர்வத்தால், தன் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறான்.

அதோடு குறுகிய காலத்தில், சொட்டுநீரை பயன்படுத்தி எப்படி விவசாயம் செய்வது என்று ஆராய்ச்சி செய்து வருகிறான். நீர் இல்லாததால் விட்டு போன விவசாயத்தை மீட்டு எடுத்து அங்கு உள்ள கிராமங்களில் மீண்டும் விவசாயத்தை தழைக்க செய்வது அவன் கனவு....

என்னதான் வரதட்சிணை வேண்டாம் என்று சொன்னாலும் மஹாவை வெறும் கையோடு அனுப்ப மனம் இல்லாமல் கழுத்துக்கும் கைகளுக்கும் கொஞ்சம் நகை போட்டே அனுப்பினர் பிறந்த வீட்டில். அதற்கான கடன் பாக்கி இருக்குதே.

இன்னும் அடுத்த மாதத்தில் பொங்கல் வருகிறது. அதுவும் தலை பொங்கல். பொங்கல் சீர் செய்யனும். அடுத்து தலை ஆடி , தலை தீபாவளி, அப்புறம் பிள்ளை பேறு என்று அடுத்தடுத்து அக்கா க்கு செய்ய வேண்டிய கடமைகள் இருக்கே.

மாமா வேண்டாமென்று பெருந்தன்மையா சொன்னாலும் புகுந்த வீட்டில் அக்கா தலை நிமிர்ந்து இருக்கனும்னா இந்த முறை எல்லாம் செய்தாகனும்.

அடுத்து எல்லாரையும் வம்பிழுத்து கொண்டிருக்கும் அருமை தம்பி பாரத். இந்த வருடம் +2 எழுத போறான். அதற்கப்புறம் நல்ல கல்லூரியில் சேர்க்கனும். அதற்கு பணம் வேண்டுமெ

அவளின் செல்ல தங்கை இந்திராவும் 10 ஆம் வகுப்பு படிக்கிறாள். அவளது மேற்படிப்பு மற்றும் ஆளானால் சடங்கு செய்யனும்.

அதைவிட அப்பாவின் மருந்து செலவு என்று அத்தனை தேவைகளும் கண் முன்னே வந்தது.

வெரும் வயிறு மட்டும் என்றால், கூலோ, கஞ்சியோ குடிச்சிட்டு இருந்திடலாம். ஆனால் அதையும் தாண்டி இந்த மாதிரி செலவுகள் இருக்கே. இதை எல்லாம் எப்படி சமாளிப்பது???

அப்பாவினாலும் இனிமேல் முடியாது. இவர்கள் அனைவரின் சந்தோஷத்துக்காக நான் ஒருத்தி கஷ்டபட்டால் பரவாயில்லை என்று முடிவு செய்தாள்.

தன் அக்கா இன்னும் அமைதியாக நிற்பதை கண்டு,

“ஐயோ!! , அக்கா, அப்பா சொல்லிட்டார்னு அப்படி எல்லாம் டக்குனு உன் முடிவை மாத்திடாத. அப்புறம் சிங்கப்பூர்ல இருந்து நான் வாங்கி வர சொன்ன அந்த பெரிய லிஷ்ட் எல்லாம் வீணா போய்டும்” என்றான் பாரத்.

“பாரதி அக்கா பாவம்டா பாரத். பார் அக்கா முகமே சரியில்லை.

அக்கா உனக்கு பிடிக்கலைனா நீ போகாத அக்கா. எங்க கூடவே இருந்திடு“ என்று அக்கறை காட்டினாள் தங்கை இந்திரா

“வாடி. எங்க இவ்ளோ நேரம் இன்னும் வாயை திறக்க காணோம் னு பார்த்தேன். அவ்ளோ பாசம் இருக்கிறவ நேத்து நைட் புல்லா உட்கார்ந்து எதுக்கு என்ன விட பெரிய லிஷ்ட் உனக்கு ரெடி பண்ணின?”

“அது வந்து வந்து.... “

“ஹ்ம்ம் அப்பல்லாம் தெரியலை இந்த அக்கா பாசம். இப்ப வந்து எல்லார் முன்னாடியும் சீன் போடற” .

அதற்குள் பாரதி தன்னை சமாளித்து கொண்டாள்.

“அப்பா, எனக்கு கஷ்டம் எதுவும் இல்லைப்பா. என் கவலை எல்லாம் இவ்ளோ வாயடிக்கிறானே, இந்த பாரத் இன்னும் விரல் சூப்பிகிட்டு இருக்கிறானே, இவனை எப்படி மாத்தறது. நான் இல்லைனா இவனை யாரும் கன்ட்ரோல் பண்ண முடியாதே. அதான் கவலையா இருக்கு “ என்று பாரத்தை வாரினாள் பாரதி.

“நான் விரலெல்லாம் சூப்பிறது இல்லை. நீ பொய் சொல்ற பாரதி “

“எல்லா விரலும் சூப்பிறது இல்லைடா, ஒரே ஒரு விரல் தான் “ என்று மீண்டும் சிரித்தாள் பாரதி

“ஆமாம். நான்கூட பார்த்தேன் இவன் தினமும் இரவு விரல் சூப்புவான்“ என்று குதித்தாள் தங்கை

“போடி , எட்டப்பி. எங்கிட்ட தனியா மாட்டுவ இல்ல. அப்ப இருக்கு உனக்கு “

”வவ்வே” என்று பலிப்பு காட்டி ஓடினாள் இந்திரா.

எல்லாரும் மனம் இலகுவாகி பழய நிலைக்கு வரவும்

பாரதி அழகான அந்த அன்பு குடும்பத்தை தன் மொபைலில் பதிந்து கொண்டாள்.

“இனிமேல் எப்ப மீண்டும் அனைவரையும் பார்க்க போகிறேனோ?. அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் கூட போகலாம்” என்று பெருமூச்சு விட்டாள்.

பாரதி வாசலை நோக்கி அடி எடுத்து வைக்கவும் ,எங்கேயோ இருந்து மணி வேகமாக ஓடி வந்து அவள் காலை சுற்றிகொண்டான்..

“டேய் மணி.. , எங்கடா போயிருந்த இவ்வளவு நேரம். உன்னை பார்க்காமல் போகிறேனே என்று இருந்தது.. அதற்குள் நீயே வந்துட்ட .. “ என்று குனிந்து அருகில் அமர்ந்து வாஞ்சையாக தடவினாள் தன் செல்ல நாயை..

ஒருநாள் பாரதி வேலை முடிந்து வரும் வழியில், காலில் அடிபட்டு கத்தி கொண்டிருந்தது ஒரு சின்ன நாய் குட்டி.. அதை கண்டதும், பாரதி நின்று சுற்றிலும் பார்த்தாள்.. அதன் தாயை எங்கும் காணவில்லை.. அப்படியே விட மனமில்லாமல், அதை தூக்கி வந்து அதற்கு மருந்து இட்டு வளர்த்தாள்.. அதுவும் அவளிடம் மிகவும் ஒட்டிகொண்டது..

தினமும் அவள் வேளை முடித்து வரும் நேரம் பேருந்து நிறுத்தத்தில் வந்து காத்திருந்து அவள் வந்ததும் ஒரு முறை அவளை கொஞ்சி விட்டு அவளுடன் வீட்டிற்கு வருவான்..

இன்று தன் எஜமானி தன்னை விட்டு பிரிகிறாள் என்று தெரிந்து கொண்டு காலையில் இருந்தே இங்கும் அங்கும் ஓடி கொண்டு இருந்தது..

பாரதியின் கை பட்டதும் அதற்கு இன்னும் சந்தோஷமாக இருந்தது.. அவள் கால், கை என்று நாக்கால் நக்கியது.. அதோடு விடாமல் எட்டி அவள் முகத்தையும் தடவியது ..

பாரதி அதை ரசித்துக் கொண்டே,

“மணி... , இந்திராவும் பாரத்தும் உன்னை நல்லா பார்த்துப்பாங்க.. நீ அவங்க கூட சமத்தா இருக்கனும்.. நான் போய்ட்டு ஒரே வருஷத்தில வந்திருவேன் . நீதான் எல்லாரையும் பார்த்துக்கனும்” என்று மீண்டும் ஒரு தடவை அதை தடவி எழுந்து ஒரு எட்டு வைத்தாள்..

ஆனால் மீண்டும் ஓடி வந்து அவள் காலை கட்டி கொண்டு அவளை நகர விடாமல் தடுத்தான்..

“டேய் மணி.. ஏன்டா இப்படி பண்ற... என்னை போக விடு .டைம் ஆகுது பாரு “

“அக்கா.. அவன் அடங்க மாட்டான். இரு நான் சங்கிலி எடுத்து வர்ரேன். இல்லைனா மஹா கல்யாணத்தப்போ நம்ம கார் பின்னாடியே மஹா வீடு வரைக்கும் ஓடி வந்த மாதிரி, சிங்கப்பூர் வரைக்கும் உன் பின்னாடியே வந்தாலும் வருவான்.. இரு கட்டி வைக்கிறேன் “ என்று உள்ளே செல்ல முயன்றான் பாரத்.

அதற்குள் எங்கே தன்னை கட்டி வைத்து விடுவார்களோ என்று வேகமாக வெளியே ஓடி பேருந்து நிறுத்தத்திற்கு செல்லும் வழியில் நின்று கொண்டான்..

அதை பார்த்து சிரித்து கொண்டே,

“பாரத் அவனை எதுவும் அடிச்சிடாத.. பொறுமையா ஹேன்டில் பண்ணு” என்றாள் பாரதி கவலையாக..

“நீ ஒன்னும் கவலை படாத பாரதி.. நான் பாத்துக்கறேன். “ என்று அவளை சமாதானப் படுத்தினான் பாரத்.

பிறகு அனைவரும் கிளம்பி அந்த கிராமத்தின் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தனர். பாரதி எவ்வளவோ சொல்லியும் அவளை வழி அனுப்ப என்று அவள் குடும்பமே பேருந்து நிறுத்தத்திற்கு வந்தது காமாட்சி பாட்டியும் கூட.

மணியும் அவர்களுக்கு முன்னரே அங்கு வந்து காத்திருந்தான்...

“நான் திரும்பி வரும் பொழுது இதே மாதிரி என்னை வரவேற்பார்களா?

ம்ஹும்ம்... நான் செய்ய போகும் வேலைக்கு என்னை வீட்டுக்குள்ளயே சேர்க்க மாட்டங்க..என் மூஞ்சியிலயே முழிக்க மாட்டாங்க.. “

“இருக்கட்டும்.. இவங்களாவது நல்லா இருக்கட்டும் .. இவர்களின் இந்த சந்தோஷத்திற்காக எது வேணாலும் செய்யலாம்” என்று தனக்குள்ளே சொல்லி கொண்டாள்.

வரும் வழியில் பாரதி தன் வீட்டை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே வந்தாள். போவோர் வருவோர்க்கெல்லாம் கை அசைத்து விடைபெற்றாள் புன்னகையுடன்..

பேருந்து நிறுத்தத்தை அடைந்து பேருந்துக்காக காத்திருந்தனர்.. அங்கு இருந்து அருகில் உள்ள திருச்சிக்கு செல்ல வேண்டும்.

பேருந்து நிறுத்தத்தில் அனைவரும் காத்திருக்கும் பொழுது, அதுவரை அமைதியாக இருந்த ஈஸ்வர் பாரதிக்கு திடீரென்று ஒரு பெரிய அதிர்ச்சியை தந்தான்...

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!