காதோடுதான் நான் பாடுவேன்-38
அத்தியாயம்-38
ஏழாவது மாதம்:
கால சக்கரம் வேகமாக சுற்ற, மதுவந்தினிக்கு ஏழாவது மாதம் ஆரம்பித்து இருந்தது...
தன் மருமகளின் கற்பம் உறுதியான அடுத்த நாள் தன் மகன் நடத்திய கூத்தை கண்டு பயந்தவர் அவன் என்னதான் சத்தியம் செய்திருந்தாலும் அந்த கிறுக்கன் எப்ப மனசு மாறி ஏதாவது செய்து விட்டால் என்று அஞ்சி தன் மருமகளை அவன் அறைக்கு அனுப்பாமல் தன்னுடனே வைத்து கொண்டார் சிவகாமி....
அவன் வீட்டில் இருக்கும் நேரங்களில் அவளை தனியாக விடாமல் தன்னுடனே இருக்க வைத்து கொண்டார்...
அவனுமே தன் அன்னையின் வேதனையை புரிந்து கொண்டு அதன் பிறகு மதுவை எதுவும் வருத்தாமல் விலகி இருந்தான்... ஆனால் தன் எண்ணத்தில் இருந்து மட்டும் மாறவேயில்லை...
மது அடுத்த இரண்டு மாதத்திற்கு ட்ராவல் பண்ண வேண்டாம் என டாக்டர் சொல்லி இருக்க, IAS பயிற்சி வகுப்பிற்கு போக வேண்டாம் என்று சொல்லிவிட்டார் சிவகாமி...
மதுவும் ஜெயந்த் ஐ அழைத்து விவரம் சொல்லி அவள் வகுப்பிற்கு வரமுடியாது என சொல்ல, அவனும் மது உண்டாகியிருக்கும் செய்தி கேட்டு அவளை வாழ்த்தி வீட்டில் இருந்தே படிக்க சொன்னான்...
இந்த வருடம் பரிட்சை எழுத முடியாவிட்டாலும் வீட்டில் இருந்தே தயார் பண்ணு.. அடுத்த வருடம் எழுதி கொள்ளலாம்... என்ன சந்தேகம்னாலும் அவனை அழைக்க சொல்லி கேட்டு கொண்டு உடம்பை பார்த்துக்க சொல்லி வைத்தான்..
அதே மாதிரி வசந்த் இடமும் பேட்மின்டன் பயிற்சிக்கு வர முடியாது என சொல்ல, முதலில் வசந்த் க்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது...
“கண்டிப்பா மது விளையாண்டு இருந்தால் நேசனல் சேம்பியன் ஆகியிருக்க்லாம்.
அதை தொடர்ந்து ஆசியன் போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கும்... ஆனால் எல்லாம் மிஸ் ஆச்சு.. “என்று சொல்லி வருத்தபட்டாலும்
“குழந்தை என்பது கடவுள் கொடுத்த வரம் மது... நீ அடுத்த வருடம் கூட நேசனல் விளையாடலாம்.... மீண்டும் இந்த விளையாட்டிற்கு வந்து விடலாம்... அதனால் வருத்தபடாதே.. டேக் கேர்... “ என்றான்....
தனக்கு கிடைக்காத பாக்கியம் தன் நண்பனுக்காவது கிடைத்திருக்கிறதே என்று மகிழ்ந்து நிகிலனையும் அழைத்து வாழ்த்தி தன் மகிழ்ச்சியை தெரிவித்தான் வசந்த்....
மதுவுக்கும் வருத்தம் தான்.. தன்னுடைய பேட்மின்டன் ராக்கெட் ஐ பார்க்கும் பொழுதெல்லாம் ஏக்கமாக இருக்கும்... ஆனால் அடுத்த நொடி தன் வயிற்றில் இருக்கும் அந்த குட்டியை நினைத்து கொள்வாள்.. உடனே அவள் முகத்தில் புன்னகை வந்துவிடும்....
ரமணியும் மது உண்டாகியிருக்கும் செய்தி கேட்டு அடுத்த நாளே கிளம்பி வந்துவிட்டார் மதுவை பார்க்க... அவருடன் இன்னும் இரண்டு அம்மாக்களும் அந்த இல்லத்தில் இருந்து வந்திருந்தனர்....
தங்களுக்கு அடைக்கலம் கொடுத்து காத்து வரும் நிகிலன் வாரிசை சுமக்கும் மதுவை பார்க்கவும் அவளை சீராட்டி பார்க்கவும் ஆசை பட்டு ரமணியுடன் வந்திருந்தனர் அவர்கள்...
தங்கள் மருமகள் உண்டாகியிருக்கும் பொழுது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஆசை பட்டார்களோ அந்த ஏக்கத்தை எல்லாம் மதுவுக்கு செய்து தங்கள் ஆசையை , ஏக்கத்தை தீர்த்து கொண்டனர் அந்த பெரியவர்கள்...
நிகிலனும் அந்த இல்லத்தில் இருந்து யாரெல்லாம் மதுவை பார்க்க வேண்டும் என்று ஆசை படுகிறார்களோ அவர்களை வாரம் இருவராக அழைத்து கொண்டு வந்திருந்தான்... மதுவை கண்டதும் அந்த பெரியவர்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி...அவளை தங்கள் மகள், மருமகளாக பாவித்து மதுவுக்கு பிடித்ததெல்லாம் செய்து கொடுத்து மகிழ்ந்தனர்....
ஒவ்வொருவரும் தன்னை அன்பாக கவனித்து கொள்வதை கண்டு நெகிழ்ந்து போனாள் மதுவந்தினி....
மூன்றாவது மாதத்தில் இருந்து மதுவிற்கு மசக்கையின் தொல்லை ஆரம்பிக்க, சாப்பிடுவது எதுவும் தங்காமல் வாமிட் பண்ணினாள்...
சுசிலா மற்றும் மைதிலி அவளுக்கு சில அறிவுரைகளை வழங்கி அதன் படி பார்த்து கொள்ள சொல்லினர்....
ஒரு முறை அனைவரும் உணவு மேஜையில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க, அப்பொழுது மதுவுக்கு வயிற்றை புரட்ட, வேகமாக எழுந்து வாஷ்பேசினுக்கு ஓடினாள்...
அவள் கஷ்டபடுவதை கண்டு நிகிலனுக்குமே கஷ்டமாக இருந்தது... அவளை தன்னோடு அணைத்து கொண்டு அவள் தலையை பிடித்து கொள்ள துடித்தன அவன் கரங்கள்..
ஆனாலும் தன்னை கட்டு படுத்தி கொண்டு, அவளை கண்டு கொள்ளாமல் அமர்ந்து இருந்தான்.... தன் மகனை ஓரக் கண்ணால் பார்த்த சிவகாமி அவன் அசையாமல் அமர்ந்து இருக்கவும்
“சரியான அழுத்தக்காரன்.... பொண்டாட்டி இப்படி கஷ்டபடற நிலையில் கூட தன் ஈகோ ல இருந்து இறங்கி வர்ரானா பார்... “ என்று திட்டி கொண்டே வேகமாக எழுந்து சென்று தன் மருமகளின் தலையை பிடித்து கொண்டார்....
இதே மாதிரி ஒருமுறை மதுவின் பெற்றோர்கள் வந்திருக்கும் பொழுது மது வாமிட் பண்ண, அதை கண்ட சாரதா அவளை தன்னுடன் அழைத்து சென்று வைத்து கொள்வதாக கூற, சிவகாமி மறுத்து விட்டார்...
“என் மருமகள்... எங்க வீட்டு வாரிசு நாங்கதான் பார்த்துக்கணும்... நீங்க வந்து உங்க பொண்ணை பார்த்துட்டு மட்டும் போகலாம்... “ என்று சிரித்து கொண்டே மறுத்து விட்டார்....
“அவர்களும் இப்படி ஒரு மாமியார் கிடைக்க நம்ம பொண்ணு கொடுத்து வச்சிருக்கணும். “என்று சிரித்து கொண்டே சென்றனர்.... ஆனாலும் வாரம் ஒரு முறை வந்துவிடுவர் மகளை பார்க்க என்று...
இப்படி எல்லோரும் அவளை கொண்டாட, கொண்டாட வேண்டியவன் மட்டும் இன்னுமே அவளிடம் பாராமுகமாகத்தான் இருந்தான்...
ஓரளவுக்கு அவளுக்கு மசக்கை நின்றிருக்க, அதன் பிறகே தன் மருமகளை தன் மகன் அறைக்கு அனுப்பி வைத்தார்.. அவன் புள்ளை வளர்வதை பார்த்தாலாவது மனசு மாறுவான் என்று...
ஆனால் அவனோ எப்பொழுதும் வீட்டிற்கு தாமதமாகவே வருவான்... அப்படியே சீக்கிரம் வரும் நாட்களிலும் அவளை கண்டு கொள்வதில்லை...
மதுவுக்கும் முதலில் வேதனையாக இருந்தது... பின் அதுவே பழகி விட,
“அவர் என்னை புரிந்து கொள்ளும் பொழுது புரிந்து கொள்ளட்டும்..” என்று மனதை கல்லாக்கி கொண்டு இருக்க பழகி கொண்டாள்....
ஆறாவது மாதம் ஆரம்பித்து இருக்க, ஒரு நாள் இரவு வரவேற்பறையில் அமர்ந்து தன் மாமியாரின் தோளில் சாய்ந்து கொண்டு அவருடன் சீரியல் பார்த்து கொண்டிருக்க, திடீரென்று வயிற்றில் ஏதோ வித்தியாசமான உணர்வு தோன்ற ஆ வென்று அலறினாள் மது....
சிவகாமியும் பயந்து போய் விசாரிக்க, அவள் சொன்னதை கேட்டு சிரிக்க ஆரம்பித்தார்....
“என் பேத்தி உன் வயித்துல விளையாட ஆரம்பிச்சிட்டாளாக்கும்.. இனிமேல் உனக்கு தினமும் உதைதான்... “ என்று சிரித்தார்.. அப்பொழுது அங்க வந்த அகிலா சிவகாமி சொன்னது காதில் விழ, அவளும் வேகமாக ஓடி வந்து
“அண்ணி.. நான் தொட்டு பார்க்கவா...?? “ என்றாள் ஆர்வமாக....
மதுவும் அவள் கையை எடுத்து அவள் வயிற்றில் வைத்து காட்ட, அதே நேரம் அந்த குட்டியும் அசைய துள்ளி குதித்தாள் அகிலா அந்த குறுகுறுப்பில்....
“வாவ்.. சூப்பரா இருக்கான் என் மருமகன் அண்ணி.... இப்பயே அத்தை கூட விளையாட ஆரம்பிச்சுட்டான்...” என்று குதித்தாள்.. அதை கேட்ட சிவகாமி
“போடி வாலு... எது என்ன மருமகன்.. எனக்கு பேத்திதான் வரப் போறா...” என்றார்...
“போம்மா... எனக்கு ஏற்கனவே என் மருமக கார்த்தி இருக்கா.. அதனால எனக்கு மருமகன் தான் வேணும்.... “ என்று சிணுங்கினாள் அகிலா...
“ம்ஹூம்... உங்க அண்ணன் இருக்கானே, பெத்த தாய் எனக்கும் கட்டின பொண்டாட்டி இவளுக்கும் அடங்காமல் சுத்தறான் இல்ல.. இவனை எல்லாம் தட்டி கேட்க பொம்பளை புள்ளையால தான் முடியும்..
அவன் பொண்ணு வந்து மிரட்டற மிரட்டல்ல இவன் ஆட்டம், விறைப்பு எல்லாம் அடங்க போகுது பார் .. எப்பேர் பட்டவனையும் அவன் பெத்த பொண்ணு நிக்க வச்சு கேள்வி கேட்டா அப்படியே அடங்கிட்டு போய்டுவாங்களாம் அப்பனுங்க....
அதனால இந்த பெரியவனை அவன் பொண்ணு வந்துதான் அடக்க போறா பார்...“ என்று சிரித்தார் சிவகாமி...
அதை கேட்ட அகிலா ஏதோ யோசித்தவள்
“மா.. என் அப்பாவும் அப்ப என் பேச்சை கேட்டு அடங்கினாரா?? “ என்றாள் ஏக்கமாக...
அவள் குரலில் இருந்த ஏக்கமும் கண்ணில் தெரிந்த வருத்தத்தையும் கண்ட மது அவளை மாற்ற எண்ணி
“அகி... மாமா வுக்கு அத்தையெல்லாம் மிரட்ட வேண்டாம்.. அத்தையை பார்த்த உடனே அடங்கி போய்ட்டாராம்.. அப்ப விழுந்தவர் தான் அதுக்கப்புறம் அத்தையை எதிர்த்து எதுவும் பேசலையாம்... “ என்று சிரித்தாள் மது...
சிவகாமியும் வெக்க பட்டு
“உன் அண்ணி சொல்றது கரெக்ட் தான் அகிலா...உங்கப்பா என்னை மீறி எதுவும் செய்ய மாட்டார்....
அதோட உங்கப்பாவுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.. நான் இரண்டு பசங்களே போதும்.. மூன்றாவது குழந்தை வேண்டாம்னு எவ்வளவோ தூரம் கெஞ்சி கேட்டும் எனக்கு பொண்ணு வேணும்னு உன்னை பெத்துக்க வச்சார்...
நீ பிறந்த பிறகு என்கிட்ட இருந்ததை விட உன் அப்பாகிட்ட தான் அதிகம் இருப்ப.. எப்பவும் உன்னை அவர் நெஞ்சு மேல போட்டு தான் தூங்க வைப்பார்... “என்று பெருமையாக சொல்ல அகிலாவின் கண்கள் கலங்கின...
“என் அப்பா இன்னும் கொஞ்ச நாள் என்னுடன் இருந்திருக்க கூடாதா ?? I miss you பா.. “ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்....
அதே நேரம் நிகிலன் உள்ளே வர, அகிலா தன்னை சமாளித்து கொண்டு
“அண்ணா... இங்க வாயேன்...அண்ணி வயித்துல உன்னோட பாப்பா உதைக்கிறா.... நான் தொட்டு பார்த்தேன்.. நீயும் வந்து தொட்டு பாரேன்.... “ என்று ஆர்வமாக அழைக்க, அவனோ இலேசாக புன்னகைத்தவாறு மாடிக்கு சென்றான்....
“போறான் பார்.. கொஞ்சம் கூட தன் பிள்ளைனு பாசமே இல்லாம... இவனுக்கெல்லாம் எங்கப்பன் வடிவேலன் அவன் அப்பனுக்கு பாடம் சொன்ன மாதிரி இவன் புள்ளை வந்து இவன் காதை பிடித்து திருகி புரிய வச்சாதான் உண்டு... “ என்று பெருமூச்சு விட்டார் சிவகாமி...
“ஐ.. சூப்பர் மா... அப்ப இந்த பாப்பா வந்த பிறகு அண்ணா மாறிடுவானா?? “ என்றாள் அகிலா..
“கண்டிப்பா... நீ வேணா பார்.. இந்த குட்டி தங்கத்தை பார்த்ததும் எப்படி பொட்டி பாம்பா அடங்க போறானு... “ என்று சிரித்தார் சிவகாமி...
“முருகா... எப்படியாவது அவனை மாத்திடு... “ என்று உள்ளுக்குள் வேண்டி கொண்டார்...
அன்று சீக்கிரம் வீட்டிற்கு திரும்பி வந்திருந்ததால் நிகிலன் இரவு உணவை முடித்து தன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டு அலைபேசியை நோண்டி கொண்டிருந்தான்....
அப்பொழுது கதவை திறந்து கொண்டு கையில் பால் டம்ளருடன் உள்ளே வந்தாள் மது...
இது ஆறாவது மாதம் என்பதால் அவள் வயிறு கொஞ்சம் வெளியில் தெரிய ஆரம்பித்து இருந்தது...முகம் கொஞ்சம் குண்டாகி தாய்மைக்கே உரித்தான அழகில் மிளிர்ந்தாள்...
அவள் வருவதை ஓரக் கண்ணால் கண்டவன் அவள் முகம் பார்க்க, சாதாரணமாகவே அவனை கட்டி இழுக்கும் அவள் குழந்தை முகமும் அவளின் திரண்ட இதழ்களும் இப்பொழுது இன்னும் மெருகேறி இருக்க, தன் விழிகளை அகற்ற முடியாமல் அவளையே ஓர கண்ணால் பார்த்து ரசித்து கொண்டிருந்தான்.....
பழைய நினைவுகள் கண் முன்னே வர, எழுந்து சென்று அவளை கட்டி அணைத்து கொள்ள துடித்தது அவன் உள்ளம்..... ஆனாலும் தன்னை கட்டு படுத்தி கொண்டவன் தன் தலையை உலுக்கி கொண்டு பார்வையை மாற்றி கொண்டான்......
அதற்குள் அவன் அருகில் வந்தவள் அவன் முன்னே பால் டம்ளரை நீட்டினாள் தலையை குனிந்தவாறு...
நிகிலன் வீட்டிற்கு தாமதமாக வரும் நாட்களில் சிவகாமி பாலை ப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்து விடுவார்... என்றாவது அதிசயமாக சீக்கிரம் வரும் நாட்களில் மதுதான் பால் எடுத்து வந்து தருவாள்....
அவனும் எதுவும் பேசாமல் வாங்கி பருகிவிட்டு டம்ளரை அவளிடம் நீட்டி விடுவான்... அவனுடைய அந்த வெறித்த பார்வை மட்டும் அப்பப்ப அவள் தனியாக இருக்கும் சமயங்களில் மட்டும் அவள் மீது படிந்து மீளும்...
தன் அன்னை இருக்கும் நேரங்களில் அவளை பார்க்க கூட மாட்டான்...இன்றும் மது டம்ளரை நீட்ட, எதேச்சையாக அவன் பார்வை அவள் வயிற்றுக்கு சென்றது...
இன்று அவள் சேலை கட்டி இருந்ததால் அந்த இடைவெளியில் அவள் வயிறு கொஞ்சமாக வெளியில் தெரிய, அப்பொழுது அகிலா சொன்ன
அண்ணி வயித்துல உன்னோட பாப்பா உதைக்கிறா.... நான் தொட்டு பார்த்தேன்.. நீயும் வந்து தொட்டு பாரேன்... என்பது நினைவு வர, அவனுக்கும் ஆசையாக இருந்தது அந்த குழந்தையை தொட்டு பார்க்க...
அதுவரை அந்த குழந்தையை பெரிதாக கண்டு கொள்ளாதவன் இன்று அகிலா சொன்ன உன்னோட பாப்பா உதைக்கிறா என்றதில், அவன் ஆழ்மனதில் உறங்கி கொண்டிருந்த தந்தை என்ற உணர்வு குமிழிட்டு மேலே வந்தது....
அப்பொழுதுதான் அவனுக்கு உறைத்தது தானும் ஒரு தந்தையாக போகிறேன் என்று...
இதுவரை மதுவின் மேல் இருந்த வெறுப்பால் அவள் வயிற்றில் இருக்கும் சிசுவும் அவள் சம்பந்தமானது மட்டுமே தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றவாறு எண்ணி கொண்டிருந்தவனுக்கு அகிலாவின் வார்த்தைகள் அவனை தட்டி எழுப்பியது....
“என்னதான் அவள் வேசக்காரி, மோசமானவள் என்றாலும் அவள் வயிற்றில் இருப்பது என் குழந்தை... என் இரத்தம்.... என் உயிர்...நானும் தந்தையாக போகிறேன்....
என் அப்பா என்னை எப்படி கொண்டாடினாரோ, ஆதி எப்படி அவன் மகளை கொஞ்சறானோ, அதே போல நான் உரிமையுடன் தூக்கி கொஞ்ச, என் விரல் பிடித்து நடக்க, எனக்கும் ஒரு மகள் வரப்போகிறாள்...” என்ற பூரிப்பு அவன் உள்ளே பரவியது....
அவனுக்குள் இருக்கும் தந்தை பாசம் இப்பொழுது விழித்து கொள்ள,
“என் குழந்தையையா நான் கொல்ல துணிந்தேன்...?? சே.. இவள் மீது இருந்த ஆத்திரத்தில் என்ன ஒரு முட்டாள்தனம் செய்ய இருந்தேன்....ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது போல அன்று ஆத்திரத்தில் என் அறிவை இழந்துதான் விட்டேன்....
நல்ல வேளையாக அம்மா என்னை சரியான நேரத்துல அந்த முட்டாள் தனத்தை செய்யாமல் தடுத்து என் குழந்தையை காப்பாத்திட்டாங்க..இல்லையென்றால் என்னவாகியிருக்கும் ?? என்று யோசித்தவனுக்கு உடல் ஒரு நொடி நடுங்கியது.....
“சே,,, இனிமேல் இந்த மாதிரி ஆத்திரத்தில் அறிவை இழக்காமல் இருக்கணும்.. “
என்று உறுதி செய்து கொண்டவன் அருகில் நின்றிருந்த தன் மனைவியின் வயிற்றையே ஆசையோடும் ஏக்கத்தோடும் பார்த்து கொண்டிருந்தான்....
அகிலா மாதிரி அவனுக்கும் தன் குழந்தையை தொட்டு பார்க்கவேண்டும் போல இருந்தது....
ஆனால் அவளிடம் எப்படி கேட்பது?? என அவன் ஈகோ முரண்டு பண்ண, அவள் வயிற்றை ஆசையாக பார்த்தவாறே பாலை பருகினான்....
எப்பொழுதும் போல தலையை குனிந்து கொண்டிருந்தவளுக்கு தன் கணவனின் கண்ணில் தெரியும் ஆசை , ஏக்கம் அவள் கண்ணில் படவில்லை...
அருகில் நின்று கொண்டிருக்கும் அவளை, அவள் வயிற்றை , அதன் உள்ளே இருக்கும் தன் குழந்தையை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது.... அதனால் மெதுவாக அந்த பாலை பருகினான்....
எவ்வளவு மெதுவாக பாலை குடித்தாலும் கடைசியில் அது தீர்ந்து போயிருக்க, மனமே இல்லாமல் டம்ளரை நீட்டினான் அவள் முன்னே...
அவளும் அதை வாங்கி கொண்டு சென்று கழுவி வைத்து விட்டு தன் இடத்திற்கு சென்று வழக்கம் போல போர்வையை இழுத்து மூடி படுத்து கொண்டாள்....
ஆனால் நிகிலனுக்கோ கண்ணை மூடினாலும் உறக்கம் வரவில்லை.... அவள் வயிற்றில் இருந்த அவன் குழந்தை அவனை பார்த்து கண் சிமிட்டி சிரிப்பதை போலவே இருந்தது.....
மெல்ல திரும்பி அவளை பார்க்க, அவளோ நன்றாக உறங்கியிருந்தாள்... உறக்கத்திலும் அழகாக ஜொலித்த அவள் முகம் பார்க்க, இன்னும் கொதித்தது அவன் உள்ளே....
அதோடு சோபாவின் ஓரத்தில் உறங்கி கொண்டிருந்தவளை காணவும் கஷ்டமாக இருந்தது அவனுக்கு... இப்பொழுது மது கொஞ்சம் குண்டாகி இருக்க, அந்த ஷோபா போதுமானதாக இல்லை...
“பேசாமல் அவளை கட்டிலில் வந்து படுக்க சொல்லவா ?? என்று யோசிக்க, உடனே அந்த விதி சதி செய்து மீண்டும் அவன் ஈகோவை தட்டி எழுப்ப, அதன் போதனையில் தன் மனதை மாற்றி கொண்டான்....
ஆனாலும் அவளை நன்றாக படுக்க வைத்து அவள் கீழ விழுந்து விடாமல் இருக்க ஓரத்தில் தலையணையை அடுக்கி வைத்து பின் அவளை பார்த்தவாறே உறங்க முயன்றான்....
மதுவுக்கு ஏழாவது மாதம் ஆரம்பித்து இருக்க, சாரதாவும் சண்முகமும் தங்கள் மகளுக்கு வளைகாப்பு செய்யணும் என்று ஆரம்பிக்க, சிவகாமிக்கும் அதை கேட்டு மகிழ்ச்சிதான்....
நிகிலன் திருமணம் குழப்பத்தில் முடிந்திருக்க, அதற்கு பிறகு வீட்டில் நடக்கும் முதல் விசேசம் இது....
வெளியில் சிரித்து பேசினாலும் உள்ளுக்குள் சிறு வருத்தம் அவருக்கு.... தன் இளைய மகன் இல்லையே என்று...
அதனால் விழாவை கிராண்ட் ஆக பண்ணாமல் எளிதாக பண்ணலாம் என்க, மதுவோ அந்த முதியோர் இல்லத்தில் தன் வளைகாப்பு விழாவை வைத்து கொள்ளலாம் என்றாள்....
அனைவரும் ஒத்து கொள்ள, அங்கயே ஏற்பாடு செய்திருந்தனர்.. நெருங்கிய உறவினர்கள் மற்றும் அங்க இருக்கும் நண்பர்களை மட்டும் அழைத்திருந்தனர்..
நிகிலன் தானும் தந்தையாக போகிறேன் என்று உணர்ந்ததில் இருந்தே அவனிடம் கொஞ்சமாக மாற்றம் வந்து இருந்தது... அதனால் இந்த விழா தன் மகளுக்காக என்று தன்னை சமாதானம் செய்து கொண்டு உற்சாகத்துடனே வளைய வந்தான்....
அதை கண்டு சிவகாமிக்கு ஆச்சர்யம் + மகிழ்ச்சி தான்..
“எப்படியோ இப்பயாவது இது அவன் புள்ளைனு உணர்ந்தானே.... அதுவே போதும்... “ என்று அந்த வேலனுக்கு நன்றி சொல்லி, விழா ஏற்பாட்டை கவனித்தார்....
கௌதம் நிகிலன் தந்தையாக போவது தெரிந்த உடனே அவனை அழைத்து வாழ்த்து சொல்லி மகிழ்ந்து போனான்...
மதுவை அவன் தங்கையாக ஏற்று கொண்டதால் அண்ணன் ஸ்தானத்தில் இருந்து தங்கைக்கு செய்யும் முறையில் முன்னின்று அந்த விழாவிற்கு எல்லா ஏற்பாடுகளையும் பார்த்து கொண்டான்.......
கௌதம் உரிமையோடு அண்ணன் என்று சொன்னதையும் அவனே இந்த விழாவை எடுத்து நடத்துவதையும் கண்டு மதுவின் பெற்றோர்க்கு ரொம்பவே மகிழ்ச்சி...
கௌதம் மதுவின் மேல் காட்டிய பாசம் அவள் பெற்றோர்களை அப்பா , அம்மா என்று அழைத்து காட்டிய அன்பும் கண்டு மதுவின் பெற்றோர்களுக்கு தங்களுக்கு ஒரு ஆண் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தை தீர்த்து வைத்தது....
விழாவிற்கு முதல் நாளே கௌதம் சிலரை வைத்து கொண்டு அந்த இல்லத்தின் பெரிய ஹாலில் எல்லா அலங்காரங்களும் செய்திருந்தான்....
இன்றும் முதல் ஆளாக வந்து மற்ற ஏற்பாட்டை பார்த்து கொண்டான்... சிவகாமியும் மதுவின் பெற்றோர்களும் குடும்பத்துடன் மற்றும் சில உறவுக்காரர்களை அழைத்து கொண்டு காலையிலயே கிளம்பி அந்த இல்லத்திற்கு வந்து விட்டனர்....
அங்கிருந்த பெரியவர்கள் அனைவருக்கும் நிகிலன் புது ஆடை வாங்கி கொடுத்திருந்தான்....
அவன் திருமணம் திடீரென்று நடந்து விட்டதால் அந்த இல்லத்து பெரியவர்களுக்கு அப்பொழுது எதுவும் செய்ய முடியாததால் அந்த ஆசையை இப்பொழுது தீர்த்து கொண்டான்....
எல்லோரும் புது ஆடை உடுத்தி கொண்டு முகத்தில் மகிழ்ச்சியுடன் ஹாலில் அமர்ந்து இருந்தனர்...
சிறிது நேரத்தில் ஆதியின் குடும்பமும் காலையிலயே வந்துவிட்டனர்...
ஜானகி, சுசிலா, பாரதி மற்றும் அவர்கள் குட்டி தேவதை கார்த்தியாயினி என குடும்பத்துடன் வந்திருந்தான் ஆதி தன் நண்பனின் விழாவிற்காக.....
அவன் காரை கண்டதும் மது , சிவகாமி , நிகிலன் எல்லாரும் வெளியில் வர, ஆதி காரை நிறுத்த அவன் மகள் அவனுக்கு முன்னதாக கார் கதவை திறந்து கொண்டு வேகமாக கீழ இறங்கினாள்....
பட்டு பாவாடை சட்டை அணிந்து தலையில் இரட்டை கொம்பு வைத்து ஜடை இட்டு அதில் மல்லிகை சரத்தை இரண்டு பக்கமும் இழுத்து கட்டி வைத்திருந்தாள் பாரதி....
அவளின் குண்டு கன்னத்திற்கும் குட்டி கைகளை வேகமாக ஆட்டி நடந்து வர, அந்த குட்டி தேவதையே இறங்கி நடந்து வருவதை போல இருந்தது....
அவளை கண்டதும் நிகிலன் வேகமாக முன்னால் சென்று அவளை தூக்கி தலைக்கு மேல சுற்றி கொஞ்சி சிரித்து கொண்டே அவள் பட்டு கன்னத்தில் முத்தமிட, அவளும் கிலுக்கி சிரித்து நிகிலன் கழுத்தை கட்டி கொண்டு அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்....
அந்த குட்டி தேவதையின் முத்தம் தந்த தித்திப்பு அவன் உள்ளே சிலிர்த்தது.... உடனே தன் மகளும் இப்படித்தான் தன்னை கட்டி கொள்வாளோ ?? என்று ஆசையாக இருந்தது....இப்பவே அவளை பார்க்க வேண்டும் போல இருந்தது அவன் உள்ளே....
நிகிலன் கார்த்தியை கொஞ்சி கொண்டிருந்ததையே ஏக்கமாக பார்த்து கொண்டிருந்தாள் மது...
அதற்குள் அருகில் வந்திருந்த பாரதி அவளின் ஏக்க பார்வையை கண்டு கொண்டவள்,
“ஹோய்.. மதுகுட்டி... என்ன இன்னும் உன் புருசனையே சைட் அடிச்சுகிட்டிருக்க... அதான் நீ கொஞ்ச அடுத்த ஆள் வந்தாச்சு இல்ல.. இனிமேல் உன் புருசனை கொஞ்சறதை விட்டு உன் குட்டியை பார்... “ என்றாள் பாரதி கண் சிமிட்டி சிரித்தவாறு ...
“போ பாரதி... எப்பவும் உனக்கு கிண்டல்தான்.....” என்று வெக்கபட்டு இலேசாக சிரித்தவாறு தலையை குனிந்து கொண்டாள் மது....
பின் அனைவரும் நலம் விசாரித்து முடிக்க, சிவகாமி அனைவரையும் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.... சாரதா மற்றும் சண்முகத்திற்கு அவர்களை அறிமுக படுத்தி வைத்தார்...
அதே நேரம் நிகிலனின் மற்றொரு நண்பனான வசீகரன் பெற்றோர்களும் வந்திருந்தனர்....
வசீகரனுக்கு அன்று முக்கியமான சர்ஜரி இருப்பதால் தன் நண்பனை போனில் அழைத்து வாழ்த்தி தன் பெற்றோர்களை விழாவிற்கு அனுப்பி வைத்திருந்தான்...
சிவகாமி அவர்களையும் சென்று வரவேற்க, மீனாட்சியின் முகத்தில் தெரிந்த பூரிப்பை கண்டு
“என்ன மீனாட்சி...!! .ஒரு வழியா நீயும் மருமகளை கூட்டி வந்துட்ட போல... எப்படியோ இப்பயாவது அந்த வசி பயலுக்கு கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுச்சே... “ என்று சிரித்தார் சிவகாமி....
(வசிக்கு எப்படி திருமணம் நடந்தது என்று தெரியாதவர்கள் தவமின்றி கிடைத்த வரமே கதையை புரட்டி பாருங்கள்......)
மீனாட்சியும் அவர் கணவர் சுந்தரும் அதை ஒத்து கொண்டு சிரித்தவாறே சிவகாமியிடம் நலம் விசாரித்து பின் உள்ளே சென்றனர்....
நிகிலனும் அவர்களை வரவேற்று முன்னால் அனுப்பி வைத்தான்...
பெரியவர்கள் கொஞ்சம் முன்னால் நடந்திருக்க, பின்னால் இளையவர்கள் சென்றனர்...
கார்த்தியை கையில் தூக்கி கொண்டே நடந்த நிகிலனின் அருகில் வந்த பாரதி
“என்ன மாம்ஸ் ??... உங்க இளவரசிக்கு எத்தனை கதை சொல்லி இருக்கீங்க இது வரைக்கும்?? “ என்று சிரித்தாள்....
“கதையா?? என்ன கதை ?? “ என்றான் நிகிலன் புரியாமல்..
“அடடா.. உங்களுக்கு விசயமே தெரியாதா?? உங்க பிரண்ட் உங்களுக்கு டிப்ஸ் கொடுத்தாரா இல்லையா? “ என்றாள் மீண்டும் கன்னம் குழிய சிரித்தவாறு...
நிகிலன் புரியாமல் ஆதியை பார்க்க அவனோ தன் மனைவியிடம்
“ஹே.. ரதி.. என் மானத்தை வாங்காத டி...அதெல்லாம் சொல்லாத... “ என்று மெதுவாக அவள் காதை கடித்து ஜாடை சொல்லி அவளை அமைதி படுத்த முயன்றான்...
அவளோ அதை கண்டு கொள்ளாமல்
“மாம்ஸ்.. உங்க ப்ரண்ட் Parenting tips. னு ஏதோ புக்கையெல்லாம் படிச்சுட்டு அவர் இளவரசி என் வயித்துல இருக்கிறப்பவே அவளுக்கு க்ளாஸ் எடுப்பார்... தினமும் ஒரு கதை சொல்வார்...என்னையும் தூங்க விட மாட்டார்...
அவர் அப்ப கதை சொன்ன பழக்கத்திற்கு இவளும் இன்னமும் நைட் ஏதாவது கதை சொன்னாதான் தூங்கறா..!!!
ஹ்ம்ம்ம்ம் நீங்க முழிக்கிறதை பார்த்தா , அப்ப உங்க இளவரசிக்கு நீங்க கதை எதுவும் சொல்றதில்லையா?? மது குட்டி நீ கொடுத்து வச்சவ.. நிம்மதியா தூங்கிடலாம்..” என்று சிரித்தாள் பாரதி..
அதை கேட்டு நிகிலன் அசடு வழிந்து சிரிக்க, மதுவுக்கோ கஷ்டமாக இருந்தது...
“அவன் கதை கூட சொல்ல வேண்டாம்.. தன் குழந்தை என்று ஒரு நாளும் கொஞ்சியதில்லையே... “ என்று எண்ணி முகம் வாடினாள்...
அப்பொழுது மதுவின் தோழி சந்தியா அங்கு வர, அதற்குள் மது தன்னை சமாளித்து கொண்டு சிரிப்புடன் அவளை வரவேற்றாள்....
தாய்மையின் பூரிப்பில் மிளிர்ந்த தன் தோழியை கண்டதும் ஓடி வந்து கட்டி கொண்டாள் சந்தியா.....
“ஹே.... மந்தி.... நீயே ஒரு குட்டி குரங்கு... எதையும் தனியாக செய்ய மாட்ட...எப்பவும் என்னையோ அங்கிளையோ தான் சுத்திகிட்டிருப்ப...இப்ப . உனக்குள் இன்னொரு குட்டியா?? “ என்றாள் தழுதழுத்தவாறு....
“ஹோய்...சந்தி.... நான் இப்ப பிக் கேர்ள் ஆக்கும்..... அதுவும் மூத்த மருமகள்... “ என்று இல்லாத காலரை தூக்கிவிட்டு கொண்டாள் மது சிரித்தவாறு....
“பாருடா.... இந்த அரை படி எல்லாம் பிக் கேர்ள் னு காலரை தூக்கி விட்டுக்கறத.... இது சரியில்லை... எங்க என் மாம்ஸ் ??...இப்படி ஒரு பச்சை புள்ளையை அதுக்குள்ள பெரிய மனுசி மாதிரி மாற்றிட்டாரே... அவரை இன்னைக்கு ஸ்பெஷலா கவனிச்சுக்கணும்.... “ என்று மதுவை மிரட்ட
“யாரு டி மா அது ??.. என் மருமகளை மிரட்டறது ?? “ என்று சிரித்து கொண்டே சிவகாமி அருகில் வந்தார்.....
அவரை கண்டதும் அவர்தான் மதுவின் மாமியார் என புரிந்து கொண்டவள்
“ஹீ ஹீ ஹீ நான் தான் மாமியாரே உங்க சின்ன மருமகள்..... !!! “ என்று குறும்பாக கண் சிமிட்டினாள் சந்தியா...
அதை கேட்டு அதிர்ந்து போன சிவகாமி வாயை பிளக்க,
“என்ன மாமியாரே !! சின்ன மருமகள் ன உடனே இப்படி சாக் ஆகி வாயை பிளக்கறீங்க...
உங்க மூத்த மருமகள் அளவுக்கு நான் அழகா இல்லைனாலும் நானும் மூக்கும் முளியுமா பார்க்க லட்சணமாதான இருக்கேன்... அப்புறம் எதுக்கு இந்த லுக்?? “ என்று தன் புருவத்தை உயர்த்தி மிரட்டி சிரித்தாள் சந்தியா....
அதற்குள் தன்னை சுதாரித்து கொண்ட சிவகாமி,
“வாடி.. என் வாயாடி மருமகளே... உன்னைத்தான் இத்தனை நாளா தேடிகிட்டிருந்தேன்....இப்படி ஒருத்தி இல்லையேனு...
என் சின்ன மகன் மட்டும் வரட்டும்.. அடுத்த முகூர்த்தத்துலயே உன் கழுத்துல தாலிய கட்டி உன் வாயை அடக்கி வைக்கிறேன் பார்... “ என்று சிரித்தார்....
“ஹா ஹா ஹா அந்த ஓடிப் போனவன் வந்தா பார்க்கலாம் மாமியாரே... அப்படியும் வந்தாலும் அவன்தான் என்கிட்ட அடங்கி போகணுமாக்கும்...
அவனையும் அடக்குவேன்.. உங்களையும் அடக்கி மூலையில் உட்கார வைக்கிறேன் பார்.... “ என்று சிரித்தாள்...
“ஆத்தி... இப்பயே இந்த பேச்சு பேசறாளே...உன்னை கட்டிகிட்டு என் பையன் என்ன கஷ்டபடுவானோ ??.. அதனால என் பையன் மட்டும் வந்தானா நீ இருக்கிற தெரு இல்ல அந்த ஏரியா பக்கமே அவனை அனுப்ப கூடாது.... “
“ஹா ஹா ஹா ...அப்படி வெளிலயே அனுப்பாம உங்க முந்தானையில முடிஞ்சு வச்சுகிட்டாலும் நானே தேடி வந்து உங்க உத்தம புத்திரன் அந்த ஓடிப்போனவன தூக்கிட்டு போய்ட்டு என் கழுத்துல தாலி கட்ட வச்சிடுவேணாக்கும்....
எப்பனாலும் நான் தான் உங்க சின்ன மருமகள்... எழுதி வச்சுக்கங்க.... “ என்றாள் சிவகாமியை மடக்க எண்ணி...
அதற்குள் மது அவள் கையை பிடித்து கிள்ளி பேசாத என்று ஜாடை காட்ட, அவளோ அதை கண்டு கொள்ளாமல்
“நீ சும்மா இரு மந்தி...இந்த மாமியருங்களே இப்படிதான்... இன்னைக்கு நான் ஆச்சு.... என் மாமியார் ஆச்சு.. “ என்று சிலுத்துகொண்டு அவரிடம் செல்லமாக சண்டைக்கு நின்றாள்....
அதற்குள் மது முந்தி கொண்டு
“சாரி... அத்தை.... நான் சொல்லி இருந்தேன் இல்லை... இவதான் சந்தியா.... என் க்ளோஸ் பிரண்ட் .. கொஞ்சம் வாய் ஜாஸ்தி.. நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதிங்க... “ என்றாள் தயக்கத்துடன்...
“அட்டா... இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்கு மது மா... இப்படி கலகலனு ஜாலியா பேசறதுல ஒன்னும் தப்பில்லை....” என்று சிரித்தார் சிவகாமி....
“ஆங்.... அப்படி சொல்லுங்க அத்தை... எனக்கு சமமா வாயடிக்கிற நீங்கதான் சூப்பர் அன்ட் மாடர்ன் மாமியார்...ஐ லைக் யூ.... “ என்று அவரை கட்டி கொண்டாள் சந்தியா....
சிவகாமியும் சிரித்தவாறே
“என்னமா சந்தியா.... உன் அப்பா அம்மா வரலையா...?? “ என்றார் வாயிலை பார்த்தவாறு...
“நீங்க வேற அத்தை.. அவங்க எல்லாம் உங்களை மாதிரி மாடர்ன் கிடையாது... இன்னும் பழைய பஞ்சாங்கம்... அவங்களை கூட்டி வந்திருந்தேன் வச்சுக்கங்க.. இப்படி பேசாத, அப்படி சிரிக்காத.. பொண்ணா அடக்க ஒடுக்கமா இரு னு ஒரே அட்வைஸ் மழையா இருக்கும்....
நான் இப்படி சுதந்திரமா சுத்த முடியாது.... அதனால இந்த இடம் ரொம்ப தூரம் உங்களுக்கு ட்ராவல் ஒத்துக்காதுனு ஏதேதோ காரணத்தை சொல்லி அவங்களை கழட்டி விட்டுட்டு நான் மட்டும் தனியா வந்திட்டேன் இந்த மந்தியோட பங்சனை கலக்கறதுக்கு...
இன்னைக்கு புல்லா இந்த சந்தியா ப்ரீ பேர்ட் அத்தை....என் இஷ்டத்துக்கு ஆடலாம்... “ என்று கண் சிமிட்டி சிரித்தாள்....
“வாயாடி.... இந்த வாய் அடிக்கறீயே... உன் கூடவேதான சுத்தி இருப்பா என் மருமக.... அவளையும் உன்னை மாதிரி மாற்றி இருக்கலாம் இல்லை... “ என்று அவள் காதை பிடித்து திருகினார் செல்லமாக.....
“ஆங்... வலிக்குது அத்தை...இப்பதான் உங்களை நல்ல மாமியார்னு சர்டிபிகேட் கொடுத்தேன்.....அதுக்குள்ள இப்படி பயங்கர டெரர் மாமியார் னு காமிக்கறீங்களே.... ஏன் டீ மந்தி எப்படி இவங்களை சமாளிக்கிற?? “ என்று தன் காதை பிடித்து கொண்டே சிரித்தவள்
“ஆங்... என்ன கேட்டிங்க அத்தை.. உங்க மருமக ஏன் வாயே பேச மாட்டேங்கிறானா ?? அது ஒரு பெரிய கதை.....
நாங்க இரண்டு பேரும் கிட்ட தட்ட ஒரு மூனு மாசம் இடைவெளியில் தான் பிறந்தோம் அத்தை...
எங்க இரண்டு அம்மாக்களும் எப்பவும் எங்களை ஒன்னா விட்டுட்டு கதை அடிக்க ஆரம்பிச்சுடுவாங்க.... அதை பார்த்து பார்த்து இந்த மந்தி சீக்கிரம் பேச ஆரம்பிச்சுட்டா.... நான் மூனு வருசம் வரைக்கும் வாயே பேசலையாம்...
எங்கப்பா வேண்டாத கோவில் இல்லை என் பொண்ணு வாய் பேச மாட்டேங்கிறானு... சமையபுரம் போய் வாய் மாதிரி பொம்மை எல்லாம் கூட வாங்கி உண்டியல் ல போட்டுட்டு வந்தாராம்....
அப்புறம் இந்த மந்தி நல்லா பேசறதை பார்த்த எங்க அம்மா என்னை புல் டைம் இந்த மந்தி கூடவே உட்கார வச்சுட்டாங்க.... நானும் வேற வழி இல்லாம இவ பேசறதை கேட்டு கேட்டு எனக்கும் பேசணும்னு ஆசை வந்திடுச்சாம்....
அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சுட்டேனாம்... அதுக்கப்புறம் இந்த மந்தியை பேச விடாமல் நானே பேச, இவ என் பேச்சை கேட்டு அப்படியே அமைதி ஆகிட்டாளாம்...
அது அப்படியே வளர்ந்து எங்க போனாலும் இவளுக்கும் சேர்த்து நானே பேசிடவும் இவ அப்படியே அமுக்கினியாட்டம் இருந்துகிட்டா...
கடைசியில பார்த்தா இவளுக்கு ஒன்னும் தெரியாதவ, அப்பாவி னு பட்டமும் எனக்கு வாயாடினு பட்டமும் கொடுத்திட்டாங்க.... இது எப்படி இருக்கு?? “ என்று சிரித்தாள் சந்தியா....
அதை கேட்டு வாய் விட்டு சிரித்தார் சிவகாமி.....சிறிது நேரம் சிரித்து முடித்தவர்
“சரி டி மா.. உன் கூட பேசிகிட்டே இருக்கலாம் போல ஒருக்கு.. இப்ப வேலை நிறைய இருக்கு.. ஒரு நாள் சாவகாசமா வீட்டுக்கு வா... “ என்று அவள் கன்னம் வருடி சிரித்தவாறே அங்கிருந்து நகர்ந்து சென்றார் சிவகாமி...
அவர் சென்றதும் மது அவளை பார்த்து முறைத்தாள்..
“ஏன் டி.. முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட இப்படியா பேசுவ?? அத்தை எதுவும் தப்பா எடுத்திருந்தாங்கனா?? கொஞ்சமாவது பெரியவளா லட்சணமா நடந்துக்கோ... “ என்று முறைத்தாள் மது
“ஹா ஹா ஹா நோ டென்சன் மந்தி.... அப்புறம் அந்த குட்டி மந்தியும் இந்த சித்தியை வயித்துக்குள்ள இருந்தே திட்டும்... அப்படியே உன் மாமியார் தப்பா எடுத்திருந்தாலும் அதை கரெக்ட் பண்ணிட மாட்டேனாக்கும்.. நோ வொர்ரிஸ் ... பி ஹேப்பி.. என்ஜாய் யுவர் டே.... “ என்று கண் சிமிட்டி சிரித்தாள்....
அப்பொழுது பாரதி அங்கு வர, மது பாரதியை அழைத்து சந்தியாவை அறிமுக படுத்தினாள்....
“ஹாய் அக்கா.... “ என்றாள் சந்தியா கை நீட்டியவாறு...
அதை கேட்டு முறைத்தவள்
“ஹோய்... என்னை பார்த்தா அக்கா மாதிரியா இருக்கு..?? . என்ன உங்களை விட ஒரு இரண்டு வயது அதிகமா இருக்கும்.. அதுக்குனு உடனே என்னை அக்கா ஆக்கிட்டியே...
இந்த மதுகுட்டியும் அப்படிதான் கூப்பிட்டா.. இப்பதான் பாரதினு கூப்பிடறா.. அதனால் நீ என்னை பெயர் சொல்லியே கூப்பிடு... “ என்றாள் பாரதி அவளை செல்லமாக முறைத்தவாறு ...
அதை கேட்டு ஆங் என்று முழித்தவள் தன்னை சமாளித்து கொண்டு
“ஓ.... நீங்க என்றும் பதினாறு ஸ்ரீதேவி யா...சாரி பாரதி... அதை முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்லை பாரதி.... இனிமேல் நீயே மரியாதை கொடுனு கெஞ்சி கேட்டாலும் உனக்கு மரியாதை கிடையாது பாரதி.... இது ஓகே வா பாரதி... “ என்று கண் சிமிட்டி சிரித்தாள் சந்தியா....
“அடிப்பாவி.... ஏதோ ஒரு பேச்சுக்கு என்னை பெயர் சொல்லி கூப்பிடு னா வார்த்தைக்கு வார்த்தை என் பெயரை ஏலம் விட்டுகிட்டிருக்க...
என் புருசன் கூட என் பெயரை இத்தனை தரம் சொன்னது கிடையாது.... நீ வாய்க்கு வாய் என் பெயரை சொல்ற “ என்று முறைத்தாள் பாரதி...
“அப்படியா.... ஆதி மாம்ஸ் உன் பெயரை சொல்லி கூப்பிடறதில்லையா?? எங்க அவர்... இப்பவே பஞ்சாயத்தை கூட்டிடலாம்..... “ என்றவள் சற்று தொலைவில் நின்று பேசி கொண்டிருந்த ஆதியை கண்டவள்
“மாம்ஸ்.... ஆதி மாம்ஸ்... இங்க வாங்க... உங்க பொண்டாட்டி உங்க மேல கம்ப்லெயின்ட் கொடுத்திருக்கா.... என்னானு விசாரிக்கலாம்.... “ என்றாள் சத்தமாக....
அதை கேட்டு ஆதி திரும்பி பார்க்க, மூன்று பெண்களும் அவனை பார்த்து சிரித்து கொண்டிருப்பதை கண்டவன்,
“ஆஹா.. நம்மள வச்சு ஏதோ காமெடி பண்ணிகிட்டிருக்காங்க... சிக்கிடாத ஆதி... “என்று உசார் ஆனவன்
“அம்மா.... தாய்குலமே... என்னால என் பொண்டாட்டி ஒருத்தியையே சமாளிக்க முடியலை.. இதுல நீ வேறயா?? தாங்காதும்மா.... என்னை ஆளவிடுங்க... நீங்க நடத்துங்க உங்க கச்சேரியை... “ என்று கையெடுத்து கும்பிட்டு அங்கிருந்து நழுவினான்....
“ஆஹா... பாரதி.. அப்படி என்ன சொக்கு பொடி போட்டு வச்சிருக்க... இல்லை அப்படி மிரட்டி வச்சிருக்கியா ?? பாரு... மாம்ஸ் எப்படி அலறி அடிச்சு ஓடறார்....
இதுக்கெல்லாம் நம்ம டாக்டர் வசி மாம்ஸ் தான் லாயக்கு...எவ்வளவு அடிச்சாலும் சிரிச்சுகிட்டே தாங்குவாராம்....” என்று சிரித்தாள் சந்தியா....
“ஹே சந்தியா... உனக்கு எப்படி எங்களை எல்லாம் தெரியும்?? “ என்றாள் பாரதி ஆச்சர்யமாக
“ஹா ஹா ஹா... இந்த உலகமே என் கையில்.. அதுல தம்மாதுண்டு உங்க கேங்கை பத்தி தெரியாதாக்கும்... “ என்றவளை பாரதி முறைக்க
“ஹீ ஹீ ஹீ நோ.. டென்சன் ரதி டார்லிங்... அப்படிதான உன் புருசன் உன்னை கொஞ்சுவார்.. “ என்று ரகசியமாக கண்ணடித்து சிரித்தவள்
“இந்த மந்தி இருக்காளே... இவ கிட்ட பேசறப்ப எல்லாம் உங்களை பத்திதான் பேசுவா... அவ புருசனை பத்தி சொல்றாளோ இல்லையோ அவ மாமியார், நாத்தனார் அப்புறம் உங்களோட தானா சேர்ந்த கூட்டம் அதுல யார் யார் எப்படி னு புல் ஹிஸ்டரி ஜ்யாக்ரபியே எனக்கு அத்துபடி...
எனக்கு பொழுது போகலைனா இந்த மந்தி கிட்ட தான் போன் பண்ணி கதை கேட்பேன்.. அவளும் எல்லாரையும் பற்றி கதை கதையா சொல்வா... உங்க போட்டோவும் அனுப்பி வச்சிருக்கா... அதான் ஆதி மாம்ஸ் ஐ பார்த்த உடனே கண்டு புடிச்சிட்டேன்....
உன்னையும் தெரிஞ்சது... ஆனா போட்டோல இருந்ததை விட இப்ப கொஞ்சம் கலர் கம்மியான மாதிரி ஆய்ட்டீங்க... கொஞ்சம் வெளில சுத்தறத குறச்சுக்கோ ரதி.... “ என்று கண் சிமிட்டி சிரித்தாள் சந்தியா...
பாரதி அவள் காதை பிடித்து திருகி
“வாயாடி.. எனக்கே அக்காவா இருப்ப போல இருக்கு...” என்று சிரித்தாள் பாரதி...
அதே நேரம் ஜெயந்த் மற்றும் வசந்த் உள்ளே வர, மது சென்று அவர்களை வரவேற்றாள்....
ஜெயந்த் க்கு மதுவை அந்த தாய்மையின் அழகில் காண மனம் நிறைந்து இருந்தது....
ஜெயந்த் மற்றும் வசந்த் இருவரும் அவளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்...பின் நிகிலனையும் சந்தித்து வாழ்த்து சொல்லினர்... நிகிலனும் வெக்க பட்டு புன்னகைத்தவாறு அவர்கள் வாழ்த்தை ஏற்று கொண்டு பின் அவர்களை அழைத்து சென்று அமர வைத்தான்....
அதற்குள் சிவகாமி பாரதியை அழைத்து மதுவுக்கு அலங்காரம் பண்ணி விட சொல்ல, பாரதியும் சந்தியாவும் மதுவை அழைத்து கொண்டு சென்று அவளுக்கு திருமண பட்டு புடவையை கட்டி, தலை பிண்ணி தலை நிறைய மல்லிகையை வைத்து கொஞ்சம் நகைகளையும் பூட்டி விட்டாள் பாரதி....
ஏற்கனவே நல்ல அழகாக இருப்பவள் இப்பொழுது தாய்மையின் பூரிப்பிலும் அந்த எளிய அலங்காரத்திலும் இன்னும் ஜொலித்தாள் மதுவந்தினி...
பின் எல்லோரும் வந்துவிட, பாரதி மதுவை அழைத்து கொண்டு வந்து அந்த ஹாலின் நடுவில் போடபட்டிருந்த மணையில் அமர வைத்தாள்...
பட்டு புடவை சரசரக்க தலையை குனிந்த படியே வந்தவளை கண்டதும் அருகில் நின்றிருந்த நிகிலன் மனம் எகிறி குதித்தது....
அவளையே இமைக்க மறந்து பார்த்தான் ஓர கண்ணால்....
அவனையுமே அவனுடைய திருமண பட்டு வேஷ்டி சட்டையை போட வைத்திருக்க, அந்த ஆடையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான் முகத்தில் தான் தந்தையாக போகும் பூரிப்புடன்....
தலையை குனிந்த படியே நடந்து வந்தாலும் தன் கணவன் நின்று கொண்டிருந்ததை கண்டவள் கொஞ்சமாக தலையை நிமிர்த்தி ஓர கண்ணால் தன் கணவனை காண அவள் உள்ளேயும் சிலிர்த்தது....
எவ்வளவு அழகாக கம்பீரமாக முகத்தில் பூரிப்புடன் நிற்கும் அவனை கண்டதுமே மனம் நிறைந்து விட்டது... அவனையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தாள் ஓரக்கண்ணால்....
சந்தியாதான் அவளிடம் குனிந்து,
“போதும் டீ.... சைட் அடிச்சது.. என்னமோ உன் புருசனை இப்பதான் பார்க்கிற மாதிரி இப்படி முழுங்கிடற மாதிரி பார்க்கற..அவர் என்னடான்னா அதுக்கு மேல...
பெரிய ACP சார்... IPS ஆபிசர்.. பொண்டாட்டியை நேருக்கு நேராக பார்க்காமல் திருடன் மாதிரி ஓர கண்ணால் பார்த்து சைட் அடிக்கிறார்... என்னடி நடக்குது இங்க...?? “ என்று அவள் கையை கிள்ளினாள் சந்தியா....
அவளை முறைத்தவள் இலேசாக கன்னம் சிவக்க தன் பார்வையை உடனே மாற்றி கொண்டாள் மது....
பாரதியும் சிரித்து கொண்டே அவளை அழைத்து வந்து மணையில் உட்கார வைத்தாள்... பின் நிகிலனையும் அழைத்து மது அருகில் இருந்த நாற்காலியில் அமர வைத்தனர்...
அவனும் வெக்க பட்டு கொண்டே நெழிந்தவாறு அவள் அருகில் அமர்ந்தான்....
"மாம்ஸ்.. போதும்.. ரொம்ப வெக்க படாதிங்க... கல்யாணத்தப்போ முறைச்சுகிட்டே இருந்தீங்களாம்.. உங்க ஆளுதான் சொன்னா..... அதனால் இப்ப புல்லா சிரிச்சுகிட்டே போட்டோக்கு போஸ் கொடுங்க பார்க்கலாம்.. " என்றாள் சந்தியா சிரித்தவாறு ....
நிகிலனும் அதை கேட்டு சிரிக்க, மதுவிற்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.. அவனின் கம்பீர சிரிப்பையே அடிக்கடி ரசித்தாள் ஓரக் கண்ணால்...
அந்த இல்லத்தில் இருக்கும் முதியவர்களை வைத்தே விழாவை ஆரம்பித்தனர்...
சுமங்களிகளாக இருக்கும் வயது முதிர்ந்த சில பெண்மணிகளை அழைக்க, அவர்களும் தங்களையும் பொருட்டாக, சொந்தமாக மதித்து அழைக்கிறார்களே என உள்ளம் குளிர்ந்து மகிழ்ந்து போய் முன்னால் வந்தவர்கள் மதுவுக்கு சந்தனம் பூசி, வளையல் அடுக்கி, மஞ்சள் நீர் வைத்திருந்த அந்த சொம்பால் தலை சுத்தி அவளுக்கு வளையலை போட்டு அட்சதை தூவி ஆசிர்வதித்தனர்....
நிகிலன் கன்னத்திலும் சந்தனத்தை தடவி அவனையும் வாழ்த்தினர்....அதன் பின் ஒவ்வொருவராக மதுவுக்கு வளையல் அடுக்கி ஆசி வழங்க, சாரதாவும் மனம் நெகிழ்ந்து போய் தன் மகளுக்கு சந்தனம் பூசி அவளை ஆசிர்வதித்தார்....
சிவகாமியையும் அழைத்தாள் பாரதி....
அவரோ தான் ஒரு அமங்கலி என முன்னால் வர மறுக்க, சந்தியா போய் அவரை இழுத்து வந்தாள்.. அதே போல ஜானகி, சுசிலா, ரமணி, மீனாட்சி என் அனைவரும் மதுவுக்கு வளையல் அடுக்கி மனம் நிறைந்து வாழ்த்தினர்....
ஆதி இதையெல்லாம் தன் கேமிராவில் பதிந்து கொண்டிருந்தான்...
கடைசியில் பாரதியும் மதுவிற்கு கன்னம் நிறைய சந்தனத்தை பூசி பின் நிகிலன் முகம் முழுவதுமே பூசி விட்டாள்...
சந்தியாவும் அதே போல செய்ய, அந்த இடமே கலகலவென்று சிரிப்பொலியில் நிறைந்து இருந்தது...
கார்த்தியை தூக்கி வைத்து கொண்டு இருந்த அகிலா தானும் அதே போல செய்ய வேண்டும் என்று மதுவின் அருகில் வந்தவள் கார்த்தியை கீழ இறக்கி விட்டு தன் அண்ணிக்கு சந்தனத்தை தடவினாள்...
அதை உற்று பார்த்து கொண்டிருந்த அந்த குட்டியும் தன் பிஞ்சு கையால் கொஞ்சம் சந்தனத்தை எடுத்து தன் குட்டி கால்களை எக்கி மதுவின் கன்னத்தை தொட முயன்று கொண்டிருக்க, அதை கண்டு சிரித்த நிகிலன் எழுந்து கார்த்தியை தூக்கி கொள்ள, அவளும் மதுவின் கன்னத்தில் சந்தனத்தை பூசினாள் தன் தளிர் கரங்களால்....
அதை கண்டு அனைவரும் சிரிக்க , அந்த குட்டி தேவதையும் வெக்க பட்டு சிரித்தாள்.....
உடனே சந்தியா
“மாம்ஸ்... லாஸ்ட் உங்க சான்ஸ்... நீங்களும் உங்க பொண்டாட்டிக்கு பூசி விடுங்க.. இன்னைக்கு இந்த மந்தியோட கன்னத்தை ஒரு வழி பண்ணிடலாம்... “ என்று சிரித்தாள்...
அதை கேட்டு நிகிலன் வெக்க பட்டு தயங்கி நிக்க,
“என்ன மாம்ஸ்..?? இப்படி வெக்க படறீங்க.. ஒரு வேளை பாரதி ஆதி மாம்ஸ் ஐ மிரட்டி வச்சிருக்கிற மாதிரி இந்த மந்தியும் உங்கள மிரட்டி வச்சிருக்காளா???
நான் இருக்கேன் உங்க பக்கம்.... நீங்க தைர்யமா அள்ளி பூசுங்க... “ என்று சீண்ட அதற்கு மேல் தயங்காமல் அந்த கின்னத்தில் இருந்த சந்தனத்தை எடுத்து தன் மனைவியின் குண்டு கன்னத்தில் பூசினான் நிகிலன்....
அவளும் வெக்க பட்டு அவன் முகம் நோக்க, இருவர் விழிகளும் ஒன்றை ஒன்று சந்தித்து கொண்டன நீண்ட நாட்களுக்கு பிறகு.....
அவன் கை பட்டதும் அவள் உள்ளே சில்லிட, அதே உணர்வுதான் நிகிலனுக்கும்.. அவள் கன்னம் தீண்டிய அவன் கரங்கள் அந்த சந்தனத்தின் குளிர்ச்சியை விட அவள் கன்னம் சில்லென்று இருக்க அவன் உள்ளேயும் சில்லென்ற இன்ப தீண்டல்கள்...
உடல் எல்லாம் பரவசம் புதுவெல்லம் பாய்ந்தோடியதை போல இருந்தது அவன் உள்ளே....
“ம்ம்ம்ஹூம்..... மாம்ஸ்.... இது தான் இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிக்கறதுனு சொல்றது.. ஏதோ போனா போகுது பொண்டாட்டியை யே ஏக்கமா பார்த்துகிட்டிருக்கீங்கனு ஒரு சான்ஸ் வாங்கி கொடுத்தா உடனேயே டூயர் பாட ஆரம்பிச்சுட்டீங்க...
நாங்க எல்லாம் இன்னும் இங்கதான் இருக்கோம்.. நினைப்புல வைங்க.... “ என்று சிரித்தாள் சந்தியா...
அதற்குள் சுதாரித்து கொண்டவன் மேலும் வெக்க பட்டு சிரித்து கொண்டே தன் கைகளை எடுத்து கொண்டான்.. பின் தானாகவே அருகில் இருந்த வளையலை எடுத்து அவள் கரம் பிடித்து அவளுக்கு அணிவித்தான்...
மதுவுக்கு என்ன சொல்வதென்றே தெரியாத ஒரு இனம் புரியாத உணர்வு...
“இது போதும் எனக்கு...இந்த நொடிகள் போதும்.... இனி எத்தனை துன்பம் வந்தாலும் தாங்குவேன்...” என்று உள்ளுக்குள் சிலிர்த்து போனாள்..
எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க ரமணிக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது... ஆனாலும் சின்ன வருத்தம் தன் மருமகளுக்கும் இந்த மாதிரி நல்லது நடக்கலையே என்று..
ஆனாலும் தன் வருத்தத்தை மறைத்து கொண்டு நிகிலனாவது நல்லா இருக்கட்டும் என்று வாழ்த்தினார்...
எல்லாரும் வளையல் அடுக்கி முடித்திருக்க, மது எல்லோரிடமும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்...அந்த இல்லத்து பெரியவர்களிடமும் ஒவ்வொருவர் காலிலும் விழுந்து வணங்கினாள்...
அவர்களுக்கும் மனம் கொள்ளா மகிழ்ச்சி... ஏற்கனவே மதுவை அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.... இப்பொழுது தங்களையும் மதித்து அவள் காலில் விழ, ஒவ்வொருவரும் அவளை தொட்டு தூக்கி அவள் கன்னம் வருடி ஆசிர்வதித்தனர் மனம் நிறைவுடன்.....
பின் வழக்கபடி வேற யாராவது திருமணம் ஆகி குழந்தை இல்லாத பெண்களுக்கு மணையில் அமர வைத்து வளையல் அடுக்குவர் என்பதால் அந்த இல்லத்தில் வேலை செய்யும் சமீபத்தில் திருமணமான பெண் ஒருத்தியையும் ரமணி அழைத்து வந்து அவளுக்கும் வளையல் அடுக்க சொன்னார்...
பின் சிவகாமி பாரதியை பார்த்து
"பாரதி மருமகளே .. அடுத்து நீயும் மணையில உட்கார்.. " என்றார் சிரித்து கொண்டே
"எதுக்கு மாமியாரே.. ?? " என்றாள் புரியாமல்
"ஹ்ம்ம் கார்த்தி குட்டிக்கு கூட விளையாட அடுத்து ஒரு தம்பி வேணும் இல்ல.. அதுக்குத்தான்.. பாவம் அவளும் இந்த இரண்டு கிழவிங்க கூடயே எத்தனை நாளைக்கு விளையாடறது?? " என்று சிரித்தார் சிவகாமி....
அதை கேட்டு கன்னம் சிவந்தாள் பாரதி...அவளின் வெக்கத்தையே இமைக்க மறந்து ரசித்தான் அவள் எதிரில் இருந்த அவள் கணவன் ஆதி....
தன் கேமராவில் அவளை மட்டும் சூம் பண்ணி அவள் சிவந்து சிரிக்கும் அழகை அழகாக பதிந்து கொண்டான் உள்ளுக்குள் சிலிர்த்தவாறு....
தன் கன்ன சிவப்பை மறைத்து கொண்டவள்,
"ஹீ ஹீ ஹீ ... நான் எப்பவோ ரெடி மாமியாரே.. ஆனால் எங்க வீட்ல ஒரு டாக்டர் மாமியார் இருக்காங்களே.. அவங்க இளவரசிக்கு நாலு வயசு ஆனாதான் அடுத்த குழந்தையை பத்தி யோசிக்கணும்னு சொல்லி தடா போட்டுட்டாங்க....
என் பையன் வந்துட்டா அவங்க மொத்த பாசமும் என் பையனுக்கு போய்டுமாம்... அவங்க இளவரசி பொக்குனு போய்டுவானு தடா போட்டுட்டாங்க... " என்றாள் வருத்தமாக...
அதை கேட்டு ஜானகியும் சுசிலா வும் சிரிக்க,
“என்ன சுசி அப்படியா?? “ என்றார் சிவகாமி..
“ஆமாம் சிவா.... கொஞ்ச நாளைக்கு அவ வாழ்க்கையை அனுபவிக்கட்டும்... உன்ன மாதிரி அடுத்தடுத்து இரண்ட பெத்துகிட்டு அதுங்களை வளர்க்கறதுக்கே வாழ்க்கை பூரா ஓட்டணும்..
அதான் கொஞ்ச நாள் என்ஜாய் பண்ணட்டும் னு சொல்லிட்டேன்... அதைத்தான் இப்படி மாத்தி சொல்றா... "என்று சிரித்தார் சுசிலா...
"ஹ்ம்ம்ம் எனக்கு இது மாதிரி எடுத்து சொல்ல அப்ப யாரும் இல்லை.. இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் கொடுத்து வச்சவளுங்க.. " என்றார் சிவகாமி....
அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்த சந்தியா.
“அத்தை... நானும் அதுல உட்காரவா?? எனக்கும் வளையல் போட்டு விடறீங்களா?? " என்றாள்
அதை கேட்டு அனைவரும் சிரிக்க ,
“எதுக்கு அத்தை எல்லாம் சிரிக்கறீங்க?? “ என்றாள் முழித்தவாறு...
“ஹ்ம்ம்ம் அது கல்யாணம் ஆன பொண்ணுங்க உட்காரது மருமகளே... அவங்களும் சீக்கிரம் உண்டாகி குழந்தை பெத்துக்கணும்னு இப்படி உட்கார வச்சு வளையல் போடறது....... என்ன உன்னையும் உட்கார வச்சுடலாம?? "என்று சிரித்தார் சிவகாமி.....
“ஆத்தி.... என் புருசனையே நான் இன்னும் பார்க்கலை... அதுக்குள்ள குழந்தையா??... என்னை ஆள விடுங்க...” என்று கன்னம் சிவந்து சிரித்து கொண்டே ஓடி விட்டாள் சந்தியா.....
பின் அனைவரும் சிரித்து கொண்டே சாப்பிடும் இடத்திற்கு சென்றனர்....
கேட்டரிங் மூலமாக முன்பே சாப்பாடு ஏற்பாடு செய்திருக்க ஆதி, ஜெயந்த், கௌதம், வசந்த் என்று அனைவரும் பரிமாற, அந்த இல்லத்து பெரியவர்களும் அவங்க வீட்டு விழா மாதிரி மன திருப்தியுடன் சாப்பிட்டனர்..
விழாவிற்கு வந்திருந்தவர்களும் சாப்பிட்டு முடிய, அந்த விழா இனிதாக முடிந்த திருப்தியில் அனைவரும் விடை பெற்று சென்றனர்....
விழா முடிந்ததும் மதுவை சிவகாமி தன் வீட்டிற்கு அழைத்து வந்தார்...
பூஜை அறையில் விளக்கேற்றி அந்த முருகனை வணங்கி விட்டு
“நல்ல படியா குழந்தையை பெத்து எடுத்துகிட்டு வா டா.. " என்று அந்த முருகனின் திருநீற்றை அவள் நெற்றியில் வைத்து ஆசிர்வதித்தார்...
சாரதாவும் சண்முகமும் வளைகாப்பிற்கு பிறகு மதுவை தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கேட்டு கொண்டனர்..
அவர்களுக்கும் ஒரே மகள் என்பதால் அவளை சீராட்டி பார்க்க அவர்களுக்கும் ஆசையாக இருக்கும் என்று சிவகாமி சம்மதித்தார்..
அதோடு இங்க அவன்தான் இன்னும் முறுக்கி கொண்டே இருக்கறானே.. தன் மருமகள் அவள் பிறந்த வீட்டிலாவது சென்று நிம்மதியாக இருக்கட்டும் என்று அவளை அனுப்பி வைக்க ஒத்து கொண்டார்..
அதன்படி இங்கு வீட்டிற்கு வந்த பிறகு மது அவள் பிறந்த வீட்டிற்கு செல்வதாக இருந்தது...
தன் அறையில் அவளுக்கு வேண்டிய ஆடை மற்றும் சில புத்தகங்களை நேற்றே பேக் பண்ணி வைத்து விட்டாள் மது.. ஏனோ அவளுக்கு தன் தாய் வீட்டிற்கு செல்ல மனமேயில்லை.. .
தன் கணவன் பாராமுகமாக இருந்தாலும் அவன் முகத்தை பார்த்து கொண்டேயாவது இருக்கலாம்...
ஆனால் அங்கு சென்று விட்டால் கண்டிப்பா அவன் தன்னை பார்க்க வரமாட்டான்.. அவளும் இங்க வர முடியாது... அதனால் இங்கயே இருக்கலாம் என்று எண்ணியவள் அதை எப்படி தன் அத்தையிடம் சொல்லுவது என்று தயக்கமாக இருந்தது...
அட்லீஸ்ட் தன் கணவன் பார்த்து போக வேண்டாம் என்று சொன்னாலாவது அதை காரணம் காட்டி இருந்து விடலாம் என்று எண்ணியிருக்க, அவனோ இவள் போவதை கண்டு கொள்ளவேயில்லை....
தன் பிறந்த வீட்டிற்கு செல்லுமுன் எதையோ மறந்து விட்டதை போல இருக்க தன் அறைக்கு வந்து தேடி கொண்டிருந்தாள் மது ...
அப்பொழுது நிகிலன் எதையோ எடுக்க அவன் அறைக்கு வந்திருக்க, அங்கு அவளை கண்டதும் அப்படியே நின்று விட்டான்....
இவ்வளவு நேரம் தெரியாத அவள் பிரிவு இப்பொழுது அவள் தன்னை விட்டு செல்கிறாள் என்றதும் அவன் உள்ளேயும் ஏதோ அழுத்த மனம் பாரமாக இருந்தது...
எனனதான் அவளிடம் பாராமுகமாக இருந்தாலும் அவனை அறியாமலயே அவள் முகத்தை பார்த்து கொண்டிருப்பதே அவனுக்கு நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்கும்..
இரவு எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் உறங்கி கொண்டிருக்கும் அவள் முகத்தை பார்த்தாலே அவனுக்கு நிம்மதியான உறக்கம் வந்து விடும்....
அதுவும் அவள் வயிற்றில் இருப்பது தன் குழந்தை என உணர்ந்ததில் இருந்தே அவனும் கொஞ்சம் கொஞ்சமாக இலக ஆரம்பித்து இருந்தான்..
இந்த நிலையில் அவள் விட்டு செல்கிறாள் என்பது மனதை அழுத்த அவளையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான்....
அவன் பார்வையை கண்ட மது உடனே தன் பார்வையை தாழ்த்தி கொண்டாள்...
பின் கொஞ்சம் தைர்யத்தை வரவழைத்து கொண்டு கடைசி முயற்சியாக
“நான் போகட்டுமா?? “ என்றாள் அவனை ஏக்கமாக பார்த்து கொண்டே...
“வேண்டாம்..போகாதே... “ என்று ஒரு வார்த்தை சொல்லிவிடேன்.. நான் அப்பாகிட்ட சொல்லி இங்கயே இருந்திடறேன்... “ என்ற இறைஞ்சுதல் அவள் கண்களில்....
தன் கணவனை பிரிந்து செல்ல கஷ்டபட்டு இங்கயே தங்கி விட துடிக்க, அவனையே ஏக்கமாக பார்த்தாள் மது...
நிகிலனுக்கும் அதே பீல்தான் அவளை இங்கயே தங்க வைக்கணும் என்று.. ஆனாலும் மனம் விட்டு தன் ஈகோவை விட்டு சொல்ல முடியாமல் அவள் கேட்ட கேள்விக்கு
“உன் விருப்பம்...” என்றான்.. ஆனாலும் இங்கயே இருந்து விடேன்.. என்றது அவன் உள் மனம்...
அதற்குள் கீழிருந்து சிவகாமி மதுவை அழைக்க, அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் கண்ணில் தேங்கிய நீருடன்
“நல்லா சாப்பிடுங்க.. உடம்பை பார்த்துக்கங்க... “ என்று தரையை பார்த்து சொல்லி விட்டு அவனை கடந்து சென்றாள் தன் கண்ணீரை உள்ளிழுத்து கொண்டு...
நிகிலனுக்குமே ஏனோ தன் உயிரை பிரித்து எடுத்து செல்வது போன்ற வலிதான்... ஆனாலும் அதை அடக்கி கொண்டு அவனுமே கீழிறங்கி வர பின் அனைவரிடமும் விடை பெற்று காரில் ஏறினாள்...
கௌதம் தான் காரை ஓட்டினான்... சிவகாமி, அகிலா, நிகிலன் என அனைவரும் வாயில் வரை வந்து நிக்க, தன் கணவனை கண் நிறைய கண்டு மனதில் நிரப்பி கொண்டு எல்லோருக்கும் கை அசைத்து விடை பெற்று சென்றாள் மதுவந்தினி.......
Comments
Post a Comment