தவமின்றி கிடைத்த வரமே-30


அத்தியாயம்-30
சி சிறு புன்னகையுடன் அவள் தலை முடியை செல்லமாக கலைத்து விட்டு, அவன் இருக்கையின் இரவு விளக்கை ஆன் பண்ணி விட்டு ஒரு புத்தகத்தை பிரித்து வைத்து கொண்டு அதை படித்து வந்தான்...

ஆனால் அவன் மனம் முழுவதும் கலங்கிய கண்களுடன் நின்று கொண்டிருந்த பனிமலரிடமே சென்று நின்றது...

“தன் பிரிவை தாங்காமல் அவள் கண் கலங்குகிறாள் என்றால் அவள் என்னை கணவனாக ஏற்று கொண்டதாகத்தானே அர்த்தம்..அதுவும் வசு பங்சன் அப்ப எவ்வளவு ஜாலியா சிரிச்ச பேசினா.. “

என்று எண்ணியவனின் நினைவுகள் அன்றைய நாளை அசை போட, அவன் அவளை இழுத்து அணைத்தது கண் முன்னே வர, மெல்லிய புன்னகை அவன் உதட்டில்..அவன் உள்ளே இப்பொழுதும் அந்த பரவசம் உடல் எங்கும் பரவியது...

மித்ரா அருகில் இருப்பதால் வெளியில் அவன் புன்னகைப்பது தெரியாமல் உள்ளுக்குள் சிரித்து கொண்டிருந்தான்.. ஆனால் பார்வை மட்டும் புத்தகத்தை படிப்பதை போல வைத்து கொண்டான்..

ஆனால் இதை அறியாத மித்ராவோ அவளுக்கு தெரிந்த வழிகளை எல்லாம் பயன்படுத்தி அவனை அவள் புறம் இழுக்க முயன்று கொண்டிருந்தாள்...

அவன் மீசையை பிடித்து இழுத்தும் அவன் கை விரல்களுக்குள் தன் கையை விட்டு கொண்டும் அவன் காதருகில் மெதுவாக ஏதோ பேசியும் அவள் அருகாமையை அவன் உணரவேண்டும் என்று ஏதேதோ செய்ய, அவனோ எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாமல் அவளை எப்பொழுதும் பார்ப்பவனை போலவே பார்த்து சிரித்து அவளுடன் அப்பப்ப பேசி கொண்டிருந்தான்...

அதை கண்டவள்

“சரியான சாமியார் தான்.. இப்படி ஒருத்தி அதுவும் இந்த இரவு நேரத்தில் இப்படி நெருக்கமா இருக்கறேன்.. கொஞ்சம் கூட என்னை தீண்டி பார்க்க தோனலையே... சரியான மரக் கட்டை... சாமியார்.. “ என்று மனதுக்குள் திட்டி கொண்டிருந்தாள்..



நட்பின் ஆழம் பற்றி அவள் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை... நட்பு என்பது காதலை விட எவ்வளவு புனிதமானது.. அதுவும் ஆண் பெண் நட்பு என்பது மிகவும் கண்ணியமாக இருக்க வேண்டும்..

அவர்களுக்குள் தாங்கள் வேற வேற பாலினத்தவர் என்ற ஒரு உணர்வே வந்து விடக் கூடாது.. அந்த மாதிரி எண்ணம் வந்து விட்டால் அந்த நட்பு அங்கே தொலைந்து விடும்...

எந்த ஒரு ஆணும் தன் நண்பியை வெறும் நண்பியாக எண்ணாமல் ஒரு பெண்ணாக பார்க்க ஆரம்பித்தால் அந்த நட்பு அங்கயே அழிந்து விடும்..

அதனால் தான் வசி மித்ராவுக்கும் தனக்கும் இருப்பது வெறும் நட்பு என ஆழ பதித்து அதில் உறுதியாக இருந்தான்..

அதுவும் அவனுடைய நண்பர்களான ஆதி, நிகிலன் உடன் எப்படி ஒருவரை ஒருவர் அடித்து உதைத்து கட்டி பிடித்து சுதந்திரமாக விளையாடுவார்களோ அதே போலத்தான் மித்ராவிடம் சுதந்திரமாக பழகி வந்தான்..

அதனால்தான் அவள் இவ்வளவு நேரம் அவனை சீண்டிய பொழுதும் அவனுடைய தான் ஒரு ஆண் என்ற எண்ணம் மேல வராமல் அவளுடைய நண்பன் என்ற எண்ணம் மட்டுமே அவனுக்கு இருந்தது..

அதனாலயே ஒரு பெண்ணாக அவளை பார்க்கவில்லை.. அவனுடைய மற்ற நண்பர்களை போல அவளையும் நண்பனாக தோழனாக பார்த்தான் வசி..

மலரிடம் அவனால் நண்பனாக இருக்க முடியவில்லை.. அவளை பார்த்த அந்த நொடியிலயே அவன் இதயத்திற்குள் வந்து விட்டாள் பனிமலர்...

அவளை பார்க்கும் பொழுது எல்லாம் அவன் இதயம் எகிறும்... ஆனாலும் நட்பு என்று பழகுவதால் அவளை எல்லை தாண்டி பார்க்காமல் கண்ணியத்துடன் தான் அப்பவும் பழகி வந்தான்...

மனைவியான பிறகுதான் அவளை வேற மாதிரி ரசிக்க ஆரம்பித்ததும் சீண்ட ஆரம்பித்ததும்...

ஆனால் பிறந்ததில் இருந்தே ஒரே மகளாக செல்லமாக வளர்ந்திருந்த மித்ராவுக்கு அந்த நட்பு பற்றி சரியாக தெரியவில்லை.. அவளை தெரிந்து கொள்ள விடாமல் தடுத்தது அவளின் வசீகரன் பைத்தியம்...

ஆனால் அவளுமே அறிந்திருக்கவில்லை.. வசீகரன் மீது அவளுக்கு இருப்பது காதல் இல்லை. அது வெறும் ஒரு வெறி என..

அதாவது தனக்கு சொந்தமான ஒரு பொருளை, ஒரு பொம்மையை மற்ற குழந்தையிடம் கொடுக்க பிடிக்காமல் அடம் பிடித்து தன்னுடனே வைத்து கொள்ள துடிக்கும் ஒரு குழந்தையை போலத்தான் மித்ரா தான் பழகி வந்த வசீகரனை மலருக்கு தூக்கி கொடுக்க பிடிக்கவில்லை...

கல்லூரியில் படிக்கும் நாட்களிலயே அவள் வகுப்பு பெண்கள் மற்றும் சில ஜூனியர்ஸ் வசியிடம் அணுக முயல, அவள் அவர்களை எல்லாம் தடுத்து விட்டாள்.. வசி எனக்கு மட்டும்தான் என்று அவர்களிடம் பெருமை அடித்து கொள்வாள்..

மித்ரா மீது பொறாமை கொண்ட அந்த பெண்கள்

“வசி. .வேற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவள் பின்னே போய் விட்டால் நீ என்ன செய்வாய்? “ என சீண்டினர்..

அவனை தன்னுடனே வைத்து கொள்ள வேண்டும் என்றால் அவனை மணந்து கொள்ள வேண்டும் என்று கணக்கிட்டவள் அந்த ஒரு எண்ணத்தை அவள் காதல் என்று தவறாக புரிந்து கொண்டு அவனை காதலிக்க சொல்லியும் திருமணம் செய்து கொள்ள சொல்லியும் வற்புறுத்தினாள்...

வசிக்கு தெளிவாக புரிந்தது அவர்கள் இருவரிடமும் இருக்கும் புரிதல் வெறும் நட்பு மட்டும் தான் என... அதனாலயே அவளிடம் விளக்கி சொல்லி புரிய வைக்க முயன்றான்..

என்னதான் பெற்றோர்கள் சமாதானம் சொன்னாலும் அந்த குழந்தை அந்த பொம்மையை இறுக்கி பிடித்து கொண்டு மற்றவர்களுக்கு தர மாட்டேன் என அடம் பிடிக்குமே அதே போல யாருடைய போதனையும் அவள் மண்டைக்குள் ஏற வில்லை...

அவளாக பார்த்து அவனை விட்டு கொடுத்தால் தான் அவள் மனம் மாறும்.. ஆனால் அவ்வளவு எளிதில் விட்டு விடுவாளா என்ன ??

மித்ரா இவ்வளவு தூரம் அவனை சீண்டிய பொழுதும் அவள் உள்ளேயும் எந்த ஒரு உணர்வும் வந்திருக்கவில்லை... அவளுமே தான் ஒரு பெண் அவன் ஒரு ஆண் என உணர்ந்திருக்க வில்லை.. அப்படி உணர்ந்திருந்தால் அவளால் இப்படி நெருங்கி அமர்ந்திருக்க முடியாது...

பெண்களுக்கே உரித்தான வெட்கம் வந்து அவளை அவனை நெருங்க விட்டிருக்காது..

ஆனால் அந்த மாதிரி எதுவும் தோன்றாமல் அவனை தன் பக்கம் இழுக்கறேன் பேர்வழி என்று ஏதேதோ சேட்டைகள் செய்துகொண்டு வந்தாள்..

அவள் உள்ளேயும் அவன் ஒரு ஆண் அவள் ஒரு பெண் என தோன்றாமல் இருவரும் நண்பர்கள் என்ற எண்ணமே மேலோங்கி இருந்ததால்தான் தன் நண்பனிடம் உரிமையாக விளையாட முடிந்தது...

ஒரு வழியாக விமானம் லன்டனில் தரை இறங்க, மித்ரா முன்பதிவு செய்திருந்த ஹோட்டலில் இருந்தே அவர்களை பிக்அப் பண்ண டாக்சி அனுப்பி இருந்தனர்..

அந்த டாக்சியில் தங்கள் லக்கேஜை வைத்ததும் கிளம்பி செல்ல, விரைவில் அவர்கள் ஹோட்டலை அடைந்தனர்...

மித்ரா இருவருக்கும் பக்கத்து பக்கத்து அறையை முன்பதிவு செய்திருந்தாள்...

அவர்கள் அங்கு சென்றடைந்த நேரம் அங்கு நேரப்படி அதிகாலை என்பதால் இன்னும் சில மணி நேரம் மட்டுமே உறங்க முடியும் என்று எண்ணி தங்கள் அறையை அடைந்ததும் அசதியில் வீட்டிற்கு அழைத்து பேச முடியவில்லை...

பத்திரமாக வந்து சேர்ந்து விட்டோம் என்ற செய்தி மட்டும் அனைவருக்கும் அனுப்பி விட்டு உறங்க சென்று விட்டான் வசி..

அன்று காலையில் சீக்கிரமாக அந்த கான்ப்ரன்ஸ் தொடங்குவதால் சிறிது நேரம் மட்டும் உறங்கி எழுந்து தயாராகி மித்ராவிற்கு அழைக்க அவளோ இன்னும் உறங்கி கொண்டிருந்தாள்..

அதனால் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு கிளம்பி சென்று விட்டான்..

மித்ரா லண்டனுக்கு அடிக்கடி வந்திருக்கிறாள் என்பதாலும் சென்னையில் இருந்தவாறே இங்கு வாடகைக்கு கார் புக் பண்ணி அவளே அவள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வருவதாக திட்டமிட்டிருந்ததால் வசியின் துணை அவளுக்கு தேவை இல்லை..

அதனாலயே அவளை விட்டு விட்டு அவன் தன்னுடைய கான்ப்ரன்ஸ்க்கு கிளம்பி சென்றான்...

அடுத்த வந்த இரண்டு நாட்களுமே இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள முடியவில்லை...

வசிக்கு அங்கு நாள் முழுவதும் நிகழ்ச்சிகள் இருந்ததாலும் கான்ப்ரன்ஸ் முடிந்ததும் அங்கயே பல நாட்டு மருத்துவர்களுடன் கலந்துரையாடுவதில் ஈடுபட நேரம் ஆவதே தெரிவதில்லை...

அதுவும் அவனுக்கு பிடித்த சுவராஸ்யமான டாபிக் வரும் பொழுது தன்னையும் மறந்து இரவு மணி 12 வரைக்குமே நீண்டு விடும்.... பின் தன் அறைக்கு வரும் பொழுது அசதியில் அப்படியே படுத்து உறங்கி விடுவான்...

தன் வீட்டிற்கோ, இல்ல மித்ராவிடமே கூட பேச முடிந்திருக்க வில்லை..

கான்பிரன்ஸ் மதிய இடைவேளையின் பொழுது கிடைக்கும் சிறிது நேரத்தில் அதுவும் மித்ராவே அவனை அழைத்து ஏதாவது பேசி வைப்பாள்.. பாதி நேரம் அவனை திட்டுவதுதான் அவள் வழக்கமாகும்..

மலரோ தினமும் தன் அலைபேசியையே பார்த்து கொண்டிருந்தாள்.. அவன் அழைப்பானா?? அட்லீஸ்ட் ஒரு மெசேஜாவது அனுப்ப மாட்டானா?? என்று நொடிக் கொரு தரம் அலைபேசியை பார்வையிடும்...

ஏதாவது மெசேஜ் வந்த ஒலி கேட்கும் பொழுது அவசரமாக தன் அலைபேசியை எடுத்து பார்ப்பாள்... அது வேற ஒருவரிடமிருந்து எனும் பொழுது முகம் வாடி விடும்...அவளாக அழைத்து பேசவோ செய்தி அனுப்பவோ தயக்கமாக இருந்தது..

ஆனால் ஒரே ஒரு மகிழ்ச்சி அவன் தன் வீட்டிற்கும் அழைக்கவில்லை என்பதுதான்...

மீனாட்சி தினமும் இரவில் அலைபேசியில் அழைத்து தன் மருமகளுடன் கொஞ்ச நேரம் கதை பேசிய பின்னே உறங்க செல்வார்.. அப்படி பேசும் பொழுதெல்லாம் அவர் மகனை பற்றி எதுவும் சொல்ல மாட்டாரா என்று ஆர்வமாக கவனித்து வருவாள் மலர்..

ஆனால் அவரோ தன் மருமகளின் மனதை அறியாமல் தன் மகனை பற்றி பேசாமல் மற்ற கதைகளை பேசி வைத்து விடுவார்... மலருக்கும் வெட்கத்தை விட்டு தன் கணவனை பற்றி அவரிடம் விசாரிக்க தயக்கமாக இருந்தது...

அதனால் உள்ளுக்குள் அவனை திட்டிகொண்டே எதுவும் விசாரிக்கவில்லை... மூன்றாவது நாள் மீனாட்சியே அதிசயமாக தன் மகனை பற்றி வாயை திறந்தார்...

அப்பொழுது தான் தெரிந்தது அவனுடய வீட்டிற்கும் அழைக்க வில்லை என்று .. அதற்கான காரணத்தையும் சொன்னார் மீனாட்சி...

“இவன் எப்பவும் இப்படித்தான் மலர்... இந்த மாதிரி கான்ப்ரன்ஸ் போகும் பொழுது வீட்டையே மறந்துடுவான்... நாங்களா பார்த்து அழைத்து விசாரித்தால் தான் உண்டு.. இந்த முறை அதுக்கும் இடம் இல்லாமல் அலைபேசியை பகல் நேரங்களில் அணைத்து விடுகிறான்...

இன்னைக்குத்தான் மனம் கேட்காமல் மித்ரா கிட்ட பேசினேன்...அவன் நல்லா இருப்பதாக கூறினாள்..கான்ப்ரன்ஸ் ல் பிசியாக இருக்கிறானாம்... அதை கேட்ட பிறகு தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு.. மித்ரா அவன் கிட்ட சொல்லி வீட்டுக்கு பேச சொல்றேன் னு சொன்னாள்... “ என்றார்...

அதை கேட்டதும் தான் மலருக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.. தன்னிடம் மட்டும் அல்லாமல் அவன் யாரிடமும் பேசியிருக்க வில்லை என கொஞ்சம் நிம்மதியாக இருந்தது...

“அவன் எவ்வளவு பெரிய டாக்டர்... பாவம் எவ்வளவு பிசியாக இருப்பானோ ?? நான் பாட்டுக்கு என்கிட்ட பேசலைனு திட்டிகிட்டு இருந்தேனே.. நான் ஒரு மடச்சி.. “ என்று தன்னைத்தானே திட்டி கொண்டு  சமாதானம் படுத்தி கொண்டாள்...

ஆனால் அதெல்லாம் அடுத்த நாள் மித்ராகிட்ட இருந்து செய்தி வரும் வரைக்குத் தான்... மித்ராகிட்ட இருந்து வந்த வாட்ஸ்அப் மெசேஜை கண்டு மீண்டும் உடைந்து விட்டாள் மலர்...

மூன்றாவது நாள் கான்ப்ரன்ஸ் ம் மற்றும் கலந்துரையாடலும் கொஞ்சம் முன்னதாக முடிந்து விட, வசி அன்று கொஞ்சம் சீக்கிரம் தன் அறைக்கு திரும்பினான்...அப்பவுமே மணி 10 ஐ நெருங்கி விட்டது...

மித்ரா அறையை உற்று கவனிக்க , அதில் அரவம் எதுவும் இல்லாமல் போக அவள் உறங்கியிருப்பாள் என எண்ணி கொண்டு தன் அறைக்கு திரும்பியவன் வேற ஒரு இலகுவான உடைக்கு மாறியவன் மெத்தையில் பொத்தென்று விழுந்தாண்_..

தலையணையை எடுத்து அதன் மீது தன் ஒரு கையை வைத்து சாய்ந்து படுத்தவாறு மறு கையால் தன் அலைபேசியை எடுத்தவனுக்கு பனிமலரின் ஞாபகம் வந்தது...இன்றோடு மூன்று நாட்கள் முடிந்து விட்டன அவளை பார்த்து...

கடைசியாக கண்களில் நீருடன் நின்று கொண்டிருந்தவளின் முகமே நினைவு வர, ஏனோ அவளை பார்க்கவேண்டும் அட்லீஸ்ட் அவள் குரலை கேட்க வேண்டும் போல இருந்தது...

வாட்ஸ்அப்பில் அவள் பெயரை செர்ச் பண்ணியவன் அவளின் டிபியில் இருந்த புகைபடத்தையே பார்த்து கொண்டிருந்தான்... இப்பொழுது வசுவின் விழாவின் பொழுது இறுதியாக குடும்பமாக இரு குடும்பங்களும் இணைந்து எடுத்து கொண்ட குடும்ப புகைபடத்தை வைத்திருந்தாள்...

அதில் வசி அவளை ஒட்டி நின்று கொண்டிருக்க, அந்த நெருக்கத்தில் யாரும் அறியாமல் அவள் கைகளை பற்றி கொண்டது நினைவு வந்தது.. இப்பொழுது நினைத்தாலும் சிலிர்த்தது அவன் உள்ளே....

தன் இதழ்களில் புன்னகை அரும்ப, அவளை மற்றும் சூம் பண்ணி பார்த்தான்..

அவளும் அழகாக புன்னகைத்திருந்தாள்... அவள் முகத்தையே கைகளால் ஆசையாக வருடியவன் அவளை அழைக்கலாமா என்று எண்ணி கால் பட்டனை அழுத்த போக, அதே நேரம் அவன் அறைக்கதவு தட்டபட்டது...

உடனே தன் அலைபேசியை வைத்துவிட்டு எழுந்து சென்று கதவை திறந்து பார்க்க மித்ராதான் நின்று கொண்டிருந்தாள்...அவன் கதவை திறந்ததும்

“ஹாய் டா... என்ன பயங்கர பிசியா?? ஆளை புடிக்கவே முடியலை “ என்று முறைத்தவாறு உள்ளே வந்தாள்...

“ஆமாம் கொஞ்சம் பிசிதான் மிது... எவ்வளவு பேர் வந்திருக்காங்க தெரியுமா?? எனக்கு தெரியாத நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன்.. திஸ் ஈஸ் வெரி வெரி யூஸ்புல் கான்ப்ரன்ஸ்.... தேங்க்ஸ் பார் சஜ்ஜஸ்டிங்... “ என்றான் கண்கள் மின்ன...

அவளோ தலையில் அடித்து கொண்டாள் மானசீகமாக.....

ஏனென்றால் அவளை உற்று பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் அவளிடம் இருந்த வித்தியாசம்... கொஞ்சம் கவர்ச்சிகரமாக உடை அணிந்து வந்திருந்தாள் மித்ரா..

தன் இரவு உணவை முடித்தவள் போர் அடிக்க , வசிக்கு அழைக்கலாம் என்று எண்ணி அழைக்க, அவனோ ஸ்விட்ச் ஆப் பண்ணி வைத்திருந்தான்...

அதே எரிச்சலில் எதையோ நோண்டி கொண்டிருக்க, அதிசயமாக ஷ்யாமிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது... அவள் பத்திரமாக சேர்ந்து விட்டாளா என்று கேட்டிருந்தான்...

அதைக் கண்டவள் புன்னகையுடன் அவனிடம் சேட் பண்ண ஆரம்பித்தாள்....

ஷ்யாமிற்கு அதை நம்பவே முடியவில்லை.... அவனுக்குமே மித்ராவை பார்க்காத இந்த நாட்களில் தவிப்பாக இருந்தது..

முன்பு தினமும் அவளுடன் பேச வில்லை என்றாலும் அவளை பார்ப்பதே அவனுக்கு பெரிய விருந்தாக இருக்கும்... இந்த மூன்று நாட்களில் அவளை பார்க்காம்ல் அவள் குரலை கேட்காமல் இருக்க என்னவோ போல இருக்க, தன்னை கட்டு படுத்த முடியாமல் அன்று மெசேஜ் அனுப்பி இருந்தான்....

அதற்கு மித்ரா பதில் அழிக்கவும் துள்ளி குதித்தான்... ஆனால் அவளோ அவனை பற்றி பெரிதாக கண்டு கொள்ளாமல் வசியை பற்றி குற்ற பத்திரிக்கை வாசித்து கொண்டிருந்தாள்....

அவளுடனே நேரம் செலவிடவில்லை என்றும் அவள் தனியாகவே எல்லா இடங்களுக்கும் சென்று வருவதாக கூற, ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தது அவனுக்கு.. வசி கொஞ்சம் கொஞ்சமாக அவளை தள்ளி பிரித்து வைக்கிறானோ என்று இருந்தது...

அப்பதான் மித்ரா தன் பக்கம் வருவாள் என்று எண்ணினான் ஷ்யாம்...

ஆனாலும் அவள் முகம் வாடுவது மனக் கண்ணில் தெரிய அதை பொறுக்க முடியாமல் அவளுக்கு ஆறுதல் கூறி சமாதானம் படுத்தினான்.. ஒரு வழியாக ஷ்யாமிடம் சேட் பண்ணி முடித்தவள் எதேச்சையாக வசியின் எண்ணை பார்க்க அது ஆன்லைன் என காட்டியது...

உடனே அவன் அறைக்கு வந்திருப்பான் என புரிந்து கொண்டு ஷ்யாமிற்கு பை சொல்லி முடித்துவிட்டு அப்படியே எழுந்து வசியின் அறைக்கு வந்து விட்டாள்...

பக்கத்து அறை என்பதால் அவள் அணிந்திருந்த அந்த இரவு உடையுடனே வந்துவிட்டள்..

இரவில் வழக்கமாக மிக மெல்லிய நைட்டியைத்தான் அணிந்து கொள்வாள்... அதுதான் உடலை அழுத்தாமல் மெல்லியதாக இதமாக இருக்கும்.. வசியை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் தன் ஆடையை கவனிக்காமல் அப்படியே வந்து விட்டாள்..

வசியின் அறைக்கு வந்த பிறகு தான் அவளுக்கே உறைத்தது....உடனே அவசரமாக ஒரு திட்டத்தை தீட்டினாள்...

தன் ஆடையை கண்டு மயங்கி விடுவான்.... இதை வைத்து மலரை அவனிடமிருந்து பிரித்து விடலாம் என்று எண்ணி அவன் முன்னே ஒயிலாக நடந்து வர, அவனோ அவளை கவனிக்காமல் தன்னுடைய கான்ப்ரன்ஸ் பற்றி கண்கள் விரிய பேச, தலையில் அடித்து கொண்டாள் மித்ரா...

“டேய்.. போதும் நிறுத்தறியா... எப்ப பார் அந்த வீணாப் போன கான்ப்ரன்ஸ் பத்தியே பேசிகிட்டிருக்க...நீ அங்க போய்ட்டாலே புது உலகத்துக்கு போன மாதிரி ஆய்டுமே..

உடனே இந்த உலகத்தையே மறந்திடற... வெரி பேட்.... “ என்று செல்லமாக முறைத்தவாறு உள்ளே வந்தவள் நேராக அவன் பெட்டில் சென்று அமர்ந்து கொண்டாள்...

பின் தன் அலைபேசியை திறந்தவள்

“வசி.. இங்க வாயேன்.. நான் மூன்று நாளா எடுத்த போட்டோவை காட்டறேன்.. “ என்று அழைத்தாள்..

அவள் திட்டியதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் வசியும் சிரித்து கொண்டே அவள் அருகில் சென்று அமர்ந்து கொண்டவன் அவள் காட்டிய புகைபடங்களை எல்லாம் ரசித்து பார்த்து கொண்டிருந்தான்...

அவளோ குனிந்து நிமிர்ந்து என்று பல விதமான போஸ்கலில் அவனை கவர முயல, அவனோ அவள் கண்களை தாண்டி தப்பாக ஒரு பார்வை கூட அவள் மீது படவில்லை...

அவள் கொஞ்சம் ஆபாசமாக காட்சி அளித்த பொழுதும் எல்லை மீறி அவன் பார்வை அவளை தீண்டவில்லை... அதை கண்டு மித்ராவுக்குத் தான் முகம் விழுந்து விட்டது..

இதை விட ஒரு ஆண் மகனை எப்படி வளைப்பது என்று தெரியவில்லை... அவளுக்கும் வெட்கத்தை விட்டு அதற்கு மேல் எல்லை மீற முடியவில்லை... ஏனென்றால் அடிப்படையில் அவள் அப்படி வளர்க்கபடவில்லை...

பெரிய செல்வந்தர் வீட்டு ஒரே மகளாக வளர்ந்த பொழுதும் அவள் வீட்டில் நமது கலாச்சாரத்தை சொல்லியே வளர்த்து இருந்தனர்... அவளும் மாடர்ன் பேர்வழி என ஆர்பரிக்க மாட்டாள்...

அதுவும் வசியின் நட்பு கிடைத்த பிறகு அவளுக்கு அவனுடனே நேரம் செலவிட தோன்றியதே தவிர, ஆடம்பரமாக உடுத்தி கொண்டு பார்ட்டி, பப் என சுற்ற சென்றதில்லை...

இன்று இருவரும் தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு வசியை தன் வழிக்கு கொண்டு வந்துவிட்டால் மலரை அவனிடமிருந்து பிரித்து அவனை தனக்கு மட்டுமே சொந்தமாக்கி கொள்ளலாம் என்று திட்டமிட்டவள் கொஞ்சம் இப்படி அப்படி இருக்குமாறு அவன் முன்னே நடிக்க, அதை அவன் பொருட்படுத்தாமல் கண்ணியமாக இருக்க, அதற்கு மேல் மித்ராவால் என்ன செய்ய என தெரியவில்லை...

ஒரு பெண் தானாக எப்படி ஆணை நெருங்குவது என்ற பெண்ணிற்கே உரிய ஏதோ ஒன்று தடுத்ததோ இல்லை அவள் உள்ளுக்குள் இருந்த வசி அவள் நண்பன் என்ற உணர்வு அவளை கட்டி போட்டதோ அவளால் அதற்கு மேல் மோசமாக நடந்து கொள்ள முடியவில்லை....

ஆனாலும் வசியை விட்டு கொடுக்கவும் முடியவில்லை.. அவசரமாக யோசித்து அடுத்த குட்டி திட்டம் ஒன்றை தீட்டினாள்...

அதன்படி அவர்கள் இருவரும் நெருக்கமாக அமர்ந்து இருக்க, வசி சற்று வெகு அருகில் அவள் காட்டிய புகைபடத்தை பார்த்து கொண்டிருக்க, அதை அவன் அறியாமல் செல்பி எடுத்து இருந்தாள் மித்ரா...

எங்கே தான் கிளம்பி சென்றால் அவன் மலருக்கு அழைத்து பேசுவானோ என்று எண்ணியவள் வேண்டும் என்றே நீண்ட நேரம் பேச்சை வளர்த்து அவனுடன் பேசி கொண்டிருந்தாள்....

வசிக்கும் அவளை எப்படி நிறுத்த சொல்வது என தெரியாமல் மலரிடம் பேச முடியாமல் போய்விட்டதே என உள்ளுக்குள் புலம்பியவன் நீண்ட நேரம் ஆகியும் அவள் நிறுத்தாமல் வளவளத்து கொண்டிருக்க, அதற்கு மேல் முடியாமல் கண் சொக்கி விழ, பின் அவனுக்கு தூக்கம் வருவதாக சொல்ல, மனமே இல்லாமல் அவனை விட்டு தன அறைக்கு திரும்பினாள் மித்ரா....

வசியும் அவள் சென்ற உடனே அறை கதவை மூடிவிட்டு அதற்கு மேல் வீட்டிற்கு அழைத்து பேச முடியாததால் தன் அன்னைக்கு ஒரு மேசேஜை மட்டும் போட்டு விட்டு கட்டிலில் விழுந்தவன் உடனே உறங்கி போனான்...தன்னை சுற்றி பின்னப் படும் வலையை அறியாமல்..

தன் அறைக்கு வந்த மித்ராவோ உறக்கம் வராமல் மலர் எண்ணை வாட்ஸ்அப்பில் ஆட் பண்ணி

“ஹாய் மலர்.... திஸ் ஈஸ் மித்ரா... “ என்று ஆரம்பித்து சுருக்கமாக அறிமுகத்தை முடித்து கொண்டு இதுவரை அவள் வசியுடன் எடுத்திருந்த புகைபடங்கள் சிலவற்றை அனுப்பி வைத்தாள்...

அவள் விமானத்தில் வரும் பொழுது அவனுடன் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைபடங்களும் சற்று முன் அவன் அறையில் அவன் கட்டிலில் அமர்ந்து இருந்த பொழுது இருந்த புகைபடத்தையும் அனுப்பி வைத்தாள்...

அதுவும் சற்றுமுன் எடுத்த புகைபடம் அவள் இரவு உடையில் இருக்க, வசியுமே அரைக்கால் ட்ராயரும் கையிலலாத வழக்கமாக சட்டைக்குள்ளே அணியும் ஒரு மெலிதான பனியனும் அணிந்திருந்தான்,,,

மித்ரா உள்ளே வந்ததும் அவனுக்கு அது வித்தியாசமாக இல்லாததால் தன் ஆடையை மற்ற தோன்றாமல் அவளுடனே அமர்ந்து கொண்டான்...

அந்த இரவு உடையில் இருவரும் நெருக்கமாக கட்டிலில் சிரித்தபடி அமர்ந்து இருக்க, பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக அவர்கள் இருவரையும் பற்றி தப்பாக எண்ணத்தான் தோன்றும்....

அப்படி தப்பாக எண்ண வேண்டும் என்றுதான் அந்த போசில் மித்ரா வசி அறியாமல் எடுத்திருந்தாள்.. அதையும் மலருக்கு அனுப்பி வைத்தாள்..

கண்டிப்பா இதை பார்த்தால் அவள் உள்ளே மாற்றம் வரும்.. அப்படியாவது அவள் அவனை பிரிந்து செல்லட்டும்.. அப்பதான் வசியை தன் சொந்தமாக்கி கொள்ள முடியும் என்று குரூரமாக நகைத்தவள் தன் அலைபேசியை அணைத்துவிட்டு நிம்மதியாக உறங்கினாள்...

மித்ரா அனுப்பி இருந்த புகைபடங்களை பார்த்த மலருக்கு தலையில் இடி விழுந்த மாதிரி இருந்தது...

“அத்தை சொன்ன மாதிரி நேரம் இல்லை என்று சொல்பவன் இவளுடன் இப்படி கொஞ்சி கொண்டிருக்க எங்கிருந்து வந்ததாம் நேரம்...

ஓ.. இவளுடன் இப்படி உல்லாசமாக சுத்தி கொண்டிருபதால் தான் டாக்டருக்கு நேரம் இல்லையா?? “ என்று மனதுக்குள் எண்ணி கசந்து போனாள்..

அவள் மனதில் இருந்த சந்தேகம் என்ற விச பயிர் இன்னும் வேகமாக வளர ஆரம்பித்தது...

கிட்டத்தட்ட ஒரு விருட்சமாக வளர்ந்து நின்றது...

மற்ற நாட்களும் வசிக்கு பிசியாக முடிந்து விட, அந்த கான்ப்ரன்ஸ் கடைசி நாளான் வெள்ளிக்கிழமை இரவு சீக்கிரம் தன் அறைக்கு திரும்பிய வசியை மித்ரா கட்டாய படுத்தி ஷாப்பிங் அழைத்து சென்றாள்...

வசிக்கு பொதுவாக இந்த ஷாப்பிங் செல்வது எல்லாம் பிடிக்காது.. அவனுக்கே எது வேண்டும் என்றாலும் அவன் அன்னை தான் வாங்கித் தருவார்..

இல்லை என்றால் மித்ரா ஷாப்பிங் செல்லும் பொழுது அவள் பார்க்கும் ஆடை, ஷூ, வாட்ச் என்று எது நன்றாக இருந்தாலும் உடனே வசிக்காக அதை வாங்கி வந்து விடுவாள்.. அதனால் அவன் தனியாக ஷாப்பிங் என்று செல்வதில்லை..

இன்று மித்ரா வற்புறுத்தி அழைத்து செல்ல, வேற வழி இல்லாமல் அவளுடன் சென்றவன் வீட்டிற்கு எதாவது வாங்க வேண்டும் என தோன்ற, வசுக்கு சில ஆடைகளும் காஸ்மெட்டிக்ஸ் பொருட்களும் மித்ராவே வாங்கி கொடுத்தாள்...

பின் இனியவனுக்கு ஒரு ப்ளேசர் ம் மற்றவர்களுக்கும் சிறு சிறு பரிசு பொருட்களை வாங்கினான்... மலருக்கு மட்டும் எதுவும் வாங்கவில்லை அவன்.. என்ன வாங்குவது என்று தெரியவில்லை...

அங்கிருந்த கடைகளை சுற்றி வர, ஒரு வெஸ்டர்ன் கவுன் மிகவும் அழகாக இருக்க, அதை கண்டதும் அவனுக்கு பனிமலரின் நினைவு வந்தது. அதை அவள் அணிந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணி பார்த்தவன் உள்ளே பரவசமானது..

அவள் இது மாதிரி ஆடை அணிவதில்லை.. ஆனாலும் அவள் அவனுடன் நன்றாக பழக ஆரம்பித்ததும் அவளுக்கு இந்த ஆடையை கொடுத்து தங்கள் அறையிலாவது அவளை அணிந்து கொள்ள சொல்லி பார்த்து ரசிக்க வேண்டும் என தோன்ற அவன் கண்ணில் விரிந்த காட்சி முகத்தில் புன்னகையை வரவழைக்க, அதே சிரிப்புடன் அந்த ஆடையை எடுத்தான்...

அவனிடம் எதையோ கேட்ட மித்ரா வசியிடமிருந்து பதில் வராமல் போக அவனை திரும்பி பார்த்தவள் அவன் ஒரு பெண்ணின் ஆடையை ரசித்து பார்த்து புன்னகைத்தவாறு இருக்க, உ டனே அவன் மனதில் இருந்ததை கெஸ் பண்ணியவள் அவன் எடுத்த ஆடையை வேகமாக சென்று கிட்டதட்ட பிடுங்காத குறையாக அவனிடம் இருந்து வாங்கியவள்

“வாவ்.. சூப்பர் செலக்சன் வசி... இந்த மாதிரி ட்ரெஸ் ஐ த்தான் நான் ரொம்ப நாளா தேடிகிட்டிருந்தேன்.. பார் நீ கரெக்டா கண்டு புடிச்சிட்ட.. இது எனக்கு சூப்பரா இருக்கும் இல்ல..

இரு.. நான் போய் ட்ரயல் ரூம் ல இதை போட்டு காட்டறேன்.. நீ பார்த்து சொல். “ என்றவள் அவன் பதிலை காதில் வாங்காமல் விரைந்து சென்றாள்...

அவள் முகத்தில் இருந்த உற்சாகத்தை கண்டவன் மறுத்து சொல்ல முடியாமல் விட்டுவிட்டான்... வேற எதுவும் அது மாதிரி இருக்கிறதா என்று தேடினான்.... ஆனால் அது ஒரே ஒரு பீஸ் மட்டும் தான் இருந்தது...

வேற எதுவும் அவன் மனதுக்கு பிடித்ததாக இல்லை.. அதற்குள் மித்ரா அவனை அழைக்க அங்கு சென்றவன் அவள் அந்த ஆடையில் ஒயிலாக வந்து நிற்க, அவனுக்கோ அவன் மனகண்ணில் அந்த ஆடையை அணிந்து பார்த்த பனிமலரே அவன் கண் முன்னால் வந்து நின்றதை போல இருந்தது..

அந்த ஆடையில் மலரை கற்பனை பண்ணி பார்த்தவன் இப்பொழுது அவளே கண் முன்னே நிற்பதை போல இருக்க, அப்படியே அவளை அள்ளி அணைத்து கொள்ள வேண்டும் போல இருந்தது வசிக்கு...

அவனின் ரசனையான பார்வையை கண்டவள் உள்ளுக்குள் துள்ளி குதித்தாள் மித்ரா... எப்படியும் கொஞ்சம் கொஞ்சமாக அவனை தன் வசம் கொண்டு வந்து விட முடியும் என்று எண்ணியவள் அதே ஆடையை பில் போட சொல்லி அங்கயே அதை மாற்றி கொண்டு அதே ஆடையில் அவனுடன் கை கோர்த்து சுற்ற ஆரம்பித்தாள்...

ஆனால் அவள் அறியவில்லை அவனின் ரசனையான பார்வை அவனுடைய மனைவிக்கானது என.

அவள் முதலில் அந்த ஆடையை காட்டியபொழுது கண்களை விரித்து பார்த்தவன் அவள் அந்த ஆடையை அணிந்து அவனுடன் கை கோர்த்து சுற்றி வந்த பொழுது மீண்டும் அந்த பார்வை வரவில்லை அவனிடமிருந்து...

வழக்கம் போல அவள் முகம் பார்த்தே பேசினான்..சிரித்து பேசினான்.. ஆனால் அவன் பார்வையோ பேச்சோ நட்பை தாண்டி தப்பாக எதுவும் வெளி வரவில்லை

இரவும் முழுவதும் லண்டனில் சுற்றி திரிந்தவர்கள் இரவு தாமதமாக உறங்கி மறுநாள் காலை உணவை முடித்து பேக் பண்ணி அறையை காலி செய்து கிளம்பினர்...

விமானம் சென்னையை அடையவும் வசியின் மனதில் ஒரு இனம் புரியாத பரவசம் நிரம்பியது.. இத்தனை நாட்களாக தன் கான்ப்ரன்ஸ் ல் பிசியாகி விட, கிடைக்கும் கொஞ்சம் சந்தர்ப்பத்தில் அவ்வபொழுது தன் ஜில்லுவின் நினைவு வந்தாலும் கடமை மட்டுமே பெரிதாக தெரிய அவளின் நினைவுகளை அணை போட்டு தடுத்திருந்தான்..

இன்று தான் சென்ற வேலை முடிந்திருக்க, வீடு திரும்பவும் தானாக தன்னவளின் நினைவு எழும்பியது... விமானத்திலயே ஒருவித உற்சாகமாக இருந்தான்...

அவனின் உற்சாகத்தை கண்டதும் மித்ராவுக்குத்தான் மனம் பொசுங்கியது...

எப்படியாவது இந்த பயணத்தை பயன்படுத்தி அவனை தன் வலையில் விழ வைத்து விடலாம் என்று அவள் செய்த முயற்சிகள் எல்லாம் வீணாய் போயின...

ஆனாலும் அவ்வளவு எளிதாக தன் மனதை மாற்றி கொள்ள வில்லை அவள்.. மாறாக அடுத்து என்ன செய்யலாம் ?? என்று யோசித்து கொண்டே வந்தாள் அந்த பயணம் முழுவதும்..

“அட்லீஸ்ட் வசியுடன் அவள் நெருக்கமாக இருந்த புகைபடங்களை மலருக்கு அனுப்பி வைத்ததற்காகவாது ஏதாவது பலன் இருக்குமா?? அப்படி இருந்தால் மலர் கண்டிப்பாக முகத்தை தூக்கி வைத்து கொண்டிருப்பாள்...

ஹ்ம்ம் அதாவது சக்ஸஸ் ஆக வேண்டும் “ என்று வேண்டி கொண்டே வந்தாள்..

விமானம் தரை இறங்கவும் தங்கள் உடமைகளை கலெக்ட் பண்ணி கொண்டு மித்ராவுடன் பேசி கொண்டே வெளி வந்தான் வசி...

வாய் அவளிடம் பேசினாலும் கண்கள் பார்வையாளர் பக்கத்தில் யாரையோ தேடிக் கொண்டிருந்தது... முழுவதுமாக சல்லடை போட்டு சலித்தபின் ஏமாற்றமடைந்த கண்களுக்கு விருந்தாக அவன் மாமயார் மாமானார் மற்றும் அவன் பெற்றோர்களும் தென்பட்டனர் ....

பின்னால் நின்றிருந்தவர்கள் வசியை கண்டதும் முன்னால் வந்தனர். அவர்களை கண்டதும் மலர்ந்த அவன் முகம் மீண்டும் எதையோ தேட, பின் லேசாக வாடியது..

அதற்குள் அவர்கள் அருகில் வந்துவிட, சிவசங்கர் முன்னே வந்து வசியை கட்டி கொண்டார்..

“வாங்க மாப்பிள்ளை... பயணம் சுகமாக இருந்ததா?? “ என்று அக்கறையாக விசாரித்தார்... பின் மற்றவர்களும் அவனிடம் நலம் விசாரிக்க, எல்லாருக்கும் பொதுவாக பதில் அழித்தவன் அவர்களின் நலம் விசாரித்தவாறே கண்களால் தேடினான்...

அவன் யாரை தேடுகிறான் என்று புரிந்து கொண்ட ஜோதி

“மலருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை மாப்பிள்ளை.. அதனால் தான் அவளால் இங்க வர முடியவில்லை.. “ என்றார் தயங்கியவாறு...

அதை கேட்டு வசியின் அருகில் நின்று கொண்டிருந்த மித்ரா துள்ளி குதித்தாள்...

“எப்படியோ மலர் மனதில் குழப்பத்தை உண்டு பண்ணியாச்சு.. அதனால் தான் இன்று அவள் வசியை பார்க்க வரவில்லை... இதை வைத்து அவளை எளிதாக வீழ்த்தி அவளை வசியிடம் இருந்து பிரிக்க வேண்டும்.. “ என்று துள்ளி குதித்தவள் அவசரமாக அடுத்து செய்ய வேண்டியதை திட்டமிட்டாள்...

இதுவரை நடந்ததை எல்லாம் வைத்து பார்க்க அவளுக்கு தெளிவாக ஒரு உண்மை புரிந்தது.. அது எவ்வளவு முயன்றாலும் வசியை மாற்ற முடியாது..அதனால் அவனை தன் பக்கம் இழுத்து மலரை பிரிப்பது என்பது இமயமலையை முடியால் கட்டி இழுப்பதற்கு சமம்..

அதனால் அடுத்த வழியாக என் ஆட்டத்தை மாற்றி ஆட வேண்டும்.. இனி மலர்தான் என் டார்கெட்.

அவளை எப்படியாவது என் வழிக்கு கொண்டு வந்து விட்டால் அவளாகவே வசியை பிரிந்து செல்ல வைத்து விட வேண்டும்.. அதற்கு என்ன செய்யலாம்.. என்று யோசிக்க ஆரம்பித்தாள்...

வசியோ ஜோதி சொல்லியதை கேட்டதும்

“அவளுக்கு என்னாச்சு அத்தை ?? “ என்றான் பதற்றமாக

“ஒன்னும் பெருசா இல்லை மாப்பிள்ளை... மதியத்தில் இருந்தே தலை வலிக்கிறது என்றாள்.. எழுந்தால் தலை சுற்றுவதை போல இருக்கிறது.. என்றாள்.. அதனால் தான் அவளை மாத்திரை போட்டு கொண்டு நன்றாக உறங்க சொல்லி விட்டேன்..

நாளை ரிசப்சன் வேறு இருக்கிறதல்லவா... அதான்... “ என்றார் ஜோதி அவனை சமாதானம் படுத்துவதற்காக..

அவர் ரிசப்சன் என்றதும் திக் என்றது மித்ராவுக்கு..

“ஐயோ இதை எப்படி மறந்தேன்?? சே... இந்த சாமியாரை வளைக்க வேண்டும் என்று திட்டமிட்டு கொண்டே இருந்ததால் இதை மறந்து விட்டேனே.. இப்ப என்ன செய்ய?? “ என்று மீண்டும் யோசித்து அவசரமாக அடுத்து செய்ய வேண்டியதை திட்டமிட்டாள்...

வசிக்குமே அப்பொழுது தான் நினைவு வந்தது.. இந்த கான்ப்ரன்ஸ் அலைச்சலில் அதை மறந்து விட்டான்.. எல்லாம் தன் அப்பா அம்மாவிடம் நண்பர்களிடம் விட்டு விட்டதால் அதை பற்றி கண்டுகொள்ளவில்லை..

அவனும் ஓரளவுக்கு சமாதானம் அடைந்தவனாக

“சரி வாருங்கள்.. எல்லாரும் ஒரே காரிலயே போகலாம்..” என்றான். அதற்குள் மித்ராவோ

“வசி மலரின் பெற்றோர்களை அழைத்து சென்றால் அவர்கள் வீட்டில் விடவேண்டும்.. அப்ப எப்படியும மலரை பார்க்க வேண்டும்.. அவள் இவனை இன்னும் ஒரு நாளைக்கு பார்க்க கூடாது.. “ என்று மீண்டும் அவசரமாக யோசித்தவள்

“வசி.. நான் அந்த வழியாகத்தான் போகிறேன்.. என் ட்ரைவரும் காத்திருக்கிறார்.. நான் இவர்களை ட்ராப் பண்ணிடறேன்.. உனக்கு இது சுற்று வழியா இருக்கும்.. அதனால் நீ நேரா உன் வீட்டுக்கு போய் நல்லா ரெஸ்ட் எடு.. நான் இவர்களை வீட்டில் விட்டு விடுகிறேன்.. “ என்றாள்...

சிவசங்கரும் அதையே அமோதித்து

“நீங்கள் போய் ஓய்வெடுங்கள் மாப்பிள்ளை.. “ என்று அவனை அனுப்பி விட்டு மித்ரா காரில் அமர, வசிக்கோ இன்னும் மனம் சமாதானம் ஆகவில்லை....

வீட்டிற்கு வந்ததும் ரெப்ரெஸ் ஆகவும் அடுத்த நாள் ரிசப்சனுக்கு இன்னும் கொஞ்சம் பேரை அழைக்க வேண்டியிருப்பதால் குளித்து விட்டு கிளம்பி மற்ற வேலைகளை பார்க்க சென்றான்...

அதனால் அவன் சென்னை வந்த பிறகும் மலருடன் பேசும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை..

அடுத்து தன்னவளை அவன் கண்டது அவர்கள் வரவேற்பு விழாவில் தான்....



Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!